Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு தாம் வரலாறை கரைச்சு குடித்தது போலவும், நேரே நின்று பார்ர்தது போலவும் எழுதுவது யாழ் கருத்துக்களத்துக்கு  புதிய விடயம் அல்ல. 

தமிழீழ விடுதலை புலிகள் செய்த பயங்கரவாதங்களை முன்னாள் புலனாய்வு உறுப்பினர்களிடம் கேட்டால் சொல்வார்கள். தலை சுற்றும். 

மனிதநேயம் இல்லாத இடத்தில் சுதந்திரம், சுக வாழ்வு எப்படி சாத்தியம்?

85ம் ஆண்டு இவர் பால்குடியாய் இருந்திருப்பார்😀...பிறகு கொழும்பு வந்து ,வெளிநாடு வந்த இவர் போன்றவர்கள் சொல்வதை வேத வாக்காய் எடுத்து கொள்ளட்டாம் என்று சொல்கிறார் 
 

  • Like 2
  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அக்க 1985 இல் கப்டன் அன்பரசிக்கு கிரெனைட் கிளிப் எப்படி கழட்டுவது என்று பாடம் எடுத்து கொண்டிருந்தவா🤣.   அவ எடுக்கும் புலிவாந்தியை வேதவாக்காக எடுக்கட்டாம். 

—————-

காஸாவில் பணைய கைதிகளாக இருக்கும் அமெரிக்கரை விடுவிக்கும் நோக்கில் இஸ்ரேல் வந்து சேர்ந்த அமெரிக்க சிறப்பு படையணி.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/10/2023 at 17:45, goshan_che said:

சம்பவம் உண்மை. 

புலிகள்தான் செய்தார்கள் என்பதை காட்ட, புலிகளின் எதிரிகள் சொல்வது தவிர்ந்த ஆதாரம் வேறு எதும் உள்ளதா?

பிகு

ஒரு காலத்தின் சுய விமர்சனம் இந்த இனத்துக்கு தேவை என்று கூறி, புலிகளின் தவறுகளை விமர்சித்த என்னை குரல்வளையில் கடித்து வைத்த நீங்களும் , எப்போவும் - கேவலம் ஹமாசை நியாயப்படுத்த, புலிகள்தான் செய்தார்களா? என சந்தேகிக்கப்படும் படுகொலைகளை கூட அவர்கள் தலையில் கட்டி விடப்பார்கிறீர்கள்.

ஓடி…ஓடி…ஆதாரம் ஒட்டுகிறீர்கள்.

விந்தை மனிதர்கள்.

ஏன் புலிகள் விட்ட பிழையை எழுதினால் என்ன?...ஈஸ்டர் தாக்குதலுக்கு கோத்தா பதில் சொல்ல வேண்டும் ...மு.வாய்க்காலுக்கு  இலங்கையரசு ,உலக நாடுகள்  பதில் சொல்ல வேண்டும் ...ஆனால் புலிகள் விட்ட பிழையை மட்டும் கதைக்கப்படாது...இப்படிப்பட்ட நியாயங்களால் தான் எல்லோரும் சேர்ந்து எங்களை அழித்தவர்கள் 
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ரதி said:

ஏன் புலிகள் விட்ட பிழையை எழுதினால் என்ன?...ஈஸ்டர் தாக்குதலுக்கு கோத்தா பதில் சொல்ல வேண்டும் ...மு.வாய்க்காலுக்கு  இலங்கையரசு ,உலக நாடுகள்  பதில் சொல்ல வேண்டும் ...ஆனால் புலிகள் விட்ட பிழையை மட்டும் கதைக்கப்படாது...இப்படிப்பட்ட நியாயங்களால் தான் எல்லோரும் சேர்ந்து எங்களை அழித்தவர்கள் 
 

உங்களை விட அவர்கள் விட்ட பிழைகளை எல்லாம் அதற்குரிய திரிகளில் பலதடவை நான் இதே யாழ்களத்தில் கதைத்து விட்டேன்.

ஆனால் சம்பந்தமில்லாத திரிகளில் தமது தரப்பு வாதத்தை வலுவாக்க அவர்களை இழுத்து விமர்சிக்கும் போக்கை நான் எதிர்க்கிறேன்.

