Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பிலுள்ள தமிழ் எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட வருமாறு சிங்கள பௌத்தர்களுக்கு உதய கம்மன்பில அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, satan said:

குமார் பொன்னம்பலம், தனது உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு  நல்லது. வெளிநாடுகளுக்கும் அறிவிப்பது நல்லது. எத்தனையோ அரசியல்வாதிகள் இருக்க இவரை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள்? எல்லா தமிழ் அரசியலாதிகளும் ஒன்று சேராவிட்டால் ஒவொருவராக குறிவைத்து அழித்தொழிப்பது சுலபம்.

இவர் எல்லோருக்கும் ஜால்ரா போடாதவர் என்பதால் தான் இதர தமிழ்த்தலைவர்களாலும் தனிமைப்படுத்தப்படுகின்றார்..
இன்றும் எனது கேள்வி என்னவென்றால் சம்பந்தன் என்ன கோதாரிக்கு இன்னும் ஈழத்தமிழர் பிரதிநிதியாக அலங்கரிக்கப்படுகின்றார்? முக அரசியலுக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர்களுக்கு  சிங்கள அரசியல்வாதிகளினால் தான் விடிவு வரவேண்டும் என ஒரு விதி இருந்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? 

IMG-4374.jpg

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Cruso said:

ப்படி இருந்தாலும் இந்தியாவும், ஐக்கிய நாடுகள் சபையும் இருக்கும் வரைக்கும் இலங்கை தமிழர்கள் கவலைப்பட தேவை இல்லை. அவர்கள் பார்த்து கொள்ளுவார்கள். 

 

தமிழர்கள் இலவு  காத்த கிளிகள்

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, உடையார் said:

தமிழர்கள் இலவு  காத்த கிளிகள்

2015இல் வந்திருந்த ஒரு கருத்துப் படம்

IMG-4377.jpg

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/8/2023 at 06:25, ஏராளன் said:
இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த ஒரு கோரிக்கைக்காக, நான் களத்தில் குதித்து கலந்து கொள்கிறேன், கமன் மாப்பிள... 💪

இந்த பிளேன் ஏறிட்டேன்... 🤣

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் புலிகள் இருந்த போது இப்படியான எச்சரிக்கைகள் வந்தால்.. தமிழகத்தில் இருந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு போல்.. கோரஸ் பாடின கூட்டம்.. இப்ப இவற்றைக் கண்டுகொள்வதே இல்லை.

குறிப்பாக.. அதிமுக.. திமுக.. மதிமுக..பாமக.. விடுதலை சிறுத்தைகள்.. உட்பட எல்லாரும் நல்ல தூக்கம். 

முன்னர் என்றால்.. எம் ஜி ஆர்.. ஜெயலலிதா.. அறிக்கை விட்டால்.. அதற்கு மேலால் கருணாநிதி விடுவார். அதனை தொடர்ந்து மற்றவர்கள். இப்ப யாரும் அறிக்கை கூட விடுவதில்லை. இதுதான் இவர்களின் உண்மையான ஈழ ஆதரவு. 

இந்தக் கோமாளிகளை இனம் கண்டுகொண்டதால் தான்.. சிங்களம் பயம்விட்டு.. திமிரெடுத்துத் திரிகிறது.

அதுசரி.. மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்திய கூட்டத்திடம் எதனை எதிர்பார்க்க முடியும்.

தன் கைதான் தனக்குதவி. மீண்டும்.. கசப்பான இந்த உண்மையில் இருந்து தமிழினம் தன்னை தற்காக்க முனைவதே சிறப்பு. அது சிங்களத்தை பொருண்மிய ரீதியில்.. அரசியல் ரீதியில்.. சர்வதேச ரீதியில்.. பலவீனப்படுத்துவதன் ஊடாகக் கூட இருக்கலாம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

தமிழினம் மீண்டுமொரு இடப்பெயர்வையும், அழிவையும் சந்திக்கும் சக்தியோடு இருக்கிறதா? சாம்பலில் இருந்து எழமுடியாது இறைக்கைகள் கருகியதுபோன்று தமிழினத்தின்நிலை.

நான் எங்கேயும் அப்படிச்சொல்லவில்லை, அப்படியொரு அழிவை இனி என்னினம் தாங்காது தயாருமில்லை!

11 hours ago, குமாரசாமி said:

இவர் எல்லோருக்கும் ஜால்ரா போடாதவர் என்பதால் தான் இதர தமிழ்த்தலைவர்களாலும் தனிமைப்படுத்தப்படுகின்றார்..

