Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அல்ஸிபா மருத்துவமனையின் கீழ் ஹமாசின் கட்டளைப்பீடம் - அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image
BBM__656x60__Virakesari.png

காசா  மருத்துவமனையின் அடியில் ஹமாசின் கட்டளைப்பீடம் உள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன என அமெரிக்க தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி இதனை தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையின் அடியில் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்த ஹமாஸ் அங்கிருந்தே இஸ்ரேலின் மீது தாக்குதல்களை திட்டமிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் மருத்துவமனையின் கீழ் உள்ள சுரங்கங்களில் இருந்து செயற்படுகின்றது என இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக  அமெரிக்கா தகவல்களை வெளியிட்டுள்ளமை இதுவே முதல்தடவை.

எனினும் ஹமாஸ் இதனை நிராகரித்துள்ளது.

அமெரிக்காவிடம் பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட புலனாய்வு தகவல்கள் உள்ளன அவை இதனை உறுதி செய்கின்றன என குறிப்பிட்டுள்ள கிர்பி ஹமாசும் இஸ்லாமிக் ஜிகாத்தும் மருத்துவமனைக்கு கீழே உள்ள சுரங்கப்பாதைகளில் ஆயுதங்களையும் பணயக்கைதிகளையும் மறைத்துவைத்துள்ளன என தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் உறுப்பினர்கள் மக்களுடன் கலந்துள்ளதால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சவாலானது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/169325

  • கருத்துக்கள உறவுகள்

See what CNN reporter saw inside hospital basement in Gaza

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே போர்க்கைதிகளோ, ஹமாஸ் வீரர்களோ யாரும் இருக்கவில்லையாம். சிறிலங்கா ஆமி செய்தமாதிரி 4,5 துப்பாக்கி, மடிக்கணணிகள் மட்டும் கைப்பற்றப்பட்டதாம்.🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளுக்கு எப்போதுமே மக்களின் வாழ்விடம்தான் பாதுகாப்பு. எனவேதான் வைத்தியசாலைகள், பாடசாலைகள் , அகதிமுகாம்கள் போன்றவற்றை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மக்களைப்பற்ற அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. வெட்டுவது, கொல்லுவது, கட்பளிப்பது எல்லாம் அவர்களுக்கு அவள் சாப்பிடுவதுபோல். அவர்களை அளிக்கும்வரைக்கும் இஸ்ரேல் ராணுவம் ஓயாது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Cruso said:

ரொம்ப உணர்ச்சிவசப்படுகிறீர்கள் போல இருக்கிறது, தமிழே ஓழுங்காக வருதில்லை!

நீங்கள் இங்கே கொண்டுவந்து கொட்டும் குப்பைகள் எமது போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகிறது என்பதை நீங்கள் மட்டுமல்ல இங்கு பலரும் மறந்து உறை நிலையில் இருக்கிறார்களோ என்றும் எண்ணத்தோன்றுகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2023 at 01:24, Eppothum Thamizhan said:

அங்கே போர்க்கைதிகளோ, ஹமாஸ் வீரர்களோ யாரும் இருக்கவில்லையாம். சிறிலங்கா ஆமி செய்தமாதிரி 4,5 துப்பாக்கி, மடிக்கணணிகள் மட்டும் கைப்பற்றப்பட்டதாம்.🤣🤣

குடும்பியை மறைக்க வெளிக்கிட்டு இஸ்ரேல் நாறி விட்டது. நேரகையாக 7 நிமிட காணொளியை  காட்டுவதாக கூறி ஒரு மூடியை பையை இராணுவ அதிகாரி போய் திறந்து காட்டுகிறாராம். அதில் ஆயுதம் உள்ளதாம். யாராவது  மூடிய  பையை அதில் என்ன உள்ளது என தெரியாமல் போய் திறப்பார்களா?
இவர் போய் துணிவாக திறந்தது தான் வைத்த பையை என உலகம் கை கொட்டி  சிரித்தது.
பின்னர் அக்காணொளியை எடுத்து விட்டார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

F-_e0I-XkAATR58?format=jpg&name=small

ஒரு காலத்தில் சிங்கள இராணுவம் எப்படி   நடந்ததோ அதே போல் இஸ்ரேலிய இராணுவமும்......

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Cruso said:

பயங்கரவாதிகளுக்கு எப்போதுமே மக்களின் வாழ்விடம்தான் பாதுகாப்பு. எனவேதான் வைத்தியசாலைகள், பாடசாலைகள் , அகதிமுகாம்கள் போன்றவற்றை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மக்களைப்பற்ற அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. வெட்டுவது, கொல்லுவது, கட்பளிப்பது எல்லாம் அவர்களுக்கு அவள் சாப்பிடுவதுபோல். அவர்களை அளிக்கும்வரைக்கும் இஸ்ரேல் ராணுவம் ஓயாது. 

