Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Operation Duwaraka ஒரு புலனாய்வுச் சதி: ஆதாரங்களுடன் விளக்கும் தலைவர் பிரபாகரனின் மெயப்பாதுகாவலர்

திரியோடு தொடர்புடைய உரையாடலைக் கொண்டுள்ளது.

நன்றி-யூரூப்.

தலைப்புப் பொருத்தமாக இல்லையென்பது எனது பார்வை. ஊடகங்கள் தமது பிழைப்புக்காகவே தலைப்புகளைத் தடம்மாற்றி வைக்கின்றன. இதுவும் ஒரு சாபக்கேடன போக்கே.
நன்றி

  • Replies 300
  • Views 38.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

    விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ? வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ? மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே! அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    "தங்கை துவாரகா இந்தியாவின் உறுதுணையுடன்  களத்தில் நிற்பாள்"           -காசியானத்தன்   “இந்தியாவின் உறுதுணையுடன்”’ இந்த ஒற்றை சொல்லிலேயே காசி உண்மையை கக்கிவிட்டார்..  இந்தியாவும் புல

  • * Making of the "Thuvaraka"? உண்மையாக அவரின் மகளா ? அவர்கள் சொன்னது உண்மை தானா? நீங்கள் நம்புகிறீர்களா ? இவை தான் இன்று என்னிடம் பலரும் முன்வைத்த கேள்விகள். இதுவே, இன்று தாயகத்திலும், தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2023 at 03:08, நன்னிச் சோழன் said:

சிவாஜிலிங்கம் வலுவாக பொளக்கப்பட்டார்... என்ன இந்தாள் இப்படியெல்லாம் சுத்துமாத்து விட்டிருக்கிறார்.

நன்னி,

முடிந்தால் ஒரு fact check உதவி.

இந்த கார்திக் pray for Sri Lanka, என்ற செய்தியுடன், இலங்கை கொடி போட்ட அவரின் முந்தைய முகபுத்தக புரோபைல் என சில படங்கள் கண்ணில் பட்டது.

இவை உண்மையா? போட்டோஷாப்ப்பா?

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, goshan_che said:

நன்னி,

முடிந்தால் ஒரு fact check உதவி.

இந்த கார்திக் pray for Sri Lanka, என்ற செய்தியுடன், இலங்கை கொடி போட்ட அவரின் முந்தைய முகபுத்தக புரோபைல் என சில படங்கள் கண்ணில் பட்டது.

இவை உண்மையா? போட்டோஷாப்ப்பா?

எனது கண்ணில் எதுவும் படவில்லை. தங்களிடம் உள்ளதை காட்டுங்கள், என்னால் முடிந்தளவு பார்த்துச் சொல்கிறேன் (இதில் நான் ஒன்றும் விண்ணன் அல்ல, இருப்பினும் முயல்கிறேன்)

ஆனால் இவர் அவ்வாறு செய்திருப்பார் என்று நான்  எண்ணவில்லை. ஏதேனும் விசமக் கருத்துக்களாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நன்னிச் சோழன் said:

எனது கண்ணில் எதுவும் படவில்லை. தங்களிடம் உள்ளதை காட்டுங்கள், என்னால் முடிந்தளவு பார்த்துச் சொல்கிறேன் (இதில் நான் ஒன்றும் விண்ணன் அல்ல, இருப்பினும் முயல்கிறேன்)

ஆனால் இவர் அவ்வாறு செய்திருப்பார் என்று நான்  எண்ணவில்லை. ஏதேனும் விசமக் கருத்துக்களாக இருக்கலாம்.

https://www.facebook.com/100077415585753/posts/pfbid02GZ4T6uNq4KtxvWVwP3xxNo7uKy4MadXBUny5PBJNBZXJ1kwQupJwibJxQhzjmKel/?app=fbl

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நன்னி,

முடிந்தால் ஒரு fact check உதவி.

இந்த கார்திக் pray for Sri Lanka, என்ற செய்தியுடன், இலங்கை கொடி போட்ட அவரின் முந்தைய முகபுத்தக புரோபைல் என சில படங்கள் கண்ணில் பட்டது.

இவை உண்மையா? போட்டோஷாப்ப்பா?

உங்களுக்கான பதில் இந்த காணொளியில் கிடைக்கலாம் @goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முதல்வன் said:

உங்களுக்கான பதில் இந்த காணொளியில் கிடைக்கலாம் @goshan_che

நன்றி முதல்வன். பார்க்கிறேன்🙏

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

நன்னி,

முடிந்தால் ஒரு fact check உதவி.

