Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

காப்பிலி என்ற சொல் நடைமுறையில் வசவுதான் என எப்படி தீர்மானித்தீர்கள் என்பதே என் கேள்வி.

காப்பிலி என்ற வார்ததை இலங்கையில் ஒரு வசவு சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது என்பது இலங்கை மக்களுக்கு தெரிந்த உண்மை. ஒழுங்காக தல் சீவாமல் உடை உடுத்தாமல், குளிக்காமல் இருக்கும் ஒரு மகனைப் பார்தது  காப்பிலி மாதிரி இருக்காமல் ஒழுங்கு மரியாதயா இரு என்று தகப்பன்  கூறுவது ஊரில் சர்வ சதாரணம். இதுவும் ஒரு உதாரணம் தான். 

  • Replies 84
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இந்த வாதம் சரியே.

ஆனால் அதன் பின் நீங்கள் சொன்ன “அவர்கள் பார்க்கும்/ கேட்கும் போது சொல்வதில்லை” என்ற கருத்து - இந்த வாதத்தை (அதாவது இது இழி சொல் இல்லை) சுக்கலாக்கி விட்டதே அன்ரி? அதைதான் சுட்டினேன்.

எனக்குப் புரியவில்லை நீங்கள் எழுதி இருப்பது? எனக்கு வேலைக் களை😀. யாருக்கு எழுதியது என்று சொல்லுங்கள் 

6 minutes ago, island said:

காப்பிலி என்ற வார்ததை இலங்கையில் ஒரு வசவு சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது என்பது இலங்கை மக்களுக்கு தெரிந்த உண்மை. ஒழுங்காக தல் சீவாமல் உடை உடுத்தாமல், குளிக்காமல் இருக்கும் ஒரு மகனைப் பார்தது  காப்பிலி மாதிரி இருக்காமல் ஒழுங்கு மரியாதயா இரு என்று தகப்பன்  கூறுவது ஊரில் சர்வ சதாரணம். இதுவும் ஒரு உதாரணம் தான். 

நான் இதுவரை இலங்கையில் இப்படிக் கூறுவதாகக் கேள்விப்பட்டதில்லை. எந்த ஊரில் ஒழுங்காக தல் சீவாமல் உடை உடுத்தாமல், குளிக்காமல் இருக்கும் ஒரு மகனைப் பார்தது  காப்பிலி மாதிரி இருக்காமல் ஒழுங்கு மரியாதயா இரு என்று தகப்பன்  கூறுவது??? எங்கள் ஊரில் கோழிகளுக்கே சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2023 at 19:08, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

விழ இருந்த என்னை ஒரு காப்பிலி இழுத்து நிறுத்துகிறான்.

இதை 

“விழ இருந்த என்னை ஒரு கறுப்பன் இழுத்து நிறுத்துகிறான்.” 

என்று எழுதியிருக்கலாம்.

காப்பிலி என்பது கறுப்பர்களை இழிவாக அருவருப்புடன் குறிக்கவே தமிழர்கள் பாவிக்கின்றவர்கள். கறுப்பர்களுடன் அடிமட்ட வேலை பார்த்த எனக்கு அவர்களுடன் அன்னியோன்யமாகப் பழக நன்றாகவே தெரியும். ஆனால் பல தமிழர்கள் முதல் பார்வையிலேயே கறுப்பர்களை சந்தேகத்துடனும், பயத்துடனும் பார்ப்பார்கள். அந்த அருவருப்புப் பார்வை போலவே காப்பிலி என்ற வார்த்தைப் பிரயோகமும்.

அமெரிக்காவில் ஒரு காலத்தில் நீக்ரோ என்று கறுப்பர்களைச் சுட்டியவர்கள் இப்போது பிளாக், ஆபிரிக்க அமெரிக்கன் என்று சொல்லுவது போல தமிழர்களும் காப்பிரி, காப்பிலி என்று சுட்டுவதைக் கைவிட்டு கறுப்பர் என்று நாகரீகமாக வெளியே அழைக்கலாம்; எழுதலாம் (உள்ளே காப்பிலி என்றே நினைக்கலாம்!)

ஆசான் வெண்முரசு நாவல் தொடரில் வரும் கிராதம் நாவலில் இப்படி எழுதியிருக்கின்றார்.