நீங்கள் சி என் என் க்கு கீழ் படுத்திருப்பதாக தெரிகிறது.🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Eppothum Thamizhan said:

ரொம்ப உணர்ச்சிவசப்படுகிறீர்கள் போல இருக்கிறது, தமிழே ஓழுங்காக வருதில்லை!

நீங்கள் இங்கே கொண்டுவந்து கொட்டும் குப்பைகள் எமது போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகிறது என்பதை நீங்கள் மட்டுமல்ல இங்கு பலரும் மறந்து உறை நிலையில் இருக்கிறார்களோ என்றும் எண்ணத்தோன்றுகிறது!

நான் உணர்ச்சிவசப்படுவதில்லை. சில வேளைகளில் எனது கணனி உணர்ச்சிவசப்படுகின்றது.

எந்த போராட்டத்தை சொல்லுகிறீர்கள். இதில் கொச்சைப்படுத்துவதட்கு ஒன்றும் இல்லையே.

முடியுமென்றால் நீங்கள் சொல்லும் உறை நிலையில் உள்ளவர்களை தட்டி எழுப்பி பாருங்கள். 

11 hours ago, nunavilan said:

நீங்கள் சி என் என் க்கு கீழ் படுத்திருப்பதாக தெரிகிறது.🤣

எதட்கு கீழ் படுத்திருந்தாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 😜

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Cruso said:

எதட்கு கீழ் படுத்திருந்தாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 😜

கவனம். சி என் என் இன் அவியலில் நீங்கள் அவிந்து போவீர்கள்.🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

அல்ஸிபா மருத்துவமனை ஹமாசின் தலைமையகமா? இதுவரை இஸ்ரேல் உறுதியான ஆதாரங்கள் எதனையும் முன்வைக்கவில்லை – கார்டியன்

Published By: RAJEEBAN   18 NOV, 2023 | 12:27 PM

image

அல்ஸிபா  மருத்துவமனை ஹமாசின் தலைமையகம் என தான் தெரிவித்துவந்துள்ளதை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்களை இதுவரை இஸ்ரேல் முன்வைக்கவில்லை என கார்டியன் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையை கைப்பற்றுவதற்கு முன்னர் அந்த மருத்துவமனை ஹமாசின் தலைப்பீடம் என சித்தரிப்பதற்கு இஸ்ரேலிய படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள கார்டியன் அங்கிருந்தே தாக்குதல்கள் திட்டமிடப்படுகின்றன என இஸ்ரேல் தெரிவித்துவந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.

alshifa_arms1.jpeg

எனினும் இதுவரை இஸ்ரேல் அதற்கான போதிய ஆதாரங்களை முன்வைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள கார்டியன் இதுவரை மருத்துவமனையில் கைப்பற்றியதாக சிறிய ரக ஆயுதங்கள் சிலவற்றையே காண்பித்துள்ளது எனவும் கார்டியன் தெரிவித்துள்ளது.

அந்த ஆயுதங்கள் அங்கு ஆயுததாரிகளின் பிரசன்னம் இருந்திருக்கலாம் என்பதை தெரிவித்துள்ளன ஆனால் இஸ்ரேல் தெரிவித்தது போல அல்ஸிபா மருத்துவமனை ஒரு கட்டளைப்பீடமாக அல்லது தலைமையகமாக பயன்படுத்தப்பட்டது என்பதை நிரூபிப்பதற்கு இந்த ஆதாரங்கள் போதுமானவை இல்லை எனவும் குறிப்பிட்டு;ளது.

இஸ்ரேலிய படையினர் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் கூட சந்தேகங்களை எழுப்புவதாக காணப்படுகின்றன – மீட்கப்பட்ட துப்பாக்கியை இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவர் காண்பிக்கும் வீடியோவை இஸ்ரேலிய படையினர் வெளியிட்டுள்ளனர்,இந்த வீடியோ அந்த பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு முன்னர் படமாக்கப்பட்டுள்ளது என கார்டியன் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் காண்பிக்கப்பட்ட வீடியோவில் பல துப்பாக்கிகள் காணப்படுகின்றன - இஸ்ரேலிய படையினர் அந்த வீடியோ எடிட் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர் ஆனால் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது என கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/169613

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nunavilan said:

கவனம். சி என் என் இன் அவியலில் நீங்கள் அவிந்து போவீர்கள்.🤣🤣

அதுதான் நடக்காது. நான் Fox நியூஸ் பார்ப்பனே ஒழிய இந்த CNN , BBC எல்லாம் பார்ப்பதில்லை. இவர்கள் எல்லாம் உண்மையை சொல்லவிடடால் லங்கா புவத் பார்ப்பேன். 

