Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர்: "அடக்குமுறையை எதிர்த்துப் போராடுபவர்களுடன் நான் நிற்பேன்!" - மியா காலிஃபா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீன ஆக்கிரமிப்பு மற்றும் இஸ்லாமியர்கள் படுகொலைக்கு எதிராக பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிக்குழு கடந்த செப்டம்பர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்தத் தாக்குதலை அடுத்து இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பின் மீதும், பாலஸ்தீனத்தின் மீதும் அதிரடித் தாக்குதலில் இறங்கியிருக்கிறது. இதன் விளைவால் 1600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், சுமார் 1,20,000 மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். மேலும், பாலஸ்தீன காசா எல்லையைச் சுற்றிவளைத்திருக்கும் 1,00,000 இஸ்ரேலிய ராணுவத்தினர் அந்தப் பகுதி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

மியா காலிஃபா
 

மியா காலிஃபா

இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட பெரும்பாலான உலக வல்லரசு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கின்றனர். ஈரான், சிரியா, சவுதி அரேபியா, ஏமன், கத்தார், தென் ஆப்ரிக்கா, உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நின்று குரல் கொடுத்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து பல்வேறு நாட்டின் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது நிலைப்பாட்டையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் லெபனான் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகையான மியா காலிஃபா, பாலஸ்தீன போராளிக்கும், மக்களுக்கும் ஆதரவாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது லெபனான் நாட்டிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.

 

இதுபற்றி ட்வீட் செய்திருந்த மியா காலிஃபா, "இப்போரின் நிலைமையைப் பார்த்த பிறகும் நீங்கள் பாலஸ்தீனம் பக்கம் நிற்கவில்லை என்றால், ஒடுக்குமுறைகள், இனவெறி பக்கம் தவறாக நின்றீர்கள் என்று வரலாறு சொல்லும். 'பாலஸ்தீனத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களிடம், அங்கு நடப்பதை அவர்களது செல்போனில் படம் பிடித்து அனுப்பச் சொல்ல முடியுமா?'" என்று பதிவிட்டிருந்தார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி இருந்தது.

இதையடுத்து கனடிய ஒலிபரப்பாளர் மற்றும் வானொலி தொகுப்பாளரும் 'ரெட்லைட் ஹாலண்ட்' நிறுவனத்தின் சிஇஓ-வுமான டூட் ஷாபிரோ என்பவர் மியா காலிஃபாவுடனான பிசினஸ் ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளார். மேலும், "நீங்கள் உடனடியாக நீக்கப்பட்டதாகக் கருதுங்கள். நீங்கள் பதிவிட்ட ட்வீட் மிகவும் மோசமானது..." என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இதற்கு உடனே பதிலளித்த மியா காலிஃபா, "பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக நான் எனது பிசினஸ் வாய்ப்புகளை விட்டுவிட்டேன் என்று கூறுவதை விட, ஒரு யூத அமைப்புடன் ('zionists) பிசினஸ் வைத்திருக்கிறோம் அறியாமல் இருந்ததுதான் என் தவறு" என்று பதிவிட்டுள்ளார். மேலும், "எனது மக்கள் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு திறந்தவெளி சிறைச்சாலையில் வைக்கப்பட்டனர். அந்தச் சுவர்களை அவர்கள் உடைத்து வெளியே வரும் 4k காட்சிகள் உள்ளன என்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

இதன் மூலம் அவர்கள் இன வெறியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர் என வரலாறு எழுதும். என் பெயரை உச்சரிப்பதற்கு முன் உங்களின் சிறிய நிறுவனம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைத்து முதலில் நீங்கள் வருத்தப்பட வேண்டும். உங்களின் சிறிய நிறுவனத்தில் முதலீடு செய்ய என்னிடம் எப்படியெல்லாம் பிச்சை எடுத்தீர்கள் என்று கொஞ்சம் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும்.

இன்றும் என்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் அனைத்து மக்களுடனும் நான் நிற்பேன். நான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவள், காலனித்துவம் பக்கம் நிற்பேன் என்று என்றும் எதிர்பார்க்காதீர்கள்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பேசுபொருளாகி வருகிறது.

