Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெய் ஸ்ரீ ராம்! பாகிஸ்தான் மேட்சில் இந்திய ரசிகர்கள் விடாமல் கோஷம்.. உதயநிதி ஸ்டாலின் சுளீர் அட்டாக்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய் ஸ்ரீ ராம்! பாகிஸ்தான் மேட்சில் இந்திய ரசிகர்கள் விடாமல் கோஷம்.. உதயநிதி ஸ்டாலின் சுளீர் அட்டாக்

Shyamsundar IUpdated: Sunday, October 15, 2023, 11:10 [IST]
Jai Sree Ram: Why Indian fans are mocking Pakistan players in World Cup 2023? Asks Udhyanidhi Stalin

நேற்று பாகிஸ்தான் இந்தியா இடையிலான உலகக் கோப்பை 2023 லீக் ஆட்டம் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடந்த இந்த பாகிஸ்தான் மேட்சில்.. இந்திய ரசிகர்கள் நடந்து கொண்ட விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளது. இந்திய ரசிகர்கள்.. பாகிஸ்தான் வீரர்களை தொடர்ந்து மோசமாக நடத்தி கோஷங்களை எழுப்பினர். உதாரணமாக டாஸ் வென்று பாபர் ஆஸம் பேசிய தொடங்கிய போதே அவரை கடுமையாக பேச விடாமல் கோஷம் எழுப்பி இந்திய ரசிகர்கள் தொந்தரவு செய்தனர்.

அதேபோல் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும் தொடர்ந்தும் ஊ ஊ ஊ என்று கோஷம் எழுப்பி அவர்களை பீல்டிங் செய்வதில் இருந்து தொந்தரவு செய்தனர். இதெல்லாம் போக.. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்துவிட்டு திரும்பும் போது அவர்களை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர்.

முக்கியமாக பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் அவுட் ஆகி திரும்பும் போது அவர்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பப்பட்டது. இந்த கோஷம் எழுப்பப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முக்கியமாக கிரிக்கெட் என்ற போட்டி ஒன்றில் இப்படி மத ரீதியான கோஷங்களை எழுப்புவதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். அரசியல், மதத்தை கிரிக்கெட் உடன் சேர்ப்பது.. விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் மோசமாக நடத்துவதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.,

உதயநிதி ஸ்டாலின் கோபம்: இந்த நிலையில் விளையாட்டு என்பது இருநாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாக்.வீரர் அவுட் ஆன போது ஜெய்ஸ்ரீராம் என ரசிகர்கள் கோஷம் எழுப்பிய வீடியோவை பகிர்ந்து உதயநிதி ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.

அதில், இந்தியா அதன் விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. இருப்பினும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் புதிய குறைவு. விளையாட்டு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். வெறுப்பைப் பரப்பும் கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது, என்று கூறியுள்ளார்.

Jai Sree Ram: Why Indian fans are mocking Pakistan players in World Cup 2023? Asks Udhyanidhi Stalin

இந்தியா வெற்றி: ஷகீன் அப்ரிடி, பாபர் ஆஸம், ரிஸ்வான், ரஃப் ஆகியோரின் படையை மிக எளிமையாக துவம்சம் செய்து.. கிரிக்கெட் இவ்வளவு ஈஸியா என்று கேட்கும் அளவிற்கு எளிமையான மேட்சை ஆடி அசத்தி உள்ளது இந்திய அணி. இந்த மேட்சில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய பாகிஸ்தான் 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா அதிரடியாக 86 ரன்கள்.. ஷ்ரேயாஸ் 50 ரன்கள் எடுத்த நிலையில் எளிதாக 30.3 ஓவரில் இந்திய அணி வென்றது.
 
https://tamil.oneindia.com/news/chennai/jai-sree-ram-why-indian-fans-are-mocking-pakistan-players-in-world-cup-2023-asks-udhyanidhi-stalin-548293.html
 
—————

டிஸ்கி

திராவிட மாடல் Vs குஜராத் மாடல் 👇

பாகிஸ்தான்காரனுக்கு தெரியுது சென்னையும், கல்கத்தாவும் வேற மாதிரி என்பது👇.

