Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரேன்-ரஸ்யாப் போரினைத் தொடர்ந்து இன்னொரு அதியுயர் உணர்முனையில் போர் தொடங்கியுள்ளது. இரண்டுமே ஆக்கிரமிப்பு எதிர் விடுதலை என்ற கோணத்திலேயே நடைபெறுகிறது. இரண்டுமே உயிரழிவுப்போர்கள் என்றவகையில் ஏற்புடையனவல்ல. இதிலே தமிழீழத்தவர் என்ன செய்ய முடியும். எமது இனத்தின் அழிவையே தடுக்கமுடியாது கைகளைப்பிசைந்துகொண்டு புலம்பெயர்நாடுகளின் தெருக்களில்  நின்று கூவென்று அழைத்தபோதோ, அழுதுபுலம்பியபோதோ யாரும் எம்மைத் திரும்பிப்பார்க்கவில்லை. இதே தெருக்களில் எம்மை வேடிக்கை பார்தவாறு யூதரும், பலஸ்தீனியரும், உக்ரேனியரும், ரஸ்யரும் கடந்துபோனார்கள். அதேவேளை இவர்களின் அரசுகளும், அதிகார சபையும் சிறிலங்காவுக்கு ஆயுத, தொழில் நுட்ப, புலனாய்வு எனப்பலமுனை உதவிகளைத் தாராளாமகச் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்று செய்தார்கள். அதற்காக நாம் இவர்களை எதிரிகளாகக் கொள்ள முடியாதுதான். ஆனால், இந்தச் சுற்றினுள் நாம்போய் விழுந்து புதிய எதிரிகளை உருவாக்காதிருப்பதை பற்றிச் சிந்திக்கலாம் அல்லவா?

நன்றி   

  • Like 5
  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, goshan_che said:

Time immemorial எனப்படும் மனித குலத்தின் கூட்டு நினைவுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இஸ்ரேல் யூத மண்.

இஸ்லாத்தின் முதல் நபி என மொகமட் ஏற்று கொண்ட ஆபிரகாம் ஒரு யூதன்.

இது உண்மையானால். அந்த நிலம் இருபகுதிக்கும் ஒரே கால அளவு சொந்தம் இல்லையா?  

மதம் / மொழி  தான் மாறி, அல்லது மாற்றப்பட்டு இருக்கிறது.

(உரித்தது படைத்தது தமிழ், சிங்களம் போல - சிங்களம் தமிழர்கள் பௌத்தத்துக்கு மாறியதால் வந்த திரிவு மொழி - சிங்களம் ஏற்றப்பதில்லை, ஆனல், அது தன உண்மை)

முழு நிலமும் தனக்கு என்று சிங்களத்தின் நிலையில் இஸ்ரேல் இருக்கிறது.

அனால், ஆபிரகாம் Jew அல்ல என்பதும், ஆனல், Arabs மற்றும் Jew க்களின் தந்தை என்பதும் 
 இந்த துறைசார் நிபுணரின்  கருத்து, முடிவும்..

https://www.bbc.co.uk/religion/religions/islam/history/ibrahim.shtml#:~:text=Abraham is called Ibrahim by,Isma'il in Arabic).

https://www.bbc.co.uk/religion/religions/judaism/history/abraham_1.shtml

எவ்வாறாயினும், இருபகுதிக்கும் ஒரே  கால அளவு சொந்தம்.

10 hours ago, குமாரசாமி said:

வரலாறுகளின் படி´பலஸ்தீனியர்கள் கேட்கும் பகுதி யாருக்குரியது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kadancha said:

எவ்வாறாயினும், இருபகுதிக்கும் ஒரே  கால அளவு சொந்தம்.

நீங்கள் என்னத்தை எழுதினாலும் நாங்கள் CNN சொல்லுறதைத்தான் கேட்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nochchi said:

உக்ரேன்-ரஸ்யாப் போரினைத் தொடர்ந்து இன்னொரு அதியுயர் உணர்முனையில் போர் தொடங்கியுள்ளது. இரண்டுமே ஆக்கிரமிப்பு எதிர் விடுதலை என்ற கோணத்திலேயே நடைபெறுகிறது. இரண்டுமே உயிரழிவுப்போர்கள் என்றவகையில் ஏற்புடையனவல்ல. இதிலே தமிழீழத்தவர் என்ன செய்ய முடியும். எமது இனத்தின் அழிவையே தடுக்கமுடியாது கைகளைப்பிசைந்துகொண்டு புலம்பெயர்நாடுகளின் தெருக்களில்  நின்று கூவென்று அழைத்தபோதோ, அழுதுபுலம்பியபோதோ யாரும் எம்மைத் திரும்பிப்பார்க்கவில்லை. இதே தெருக்களில் எம்மை வேடிக்கை பார்தவாறு யூதரும், பலஸ்தீனியரும், உக்ரேனியரும், ரஸ்யரும் கடந்துபோனார்கள். அதேவேளை இவர்களின் அரசுகளும், அதிகார சபையும் சிறிலங்காவுக்கு ஆயுத, தொழில் நுட்ப, புலனாய்வு எனப்பலமுனை உதவிகளைத் தாராளாமகச் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்று செய்தார்கள். அதற்காக நாம் இவர்களை எதிரிகளாகக் கொள்ள முடியாதுதான். ஆனால், இந்தச் சுற்றினுள் நாம்போய் விழுந்து புதிய எதிரிகளை உருவாக்காதிருப்பதை பற்றிச் சிந்திக்கலாம் அல்லவா?