  • கருத்துக்கள உறவுகள்

அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கீழே ஹமாஸ் தலைமை கட்டளை மையமா? வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

இஸ்ரேல் வெளியிட்டுள்ள புதிய சிசிடிவி ஆதாரம் : அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்ட பணயக்கைதிகள்

பட மூலாதாரம்,IDF

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நிக் பீக்
  • பதவி, பிபிசி செய்தியாளர் ஜெருசலேமில் இருந்து
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு காஸாவின் பெரிய மருத்துவமனைக்குள் பணயக்கைதிகளை அவர்கள் அழைத்து செல்வது போன்ற சிசிடிவி வீடியோவை வெளியிட்டுள்ளது இஸ்ரேல் ராணுவம்.

அதில் ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டதாக கூறியுள்ளார் ராணுவ செய்தி தொடர்பாளர்.

சிறிய காயங்களுடன் அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்ட 19 வயதான சிபிஎல் நோவா மார்சியானோ கொல்லப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அந்த மருத்துவமனைக்கு கீழ் ஹமாஸின் தலைமை கட்டளை மைய சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், ஹமாஸ் அதை மறுத்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட வீடியோவை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இஸ்ரேல் வெளியிட்டுள்ள புதிய சிசிடிவி ஆதாரம் : அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்ட பணயக்கைதிகள்

பட மூலாதாரம்,REUTERS

தங்களது கண்டுபிடிப்புகளின்படி, ஷிஃபாவுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு அறைக்கு நோவா கடத்தி செல்லப்பட்டதாக இன்று காலை அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளோம் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி.

ஐடிஃஎப் வான்வழி தாக்குதலின் போது, நோவாவை பிடித்து வைத்திருந்த ஹமாஸ் பயங்கரவாதி கொல்லப்பட்டார். மேலும் அந்த தாக்குதலில் நோவாவுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. ஆனால், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. பின்னர் தான் அவர் மற்றொரு ஹமாஸ் பயங்கரவாதியால் கொல்லப்பட்ட அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் கொண்டு செல்லப்பட்டார்.

அக்டோபர் 9ம் தேதி இஸ்ரேல் நடத்தியதாக கூறிய வான்வழி தாக்குதலில் தான் நோவா கொல்லப்பட்டதாக முன்பு ஹமாஸ் கூறியிருந்தது.

பின்னர் ஹமாஸ் இஸ்ரேல் எதிர்பாராத சமயத்தில் தாக்குதல் நடத்தி 1,200 இஸ்ரேலியர்களை கொன்ற மற்றும் 240 பணயக்கைதிகளை பிடித்து வந்த நாளான அக்டோபர் 7 காலையில் இருந்து சிசிடிவி வீடியோக்களை வெளியிட்டார் ரியர் அட்மிரல் ஹகாரி.

இஸ்ரேல் வெளியிட்டுள்ள புதிய சிசிடிவி ஆதாரம் : அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்ட பணயக்கைதிகள்

அந்த வீடியோவில் காஸாவின் பெரிய மற்றும் நவீன மருத்துவமனைக்குள் இரண்டு பணயக்கைதிகளை அழைத்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

அக்டோபர் 7 தேதியிட்ட சிசிடிவி வீடியோவில் ஆயுதமேந்திய நபர்களை பார்க்க முடிந்தது. மேலும் அங்கு இருந்த பணயக்கைதி ஒருவர் படுக்கையில் இருப்பது போலவும், மற்றொருவர் மேற்கூறிய நபர்களிடம் தனது எதிர்ப்பை காட்டியதும் பதிவாகியுள்ளது.

காஸா பகுதியின் வடக்கு பகுதியில் உள்ள பெரிய மருத்துவ வளாகத்தின் அடியில்தான் ஹமாஸின் முக்கிய கட்டளை மையம் இயங்குகிறது என்ற இஸ்ரேலின் தகவலை நிரூபிக்க வேண்டிய அழுத்தம் அதற்கு இருந்தது.

இஸ்ரேலால் வெளியிடப்பட்டுள்ள வீடியோவுக்கு பதிலளித்துள்ள, காஸாவில் உள்ள ஹமாஸ் சுகாதார அமைச்சகம் அந்த வீடியோக்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ளது.

காஸாவில் மருத்துவ சேவைகள் முழுமையாக நிலைகுலைந்து போனதற்கு இஸ்ரேல்தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

இஸ்ரேல் வெளியிட்டுள்ள புதிய சிசிடிவி ஆதாரம் : அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்ட பணயக்கைதிகள்

முன்னதாக நிலத்திற்கு அடியில் 10(33அடி) மீட்டரில் மூடப்பட்ட கதவு வரை 55 மீ செல்லக் கூடிய சுரங்கம் ஒன்றின் வீடியோவை வெளியிட்டிருந்தது ஐடிஃஎப்.