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டில் அரசியல் , மதம் கலக்க கூடாது,

தப்புதான், தவறுதான்.

மதம் இனம் நிறம் அடையாளப்படுத்தகூடாத விளையாட்டில் மைதானத்தின் நடுவே பாகிஸ்தான் வீரர்கள் தொழுகை நடத்தும்போதும்,

அரசியல் கலக்ககூடாத விளையாட்டில் செஞ்சுரியை பாலஸ்தீன மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று ரிஸ்வான் அரசியலை கலந்தபோதும்,

அதனை வன்மையாக உதயநிதி கண்டித்து அரசியல் மதம் விளையாட்டில் கலக்ககூடாது என்று சொல்லி அறிக்கைவிட்டார் என்று சொல்கிறார்களே உண்மைதானா?

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா, இமாமிற்கு பந்தை வீச முதல் பந்துக்கு எதோ சொல்வது போல இருந்தது.. மந்திரம் ஏதாவது சொல்வது போல காட்டுகிறாரோ (ரசிகர்களை ஏத்திவிட) என நினைத்தேன்.. இப்பொழுதுதான் விளங்கிறது ஏன் என்று..இமாமிற்கு போதாத காலம், ஹர்திக் பாண்டியாவின் அந்த பந்தில்தான் அவுட்டாக வேண்டும் என்பதும்.. 

விளையாட்டில் மதமும் அரசியலும் இல்லாது இருக்கவேண்டும்.. இதில் இலங்கை, பாகிஸ்தான் இந்தியா போன்றவை விதிவிலக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய் ஸ்ரீராம் விவகாரம்: உதயநிதிக்கு அண்ணாமலை பதிலடி!

SelvamOct 15, 2023 11:56AM
Screenshot-2023-10-15-115139.jpg

சனாதன தர்மத்தை தர்மமாக உதயநிதி ஸ்டாலின் பார்க்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “திமுக நடத்திய மகளிர் உரிமை மாநாட்டில் 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா குறித்து பேச எந்த தலைவர்களுக்கும் தகுதி இல்லை. காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதை விட சோனியா காந்தி, பிரியங்கா திமுகவை வளர்ப்பதில் தான் குறியாக உள்ளனர். மகளிர் உரிமை மாநாடு என்பது நாடகம். பாஜக தமிழகத்தில் வளர்ந்துள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

பாஜகவை பொறுத்தவரை இந்திய அளவில் அனைத்து இடங்களிலும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது வழக்கம். அந்தவகையில் 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் மறுபடியும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்” என்றார்.

பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் ஆட்டமிழந்தபோது ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இந்தியா எப்போதுமே பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பையும் மரியாதையும் கொடுத்துள்ளது. பாகிஸ்தான் வீரர் நடந்து செல்லும் போது ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் போடுவது பாகிஸ்தானை கேவலப்படுத்துவதாக நான் பார்க்கவில்லை. விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று சொல்லக்கூடிய உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “கூட்டணி குறித்து மேலிட தலைவர்கள் பேசுவார்கள்.

நாளை காலை அவினாசி, மாலை மேட்டுப்பாளையத்தில் 3-ஆம் கட்ட நடைபயணம் துவங்க உள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த நடைபயணத்தில் கலந்து கொள்கிறார்.

சபாநாயகர் அப்பாவு சட்டமன்றத்தில் வானதி சீனிவாசன் பேசும்போது மைக்கை ஆஃப் செய்கிறார். அனைவருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

தீவிரவாததிற்கு மதச்சாயம் பூச பாஜக விரும்பவில்லை. தீவிரவாதத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய ஆளுநர் கையெழுத்து போட மாட்டார்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
 
https://minnambalam.com/political-news/annamalai-replies-udhayanidhi-stalin/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

விளையாட்டில் அரசியல் , மதம் கலக்க கூடாது,

தப்புதான், தவறுதான்.