நன்றி   

எம் இனம் பற்றியும், ஏமது கையறு நிலை பற்றியும் மிகச் சிறப்பான கருத்து.......!  

நாங்கள் கள நிலைமையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தால்  போதும்.....! 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலிற்குள் இன்னமும் ஹமாஸ் - மோதல் இடம்பெறுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவிப்பு

Published By: RAJEEBAN

09 OCT, 2023 | 11:59 AM
image
 
இஸ்ரேலிற்குள் இன்னமும் ஹமாஸ் போராளிகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள எட்டுபகுதிகளில் ஹமாஸ் அமைப்பினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த மோதல்கள் காசா இஸ்ரேலிய எல்லையில் இடம்பெறுவதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

பீஈரி என்ற விவசாய சமூகத்தினர் உள்ள பகுதிக்குள் ஹமாஸ் உறுப்பினர்கள் நுழைந்துள்ளனர் பலர் கொல்லப்பட்டுள்ளனர் எனினும் இன்னும் பலர் வீடுகளிற்குள் மறைந்துள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவில் ஆயிரம் இலக்குகளை தாக்கியுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் நோக்கம் முற்றிலும் வேறுபட்டது தற்பாதுகாப்பு நிலைக்கு திரும்புவதற்கு அதிக நேரம் எடுக்கின்றது என இஸ்ரேலிய இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/166443

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

இஸ்ரேல் தன் சொந்த நிலத்திற்காக  போராடுகின்றது போல் எழுதிக்கொண்டு மிலேச்சத்தனத்தை பற்றியும் விளாசுகின்றீர்கள்...பலே 👍🏼  🤣

🤣 உங்களுக்கு இன்றுதான் யூதர்கள் 2ம் உலக யுத்தத்தின் பின் இஸ்ரேலுக்கு வந்தவர் அல்ல என்ற விடயமே தெரியவந்துள்ளது….இதற்குள் நீங்கள் வரலாறு, யூதருக்கு முஸ்லீம் அடைக்கலம் கொடுத்தார் என அடித்து விடுகிறீர்கள்.

நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், 2000 ஆண்டுகளாக ரோமர், பின் இஸ்லாமியர் பறித்த தன் சொந்த நிலத்தை மீள உருவாக்கும் முயற்சியே இஸ்ரேல் என்ற தேசம்.

2ம் உலக போரில், இஸ்ரேலை ஐரோப்பாவில் வளமான ஒரு பகுதியில் ஸ்தாபிக்க வாய்ப்பு இருந்தும், இல்ல என வெறும் பாலவனமாக கிடந்த இஸ்ரேலுக்கு போனார்கள் யூதர்கள்.

என்ன காரணம்? அங்கேதான் அவர்களின் இனமூலம் இருக்கிறது.

அங்கேதான் அவர்களின் வரலாறு இருக்கிறது.

அதுதான் அவர்களின் மண்.

அந்த மண் அவர்களினதுதான்.

யூத தேசிய இனத்தின் மண் மீட்பு போரின் வெற்றியும், தொடர்ச்சியுமே இன்றைய இஸ்ரேல்.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, நன்னிச் சோழன் said:

எங்கட கொடியையும் இஸ்ரேலின்ர கொடியையும் எடிட் பண்ணி கோரா & ரெட்டிட்ல போடட்டோ? 

என்ன சொல்லுறியள் உறவுகளே?

இதனால் பலனடையப்போவது யார்? 

பப்ப்ளிக்குட்டி (publicity ) மட்டுமே கிடைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசாவை முழுமையாக முற்றுகையிடுமாறு உத்தரவு- இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர்

Published By: RAJEEBAN

09 OCT, 2023 | 03:49 PM
image
 
காசாவை முழுமையாக முற்றுகையிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக  இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் இல்லை, உணவில்லை, எரிபொருள் இல்லை முழுமையாக காசாவை முற்றுகையிடுமாறு உத்தரவிட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

காசாவின் வான்வெளியை கரையோர பகுதியை இஸ்ரேல்  தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. காசவிற்குள் யார் செல்லவேண்டும் எதனை கொண்டு செல்லவேண்டும் என்பதை இஸ்ரேலே தீர்மானிக்கின்றது.

https://www.virakesari.lk/article/166476

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

இவர் ஜேர்மன் மொழி பேசுகிறார் என நினைக்கிறேன்.

யாராவது கள உறவுகள் சாராம்சத்தை மொழி பெயர்த்தால் நல்லம்.

//எனது மகள் Shani Louk ஜேர்மன் பிரஜாவுரிமை உடையவர், இன்று காலை ஒரு உல்லாசப் பயணிகள் உள்ள குழுவில் இருந்து  இஸ்ரேலின் தென் பகுதியில் வைத்து பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தினரால் ஒரு வாகனத்தில் நினைவு இழந்த நிலையில் கடத்தப் பட்டு, காஸா பகுதியை நோக்கி சென்ற காணொளியை  தன்னால் துல்லியமாக பார்க்கக் கூடியதாக இருந்தது.
தயவு செய்து  ஒவ்வொரு உதவியும், அதனைப் பற்றிய புதிய  தகவல்களையும் எங்களுக்கு அனுப்பவும். மிக்க நன்றி.//

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படைகள் குவிப்பு… இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் மூன்றாம் உலகப் போராகிறதா?