 முக்கியமாக, அண்மைக்காலங்களில் தனியார் காணிகளில் எழும் விகாரைகள், சைவ வழிபாடுகளை தடுத்தல் ஆகியவற்றிற்கு எதிராக குரல் கொடுப்பதும் போராடுவதும் வெளியுலகிற்கு கொண்டுசெல்வதும், அவரின் கைதை சர்வதேசம் கண்டித்ததும் அதற்கு பழிவாங்கலாயும் அவரை அச்சுறுத்தி பணிய வைக்கும் செயலாகவும் இருக்கலாம். அவ்வாறான செய்பாடுகளாலேயே சாதித்திருக்கிறார்கள், சாதிக்கிறார்கள். அதற்கு சர்வதேசமும் கேள்வியிலலாமல், தண்டனையில்லாமல், உதவிகளை அளித்து ஊக்குவிக்கிறதே. சட்டங்களும் துணை போகின்றன, நீதிமன்றங்கள் கையறுநிலையில் வேடிக்கை மட்டும் பார்க்கின்றன. மற்றைய தமிழ்கட்சிகள் இவற்றில் இவருடன் பங்கு கொள்ளாமலும் அவற்றை கண்டிக்காமலும் இருப்பதால்; இவர் மட்டுமே பிரச்சனையை உருவாக்குபவராக சித்திரிக்கப்படுகிறார். இது தமிழரின் பிரச்சனை என்றால் அவர்களின் மற்றைய பிரதிநிதிகள் ஏன் போராட வரவில்லை? கண்டிக்கவில்லை? அவர்கள் எங்கே போய்விட்டார்கள்? இதைவிட அவர்களுக்கு வேறு என்ன வேலை இருக்கிறது என்கிற கேள்வியிருக்கல்லவா? இவருடன் சேர்ந்து, மக்களுக்காக போராட அவர்கள் விரும்பவில்லையா அல்லது அவர்களை இணைத்துபோராட இவர் விரும்பவில்லையா? இது மக்களுக்கான போராட்டம். இனத்தின் இருப்பிற்கான போராட்டம். நீயா நானா பெரிது என்கிற போராட்டமல்ல.

  

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

நான் எங்கேயும் அப்படிச்சொல்லவில்லை, அப்படியொரு அழிவை இனி என்னினம் தாங்காது தயாருமில்லை!


நீங்கள் சொல்லியதாக அல்ல. ஆனால் அப்படியொரு நிலையைத் தமிழினம் எதிர்கொள்வது எப்படி என்ற ஆதங்கமேயன்றி வேறில்லை. கருத்தாடலின் சமநேரத்தில் அப்படியொரு சம்பவம் மயிலந்தனைமடுவில் நடைபெற்றிருக்கிறது. 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, nochchi said:


நீங்கள் சொல்லியதாக அல்ல. ஆனால் அப்படியொரு நிலையைத் தமிழினம் எதிர்கொள்வது எப்படி என்ற ஆதங்கமேயன்றி வேறில்லை. கருத்தாடலின் சமநேரத்தில் அப்படியொரு சம்பவம் மயிலந்தனைமடுவில் நடைபெற்றிருக்கிறது. 

நன்றி

நாங்கள் அதற்கு தயாரில்லை என்று தெரிந்தே, அதை எம்மேல் திணித்து, பாய்ந்து அழித்துவிட துடிக்கிறது சிங்களம். நாமும் விலத்தி நின்று உதவி கேட்கிறோம் அவர்களும் நம்மை இரையாக்குபவர்களாகவே செயற்படுகிறார்கள். ஒரு வழி எங்கிருந்தாவது திறக்குமென்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. காரணம்; நாம் விழுந்துவிட்டோம் என்று தெரிந்தும் நம்மை எழுப்பி அடிக்கிறார்கள். இது அவர்களை அழிக்கும்!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமாரின் இல்லத்துக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை!

news-02-17.jpg

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு வீட்டின் முன்பாக  சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளமையால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லைத்தை இன்று(25) சுற்றிவளைக்க சிலர் திட்டமிட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா சபையில் தெரிவித்திருந்தார்.

https://thinakkural.lk/article/270328

  • கருத்துக்கள உறவுகள்

3  பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் மேலும் பலர் இணையலாம் என்பதால் காவல்துறை பாதுகாப்பில்  ஈடுபடுவதாவும் கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த மூவர்என்று அறியத்தந்தால் நல்லது!  யாரோ தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் தகராறு உள்ளவர்கள் போலும். நிட்சயமாக கம்மன்பில, சரத் வீரசேகர, மேர்வின் சில்வா போன்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.  உந்த மூவரைத்தான் கூட்டி போராடுவேன், தலையை கொய்வேன் என்று சவால் விட்டார்களா சண்டியர்? அதோடு வாலைச்சுருட்டிகொண்டு திரும்பிப் படுக்கவேண்டியான். இனி இவர்களை தெருவில் கண்டால் வேறொன்று குரைக்கும்.   