“யவனநாட்டிலிருந்து  திரும்பி வந்துகொண்டிருந்த காப்பிரிநாட்டு வணிகக்குழுவினர் பாலைநிலத்தில் வெற்றுடலுடன் சடைக்கற்றைசூடி சிரித்தும் நடனமிட்டும் சென்றுகொண்டிருந்த பித்தனை கண்டார்கள். அவனை அவர்கள் தங்கள் அத்திரிகள் ஒன்றின்மேல் ஏற்றிக்கொண்டார்கள். அவர்களின் காப்பிரிநாட்டு துறைநகர் ஒன்றுக்கு கொண்டுசென்றார்கள்.”

ஆபிரிக்காவை காப்பிரிநாடு என்றும் சீனாவை பீதர்நாடு என்றும் ஆசான் சொல்லுவதனால் காப்பிரி என்பது இன்றைய வழக்கில் நாகரீகமான வார்த்தை என்று சொல்லமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

மோகன் அண்ணை, இதனை கவனித்து, உங்களை மட்டு ஆக்க வேண்டும்.

சோ இராமசாமி அரசியலுக்கு வரக்கூடாது…

சுப்ரமணிய சாமி மத்திய அமைச்சர் ஆக கூடாது….

ப்ளு சட்டை மாறன் படம் எடுக்க கூடாது….

கோஷான் மட்டு ஆக கூடாது.

குதிரை செய்யும் வேலையை நாய் பார்க்க கூடாது.

நாய் செய்யும் வேலையை குதிரை பார்க்க கூடாது.

வட்டா.

15 minutes ago, island said:

காப்பிலி என்ற வார்ததை இலங்கையில் ஒரு வசவு சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது என்பது இலங்கை மக்களுக்கு தெரிந்த உண்மை. ஒழுங்காக தல் சீவாமல் உடை உடுத்தாமல், குளிக்காமல் இருக்கும் ஒரு மகனைப் பார்தது  காப்பிலி மாதிரி இருக்காமல் ஒழுங்கு மரியாதயா இரு என்று தகப்பன்  கூறுவது ஊரில் சர்வ சதாரணம். இதுவும் ஒரு உதாரணம் தான். 

காத்திரமான உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எந்த ஊரில் ஒழுங்காக தல் சீவாமல் உடை உடுத்தாமல், குளிக்காமல் இருக்கும் ஒரு மகனைப் பார்தது  காப்பிலி மாதிரி இருக்காமல் ஒழுங்கு மரியாதயா இரு என்று தகப்பன்  கூறுவது???

எனக்கு என் தந்தையாரும், ஏன் தாயாரும் சொல்லியிருக்கின்றார்கள்!  நல்லெண்ணை வைக்காத தலையைப் பார்த்து “கழிசடைக் காப்பிலி மாதிரி பரட்டைத்தலையை வைச்சிருக்காதை” என்று வாழ்த்தப்பட்டிருக்கின்றேன்😝

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

ஆசான் வெண்முரசு நாவல் தொடரில் வரும் கிராதம் நாவலில் இப்படி எழுதியிருக்கின்றார்.

“யவனநாட்டிலிருந்து  திரும்பி வந்துகொண்டிருந்த காப்பிரிநாட்டு வணிகக்குழுவினர் பாலைநிலத்தில் வெற்றுடலுடன் சடைக்கற்றைசூடி சிரித்தும் நடனமிட்டும் சென்றுகொண்டிருந்த பித்தனை கண்டார்கள். அவனை அவர்கள் தங்கள் அத்திரிகள் ஒன்றின்மேல் ஏற்றிக்கொண்டார்கள். அவர்களின் காப்பிரிநாட்டு துறைநகர் ஒன்றுக்கு கொண்டுசென்றார்கள்.”

ஆபிரிக்காவை காப்பிரிநாடு என்றும் சீனாவை பீதர்நாடு என்றும் ஆசான் சொல்லுவதனால் காப்பிரி என்பது இன்றைய வழக்கில் நாகரீகமான வார்த்தை என்று சொல்லமுடியாது.

காப்பிரி நாடு அவசொல்லானால், யவனரின் யவனநாடு, அவச் சொல்லா, இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

தவறு என்பது தெரிந்தே செய்வது, தெரியாமல் செய்வது தவறாகாது.