—————

ஹமாஸ் உயிருடன் எரித்த இஸ்ரேலிய குழந்தைகள் என்கிறார்கள்.👇

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

உங்களை விட அவர்கள் விட்ட பிழைகளை எல்லாம் அதற்குரிய திரிகளில் பலதடவை நான் இதே யாழ்களத்தில் கதைத்து விட்டேன்.

ஆனால் சம்பந்தமில்லாத திரிகளில் தமது தரப்பு வாதத்தை வலுவாக்க அவர்களை இழுத்து விமர்சிக்கும் போக்கை நான் எதிர்க்கிறேன்.

—————

ஹமாஸ் உயிருடன் எரித்த இஸ்ரேலிய குழந்தைகள் என்கிறார்கள்.👇

 

 

உதை என்னை குவோட் பண்ணி இணைக்கிறீர்கள்?...நான் ஹமாசுக்கு ஆதரவு என்று எங்கேயாவது சொன்னேனா?
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலிய வான் தாக்குதலில் இறந்த குழந்தை ஒன்று மீட்க்கப்படும் காட்சியாம்.

 

 

Just now, ரதி said:

உதை என்னை குவோட் பண்ணி இணைக்கிறீர்கள்?...நான் ஹமாசுக்கு ஆதரவு என்று எங்கேயாவது சொன்னேனா?
 

நீங்கள் ஹமாசுக்கு ஆதரவு எண்டு நான் எங்க சொன்னேன்.

யாழ்களம் பதிவுகளை auto merge பண்ணுவது கூட தெரியாமல் இருக்கிறீர்கள். உங்கள் அறியாமையில் என்னை கேள்வி வேறு கேட்கிறீகள்.

இரெண்டு பதிவுகளுக்கு இடையே

———— 

என ஒரு வேலி போட்டுள்ளேன் பாருங்கள். வேலிக்கு அந்த பக்கம் இருப்பது மட்டுமே உங்களுக்கான பதில்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, goshan_che said:

இஸ்ரேலிய வான் தாக்குதலில் இறந்த குழந்தை ஒன்று மீட்க்கப்படும் காட்சியாம்.

 

 

நீங்கள் ஹமாசுக்கு ஆதரவு எண்டு நான் எங்க சொன்னேன்.

யாழ்களம் பதிவுகளை auto merge பண்ணுவது கூட தெரியாமல் இருக்கிறீர்கள். உங்கள் அறியாமையில் என்னை கேள்வி வேறு கேட்கிறீகள்.

இரெண்டு பதிவுகளுக்கு இடையே

———— 

என ஒரு வேலி போட்டுள்ளேன் பாருங்கள். வேலிக்கு அந்த பக்கம் இருப்பது மட்டுமே உங்களுக்கான பதில்.

தவறுக்கு வருந்துகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ரதி said:

தவறுக்கு வருந்துகிறேன்

பரவாயில்லை🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, goshan_che said:

இரெண்டு பதிவுகளுக்கு இடையே

———— 

என ஒரு வேலி போட்டுள்ளேன் பாருங்கள். வேலிக்கு அந்த பக்கம் இருப்பது மட்டுமே உங்களுக்கான பதில்.

பல வருட கள அனுபவம் உள்ளவர்களுக்கு சாதாரண பதிவு சம்பந்தப்பட்ட விஷயங்களியே தெளிவில்லையே, பல தசாப்த போரில் பக்கத்தில் நின்று பார்த்ததுபோல் அடுக்கடுக்காய் குற்றம் சுமத்துவற்கு வெறும் கர்ண பரம்பரை கதைகளையே ஆதாரமாக கொண்டுள்ளார்கள் என்பது வெளிப்படை.

இவர்களுக்காக மூச்சிரைக்க மூச்சிரைக்க பதில் சொல்லி மாளும் கோசானுக்காக மனம் வருந்துவதை தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.

  • Like 1
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் உக்கிர தாக்குதல் - பணயக் கைதிகள் என்ன ஆனார்கள்?

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம்,REUTERS/AMIR COHEN

12 நிமிடங்களுக்கு முன்னர்

இஸ்ரேலுக்கு விதித்த கெடு முடிவடைந்ததுமே ஹமாஸ் மீண்டும் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. காசாவை ஒட்டியுள்ள அஷ்கெலான் என்ற நகரை நோக்கி ஹமாஸ் குழுவினர் மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேநேரத்தில், இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதியில் தனது தாக்குதலை தொடர்கிறது. இதனால், இருதரப்பிலுமே உயிரிழப்பு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் நான்காவது நாளை எட்டியுள்ளது. ஹமாஸ் குழுவினர் திடீரென சுமார் 7 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக காசாவுக்கு பிடித்துச் சென்றுவிட்டனர். இதனால் நிலைகுலைந்து போன இஸ்ரேல் உடனே சுதாரித்துக் கொண்டு, அடுத்த சில மணி நேரத்தில் பதிலடி தாக்குதலை தொடங்கிவிட்டது.