 
யாழின் விதிகள் கடுமையாக தடுப்பதால், மியா காலிஃபா வின் சைவ படங்களை மாத்திரமே இங்கு பகிரும் கட்டாய நிலைக்கு அடியேன் தள்ளப்பட்டுள்ளேன் என தீவிர மியா காலிஃபா பக்தர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர்: "அடக்குமுறையை எதிர்த்துப் போராடுபவர்களுடன் நான் நிற்பேன்!" - மியா காலிஃபா | Israel - Palestine War: Mia Khalifa explains her stand - Vikatan

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

லெபனான் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகையான மியா காலிஃபா

மியா வை பற்றி அதிகம் தெரியாத வாசகர்களுக்காக அவர் “நடித்த” …இல்லை…இல்லை…கரெக்டராகவே வாழ்ந்து “காட்டிய” சில படங்களின் தொகுப்பை இணைக்கும் எண்ணத்தில் உள்ளேன்.

நிர்வாகம் அனுமதிக்குமா😝.

  • கருத்துக்கள உறவுகள்

பிழம்பர், மன்னிக்க வேண்டும்! மியா கலிபா யாரென்று அறியாத என் போன்றோருக்கு இந்த செய்தியின் முக்கியத்துவம் புரியவில்லை!😎

  • கருத்துக்கள உறவுகள்

 

முடிந்தால் மியா தனது நடிப்பு தொழிலை, தன் சொந்த நாடான லெபனானின் ஹிஸ்புலா வசம் உள்ள பகுதிக்கு சென்று தொடரட்டும் பார்க்கலாம்😂.

1 minute ago, Justin said:

பிழம்பர், மன்னிக்க வேண்டும்! மியா கலிபா யாரென்று அறியாத என் போன்றோருக்கு இந்த செய்தியின் முக்கியத்துவம் புரியவில்லை!😎

அப்பாடா இந்த ஒரு விசயமாவது உங்களுக்கு தெரியாமல் எனக்கு தெரிந்துள்ளதை இட்டு மகிழ்ச்சி🤣.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

மியா வை பற்றி அதிகம் தெரியாத வாசகர்களுக்காக அவர் “நடித்த” …இல்லை…இல்லை…கரெக்டராகவே வாழ்ந்து “காட்டிய” சில படங்களின் தொகுப்பை இணைக்கும் எண்ணத்தில் உள்ளேன்.

நிர்வாகம் அனுமதிக்குமா😝.


சீப் மென்டாலிட்டி .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:


சீப் மென்டாலிட்டி .

நான் இந்த தொகுப்பை சொன்னேன்👇

பிகு

நீங்கள் எந்த தொகுப்பை சொன்னீர்கள்?

#சீப் மெண்டாலிட்டி🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்க பணக்கார சபையில் ஒரு யூத பெண் தன் இனத்திற்காக மடிப்பிச்சை ஏந்திய சம்பவம் ஒரு சிலருக்கு தெரியாமல் இருந்தாலும்......
இந்த பெண்மணியை அந்த ஒரு சிலருக்கு தெரிந்திருப்பதில் மட்டற்ற மகிழ்சியை தருகின்றது...😎

 

  • கருத்துக்கள உறவுகள்

நாஹிய பின்புலத்தில் உருவான சதி கோட்பாட்டு “சம்பவங்களை” அறிந்து வைத்திருப்பதிலும் பார்க்க, மியா வை அறிந்து வைத்திருப்பது மேலானதே🤓.

  • கருத்துக்கள உறவுகள்

இங்க சில பேர் எதற்கு இவாவை எதிர்க்கினம்.

இன்னொரு பக்கம் ஏதோ இஸ்ரேலுக்கு ஆதரவு.. ஆதரவில்லாதது போலவும் எழுதிக் கொண்டு.. அதாவது தாங்கள் அதிபுத்திசாலித்தனமா எழுதினாம்.. இங்கால.. அடக்குமுறைக்கு எதிராக இந்த அம்மணி சொல்வதற்கும் ஏச்சு விழுகுது.

இந்த லூசுத் தனங்களை என்னென்பது. 

