Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அருணாவுக்கு நாம் ப‌ல‌ர் சொல்ல‌ நினைப்ப‌தை உமாப‌தி அழ‌காய் சொல்லி இருக்கிறார்.............

 

 

  • Replies 300
  • Views 39k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

    விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ? வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ? மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே! அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    "தங்கை துவாரகா இந்தியாவின் உறுதுணையுடன்  களத்தில் நிற்பாள்"           -காசியானத்தன்   “இந்தியாவின் உறுதுணையுடன்”’ இந்த ஒற்றை சொல்லிலேயே காசி உண்மையை கக்கிவிட்டார்..  இந்தியாவும் புல

  • * Making of the "Thuvaraka"? உண்மையாக அவரின் மகளா ? அவர்கள் சொன்னது உண்மை தானா? நீங்கள் நம்புகிறீர்களா ? இவை தான் இன்று என்னிடம் பலரும் முன்வைத்த கேள்விகள். இதுவே, இன்று தாயகத்திலும், தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2023 at 11:13, பெருமாள் said:

கடைசியில் போலி துவராக இந்தியா இல்லையாம் அதைத்தான் இந்திய கே... சொல்லுது .

இவரும் சரி>>நேசக்கரம் சாந்தியும் சரி இந்திய உளவுத்துநறக்கு இதில் சம்பந்தமில்லாதது மாதிரி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.இந்த உரை இந்தியத்தமிழர் அல்லது அங்கு நீண்ட காலம் வாழந்த ஒருவரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அந்த உரையில் வரும் சில சொற்பதங்கள் காட்டிக் கொடுக்கின்றது.இவரகள் ஏன் இந்த விடயத்தில் இந்திய உளவுத்துறையின் பங்களிப்பை வெளியில் சொல்வதைத் தவிர்க்கின்றன.

15 hours ago, நியாயம் said:

 

இதுகள் பெரிய பொலிஸ் பிரச்சனையாக வருமே. அதுவும் சுவிஸ் பொலிஸ் பொல்லாதது என அறிந்தேன். அந்தந்த நாட்டில் உள்ளவர்கள் சட்டத்தை தம் கையில் எடுக்காமல் தத்தம் நாட்டு ஒழுங்குகளுக்கு அமைய செயற்படுவது எல்லோருக்கும் நல்லது. 

சுவிசில் பொலிசுக்குத்தான் பவர். கூட்டாட்சி முறை என்பதால் அந்த அந்த மாநிலங்களின் பல முக்கிய முடிவுகளை அவர்கள் எடுக்கலாம். அதுவும் இந்த அரசியல் புகலிடக்கோரிக்கையாளர்கள் விடயத்தில் அவர்களின் பவர் மிக மிக அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

இவரும் சரி>>நேசக்கரம் சாந்தியும் சரி இந்திய உளவுத்துநறக்கு இதில் சம்பந்தமில்லாதது மாதிரி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.இந்த உரை இந்தியத்தமிழர் அல்லது அங்கு நீண்ட காலம் வாழந்த ஒருவரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அந்த உரையில் வரும் சில சொற்பதங்கள் காட்டிக் கொடுக்கின்றது.இவரகள் ஏன் இந்த விடயத்தில் இந்திய உளவுத்துறையின் பங்களிப்பை வெளியில் சொல்வதைத் தவிர்க்கின்றன.

சுவிசில் பொலிசுக்குத்தான் பவர். கூட்டாட்சி முறை என்பதால் அந்த அந்த மாநிலங்களின் பல முக்கிய முடிவுகளை அவர்கள் எடுக்கலாம். அதுவும் இந்த அரசியல் புகலிடக்கோரிக்கையாளர்கள் விடயத்தில் அவர்களின் பவர் மிக மிக அதிகம்.

எல்லாம் ஆண்ட‌வ‌ருக்கு தான் வெளிச்ச‌ம் புல‌வ‌ர் அண்ணா..............அவ‌ரிட‌மே இதை விட்டு விடுவோம்...............நாம் த‌வ‌றுக‌ள் இழைக்க‌ வில்லை நேர்மையான‌ பாதையில் ப‌ய‌ணிக்கிறோம்...........இந்த‌ மேக்க‌ப் மாமின்ட‌ கூத்து சில‌ மாத‌ங்க‌ளில் காணாம‌ல் போய் விடும்............

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

தாங்கள் அண்மைய மாவீரர் நிகழ்வுகளை பார்க்கவில்லை போல் தெரிகின்றது. இருந்தாலும் அடிமையாக வாழ்வதில் தங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியென்றால் அதுவும் சந்தோசமே....🤣

ஏன் பார்க்க வேண்டுமென்று கேட்க்கிறேன்? நாங்கள் ஒன்றும் நாடடைவிட்டு தப்பி  ஓடி போகிறவர்கள் இல்லை. அடிமை யார் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் சொல்லுவது போல நாங்கள் அடிமைகளாகவே வாழ்ந்து விட்டு போகிறோம். நீங்கள் எஜமானர்களாக வாழ்ந்து விட்டு பொங்கல். ஆனால் எங்களை நீங்கள் தொந்தரவு செய்யாமலிருந்தாலே போதும். 
😜

Edited by Cruso

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தமிழ் மக்கள் இணைய வெளியில் தங்களுடைய கண்களைத் தாங்களே தோண்டுகிறார்கள்; தங்களுடைய கழுத்தைத் தாங்களே அறுக்கிறார்கள்; தங்களுடைய புனிதங்களின் மீது தாங்களே மலத்தைப் பூசுகிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

நிலாந்தனின் மீட்பர் இந்தியாதான்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, புலவர் said:

இருவருமே தமிழரசுக்கட்சியின் தலைமைக்குப் பொருத்தமற்றவர்கள். சுமத்திரனுக்கு ஆளுமை இருக்கிறது. ஆனால் இனநலன்சார்ந்த சிந்தனையோ ஏனையோரை அரவணைத்துச் செல்லும் பக்குவமோ அற்றவர். சிறிதரன் பாம்புக்கு வாலும் மீனுக்குத்தலையும் காட்டக்கூடியவர். அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவர். இருவரில் ஒருவர்தான் என்றால் சிறதரனே எனது தெரிவு. சுமத்திரன் தலைவராக வந்தால் கட்சி மேலும் பிளலவுபடும்.சுமத்திரன் சிறிதரன் என்று வரும் போது சிறிதரனே அனத்துக்கட்சிகளையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர்.

நிலாந்தனின் மீட்பர் இந்தியாதான்.

இல‌ங்கை அர‌சிய‌லை 2009ஓட‌ எட்டியும் பார்த்த‌து கிடையாது புல‌வ‌ர் அண்ணா.............எம்ம‌வ‌ர் இருக்கும் போது தான் வாசிப்பு அதிக‌ம் இப்போது அங்கு ந‌ட‌ப்ப‌தை அறிந்து கொள்ள‌ ஆர்வ‌ம் இல்லை............