இஸ்ரேல் போர் பாதிப்பு

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மூன்றாம் உலகப்போராக மாறுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் இஸ்ரேல் வரலாற்றில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாலஸ்தீனம் மீது குறிப்பாக காஸா மீது இஸ்ரேல் அரசு போர் பிரகடனம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் வான் வழி தாக்குதல்

இஸ்ரேல் வான் வழி தாக்குதல்
” இந்த தாக்குதலுக்கு காரணமான ஹமாஸ் இயக்கத்தை மொத்தமாக அழிப்போம். காஸா இருந்த சுவடே இல்லாமல் ஆக்க போகிறோம். காஸாவில் இருக்கும் பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும். நாங்கள் மிக பெரிய தாக்குதலை நடத்த போகிறோம்” என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதே நேரம் இஸ்ரேலுக்குள் ஊடுருவியுள்ள ஹமாஸ் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

போரால் பாதிக்கப்பட்ட பெண்

போரால் பாதிக்கப்பட்ட பெண்
ஹமாஸ் படையினருக்கு லெபனானில் இருந்து செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா படையினர் உதவி வருவதும் அங்கிருந்தபடி அவர்கள் இஸ்ரேல் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பதாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் ஏற்கெனவே அமெரிக்கா இஸ்ரேலுக்கு, ஆதரவாக உலகிலேயே மிகப்பெரிய போர் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்டு ஆர்.போர்ட் போர் கப்பலை அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் வலிமையான போர் ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களும் இதில் உள்ளன.

இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்
இதனால் இந்தப் போர் நீண்ட காலம் நீடிக்குமா என்ற கேள்வியும், அச்சமும் எழுந்துள்ளது. அமெரிக்கா – இஸ்ரேல், பாலஸ்தீனம், ஹமாஸ் , ஈரான், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான போராக இது நீடிக்குமா என்ற கேள்வியும் அச்சமும் எழுந்துள்ளது. அப்படி நடந்தால் இதில் ரஷ்யா, சீனா இணையலாம்.

ஏற்கெனவே உக்ரைன் – ரஷ்ய போரில் உலக நாடுகள் பிரிந்து கிடக்கின்றன. அதனால் இந்த போரும் இணைந்து. இரண்டு போர்களும் சேர்ந்து இது மூன்றாம் உலகபோராக மாறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

YXCLJk_3SOeZP7Td.jpg

https://thinakkural.lk/article/276244

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Kadancha said:

இது உண்மையானால். அந்த நிலம் இருபகுதிக்கும் ஒரே கால அளவு சொந்தம் இல்லையா?  

மதம் / மொழி  தான் மாறி, அல்லது மாற்றப்பட்டு இருக்கிறது.

(உரித்தது படைத்தது தமிழ், சிங்களம் போல - சிங்களம் தமிழர்கள் பௌத்தத்துக்கு மாறியதால் வந்த திரிவு மொழி - சிங்களம் ஏற்றப்பதில்லை, ஆனல், அது தன உண்மை)

முழு நிலமும் தனக்கு என்று சிங்களத்தின் நிலையில் இஸ்ரேல் இருக்கிறது.

அனால், ஆபிரகாம் Jew அல்ல என்பதும், ஆனல், Arabs மற்றும் Jew க்களின் தந்தை என்பதும் 
 இந்த துறைசார் நிபுணரின்  கருத்து, முடிவும்..

https://www.bbc.co.uk/religion/religions/islam/history/ibrahim.shtml#:~:text=Abraham is called Ibrahim by,Isma'il in Arabic).

https://www.bbc.co.uk/religion/religions/judaism/history/abraham_1.shtml

எவ்வாறாயினும், இருபகுதிக்கும் ஒரே  கால அளவு சொந்தம்.

மிக தவறான புரிதல்.

1. ஆபிரகாம் யூதர்தான். முஸ்லீம்கள் அவரின் மகனான இஷ்மேல் (இஸ்மாயில்) ஐ, அரபிகளின் (முஸ்லிம் அல்ல, இஸ்லாம் என்ற மதமே அப்போ இல்லை) தந்தையாக கருதுகிறனர். நீங்கள் தந்த இணைப்பிலேயே இது சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இது அரபிகளின் நம்பிக்கை மட்டுமே.

2. ஆனால் அரபிகள் இப்படி கோரினாலும் கூட - இப்போ இஸ்ரேல் என அறியப்படும் நிலப்பரப்பில் யூத அரசுகளே ஆதி காலத்தில் இருந்தன. அங்கே அரபிகள் என இப்போ  அடையாளம் காணப்படுவோரின் மூதாதைகளும், சமேரியர்களும் இன்னும் பல குழுக்களும் வாழ்ந்தன. ஆனால் நாடு யூத நாடாகவே இருந்தது. அவர்களின் கோவில்கள் இருந்தன. அப்போ அரபுலகம் என்பது இல்லை.

