Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரபு நாட்டில் இருந்து சம்பாதித்தபடி, பலஸ்தீனர்களுக்கு எதிராக பதிவிட்ட, வைத்தியர் கைது - உடனடியாக பணியும் நீக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்த பஹ்ரைன் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்த  இந்தியரான டாக்டர் சுனில் ராவ் பஹ்ரைன் காவல்துறையால் இன்று -19- கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டாக்டர் சுனில் ராவ், மருத்துவமனை நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

391704385_6822218291209868_5920067077128566_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பிரான்ஸ் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சங்கிகளுக்கு தெளிவான பதிலை கொடுத்துள்ளது பஹ்ரைன் 
இவர்களுக்கெல்லாம் மோதி பெரிய ஜுப்பர் மேன் என்று நினைப்பு, பிழைக்கப்போன இடத்தில் மூடிக்கொண்டு இருக்கவேண்டும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இந்திய சங்கிகளுக்கு தெளிவான பதிலை கொடுத்துள்ளது பஹ்ரைன் 
இவர்களுக்கெல்லாம் மோதி பெரிய ஜுப்பர் மேன் என்று நினைப்பு, பிழைக்கப்போன இடத்தில் மூடிக்கொண்டு இருக்கவேண்டும் 

இதென்ன கதை, இதே முஸ்லீம்கள் கிறிஸ்துவ நாடுகளில் பிழக்க வந்து எல்லா அனியாமும் பதிவிடுவார்கள் இவர்களை இப்படியா இந்த அரசுக்கள் /தொழில் தருனர்கள் வேலை விட்டு நீக்குகின்றனர்? 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, colomban said:

இதென்ன கதை, இதே முஸ்லீம்கள் கிறிஸ்துவ நாடுகளில் பிழக்க வந்து எல்லா அனியாமும் பதிவிடுவார்கள் இவர்களை இப்படியா இந்த அரசுக்கள் /தொழில் தருனர்கள் வேலை விட்டு நீக்குகின்றனர்? 

அவர்கள் எந்த நாடு என்று பார்த்து அவர்களை சரியான முறையில் கவனிக்கவேண்டும். முஸ்லிம்களாக இருப்பின் கிறீஸ்தவ நாடுகள் அளவுக்கதிகமான லிபரல்களாக தங்களை காட்டிக்கொள்வதை விடுத்து அவர்களை நாடுகடத்தவேண்டும். இதனை பிரித்தானியா உட்பட மேற்கு ஐரோப்பிய நாடுகள் முதலிலேயே செய்திருந்தால் இன்று ஸ்பீக்கர்ஸ் கார்னரில் பிரித்தானிய கிறீஸ்தவ குடிமகன் அகதியாக வந்தேறியவர்களிடமெல்லாம் உதை வாங்கவேண்டிய நிலைமையே வந்திருக்காது.   
இதுவே ஒரு வெளிநாட்டுப்பிரஜை இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியாவின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றினால் இந்திய ஜெய் ஸ்ரீராம் கோஷ்ட்டிகள் சும்மா விட்டுவிடுவார்களா. எனவே என்னை பொறுத்தவரைக்கும் இது ஜெய் பாரத்திற்கு சரியான பரிசு    

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சங்கி நாடுகடத்தப்படவேண்டியவர்தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே போல் ஜேர்மனியில் சகல சௌபாக்கியங்களுடனும் சுக போகங்களுடன் வாழ்ந்து கொண்டு ரஷ்யாவிற்கு சார்பாகவும் பலஸ்தீனத்திற்கு சார்பாகவும் கருத்துக்கள் கிறுக்கும் சீவன்களையும் நாடு கடத்த வேண்டும்..:cool:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இதே நாடுகள் பாலஸ்தீனியர்களை அகதிகளாக ஏற்கமாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வைத்தியராக இருந்து கொண்டு ஆஸ்பத்திரி, அப்பாவிகள் மீதான தாக்குதலை “வரவேற்றார்” (இவை யார் நடத்தியது என ஆராய்வது, கருத்து சொல்வது வேறு) என்றால் அவர் நாடு கடத்த மட்டும் அல்ல, அவரின் டாக்டர் வேலை செய்யும் உரிமமும் ரத்து செய்யப்பட வேண்டும்.