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

 

 

 

அருமையான பேட்டி.. என்ன ஒரு நிதானம் தெளிவு.. நல்ல ஒரு உறவு.. he made me cry… இங்கு இப்பவும் வந்தது துவாரகதான் என்று எழுதுபவர்களால் எப்படி கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இன்றி ஒரு பிடி சோற்றைத்தன்னும் உண்ண முடிகிறது.. அந்த தலைவனும் அவன் குடும்பமும் ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்துட்டு போயிருக்கிறார்கள் .. 30 வருடத்துக்கும் மேலாக இந்த இனத்துக்கு ஓயாமல் உழைத்த அந்த குடும்பத்தை இனியாவது நிம்மதியாக உறங்க விடுங்கள்..🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அருமையான பேட்டி.. என்ன ஒரு நிதானம் தெளிவு.. நல்ல ஒரு உறவு.. he made me cry… இங்கு இப்பவும் வந்தது துவாரகதான் என்று எழுதுபவர்களால் எப்படி கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இன்றி ஒரு பிடி சோற்றைத்தன்னும் உண்ண முடிகிறது.. அந்த தலைவனும் அவன் குடும்பமும் ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்துட்டு போயிருக்கிறார்கள் .. 30 வருடத்துக்கும் மேலாக இந்த இனத்துக்கு ஓயாமல் உழைத்த அந்த குடும்பத்தை இனியாவது நிம்மதியாக உறங்க விடுங்கள்..🙏

2009க‌ளில் உண்டிய‌லுக்கு ஓங்கிய‌ கை ஓயாம‌ இருக்குமா..........இந்த‌ ச‌கோத‌ர‌னிட‌ம் இருக்கும் நேர்மை த‌ங்க‌ளை பெரிய‌ ஜ‌ம்ப‌வான் போல் காட்டி கொள்ளும் சில‌ருட‌ன்  இல்ல‌வே இல்லை.................அந்த‌ப் பெடிய‌னே சொல்லுது த‌ங்க‌ளை கூட‌ சொல்ல‌வைக்க‌ சொன்ன‌வை தாங்க‌ள் ம‌றுத்து விட்டோம் என்று..............இது தான் த‌லைவ‌ர் கூட‌ பிற‌ந்த‌ அண்ணாவின் நேர்மை

 

ஆனால் எம் போராட்ட‌த்துக்கு அருணாவுக்கும் ஒரு ச‌ம்ம‌ந்த‌மும் இல்லை...........க‌ண்ணால‌ பார்க்காத‌ த‌லைவ‌ரை பார்த்த‌து என்றும் கூட‌ பிற‌ந்த‌ ச‌கோத‌ரி ம‌ற்றும் துவார‌காவை பார்த்து விட்டு வ‌ந்து விட்டேன் என்று சொன்ன‌ அருணாவால் எப்ப‌டி மூன்று நேர‌ உண‌வை  நின்ம‌தியாய் சாப்பிட‌ முடியுது...............இத்த‌னை ஆயிர‌ம் மாவீர‌ செல்வ‌ங்க‌ளின் ஆன்மா அருணாவை ம‌ன்னிக்குமா ஓணாண்டி?..................

 

இந்த‌ ச‌கோத‌ர‌னின் தொட‌ர்வு உண‌க்கு வேணும் என்றால் நானே எடுத்து தாறேன்...........ந‌ம்மோட‌ ப‌ழ‌கின‌துக‌ளுக்கு துரோக‌ம் என்றால் என்ன‌ என்று தெரியாது.............அதுக‌ள் டென்மார்க் வ‌ந்த‌ கால‌ம் தொட்டு வேர்வை சிந்தி உழைச்சு சாப்பிட்ட‌வை.............த‌லைவ‌ர்ட்ட‌  நேர்மை அவ‌ரின் அண்ணா குடும்ப‌த்திலும் இருக்கு ஓணாண்டி..............

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இங்கு இப்பவும் வந்தது துவாரகதான்

27ம் திகதிக்கு பின் யாழில் அப்படி எழுதியோரின் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம்.

நெடுக்ஸ், கரு என்ன சொல்கிறார்கள் என்பது புரியவில்லையா? அல்லது புரியாதது போல் நடிக்கிறீர்களா?

பிகு

அவர்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

27ம் திகதிக்கு பின் யாழில் அப்படி எழுதியோரின் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம்.

நெடுக்ஸ், கரு என்ன சொல்கிறார்கள் என்பது புரியவில்லையா? அல்லது புரியாதது போல் நடிக்கிறீர்களா?

பிகு

அவர்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடில்லை.

ஒருவர் இருக்கிறார் என்று சொல்வது வேறு அவரை நான் சந்தித்தேன் என்று சொல்வது வேறு. எனவே கார்த்திகை 27 வரை தான் தவணை. அதன் பின்னர் தலை காட்ட முடியாத நிலை வரும் என்று நான் எழுதி இருந்தேன். அது தான் நடக்கிறது. 

2009 க்கு முன்னர் உண்டியல் குலுக்க பணித்தவர் தலைவர். எனவே தலைவரின் தொண்டர்களை தொடுபவர்களுக்கு குளிர் விட்டு போச்சு என்று மட்டுமே சொல்ல முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புலவர் said:

 

நிலாந்தனின் மீட்பர் இந்தியாதான்.

புலவரின் மீட்பரும் இந்தியர்தான்🤪

நிலாந்தன் சொல்லுவதை சரியாக புரிந்துகொண்டால், தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பது தொண்டுத் தேசியந்தான். முன்னுதாரணம் மிக்க செயற்பாட்டாளர்கள்; முன்னுதாரணம் மிக்க தொண்டர்கள். ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பொருத்தமான நிறுவனங்களை புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி மற்றும் துறைசார் அறிவுப் பங்களிப்புடன் கட்டியெழுப்ப வேண்டும். அதாவது தேசத்தை கட்டியெழுப்பக் கூடியவர்கள்தான் மீட்பர்கள். வெளியார் அல்ல. முக்கியமாக ஊடக அடியாள் சேரமானின் பொம்மை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

புலவரின் மீட்பரும் இந்தியர்தான்🤪

இந்தியா மீட்பரே கிடையாது. தமிழுழு விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் அமெரிக்க சார்பு நிலை எடுத்த சிறிலங்காவை தட்டி  லவக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது. அதனால் பேராளிகளுக்குப் பயற்சிகளை வழஙக பிரதமர் இந்திராகாந்தி முன்வந்தார்.அப்போது பனிப்போர்காலம். அணிசேரா நாடு என்று இந்தியா சொல்லிக்கொண்டாலும் ரஸ்யாவுடனான நெருக்கம் அதிகமாக இருந்தது. வெளியுறவுச்செயலராக தமிழரான பாரத்த சாரதியை நியமித்தார். பார்த்தசாரதி கடும் அழுத்தம் காரணத்தால் 87 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பொழுது பாரத்தசாரதியை நுpக்குமாறு ஜேஆர் விடப்பிடியாக நின்றார். அதனால் தமிழர்களின் விரோதியான மலையாளி தீக்சிற் உள்ளே கொண்டுவரப்பட்டார். அரசியலில் பழுத்த அரசியல்வாதியான ஜேஆர் ராஜீவ் காந்தியை எளிதாகக்கையாண்டார்.87 ஒப்பதத்தந்துடன் அனைத்து இயக்கங்களும் இந்தியாவின் கட்டளைக்கமைய ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு அரசியல் நீரோட்டத்தில் கலந்தனர்.ஆனால் இந்தியாவின் நயவஞ்சகத்தைப் புரிந்து கொண்ட தலைவர் இந்தியாவுடனேயே மோதும் நிலைப்பாட்டுக்கு வந்தார். 87 நிலமை இப்போது மீண்டும் இந்தியாவுக்கு வந்திருக்கிறது.அன்று அமெரிக்கா இருந்த இடத்தில் இன்று சீனா மிம மிக ஆழமாகக் கால்பதித்து விட்டது.அதற்கான செயற்பாடுகள்தான் போலித்துவாரகா வின் வெளிப்படுகையும் இந்தியாவின் துணையுடன் தமிழீழத்தை வென்றெடுப்போம்  என்ற காசியானந்தனின் அறிக்கை.அன்று தலைவர் இந்தியாவை நம்பவில்லை அனால் தமிழ்மக்கள் நம்பினார்கள். ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழ்மக்களும் இந்தியாவை நம்பத்தயாரில்லை. அத்துடன் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்திற்கும் மக்கள் இந்தியாவையோ உலகநாடுகளையோ நம்பத்தயராக வில்லை. துவாராக விடயம் பிசுபிசுத்துப் போனதால் இந்தியா நேரடியாக சிறிலங்கா அரசுடன் பேசவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

