Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ஒருவர் "பரிசுத்த வேதாகமம் சொல்வதெல்லாம் உண்மை, அதன் படி கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொள்ளாதோர் எல்லோரும் அழிக்கப் படுவர்" என்கிறார்.

அந்த முட்டாள் தனத்தை எதிர்ப்பதா அல்லது "எனக்குப் பிடிக்காதவனைத் திட்டுகிறார்" என்று குழுவாதச் சகதியில் படுத்துக் கிடப்பதா என்ற தெரிவில் ஒரு நாலு பேர் இரண்டாவது தெரிவை எடுத்திருக்கின்றனர். என்ன ஒரு தூர நோக்கு, யோசிக்கும் திறன், கோசான் சொன்னது போல "கே.எf.சிக்கு கொடி பிடித்து வாக்குப் போடும் கோழிகள்😂" !

அவர் எம்மை அல்லவா மூட நம்பிக்கையாளர் என்கிறார். ஆனால் உண்மையில் கிறித்தவத்தில் இந்த சொல் (மூடநம்பிக்கை) உள்ளதா?

  • Replies 1.5k
  • Views 157.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

யானை பார்த்த விழிபுலனற்றோர் எண்டு எழுதினது சுட்டு விட்டதா? காரியமில்லை🤣.

 

2 hours ago, Justin said:

ஒருவர் "பரிசுத்த வேதாகமம் சொல்வதெல்லாம் உண்மை, அதன் படி கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொள்ளாதோர் எல்லோரும் அழிக்கப் படுவர்" என்கிறார்.

அந்த முட்டாள் தனத்தை எதிர்ப்பதா அல்லது "எனக்குப் பிடிக்காதவனைத் திட்டுகிறார்" என்று குழுவாதச் சகதியில் படுத்துக் கிடப்பதா என்ற தெரிவில் ஒரு நாலு பேர் இரண்டாவது தெரிவை எடுத்திருக்கின்றனர். என்ன ஒரு தூர நோக்கு, யோசிக்கும் திறன், கோசான் சொன்னது போல "கே.எf.சிக்கு கொடி பிடித்து வாக்குப் போடும் கோழிகள்😂" !

அந்தாள் தலைப்புக்கு தலைப்பு என்னை தாளித்து வைச்சிருக்கு 
நான் எதோ எழுதினால் .... பதில் இப்படி எழுதுகிறாரே? யார் இவர் என்று நானே 
குழம்பி அவருக்கு பதில் எழுத நேரம் இல்லாமல் விட்டுவிட்டேன் 
என்னக்கு அவர் எழுதியதற்கு இன்னமும் சில இடத்தில நான் பதிலே இன்னும் எழுதவில்லை. 

முன்பு இப்படித்தான் இன்னும் ஒருவர் ஈசன் என்று இருந்தார் மிக நல்ல கருத்தாளர் 
ஆனால் இந்துமதம் மீது அதீத பற்றுக்கொண்டு ஒரு திரியில் என்னோடு சண்டை பிடித்து கோவித்துக்கொண்டு 
சென்றவர் இன்னறுவரை யாழிற்கு வரவில்லை 

இவருடைய மனதை புண்படுத்தி எனக்கு என்ன லாபம்?
எதோ அது அவருடைய நம்பிக்கை குறைந்தபட்ஷம் கருத்துக்களை எழுதுகிறார் 
யாழில் தொடர்ந்து எழுதட்டும் என்றே கடந்து சென்றேன் 

ஆனாலும் வெருண்டவன் கண்ணுக்கு எல்லாமே பேயாகவே தெரியுது 
கோஸான் சொன்ன யானையையும் காணவில்லை  
 

16 minutes ago, விசுகு said:

அவர் எம்மை அல்லவா மூட நம்பிக்கையாளர் என்கிறார். ஆனால் உண்மையில் கிறித்தவத்தில் இந்த சொல் (மூடநம்பிக்கை) உள்ளதா?

கிறிஸதவமே வெறும் மூட நம்பிக்கையில் பிறந்தது 
அதில் எப்படி மூட நம்பிக்கை என்பது இல்லாமல் இருக்கும் 

ஆனாலும் மேரி இறுதிவரை அந்த இரவோ பகலோ  நடந்தை யாருக்கும் சொல்லவில்லை 
who is that black sheep ? என்பது இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

அது சரி, இந்தியாக்காரன் சொன்னால் ஸ்ரீலங்காக்காரனே கேட்கிறானில்லை. இஸ்ரேல் கட்டாயம் கேட்பான். 🤣

இஸ்ரேல் ஆருயின் நண்பன் அமெரிக்காவையே கேட் கவில்லை. 


ஈரானின் நப்பாசையாக தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அவர் எம்மை அல்லவா மூட நம்பிக்கையாளர் என்கிறார். ஆனால் உண்மையில் கிறித்தவத்தில் இந்த சொல் (மூடநம்பிக்கை) உள்ளதா?

என்னைப்பொறுத்தவரை கிறீத்துவம் என்பது  "ஒருகன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும்  காட்டு" என்பதுதான். 

மிகுதி எல்லாம் வியாபாரம் மட்டுமே. 