நாளைக்கே ஒரு நோயாளி  முஸ்லிம் என்பதால் நல்ல கண்ணை பொட்டையாக்கி அனுப்பவும் கூடும்.

இவர் மேற்கில் இருந்து இப்படி செய்திருந்தாலும் இவரின் வேலை போயிருக்கும். அதே போல் inciting hatred என 12 மாசம் உள்ளே போட்டால் வெளியே வந்ததும் நாடும் கடத்தப்படுவார்.

அண்மையில் ஹமாஸ் செய்த அட்டூளியங்களை நியாப்படுத்திய பல முண்ணனி அமெரிக்க பல்கலைகழக மாணவர்கள் தமது internship offers ஐ தொலைத்து விட்டு நிற்கிறார்கள்.

1 hour ago, குமாரசாமி said:

இதே போல் ஜேர்மனியில் சகல சௌபாக்கியங்களுடனும் சுக போகங்களுடன் வாழ்ந்து கொண்டு ரஷ்யாவிற்கு சார்பாகவும் பலஸ்தீனத்திற்கு சார்பாகவும் கருத்துக்கள் கிறுக்கும் சீவன்களையும் நாடு கடத்த வேண்டும்..:cool:

அண்ணை, மைண்ட்வாய்ஸ் எண்டு நினைச்சு சத்தமாக கதைச்சு போட்டியள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

எதிரி ஆயினும் வைத்தியர் என்றால் மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்பதே மருத்துவ தொழில் தர்மம்.

வைத்தியசாலை நிர்வாகம் செய்தது சரி தானே.

அனால், ஹமாஸ் இன் இஸ்ரேல் இராணுவம் மீதான தாக்குதலை கண்டிக்க முடியாது - இஸ்ரேல் இராணுவம், இஸ்ரேல் அரசின்   நேரடி அலகு பலதஹீனத்தை ஆக்கிரமிப்பு, வதை (இஸ்ரேல் இதை கொள்கையாக கொண்டுள்ளது), மற்றும் பலஸ்தீன நிலக்கொள்ளை கொள்கையில்.

அனால் ,மேற்கிற்கு அதுவும் பயங்கரவாதம்.  
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:
3 hours ago, குமாரசாமி said:

இதே போல் ஜேர்மனியில் சகல சௌபாக்கியங்களுடனும் சுக போகங்களுடன் வாழ்ந்து கொண்டு ரஷ்யாவிற்கு சார்பாகவும் பலஸ்தீனத்திற்கு சார்பாகவும் கருத்துக்கள் கிறுக்கும் சீவன்களையும் நாடு கடத்த வேண்டும்..:cool:

அண்ணை, மைண்ட்வாய்ஸ் எண்டு நினைச்சு சத்தமாக கதைச்சு போட்டியள்🤣.

ZIMG-4929.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kavi arunasalam said:

ZIMG-4929.jpg

நாக்கு சிலிப்பு…ஜாப் கிளிப்பு🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, colomban said:

இதென்ன கதை, இதே முஸ்லீம்கள் கிறிஸ்துவ நாடுகளில் பிழக்க வந்து எல்லா அனியாமும் பதிவிடுவார்கள் இவர்களை இப்படியா இந்த அரசுக்கள் /தொழில் தருனர்கள் வேலை விட்டு நீக்குகின்றனர்? 

இதுதான் மேட்கு நாடுகளினதும், அரபு நாடுகளினதும் ஜனநாயகம். அந்த நபரை உயிருடன் வைத்ததே பெரிய காரியம்.

மேட்கு நாடுகளின் மனித உரிமை என்பது நிச்சயமாக அவர்களுக்கு எதிராகவே ஒரு நாளைக்கு திரும்பும். இப்போதே அது ஆரம்பமாகி இருக்கிறது. இனி வரும் காலங்களில் அது பலமாக நேரும்போது இவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகும்.