தெரியாமல் செய்த தவறை உணர்ந்து அதற்காக வருந்துபவரை மேலும் மேலும் கஸ்டப்படுத்தாமல் விடுவதுதான் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

சோ இராமசாமி அரசியலுக்கு வரக்கூடாது…

சுப்ரமணிய சாமி மத்திய அமைச்சர் ஆக கூடாது….

ப்ளு சட்டை மாறன் படம் எடுக்க கூடாது….

கோஷான் மட்டு ஆக கூடாது.

குதிரை செய்யும் வேலையை நாய் பார்க்க கூடாது.

நாய் செய்யும் வேலையை குதிரை பார்க்க கூடாது.

வட்டா.

சோ இராமசாமி; ஜெயின் பிரதம ராஜகுரு ஆக அரசியலில் கோலோச்சினார்.

சுப்ரமணிய சாமி மத்திய அமைச்சர் ஆக இருந்தாரே

ப்ளு சட்டை மாறன் படம் எடுத்தாரே

என்ன தல, எல்லா உதாரணமும், டமால், பணால் வகையில இருக்குதே.

அதுசரி, அக்கா, கணநாளுக்கு பிறகு ஆசையா எழுத வந்திருக்கிறா என்றால், political correctness அதிகமாக இருக்குதே..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

காப்பிரி நாடு அவசொல்லானால், யவனரின் யவனநாடு, அவச் சொல்லா, இல்லையா?

யவனர் பொன்னிறக் கேசமும், பால்நுரை வெண்மைத் தோலுமாக இருப்பதால் அவச்சொல்லாகாது. அடிமையாக, இழிவான தொழில் என்று கருதுபவற்றை செய்யும் ஆபிரிக்கனை காப்பிரி என்று விளிக்கும்போது அவன் செய்யும் இழிதொழிலே மனதில் துருத்துவதால் காப்பிரி(லி) அவச்சொல்லேயாம்!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

காத்திரமான உதாரணம்.

எனது பெரியம்மா, தலை மயிர் வெட்டாமல் இரண்டு மூன்று மாதம் போனால், இதென்னடா இது, காப்பிலி, கடப்புலி மாதிரி மோனே என்று சொல்வார். ஆனால் அவருக்கு அர்த்தம் தெரிந்து சொல்வதில்லை. இன்று கேட்டாலும் தெரியாது. அது காலகாலமாக தொடர்ந்து வரும் சொல்வடை போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

எனக்கு என் தந்தையாரும், ஏன் தாயாரும் சொல்லியிருக்கின்றார்கள்!  நல்லெண்ணை வைக்காத தலையைப் பார்த்து “கழிசடைக் காப்பிலி மாதிரி பரட்டைத்தலையை வைச்சிருக்காதை” என்று வாழ்த்தப்பட்டிருக்கின்றேன்😝

எனது அம்மம்மா, அப்பம்மாவும் சொல்லியுள்ளார்கள். ஐலண்ட் சொன்னதும் நினைவுக்கு வந்தது.

கழிசடை, காப்பிலி, கய**லி போல் இராதே என்பார்கள். மூன்றாம் சொல்லின் அர்த்தம் தெரியவில்லை. சாதிய வசவாய் இருக்கலாம் என நினைக்கிறேன்

8 minutes ago, Nathamuni said:

சோ இராமசாமி; ஜெயின் பிரதம ராஜகுரு ஆக அரசியலில் கோலோச்சினார்.

செய்திருக்க கூடாது. பெயரை கெடுத்து கொண்டார்.

8 minutes ago, Nathamuni said:

சுப்ரமணிய சாமி மத்திய அமைச்சர் ஆக இருந்தாரே

செய்திருக்க கூடாது. பெயரை கெடுத்து கொண்டார்.

9 minutes ago, Nathamuni said:

ப்ளு சட்டை மாறன் படம் எடுத்தாரே

செய்திருக்க கூடாது. பெயரை கெடுத்து கொண்டார்.

புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

10 minutes ago, Nathamuni said:

என்ன தல, எல்லா உதாரணமும், டமால், பணால் வகையில இருக்குதே

வாசிப்பவரின் புரிதல் அப்படி தல🤣

8 minutes ago, Nathamuni said:

எனது பெரியம்மா, தலை மயிர் வெட்டாமல் இரண்டு மூன்று மாதம் போனால், இதென்னடா இது, காப்பிலி, கடப்புலி மாதிரி மோனே என்று சொல்வார். ஆனால் அவருக்கு அர்த்தம் தெரிந்து சொல்வதில்லை. இன்று கேட்டாலும் தெரியாது. அது காலகாலமாக தொடர்ந்து வரும் சொல்வடை போலுள்ளது.

நான் தவிர்த்த சொல்லை நீங்கள் எழுதியே விட்டீர்கள்.

அர்த்தம் யாருக்காவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

யவனர் பொன்னிறக் கேசமும், பால்நுரை வெண்மைத் தோலுமாக இருப்பதால் அவச்சொல்லாகாது. அடிமையாக, இழிவான தொழில் என்று கருதுபவற்றை செய்யும் ஆபிரிக்கனை காப்பிரி என்று விளிக்கும்போது அவன் செய்யும் இழிதொழிலே மனதில் துருத்துவதால் காப்பிரி(லி) அவச்சொல்லேயாம்!

தமிழர் வெண் தோலை பிசாசின் அடையாளமாக கருதினர் எனவும், பிள்ளைகள் கறுப்பாக வேண்டும் என எண்ணை பூசி வெயில் கிடத்தினர் எனவும் இபின் பதூதா தனது குறிப்பில் எழுதி உள்ளாராம்.

ஒரு காலத்தில் வெள்ளை இழிவு. பின்னர் கறுப்பு இழிவு

எல்லாமுமே கால ஓட்டத்தில் மாறுவனவே. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

யவனர் பொன்னிறக் கேசமும், பால்நுரை வெண்மைத் தோலுமாக இருப்பதால் அவச்சொல்லாகாது. அடிமையாக, இழிவான தொழில் என்று கருதுபவற்றை செய்யும் ஆபிரிக்கனை காப்பிரி என்று விளிக்கும்போது அவன் செய்யும் இழிதொழிலே மனதில் துருத்துவதால் காப்பிரி(லி) அவச்சொல்லேயாம்!

வெள்ளைத்தோல் என்றால், உயர்வு, கறுப்பு தோல் என்றால் தாழ்வு என்பது, எமது பார்வை என்றே சொல்வேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு நான் எழுதியது விளங்கவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இங்கு யாரும் இன்னும் பாலர் வகுப்பில் இல்லை என்று நினைக்கிறேன்.👋

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

தமிழர் வெண் தோலை பிசாசின் அடையாளமாக கருதினர் எனவும், பிள்ளைகள் கறுப்பாக வேண்டும் என எண்ணை பூசி வெயில் கிடத்தினர் எனவும் இபின் பதூதா தனது குறிப்பில் எழுதி உள்ளாராம்.

ஒரு காலத்தில் வெள்ளை இழிவு. பின்னர் கறுப்பு இழிவு

எல்லாமுமே கால ஓட்டத்தில் மாறுவனவே. 

சீனத்து வெடிமருந்தை, பாவித்து பீரங்கி போன்ற போர்கருவிகளையும், துப்பாக்கிகளையும், கண்டு பிடித்த பின்னர், அதுவரை இருந்த துடுப்புகளால் இயக்கப்பட்ட சிறு படகுகளை, பெரியதாக்கி, புதிய நெடும்தூரம் செல்லும் பாய்கப்பல் பாவனைக்கு வந்த பின்னர், 1444AD அளவில் போர்த்துகேயர்கள், மேற்கு ஆப்பிரிக்க கறுப்பர்களை அடிமைகளாக ஐரோப்பாவுக்கு கொண்டு வந்தனர். அப்படியே ஸ்பானியர்கள் அமெரிக்காவுக்கும், 1498ல் இந்திய துணைக்கண்டத்துக்கும் போர்த்துகேயர்கள் வந்த பின்னர், தம்மை வெல்ல முடியாத ஒரு பிம்பமாக காட்டியபோதே, நமது பகுதி உள்ளிட்ட கறுத்ததோல் காரர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டனர்.

இது பிரிட்டிஷ் காலத்தில் அதிகமாக இருந்தது.