கிறீத்துவ சபைகளுக்கிடையில் நடைபெறுவது "என்னுடைய மருந்துதான் நல்ல மருந்து. அதனால் இதை மட்டும்தான் நீ குடிக்க வேண்டும்" எனும் வியாபாரப் போட்டிதான்,.😁 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

அது சரி, இந்தியாக்காரன் சொன்னால் ஸ்ரீலங்காக்காரனே கேட்கிறானில்லை. இஸ்ரேல் கட்டாயம் கேட்பான். 🤣

ந‌ண்பா இந்தியா ப‌ல்லு இல்லாத‌ பாம்பு............
சொந்த‌ நாட்டு மீன‌வ‌னை கொன்று குவிச்சாலும் இல‌ங்கை எங்க‌ட‌ ந‌ட்ப்பு நாடு

  • கருத்துக்கள உறவுகள்

Ex-IDF soldier criticizes Israeli government over 'catastrophic mistake'

Former IDF soldier Benzi Sanders was deployed into Gaza in 2014. He tells CNN's Christiane Amanpour it's a "catastrophic mistake" to believe military power against Hamas will bring safety to Israel.

https://www.cnn.com/videos/world/2023/11/06/idf-soldier-benzi-sanders-amanpour-israel-vpx.cnn

 

NOW PLAYING
Ex-IDF soldier criti
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா நகரின் மையப்பகுதிக்குள் இஸ்ரேலிய இராணுவம்

Published By: RAJEEBAN     08 NOV, 2023 | 06:22 AM

image

காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவத்தினர் காசாவின் மையபகுதியில் நிலைகொண்டுள்ளனர் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடல் வான் தரைவழி தாக்குதல்களை மேற்கொண்டு படையினர் காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

காசாவை சுற்றிவளைத்து படையினர்  அதன் உள்ளே நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

காசா மக்களை தயவு செய்து தெற்கிற்கு செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/168773

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவின் துயரங்களை பதிவு செய்வதற்காக அங்கேயே தங்கியிருப்பதற்கு கனடா பிரஜை தீர்மானம் - மத மனிதாபிமான கடமை என தெரிவிப்பு

Published By: RAJEEBAN    08 NOV, 2023 | 10:48 AM

image

காசாவில் இடம்பெறும் யுத்தத்தை பதிவு செய்வதற்காக தொடர்ந்து காசாவிலேயே தங்கியிருக்கப்போவதாக கனடாவை  சேர்ந்த  ஒருவர் தெரிவித்துள்ளார்.

காசாவிலிருந்து வெளியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர் அங்கிருந்து வெளியேற மறுத்துள்ள அதேவேளை தனது குடும்பத்தை அங்கிருந்து அகற்றியுள்ளார்.

காசாவில் தங்கியிருந்து அங்கு நடப்பவற்றை பதிவு செய்யவேண்டியது எனது கடமை என கருதுகின்றேன் என கனடாவை சேர்ந்த மன்சூர் சூமன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

canada_man_gaza.jpg

தனது மனைவியும் ஐந்து பிள்ளைகளும் செவ்வாய்கிழமை எகிப்து எல்லை ஊடாக பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர் என முகாமைத்துவ ஆலோசகரான  அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் காசாவில் தங்கியிருக்கவேண்டிய கடப்பாடு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2.3 மில்லியன் மக்களின் துயரம்நீடிக்கும்வரையில் காசாவிலேயே தங்கியிருப்பது அங்கு என்ன நடக்கின்றது என்ற உண்மையை  வெளி உலகிற்கு தெரிவிப்பது  எனது மத மனிதாபிமான கடப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

என்;னால் ஆங்கிலத்தில் உரையாட முடியும் நான் மேற்குலகில் வாழ்ந்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெரூசலேத்தை சேர்ந்த அவர் இரண்டு வருடங்களிற்கு முன்னர் தனது குடும்பத்துடன் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் குடியேற தீர்மானித்தார் - தனது பிள்ளைகள் தனது பூர்வீக நிலத்தில் வாழவேண்டும் என்பதற்காகவே அவர் இந்த தீர்மானத்தை எடுத்தார்.

காசா எனது மனைவியின் பூர்வீகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இங்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தோம் எனது பிள்ளைகள் சர்வதேச பாடசாலைக்கு சென்றார்கள் நானும் மனைவியும் இங்கு தொழில்புரிகின்றோம் எங்களிற்கு நண்பர்கள் உள்ளனர் உள்ளுர் மசூதி மிகச்சிறந்த இடம்  என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாங்கள் யுத்தத்தின் பிடியில் சிக்குவோம் என எதிர்பார்க்கவில்லை எனதெரிவிக்கும் அவர் தான் வசிக்கும் கான்யூனிசில் ஒரு சிறிய மருத்துவமனையை உருவாக்கியுள்ளார் பிரசவ விடுதிக்கு அருகில் உள்ள சிறிய அறையில் அவர் உறங்குகின்றார்.