இந்தியா மீட்பரே கிடையாது. தமிழுழு விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் அமெரிக்க சார்பு நிலை எடுத்த சிறிலங்காவை தட்டி  லவக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது. அதனால் பேராளிகளுக்குப் பயற்சிகளை வழஙக பிரதமர் இந்திராகாந்தி முன்வந்தார்.அப்போது பனிப்போர்காலம். அணிசேரா நாடு என்று இந்தியா சொல்லிக்கொண்டாலும் ரஸ்யாவுடனான நெருக்கம் அதிகமாக இருந்தது. வெளியுறவுச்செயலராக தமிழரான பாரத்த சாரதியை நியமித்தார். பார்த்தசாரதி கடும் அழுத்தம் காரணத்தால் 87 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பொழுது பாரத்தசாரதியை நுpக்குமாறு ஜேஆர் விடப்பிடியாக நின்றார். அதனால் தமிழர்களின் விரோதியான மலையாளி தீக்சிற் உள்ளே கொண்டுவரப்பட்டார். அரசியலில் பழுத்த அரசியல்வாதியான ஜேஆர் ராஜீவ் காந்தியை எளிதாகக்கையாண்டார்.87 ஒப்பதத்தந்துடன் அனைத்து இயக்கங்களும் இந்தியாவின் கட்டளைக்கமைய ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு அரசியல் நீரோட்டத்தில் கலந்தனர்.ஆனால் இந்தியாவின் நயவஞ்சகத்தைப் புரிந்து கொண்ட தலைவர் இந்தியாவுடனேயே மோதும் நிலைப்பாட்டுக்கு வந்தார். 87 நிலமை இப்போது மீண்டும் இந்தியாவுக்கு வந்திருக்கிறது.அன்று அமெரிக்கா இருந்த இடத்தில் இன்று சீனா மிம மிக ஆழமாகக் கால்பதித்து விட்டது.அதற்கான செயற்பாடுகள்தான் போலித்துவாரகா வின் வெளிப்படுகையும் இந்தியாவின் துணையுடன் தமிழீழத்தை வென்றெடுப்போம்  என்ற காசியானந்தனின் அறிக்கை.அன்று தலைவர் இந்தியாவை நம்பவில்லை அனால் தமிழ்மக்கள் நம்பினார்கள். ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழ்மக்களும் இந்தியாவை நம்பத்தயாரில்லை. அத்துடன் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்திற்கும் மக்கள் இந்தியாவையோ உலகநாடுகளையோ நம்பத்தயராக வில்லை. துவாராக விடயம் பிசுபிசுத்துப் போனதால் இந்தியா நேரடியாக சிறிலங்கா அரசுடன் பேசவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டார்கள்.

மிக நேர்தியான பார்வை👏🏾

  • கருத்துக்கள உறவுகள்

2009க‌ளில் ந‌ட‌ந்த‌ குள‌று ப‌டிக‌ள் அதிக‌ம்..........ப‌ழைய‌ யாழ்க‌ள‌ உற‌வு @Nellaiyaan அண்ணா ஒளிவும‌றைவு இல்லாம‌ ப‌ல‌தை எழுதின‌வ‌ர்..........2009தில் சேர்த்த‌ காசு வ‌ன்னித் த‌லைமைக்கு போக‌ வில்லை.............இந்த‌ ஊழ‌ல் தொட‌ர்பாக‌ புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் உற‌வுக‌ள் புல‌ம்பெய‌ர் நாட்டில் வசிக்கும்  எலிக‌ளை பார்த்து காரி துப்பி போட்டின‌ம் ............ம‌க்க‌ள்  காரி துப்பின‌ ம‌னித‌ர்க‌ளை க‌ண்டு கொள்ளாம‌ க‌ட‌ந்து செல்வ‌து சிற‌ப்பு..........இதுக்கை இனியும் எழுதினால் பிற‌ச‌ர் தான் கூடும்.............அப்ப‌ இருந்த‌ உற‌வுக‌ள் யாழில் இப்ப‌வும் இணைந்து இருந்தா போலி கூட்ட‌த்தின் முக‌த்திரைய‌ கிழித்து தொங்க‌ப் போட்டு இருப்பின‌ம்............எம‌க்காக‌ போராடின‌ போராளிக‌ள் ந‌டு காட்டுக்குள் உண்ண‌ உண‌வு இல்லாம‌ ப‌டும் க‌ஸ்ர‌ம் பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு தான் தெரியும்.............2009ஊழ‌ல் கூட்ட‌ம் ஜ‌ரோப்பா க‌ன‌டா என்று எல்லா நாட்டிலும் அடுக்கு மாடி வீடு க‌ட்டி..........பிள்ளைக‌ளுக்கும் க‌லியாண‌ம் செய்து வைச்சு ஆட‌ம்ப‌ர‌ வாழ்க்கை வாழுகின‌ம்.................ந‌ல்லா இருங்கோ ந‌ல்லா இருங்கோ கொள்ளை கூட்ட‌த்தை க‌ட‌வுள் ஆசிர்வ‌திப்பார்😜😡..............

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2023 at 02:41, Cruso said:

எதுக்கு கேட்க வேண்டும்? வெளி நாடுகளில் போய் அடிமைகளாய் இருக்கிறதை  விட இங்கேயே அடிமையாய் இருக்கலாம்.ஆனாலும் இங்கு யாரும் எங்களை அடிமைகளாக நடத்தவில்லை.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலிருந்தே அப்படியே வாழ பழகிவிட்டீர்கள்! அதனால்தான் எப்படி வாழ்கிறீர்கள் என்று தெரியாமலே வாழ்கிறீர்கள்!🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலிருந்தே அப்படியே வாழ பழகிவிட்டீர்கள்! அதனால்தான் எப்படி வாழ்கிறீர்கள் என்று தெரியாமலே வாழ்கிறீர்கள்!🤣

ச‌ரியான‌ கேள்வி ந‌ண்பா🫱🫲...........