இந்த கார்திக் pray for Sri Lanka, என்ற செய்தியுடன், இலங்கை கொடி போட்ட அவரின் முந்தைய முகபுத்தக புரோபைல் என சில படங்கள் கண்ணில் பட்டது.

இவை உண்மையா? போட்டோஷாப்ப்பா?

இவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 😭

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

இவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 😭

இந்த பேட்டியில் அதை (pray for Sri Lanka) தான் போட்டதாக ஒத்து கொள்கிறார்.

ஆனால் தானாக அதை உருவாக்கவில்லை, பேஸ்புக் போட்டதை போட்டேன் என்கிறார்.

இராவணனோ இன்னொரு படி மேலே போய் இலங்கை கொடியை போடவில்லை என கவர் எடுக்கிறார்.

கார்த்தி இலங்கை கொடியை போட்டு, pray for Sri Lanka என போட்டது உறுதியாகியுள்ளது.

முடிவு 

இதை வைத்து மட்டும் அவரை முத்திரை குத்த முடியாது.

ஆனால் நம்பவும் முடியாது.

சாதராண மக்கள் நாமே இலங்கை மீது அனுதாபம் வரினும் கொடியை அதன் வரலாற்றை உணர்ந்து தவிர்க்கும் போது- இப்படி ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் - பேஸ்புக் போட்டது நானும் போட்டேன், இத்தாலிக்கும் போட்டேன் என சொல்வது - யோசிக்க வேண்டிய விடயம்.

7 hours ago, முதல்வன் said:

உங்களுக்கான பதில் இந்த காணொளியில் கிடைக்கலாம் @goshan_che

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

சாதராண மக்கள் நாமே இலங்கை மீது அனுதாபம் வரினும் கொடியை அதன் வரலாற்றை உணர்ந்து தவிர்க்கும் போது- இப்படி ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் - பேஸ்புக் போட்டது நானும் போட்டேன், இத்தாலிக்கும் போட்டேன் என சொல்வது - யோசிக்க வேண்டிய விடயம்.

எங்களை குறி வைத்து பணம் செலவு செய்வது பிரயோசனமில்லை.

இவர்களுக்கு செலவு செய்து பிரயோசனமும் அடைகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

இந்த பேட்டியில் அதை (pray for Sri Lanka) தான் போட்டதாக ஒத்து கொள்கிறார்.

ஆனால் தானாக அதை உருவாக்கவில்லை, பேஸ்புக் போட்டதை போட்டேன் என்கிறார்.

இராவணனோ இன்னொரு படி மேலே போய் இலங்கை கொடியை போடவில்லை என கவர் எடுக்கிறார்.

கார்த்தி இலங்கை கொடியை போட்டு, pray for Sri Lanka என போட்டது உறுதியாகியுள்ளது.

முடிவு 

இதை வைத்து மட்டும் அவரை முத்திரை குத்த முடியாது.

ஆனால் நம்பவும் முடியாது.

சாதராண மக்கள் நாமே இலங்கை மீது அனுதாபம் வரினும் கொடியை அதன் வரலாற்றை உணர்ந்து தவிர்க்கும் போது- இப்படி ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் - பேஸ்புக் போட்டது நானும் போட்டேன், இத்தாலிக்கும் போட்டேன் என சொல்வது - யோசிக்க வேண்டிய விடயம்.

இவர் ஒரு ஆங்கில ஆசிரியர். தமிழ் படிப்பது வீண் என்று சொல்பவர். தற்போது தலைவரை சித்தப்பா சித்தப்பாவின் மரியாதை என்பவர் இதுவரை போராட்டத்திற்கு எதுவும் செய்ததில்லை.  மாறாக அதை கொச்சைப்படுத்துதலை மட்டுமே செய்து வந்திருக்கிறார். 

ஆனால் இன்றைய நிலையில் இவரை சிலர் பயன்படுத்த அதையே இவரும் பயன் படுத்தி வருகிறார். தமிழரின் இழி நிலை எல்லோரையும் தலையில் தேய்க்க வழி வகுத்து இருக்கிறது. 

இதுவும் கடந்து போகும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

மாறாக அதை கொச்சைப்படுத்துதலை மட்டுமே செய்து வந்திருக்கிறார். 

ஆதாரங்கள் இருந்தால் செருகிவிடுங்கள்!

ஆங்கில ஆசிரியர் நன்றாக தமிழ் கதைக்கின்றார்!