இது காஸாவில் உள்ள பல்வேறு மருத்துவமனை கட்டிடங்கள் ஹமாஸ் இயக்கத்தின் பயங்கரவாத தளங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெளிவாக நிரூபிக்கும் ஒரு ஆதாரம் என்றும் ஐடிஃஎப் கூறியுள்ளது.

ஆனால், ஏற்கனவே இஸ்ரேல் வெளியிட்ட அல்-ஷிஃபா மருத்துவமனையின் ஹமாஸ் இயங்குதளம் இப்படித்தான் இருக்கும் என்று கணினியால் உருவாக்கப்பட்ட பரந்த மற்றும் சிக்கலான அமைப்பு கொண்ட வீடியோவை ஒத்தது போல் இல்லாததால் புதிய வீடியோ இன்னும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஹமாஸ் இயக்கம் காஸாவில் அல் - ஷிஃபா உள்ளிட்ட மருத்துவமனைகளை தங்களது கட்டளை மையங்களாகவும், ஆயுத சேமிப்பு கிடங்குகளாகவும் பயன்படுத்தியதாக உளவுத்துறை தகவல் உள்ளதாக அமெரிக்காவும் கூறியுள்ளது.

அல் - ஷிஃபா வளாகத்தில் ஹமாஸின் முக்கிய தலைமையகம் உள்ளது என்ற தங்களது கூற்றை நிரூபிக்க இஸ்ரேல் இந்த அமெரிக்க உளவுத்தகவலையே மேற்கோள் காட்டுகிறது. ஆனால், அமெரிக்க அறிக்கையில் கூட ‘node” என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளதால் இது சிறிய அளவிலான செயல்பாட்டை குறிக்கலாம்.

இஸ்ரேல் நம்பகமான குற்றச்சாட்டுகளை அடுக்குவதாக நம்புகிறது. மேலும் ஆதாரங்கள் கிடைக்கும்போது அதை அம்பலப்படுத்த ஆர்வமாக இருக்கிறது.

இஸ்ரேலின் நட்பு நாடுகள் ஹமாஸை அழித்தொழிப்பதற்காக அதன் ராணுவ எதிர் தாக்குதலை ஆதரிக்கும் போதிலும், ஏராளமான மக்கள் மீதும் இதில் தாக்குதல் நடத்தப்படுவதில் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் வெளியிட்டுள்ள புதிய சிசிடிவி ஆதாரம் : அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்ட பணயக்கைதிகள்

ஹமாஸ் சுகாதார அமைச்சகம் கூறியல்ல தகவலின்படி தாக்குதல் தொடங்கியதிலிருந்து 12,300 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2000த்திற்கும் அதிகமான மக்கள் தகர்க்கப்பட்ட கட்டட இடிபாடுகளின் கீழ் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இஸ்ரேலிய அரசின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பணயக்கைதிகளின் குடும்பங்கள் தரும் அழுத்தத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தங்களது குடும்பத்தினரை விடுவிக்க அவர் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள் அவர்கள்.

கடந்த சனிக்கிழமை பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறு இஸ்ரேலிய அரசை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டெல் அவிவ் முதல் ஜெருசலேம் வரை பேரணியாக சென்று நெதன்யாகுவின் இல்லத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் பிரதமர் தனது இலக்கில் தெளிவாக இருக்கிறார்.

தனது முதல் இலக்கு ஹமாஸை அழிப்பது, இரண்டாவது பணயக்கைதிகளை மீட்பது மற்றும் மூன்றாவது காஸாவில் இருந்து வரும் அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டுவது என்று கூறியுள்ளார் அவர்.

அல்-ஷிஃபா மருத்துவமனை

பட மூலாதாரம்,IDF

படக்குறிப்பு,

அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதை தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் கட்டளை அமைப்பு

அல்-ஷிஃபா மருத்துவமனை
படக்குறிப்பு,

மருத்துவமனைக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

நேற்று இரவு, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் 10 மீ ஆழத்தில் 55 மீ நீளமுள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் சுரங்கப்பாதை இருப்பதாகக் கூறும் காட்சிகளை வெளியிட்டது.

இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள வீடியோவில், அல்-ஷிஃபா வளாகத்தில் உள்ள இடிபாடுகளுக்கு மத்தியில், ஆழமான படிக்கட்டுக்கான நுழைவாயில் தரை மட்டத்தில் காட்டப்பட்டுள்ளதை காணமுடிகிறது..

"இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் கட்டளை மையத்திற்குள் நுழைவதை தடுக்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு சொந்தமான இடங்களுக்குள் நுழைவதை தடுக்கவும், அவர்கள் வீடியோவில் காணப்படும் கதவுகளைப் பயன்படுத்துகிறார்கள்,” என இஸ்ரேல் பாதுகாப்பு படை தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த சுரங்கப்பாதை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

அல்-ஷிஃபாவின் கீழ் ஹமாஸ் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் இருப்பதாக இஸ்ரேலியப் படைகள் பல வாரங்களாக கூறி வந்தன. ஆனால், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் அதிகாரிகளும் அதனை தொடர்ந்து மறுத்து வந்தனர்.

https://www.bbc.com/tamil/articles/c90x94lw9d7o

  • கருத்துக்கள உறவுகள்

காசா மருத்துவமனையில் 55 மீட்டர் நீள சுரங்கபாதை- இஸ்ரேல் படையினர் கண்டுபிடித்தனர்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டை இன்று 45ஆவது நாளை எட்டி உள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது முதலில் வான்வெளி வழியாக குண்டுகளை வீசிய இஸ்ரேல் இராணுவத்தினர் தற்போது தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.

காசாவில் மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ள அல்-ஷிபா மருத்துவமனை சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இந்த மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு கட்டிடங்கள் உள்ளது.. இந்த மருத்துவமனையை ஹமாஸ் அமைப்பினர் தங்களது போர்களமாக பயன்படுத்தி வருவதாகவும், உள்ளே ஏராளமான சுரங்க பாதைகள் அமைத்து பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்து வருகிறது. ஆனால் இதனை ஹமாஸ் மறுத்து வருகிறது.

இதையடுத்து அல்-ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் இராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அங்கிருந்து பெரும்பாலான நோயாளிகள் மற்றும் பொது மக்கள் வெளியேறி விட்டனர். மருத்துவமனை முழுவதும் இஸ்ரேல் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இதில் மருத்துவமனைக்குள் மிகப்பெரிய அளவில் 10 மீட்டர் ஆழத்தில் 55மீட்டர் நீளத்துக்கு சுரங்கபாதைகள் இருப்பதை இஸ்ரேல் படையினர் கண்டுபிடித்தனர். இந்த சுரங்க பாதையை ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படு கிறது. இது தொடர்பாக வீடியோவினை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதே போல பல பதுங்குகுழிகளை கண்டுபிடித்து அழித்து விட்டதாகவும், ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. தொடர்ந்து மருத்துவமனை முழுவதும் சுரங்கபாதைகள், பதுங்கு குழிகள்,பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரேல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் மருத்துவமனையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்டகாரணங்களால் கடந்த 2 நாட்களில் புதிதாக பிறந்த 3 குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி இருக்கும் 240 பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை இஸ்ரேல் மறுத்து உள்ளது. இது தவறான தகவல் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவும் இதனை மறுத்து இருக்கிறது.

https://thinakkural.lk/article/281810

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

பயங்கரவாதிகள் பணத்தை  எல்லாம் எப்படி வீண் செலவு செய்திருக்கிறார்கள். மக்கள் நலனைவிட இவர்களது பயங்கரவாத வேலைகளுக்கே உலக நாடுகளின் பணம் எல்லாம் வீணடித்திருக்கிறார்கள். ஏறக்குறைய 600 km நீளம் என்பது நினைத்துப்பார்க்க முடியாது. பயணக்கைதிகளை மீட்டு, பயங்கரவாதிகளை அழிக்கும் வரைக்கும் இஸ்ரேல் இதை தொடர வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எவராவது நம்பி இருந்தால், மேற்கு . இஸ்ரேல்  நினைக்கிறது மற்றவர்களுக்கு தற்போதைய இராணுவ கட்டளை பீடம் ஒழுங்கு பற்றி ஒன்றும் தெரியாது என்று அளந்த கதை.

சரி அப்படி அனால், மேற்கு எவ்வாறு mobile warfare ஐ நடத்துகிறது? 

உண்மையில் இப்போது கட்டளை பீடம் என்று positional facility இராணுவ ஒழுங்கமைப்பில் இல்லை. 

ஹமாஸ் மேற்கின் இராணுவ  மெருகூட்டல் வரை (சிலவற்றில் தாண்டி) முன்னேறி இருபத்தி மேற்கால் சகிக்க முடியது உள்ளது   

இது யதார்த்தம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2023 at 13:08, குமாரசாமி said:

F-_e0I-XkAATR58?format=jpg&name=small

ஒரு காலத்தில் சிங்கள இராணுவம் எப்படி   நடந்ததோ அதே போல் இஸ்ரேலிய இராணுவமும்......