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விசுகு said:

2009 க்கு முன்னர் உண்டியல் குலுக்க பணித்தவர் தலைவர். எனவே தலைவரின் தொண்டர்களை தொடுபவர்களுக்கு குளிர் விட்டு போச்சு என்று மட்டுமே சொல்ல முடியும். 

2009 இற்கு முன் காசு சேர்க்கசொன்னவர் தலைவர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை! ஆனால்  எல்லாம் முடியும் வேளையிலும், ஆயுதங்களை மௌனித்து சரணடைய சொன்னபின்பும், இன்னும் ஒரு பெரிய அடிக்கு தயார் செய்கிறோம் என்று கூறி உண்டியல் குலுக்கியவர்களுக்கானதே பையனின் கருத்து என்றுதான் நான் விளங்கிக்கொண்டேன்! எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைத்து போராட்டத்திற்கு கொட்டிக்கொடுத்து இப்பவும் கஷ்டப்படும் ஆயிரக்கணக்கானோர் இருக்கும்போது, உண்டியல் குலுக்கி இப்போ ராஜபோகவாழ்க்கை வாழும் ஈனர்களை ஏதோ போராளிகள் ரேஞ்சிற்கு உயரத்தில் வைக்கிறீர்களே!!

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Eppothum Thamizhan said:

2009 இற்கு முன் காசு சேர்க்கசொன்னவர் தலைவர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை! ஆனால்  எல்லாம் முடியும் வேளையிலும், ஆயுதங்களை மௌனித்து சரணடைய சொன்னபின்பும், இன்னும் ஒரு பெரிய அடிக்கு தயார் செய்கிறோம் என்று கூறி உண்டியல் குலுக்கியவர்களுக்கானதே பையனின் கருத்து என்றுதான் நான் விளங்கிக்கொண்டேன்! எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைத்து போராட்டத்திற்கு கொட்டிக்கொடுத்து இப்பவும் கஷ்டப்படும் ஆயிரக்கணக்கானோர் இருக்கும்போது, உண்டியல் குலுக்கி இப்போ ராஜபோகவாழ்க்கை வாழும் ஈனர்களை ஏதோ போராளிகள் ரேஞ்சிற்கு உயரத்தில் வைக்கிறீர்களே!!

ந‌ன்றி ந‌ண்பா
நான் 2009தில் ந‌ட‌ந்த‌ ஊழ‌ல் குள‌றுப‌டிக‌ளை ப‌ற்றித் தான் எழுதினேன்............2009க‌ளில் காசு சேர்த்த‌வ‌ர்க‌ள் சொன்ன‌ பொய் நிறைய‌............அடுக்க‌டுக்காய் சொல்லிட்டு இருக்க‌லாம்..........2009க்கு முத‌ல் த‌லைவ‌ருக்கு பய‌ந்து சேர்த்த‌ காசு எல்லாம் வ‌ன்னிக்கு போன‌து அதில் ச‌ந்தேக‌ம் இல்லை.............காசு சேர்த்த‌வ‌ர்க‌ள் போக்குவ‌ர‌த்து சில‌வை அதில் எடுக்க‌லாம் என்று தான் கேள்வி ப‌ட்டேன் ந‌ண்பா...............க‌ட‌சி க‌ட்ட‌த்தில் காசு சேர்த்த‌வ‌ர் த‌ன்ட‌ வ‌ங்கிக்கு அனுப்புங்கோ என்று அவ‌ரின் வ‌ங்கி ந‌ம்ப‌ர் த‌ந்தார்............என்னை விட‌ என்ர‌ ந‌ண்ப‌னை ந‌ல்லா முட்டாள் ஆக்கி போட்டின‌ம்..........கொழும்பில‌ முக்கிய‌மான‌ ஆட்க‌ளை போட்டு த‌ள்ள‌ போகிறோம்...........வ‌ங்க‌க் க‌ட‌லால் ஆயுத‌ம் கொண்டு போக‌ ப‌ண‌ உத‌வி தேவைப் ப‌டுது..............இதெல்லாம் ந‌ம்பும் ப‌டியாவா இருக்கு ந‌ண்பா...........2006களில் எம்ம‌வ‌ர்க‌ளின் ப‌ல‌ ஆயுத‌ க‌ப்ப‌லை ந‌டு க‌ட‌லில் வைச்சு சிங்க‌ள‌ இந்திய‌ன் நேவி க‌ப்ப‌ல்க‌ளை மூழ்க‌டித்த‌ன‌ர்.............
ம‌று ப‌டியும் சொல்லுறேன் ந‌ண்பா 2009க‌ளில் இப்ப‌த்த‌ இல‌ங்கை காசுக்கு விர‌ல் விட்டு என்ன‌ முடியாத‌ அள‌வுக்கு ப‌ல‌ கோடி கொள்ளை அடிச்ச‌வை...........அந்த‌ காசு யாருக்கு தெரியுமா போக‌னும் இறுதி போரில் ச‌ர‌ன் அடைந்த‌ போராளிக‌ள் இறுதி போரில் கைய‌ கால‌ இழ‌ந்த‌ போராளிக‌ளுக்கு போக‌ வேண்டிய‌ ப‌ண‌ம்...........த‌லைவ‌ர் இல்லை என்று தெரிந்து விட்ட‌து திருட‌ர்க‌ளுக்கு அது தான் அடிச்ச‌ காசின் உண்மையை சொல்லுகின‌ம் இல்லை............இந்த‌ நூற்றாண்டில் சாராச‌ரி ம‌னுத‌ர்க‌ளின் வாழ்க்கை 75 வ‌ய‌தில் இருந்து 87க்குள் முடிந்து போய் விடுது.........இவ‌ர்க‌ள் போகும் போது ப‌ண‌த்தை கொண்டு போக‌ போவ‌து கிடையாது................

புல‌ம்பெய‌ர் நாட்டு அமைப்புக‌ள் 2010காளில் விடுவிக்க‌ பட்ட‌ போராளிக‌ளை க‌ண்டு கொள்ள‌ வில்லை.............சாள்ஸ் அன்ர‌னி சிற‌ப்பு ப‌டைப் பிரிவில் இருந்த‌ போராளி கோயில் வாச‌லில் பிச்சை எடுத்த‌ ப‌ட‌ம் என் க‌ண்ணால் பார்த்தேன் ந‌ண்பா...........இன்னொரு போராளி எங்கையோ நாவ‌ல் ப‌ழ‌ம் வித்த‌தாக‌ அறிந்தேன்.............கோயில் வாச‌லில் பிச்சை எடுத்த‌ போராளிக்கு த‌ங்க‌ட‌ மான‌ம் போய் விடும் என்று காசு கொள்ளை அடித்த‌ கூட்ட‌மோ அல்ல‌து எம‌து உற‌வுக‌ளோ தெரியாது ஒரு ஆட்டோ வேண்டி கொடுத்த‌வை அதோட‌ சுய‌ தொழில் செய்ய‌ காசும் கொடுத்த‌வை................