அதுமுதற்கொண்டு இஸ்ரேல் ராணுவத்தினர் காசா பகுதியில் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் குழுவினர் இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரத்தில் இஸ்ரேலுக்குள் பல இடங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஆயுதம் தாங்கிய நபர்களையும் முறியடிக்க இஸ்ரேல் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

காசா பகுதியில் இஸ்ரேல் விமானப்படையினர் இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வரும் வேளையில், அதற்குப் பதிலடியாக, காசாவை ஒட்டி தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்கெலான் நகரை மீண்டும் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப் போவதாக ஹமாஸ் எச்சரித்தது. ஆகவே, அந்நகர மக்கள் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் கெடு விதித்தது.

டெலிகிராமில் ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், "காசா கரைக்கு வடக்கே அமைந்துள்ள இந்த நகரின் குடியிருப்பாளர்கள் மாலை 5 மணிக்குள் (இங்கிலாந்து நேரம் பிற்பகல் 3 மணி) வெளியேற வேண்டும்" என்று எச்சரித்திருந்தது. அதேநேரத்தில், காசா பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக எச்சரிக்கைகளை விடுத்ததையும் ஹமாஸ் நினைவுகூர்ந்தது.

கெடு தாண்டியதும் தாக்குதலை தொடங்கிய ஹமாஸ்

அஷ்கெலான் நகர மக்களுக்கு விதித்த கெடு நிறைவடைந்ததுமே, ஹமாஸ் மீண்டும் தாக்குதலை தொடங்கிவிட்டது. காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 விநாடிகளுக்குள் 2 சுற்றுகள் ராக்கெட்டுகளை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனாலும், இதனால் பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான மறைவிடங்களுக்குச் சென்றுவிட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரிகிறது. கண்ணாடி சிதைவுகள் பட்டதால் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம்,ATEF SAFADI/EPA-EFE/REX/SHUTTERSTOCK

காசாவில் தாக்குதலை தொடரும் இஸ்ரேல்

அஷ்கெலான் நகர் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தினாலும், மறுபுறம் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்கிறது. கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஜக்காரியா அபு மும்மர், ஜாவத் அபு ஷாமல் ஆகிய 2 மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அவர்கள் இருவரும் ஹமாஸில் அதிகாரம் வாய்ந்த அரசியல் குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஆவர்.

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருதரப்பிலும் பலி 2,000ஐ நெருங்குகிறது

அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனர்களின் இறப்பு எண்ணிக்கை 870-ஆக உயர்ந்துவிட்டதாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் 4,000 பேர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை முதல் குறைந்தது 1,008 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, அமெரிக்காவிற்கான இஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பதிவிட்ட இத்தூதரகம், 3,418க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாலத்தீனர்களுக்கு பாதையை மூடிய எகிப்து

இஸ்ரேலிய குண்டுவீச்சு காரணமாக ரஃபா என்ற பாதையை எகிப்து மூடியுள்ளது. காசாவிலிருந்து எகிப்துக்குச் செல்லும் ரஃபா பாதை தான் அந்த பிரதேசத்திலிருந்து வெளியேறும் ஒரே வழி. இப்பகுதியில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காரணமாக எகிப்து தற்போது இந்தக் பாதையை மூடியுள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த பாதை திறந்திருந்தாலும், அதனை கடந்து செல்ல நீண்ட காத்திருப்போர் பட்டில் இருக்கிறது. அந்த பட்டியலில் இருப்பவர்கள் மட்டுமே அந்த பாதையை கடந்து செல்ல முடியும். இஸ்ரேல் தாக்குதலால் உயிருக்கு அஞ்சி ஓடும் பாலத்தீனர்கள் அங்கிருந்து வெளியேறும் ஒரே வழியும் அடைபட்டிருப்பதால் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.

இஸ்ரேலிய பணயக் கைதிகள் என்ன ஆனார்கள்-?

ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் கூறுகையில், சனிக்கிழமை இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 100 முதல் 150 பேர் காசாவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய இராணுவம், கடத்தப்பட்டவர்களின் 50 குடும்பங்களுடன் பேசியுள்ளதாகவும், இராணுவம் தகவல்களை உறுதிசெய்யும்போது மேலும் கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களைத் தொடர்பு கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை இல்லாமல் இஸ்ரேல் விமானத் தாக்குதல்களைத் தொடங்கினால் கடத்தப்பட்டவர்களைக் கொன்றுவிடுவோம் என்று நேற்று இரவு ஹமாஸ் அமைப்பு மிரட்டியது. சண்டை முடிவதற்குள் கடத்தப்பட்டவர்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஹமாஸ் கூறியது. ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா, சண்டை முடிவதற்குள் கடத்தப்பட்டவர்கள் பற்றி இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று கூறியுள்ளார்.

"எதிரி நாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து எங்களைத் தொடர்பு கொண்ட அனைத்து தரப்பினரிடமும் இந்த கோப்பு போர் முடிவதற்கு முன்னர் திறக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

மேலும், "மற்றும் அது நாங்கள் ஏற்றுக்கொள்ளும் விலையில் மட்டுமே இருக்கும்." என்றார். இஸ்ரேல் சனிக்கிழமை தெற்கு இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட 100 முதல் 150 பேர் வரை ஹமாஸ் வசம் உள்ளதாக மதிப்பிடுகிறது.

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம்,TWITTER

பணயக் கைதிகளை விடுவிக்க ரகசிய பேச்சுவார்த்தையா?

இரு தரப்புமே பணயக் கைதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று கூறினாலும், கத்தார் மத்தியஸ்தத்தின் பேரில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் வசம் பணயக் கைதிகளாக உள்ள இஸ்ரேலிய பெண்கள், குழந்தைகள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டினரை விடுவிக்க இஸ்ரேல் கோரியிருப்பதாக தெரிகிறது. அதற்குப் பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலத்தீன பெண்கள், குழந்தைகளை விடுதலை செய்ய இஸ்ரேல் முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில், இஸ்ரேலுக்குள் புகுந்து அந்நாட்டு குடிமக்கள் 30 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றதாக கூறப்படும் இஸ்லாமிய ஜிஹாத் குழு இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை.

https://www.bbc.com/tamil/articles/cmlrvevweezo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்னர் இங்கே பிரஸ்தாபிக்கபட்ட ஜேர்மன் பெண், உயிருடன் அல்லது உயிருக்கு போராடும் நிலையில் ஹமாஸ் பிடியில் இருப்பதாக அவரின் தாயார் தெரிவிப்பு.

(தலை கொத்தப்பட்டு, கால்கள் முறிக்கப்பட்டு குறை உயிரோடு இருக்கும் போதுதான் அவரை ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளார்கள் போல் தெரிகிறது).

https://twitter.com/ShaykhSulaiman/status/1711833167944954161/mediaViewer?currentTweet=1711833167944954161&currentTweetUser=ShaykhSulaiman&mode=profile

 

 

யுத்த சட்டங்களை நாம் மதியோம் என இஸ்ரேல் தளபதி கூறினாராம்.

https://x.com/TreasChest/status/1711818623952564668?s=20

சிரியா இஸ்ரேல் மீது மோட்டார்களை ஏவியதாக தெரிகிறது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈரானின் அல் கெமய்னிக்கு நேரடியாக பதில் சொன்ன இஸ்ரேலின் உத்தியோக பூர்வ கணக்கு.

 

 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

பாலஸ்தீனப் பயங்கரவாதத்தின் மற்றொரு முகம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

பல புதிய காணொளிகளுக்கு அல்ஜெசீரா அராபிக்கை காணவும்... 

கமாஸின் ஆதரவு பரப்புரைத் தளம் இது.

ஆங்கிலத்தில் நடுநிலை வேடம். ஆனால் அவங்கட மொழியிலை அங்காலை பாட்டுப் பாடுவதே நோக்கம்.

 

https://www.youtube.com/@aljazeera/videos

 

 

இந்த மாதிரி எங்களுக்கு ஒன்டு கூட இல்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Eppothum Thamizhan said:

இப்படித்தான் அவர்களும் எள்ளி நகையாடியிருப்பார்கள் எம்மினம் முள்ளிவாய்க்காலில் அழித்தொழிக்கப்பட்டபோது!
ஆனால் அப்போது எமது மனநிலை எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் யோசித்துவிட்டு எழுதுங்கள்!!