  • கருத்துக்கள உறவுகள்

மியா காலிஃபா
எந்தப்பக்கம் நின்றாலும் நானும் அந்தப்பக்கம்தான் 
ஏனென்றால் ஒருகாலத்தில் அம்மணியின் உழைப்பு அப்படி ..நான் ஒடுக்குமுறைக்குள்ளான மக்களுக்கான உழைப்பைத்தான் சொல்கிறேன் தப்பாக நினைத்துப்போட வேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது மியாவை ஏசினீங்க அண்ணணுக்கு கெட்ட கோபம் வந்திடும் ஆங்…..🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

யாராவது மியாவை ஏசினீங்க அண்ணணுக்கு கெட்ட கோபம் வந்திடும் ஆங்…..🤣

இது தனிப்பட்ட தாக்குதலுக்குள் வராதா?
 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

இது தனிப்பட்ட தாக்குதலுக்குள் வராதா?
 

இதற்கு மேலே உள்ள தனிப்பட்ட தாக்குதலுக்கான பதில் அது.

நாம் என்ன ஆயுதத்தை எடுக்கிறோம் என்பதை எம் எதிரில் நிற்பவரே தீர்மானிக்கிறார்.

On 12/10/2023 at 03:35, அக்னியஷ்த்ரா said:

மியா காலிஃபா
எந்தப்பக்கம் நின்றாலும் நானும் அந்தப்பக்கம்தான் 
ஏனென்றால் ஒருகாலத்தில் அம்மணியின் உழைப்பு அப்படி ..நான் ஒடுக்குமுறைக்குள்ளான மக்களுக்கான உழைப்பைத்தான் சொல்கிறேன் தப்பாக நினைத்துப்போட வேண்டாம் 

எங்க தம்பி கனகாலமாய் இந்த பக்கம் இல்ல?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

இதற்கு மேலே உள்ள தனிப்பட்ட தாக்குதலுக்கான பதில் அது.

நாம் என்ன ஆயுதத்தை எடுக்கிறோம் என்பதை எம் எதிரில் நிற்பவரே தீர்மானிக்கிறார்.

எங்க தம்பி கனகாலமாய் இந்த பக்கம் இல்ல?

ஏன் அவர் சொன்னதில் என்ன தப்பு...நீங்கள் எழுதியது அந்த நோக்கத்தில் தானே 😧

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

ஏன் அவர் சொன்னதில் என்ன தப்பு...நீங்கள் எழுதியது அந்த நோக்கத்தில் தானே 😧

அது உங்களினதும் அவரினதும் பார்வை. அதே போல் நான் எழுதியதும் அதற்குரிய பதிலே என்பது என் பார்வை.

(எழுதினது விளங்காட்டி பிறகு தோசையை திருப்புறன், pancake ஐ கவிக்கிறன் எண்டு கோவிக்கப்படாது).

  • கருத்துக்கள உறவுகள்

மியா காலிஃபா - கேள்விப்பட்ட பேராக இருக்கு. ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவரா?🤔

 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

மியா காலிஃபா - கேள்விப்பட்ட பேராக இருக்கு. ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவரா?🤔

 

கிரிகெட் உலக கோப்பை போட்டி வைக்க நேரம் இல்லை…மியா கலிபா…உமறு கயூம் எண்டா ஓடிவந்துடுவீங்க…இல்ல ஜி🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, கிருபன் said:

மியா காலிஃபா - கேள்விப்பட்ட பேராக இருக்கு. ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவரா?🤔

 

ஒஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்படுபவர்கள் எல்லோரும் தேவ தூதர்களா? 😛

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

கிரிகெட் உலக கோப்பை போட்டி வைக்க நேரம் இல்லை…மியா கலிபா…உமறு கயூம் எண்டா ஓடிவந்துடுவீங்க…இல்ல ஜி🤣

இது ஒரு நல்ல கேள்வி.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

எங்க தம்பிமார் அண்ணைமார் ஒருத்தரையும் வேறு பக்கங்களில் காணவில்லை என்று தேடினால் அவர்கள் எல்லோரும் இங்கே நிற்கிறார்கள். 😅

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, suvy said:

இது ஒரு நல்ல கேள்வி.......!  😂

என்ன பதில் வருதெண்டு பாப்பம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

என்ன பதில் வருதெண்டு பாப்பம்🤣

Beach volleyball  போல கிரிக்கெட்டில் இடைக்கிடை  entertainment இல்லாததால் போரடிச்சு போச்சோ. 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, island said:

Beach volleyball  போல கிரிக்கெட்டில் இடைக்கிடை  entertainment இல்லாததால் போரடிச்சு போச்சோ. 😂

அதான் ஐ பில் எல் எண்டா ஆர்வம் காட்டுறவர் போலும்🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.