ஜெருசலேமில் Temple Mount இல் கி மு சில நூற்றாண்ட்டுக்கு முன்பே யூதக்கோவில் இருந்தது. அதன் பிந்தான் ஜேசு பிறப்பு, அதன் பின் தான் கிறிஸ்தவ தேவாலயங்கள், அதன் பிந்தான் அரேபியாவில் முகமது பிறந்து - இஸ்லாம். அதன் பின் கிபி 650 இன் பின் அங்கு கட்டபட்டது தான் இப்போ எமது 3வது புனித ஸ்தலம் என முஸ்லிம்கள் கூறும் அல் அக்சா மசூதி.

3. இவ்வளவு ஏன் எகிப்து கூட கிபி 639 வரை அரபுதேசம் கிடையாது. பிரமிட்டை கட்டியவர்கள் அரபிகள் அல்ல.  கிளியோ பட்டிரா அரபி அல்ல. எகிப்தை அரேபியாவில் இருந்து வந்து, கைப்பற்றி அரபு தேசமாக மாற்றினர்.

4. இஸ்லாத்தின் பின் வாழ்முனையில் அரபு நாடுகளில் இருந்து வந்த தொடர் படை எடுப்புகளால் பல அரபல்லாத தேசங்கள், குழுக்கள் இஸ்லாமிய மயமாகின, அரபுமயமாகின. இப்படித்தான் ஒரு குழுவாக முன்னர் இஸ்ரேலில் இருந்த அரபிகள், பல்கி பெருகினர். பலஸ்தீனம் என்ற நிலப்பரப்பையும் உரிமை கோரத்தொடங்கினர்.

5. வரலாறு சிக்கலானது அதை திரும்ப அமைக்கும் முயற்சி ஆபத்தானது. ஆனால் தனியே கிபி 2000-1942 வரையான காலம் மட்டும் வரலாறு இல்லை.

நினைவில்லா காலம் தொட்டு - கி பி 2000 உம் வரலாறுதான்.

1942-2023 உம் வரலாறுதான்.

அந்த நிலத்தில் ஒரு யூத தேசமும், ஒரு அரபு-இஸ்லாமிய தேசமும் அமைவதே நியாயமான தீர்வாக இருக்கும்.

இஸ்ரேல் தனக்கென தன் மூதாதையர் நிலத்தில் ஒரு நாட்டை அமைத்து விட்டது. 

நாடில்லாமல் இருப்பவர்கள் பலஸ்தீனர்கள்.

பலஸ்தீனர்கள் (ஹமாஸ்) இஸ்ரேலை மறுதலித்து, அதை வரைபடத்தில் இருந்து தூக்குவோம் எனும் வரை இந்த சிக்கல் தீராது.

இதை உணர்ந்துதான் அரபாத் two state solution ஐ ஏற்றார். இட்சாக் ராபின் கொல்லப்படாமல் இருந்திருந்து, ஈரான் ஹமாசை உசுப்பேத்தி விடாமல் இருந்திருந்தால் அது நடந்தும் இருக்கலாம்.

2.1 மில்லியன் அரபிகள் இஸ்ரேல் பாஸ்போர்ட், சிற்றிசன்ஷிப் எடுத்து இஸ்ரேல் பிரஜைகளாக வாழ்கிறனர் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

26 minutes ago, தமிழ் சிறி said:

//எனது மகள் Shani Louk ஜேர்மன் பிரஜாவுரிமை உடையவர், இன்று காலை ஒரு உல்லாசப் பயணிகள் உள்ள குழுவில் இருந்து  இஸ்ரேலின் தென் பகுதியில் வைத்து பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தினரால் ஒரு வாகனத்தில் நினைவு இழந்த நிலையில் கடத்தப் பட்டு, காஸா பகுதியை நோக்கி சென்ற காணொளியை  தன்னால் துல்லியமாக பார்க்கக் கூடியதாக இருந்தது.
தயவு செய்து  ஒவ்வொரு உதவியும், அதனைப் பற்றிய புதிய  தகவல்களையும் எங்களுக்கு அனுப்பவும். மிக்க நன்றி.//

நன்றி அண்ணா🙏

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, ஏராளன் said:

காசாவை முழுமையாக முற்றுகையிடுமாறு உத்தரவு- இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர்

Published By: RAJEEBAN

09 OCT, 2023 | 03:49 PM
image
 
காசாவை முழுமையாக முற்றுகையிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக  இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் இல்லை, உணவில்லை, எரிபொருள் இல்லை முழுமையாக காசாவை முற்றுகையிடுமாறு உத்தரவிட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

காசாவின் வான்வெளியை கரையோர பகுதியை இஸ்ரேல்  தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. காசவிற்குள் யார் செல்லவேண்டும் எதனை கொண்டு செல்லவேண்டும் என்பதை இஸ்ரேலே தீர்மானிக்கின்றது.

https://www.virakesari.lk/article/166476

இன்னொரு முள்ளிவாய்க்காலை இஸ்ரேல் நடத்தப்போகிறது.

இதை இஸ்ரேல் நடத்தும் போது வாயை திறக்காமல் மேற்கு+இந்தியா, சீனா,  தென்னமரிக்க நாடுகள், ஏன் ரஸ்யா கூட இருக்க தேவையான தரவை கமாஸ் ஏலவே வழங்கி விட்டது.

ஈரானும், ஹிஸ்புல்லாவும் ஏதாவது முனைய கூடும்.

துருக்கி+ அரபு நாடுகள் அறிக்கைக்கு அப்பால் நகர்வது சந்தேகமே.

ராக்கெட் தீரும் வரை கமாஸ் சுடும்.