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

ஆதாரங்கள் இருந்தால் செருகிவிடுங்கள்!

ஆங்கில ஆசிரியர் நன்றாக தமிழ் கதைக்கின்றார்!

இதை நானும் வழிமொழிகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விசுகு said:

இவர் ஒரு ஆங்கில ஆசிரியர். தமிழ் படிப்பது வீண் என்று சொல்பவர். தற்போது தலைவரை சித்தப்பா சித்தப்பாவின் மரியாதை என்பவர் இதுவரை போராட்டத்திற்கு எதுவும் செய்ததில்லை.  மாறாக அதை கொச்சைப்படுத்துதலை மட்டுமே செய்து வந்திருக்கிறார்

ஆனால் இன்றைய நிலையில் இவரை சிலர் பயன்படுத்த அதையே இவரும் பயன் படுத்தி வருகிறார். தமிழரின் இழி நிலை எல்லோரையும் தலையில் தேய்க்க வழி வகுத்து இருக்கிறது. 

இதுவும் கடந்து போகும். 

யார் யாரைக் கேவலமாக கதைக்கின்றார்கள்  என்று இன்னும் விளங்கவில்லையா ?
மே 18 2024   அன்று இதற்கான முடிவு எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்.

நான் அறிந்த வரை 2023  மாவீரர்   தினத்தில்   மதி அக்காவின் உறவினர்களும் தலைவரின் உறவினர்களும்
எல்லோருக்கும் அஞ்சலி செலுத்தும் நிலையில் இருந்தார்கள். ஆனால் குள்ள நரிக்கூட்டம் ஒன்று
இடையில் புகுந்து எல்லாவற்றையும் குழப்பி தாமும் மண் கவ்வி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
21 hours ago, goshan_che said:

"நான் தேடி அறிந்த வரையில்" இது உண்மையே. எனது வாய்வுக்களை நான் கீழே விடுகிறேன், வாசித்துப் பாருங்கள்.யே.

அவர் நான்கு முகப்புப் படங்கள் வைத்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. அதில் இரண்டு மட்டும் தான் என்னால் காணக்கூடியவாறு உள்ளது. ஏனைய இரண்டையும் பார்க்க முடியவில்லை. ஆகையால் அவற்றில் இரண்டு சேரமான் கொடுத்துள்ள மூன்றில் இரண்டாக இருக்கலாம் என்பது "என் துணிபு"

மேலும் சோத்துமானின் திரைப்பிடிப்புகள் தொகுக்கப்பட்டவையாகத் தெரியவில்லை. அவை உண்மையானவையே. இதே போன்ற "Pray for Sri Lanka" முகப்புப் படங்களை தேடிப் பார்த்து அறிந்துகொண்டேன்.

இவை பொதுவெளியில் வெளியான பின்னர் இவர் அவற்றை தனது வேசுபுக்கில் மறைத்துள்ளார்/ நீக்கியுள்ளார் (எனது கண்காளல் அதனைக் காண முடியவில்லை.).

அத்துடன் சேரமான் சொல்வது போல மே 19, 2016 அன்று இவர் உண்மையிலையே கேக் வெட்டி யாரோ ஒருவரினது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். அதற்கான படங்களும் உள்ளன.

மேலும் மேற்கண்ட நிகழ்படத்தில் அவரே வாக்குமூலம் ஒத்துக்கொண்ட பின்னர், இது பற்றி நாம் நோண்ட வேண்டியதில்லை.

--------------------------------------------------------------------

சரி இப்போது சோத்துமான் இவற்றை வெளியிட வேண்டிய நோக்கம் என்ன?

அவர் அதை அவ்வாறு வேசுபுக்கில் போட்டதால் ஒன்றும் பெரிதில்லை, எதையும் இழந்திடப் போவதுமில்லை. வெளிநாடுகளில்  சிறிலங்காவின் கொடியை முகப்பில் போட்டு விட்டு மாவீரர் நாளிற்கு ஸ்ரேரஸ் போடும் பலரை எனக்குத் தெரியும் என்றெல்லாம் நான் முட்டுக்கொடுக்க மாட்டேன்.

சோத்துமான் இதனை இப்போது பரப்புவது எதற்கெனில், தான் பங்கு பற்றியுள்ள போலித் துவாரகா நாசத் திட்டம் தோல்வியில் சென்றதால் அதற்கு எதிராக வலுவான சாட்சியாக இருக்கும் இவரை ( இவரது மரபணு சோதனை என்பது மிக வலுவானது) கோதாவிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக மட்டுமே.