மதம் இனம் நிறம் அடையாளப்படுத்தகூடாத விளையாட்டில் மைதானத்தின் நடுவே பாகிஸ்தான் வீரர்கள் தொழுகை நடத்தும்போதும்,

விளையாட்டில் அரசியல் கலக்க கூடாது என்பதை நான் ஏற்பதில்லை.

தொழுகை இது முன்னரும் பலதடவை சர்ச்சை இல்லாமல் நடந்துள்ளது - பல தடவைகள் - சமிந்த வாஸ் ஒவ்வொரு பந்தின் முதலும் குறுசு போடுவார்.

அத்தனை இலங்கை வீரரும் கையில் பிரித்தூலை ஏதோ பந்தம் போல சுத்தி இருப்பார்கள்.

சச்சின் டெல்ல்ண்டுல்கார் ஒவ்வொரு செஞ்சுரியின் பின்னும் மேலே வானை நோக்கி தந்தையை வணங்குவார்.

அலெஸ்டர் குக் சாதனைகளின் பின் மேலே வானை நோக்கி காதை கையால் மடித்து, “கேட்கிறதா கரகோசம்” என தன் இறந்த நண்பனை கேட்பார்.

எல்லாமுமே நம்பிக்கைதான்.

விளையாட்டு வீரர்கள் தம் நம்பிக்கையை செய்வதற்கும் - ஒட்டு மொத்த மைதானமே கூடி நின்று இன்னொரு மதத்தின் கோசத்தை, பிற மத வீரர்கள் அவிட்டாகி போகும் போது கத்துவதும் ஒன்றல்ல.

1 hour ago, valavan said:

அரசியல் கலக்ககூடாத விளையாட்டில் செஞ்சுரியை பாலஸ்தீன மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று ரிஸ்வான் அரசியலை கலந்தபோதும்,

இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து ஒட்டு மொத்த இங்கிலாந்து அணியிம் கறுப்புபட்டி அணிந்த போதும்.

1 hour ago, valavan said:

அதனை வன்மையாக உதயநிதி கண்டித்து அரசியல் மதம் விளையாட்டில் கலக்ககூடாது என்று சொல்லி அறிக்கைவிட்டார் என்று சொல்கிறார்களே உண்மைதானா?

உதய நிதி அரசியல்வாதி - அவர் தன் லபா நோக்கிற்கு ஏற்ப ஒன்றை கண்டிப்பார். ஒன்றை கண்டுக்காமல் விடுவார்.

நாங்கள் சாதாரண மனிதர் நாம் எல்லாவற்றையும் கண்டிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, P.S.பிரபா said:

நேற்று இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா, இமாமிற்கு பந்தை வீச முதல் பந்துக்கு எதோ சொல்வது போல இருந்தது.. மந்திரம் ஏதாவது சொல்வது போல காட்டுகிறாரோ (ரசிகர்களை ஏத்திவிட) என நினைத்தேன்.. இப்பொழுதுதான் விளங்கிறது ஏன் என்று..இமாமிற்கு போதாத காலம், ஹர்திக் பாண்டியாவின் அந்த பந்தில்தான் அவுட்டாக வேண்டும் என்பதும்.. 

விளையாட்டில் மதமும் அரசியலும் இல்லாது இருக்கவேண்டும்.. இதில் இலங்கை, பாகிஸ்தான் இந்தியா போன்றவை விதிவிலக்கு. 

இந்த உலக கோப்பையை சங்கிகள் வேணும் எண்டே மத விடயமாக திட்டமிட்டு கையாள்கிறார்கள்.

1. ஹைதரபாத் - தென்னிந்தியாவில் இருந்து பாகிஸ்தானுடன் சேர அன்றைய நவாப் விரும்பிய, உருது பேசும் முஸ்லிம்கள் நிறைந்த இடம். இதை பாகிஸ்தானின் தங்கும் நகராக அமைத்து - அங்கே அவர்களுக்கு மக்கள் ஆதரவு இயல்பாக கிடைக்க - பார்தீர்களா இந்திய முஸ்லிம்கள் - பாகிஸ்தானுடந்தான் என பிரசாரம் செய்கிறார்கள்.