ஹமாசின், உள்ளே போன காடையர்களின் அட்டூழியத்துக்கான முழுப் பலனை அடையப்போவது காஸா வாசிகளே.

23 minutes ago, ஏராளன் said:

மூன்றாம் உலகப் போராகிறதா?

Uncle Sam நேரடியாக இறங்கும் வரை வாய்ப்பில்லை. 

இறங்க மாட்டார் என்றே நினைக்கிறேன் (ஹமாசை அடிக்க அவர் தேவையில்லை, இஸ்ரேல் போதும், தவிர இது சவுதி, ஜோர்டானை சங்கடப்படுத்தும்).

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, goshan_che said:

2.1 மில்லியன் அரபிகள் இஸ்ரேல் பாஸ்போர்ட், சிற்றிசன்ஷிப் எடுத்து இஸ்ரேல் பிரஜைகளாக வாழ்கிறனர் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

அது மட்டுமல்ல அவர்களில் பலர் இஸ்ரேல் அரசியலில் இருக்கிறார்கள்.. பாராளுமன்றில் இருக்கிறார்கள்.. நம்மவர் ஜரோப்பா அமெரிக்காவில் வாழ்வதுபோல் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறார்கள்.. ஆனால் ஆகக்குறைந்தது பாலஸ்த்தீனர்கள் தம்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காஸா மற்றும் வெஸ்ட் பாங்கிலாவது ஒரு அரசை அமைத்து இஸ்ரவேலை போல் அபிவிருத்தி அடைந்த நாடாக இத்தனை வருடங்களாக மாற்றி அமைக்க முடியவில்லை.. இஸ்ரேலை முற்றாக அழித்து பால்ஸ்தீனத்தை உருவாக்கினால்கூட அந்த நிலத்தில் இவர்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கப்போவதில்லை.. ஆப்கானிஸ்த்தான் ஈரான் ஈராக் போன்ற பெண்களைகூட படிக்க விடாத அடிமுட்டாள் மதவாதிகள் வாழும் முஸ்லீம் நாடுகளை பாருங்கள்.. ஒன்றுமே இல்லாமல் வந்து உழைப்பால் உருவாக்கி ஜனநாயகத்துடன் வாழும் இஸ்ரேலை பாருங்கள்.. மதவா திகள் மற்ற இனத்துக்கு மட்டுமல்ல சொந்த இனத்துக்கு கூட துரோகிகள்..

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அருமை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான அறிக்கைக்கு ஐநா பாதுகாப்பு சபை உடன்படவில்லை

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான அறிக்கைக்கு ஐநா பாதுகாப்பு சபை உடன்படவில்லை

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போருக்கு மத்தியில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் கூடிய ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸை கடுமையாகக் கண்டிக்குமாறு சபையின் 15 உறுப்பினர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்த போதும் உறுப்பினர்கள் அதற்கு ஆதரவை வழங்கவில்லை.

மேலும் சுமார் 90 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த கூட்டத்தின் போது ஐ.நா.வின் மத்திய கிழக்கு அமைதித் தூதுவர் டோர் வென்னஸ்லாந்திடம் விளக்க அறிக்கை கோரப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1352929

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, Maruthankerny said:

தயவு செய்து கருத்துக்களை வாசித்து அதற்கு பதில் எழுதுங்கள்

நான் இந்த தலைப்பில் செய்திகளையும் கருத்துக்களையும் வாசித்துக் கொண்டு வருகிறேன். கொல்லப்பட்ட பெண்னைப் பற்றிய செய்திகளை படித்துக்கொண்டு இருக்கும் பொழுது திடீரென நீங்கள் ஒரு பெண்ணின் படத்தைப் போட்டுவிட்டு அவர் ஒரு இரானுவ வீரர் etc etc என எழுதியதைப் பார்த்துவிட்டுதான் உங்களிடம் கேட்டேன். ஏனெனில் அந்தப் பெண் இராணுவ வீரர் என்பதால் அந்தப் பெண்ணிற்கு நடந்தது சரியாகுமா? இல்லைத்தானே? யாருக்குமே அப்படி நடக்ககூடாது என்றுதான் நாங்கள் நினைப்போம் இல்லையா!. அவ்வளவுதான்.

5 hours ago, goshan_che said:

@நன்னிச் சோழன்

சொந்த நிலத்தை மீட்கப்போராடும் யூதருக்கும் எமக்கும் நிறைய ஒற்றுமை உண்டு.

இவர்கள் இப்போ பலஸ்தீனம் என்று அழைப்பது….எமது மண்ணில் புத்தளம் மாவட்டம், பதவிக்குளம், கந்தளாய் போல ஒரு காலத்தில் யூதர்களின் பாரம்பரிய பூமியாக இருந்து பறிக்கப்பட்ட நிலங்களையே.

அதே போல் எதிரிகளையும், நண்பர்களையும் நினைவில் வைத்திருப்பவர்கள் யூதர்கள்.

உயர் மட்டத்தில் யூத-தமிழ் ஒன்றிணைப்பு ஏற்படுமாயின் நாம் பெரிய அனுகூலங்களை அடையலாம்.

இதை நீங்கள் செய்வது grassroots மட்டத்தில் ஆரம்பிப்பதாக இருக்கலாம்.

இந்த வகையில் உங்கள் சிந்தனை, அற்புதமானது. Strategic masterstroke.