பிரான்ஸ் தேசத்தில் நடந்ததை பார்த்தாவது மேட்கு நாடுகள் பாடம் படிக்கவில்லை என்றால் பெரிய விலையை கொடுப்பார்கள். மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்தான் , அதட்காக ஹமாஸ் போன்ற  மனித மிருகங்களுக்கு சுதந்திரம் கொடுக்க கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/10/2023 at 10:25, குமாரசாமி said:

இதே போல் ஜேர்மனியில் சகல சௌபாக்கியங்களுடனும் சுக போகங்களுடன் வாழ்ந்து கொண்டு ரஷ்யாவிற்கு சார்பாகவும் பலஸ்தீனத்திற்கு சார்பாகவும் கருத்துக்கள் கிறுக்கும் சீவன்களையும் நாடு கடத்த வேண்டும்..:cool:

அருமையான கருத்துகள்   நான் மேற் சொன்னவற்றுக்கு சார்பாக எந்தவொரு சிறு கருத்தையும் பதிவுகள் செய்யவில்லை  ..தப்பிவிட்டேன். 🙏

  • கருத்துக்கள உறவுகள்

இலினோய் மாகாணாத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருந்தவர் யூத எதிர்ப்பு கருத்தால் பதவி நீக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

அதட்காக ஹமாஸ் போன்ற  மனித மிருகங்களுக்கு சுதந்திரம் கொடுக்க கூடாது. 

ஆமாம் ரொம்ப சரி  ஆனால்  இஸ்ரேல் கொடுத்துதிருக்குறதே  ???   

1...500 கிலோமீட்டர் நீளத்துக்கு   சுரங்கம்....நிலக்கீழ்வதிவிடம்.  அமைக்க முடித்திருக்கிறது. இது சுதந்திரமில்லையா ?? 

2..காத்தார். துருக்கி  எகிப்து....சவுதிஅரேபியா  ...போன்ற நாடுகள் உதவி செய்ய அனுமதி அளிக்கிறது..சுதந்திரமில்லையா??

3. .இஸ்ரேலை  ஒரு நாடாக அங்கீகரிக்காத ஹமாஸ். இந்த பிரச்சனை தீராதற்க்கு  முதலாவது முட்டுகட்டையும் காரணமும் ஆகும் 

4 ..ஹமாஸ் நோக்கம்  இஸ்ரேல் அழிக்க வேண்டும்.இஸ்ரேலியார். அடித்து துரத்த வேண்டும் என்பதே 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kandiah57 said:

நீங்கள் கூறியது சரிதான். பயங்கரவாத ஹமாஸுக்கு மேட்கு கரையையும் கொடுத்திருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்குமென்று நினைத்து பார்க்கவும் முடியாது. உலக நாடுகளின் வடபுறுத்தலில்தான் காசா பிராந்தியம் கொடுக்கப்பட்ட்து. அதனை அவர்கள் சுதந்திரம் என்று பயங்கரவாத குகையாக மாற்றி விடடார்கள்.

நல்ல அனுபவம். இனி பாலஸ்தீனர்களுக்கு எதாவது சுயாட்சி கொடுக்கப்படுமாக இருந்தால் நிச்சயமாக பாதுகாப்பு, நிதி, வெளியுறவு  போன்றவை அவர்களுக்கு இருக்க மாடடாது. சில வேளைகளில் ஒன்றுமே கிடைக்காமலும் போகலாம்.

நிச்சயமாக இனிமேல் மேட்குலக நாடுகளின் மனித உரிமை அங்கு எடுபடாது. மேட்குலக நாடுகள் முறையான பாடம் படிக்கும் வரைக்கும் மனித உரிமையை விட்டு கொடுக்க மாடடார்கள். ஆனால் விரைவில் அந்த பாடத்தை முறையாக படிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Cruso said:

உங்கள் கருத்துடன் பூரணமாக உடன்படமுடியவில்லை. காரணம் ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாகிய நாம் பலசாலி என்பதற்காக ஒரு பக்கத்தை நியாயப்படுத்தவும் தடியுடன் பலமற்று இருப்பதால் அவனை அழிக்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுப்பதும் நன்றன்று 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

காசாவிட்கு பூரண சுதந்திரம் கொடுத்ததின் விளைவைத்தான் இப்போது இஸ்ரேல் அனுபவிக்கிறது. அப்படி இருக்கும்போது எப்படி  ......................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Cruso said:

காசாவிட்கு பூரண சுதந்திரம் கொடுத்ததின் விளைவைத்தான் இப்போது இஸ்ரேல் அனுபவிக்கிறது. அப்படி இருக்கும்போது எப்படி  ......................

24 minutes ago, Cruso said:

நீங்கள் கூறியது சரிதான். 