2. அதே போல் இந்தியா-பாகிஸ்தான் மேட்சை, மிகவும் மோசமான மோடி தலைமையில் முஸ்லிம் எதிர் படுகொலைகள் நடந்த குஜராத் அஹமதபாத்தில் நடத்தினார்கள்.

கிரிகெட்டில் முன்னர் பலதடவை இனம், நிறம், அரசியல் கலந்துள்ளது. இப்படி அப்பட்டமாக மதம் கலந்து நான் காணவில்லை.

சென்னை, கொச்சி, விசாக பட்டினம், கொல்கொத்தா என பாகிஸ்தான் அணியை வழமை போல் விளையாட விட்டிருந்தால் சர்ச்சை இல்லாமல் நடத்தி இருக்கலாம்.

சர்ச்சை வர வேண்டும் என்றே இப்படி செய்கிறார்கள்.

இந்திய கிரிகெட் போர்ட்டின் தலைவர், அமித் ஷா மகன் ஜெய் ஷா.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

விளையாட்டில் அரசியல் , மதம் கலக்க கூடாது,

தப்புதான், தவறுதான்.

மதம் இனம் நிறம் அடையாளப்படுத்தகூடாத விளையாட்டில் மைதானத்தின் நடுவே பாகிஸ்தான் வீரர்கள் தொழுகை நடத்தும்போதும்,

அரசியல் கலக்ககூடாத விளையாட்டில் செஞ்சுரியை பாலஸ்தீன மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று ரிஸ்வான் அரசியலை கலந்தபோதும்,

அதனை வன்மையாக உதயநிதி கண்டித்து அரசியல் மதம் விளையாட்டில் கலக்ககூடாது என்று சொல்லி அறிக்கைவிட்டார் என்று சொல்கிறார்களே உண்மைதானா?

இந்த ரிசுவான் பாக்கிற ரசிகர்களை முட்டாள் ஆக்கிற மாதிரித்தான் நடப்பார்...ஓவர் ஆக்டிங்..பாகிஸ்தான் அணியே மதவெறி கொண்டதுபோல் தான் நடப்பர்..ஏனைய  அணிகளில் மதம் இருந்தாலும் ...இந்த மத அணியினரின் அட்டகாசம் கூடத்தான்..விளையாட்டு விளையாட்டகவே போக வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டும் தவறு தான். விளையாட்டு மைதானத்தில் பாகிஸ்தான் விளையாட்டுகாரர்கள் தொழுகை நடத்தியது தவறு அவர்கள் தனிப்பட்ட மத நம்பிக்கையை பொது  இடத்தில் செய்ய அனுமதித்து இருக்க கூடாது அவர்களை நோக்கி ஜெய்ஸ்ரீராம் கோசம் போட்டதும் தவறு.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் முன்பு ஒஸ்மானியா கல்லூரி யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் விளையாடும் உதைபந்தாட்ட போட்டி பார்த்தது உண்டா. 

யாழ் மத்திய கல்லூரி பரியோயாவான் கல்லூரி மாபெரும் துடுப்பாட்ட போட்டியில் கற்பூரம், தேங்காய், பூசை மணி, சங்கு என எல்லாம் உள்ளன.

இலங்கை வீரர் குருசிங்க துடுப்பாடும்போது கடவுளை வணங்குவது தனி அழகு.

இந்திய அணி வெல்ல வேண்டும் என தொலைக்காட்சி முன்னால் கற்பூரம் கொழுத்தி வழிபடுவார்கள்.

மேற்கண்ட செய்தியில் ரசிகர் கூட்டம் கூ அடிப்பதும், கோசம் இடுவதும் இந்த கலாச்சாரத்தின் பகுதியாகவே பார்க்கப்படலாம். 

விளையாட்டு வீரர்கள் இவை எல்லாவற்றையும் ஏற்கனவே எதிர்பார்த்து, இதற்கு தயாராகவே போட்டிக்கு வரவேண்டும், வருவார்கள்.