சிங்களத்துக்கு ஆலோசனை கொடுத்துக் கொம்பு சீவிவிட்டதே இஸ்ரேல்தானே. தமது உத்தியைத் தாமே தோற்கடித்துவிட்டார்கள்.  

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

உலகமே… இந்த ஆதாரம் போதுமா உங்களுக்கு? இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட வீடியோ

2-21.jpg

ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7ஆம் திகதி இதுவரை இல்லாத அளவில் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்தினர். இதில் சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டனர். 240 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதலை தொடங்கியது. ஏவுகணைகள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

மனிதாபிமான உதவிகள் செல்லாத வண்ணம் போரை தொடர்ந்து நடத்தியது. இதனால் வடக்கு காசாவில் உள்ள பொதுமக்கள் தெற்கு பகுதி நோக்கி ஓடத்தொடங்கினர்.

இஸ்ரேலின் பதிலடியில் காசா சீர்குலைந்துள்ளது. பெண்கள், குழந்தைகள்- சிறுவர்கள் மிகப்பெரிய அளவில் கொல்லப்பட்டனர். இதுவரை 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் உலக நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என வலியுறுத்தின. ஆனால், இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. மருத்துவமனைகள், மசூதிகள் என எந்த இடத்தையும் விட்டுவைக்கவில்லை.

மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், மருத்துவமனைகளை தங்களது செயற்பாட்டிற்கு பயன்படுத்தி வருவதாக ஹமாஸ் மீது இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டியது. ஆனால், மருத்துவ நிர்வாகம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இதை மறுத்து வந்தனர்.

ஆனால், இஸ்ரேல் இராணுவம் சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்து வீடியோ வெளியிட்டு வருகிறது. மருத்துவமனைகளுடன் தொடர்புடைய சுரங்கத்தில் இருந்து வெடிபொருட்கள், துப்பாக்கிகள், நெட்வொர்க் வசதிகளுக்கு கட்டமைப்புகள் அனைத்தும் பறிமுதல் செய்தது.

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபாவிலும் சுரங்கப்பாதை உள்ளது என குற்றம்சாட்டியது. இந்த நிலையில், டியர் உலகமே, இந்த ஆதாரம் போதுமா உங்களுக்கு? என்ற கருத்துடன் இஸ்ரேல் இராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே பிணைக்கைதிகளை உயிருடன் மீட்பது குறித்து இஸ்ரேல் இராணுவம் அக்கறை கொள்ளவில்லை என இஸ்ரேல் நாட்டிற்குள்ளேயே போராட்டம் வெடித்தது. இது இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதனால் பிணைக்கைதிகளை விடுவிக்க போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் தயாரானது. இதற்கு இஸ்ரேல் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 50 பேருக்கு மேல் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒருநாள் போர் நிறுத்தம் நீடிக்கப்படு் எனவும் இஸ்ரேல் அமைச்சரவை தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் 240 பிணைக்கைதிகளில் 50 பேரை விடுவிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல், தனது நாட்டில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் சிலரை வெளியிட வேண்டும். இதற்கான ஒப்பந்தம் இருதரப்பிலும் எப்போதும் வேண்டுமென்றாலும் கையெழுத்தாகலாம். இன்று பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அது காலதாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

https://thinakkural.lk/article/282142

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஊடகங்களிற்கு உண்மைகளை வெளியிட்ட காசா மருத்துவமனையின் இயக்குநர் கைது

Published By: RAJEEBAN     23 NOV, 2023 | 06:46 PM

image

காசாவின் அல்ஸிபா மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காசாவின் தென்பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த முகமட் அபு சல்மியா கைதுசெய்யப்பட்டுள்ளதை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது.

அல்ஷிபா மருத்துவமனை ஹமாசின் பிரதான தளமாக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மருத்துவரை இஸ்ரேலிய இராணுவம் விசாரணைக்குட்படுத்துகின்றது.

அவரது முகாமைத்துவத்தின் கீழ் மருத்துவமனையில் அதிகளவில் ஹமாசின் செயற்பாடுகள் காணப்பட்டன என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டு விமானக்குண்டுவீச்சினை மேற்கொண்டவேளை மருத்துவனையில் காணப்பட்ட நிலைமை குறித்து மருத்துவர் சர்வதேச ஊடகங்களிற்கு பரவலாக தகவல்களை வெளியிட்டிருந்தார்.

https://www.virakesari.lk/article/170098

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய எல்லோரும் கைது செய்யப்பட வேண்டும். அங்கு பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள், சுரங்கபாதைகள்  இல்லை என்று சான்று கொடுத்தவர்கள் இவர்கள்தான். உலக சுகாதார நிறுவனத்தவர்களும் இதட்கு பதில் கூற வேண்டும். பயங்கரவாதிகளைவிட இவர்கள்தான் பெரிய பயங்கரவாதிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2023 at 20:34, Cruso said:

பயங்கரவாதிகள் பணத்தை  எல்லாம் எப்படி வீண் செலவு செய்திருக்கிறார்கள். மக்கள் நலனைவிட இவர்களது பயங்கரவாத வேலைகளுக்கே உலக நாடுகளின் பணம் எல்லாம் வீணடித்திருக்கிறார்கள். ஏறக்குறைய 600 km நீளம் என்பது நினைத்துப்பார்க்க முடியாது. பயணக்கைதிகளை மீட்டு, பயங்கரவாதிகளை அழிக்கும் வரைக்கும் இஸ்ரேல் இதை தொடர வேண்டும்.  

Al-Ahli Arab Hospital

Al-Ahli Arab Hospital (Arabic: المستشفى الأهلي العربي, lit.'The Arab People's Hospital'[2]) is a hospital in Gaza City. Its headquarters are located in the Zeitoun neighborhood in the south of the city, and it is managed by the Episcopal Church in Jerusalem. Founded in 1882, it is one of the oldest hospitals in the city.[3][4] The hospital is the only cancer hospital in Gaza. [5]

Al-Ahli Arab Hospital
Anglican Diocese of Jerusalem
Map
 
Geography
Location Gaza City, Gaza Governorate, Gaza Strip, State of Palestine
Coordinates 31.5049°N 34.4615°E
Organisation
Funding Private
Type General
Services
Beds 80[1]
History
Opened 1882

History

The hospital has been in operation since 1882. It was established in what was then the Ottoman Empire as a medical mission of the Anglican Church's Church Missionary Society (CMS) following the Anglo-Egyptian War. In 1954, the hospital was purchased by the Foreign Mission Board of the Southern Baptist Convention, which renamed it the Gaza Baptist Hospital (Arabic: المستشفى المعمداني). In the early 1980s, it was returned to the CMS, which turned it over to the Anglican Diocese of Jerusalem. The diocese changed the name of the hospital to Ahli Arab Hospital.[3][6]

The hospital is the only Christian hospital in the Gaza Strip[7] and Gaza's only cancer hospital.[8] It normally handles around 300 surgeries and 600 radiological and a total of 3,000 outpatient visits per month.[9] It is supported by international charities such as Embrace the Middle East.[10]

https://en.m.wikipedia.org/wiki/Al-Ahli_Arab_Hospital

10 hours ago, ஏராளன் said:

சர்வதேச ஊடகங்களிற்கு உண்மைகளை வெளியிட்ட காசா மருத்துவமனையின் இயக்குநர் கைது

Published By: RAJEEBAN     23 NOV, 2023 | 06:46 PM

image

காசாவின் அல்ஸிபா மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காசாவின் தென்பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த முகமட் அபு சல்மியா கைதுசெய்யப்பட்டுள்ளதை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது.

அல்ஷிபா மருத்துவமனை ஹமாசின் பிரதான தளமாக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மருத்துவரை இஸ்ரேலிய இராணுவம் விசாரணைக்குட்படுத்துகின்றது.

அவரது முகாமைத்துவத்தின் கீழ் மருத்துவமனையில் அதிகளவில் ஹமாசின் செயற்பாடுகள் காணப்பட்டன என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டு விமானக்குண்டுவீச்சினை மேற்கொண்டவேளை மருத்துவனையில் காணப்பட்ட நிலைமை குறித்து மருத்துவர் சர்வதேச ஊடகங்களிற்கு பரவலாக தகவல்களை வெளியிட்டிருந்தார்.

https://www.virakesari.lk/article/170098

முள்ளிவாய்க்கால் முடிவில்  அங்கே பணி புரிந்த வைத்தியர்க்ளை இலங்கை இராணுவம் கைது செய்ததை 

இந்தச் சம்பவம் நினைவுபடுத்துகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

Al-Ahli Arab Hospital

Al-Ahli Arab Hospital (Arabic: المستشفى الأهلي العربي, lit.'The Arab People's Hospital'[2]) is a hospital in Gaza City. Its headquarters are located in the Zeitoun neighborhood in the south of the city, and it is managed by the Episcopal Church in Jerusalem. Founded in 1882, it is one of the oldest hospitals in the city.[3][4] The hospital is the only cancer hospital in Gaza. [5]

Al-Ahli Arab Hospital
Anglican Diocese of Jerusalem
Map
 
Geography
Location Gaza City, Gaza Governorate, Gaza Strip, State of Palestine
Coordinates 31.5049°N 34.4615°E
Organisation
Funding Private
Type General
Services
Beds 80[1]
History
Opened 1882