 

பல விடயங்களில் இஸ்ரேல் - இலங்கை பிணக்குகள் ஒற்றுமைப்பட்டதும் சமாந்தரமானதும் ஆகும். இதை இங்கே ஒரு சிலர் புரிந்து அந்த கோணத்தில் சிந்திக்கின்றார்கள். 

எமக்கு இலங்கை/தாயக பிரச்சனைகள், போர், அவலங்கள், சாவுகள் நேரடி அனுபவம் உள்ளதால் இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனை சற்று ஆழமாக நோக்கவும், கிரகிக்கவும் முடிகின்றது.

நேரடி அனுபவம் இல்லாதவர்கள், போரின் வலி தெரியாதவர்கள், புத்தகங்களை வாசித்தும், சமூக ஊடகங்களை பார்த்தும் செய்திகள் பார்ப்பவர்கள் நிச்சயம் மாற்று கருத்தை கூறுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலுடன், உக்ரேன் யுத்தம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டதுடன் ஹமாஸ் -இஸ்ரேல் யுத்தம் முன்னிலைக்கு வந்துவிட்டது.

அடுத்த பல மாதங்களுக்கு இஸ்ரேலும் பலஸ்தீனமும்தான் உலகின் முன்னிலைச் செய்திகப்போகிறது.

அதன் பின்னர் வேறொரு யுத்தம்.......

பஸ்தீனம் -இஸ்ரேல் யுத்தம் இரண்டாம் நிலைக்கும், உக்ரேன் யுத்தம் மூன்றாவது நிலைக்கும் பின்தள்ளப்படும்.....

☹️

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, Kapithan said:

இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலுடன், உக்ரேன் யுத்தம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டதுடன் ஹமாஸ் -இஸ்ரேல் யுத்தம் முன்னிலைக்கு வந்துவிட்டது.

அடுத்த பல மாதங்களுக்கு இஸ்ரேலும் பலஸ்தீனமும்தான் உலகின் முன்னிலைச் செய்திகப்போகிறது.

அதன் பின்னர் வேறொரு யுத்தம்.......

பஸ்தீனம் -இஸ்ரேல் யுத்தம் இரண்டாம் நிலைக்கும், உக்ரேன் யுத்தம் மூன்றாவது நிலைக்கும் பின்தள்ளப்படும்.....

☹️

 

 

மூன்று யுத்தம்  மட்டும் தானா??? இல்லை 4 ஆவது 5 ஆவது எனறுமுண்ட?? 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹாசா Gaza  மீது அணுக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு ஹமாசை அழிக்கும்படி இஸ்ரேலிய நெசெற் Knesset சபை உறுப்பினர் கோரிக்கை.....


Israeli Official Calls for 'Doomsday' Nuclear Missile Option

BY NICK MORDOWANEC ON 10/10/23 AT 2:31 PM EDT
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

 

 

நேரடி அனுபவம் இல்லாதவர்கள், போரின் வலி தெரியாதவர்கள், புத்தகங்களை வாசித்தும், சமூக ஊடகங்களை பார்த்தும் செய்திகள் பார்ப்பவர்கள் நிச்சயம் மாற்று கருத்தை கூறுவார்கள். 

🤣

அவர் எழுதியதை வைத்து - நன்னி முள்ளிவாய்க்கால் வரை போய் மீண்டவர் என நினைக்கிறேன்.

அதற்கும் மேல் நேரடி அனுபவம் தேவை என்றால் - ஒரு மனித எறிகணையாக மாறினால்தான் முடியுமாய் இருக்கும்.

இந்த அனுபவமே சில இனத்தினர்/மதத்தினர் மீது அவர் கடும் சினம் கொள்ளவும் காரணமாய் அமைகிறது என நினைக்கிறேன் (அந்த கோபத்தின் நியாப்பாடுகள் வேறுவிடயம்).

எனக்கும் போர் ஓய்வுக்கு முன்னான காலத்தில் (துரதிஸ்டவசமாக) போர் அனுபவம் போதியளவு உண்டு.

உங்களை போல் மூன்றாம் தரப்பாக போரை அனுபவித்தோர் அல்ல நாம்.