உலக கோப்பை ஆட்டம் பாகிஸ்தானில் நடைபெற்றால் இந்திய அணிக்கும் இதே அனுபவங்கள் கிடைக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

இந்த ரிசுவான் பாக்கிற ரசிகர்களை முட்டாள் ஆக்கிற மாதிரித்தான் நடப்பார்...ஓவர் ஆக்டிங்..பாகிஸ்தான் அணியே மதவெறி கொண்டதுபோல் தான் நடப்பர்..ஏனைய  அணிகளில் மதம் இருந்தாலும் ...இந்த மத அணியினரின் அட்டகாசம் கூடத்தான்..விளையாட்டு விளையாட்டகவே போக வேண்டும்..

இது உண்மைதான்.

80, 90 களில் எல்லாம் இப்படி இல்லை. ஆனால் 2000 இன் பின் அநேகர் பேட்டி கண்டால் கூட பிஸ்மில்லாஹிர் ரஹ்மானுர் ரஹீம் என சொல்லியே தொடங்குவர்.

நான் மேலே சொன்ன 1999 சென்னை டெஸ்ட்டில் வென்ற பின் கூட அல்லாஹு அக்பர், தக்பீர் கோசங்களை அணி எழுப்பியதாம் என இன்னொரு வீடியோவும் பகிரப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இது உண்மைதான்.

80, 90 களில் எல்லாம் இப்படி இல்லை. ஆனால் 2000 இன் பின் அநேகர் பேட்டி கண்டால் கூட பிஸ்மில்லாஹிர் ரஹ்மானுர் ரஹீம் என சொல்லியே தொடங்குவர்.

நான் மேலே சொன்ன 1999 சென்னை டெஸ்ட்டில் வென்ற பின் கூட அல்லாஹு அக்பர், தக்பீர் கோசங்களை அணி எழுப்பியதாம் என இன்னொரு வீடியோவும் பகிரப்பட்டது.

விளாயாட்டை விளையாட்டாக ரசிப்பவர்களுக்கு மன உளைச்சல் தரக்ககூடிய செயற்பாடு...பாகிஸ்தான் இதில் மோசமான செயல் செய்யும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நியாயம் said:

நீங்கள் முன்பு ஒஸ்மானியா கல்லூரி யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் விளையாடும் உதைபந்தாட்ட போட்டி பார்த்தது உண்டா. 

யாழ் மத்திய கல்லூரி பரியோயாவான் கல்லூரி மாபெரும் துடுப்பாட்ட போட்டியில் கற்பூரம், தேங்காய், பூசை மணி, சங்கு என எல்லாம் உள்ளன.

இலங்கை வீரர் குருசிங்க துடுப்பாடும்போது கடவுளை வணங்குவது தனி அழகு.

இந்திய அணி வெல்ல வேண்டும் என தொலைக்காட்சி முன்னால் கற்பூரம் கொழுத்தி வழிபடுவார்கள்.

மேற்கண்ட செய்தியில் ரசிகர் கூட்டம் கூ அடிப்பதும், கோசம் இடுவதும் இந்த கலாச்சாரத்தின் பகுதியாகவே பார்க்கப்படலாம். 

விளையாட்டு வீரர்கள் இவை எல்லாவற்றையும் ஏற்கனவே எதிர்பார்த்து, இதற்கு தயாராகவே போட்டிக்கு வரவேண்டும், வருவார்கள்.

உலக கோப்பை ஆட்டம் பாகிஸ்தானில் நடைபெற்றால் இந்திய அணிக்கும் இதே அனுபவங்கள் கிடைக்கும்.

இதுவும் சரியாகத்தான் படுகிறது.

ஆனால் இந்த “கலாச்சாரம்”  வட இந்தியா, தென்னிந்தியா இடையே மாறுபாடாகத்தான் இருக்க்கிறது.

நிச்சயம் இப்படி ஒரு அனுபவம் மொஹாலி, அல்லது ஈடின் கார்டின்ஸ் அல்லது தெற்கில் பாக்கிஸ்தானுக்கு கிடைக்திராது என்றே நினைக்கிறேன்.