த‌லைவ‌ர் உயிருட‌ன் எங்கையாவ‌து ஒரு  இருந்து இருக்க‌னும் 2009க‌ளில் புல‌ம்பெய‌ர் நாட்டில் குள‌றுப‌டிப்செய்து கொள்ளை அடிச்ச‌ ப‌ண‌த்தை மாவீர‌ குடும்ப‌ங்க‌ளுக்கு இறுதிக‌ட்ட‌ போரில் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போராளிக‌ளுக்கு கொடுத்து இருப்பார் இது ஒரு உதார‌ண‌த்துக்கு சொன்னேன் ந‌ண்பா...............புல‌ம்பெய‌ர் நாட்டு  எலி அமைப்புக‌ள் அந்த‌ மாபெரும் த‌லைவ‌னுக்கும் துரோக‌ம் செய்து இறுதி க‌ட்ட‌ போரில் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போராளிக‌ளுக்கும் துரோக‌ம் செய்து விட்டார்க‌ள்................இவ‌ர்க‌ள் செய்த பாவம் இவ‌ர்க‌ளை போட்டு வாட்டும் ஒரு நாள் அது ம‌ட்டும் ஆடி விட்டு அட‌ங்கி போக‌ட்டும் ந‌ண்பா...............

2009க்கு பிற‌க்கு பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு போராளிக‌ளுக்கு அதிக‌ம் உத‌வி செய்து அதுக‌ளை கொஞ்ச‌ம் த‌ன்னும் ந‌ல் வ‌ழி ப‌டுத்தி விட்ட‌து எம் புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள்..........அதுக‌ள் உண்டிய‌லுட‌ன் வீடு வீடாக‌ அலைய‌ வில்லை 2009க‌ளில்...........இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு ந‌ண்பா இதோட‌ நிப்பாட்டுறேன்...........

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

,உண்டியல் குலுக்கி இப்போ ராஜபோகவாழ்க்கை வாழும் ஈனர்களை ஏதோ போராளிகள் ரேஞ்சிற்கு உயரத்தில் வைக்கிறீர்களே!!

உங்களுக்கு இந்த ராஜபோக வாழ்க்கை வாழும் எத்தனை பேரை தெரியும்??

எனக்கு 2009 வரை தலைவருக்காக உண்டியல் குலுக்கி அவர் கேட்டதை எல்லாம் செய்து சேர்த்து அனுப்பி இன்று விசாரணைக்கு முகம் கொடுத்தபடி விசா இல்லாமல் வீடு இல்லாமல் திருமணம் இல்லாமல் திருமணம் செய்து பிள்ளைகளின் படிப்பு என்று வரும் போது சிவப்பு லிஸ்டில் தகப்பன் பெயர் வருவதால் படிப்புக்கே சிரமப்படும் பல தொண்டர்களை குடும்பங்களை தெரியும்.

-----+-----+--------+------+--------+--

எத்தனை தமிழ் பாடசாலைகள் விளையாட்டு கழகங்கள் கலை பண்பாட்டு இயக்கங்கள் மாவீரர் நிகழ்வுகள் எப்படி நடக்கிறது எத்தனை தொண்டர்கள் இரவு பகலாக தமது பொன்னான நேரத்தை விதைக்கிறார்கள் என்றாவது தெரியுமா??

ஒரே ஒரு நாள் மாவீரர் மண்டபத்தில் ஒரு தொண்டராக சில மணித்துளிகளாவது நின்று கடமை செய்திருந்தால்....,?

பிள்ளைகளை படிப்பிக்கிறார்கள் திருமணம் செய்து கொடுக்கிறார்கள் என்று தனியே கிடந்து  வயிறு எரிந்து புலம்பவேண்டி வராது. 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Eppothum Thamizhan said:

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலிருந்தே அப்படியே வாழ பழகிவிட்டீர்கள்! அதனால்தான் எப்படி வாழ்கிறீர்கள் என்று தெரியாமலே வாழ்கிறீர்கள்!🤣

நீங்கள் என் இங்கு இருக்க முடியாமல் அங்கு ஓடினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?
ஐயா எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். East or West home is best. 😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

நீங்கள் என் இங்கு இருக்க முடியாமல் அங்கு ஓடினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?
ஐயா எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். East or West home is best.

சார்வாள்...ஒருசிலர் உயிரை காப்பாற்ற, ஒரு சிலர் குடும்பங்களிற்காக, இன்னும் சிலர் தொழிற்தகுதி கல்வித்தகுதியுடன் நல்ல வாழ்க்கைத்தரத்தை நாடி இப்படி பல விடயங்கள் உண்டு. நானும் ஒருகாலத்தில் யுகே ,கனடா என்று எப்பவோ செட்டிலாக கிடைத்த வாய்ப்பையெல்லாம் உதறித்தள்ளி விட்டு நாட்டை விட்டு ஒரு இன்ச் அரக்கமாட்டேன் என்று பிடிவாதத்துடன் நின்றவன் தான். பிறகு தான் தெரிந்தது இந்த எண்ணம் தலைவருடன் நின்று தமிழீழம் பிடிக்க சண்டை போடுவது போல... 
உன்னதமான நோக்கம் ,இறுதியில் ஒத்தைப்பைசாக்கு பிரயோசனப்படாது என்று. வெளிநாடு வந்து  இந்தவருடத்துடன் 5 வருடங்கள் முடிகின்றது. உழைத்து விட்டு திரும்ப நாட்டிற்கு வந்துவிடுவோம் எனும் எண்ணத்துடன் தான் வந்தேன். நாளைக்கு எனது பிள்ளைகள் என் சவக்குழியை தோண்டி எடுத்து  கரிச்சு கொட்டக்கூடாது என்பதால் இப்போது நிரந்தரவதிவுரிமைக்கு முயற்சிக்கிறேன். 
இது எனது அனுபவம் மட்டுமே      

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2023 at 08:19, அக்னியஷ்த்ரா said:

சார்வாள்...ஒருசிலர் உயிரை காப்பாற்ற, ஒரு சிலர் குடும்பங்களிற்காக, இன்னும் சிலர் தொழிற்தகுதி கல்வித்தகுதியுடன் நல்ல வாழ்க்கைத்தரத்தை நாடி இப்படி பல விடயங்கள் உண்டு. நானும் ஒருகாலத்தில் யுகே ,கனடா என்று எப்பவோ செட்டிலாக கிடைத்த வாய்ப்பையெல்லாம் உதறித்தள்ளி விட்டு நாட்டை விட்டு ஒரு இன்ச் அரக்கமாட்டேன் என்று பிடிவாதத்துடன் நின்றவன் தான். பிறகு தான் தெரிந்தது இந்த எண்ணம் தலைவருடன் நின்று தமிழீழம் பிடிக்க சண்டை போடுவது போல... 
உன்னதமான நோக்கம் ,இறுதியில் ஒத்தைப்பைசாக்கு பிரயோசனப்படாது என்று. வெளிநாடு வந்து  இந்தவருடத்துடன் 5 வருடங்கள் முடிகின்றது. உழைத்து விட்டு திரும்ப நாட்டிற்கு வந்துவிடுவோம் எனும் எண்ணத்துடன் தான் வந்தேன். நாளைக்கு எனது பிள்ளைகள் என் சவக்குழியை தோண்டி எடுத்து  கரிச்சு கொட்டக்கூடாது என்பதால் இப்போது நிரந்தரவதிவுரிமைக்கு முயற்சிக்கிறேன். 
இது எனது அனுபவம் மட்டுமே      

அவர் ஒல்லாந்தர், போர்த்துக்கீசர், பிரிட்டிஷ் காரர் போன்றவர்களின் கீழ் வாழ்ந்து பழகிவிட்டொம் என்று எழுதி இருந்தார். அதட்குத்தான் எனது பதில்.