எப்போதெல்லாம் குழந்தையொன்று பிறக்கின்றதோ அப்போதெல்லாம் மகிழ்ச்சியான செய்தியை நான் செவிமடுக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/168786

  • கருத்துக்கள உறவுகள்

400419840_725624422935866_65838066543592

 

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

🏿பலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலின் அடக்குமுறையை ஆதரிப்போர், எதிர்ப்போர் படிக்கவேண்டியது..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

காசாவின் துயரங்களை பதிவு செய்வதற்காக அங்கேயே தங்கியிருப்பதற்கு கனடா பிரஜை தீர்மானம் - மத மனிதாபிமான கடமை என தெரிவிப்பு

இவர் கனடா பிரசை என்ற பெயர் தாங்கி மத கட்டளையை நிறைவேற்றுபவர்.
[ஐந்து பிள்ளைகளும் செவ்வாய்கிழமை எகிப்து எல்லை ஊடாக பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர் என முகாமைத்துவ ஆலோசகரான  அவர் தெரிவித்துள்ளார்]

  • கருத்துக்கள உறவுகள்

பைடன் 3 நாள் போரை ஒத்திவைக்குமாறு நெத்தனியாகுவை கேட்டுள்ளார். இது வரை நெத்தனியாகுவிடம் இருந்து பதில் வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

பைடன் 3 நாள் போரை ஒத்திவைக்குமாறு நெத்தனியாகுவை கேட்டுள்ளார். இது வரை நெத்தனியாகுவிடம் இருந்து பதில் வரவில்லை.

அர‌க்க‌னிட‌ம் இருந்து என்ன‌ ப‌தில் வ‌ரும் 
இந்த‌ நூற்றாண்டு க‌ண்ட‌ மிக‌ப் பெரிய‌ அர‌க்க‌ன் நெத்த‌னியா

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
 

33வது நாளில் இஸ்ரேலுக்கு பேரிடி-நெதன்யாகுவுக்கு எதிராக திரும்பிய அமெரிக்கா-7 நாடுகள் அதிரடி முடிவு

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2023 at 20:39, பாலபத்ர ஓணாண்டி said:

இது மாதிரி கிறுக்குத்தனமா பேசற ஆளுங்கள பாக்கிறப்போ ஆளு செட் அப் பண்ணி கூட்டத்துல உருள விடுர போதகர்மார் மைண்ட் வாய்ஸ்- அப்பாடா நம்ப பொழப்புக்கு பிரச்சனை இல்லை…🤣

குரங்கிலிருந்து மனிதன் தேன்றினான் என்பதை எட்கிற இனத்துக்கு இது பயித்தியக்கார தனமாகத்தான் இருக்கும். நீங்கள் எதோ downvote பண்ணுவதால் எனக்கு என்னமோ நடடம் வருமென்று நினைக்கலாம். அல்லது நீங்கள் நினைக்கிற மாதிரி எழுதுவேன் என்று நினைக்கலாம். உங்களை எனக்கு தெரியாது. என்னை உங்களுக்கு தெரியாது. எனக்கும் தமிழ் தெரியும், உங்களுக்கும் தமிழ் தெரியும். இது ஒரு கருத்து களம். அம்புட்டுதே.

On 7/11/2023 at 20:27, பாலபத்ர ஓணாண்டி said:

பால் தினகரன் குறை தீர்க்கும்கூட்டத்துக்கு போயிட்டு வாணே…!!! எல்லாம் சரி ஆயிடும்..🤣

ஏன் நீங்கள் நித்தியானந்தா ஸ்வாமிகள், பிரேமானந்தா ஸ்வாமிகள், ரஜனீஷ் ஸ்வாமிகளின் பின்னால் போகலாம் , நாங்கள் பால் தினகரன் சொல்வதை கேட்க்க  கூடாதோ? கர்ப்ப கிரகத்துக்குள் என்னமோ எல்லாம் நடக்குது. அதை விட்டிட்டு ....................

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2023 at 20:21, பாலபத்ர ஓணாண்டி said:

திருடனும் கூட்டத்தோட சேந்து ஜயோ திருடன் திருடன் எண்டு கத்தினமாதிரி இருக்கு..🤣

சீ சீ இஸ்ரேல் அப்பிடி எல்லாம் செய்யாது..  குருசோ படிச்ச பைபிள்ள உதெல்லாம் இல்ல..  மூட நம்பிக்கை உது.. உலக அமைதிக்கு சிக்கலான விடயம் நீங்கள் எழுதுறது..🤣

பைபிள் என்றால்  என்னவென்றே தெரியாதவர்களுடன் பேசுவதில் பயனில்லை. திருமந்திரத்தை ஓதி பாருங்கள். அல்லது பெண்களின் கையில் கிள்ளி திரு நீற்றை கொடுத்துப்பாருங்கள் உங்களுக்கு விளங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2023 at 21:48, Maruthankerny said:

 

அந்தாள் தலைப்புக்கு தலைப்பு என்னை தாளித்து வைச்சிருக்கு 
நான் எதோ எழுதினால் .... பதில் இப்படி எழுதுகிறாரே? யார் இவர் என்று நானே 
குழம்பி அவருக்கு பதில் எழுத நேரம் இல்லாமல் விட்டுவிட்டேன் 
என்னக்கு அவர் எழுதியதற்கு இன்னமும் சில இடத்தில நான் பதிலே இன்னும் எழுதவில்லை. 