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிக்குவும்  இரண்டு வாலும். கோழி அமத்தின மாதிரி பிடிச்சு உள்ள போட முடியாமல் படையினர் குவிப்பாம். வெட்கக்கேடு நாட்டின் பலம். மாப்பிள்ளைமார் களத்தில் குதிக்க தயார் நிலையில் ஆணைக்காக காத்திருப்பு. ஆழம் பாக்கினம் கண்டியளோ!

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு வீட்டை சுற்றிவளைத்த கும்பல்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு வீட்டை சுற்றிவளைத்த கும்பல்

கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டினை தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று  சுற்றிவளைத்து அச்சுறுத்தி வருவதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது  ”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்களும்  வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளதாகக்  கூறப்படுகின்றது.

இச்சம்பவத்தினையடுத்து  அவரது வீட்டுக்கு முன்பாக  பெருமளவான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டம் நடத்தப் போவதாகவும் முதல் கட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்னால் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அண்மையில்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

rrrr.jpeg?resize=600%2C338&ssl=1

wwww.jpeg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2023/1346770

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்களும்  வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளதாகக்  கூறப்படுகின்றது.

உவ்வளவு இராணுவம் போலீசை வடக்கில் குவிச்சு வைச்சுக்கொண்டு, பேருந்துகளில் சண்டைக்கு வந்து வலிந்து இழுத்துக்கொண்டு, தெரிவிக்கின்ற கருத்தை பாத்தால், பிக்குவுக்கு வேறேதோ பிரச்சினை போலுள்ளது! கிழக்கிலே சிங்களவருக்கு என்ன பிரச்சனை என்று வெளிப்படையாக சொல்லவேண்டியதுதானே! பிக்குகளை களத்தில் இறக்கி அதுகளை சீண்ட வைத்து ஒரு கலவரத்தை ஏற்படுத்த பகீரதப் பிரயத்தனம் எடுக்கிறார்கள் ராஜபக்ச குடும்பம். கடைசியாய் இருக்கிற கொஞ்ச மரியாதையையும் இழந்து அடித்து துரத்தப்படப்போகிறார்கள். தன் வாழ்நாளில் நாமல் அரசியலை நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு சூழலை தாங்களாகவே உருவாக்குகிறார்கள். 

இனக்கலவரம் வெடிக்கும் என்று பகிரங்கமாக பாராளுமன்றத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பில்லாமல் எச்சரிக்கிறார்கள். வெறும் வதந்தியென்று அரசாங்கம் அறிவிக்கிறது என்றால், எல்லாம் காதுகளை பொத்தி கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமாரின் கொழும்பு இல்லம் முன்பாக சீலரத்ன தேரர் தலைமையிலான குழு போராட்டம்

Published By: DIGITAL DESK 3

25 AUG, 2023 | 05:04 PM
image
 

(நா.தனுஜா)

பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை (25) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக எதிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதைப்போன்று, சிங்களவர்கள் வட, கிழக்கில் சுதந்திரமாக வாழவேண்டும். சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதன் தொடக்கமாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம். இப்போராட்டத்தில் அனைத்து சிங்கள பௌத்தர்களும், இனவாதக்கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ளவேண்டும்' என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சில தினங்களுக்கு முன்னர் அழைப்புவிடுத்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில்  வெள்ளிக்கிழமை கஜேந்திரகுமாரின் கொழும்பு இல்லம் முன்பாகப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை தகவல்கள் வெளியாகியிருந்தன. 

அதனையடுத்து, கொள்ளுப்பிட்டி, குயின்ஸ் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு முன்பாக இன்றைய தினம் காலையிலேயே பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் நீர்த்தாரை வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.

371122507_277555988404097_83393487335908

இருப்பினும், போராட்டத்துக்கு அழைப்புவிடுத்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அங்கு வருகைதரவில்லை. மாறாக இன்று காலை 10.30 மணியளவில் அங்கு வருகைதந்த பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தலைமையிலான 4 - 5 பேர் அடங்கிய குழுவினர், எதிர்ப்புக்கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

கஜேந்திரகுமாரின் எம்.பி யின் இல்ல நுழைவாயில் மூடப்பட்டிருந்த நிலையில், சுமார் ஒருமணி நேரம் வரையில் கோஷங்களை எழுப்பிய அக்குழுவினர் பின்னர் இல்ல நுழைவாயிலை நோக்கி நகர முற்பட்டனர். 

இருப்பினும், அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸார் சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினரை முன்னேறவிடாமல் தடுத்தனர்.  

அதனை எதிர்த்துக் குரலெப்பிய சீலரத்ன தேரர், 'கஜேந்திரகுமாரை வரச்சொல்லுங்கள். நீங்கள் கஜேந்திரகுமாருக்குப் பயப்படுகிறீர்களா? நீங்கள் அனைவரும் கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரனைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள். ரணிலும் பயப்படுகிறார். மஹிந்தவும் பயப்படுகிறார். கோட்டாபயவும் அதனால்தான் வெளியேறினார். 