அதேபோல, வெள்ளைத்தோல் ஆரியர்களும் , தென் இந்தியரை, முக்கியமாக தமிழரை ஏமாத்த, இமயமலையில் இருந்து இறங்கி வரும், இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் என்று கதை விட்டு, கோவில்களை ஆக்கிரமித்துக்கொணடார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

ஐரோப்பியரை விட வெள்ளை சிறந்தது என கட்டமைத்தவர்கள் ஆரியர்களே/பிராமணியர்களே என நினைக்கிறேன்.

ஐரோப்பா “இருண்ட காலத்தில்” இருந்த போது, யானைகளை கப்பல் ஏற்றி கடாரம் வரை போய், ஶ்ரீ விஜய சாம்ராஜ்யத்தையே வீழ்த்திய நாம், அப்போதே எமது மன்னர்களின் அரண்மனையில் பிராமணர்களை முதல் நிலையில் வைத்திருந்துள்ளோம்.

எப்படி சாதியை புகுத்தினரோ அப்படி “கறுப்புன்னா கலீஜு” என்ற மன நிலையையும் பரப்பி விட்டிருப்பர்.

அதை பின்னர் வந்த ஐரோப்பியர் சிக்கென பிடித்திருப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நான் தவிர்த்த சொல்லை நீங்கள் எழுதியே விட்டீர்கள்.

அர்த்தம் யாருக்காவது தெரியுமா?

 காவாலி / கடப்புலி/ விடுகாலி//வங்கோலை - நடத்தை தவறான மனிதன் . ஒழுக்கமற்றவன் ...

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கைப்பை ஒருபுறமும் காலனியில் ஒன்று ஒருபுறமும் போக, விழ இருந்த என்னை ஒரு காப்பிலி இழுத்து நிறுத்துகிறான்.

அதுவல்ல என்  பதிவின் நோக்கம். நான் எழுதியது சரியா ??? தவறா /// என்பதுதான்

நீங்கள் கதை எழுதியது தமிழ் மக்களுக்கு தெரிவிக்க , உங்களை விழாது   தடுத்தவனை விபரிக்க "காப்பிலி "என எழுதினீர்கள். இதை கதையின் சுவாரசியம் கருதி நம்மின மக்களுக்கு இலகுவில் விளக்கம் தர இவ்வாறு  எழுதியது சரியே ...குற்றம் காண நினைப்பவர்கள் கதையை ரசிக்காமல்  குறை காண்பார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2023 at 20:08, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காப்பிலி என்னும் சொல்லை நான் அதுவும் நேர்மறையான "காப்பிலி என்னை விழாது காப்பாற்றினான்" என்று குறிப்பிட்டது தவறல்ல என்கிறேன். அந்த இனத்தவரின் முகத்துக்கு நேரில் அல்லது அவர்கள் காதில் படும்படி நாம் அப்படியான சொற்களைப் பயன்படுத்துவதுதான் தவறு. 

நீங்களே அந்தச் சொல் தவறு என்று சொல்கிறீர்கள். அந்தச் சொல் ஒருவருக்கு முன்னாலோ பின்னாலோ சொன்னாலும் தவறுதான்.  தவிர்த்திருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சாதியும் இதுவும் ஒன்றல்ல என்று கூறியும் நீங்கள் வாசிக்காது கருத்து வைக்கிறீர்கள்.

நான் சொல்ல வந்தது இழி சொற்கள் எப்படி வரும் என்பதை 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2023 at 05:08, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த இனத்தவரின் முகத்துக்கு நேரில் அல்லது அவர்கள் காதில் படும்படி நாம் அப்படியான சொற்களைப் பயன்படுத்துவதுதான் தவறு. 

On 5/10/2023 at 18:59, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எம்மவர்கள் வாக்குக்கண், பல் மிதப்பு என்றும் வெள்ளைச்சி என்றும் பயன்படுத்துவதுதானே ??? அச்சொற்களை அந்த நபர்களுக்கு முண் அல்லது அவர்கள் காதுபடக் கூறுவதுதான் தவறு.

உண்மையில் இந்த இரண்டு பந்திகளிலும் நீங்களே எழுதியிருக்கிறீர்கள் முகத்துக்கு நேரே கூறுவது தவறு என்று பின்பு ஏன் அதனை கதை சுவாரசியமாகப் போக வேண்டும் என்பதற்காக அப்படியான சொற்களை பயன்படுத்தவேண்டும்? 