அத்தோடு தனியே ரசிகர் தன்முனைப்பாக அன்றி இதை சங்கிள் வேண்டும் என்றே மத மயப்படுத்துகிறனர் என்பது என் பார்வை.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டேடியத்தில் நான் இருந்தேன். தமிழ் நாட்டை நினைத்து மெய் சிலிர்க்கின்றது. மணி உருக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

392754749_10161100264736950_3396460220596415311_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=v_5btD6g3NEAX_F6_W-&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AfAikDdvM9atUUvPv4AsFR4iyEs_6nzohVdtXZk71kmkPQ&oe=65372291

392763059_10161100261036950_7053782961320363792_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=e7-aLjGvVdoAX92D0IB&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AfBzXY7Wa1sAf2hr6SNKfAeqWgO5akObsRD80rKKhuB1RA&oe=653650FE

Edited by karu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு, அவுஸ் v பாக் போட்டியில், பாக் ரசிகரை பாகிஸ்தான் ஸிந்தாபாத் சொல்லவிடாமல் தடுத்த பொலிஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2023 at 14:08, தமிழ் சிறி said:

ஸ்டேடியத்தில் நான் இருந்தேன். தமிழ் நாட்டை நினைத்து மெய் சிலிர்க்கின்றது.

திராவிடத்தால் வீழ்ந்தோம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

திராவிடத்தால் வீழ்ந்தோம் 🤣

நீங்கள்,   மணியின் காணொளிகளை பார்ப்பதில்லை என்று  
முன்பு சொன்னது இன்னும் எனக்கு  நல்ல நினைவில் உள்ளது. 😁
அப்பிடி இருந்தும்… இந்த வீடியோவை எப்பிடி பார்த்தீர்கள். 😂

வீடியோவை பார்க்கவில்லை என்று உருட்ட வேண்டாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

திராவிடத்தால் வீழ்ந்தோம் 🤣

தெலுங்கு பங்காரு அடிகளாரின் மறைவுக்கு தமிழக முதல்வர் நேரில் அஞ்சலியாம். 
தமிழின் தொன்மையை தேடிய தமிழன் ஒரிசா பாலு   சென்ற கிழமை இறந்த போது ஒரு திராவிடமும்… அந்தப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை.
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது இப்பவாவது புரிந்தால் சரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள்,   மணியின் காணொளிகளை பார்ப்பதில்லை என்று  
முன்பு சொன்னது இன்னும் எனக்கு  நல்ல நினைவில் உள்ளது. 😁
அப்பிடி இருந்தும்… இந்த வீடியோவை எப்பிடி பார்த்தீர்கள். 😂

வீடியோவை பார்க்கவில்லை என்று உருட்ட வேண்டாம். 🤣

நினைவாற்றல் செம்ம ஷார்ப் 🤣.

வழமையாக மணியின் உருட்டுக்கள் பிடிப்பதில்லை. ஆனால் “நான் ஸ்டேடியத்தில் இருந்தேன்” என்ற கூற்றால் கவரப்பட்டு பார்த்தேன்.

அது அஹமதபாத் இல்லையாம், 1999 சென்னையில் இருந்தாராம். ஆனாலும் அந்த நேரம் மேட்ச்சை குழப்ப சங்கிகள் செய்த சிலதை சொன்னார் சுவாரசியமாக இருந்தது. தொடர்ந்து பார்க்கவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

தெலுங்கு பங்காரு அடிகளாரின் மறைவுக்கு தமிழக முதல்வர் நேரில் அஞ்சலியாம். 
தமிழின் தொன்மையை தேடிய தமிழன் ஒரிசா பாலு   சென்ற கிழமை இறந்த போது ஒரு திராவிடமும்… அந்தப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை.
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது இப்பவாவது புரிந்தால் சரி.

ஒரிசா பாலுவும் பங்காருவும் ஒண்டா?தமிழ்நாட்டில் தாக்கம் ஏற்படுத்திய மனிதர் என பார்த்தால் - இருவருக்கும் பெரிய வித்தியாசம்.