தற்போது வட, கிழக்கு மாகாணங்கள் இவர்களுக்கு வேண்டிய விதத்தில் இயங்குகின்றன. நாங்கள் இப்போது செல்கின்றோம். ஆனால் மீண்டும் வருவோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்' என்று பொலிஸாரைப்பார்த்து உரத்த தொனியில் கூறியதுடன் அங்கிருந்து திரும்பிச்சென்றார்.

கஜேந்திரகுமாரின் கொழும்பு இல்லம் முன்பாக சீலரத்ன தேரர் தலைமையிலான குழு போராட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

நீங்கள் அனைவரும் கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரனைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள். ரணிலும் பயப்படுகிறார். மஹிந்தவும் பயப்படுகிறார். கோட்டாபயவும் அதனால்தான் வெளியேறினார். 

நல்ல வேளை! சுமந்திரனின் கதையை கேட்டு யாரும் அரக்கலயவிற்க்கு செல்லவில்லை, வடக்கிற்கு வந்து கூச்சல் போட்டபோதும் வேடிக்கை பார்த்தார்களேயொழிய யாரும் பங்குபற்றவில்லை. யார் என்ன தப்புச் செய்தாலும் அதை தமிழரின் தலையில் கட்டி தாங்கள் தப்பித்துக்கொள்ளும் தந்திரம் இனிமேலும் எடுபடாது என்பதற்கு இன்றைய  இவர்களது நீத்துப்போனபோராட்டம் ஏதோ செய்தியை, கிளப்பிவிட்டு கதிரை ஏற காத்திருந்தவர்களுக்கு  கூறுகிறது. இதோடு அடங்கிக்கொள்வது இவர்களுக்கு நல்லது. தங்களை தாங்களே அடித்துக்கொண்டும் சட்டைகளைக்கிழித்துக்கொண்டும் வீதியில் இறங்கினால்; மக்கள் தகுந்த பாடம் படிப்பிப்பார்கள் இவர்களுக்கு. தாங்களே பொல்லைகொடுத்து அடிவாங்குவார்கள். அதற்குத்தான் இந்த அவசரம், ஆர்ப்பாட்டம் எல்லாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு மிஞ்சிய சலுகைகளும் அதிகாரங்களும் முன்னுரிமையும் இந்தச் சண்டியர்களுக்கும் பைத்தியங்களுக்கும் கொடுத்தால்; தலைகால் தெரியாமற்தான் ஆடுங்கள், அதன் பலனைநாடு அனுபவித்துக்கொண்டு இருக்கிறது. இதனை பறித்து எல்லோருக்கும் சமஉரிமை கொடுத்தாற்தான் இந்தகொழுப்பு அடங்கும், நாடு முன்னேறும். இனவெறியோடு மதவெறியும் அடியோடு துரத்தப்பட இவர்களே காரணமாகிறார்கள் என்றால், இவர்களுக்கு எனது நன்றிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் வீட்டின் முன்பாக மீண்டும் பதற்றநிலை

Published By: RAJEEBAN

26 AUG, 2023 | 05:08 PM
image
 

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக பௌத்தமதகுருமார் அடங்கிய குழுவொன்றை சேர்ந்தவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றநிலையேற்பட்டுள்ளது.

அந்த பகுதியில் பெருமளவு இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/163245

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றிற்கும் விழுந்தடிச்சுக்கொண்டு கருத்து தெரிவிக்கும் ராஜபக்ச கொம்பனி மௌனம் காப்பதன் மர்மம் என்ன? எதிர்த்து கருத்து சொன்னால்; அனுப்பிய அவர்கள் குரைப்பதை நிறுத்திக்கொள்வதோடு சூத்திரதாரிகள் வெளிப்படுவர். ஆதரித்து சொன்னால் முகத்திரை கிழியும். ஆகவே முட்டாள்களை பலிகொடுத்து வரம்பெற காத்திருக்கிறார்கள். அடி விழுந்தால், காயப்படுவது முட்டாள்கள். ஏற்றுக்கொள்ளப்பட்டால்,சுகம் அனுபவிப்பது இவர்கள். இவர்கள் எப்படியாவது ஓர் மதம் சாந்த இனக்கலவரத்தை ஏற்படுத்திவிட துடியாய் துடிக்கிறார்கள், முடியாத விடத்து அவர்களே முகமூடியணிந்து பிக்குகளை, இராணுவம் போலீசை தாக்கி பிரச்சனையை தொடங்குவார்கள். கலவரங்களை உருவாக்கி அரசியல் பிடிப்பதும், நடத்துவதும் அவர்களது கலாச்சாரம். ஆண்டாண்டு தோறும் நடக்கும்  திருவிழாபோன்று!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.