நாங்களல்ல, அவர்களே அவர்கள் கீழ் வாழ்ந்து பழகி அவர்கள் இல்லாவிட்ட்தால் வாழ முடியாது என்று மீண்டும் போய் அவர்களின் நாட்டில் வாழ்கிறார்கள். எனவே அவர்களுக்குத்தான் அவர் சொல்லுவது பொருந்தும்.😜

உங்களை போன்ற நிறைய பேர் அப்படி இல்லை என்றும் நீங்கள் என் அங்கு போனீர்கள் என்றும் எழுதி உள்ளீர்கள். நான் அதை ஏற்றுக்கொள்ளுகிறேன் வரவேட்கிறேன்.🙂

  • கருத்துக்கள உறவுகள்

போரில் மாண்ட தலைவனுக்கு அஞ்சலி செலுத்த திராணியற்ற கோழைகள்!! ஆண்டவர் என்றாலும் மாண்டபின் வந்தவருண்டோ.?

போரில் மாண்ட தலைவனுக்கு அஞ்சலி செலுத்த திராணியற்ற கோளைகள்!!        ஆண்டவர் என்றாலும் மாண்டபின் வந்தவருண்டோ.?

(மௌன உடைவுகள் -58)

 ” MANKIND MUST PUT AN END TO WAR BEFORE WAR PUTS AN END TO      

MANKIND “.  -JOHN F. KENNEDY –

” மனித குலத்திற்கு யுத்தம் முடிவு கட்டுவதற்கு முன் , யுத்தத்திற்கு மனிதகுலம்  முடிவுகட்ட வேண்டும்.”   

இன்றைய உலகிற்கு பொருத்தமான இந்த ஜதார்த்தமான வார்த்தைகள்  முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன்.எப்.கென்னடிக்கு சொந்தமானவை. கென்னடியின் கருத்தை அமெரிக்கா காற்றில் பறக்கவிட்டு எதிர்மறையாக மனித குலத்தை அழித்து தசாப்தங்களாக யுத்தத்தை காப்பாற்றிவருகிறது. உக்ரைன்…… பாலஸ்தீனம்……… பட்டியலில் இலங்கை…… முன்னால் உள்ளது.

30 ஆண்டுகால யுத்த வலிகளை சுமந்த இலங்கை மக்களை – மனித குலத்தை தொடர்ந்தும் அழிக்க “துவாரகா” என்ற பெயரில் ஒரு பூதம் புறப்பட்டு இருக்கிறது. மனித குலத்தை யுத்தம் அழிக்கும் முன், யுத்தத்தை அழிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இருதரப்பு யுத்தப்பிரியர்களால் தோற்கடிக்கப்பட்டன. அழிந்தது மனிதகுலம். அழிவுக்கு பின்னர் ஈழத்தமிழர்கள் மத்தியில் கொஞ்சமாவது எஞ்சிக்கிடக்கின்ற மானிடநேயத்தை, மத நம்பிக்கை பண்பாட்டு பாரம்பரியங்களை மட்டும் அல்ல கொல்லப்பட்டவர்களை மீண்டும் ஒருமுறை சாகடித்தே  தீருவோம் என்று ஒரு கூட்டம் கங்கணம் கட்டி நிற்கிறார்கள் .

கவிஞர் காசி.ஆனந்தன் வார்த்தைகளில் “தலைமகள் துவாரகா களமாட வருகிறாள்”. “என்.ஜி.ஓ. அமைத்து புலத்தில் நிதிசேகரித்து நிலத்தில் அரசியல் செய்ய சகோதரி வருவார் ” என்று கூறுகிறார் போராளிகள் கட்சி க.இன்பராசா. “துவாரகாவின்  உரைக்கு பின்னால் பிரபாகரன் இருக்கிறார்” .இது பழ.நெடுமாறன். இவர்களைப்போன்று இன்னும் சிலர் வாயில் வருவதை உளறித்தள்ளுகிறார்கள்.  எனினும் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களில் அதிகப்பெரும்பான்மையினரும், விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் இந்த பொய்க்கும், புரட்டுக்கும், புனைகதைக்கும் எதிராக குரல்கொடுத்து வருகிறார்கள். இது மாற்று கருத்தாளர்களுக்கு எதிராக புலிகளே வளர்த்து விட்ட  “புனை கதை கலாச்சாரம்” இப்போது  அவர்களில் ஒருபகுதியினர் அதற்கு எதிராக போராட வேண்டிய நிலை.

இந்த விவகாரம் தொடர்பாக பல் பக்க நோக்கு தேவைப்படுகிறது. இது துவாரகா உண்மையா? பொய்யா? அசலா ? நகலா? என்பதற்கு அப்பால் ஈழத்தமிழர்கள் மத்தியில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை விதைக்க வேண்டிய அவசிய தேவையைக்கொண்டது. ஆயுதப்போராட்ட காலத்தில் புறநானூற்று பெரும் புகழ்பாடி அப்பாவி இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்தவர்கள், கேவலம் களத்தில் வீரச்சாவடைந்த தங்கள் தலைவர் குடும்பத்திற்கு பொதுவெளியில் அஞ்சலி செலுத்தவும், போரில் மாண்டதை ஏற்கவும் திராணியற்ற கோழைகளாக நிற்கிறார்கள். இது தனிநபர் வழிபாடு மீதான பக்தி அரசியல் தர்மசங்கடம்.

தூவாரகா ஏன் சுவிஸில் உயிர்த்தெழுந்தாள்….? உயிர்த்த தின கட்டுக்கதையால் நன்மை அடையப்போகிறவர்கள் யார்….?  இதற்கு பின்னணியில் உள்ள பிராந்திய,  சர்வதேச  அரசியல் சதி என்ன….?  இவர்களுக்கு பின்னால் காசி.ஆனந்தன் – பழ.நெடுமாறன் கும்பல் ஏன் ஒத்தோடுகிறது….? யாருடைய இருப்பை தக்க வைக்க துவாரகா தேவைப்படுகிறாள்……?   இதற்கு பின்னால் உள்ள பண மோசடி எதுவரை போகும்…..? இப்படி  துவாரகா விவகாரத்தில் பதில்களைத் தேடவேண்டிய கேள்விகளே அதிகம்? இது ஒன்றும் புதிதல்ல. இது புலிகளின் அரசியல் பொதுநிலை. பதில்களற்ற கேள்விகளோடு கடந்த முப்பது ஆண்டுகளை கடத்திய அரசியல் சூனியத்தில் இதைத்தவிர போராட்டத்தின் எச்சமாக வேறு எவற்றை எதிர்பார்க்க முடியும்?

துவாரகா மேட் இன் சுவிஸ்……!