நாமே எமது வீடுகளிலும், பள்ளிகளிலும் எமக்கான பதுங்கு குழிகளை கிண்டி வாழ்ந்தவர்கள். நாமே எமது உறவுகளை குண்டு வீச்சில் தொலைத்து விட்டு நின்றவர்கள். நாமே உணவு, மருந்து தடைகளை எதிர்கொண்டு வாழ்ந்தவர்கள். நாமே கொழும்பில் மிருகங்கள் போல் நடத்தப்பட்டவர்கள். நாமே கொழும்புக்கும் ஊருக்கு உயிரை கையில் பிடித்து கொண்டு பயணித்தவர்கள்.

நீங்கள் சொல்கிறீர்கள் எமக்கு யுத்த அனுபவம் இல்லை என்று🤣.

நியாயத்தை கதைப்போம் + எப்போதும் தமிழன் - politics makes strange bedfellows என்பது சரியாகத்தான் இருக்கிறது.

 

Edited by goshan_che
  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிந்திய செய்தி

Ashkelon எனும் காசாவுக்கு அண்மித்த இஸ்ரேலிய ஊரில் - ஊடுருவல் அச்சம் காரணமாக ஊர் வாசிகளை வீட்டில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பூட்டி கொள்ளுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ரொக்கெட் தாக்குதலின் பின், கமாஸ் ஆயுததாரிகள் ஊடுருவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

மூன்று யுத்தம்  மட்டும் தானா??? இல்லை 4 ஆவது 5 ஆவது எனறுமுண்ட?? 🤣🤣

யுத்தமும், இழப்புக்களும் உங்களுக்கு சிரிப்பிற்குரிய விடயங்களா?

☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Russia has this weapons. We have weapons to wipe out Ukraine a 1000 times over. But we don't, we do not get back at Azov, Zelensky by bомbing innocent civilians indiscriminately Thesame horrible tactics the US deployed in Iraq. Go after HAMAS not Palestinians. This is a warcrime by Israel. The hypocrisy in the west is beyond what I have ever seen. Ukrainian lives are important but not Palestinians?

https://twitter.com/i/status/1711351137784217629

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் வெள்ளைப்பொஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாக இப்பொழுது ஊடகங்களில் செய்தி வருகின்றது.. வெடிக்கும் இடத்தில் கடைசி சொட்டு ஒக்சிசனும் முடியும் வரை எரிந்து தீர்க்கும் மனித உடலில் பட்டால் அவ்விடத்தில் ரசாயன தாக்கம் புரிந்து பொஸ்போரிக் அமிலத்தை உருவாக்கி இறப்பவரின் கடைசி நிமிடம் வரை நரகவேதனையை கொடுக்கும் கொடிய விசக்குண்டு..

ஈழத்தமிழரால் இலகுவில் மறந்து போய்விட முடியாத பெயர் இது.. சிங்கள அரசுக்கும் இவர்கள்தான் இந்த குண்டுகளை வழங்கி வீசும்படி வழிகாட்டி இருப்பார்களோ என்று யோசிக்க தோன்றுகிறது..

எதனாலும் நியாயப்படுத்த முடியாத அரச பயங்கரவாதம் இது.. இந்த அரசபயங்கர வாதத்தினால் பாதிக்கப்படும் ஒவ்வொரு அப்பாவி பாலஸ்த்தீன குழந்தைகளும் மக்களும் இன அழிப்பு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் உறவுகளும் வேறல்ல..

 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் வெண் பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதல்?

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் வெண் பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதல்?

“தடை செய்யப்பட்ட வெண் பொஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தி  பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொள்வதாக”  ஹமாஸ் போராளிகள்  அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

 

இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை  யாருமே எதிர்பார்க்காத வகையில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மோசமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இத்தாக்குதலில் 1000 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்தது.

இந்நிலையில், காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலால், அப்பாவிப்  பொதுமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

மேலும்,  போரில் பயன்படுத்த சர்வதேச நாடுகள் மத்தியில் தடை விதிக்கப்பட்டிருந்த வெண் பொஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

வெண் பொஸ்பரஸ் குண்டுகள் நெருப்புக் கோளமாக வெடிப்பவை. சுமார் 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தையும், நெருப்பையும் உமிழ்வதோடு, மனிதர்களை நடைபிணமாக முடக்கக்கூடியவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1353392




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.