அப்படியான சொற்கள் தவறு எனத் தெரிந்தால் முகத்துக்கு நேர கூறினாலும் சரி அவர்களைப் போகவிட்டு பின்னால் கூறினாலும் சரி, கதையில் எழுதினாலும் சரி, அந்த சொல்லைப் பயன்படுத்தியது தவறுதானே??

உங்களது மகள்கள் இப்படிக்கூறுவதை ஏற்பார்களா? நான் நினைக்கவில்லை அவர்கள் இப்படியான அடையாளச் சொற்களை சரியான நினைப்பார்கள் என.. 

காப்பிலி என்றால் தலைமயிரை ஒழுங்காக சீவாமல் அலங்கோலமாக உள்ளவர்களை கூறும் சொல் .. இன்னமும் ஊரில உள்ளவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இரண்டாவது காபிரீன்(நம்பிக்கையற்றவன்) விரிவுதான் காப்பிலி என்றால் நேரடியான வசவு சொல் இல்லாவிட்டாலும் விரும்பத்தக்க பண்பைக்கொண்ட சொல் இல்லை. 

இப்படி அந்த பிரச்சனைக்குரியது என்றால் தவிர்த்திருக்கலாம். 

இல்லை நீங்கள் தவறாக எதுவும்   செய்யவில்லை என்றால் விமர்சனங்களை கடந்து போகவேண்டியதுதான்..

Edited by P.S.பிரபா
வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிலாமதி said:

காவாலி / கடப்புலி/ விடுகாலி//வங்கோலை - நடத்தை தவறான மனிதன் . ஒழுக்கமற்றவன்

நன்றி.

இதில் கடைசி சொல்லு தூஷணம் என நினைக்கிறேன்.

பொதுப்படையாக அன்றி ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் என்ன என அறிய ஆவல்.

ஓடுகாலி என்றால் வீட்டில் தங்காதவர்கள். விடுகாலி?

  • கருத்துக்கள உறவுகள்
கடப்புலி - கெட்டவன்
விடுகாலி - கட்டுக்கடங்காதவன். கட்டுப்பாடற்றவன்
 
வங்கோலை - ராஸ்கல் -  கெட்டவன்
 
இந்த வார்த்தைகள் மிக உக்கிரமான வெறுப்பின் அல்லது கோபத்தில் ஒருவரை பார்த்தோ அல்லது ஒருவரைப் பற்றியோ அவரது  ஒழுக்கச்சிர் கேட்டை சுட்டிக் காட்டி இடித்துரைக்கும் சொற்களாக அடையாளப்படுத்தப்படுவை.
 
உதாரணம்
 
1)  இஞ்ச....உந்தக் காவாலி சேட்டையை என்னட்டைக் காட்டாதை ...!
2) இதென்ன காவாலித்தனம் ?
3)கண்ட கண்ட காவாலி கடப்புலியளோடு ரோடு ரோடா திரி..அப்ப தானே அப்பாண்ட பெயரை கெடுக்கலாம் என்ன?
4) நவமணிண்ட ரெண்டு மக்களும் விடுகாலிகளாப் போட்டான்கள்.
5) வங்கோலை ராஸ்கல் உனக்கு அவ்வளவு தைரியமா?
 
நன்றி  தமிழாயம்
 
தினம் ஒரு ஈழத்தமிழ் சொல் 
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வேறு ஒருவருடன் இதுபற்றிக் கதைத்தபோது என்னைக் கடுமையாக வார்த்தைகளால் தாக்கினார். எனக்கே என் எழுத்தில் சந்தேகம் வந்துவிட இருக்கவே இருக்கு யாழ் இணையம் என்று இங்கக்கு வந்து எழுதினேன்.  ஏனெனில் முகமூடியில் இருப்பவர்கள் துணிவாகத் தம் கருத்தைக் கூறுவார்கள் என எண்ணினேன். ஆனாலும் பலரிடமிருந்து சரியான விடை கிடைக்கவில்லை.