இந்தப் படங்களை எம்மை ஆதரிக்க அல்லது பார்க்கத் தூண்டுவது என்பது தோல்வியில் உள்ள இத்திட்டத்திற்கான  மெய்யானவர்கள் தரப்பின் வலுவான வலுவெதிர்பாக உள்ள இவரையும் இவரது மரபணு சோதனைக்குத் தயார் என்ற இவரது முடிவையும் இல்லாமல் செய்வதோ அல்லது அவ்வாறு ஏதேனும் நடைபெற்றால் இது போன்ற படங்கள் மூலம் அதனை நீர்த்துப் போகச் செய்வதோ தான் சேரமானின் திட்டமாகும் என்பது என்னுடைய துணிபு. 

 ஆகையால் நாம் இதனை அறிந்து இவருக்கு எதிராக எதையும் செய்யமல் இருத்தல் போலித் திட்டத்தை இல்லாதொழிக்கும் குறுகிய கால நன்மையைத் தரும் (ஆயினும் இவர்கள் இப்போலித் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்பது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளில் இருந்து எம்மால் ஊகிக்கக்கூடியவாறு உள்ளது.).

ஆயினும், இப்படங்களை அறிந்து வைத்துக்கொள்ளுதல் இவர் தொடர்பாக நாம் அறிந்து வைத்துக்கொள்ள உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, விசுகு said:

இவர் ஒரு ஆங்கில ஆசிரியர். தமிழ் படிப்பது வீண் என்று சொல்பவர். தற்போது தலைவரை சித்தப்பா சித்தப்பாவின் மரியாதை என்பவர் இதுவரை போராட்டத்திற்கு எதுவும் செய்ததில்லை.  மாறாக அதை கொச்சைப்படுத்துதலை மட்டுமே செய்து வந்திருக்கிறார். 

ஆனால் இன்றைய நிலையில் இவரை சிலர் பயன்படுத்த அதையே இவரும் பயன் படுத்தி வருகிறார். தமிழரின் இழி நிலை எல்லோரையும் தலையில் தேய்க்க வழி வகுத்து இருக்கிறது. 

இதுவும் கடந்து போகும். 

வாய்ப்புக் கிடைத்தால் நீங்கள் ஆதரிக்கும் போலிக்கு எதிராக உள்ளவர்களை சேறடித்துவிட வேண்டியது. 

ஏன் ஐயனே இந்த வேலை?

ஆதாரம் இருந்தால் கொடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நன்னிச் சோழன் said:

உழைப்புக்கு நன்றி🙏.

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நன்னிச் சோழன் said:

ஆயினும், இப்படங்களை அறிந்து வைத்துக்கொள்ளுதல் இவர் தொடர்பாக நாம் அறிந்து வைத்துக்கொள்ள உதவும்.

9 hours ago, விசுகு said:

இவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 😭

இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்??

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நன்னிச் சோழன் said:

வாய்ப்புக் கிடைத்தால் நீங்கள் ஆதரிக்கும் போலிக்கு எதிராக உள்ளவர்களை சேறடித்துவிட வேண்டியது. 

ஏன் ஐயனே இந்த வேலை?

ஆதாரம் இருந்தால் கொடுங்கள்.

நான் எந்த போலியை ஆதரிக்கிறேன்??

இது நான் எனது முகநூலில் எழுதியது.

இது தமிழீழ கொடியை இஸ்ரேல் கொடியுடன் இணைத்து பறக்கவிடத் துணிந்த உங்களைப் போன்றவர்களுக்கும் பொருந்தும். 

ஆயுதத்துக்கு தான் மௌனம். செருப்புக்கு இல்லை. இனத்தை மட்டும் அல்ல தலைவரையும் யாரும் களங்கப்படுத்தக்கூடாது. 😡

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

இனத்தை மட்டும் அல்ல தலைவரையும் யாரும் களங்கப்படுத்தக்கூடாது

இந்த வருட மாவீரர் நாளில் துவாரகா எனும் பெயரில் கொள்கைப் பிரகடனம் செய்தவரையும், அவரை இயக்கும் சேரமான், அப்துல்லா, கிருபாகரன் போன்றோரையும் முட்டுக்கொடுக்கும் இன்பராசா,  காசி ஆனந்தன், நெடுமாறன் போன்றோரையும் வெளிப்படையாகக் கண்டிக்க முடியாமல் உள்ளதே. தலைவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை கொஞ்சம் இருப்பதனாலா? அப்படி என்றால் இப்படியான நம்பிக்கையுள்ளவர்களைத்தான் இந்தக்கும்பல் குறிவைத்து செயற்படுகின்றது என்பது புரியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

இவர் ஒரு ஆங்கில ஆசிரியர். தமிழ் படிப்பது வீண் என்று சொல்பவர். தற்போது தலைவரை சித்தப்பா சித்தப்பாவின் மரியாதை என்பவர் இதுவரை போராட்டத்திற்கு எதுவும் செய்ததில்லை.  மாறாக அதை கொச்சைப்படுத்துதலை மட்டுமே செய்து வந்திருக்கிறார். 