ஆனால் strategy யா? கிலோ என்ன விலை என கேட்கும் நிலையில்தான் ஈழத்தமிழர் இருக்கிறோம்.

இப்படி நீங்கள் செய்வதற்கு பாரிய எதிர்ப்பு எம்மத்தியிலேயே இருக்கும்.

இப்பவே உங்களை வெள்ளைகார-கைக்கூலி என எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

உங்கள் யோசனை ஒரு புத்திசாலி இனக்கூட்டத்துக்குரியது.  எமக்கானது அல்ல.

இந்த திரியில் நன்னியின் பதிவுகள், பலஸ்தீனியர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களுக்கு நடப்பது சரியென்ற தோற்றத்தை எனக்குள் உருவாக்கியது. அது சரியான ஒன்றாக எனக்குப்படவில்லை. ஏனெனில் இரண்டு பக்கதாலும் கொல்லப்படுவது சாதாரண அப்பாவி மக்களே. ஆகையால்தான் இரண்டு கொடிகளையும் சேர்த்து எழுதட்டோ எனக் கேட்டதற்கு எனது கருத்தை எழுதினேன்.  இஸ்ரேலினை ஆதரிக்க கூடாது எனக் கூறவுமில்லை, நன்னியில் மதிப்பும் குறையவில்லை. 

ஆனால் யூதர்கள் இனவழிப்பு கொடுமையை எதிர்கொண்டவர்கள் ஆனால் இன்னொரு இனம் அவர்களைப் போன்ற இனவழிப்பை எதிர்கொண்ட பொழுது மற்றையவர்கள் போல அமைதி காத்தார்கள் எனும் பொழுது அவர்களின் மேல் நம்பிக்கை ஏற்படவில்லை. 

அதற்காக இந்த ஹமாஸ், தலீபான் போன்ற இஸ்லாமிய மதவெறிக்குழுக்களையும் ஆதரிக்கவில்லை. 

இவ்வளவுதான் இந்த விடயத்தில் எனது வட்டம். எல்லா விடயங்களிலும் வட்டத்தைவிட்டு சிந்திக்க முடியவில்லை என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். 

Edited by P.S.பிரபா
எழுத்துப்பிழை
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Eppothum Thamizhan said:

பிரபா, நானும் நன்னியை எதோ ஒரு உயரத்தில் வைத்திருந்தேன்

 எமது மக்கள் தொடர்பான எண்ணங்களிலும் இந்த ஆவணத் தயாரிப்பிலும் ஈடுபடும் நன்னியின் மீதான எனது அபிப்பிராயம் மாறவில்லை அண்ணா!.

நாங்கள் எல்லோரும் வேறுபட்ட சூழலில் வளர்ந்தவர்கள்.. எல்லோரும் எல்லாவிடயங்களிலும் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் எனக் கூறமுடியாது தானே. அதே போன்ற ஒன்றுதான் இந்த திரியில் நன்னியின் கேள்விக்கு எனது கருத்து.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, P.S.பிரபா said:

 எமது மக்கள் தொடர்பான எண்ணங்களிலும் இந்த ஆவணத் தயாரிப்பிலும் ஈடுபடும் நன்னியின் மீதான எனது அபிப்பிராயம் மாறவில்லை அண்ணா!.

இதில் எனக்கும் மாற்று கருத்தில்லை. ஆனால் காலா காலமாக ஒடுக்கப்பட்டுவரும் பலஸ்தீனர்களை தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று அடிச்சு விடுபவருடன் சேர்ந்து நையாண்டி செய்வதைத்தான் சகிக்க முடியவில்லை.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
52 minutes ago, P.S.பிரபா said:

இந்த திரியில் நன்னியின் பதிவுகள், பலஸ்தீனியர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களுக்கு நடப்பது சரியென்ற தோற்றத்தை எனக்குள் உருவாக்கியது. அது சரியான ஒன்றாக எனக்குப்படவில்லை. ஏனெனில் இரண்டு பக்கதாலும் கொல்லப்படுவது சாதாரண அப்பாவி மக்களே. ஆகையால்தான் இரண்டு கொடிகளையும் சேர்த்து எழுதட்டோ எனக்கு கேட்டதற்கு எனது கருத்தை எழுதினேன்.  இஸ்ரேலினை ஆதரிக்க கூடாது எனக் கூறவுமில்லை, நன்னியில் மதிப்பும் குறையவில்லை. 

மன்னிக்க வேண்டும். உங்கள் பதிவை கோட் பண்ணி, அதன் கீழ் உங்கள் பதிவை கோட் பண்ணி கருத்து எழுதிய எப்போவின் பதிவையும் கோட் பண்ணினேன். இரெண்டாவது மிஸ் ஆகி விட்டது.

இதில் எழுதியவை எல்லாம் உங்களுக்கான பதில் அல்ல. சிலது பொதுவானது, சிலது எப்போவிற்கானது.

52 minutes ago, P.S.பிரபா said:

இவ்வளவுதான் இந்த விடயத்தில் எனது வட்டம். இந்த வட்டத்தை விட்டு வேறுவிதமாக சிந்திக்கவில்லை என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். 

இவ்வளவுதான் எனது வட்டமும். ஆனால் நன்னி அடுத்த கட்டம் போய் சிந்திக்கிறார்.