——————————–

பிரபாகரன் குடும்பத்தை மறுபிறப்பு – மீள் உருவாக்கம் செய்வதற்கு சுவிஸைப்போன்று  வாய்ப்பான வேறு ஒரு நாடு உலகில் இருக்கமுடியாது. உலகில் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பு சுவிஸில் தடைசெய்யப்படவில்லை. அல்கைதா, ஐ.எஸ்.எஸ். இயக்கங்களே தடைசெய்யப்பட்டுள்ளன. ஹாமாஸ் தடைபற்றி அரசியல் மட்டத்தில் தற்போது பேசப்படுகிறது.  இந்த நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய சூழலில் பிரபாகரன் குடும்பத்தை உயிர்ப்பித்தல் இதன்  சூத்திரதாரிகளுக்கு சட்டச் சிக்கல்களை ஏற்படுத்திவிடும் என்பதால் சுவிஸ் சூழல் மட்டுமே இவர்களுக்கு இப்போதைக்கு சாதகமானது.

குறிப்பிட்ட  மாறுவேடக்காரி சுவிஸில் அகதி அந்தஸ்து பெற்றவர் என்பதால்  ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பயணம் இலகுவானது. புலிகளைத் தடைசெய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எல்லை கடந்த நிதிசேகரிப்பை  செய்வதற்கு இது உதவும்.. வெளியாருக்கு  அடையாளம் தெரியாத கறுப்புக்கண்ண்ணாடி காரில், முக்காடு போட்டு முகம் மறைத்து முடிந்ததைச் செய்ய முடியும். இதில் இதுவரை பெண் என்றால் பேயும் இரங்கும் வலையில் சிலர் சிக்கியிருக்கிறார்கள். காசி.ஆனந்தனுக்கு எலும்பு முறிவு வைத்தியம் செய்ய மிதுஷியா  இந்தியா போனாலும் ஆச்சரியம் இல்லை.

இதன் முக்கிய பின்னணி “பணப்பறிப்பு” என்பதால் மாபியாக்களுக்கான காசுமரம் சுவிஸில் காய்க்க காலநிலை பொருத்தமாக உள்ளது. போராட்ட காலத்தில் அதிக நிதிப்பங்களிப்பை வழங்கிய மக்கள் சுவிஸ் தமிழர்கள். தாலிக்கொடி நடராஜா முரளிதரன் புலிகளின் பொறுப்பாளராக இருந்த காலம் முதல்  இந்த கட்டாய நிதி திரட்டல் ஆரம்பமானது. துரதிர்ஷ்டவசமாக புலத்திலும், நிலத்திலும் புலிகளால் இருந்த அச்சுறுத்தல் காரணமாக இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க மக்கள் தயங்கினர்.  சுவிஸ் புலிப்பொறுப்பாளர் குலத்தின் காலத்திலும் 2009வரை இது தொடர்ந்தது.

மக்களை அச்சுறுத்தும் புலிகளின் பாணி, தமிழீழ அடையாள அட்டை அச்சுறுத்தல், விடுமுறைக்கு ஊருக்கு போகும்போது முகமாலையில் சுவிஸில் பணம் வழங்கியதை உறுதிப்படுத்த வேண்டிய நிலை, அதிகபணம், தாலிக்கொடி, நகைகள் போன்றவற்றை முன்கூட்டிய ஏற்பாட்டில் திட்டமிட்டு உண்டியலில் போடவைத்து மற்றையவர்களுக்கு மண்டைச்சலவை செய்த உளவியல் போன்றவற்றிற்கு பின்னால் பிராபாகரன் குடும்பம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்று கூறுகின்றவர்கள் இருந்தார்கள் /இருக்கிறார்கள். 

தங்களை படைப்பாளிகள், வெளியீட்டாளர்கள், தொகுப்பாளர்கள், கலைஞர்கள், நாடககாரர்கள் என்றெல்லாம் கூறிக்கொண்டும், ஜெனிவாவுக்கு காவடி எடுத்துக் கொண்டும் இருப்பவர்கள் முரளியின் அட்டூழியங்களுக்கு மௌனம்காத்தது போன்று இன்றும் காக்கிறார்கள். உலகத்தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம், கல்விக்கழகம், கலைபண்பாட்டுக்கழகம் , இளையோர் அமைப்பு, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு போன்றவற்றின் மரியாதைக்குரிய மனிதர்களாக இவர்கள் இன்னும் நடமாடுகிறார்கள். சர்வதேச, மற்றும் ஐரோப்பிய டயஸ்போரா அமைப்புக்களும் இது விடயத்தில் ஊமையாகிவிட்டன.

சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் 13 புலி சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் போதுமான சாட்சியங்களை அரசதரப்பால் சமர்ப்பிக்க முடியவில்லை. மக்கள் கட்டாயத்தின் பேரில் நிதி செலுத்தினார்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கவில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் கட்டாயப்படுத்தி, போலியான ஆவணங்களை தயாரித்து, கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் வங்கிக்கடன்களை பெற்றுக்கொடுத்து இருந்தார்கள். அதை வட்டியுடன் திருப்பி செலுத்துவதை இயக்கம் பொறுப்பெடுத்து இருந்தது. 2009 க்குப் பின்னர் இதில் ஏற்பட்ட சிக்கல் பல குடும்பங்களை பிரித்தது , குடும்ப வன்முறை அதிகரித்தது, பிள்ளைகள் பராமரிப்பு இல்லங்களில் வளர்ந்தார்கள். நீதி மன்றத்தில் ஆதாரம் இல்லை என்பதற்காக புலிகள் சட்டப்படி குற்றமற்றவர்களாக இருக்கலாம் , சுவிஸ் மக்கள் மன்றத்தில்….?

சுவிஸ் அரசு தொடுத்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அழைத்து வரப்பட்ட  சுமார் 150 பேர்  நீதிமன்றம் முன் சுவிஸ் புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். 5,200 பேர்  சந்தேகநபர் சுவிஸ் புலிப்பொறுப்பாளர் குலத்திற்கு ஆதரவாக கையொப்பமிட்ட மனுவை புலிகளின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  போலி ஆவணங்களை தயாரித்தது மட்டும் குற்றமாக கொள்ளப்பட்டது. சுமார் 55,000 க்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் வாழ்கின்ற சுவிஸில் இவர்கள் வெறும் 10 வீதம் . இந்த நிலையில்தான் துவாரகா என்று காட்சிப்படுத்தக்கூடிய ஒருவர் சுவிஸில் கிடைத்ததும் நிலத்திலும், புலத்திலும் உள்ள ஈழத்தமிழர்களின் துரதிஷ்டம்.

மறு பிறப்பின் பின்னணி அரசியல் …..!

———————————————————————–

“துவாரகா ” நாடகத்தின் தயாரிப்பாளர்கள் இந்திய மத்திய ஆட்சி அதிகாரத்தின் கைக்கூலிகளாக இருக்கிறார்கள். பாரதீய ஜனதாவின் பச்சை இந்துத்துவ மதவாத அரசியலை முற்று முழுதாக நியாயப்படுத்துபவர்கள். இதில் இரண்டு விடயங்கள் மறைந்துள்ளன

ஒன்று: ஈழத்தமிழர்கள் இந்துக்கள் என்ற காட்டப்படுவதன்மூலம் குறுக்கு வழியில் இந்திய மத்திய அரசின் ஆதரவை ஈழப்போராட்டத்திற்கு பெறமுடியும் என்று கூறுபவர்கள். இவர்கள்தான் பழ.நெடுமாறன்- காசி ஆனந்தன் அணி, மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியை சேர்ந்தவர்கள். இவர்களின் டெல்லி சந்திப்புகள் இதற்கு சான்று. இவர்களை இந்திய முன்னாள் புலனாய்வாளர்கள் நெறிப்படுத்துவதாக கூறப்படுகிறது. இவர்கள் பிராபாகரன், பொட்டம்மான் குடும்பம் இறுதி யுத்தத்தில் தப்பிவிட்டார்கள் என்று காசுக்கு கதையளப்பவர்கள். இந்தியாவே  அவர்களை காப்பாற்றியது என்று கூறுபவர்கள். இத்தனைக்கும் இவர்கள் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு எதிரான வட இந்திய கருத்தியலைக்கொண்டவர்கள்.  