முன்பு இப்படித்தான் இன்னும் ஒருவர் ஈசன் என்று இருந்தார் மிக நல்ல கருத்தாளர் 
ஆனால் இந்துமதம் மீது அதீத பற்றுக்கொண்டு ஒரு திரியில் என்னோடு சண்டை பிடித்து கோவித்துக்கொண்டு 
சென்றவர் இன்னறுவரை யாழிற்கு வரவில்லை 

இவருடைய மனதை புண்படுத்தி எனக்கு என்ன லாபம்?
எதோ அது அவருடைய நம்பிக்கை குறைந்தபட்ஷம் கருத்துக்களை எழுதுகிறார் 
யாழில் தொடர்ந்து எழுதட்டும் என்றே கடந்து சென்றேன் 

ஆனாலும் வெருண்டவன் கண்ணுக்கு எல்லாமே பேயாகவே தெரியுது 
கோஸான் சொன்ன யானையையும் காணவில்லை  
 

கிறிஸதவமே வெறும் மூட நம்பிக்கையில் பிறந்தது 
அதில் எப்படி மூட நம்பிக்கை என்பது இல்லாமல் இருக்கும் 

ஆனாலும் மேரி இறுதிவரை அந்த இரவோ பகலோ  நடந்தை யாருக்கும் சொல்லவில்லை 
who is that black sheep ? என்பது இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை 

இத்தேட்கெல்லாம் பதில் நீங்கள் சென்று வணங்கும் நித்தியானந்தா, பிரேமானந்தா, ரஜனீஷ் ஆனந்தா , (இன்னும் எதனை அனந்தக்களோ தெரியவில்லை )   அவர்களிடம் கிடைக்கலாம். ஆனால் நிச்சயமாக அது பைபிளில் கிடைக்காது. 

இருந்தாலு நிச்சயமாக கருப்பு நிற கல்லுகளை, பேய் பிசாசுகளை நாங்கள் வணங்க மாட்டொம். 

On 7/11/2023 at 23:18, Kapithan said:

என்னைப்பொறுத்தவரை கிறீத்துவம் என்பது  "ஒருகன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும்  காட்டு" என்பதுதான். 

மிகுதி எல்லாம் வியாபாரம் மட்டுமே. 

கிறீத்துவ சபைகளுக்கிடையில் நடைபெறுவது "என்னுடைய மருந்துதான் நல்ல மருந்து. அதனால் இதை மட்டும்தான் நீ குடிக்க வேண்டும்" எனும் வியாபாரப் போட்டிதான்,.😁 

இல்லை என்று சொல்லவில்லை. அதை நீங்கள் பகுத்தறிந்து கொள்ளும் வரைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

பைடன் 3 நாள் போரை ஒத்திவைக்குமாறு நெத்தனியாகுவை கேட்டுள்ளார். இது வரை நெத்தனியாகுவிடம் இருந்து பதில் வரவில்லை.

அதட்குள் பணயக்கைதிகளை விடுவிக்கலாம் என்கிற தோரணையில்தான் கேட்டிருக்கிறார். அப்படி இல்லாவிட்ட்தால் யுத்த நிறுத்தத்துக்கு சந்தர்ப்பம் மிகவும் அரிது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டின் மீது குண்டுவீசும் முன் செல்போனில் அழைத்த இஸ்ரேல் உளவுத்துறை - திக் திக் நிமிடங்கள்

இஸ்ரேல் vs பாலத்தீனம்
படக்குறிப்பு,

மஹ்மூத் ஷஹீன்

5 நவம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது 8 நவம்பர் 2023

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்தை தாண்டிவிட்டது. ஹமாஸ் குழுவின் ஆயுதப் பிரிவு தலைவரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. இஸ்ரேல் தாக்குதல் நீடிப்பதால் காஸாவில் மக்களின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அரபு நாடுகளில் மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து வருகிறது.

அந்த பிராந்தியத்தில் நிலைமை மேலும் மோசமாகி விடாமல் தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்காக, அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ளார். எந்த நேரத்திலும் மோசமடையக் கூடிய ஆபத்தில் உள்ள போர்ச் சூழ்நிலையை சமாளிப்பதுதான் அவருடைய திட்டமாக உள்ளது.

 
இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,IDF

ஹமாஸ் உளவுப் பிரிவு தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஹமாஸ் ஆயுதக் குழுவின் உளவுத்துறை மற்றும் ஆயுதத் துறையின் தலைவராகவும், "வியூகரீ தியிலான வெடிமருந்துகள் மற்றும் ராக்கெட் தயாரிக்கும் அமைப்பின் தலைவர்களில் ஒருவருமான மொஹ்சென் அபு ஜினாவைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) கூறுகின்றன. "

இஸ்ரேல் ராணுவம் தினமும் காலையில் அளிக்கும் செய்தி ஒன்றில், ஹமாஸ் உள்கட்டமைப்பைத் தாக்க "காஸாவின் உள்ளே பயங்கரவாதிகளை ஒழிக்கும் விமானத் தாக்குதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக" இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறுகிறது.