அதை என்னால் விளங்கிகொள்ள முடிகிறது.

ஆனால் ideas ahead of its time என்பார்களே அதேபோல் நன்னியின் சிந்தனை an idea not for this race. அதைத்தான் குறிப்பிட்டேன்.

Edited by goshan_che
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
46 minutes ago, Eppothum Thamizhan said:

தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று அடிச்சு விடுபவருடன்

இது நீங்கள் வழமையாக ஜஸ்டின் அண்ணாவுக்கு கொடுக்கும் பட்டம் அல்லவா?🤣. உங்களுக்கு ஒவ்வாத கருத்தை எழுதினால் பாவிக்கும் பட்டமாக்கும்.

அதிருக்கட்டும்.

நான் இங்கே எவரையும் கேலி செய்யவில்லை.

நன்னி அளவுக்கு ஹமாஸ் எதிர்ப்பை/ இஸ்ரேல் ஆதரவை கூட நான் பதிவு செய்யவில்லை.

நன்னியின் கருத்து அவர் கருத்து. என் கருத்து என் கருத்து.

எமது நிலைபாட்டில் பெரிய வேறுபாடு உண்டு.

நீங்கள் திரியை, எழுதபட்ட விடயங்களை முற்றாக வாசித்திருந்தால் இந்த வித்தியாசம் புரிந்திருக்கும்.

வந்து நன்னியின் மீது ஏறி விழுந்து விட்டு. அவர் மேற்கின் கூஜா என்பதாக எழுதிவிட்டு, இப்போ ஏதோ அவர் கோஷானுடன் சேர்ந்து நையாண்டி பண்ணியதால் அப்படி எழுதினேன் என புது கதை விடுகிறீர்கள்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

மிக தவறான புரிதல்.

1. ஆபிரகாம் யூதர்தான். முஸ்லீம்கள் அவரின் மகனான இஷ்மேல் (இஸ்மாயில்) ஐ, அரபிகளின் (முஸ்லிம் அல்ல, இஸ்லாம் என்ற மதமே அப்போ இல்லை) தந்தையாக கருதுகிறனர். நீங்கள் தந்த இணைப்பிலேயே இது சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இது அரபிகளின் நம்பிக்கை மட்டுமே.

2. ஆனால் அரபிகள் இப்படி கோரினாலும் கூட - இப்போ இஸ்ரேல் என அறியப்படும் நிலப்பரப்பில் யூத அரசுகளே ஆதி காலத்தில் இருந்தன. அங்கே அரபிகள் என இப்போ  அடையாளம் காணப்படுவோரின் மூதாதைகளும், சமேரியர்களும் இன்னும் பல குழுக்களும் வாழ்ந்தன. ஆனால் நாடு யூத நாடாகவே இருந்தது. அவர்களின் கோவில்கள் இருந்தன. அப்போ அரபுலகம் என்பது இல்லை.

ஜெருசலேமில் Temple Mount இல் கி மு சில நூற்றாண்ட்டுக்கு முன்பே யூதக்கோவில் இருந்தது. அதன் பிந்தான் ஜேசு பிறப்பு, அதன் பின் தான் கிறிஸ்தவ தேவாலயங்கள், அதன் பிந்தான் அரேபியாவில் முகமது பிறந்து - இஸ்லாம். அதன் பின் கிபி 650 இன் பின் அங்கு கட்டபட்டது தான் இப்போ எமது 3வது புனித ஸ்தலம் என முஸ்லிம்கள் கூறும் அல் அக்சா மசூதி.

3. இவ்வளவு ஏன் எகிப்து கூட கிபி 639 வரை அரபுதேசம் கிடையாது. பிரமிட்டை கட்டியவர்கள் அரபிகள் அல்ல.  கிளியோ பட்டிரா அரபி அல்ல. எகிப்தை அரேபியாவில் இருந்து வந்து, கைப்பற்றி அரபு தேசமாக மாற்றினர்.

4. இஸ்லாத்தின் பின் வாழ்முனையில் அரபு நாடுகளில் இருந்து வந்த தொடர் படை எடுப்புகளால் பல அரபல்லாத தேசங்கள், குழுக்கள் இஸ்லாமிய மயமாகின, அரபுமயமாகின. இப்படித்தான் ஒரு குழுவாக முன்னர் இஸ்ரேலில் இருந்த அரபிகள், பல்கி பெருகினர். பலஸ்தீனம் என்ற நிலப்பரப்பையும் உரிமை கோரத்தொடங்கினர்.

5. வரலாறு சிக்கலானது அதை திரும்ப அமைக்கும் முயற்சி ஆபத்தானது. ஆனால் தனியே கிபி 2000-1942 வரையான காலம் மட்டும் வரலாறு இல்லை.

நினைவில்லா காலம் தொட்டு - கி பி 2000 உம் வரலாறுதான்.

1942-2023 உம் வரலாறுதான்.

அந்த நிலத்தில் ஒரு யூத தேசமும், ஒரு அரபு-இஸ்லாமிய தேசமும் அமைவதே நியாயமான தீர்வாக இருக்கும்.

இஸ்ரேல் தனக்கென தன் மூதாதையர் நிலத்தில் ஒரு நாட்டை அமைத்து விட்டது. 

நாடில்லாமல் இருப்பவர்கள் பலஸ்தீனர்கள்.