நான் எழுதியது ஒரு சம்பவம். அதில் அவனை நிறுத்திவைத்து எந்த நாடு என்றா கேட்க முடியும் 😂

உங்கள் ஏனைய துலங்கல்களைப் பார்க்கும் போது நான் ஊகிப்பது, நீங்கள் தவறு என்று ஏற்கனவே புரிந்து கொண்ட ஒரு விடயத்தை இங்கே இருக்கும் முகம் தெரியாத பதிவர்கள் யாராவது "தவறில்லை" என்று சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறீர்கள். இதனால் தான் யாயினி, நிழலி உட்பட பலர் இது பிழை என்ற தெளிவாக எழுதிய பின்னரும் "எனக்குப் பதில் இன்னும் கிடைக்கவில்லை!" என்று முறைப்படுகிறீர்கள் போல தெரிகிறது! இது self-fulfilling  prophecy, இதில் நேரம் மெனக்கெட்டு எழுதுவது வீண் வேலை என்று யாயினி சொன்னது சரி தான்😂!

கடைசியாக: நீங்கள் விழுந்து கொண்டிருக்கும் போதே சமநேரத்தில் அந்தக் கதையை எழுதிக் கொண்டிருந்திருக்கிறீர்களென இன்று தான் தெரிகிறது😎. இதனால் தான், தோல் நிறம், எங்கையிருந்து அந்த மனிதர் வந்திருப்பார் என்ற மீள்பார்வையே இல்லாமல் உடனே "காப்பிலி" என்று எழுதி விட்டீர்கள்! ஆற அமர இருந்து அவர் எந்தக் கண்டத்திலிருந்து வந்திருப்பார் என்று யோசிக்க முடிந்திருந்தால் அப்படி எழுதியிருக்க மாட்டீர்கள்! சரியா நான் சொல்வது? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:
கடப்புலி - கெட்டவன்
விடுகாலி - கட்டுக்கடங்காதவன். கட்டுப்பாடற்றவன்
 
வங்கோலை - ராஸ்கல் -  கெட்டவன்
 
இந்த வார்த்தைகள் மிக உக்கிரமான வெறுப்பின் அல்லது கோபத்தில் ஒருவரை பார்த்தோ அல்லது ஒருவரைப் பற்றியோ அவரது  ஒழுக்கச்சிர் கேட்டை சுட்டிக் காட்டி இடித்துரைக்கும் சொற்களாக அடையாளப்படுத்தப்படுவை.
 
உதாரணம்
 
1)  இஞ்ச....உந்தக் காவாலி சேட்டையை என்னட்டைக் காட்டாதை ...!
2) இதென்ன காவாலித்தனம் ?
3)கண்ட கண்ட காவாலி கடப்புலியளோடு ரோடு ரோடா திரி..அப்ப தானே அப்பாண்ட பெயரை கெடுக்கலாம் என்ன?
4) நவமணிண்ட ரெண்டு மக்களும் விடுகாலிகளாப் போட்டான்கள்.
5) வங்கோலை ராஸ்கல் உனக்கு அவ்வளவு தைரியமா?
 
நன்றி  தமிழாயம்
 
தினம் ஒரு ஈழத்தமிழ் சொல் 

மிக்க நன்றி உங்களுக்கும் தமிழாயத்துக்கும்🙏

1 hour ago, Justin said:

கடைசியாக: நீங்கள் விழுந்து கொண்டிருக்கும் போதே சமநேரத்தில் அந்தக் கதையை எழுதிக் கொண்டிருந்திருக்கிறீர்களென இன்று தான் தெரிகிறது😎. இதனால் தான், தோல் நிறம், எங்கையிருந்து அந்த மனிதர் வந்திருப்பார் என்ற மீள்பார்வையே இல்லாமல் உடனே "காப்பிலி" என்று எழுதி விட்டீர்கள்! ஆற அமர இருந்து அவர் எந்தக் கண்டத்திலிருந்து வந்திருப்பார் என்று யோசிக்க முடிந்திருந்தால் அப்படி எழுதியிருக்க மாட்டீர்கள்! சரியா நான் சொல்வது? 

🤣

ஏதோ அன்ரி இந்த திரியை திறந்ததால் - ஒரு அரிய தமிழ் சொல்லை தூசணம் என நினைத்து கொண்டிருந்த என் அறியாமை நீங்கியது. 

அதேபோல் கட(ய)புலி என்பது சாதிய வசவு இல்லை என்பதும்,

விடுகாலி = கட்டுபாடற்றவன் என்பதும் தெளிவாகியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.