History

The hospital has been in operation since 1882. It was established in what was then the Ottoman Empire as a medical mission of the Anglican Church's Church Missionary Society (CMS) following the Anglo-Egyptian War. In 1954, the hospital was purchased by the Foreign Mission Board of the Southern Baptist Convention, which renamed it the Gaza Baptist Hospital (Arabic: المستشفى المعمداني). In the early 1980s, it was returned to the CMS, which turned it over to the Anglican Diocese of Jerusalem. The diocese changed the name of the hospital to Ahli Arab Hospital.[3][6]

The hospital is the only Christian hospital in the Gaza Strip[7] and Gaza's only cancer hospital.[8] It normally handles around 300 surgeries and 600 radiological and a total of 3,000 outpatient visits per month.[9] It is supported by international charities such as Embrace the Middle East.[10]

https://en.m.wikipedia.org/wiki/Al-Ahli_Arab_Hospital

முள்ளிவாய்க்கால் முடிவில்  அங்கே பணி புரிந்த வைத்தியர்க்ளை இலங்கை இராணுவம் கைது செய்ததை 

இந்தச் சம்பவம் நினைவுபடுத்துகிறது. 

ஆனால் அந்த வைத்திய சாலைகளுக்கு கீழே பதுங்கு குழிகள் இருக்கவில்லை என்று நினைக்கிறேன். இங்கு நிலைமை அப்படி இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Cruso said:

ஆனால் அந்த வைத்திய சாலைகளுக்கு கீழே பதுங்கு குழிகள் இருக்கவில்லை என்று நினைக்கிறேன். இங்கு நிலைமை அப்படி இல்லை. 

அந்த வைத்தியசாலையின் வரலாற்றை வாசியுங்கள் புரியும்.  

அந்த வைத்தியசாலையின் நிலக்கீழ் சத்திரசிகிச்சை அறைகளை யார், எப்போது நிர்மாணித்தது என்பது தெரிய வரும் . அப்போது அங்கே இருந்தது கட்டளைப்பீடமா அல்லது வைத்தியசாலையா என்பது புரியும். 

அப்போது உண்மையில் அது கட்டளைப்பீடமா என்பது தெரிய வரும். 

அதெல்லாம் சரிதான், பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் வெறித்தனமாக உள்ள நீங்கள், கொல்லப்பட்ட, கொல்லப்படும் குழந்தைகள் பொதுமக்கள் தொடர்பாக வாயே திறப்பதில்லையே அது ஏன்? 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

நீங்கள் இந்தளவு தூரம் ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிப்பதும் எனக்கும்  ஆச்சரியமாகத்தான் இருக்குது.

பொது மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று கூறுகிறீர்கள். அதனை நீங்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளிடம்தான் கேட்கவேண்டும். அவர்கள் அதனை விரும்புவதால் , உங்களுக்கு அவர்களிடம் இருந்து பதில் கிடைக்கலாம்.

இப்போதும் அவர்கள் யுத்த நிறுத்தத்துக்கு போராடியது மக்களை பாதுகாக்க அல்ல. தங்களை பாதுகாக்கவும் ஆயுதங்களை சேகரிக்கவும், தங்களது கடடமைப்பை மீள கட்டியெழுப்புவதட்குமே. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Cruso said:

நீங்கள் இந்தளவு தூரம் ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிப்பதும் எனக்கும்  ஆச்சரியமாகத்தான் இருக்குது.

பொது மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று கூறுகிறீர்கள். அதனை நீங்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளிடம்தான் கேட்கவேண்டும். அவர்கள் அதனை விரும்புவதால் , உங்களுக்கு அவர்களிடம் இருந்து பதில் கிடைக்கலாம்.

இப்போதும் அவர்கள் யுத்த நிறுத்தத்துக்கு போராடியது மக்களை பாதுகாக்க அல்ல. தங்களை பாதுகாக்கவும் ஆயுதங்களை சேகரிக்கவும், தங்களது கடடமைப்பை மீள கட்டியெழுப்புவதட்குமே. 

ஹமாஸ் ஐ ஆதரித்து எங்காவது கருத்து எழுதியதற்கு தங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? 

இருந்தால் ஆதாரம் காட்டவும். இல்லாவிட்டால் உங்கள் புழுகு மூட்டையை ஒரு பக்கம்’  மூட்டைகட்டி வைக்கவும். 

பைபிளில் இஸ்ரேல் தொடர்பாக  எழுதப்பட்டிருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக நாகரீகமும் மனிதத்தன்மையும்பில்லாமல் கொலைகளை ஆதரிக்க நான் ஒன்றும்  நாகரீகம் அடையாத காட்டுமிராண்டி இல்லை.  

😏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.