ஆனால் தடை நீக்கம் முக்கியமல்ல புலிகள் இந்தியாவுக்குள் சட்டரீதியாக நுழையவும், ஒன்று கூடவும் தடையில்லை என்றும், இந்தியா உதவிகளை வழங்கவும் தடையில்லை என்றும் கூறுகிறார்கள். இந்த கால்கழுவும் அரசியலே காசி.ஆனந்தனுடையது. இதன் மூலம் இந்தியாவுக்கும் இவர்களுக்கும் இடையிலான தொடர்பை மையப்படுத்தி பிராபாகரன் குடும்பம் உயிரோடு இருக்கிறது என்ற அச்சத்தை இலங்கை அரசுக்கு ஏற்படுத்துவது. இது சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்வாதிகள் புலிகளின் மீள் உருவாக்கம் பற்றி உரத்து பேச களம் அமைக்கிறது. இதனூடாக வடக்கு கிழக்கில் நெருக்கடியை ஏற்படுத்தி அதிலிருந்து கட்சி அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்வது. 

இரண்டு: சீனாவுக்கு எதிரான இந்திய சார்பு நிலைப்பாடு. உண்மையில் இந்தியா ஈழப்போராட்டத்தில் தலையிட்டு வளர்த்தும், அழித்தும் விட்ட செயற்பாடுகளுக்கு எண்ணற்ற ஆதாரங்கள் உண்டு. இதை விடுதலைப்புலிகளைவிடவும் அதிகம் தெரிந்திருப்பவர்கள் எவரும் இருக்கமுடியாது. இந்த நிலையில் இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக தமிழ்த்தேசிய அரசியல் சீன எதிர்ப்பு அரசியல் பேசுகிறது.

 உண்மையில்  இவர்கள் இரு பிராந்திய வல்லரசுகளையும், ஆதிக்க சக்திகளையும் ஒன்றாகப்பார்க்காமல் எடுப்பார் கைப்பிள்ளையாக இந்தியாவின் சீன எதிர்ப்பு கொள்கையேயே தத்தெடுத்துள்ளனர். இதை பிரபாகரனின் வருகையின் மூலம் இப்படி நியாயப்படுத்துகின்றனர்:  “புலிகளின் மீள்வருகை இந்தியாவுக்கு பாதுகாப்பு, புலிகள் இருக்கும் வரை சீனா இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் வாலாட்ட முடியாது”. இது இன்றைய சீனாவின் உலகமயமாக்க  சர்வதேச சமூக, பொருளாதார, அரசியல் பட்டுவீதி கடற்பரப்பு ஆதிக்கத்தில் குருடனுக்கு யானைகாட்டிய கதை. 

இலங்கையின் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலுக்கு துவாரகாவின் அசல், நகல் தெரியும். அதை வெளிப்படையாக பேசுவது புனிதமான பாராளுமன்ற கோயில் வழிபாட்டுக்கு தெய்வப்பழியாகிவிடும். ஒரு கட்சி உண்மையை போட்டுடைத்தால் மறுகட்சிக்கு வாக்கு பெட்டி உடைக்கப்படும்போது அதன் விளைவு வெளிப்படும்.  ஈழப்போராட்டம் எவ்வாறு பொய்மைகாளால் கட்டிவளர்க்கப்பட்டு வியாபார அரசியலானதோ அந்த நிலை தொடர்வதையே இவர்கள் விரும்புவார்கள்.  அதையே செய்கிறார்கள்.

சர்வதேச அரசியல் தாக்கம்….!

——————————-

யுத்தம் முடிவடைந்த கையோடு காணாமல்  ஆக்கப்ப்பட்டவர்கள் என்ற பட்டியலில் இருந்தவர்கள் திரும்பிவந்தார்கள், சிலர் வெளிநாடுகளில் அரசியல்தஞ்சம் கோரினார்கள். இன்னும் சிலர் இலங்கை சிறைகளில் -முகாம்களில் இருப்பது தெரியவந்தது. இந்த சில்லறை நிகழ்வுகளுக்கு அப்பால் போர்க்குற்ற விசாரணை, வெள்ளைக்கொடி விவகாரம், யுத்தமீறல்கள், இனப்படுகொலை என்ற பல குற்றச்சாட்டுக்கள் சர்வதேசத்தின் – நிறுவனங்களின் உதவியுடன் இலங்கை அரசு மீது வைக்கப்பட்டது.

ஆனால்   வேடதாரி துவாரகாவோ ” அப்பாவும், அம்மாவும்” சுகமாக இருக்கிறார்கள் என்று கூறி ஊர் வாயை அடைக்க முயற்சித்துள்ளார். யுத்தம் மௌனிக்கப்பட்டு 14 ஆண்டுகள் தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக பிராபாகரன் – மதிவதனி தம்பதியரின் மகன் பாலச்சந்திரன்  கொலை பல கேள்விகளை எழுப்பியது. பல ஆவணங்கள், முறைப்பாடுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லா விசாரணை பனல்களுக்கும் சேர்க்கப்பட்டது. இப்போது பிரபாகரன், பொட்டம்மான் குடும்பம் இருக்கிறார்கள். இன்னும் எத்தனை குடும்பங்கள் உயிரோடு இருக்கின்றன…..?

சர்வதேசம் இந்த விசாரணையை தொடர்வதா ? அல்லது பிரபாகரன் குடும்பம் திரும்பிவிட்டது என்று விசாரணைகளை இரத்துசெய்வதா? இலங்கை அரசு எமது படையினர் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து முக்கிய புள்ளிகள் உயிரோடு இருக்கிறார்கள் என்று கூறப்போகிறது, பயங்கரவாதத்திற்கும், புலிகள் மீதான தடை க்கும் சாதகமான சூழலை துவாரகா இலங்கைக்கு வழங்கியுள்ளார். 

போராளிகள் கட்சியின் கதிரை அரசியலுக்கு இவை மூலதனம். அதன் மூலமான பக்க விளைவுகளுக்கு  நிவாரணம் வழங்க புலம்பெயர்ந்த மக்களின் நிதியியல் என்.ஜி.ஓ. தோல்வி அடைந்த ஆயுதப்போராட்டம் ஒன்றின் அடையாளங்களை போராடியவர்களை  கொண்டே எப்படி வேரோடு அழிப்பது என்பதற்கு உலகில் மிகப்பிந்திய  உதாரணம் இதை விடவும் வேறு என்ன இருக்கமுடியும்.?

       “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் “.
 

https://arangamnews.com/?p=10203

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.