"காஸா நகரில் வான்வழித் தாக்குதல்களில் வீடுகள் சேதப்படுத்தப்படுவது மற்றும் பொதுமக்களைக் கொல்லப்பட்டது பற்றிய விவரங்களைத் தான் நாங்கள் பெறுகிறோம் - விரைவில் அதைப் பற்றிய புதிய விவரங்களை வெளியிடுவோம்" என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

தாக்கும் முன் செல்போனில் எச்சரித்த இஸ்ரேல் உளவுத்துறை

காஸா உள்ளூர்வாசி ஒருவருக்கு இஸ்ரேலிய உளவுத்துறையிடம் இருந்து செல்போனில் அழைப்பு வருகிறது

இஸ்ரேல் 12 நாட்களாக காஸா மீது குண்டுவீசிக் கொண்டிருந்தபோது, விடியற்காலையில் மஹ்மூத் ஷஹீனுக்கு அழைப்பு வந்தது.

அவர் காஸாவின் வடபகுதியின் நடுத்தர வர்க்கத்தினரின் வசிப்பிடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். மூன்றாவது மாடியில் 3 படுக்கை அறைகளுடன் உள்ள தனது வீட்டில் வசிக்கும் அவர், அவர் குடியிருக்கும் பகுதி அதுவரை இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறுகிறார்.

இந்நிலையில், அவர் வீட்டுக்கு வெளியே திடீரென ஒரு கூச்சல் கேட்டது. "உடனடியாக நீங்கள் தப்பிக்க வேண்டும்," என தெருவில் யாரோ கூச்சலிட்டனர். "அவர்கள் அடுக்குமாடிக் கட்டடங்கள் மீது குண்டு வீசுவார்கள்".

அவர் தனது கட்டடத்தை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடத்தைத் தேடி சாலையைக் கடக்கும்போது, அவரது செல்போன் ஒலித்தது.

"நான் இஸ்ரேலிய உளவுத்துறையிலிருந்து பேசுகிறேன்," என்று ஒரு நபர் கூறினார் என மஹ்மூத் தெரிவித்தார்.

அந்தக் குரல் மஹ்மூத்தை முழுப்பெயரால் அழைத்து அரபி மொழியில் பேசியது.

"அவர் என்னிடம் மூன்று அடுக்குமாடிக் குடியிருப்புகள் மீது வெடிகுண்டு வீசப் போவதாகசொன்னார். மேலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறும்படி எனக்கு உத்தரவிட்டார்."

இந்த தாக்குதலின் போது, இஸ்ரேலிய ராணுவம் வான்வழித் தாக்குதல்களுக்கு முன்னதாக காஸாவாசிகளை எச்சரிக்க சில சமயங்களில் இதுபோல் தொலைபேசியில் அழைத்தது. மஹ்மூதின் தொலைபேசிக்கு இதுபோல் முன்னெப்போதும் எந்த அழைப்பும் வந்ததில்லை என்றும், அந்த அழைப்பின் போது முழுமையான விவரங்கள் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

போர் நிறுத்தம் - உடன்பட மறுக்கும் இஸ்ரேல்

வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கும், சனிக்கிழமை ஜோர்டானுக்கும் சென்ற அவர், ஞாயிற்றுக்கிழமை மேற்குக் கரை, இராக் மற்றும் துருக்கியைச் சென்றடைந்தார். அவர் தங்கியிருக்கும் இடங்களிலெல்லாம் பல்வேறு விதமான சவால்களும் நம்பிக்கையின்மையும் தான் காத்திருந்தன.

பிளிங்கன் முன் இருக்கும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், அவர் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான வழியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அதைப் பின்பற்ற யாரும் தயாராக இல்லை.

வெள்ளிக்கிழமையன்று, காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டதற்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் போரை இடைநிறுத்தம் (போர்களை தற்காலிகமாக நிறுத்துதல்) செய்யும் முயற்சியாக இஸ்ரேலிய தலைவர்களை சமாதானப்படுத்த பிளிங்கன் முயன்றார். ஆனால் இஸ்ரேலிய பிரதமர் அதற்கு உடன்படாமல், உடனடியாக மறுத்துவிட்டார்.

அடுத்த நாள், இஸ்ரேலின் அண்டை நாடுகளின் பிரதிநிதிகளை பிளிங்கன் சந்தித்தார். அனைவரும் உடனடியாக போர் நிறுத்தத்தை விரும்புகிறார்கள். இஸ்ரேல் போர்க் குற்றம் இழைக்கிறது என்று ஜோர்டான் வெளியுறவுத் துறை அமைச்சர் அய்மன் சஃபாடி கூறினார்.

 
இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பைடன் கூறியது என்ன? கள நிலவரம் என்ன?

இவை அனைத்திற்கும் மத்தியில், மனிதாபிமான ரீதியில் போரை இடைநிறுத்தம் செய்வதில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதில் 'நல்ல' முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பைடன் ஒரு மனிதாபிமான ரீதியிலான போர் இடைநிறுத்தம் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால் மத்திய கிழக்கில் அப்படி இல்லை. ஞாயிற்றுக் கிழமையன்று பிளிங்கன் எங்கு சென்றாலும் மிகுந்த ரகசியம் காக்கிறார் என்பதிலிருந்தே இங்கு எவ்வளவு பதற்றம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

பாலத்தீன அதிகார சபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸைச் சந்திப்பதற்காக அவர் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க ரமல்லாவை அடைந்தார். சாலையின் பாதுகாப்பை பாலத்தீன அரண்மனை காவலர்கள் கவனித்துக்கொண்டனர்.