பிகு

திண்ணையில் நான் ஒரு இரங்கலை போட்டேன். யாழில் அது மட்டும்தான் என நினைக்கிறேன். நாம் ஸ்டாலினை விமர்சிக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

திண்ணையில் நான் ஒரு இரங்கலை போட்டேன். யாழில் அது மட்டும்தான் என நினைக்கிறேன். நாம் ஸ்டாலினை விமர்சிக்கலாமா?

ஒரிசா பாலு காலமானது இன்று தான் எனக்குத் தெரியும். அன்னாருக்கு அஞ்சலிகள்.

ஆனால், அவர் தமிழின் தொன்மையைப் பற்றி வெளியிட்ட பெரும்பாலான கருத்துக்கள் ஆய்வு அடிப்படையற்ற கருத்துக்கள் என்று தான் நான் கருதுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

ஒரிசா பாலு காலமானது இன்று தான் எனக்குத் தெரியும். அன்னாருக்கு அஞ்சலிகள்.

ஆனால், அவர் தமிழின் தொன்மையைப் பற்றி வெளியிட்ட பெரும்பாலான கருத்துக்கள் ஆய்வு அடிப்படையற்ற கருத்துக்கள் என்று தான் நான் கருதுகிறேன்.

உங்கள் நிலைப்பாடே எனதும்.

மறந்து விட்டீர்களோ தெரியாது. பாலுவின் துறைசார் தகமைகளை எல்லாம் எடுத்து நோக்கி அவரின் “ஆய்வுகளை” ஒரு திரியில் அலசினோம்.

ஆனால் இந்த இனத்தின் தொன்மையை எப்படியாவது நிறுவிவிட வேண்டும் என்ற அவரின் நோக்கம் போற்றுதலுக்குரியதே.

ஸ்டாலின் தக்க மரியாதை செய்துள்ளார் என்றே நான் நினைக்கிறேன்.

அவரின் பதிவுகளை காவி வந்த யாரும் அவரின் இறப்பை கண்டுகொள்ளவில்லை என்பது நெருடலே.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

தெலுங்கு பங்காரு அடிகளாரின் மறைவுக்கு தமிழக முதல்வர் நேரில் அஞ்சலியாம். 
தமிழின் தொன்மையை தேடிய தமிழன் ஒரிசா பாலு   சென்ற கிழமை இறந்த போது ஒரு திராவிடமும்… அந்தப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை.
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது இப்பவாவது புரிந்தால் சரி.

பங்காரு அடிகளார் எனக்கு அப்பா மாதிரி என்று சீமான் சொல்லி உள்ளார். தமிழர் மெய்யியலில் பெரும் புரட்சி செய்த மகான் என்று அவருக்கு புகழாரம் சூட்டியதோடு அவருக்கும் எனக்குத் தந்தை மகன் போல் நெருங்கிய உறவு இருந்தது. அவரின் இழப்பு பேரிழப்பு என்றும் கூறி உள்ளார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

பங்காரு அடிகளார் எனக்கு அப்பா மாதிரி என்று சீமான் சொல்லி உள்ளார். தமிழர் மெய்யியலில் பெரும் புரட்சி செய்த மகான் என்று அவருக்கு புகழாரம் சூட்டியதோடு அவருக்கும் எனக்குத் தந்தை மகன் போல் நெருங்கிய உறவு இருந்தது. அவரின் இழப்பு பேரிழப்பு என்றும் கூறி உள்ளார். 

தமிழ் நாட்டில் கொஞ்சம் பிரபலமான எவர் சாவடைந்தாலும் இது வழமையாக அண்ணன் செய்வதுதானே?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

தமிழ் நாட்டில் கொஞ்சம் பிரபலமான எவர் சாவடைந்தாலும் இது வழமையாக அண்ணன் செய்வதுதானே?

வர வர இந்த அண்ணனை நம்பி யாரையும் திட்ட முடியாம இருக்கு.  அண்ணன் திட்டுறாரென்று நாம திட்டினா அடுத்த நாளே அண்ணன் பல்டியடித்து அவர் என் அப்பா மாதிரி, சித்தப்பா மாதிரி பிளேட்ட திருப்பி போடுறாரு. 😂

ரொம்ப காமடி பண்ணுராரு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.