ஆனால் இன்றைய நிலையில் இவரை சிலர் பயன்படுத்த அதையே இவரும் பயன் படுத்தி வருகிறார். தமிழரின் இழி நிலை எல்லோரையும் தலையில் தேய்க்க வழி வகுத்து இருக்கிறது. 

இதுவும் கடந்து போகும். 

அவர் எப்படியாவது இருந்திட்டுப்போகட்டும்.. அவர் என்ன தான் தான் பிரபாகரன் அல்லது துவாரக என் பின்னால் வாருங்கள் என்று சொல்லாதவரை அவர் எவராகவாவது இருந்திட்டு போகட்டும்.. அவரிடம் இருந்து எமக்கு தேவை அவர் அப்பாவின் டி.என்.ஏ.. அதை அவர் தர தயார் என்று சொல்லிவிட்டார்..

இப்ப உங்களுக்கு துவாரகா வாற என்று சொன்னவர்கள் மூலம் அவரின் ஒரு தலைமுடியை வாங்கி பொதுவெளியில் கொடுங்கள்.. தமிழ் ஒலிக்கு துவாராக வீடியோ வாங்கி கொடுத்தவர்களால் முடியையும் வாங்கி கொடுக்க முடியும் பாதுகாப்பு பிரச்சினை இல்லாமல்.. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்த வருட மாவீரர் நாளில் துவாரகா எனும் பெயரில் கொள்கைப் பிரகடனம் செய்தவரையும், அவரை இயக்கும் சேரமான், அப்துல்லா, கிருபாகரன் போன்றோரையும் முட்டுக்கொடுக்கும் இன்பராசா,  காசி ஆனந்தன், நெடுமாறன் போன்றோரையும் வெளிப்படையாகக் கண்டிக்க முடியாமல் உள்ளதே. தலைவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை கொஞ்சம் இருப்பதனாலா? அப்படி என்றால் இப்படியான நம்பிக்கையுள்ளவர்களைத்தான் இந்தக்கும்பல் குறிவைத்து செயற்படுகின்றது என்பது புரியவில்லையா?

சேரமான் போன்ற புத்தகப் புலிகளின் ஒரு கட்டுரையை கூட நான் இதுவரை வாசித்ததில்லை வரவேற்றதில்லை

கிருபாகரனை நன்கு தெரியும். அவர் என் கண்ணில் படும் போது என் கேள்விகளுக்கு பதில் தரணும். இல்லை என்றால் செருப்பு பேசும். 

நீங்கள் குறிப்பிட்ட மற்றவர்களை நான் சந்திப்பேனோ தெரியாது. சந்தித்தால் பெத்த அப்பன் என்றாலும் துரோகம் என்றால்??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அவர் எப்படியாவது இருந்திட்டுப்போகட்டும்.. அவர் என்ன தான் தான் பிரபாகரன் அல்லது துவாரக என் பின்னால் வாருங்கள் என்று சொல்லாதவரை அவர் எவராகவாவது இருந்திட்டு போகட்டும்.. அவரிடம் இருந்து எமக்கு தேவை அவர் அப்பாவின் டி.என்.ஏ.. அதை அவர் தர தயார் என்று சொல்லிவிட்டார்..

இப்ப உங்களுக்கு துவாரகா வாற என்று சொன்னவர்கள் மூலம் அவரின் ஒரு தலைமுடியை வாங்கி பொதுவெளியில் கொடுங்கள்.. தமிழ் ஒலிக்கு துவாராக வீடியோ வாங்கி கொடுத்தவர்களால் முடியையும் வாங்கி கொடுக்க முடியும் பாதுகாப்பு பிரச்சினை இல்லாமல்.. 

எனக்கு என் பிள்ளை இருந்தால் என் முன்னுக்கு வரணும்.  அதன் பின்னர் எந்த சோதனையும் தேவையில்லை. 