பலஸ்தீனர்கள் (ஹமாஸ்) இஸ்ரேலை மறுதலித்து, அதை வரைபடத்தில் இருந்து தூக்குவோம் எனும் வரை இந்த சிக்கல் தீராது.

இதை உணர்ந்துதான் அரபாத் two state solution ஐ ஏற்றார். இட்சாக் ராபின் கொல்லப்படாமல் இருந்திருந்து, ஈரான் ஹமாசை உசுப்பேத்தி விடாமல் இருந்திருந்தால் அது நடந்தும் இருக்கலாம்.

2.1 மில்லியன் அரபிகள் இஸ்ரேல் பாஸ்போர்ட், சிற்றிசன்ஷிப் எடுத்து இஸ்ரேல் பிரஜைகளாக வாழ்கிறனர் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

நன்றி அண்ணா🙏

இதன் பிரககாரம் சமண சமயத்தை தழுவியவர்கள் இப்போ தமிழ்நாட்டில் இருப்பவர்களை 
கொலை கொள்ளை செய்து விரட்டி அடிக்கலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Eppothum Thamizhan said:

ஆனானப்பட்ட புலிகளுக்கே சாதாரண பொதுமக்களின் இழப்புகள் எப்படி இருக்கும் என்று சிங்களத்திற்கு காட்ட ஒரு அனுராதபுர தாக்குதல் தேவைப்பட்டது என்பதையும் மறந்து விடாதீர்கள்

எனது அறிவிற்காக கேட்கிறேன்(அப்பதானே எல்லாம் தெரிஞ்ச ஆள் மாரி இன்னொருக்கா அடிச்சு விடலாம்🤣).

புலிகள் செய்த எந்த தாக்குதலை இங்கே குறிப்பிடுகிறீர்கள்?

3 minutes ago, Maruthankerny said:

இதன் பிரககாரம் சமண சமயத்தை தழுவியவர்கள் இப்போ தமிழ்நாட்டில் இருப்பவர்களை 
கொலை கொள்ளை செய்து விரட்டி அடிக்கலாம்.  

சமணர் இன்னும் டயஸ்போராவாக இருந்தால் - அவர்கள் ஒரு குழுவாக தமிழ் நாடு திரும்பி, பலமான நாடுகளின் உதவியுடன் அங்கே ஒரு சமண நாட்டை நிறுவிவிட்டால் ——

அதன் பின் அங்கே சமண, சமணர் அல்லாத இரு நாடுகள் அமைவதே நியாயமான தீர்வு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

அது மட்டுமல்ல அவர்களில் பலர் இஸ்ரேல் அரசியலில் இருக்கிறார்கள்.. பாராளுமன்றில் இருக்கிறார்கள்.. நம்மவர் ஜரோப்பா அமெரிக்காவில் வாழ்வதுபோல் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறார்கள்.. ஆனால் ஆகக்குறைந்தது பாலஸ்த்தீனர்கள் தம்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காஸா மற்றும் வெஸ்ட் பாங்கிலாவது ஒரு அரசை அமைத்து இஸ்ரவேலை போல் அபிவிருத்தி அடைந்த நாடாக இத்தனை வருடங்களாக மாற்றி அமைக்க முடியவில்லை.. இஸ்ரேலை முற்றாக அழித்து பால்ஸ்தீனத்தை உருவாக்கினால்கூட அந்த நிலத்தில் இவர்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கப்போவதில்லை.. ஆப்கானிஸ்த்தான் ஈரான் ஈராக் போன்ற பெண்களைகூட படிக்க விடாத அடிமுட்டாள் மதவாதிகள் வாழும் முஸ்லீம் நாடுகளை பாருங்கள்.. ஒன்றுமே இல்லாமல் வந்து உழைப்பால் உருவாக்கி ஜனநாயகத்துடன் வாழும் இஸ்ரேலை பாருங்கள்.. மதவா திகள் மற்ற இனத்துக்கு மட்டுமல்ல சொந்த இனத்துக்கு கூட துரோகிகள்..

இது ஒரு அவசரத்தனமான கருத்து 
ஐ ஸ் ஸ் இணை யார் உருவாக்கினார்கள்? ஏன் உருவாக்கினார்கள்?
தற்போதைய தலிபான் ஆஃப்கானிஸ்தான் தலைவர் அமெரிக்க சிறையில் இருந்து 
டிரம்ப் காலத்தில் விடுதலை செய்யப்பட்டவர் ... அதன் பின்புதான் அமெரிக்கா வெளியேறியது.

ஈரான் சிரியா பெண்கள் 50-60 களிலேயே கல்விகளில் பெரும் சாதனை படைத்தவர்கள் 

அமெரிக்க போர் இயந்திரமும் 
மீடியா வும் உருவானதன் பின்பு 
நீங்கள் பார்க்கும் கேட்க்கும் விடயங்களை மேலோட்ட்மாக மட்டும் நம்பாதீர்கள் 

தாய்வான் மீதான போருக்கு சீனா முழு தயார்படுத்தலையும் செய்துவருகிறது 
சீனா போர் தொடங்கினால் முடிவு எப்படி இருக்கும் என்பது உங்களுக்கே தெரிந்தது 
அதை தடுத்துக்கொள்ள மேற்கு உலக மக்களை ஒரு பகுதியினரை நரகம் வரை கூட கூட்டி செல்ல தயங்க மாட்டார்கள் 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.