அவர் இராக்கிற்குச் சென்றபோது, இரவு நேரமாகிவிட்டது. பாக்தாத் விமான நிலையத்திலிருந்து அமெரிக்க தூதரகத்திற்கு ஹெலிகாப்டரில் பிளிங்கனும் அவருடன் வந்த தூதரக அதிகாரிகளும் சென்றபோது, அவர்கள் அனைவரும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் மற்றும் ஹெல்மெட்களை அணிந்திருந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பிரதமர் ஷியா அல் சுடானியைச் சந்திக்க பாதுகாப்பு வாகனங்களுடன் பயணம் செய்தனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஒருபுறம் தீயை அணைத்தவுடன், மறுபுறத்தில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறத் தொடங்குகின்றன.

 
இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

இஸ்ரேல், அரபு நாடுகள் கூறுவது என்ன?

காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து அமெரிக்கா இஸ்ரேலுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

அரபு நாடுகளைப் பொறுத்த வரையில், 'போர் நிறுத்தம் குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன. ஆனால் அவர் பேசிய அனைவருமே மனிதாபிமான ரீதியில் போரை இடைநிறுத்தம் செய்வது, பணயக்கைதிகளை விடுவிக்கவும், காஸாவுக்கு உதவிகளை வழங்கவும், அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டு குடிமக்களை வெளியேற்றவும் உதவும் என்று நம்புகிறார்கள்.

அண்மைக் காலமாக இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் இதில் சில சிக்கல்களும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போது, ஒவ்வொருவரும் தங்கள் நாட்டுக்குள் இருந்து அழுத்தத்தை எதிர்கொள்வதால், அரபு நாடுகளோ அல்லது இஸ்ரேலோ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் பேச்சைக் கேட்பதாகத் தெரியவில்லை.

 
இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிளிங்கன் சாதித்தது என்ன?

பிளிங்கன் வருகைக்குப் பின்னர் இதுவரை கிடைத்துள்ள நேர்மறையான தகவல் என்னவென்றால், அவர் அனைத்துத் தரப்பினருடனும் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதுடன், தற்போதைய போர் அனைவரும் அஞ்சிய அளவுக்கு மிகவும் பெரிய தாக்குதலாக உருவெடுக்கவில்லை என்பது மட்டும் தான்.

பாலத்தீனர்களின் நீண்டகால எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அப்பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கான வழியைக் கண்டறிய பிளிங்கன் தனது அரபு சகாக்களை ஊக்குவிக்கிறார். ஆனால் இது பெரிய வெற்றியை அடைவதாகத் தெரியவில்லை.

ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் சஃபாடி, 'போருக்குப் பிறகு காஸாவின் நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியாத நிலையில், எதைப் பற்றியும் எப்படி சிந்திக்க முடியும்?' எனக்கேள்வி எழுப்புகிறார்.

இது தொடர்பாக அவர் பேசியபோது, "நாங்கள் ஒரு பாழடைந்த நிலத்தைப் பற்றி பேசலாமா? அகதிகளாக ஆக்கப்பட்ட மக்கள் கூட்டத்தைப் பற்றிப் பேசலாமா?" எனக்கேள்வி எழுப்பினார்.

அக்டோபர் 12 அன்று வெள்ளை மாளிகையில் யூத சமூகத் தலைவர்களுடனான சந்திப்பில் பேசிய பைடன், "இஸ்ரேல் மற்றும் காஸாவில் நடந்த இரத்தக்களரி மற்றும் சோகத்திற்குப் பிறகும் கூட, மத்திய கிழக்கில் சில நல்ல முடிவுகளை ஏற்படுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான் மனரீதியாக ஒரு நம்பிக்கையாளர் என்ற நிலையில் இருப்பதாக மட்டும் உணர்கிறேன்," என்றார்.

ஆனால், மத்திய கிழக்கின் நிலைமையைப் பார்த்தால், எந்த எதிர்பார்ப்பிலும் மிகச் சிலரே நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

 

மஹ்மூத் அப்பாஸ் - பிளிங்கன் பேசியது என்ன?

அங்குள்ள பாலஸ்தீன அதிகார சபையின் தலைமையகத்தில் பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை அவர் சந்தித்தார். அப்போது, மேற்குக் கரையில் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்து இருவரும் விவாதித்ததாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

"இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்னை குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், பாலத்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

காஸாவில் உயிர் காக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் அத்தியாவசிய சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கும் அமெரிக்காவின் ஆதரவை பிளிங்கன் மீண்டும் உறுதிப்படுத்தினார்" என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

பாலத்தீனர்களை "வலுக்கட்டாயமாக இடம்மாற்றம் செய்யக்கூடாது" என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார் என்று மேத்யூ மில்லர் கூறினார்.

பிளிங்கனும் அப்பாஸும் மேற்குக் கரையில் "அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான" முயற்சிகள் குறித்து விவாதித்தனர். இதில் "பாலத்தீனர்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் இத்தாக்குதலுக்கு யார் பொறுப்போ, அவர்களைப் பொறுப்பேற்கச் செய்வது" ஆகியவை அடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

"பாலத்தீனர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு குறித்து சமமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது" என்று பிளிங்கன் மீண்டும் வலியுறுத்தியதாக மில்லர் கூறினார்.