ஆனால் என்னைப் பொறுத்தவரை அதுக்கெல்லாம் இனி தேவை இல்லை. உங்கள் போன்றோர் பரிசோதனைக்கு தயார் என்பதே வந்ததை நம்பும் நிலை தானே?

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திக் மனோகரனின் அரசியல் நிலைப்பாடு அவரது டி.என்.ஏ யை மாற்றாது😎, எனவே துவாரகா போலியா உண்மையா என்று அறிய அவரது டி.என்.ஏ பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், இதில் இன்னொரு பிரச்சினை இருக்கிறது:  ஒருவரின் டி.என்.ஏ மாதிரியை அவரது விருப்பமின்றி எடுக்க முடியாது. ஒரு குற்றத்தின் சந்தேக நபராக ஒருவர் இருந்தால் மட்டும் காவல் துறை நீதிமன்றக் கட்டளையூடாக டி.என்.ஏ மாதிரியைக் கட்டாயப் படுத்தி எடுக்கலாம். இது தெரிந்து கொண்டு தான் போலி துவாரகா ரீம் துணிவாக இறங்கியிருக்கிறது.

எனக்குப் புரிந்த வரையில், நீதிமன்றை அணுகி போலித் துவாராகவை டி.என்.ஏ பரிசோதனைக்குக் கட்டாயப் படுத்தும் இயலுமை எல்லோருக்கும் கிடையாது. "அடையாள மோசடியால் இவரிடம் பணத்தை இழந்து விட்டேன்" என்று பணம் இழந்த ஒருவர் முறைப்பாடு செய்து இவரைச் சந்தேக நபராக்கலாம். டி.என்.ஏ பரிசோதனை கோரலாம். இது நடந்திருக்கிறதா? தெரியவில்லை.

இன்னொரு வழி, கார்த்திக் மனோகரன் உட்பட்ட பிரபாகரன் இரத்த உறவுகள் யாராவது "குடும்பத்தின் நற்பெயருக்கு அடையாள மோசடியால் களங்கம் ஏற்படுத்தி விட்டார், இதனால் மன உளைச்சலில் இருக்கிறேன்!" என்று வழக்குப் போட்டு டி.என்.ஏ பரிசோதனையைக் கோர வழி வகுக்கலாம். சட்ட மொழியில் சொன்னால், மேல் இரு வழிகளிலும் standing (உரித்து?) உள்ள யாராவது தான் போலித் துவாரகாவின் டி.என்.ஏயை சட்டவழியில் கோர வைக்கலாம்.

என் ஊகம், இதனால் தான் போலித் துவாரகாவை முன்னிறுத்தியோர் கார்த்திக் மனோகரனைக் குறி வைக்கின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, விசுகு said:

நான் எந்த போலியை ஆதரிக்கிறேன்??

இது நான் எனது முகநூலில் எழுதியது.

இது தமிழீழ கொடியை இஸ்ரேல் கொடியுடன் இணைத்து பறக்கவிடத் துணிந்த உங்களைப் போன்றவர்களுக்கும் பொருந்தும். 

ஆயுதத்துக்கு தான் மௌனம். செருப்புக்கு இல்லை. இனத்தை மட்டும் அல்ல தலைவரையும் யாரும் களங்கப்படுத்தக்கூடாது. 😡

மித்துஜாவை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றெல்லாம் உருட்டிப் பிரட்ட வேண்டாம். ஆதரிக்கவில்லையெனில் வந்தது போலி என்று எழுதுங்கள் பார்க்கலாம்.

இஸ்ரேல் ஒரு வல்லரசான அங்கீகரிக்கப்பட்ட நாடு. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் சிம்ம சொப்பனம். எனக்குப் பிடித்த நாடு. ஆகையால் நான் போடபோகிறேன் என்றேன். இதில் தப்பேதும் இல்லை. 

தலைவரை யாரும் களங்கப்படுத்தக் கூடாது என்றுவிட்டு வீரச்சாவடைந்த தலைவரையும் அன்னாரின் குடும்பத்தினரையும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கூவித் திரிவதேன்? ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழை நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்+

இதில் திரு புலவர் அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். 

இந்தத் துவாரகா ஆட்டத்திற்குப் பின்னால் நமது பிரபல இந்தியா இருப்பதாகவும் இது போன்ற மற்றொரு நாசத் திட்டத்திற்கு தம்மை அழைத்ததாகவும் நேரடி வாக்குமூலம் தருகிறார்.🤪🤪

வடக்### கவிழ்ந்த தருணம்

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.