நல்ல அனுபவம். இனி பாலஸ்தீனர்களுக்கு எதாவது சுயாட்சி கொடுக்கப்படுமாக இருந்தால் நிச்சயமாக பாதுகாப்பு, நிதி, வெளியுறவு போன்றவை அவர்களுக்கு இருக்க மாடடாது. சில வேளைகளில் ஒன்றுமே கிடைக்காமலும் போகலாம்.

இதை ஒத்துக் கொண்டால் தமிழருக்கு உரிமை கொடுத்தால் தமிழகத்துடன் சேர்ந்து தம்மை சிறுபான்மை ஆக்கி கடலுக்குள் தள்ளி விடுவார்கள் என்ற சிங்களவரின் பயம் சரியானதாகி விடும். 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

உங்கள் கருத்துடன் பூரணமாக உடன்படமுடியவில்லை. காரணம் ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாகிய நாம் பலசாலி என்பதற்காக ஒரு பக்கத்தை நியாயப்படுத்தவும் தடியுடன் பலமற்று இருப்பதால் அவனை அழிக்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுப்பதும் நன்றன்று 

1...1200 இஸ்ரேலியரை  ஒரேநாளில் கொன்ற   

2 ....500 கிலோமீட்டர்  நிலகீழ். வதிவிடம். அமைத்த  

3...பறந்து வத்து. இஸ்ரேலில் குதித்து  தாக்கல் நடத்திய 

ஹமாஸ்.  பலமற்றவர்கள். என்பது மிகப்பெரும் நகைச்சுவை 🤣🤣

இஸ்ரேல் திருப்பி தாக்காது விடில்.  இன்றுவரை  எத்தனை ஆயிரம்  இஸ்ரேலியர் ஹமாஸ்சால். சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார்கள் ??? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அண்ணா நீங்கள் இஸ்ரேலை அவர்களது நாட்டுடன் பார்க்கின்றீர்கள். நான் உலகத்தையே அவர்கள் தான் ஆள்கிறார்கள் என்ற ரீதியில் பார்க்கிறேன் 

அவர்களது இந்த பலம் எனக்கு பிடித்த ஒன்று. அதை இங்கேயே எழுதி இருந்தேன் 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/10/2023 at 09:06, colomban said:

இதென்ன கதை, இதே முஸ்லீம்கள் கிறிஸ்துவ நாடுகளில் பிழக்க வந்து எல்லா அனியாமும் பதிவிடுவார்கள் இவர்களை இப்படியா இந்த அரசுக்கள் /தொழில் தருனர்கள் வேலை விட்டு நீக்குகின்றனர்? 

நன்றாக சொன்னீர்கள்.  
ஹமாஸின் பயங்கரவாதம் மற்றும் பாலஸ்தீனிய ஆதரவு தெரிவித்து மேற்குலநாடுகளில் குடியேறிய முஸ்லிம் மதத்தவர்கள் நடத்திவருகின்ற ஆர்ப்பாட்டங்கள் தெருக்களில் அதிகரித்து வரும் வன்முறைகள் கனடா தொடங்கி அவுஸ்ரேலியா வரை உள்ள காபீர்கள் எல்லோருக்குமான  மோசமான பயமுறுத்தல் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

இதை ஒத்துக் கொண்டால் தமிழருக்கு உரிமை கொடுத்தால் தமிழகத்துடன் சேர்ந்து தம்மை சிறுபான்மை ஆக்கி கடலுக்குள் தள்ளி விடுவார்கள் என்ற சிங்களவரின் பயம் சரியானதாகி விடும். 

இங்கு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு சுயாட்சியே தவிர தனி நாடு இல்லை. பாதுகாப்பது, வெளிவிவகார, நிதி போன்ற முக்கியமான எல்லாமே மத்திய அரசிடம்தான் உள்ளது. அப்படி இல்லாவிட்ட்தால் இந்தியா என்ற தேசம் இருக்க முடியாது. எனவே தமிழ் நாடு அப்படி ஒரு உதவியை ஈழ தமிழருக்கு செய்ய முடியாது. இப்போதும்கூட ஈழ தமிழர்கள் வெளி விவகாரம், பாதுகாப்பு , நிதி போன்றவற்றை கேட்கவில்லை. பொல்லுடன் போலீசையும்   , நிலத்தையும்தான்  கேட்க்கிறார்கள். நிதியும் கூட மத்திய அரசின் ஒழுகுபடுதலுடன் கொடுக்கப்படலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.