"பாலத்தீன அரசை உருவாக்குவதற்காக பாலத்தீனர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றத் தேவையான" பணிகளை நிறைவேற்றுவதில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும் பிளிங்கன் வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

 
காஸாவில் போர் இடைநிறுத்தம்

பட மூலாதாரம்,EPA

மனிதாபிமான போர் இடைநிறுத்தம் - அமெரிக்கா சூசகம்

மனிதாபிமான அடிப்படையில் போர் இடைநிறுத்தம் செய்வது தொடர்பான முயற்சிகள் முன்னேற்றம் அடைந்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சூசகமாக தெரிவித்துளளார்.

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் மனிதாபிமான அடிப்படையில் தாக்குதல் நிறுத்தம் செய்வதை நோக்கி சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையில் அவர் என்ன சொன்னார்?.

சனிக்கிழமை, பைடனிடம் செய்தியாளர்கள் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதில் ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா என்று கேட்டனர்.

டெலாவேரில் உள்ள ஒரு தேவாலயத்தை விட்டு வெளியேறிய போது அமெரிக்க அதிபர் வெறுமனே "ஆம்" என்று கூறி கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டுச் சென்றார்.

 
காஸாவில் போர் இடைநிறுத்தம்

பட மூலாதாரம்,REUTERS

போர் நிறுத்தம் - மனிதாபிமான இடைநிறுத்தம் என்ன வேறுபாடு?

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று பல நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தியுள்ளன.

ஆனால் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மற்ற சக்திகள் இந்த யோசனையை ஆதரிக்கவில்லை. இது அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய அரசாங்கங்களால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸுக்கு பயனளிக்கும் என்று கூறுகின்றன.

நாங்கள் கூறிவருவதைப் போல் அமெரிக்கா அதற்கு பதிலாக ஒரு மனிதாபிமான ரீதியிலான இடைநிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது.

ஆனால் என்ன வித்தியாசம்?

ஒரு முறையான போர் நிறுத்தத்துடன் ஒப்பிடும்போது, மனிதாபிமான இடைநிறுத்தங்கள் குறுகிய காலத்திற்கு நீடிக்கும். சில நேரங்களில் சில மணி நேரங்கள் மட்டுமே நீடிக்கும். மேலும் பொதுவாக வரையறுக்கப்பட்ட காலம் மற்றும் குறிப்பிட்ட இடத்தை உள்ளடக்கியதாகவே இருக்கும்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, நீண்டகால அரசியல் தீர்வுகளை அடைவதற்கு மாறாக, மனிதாபிமான ஆதரவை வழங்கும் நோக்கத்துடன் அவை பொதுவாக செயல்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையில், போர்நிறுத்தங்கள் நீண்ட கால நோக்கம் கொண்டவை. மேலும் பெரும்பாலும் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட அனுமதிப்பதை போர் நிறுத்தம் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என்று ஐ.நா கூறுகிறது.

 
காஸாவில் போர் இடைநிறுத்தம்

பட மூலாதாரம்,EPA

காஸா மக்கள் தெற்கே இடம்பெயர அவகாசம் - இஸ்ரேல்

வடக்கு காசாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர நான்கு மணி நேர அவகாசத்தை அளிக்கப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இடம்பெயர்வதற்கான பாதை, காஸா பகுதியில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையான சலா அல்-தின் சாலை என்றும், - உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை (0800-12:00 ஜிஎம்டி) பொதுமக்கள் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையும் இதேபோன்ற திட்டத்தைச் செயல்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அந்தச் சாலையில் பணியாற்றும் இஸ்ரேலிய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியது. பொதுமக்களை "மனிதக் கேடயங்களாகப்" பயன்படுத்த ஹமாஸ் அமைப்பு முயற்சிப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

மீண்டும் நினைவூட்டும் வகையில், வடக்கு காஸாவை பொதுமக்களை வெளியேற்றும் பகுதியாக இஸ்ரேல் அறிவித்தது. அங்கு வசித்து வரும் பொதுமக்கள் தென்பகுதியை நோக்கி பாதுகாப்பாகப் பயணிக்குமாறும் அழைப்பு விடுத்தது. இருப்பினும் தெற்கு பகுதியிலும் அப்போது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தற்போதைய நிலையில், சுமார் 3,50,000 முதல் 4,00,000 பேர் தற்போது வடக்கு பகுதியில் தங்கியுள்ளனர் என்று அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c724n84xxxeo

  • கருத்துக்கள உறவுகள்

 

American nurse who got out of Gaza describes desperation she saw

காஸாவில் இருந்து வெளியே வந்த அமெரிக்க மருத்துவத்தாதி(எ.ம.ச) தான் கண்ட விரக்தியோடு விவரிக்கிறார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் அமைப்பின் 130 சுரங்கங்கள் அழிப்பு: இஸ்ரேல் இராணுவம் தகவல்

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து உள்ளது.

2 ஆவது மாதத்துக்குள் நுழைந்துள்ள போரில் வான், கடல் மற்றும் தரை என மும்முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வடக்கு காசாவுக்குள் இஸ்ரேலின் தரைப்படை முன்னேறி சென்றது.

காசா சிட்டியை இஸ்ரேல் இராணுவத்துடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டனர். ஆனாலும் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து முன்னேறியது. இதற்கிடையே காசா சிட்டியின் மையப்பகுதிக்குள் இராணுவம் நுழைந்ததாக இஸ்ரேல் இராணுவம் நேற்று அறிவித்தது.

அங்கு ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நீண்ட சுரங்கப்பாதை வலையமைப்பை தகர்க்க தொடங்கி உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

இதனால் காசா சிட்டியில் இஸ்ரேல் இராணுவ வீரர்களுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

இந்த நிலையில் காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் 130 சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் சண்டையிட்டு வரும் வீரர்களுடன் இஸ்ரேல் இராணுவத்தின் பொறியாளர்கள் குழுவும் சென்றுள்ளது. அக்குழு ஹமாஸ் அமைப்பின் சுரங்க நிலைகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுரங்கங்களின் இருப்பிடங்களை கண்டறிந்து அதனை வெடிவைத்து தகர்த்தனர். இதில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த 130 சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தின் தரைவழி தாக்குதலில் பூமிக்கு அடியில் ஹமாசின் உள்கட்டமைப்பு தகர்க்கப்பட்டு வருகிறது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கு காசா மற்றும் காசா சிட்டியில் கடும் சண்டை நடந்து வருவதை அடுத்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து நடந்தபடியே தெற்கு காசா நோக்கி செல்கிறார்கள்.

இதற்கிடையே இஸ்ரேலின் வான்வழி தாக்குதலும் தொடர்ந்து வருகிறது. வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கான்யூனாஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.

அதே போல் மேற்கு காசாவில் உள்-அல்-நாஸ்ர் ஆஸ்பத்திரி அருகே இன்று அதிகாலை இஸ்ரேல் விமான தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். மேலும் அல்-ஷிபா மருத்துவ வளாகம் அருகே தாக்குதல் நடந்தது.

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 10,500யை தாண்டியுள்ளது. இந்த நிலையில் போரில் கடுமையாக சண்டையிட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கூறும்போது இஸ்ரேல் இராணுவத்தினரை வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும் அதன் டாங்கிகள் மற்றும் வாகனங்களை அழித்ததாகவும் தெரிவித்து உள்ளனர்.

https://thinakkural.lk/article/280740

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் கடும் மோதல் - சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி ஹமாஸ் இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல்

Published By: RAJEEBAN   09 NOV, 2023 | 02:56 PM

image

ரொய்ட்டர்ஸ்

காசாவில் இஸ்ரேலிய படையினருக்கும் ஹமாசிற்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெறுகின்றன.

ஹமாஸ் அமைப்பினர் சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

காசா நகரத்தின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ள அதேவேளை இஸ்ரேலிய படையினருக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

காசாவின் குண்டுவீச்சினால் தரைமட்டமாகியுள்ள கட்டிடங்களிற்கு அருகில் கடும் வீதிமோதல்கள் இடம்பெறுவதை காண்பிக்கும் வீடியோக்களை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் அதிரடி தாக்குதல்களை மேற்கொள்வதற்காக  சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர் - இஸ்ரேலிய டாங்கிகளுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர்.

https://www.virakesari.lk/article/168918

  • கருத்துக்கள உறவுகள்

Vela incident : Does Israel really have nuclear weapons? | Niraj David's Nitharsanam | Israel Weapon

இஸ்ரேலிடம் உண்மையிலேயே அணு ஆயுதங்கள் உள்ளதா? நிராஜ் டேவிட்

ஒரு அப்பாவி நாடான இஸ்ரேலைப்போய் இப்பிடி அபாண்டமா பழி சுமத்தலாமா ஐயா!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

Vela incident : Does Israel really have nuclear weapons? | Niraj David's Nitharsanam | Israel Weapon

இஸ்ரேலிடம் உண்மையிலேயே அணு ஆயுதங்கள் உள்ளதா? நிராஜ் டேவிட்

ஒரு அப்பாவி நாடான இஸ்ரேலைப்போய் இப்பிடி அபாண்டமா பழி சுமத்தலாமா ஐயா!

அமெரிக்க‌ன்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தை இஸ்ரேலுக்கு அணுகுண்டு அமெரிக்கா தான் கொடுத்த‌து என்று ப‌ல‌ வ‌ருட‌த்துகு முத‌லே வெளிப்ப‌டையாய் ப‌ல‌ருக்கு தெரிந்த‌ ஒன்று...............

அணுகுண்டு இருந்த‌ ப‌டியால் தானே அணுகுண்டு ப‌ற்றி இஸ்ரேல் அமைச்ச‌ர் ஒருவ‌ர் வார்த்தைய‌ வெளியில் விட்ட‌வ‌ர்🙈

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Cruso said:

அதட்குள் பணயக்கைதிகளை விடுவிக்கலாம் என்கிற தோரணையில்தான் கேட்டிருக்கிறார். அப்படி இல்லாவிட்ட்தால் யுத்த நிறுத்தத்துக்கு சந்தர்ப்பம் மிகவும் அரிது. 

ஒவ்வொரு நாளும்4 மணித்தியாலம் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.(மக்கள் வெளியேறுவதற்காம்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.