Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரை விமர்சனம்: சித்தா

Featured Replies

நேற்று இந்த திரைப்படத்தை பார்த்தேன். மிக நல்ல படம். உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் கண்களில் கண்ணீரை சில கட்டங்கள் வரவழைக்காமல் விடாது. 

சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை தினம்தோறும் வரும் செய்திகளாக மாறிவிட்ட காலத்தில் இப்படியான காத்திரமான படங்கள் வருவது நல்ல விடயம்.

வாய்ப்புக் கிடைத்தால், பிள்ளைகளுடன் சேர்ந்து பாருங்கள்

-------------------------------------

திரை விமர்சனம்: சித்தா

1131521.jpg
 
 

பழநியில் துப்புரவு ஆய்வாளராக இருக்கும் ஈஸ்வரன் (சித்தார்த்), அண்ணி (அஞ்சலி நாயர்), அண்ணன் மகள் சுந்தரி (சஹஸ்ர ஸ்ரீ) ஆகியோருடன் வாழ்கிறார். சுந்தரி மீது உயிரையே வைத்திருக்கிறார். காவல்துறையில் பணியாற்றும் தன் நண்பன் வடிவேலுவின் அக்கா மகளும் சுந்தரியின் வகுப்புத் தோழியுமான பொன்னி (அபியா தஸ்நீம்) மீதும் பாசத்துடன் பழகுகிறார். ஆனால், பொன்னி பாலியல் வன்முறைக்கு உள்ளாக, பழி ஈஸ்வரன் மீது விழுகிறது. அதிலிருந்து ஈஸ்வரன் விடுபடும் தருணத்தில், சுந்தரியை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் செல்கிறார். சுந்தரி கிடைத்தாளா? பொன்னியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது யார்? இந்தத் தேடுதல் பயணத்தில் ஈஸ்வரனுக்கு நிகழ்வது என்ன? என்பது மீதிப் படம்.

சிறார் மீதான பாலியல் வன்முறை, அது குடும்பங்களிலும் சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதைக் கையாள்வதற்குத் தேவையான புரிதல் ஆகியவை தொடர்பான சமூக விழிப்புணர்வுப் படத்தைப் பிரச்சார நெடி இல்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். ஒரு த்ரில்லருக்கேற்ற பரபரப்பான திரைக்கதை, அழுத்தமான வசனங்கள், அபாரமான காட்சிமொழி, தெளிவான சமூக - அரசியல் புரிதல் ஆகியவற்றுடன் மேம்பட்ட படைப்பாகக் கொடுத்திருக்கிறார்.

பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிலிருந்து மீண்டுவந்து நிம்மதியாக வாழ்வதற்கானச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பதிலாகக் குற்றவாளிகளைப் பழிவாங்குவதில் சில ஆண்கள் முனைப்புக் காண்பிப்பதையும், குடும்ப கவுரவம், வீரம், மானப் பிரச்சினை என அதன் பின்னால் இயங்கும் ஆணாதிக்க விழுமியங்களை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பதும் வரவேற்புக்குரியது. பொன்னியும் சுந்தரியும் தனியாக ஓர் இடத்துக்குப் பயணிக்கும் இடத்தில் தொற்றிக்கொள்ளும் பரபரப்பு, இறுதிவரை தொய்வின்றித் தொடர்கிறது. குறிப்பாகச் சுந்தரி தொலைந்துபோகும் இடைவேளைக் காட்சியும் இரண்டாம் பாதியில் வரும் வாகனப் பரிசோதனைக் காட்சியும் பரபரப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடுகின்றன.

இத்தகைய திரைக்கதையில் உணர்வுபூர்வமான உச்சங்களைத் தொடும் காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பது மேம்பட்ட திரைக்கதைக்குச் சான்று. ஈஸ்வரன் மீது பழி விழுந்திருக்கும் நேரத்தில் அவன் ஏன் சுந்தரியை விட்டுவிட்டுப் பொன்னியைத் தனியாக அழைத்துச் சென்றான் என்னும் கேள்வியை இயல்பாக அவன் காதலி சக்தி (நிமிஷா சஜயன்) கேட்க, அதற்கு ஈஸ்வரனின் எதிர்வினை, பொன்னிக்கு நேர்ந்த கொடுமைக்குப் பிறகு சுந்தரியின் அம்மாவிடம் வெளிப்படும் மாற்றங்கள் எனப் பல நுட்பமானத் தருணங்கள் வியக்க வைக்கின்றன.அதே நேரம், பாலியல் குற்றத்தின் தீவிரத்தை விரிவாக உணர்த்திவிட்ட பிறகு குற்றவாளியின் செயல்பாடுகளை இவ்வளவு விரிவாகக் காண்பித்திருக்க வேண்டுமா? என்னும் கேள்வி எழுகிறது.

சித்தார்த், சிறுநகரத்து இளைஞனாக மாறியிருக்கிறார். அண்ணன் மகளிடம் அன்பு காண்பிப்பது, பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வது, தன் மீது காண்பிக்கும் கோபத்தைக் கடந்துசெல்வது எனக் கனிவும் முதிர்ச்சியும் மிக்கவராக மனதில் பதிகிறார். தனக்கென்று சமூகப் பார்வை உள்ளவராகவும் நாயகனை நல்வழிப்படுத்துபவராகவும் அமைக்கப்பட்டுள்ள சக்தி கதாபாத்திரத்தின் மூலம் நிமிஷா சஜயனுக்கு தமிழில் சிறப்பான அறிமுகம் அமைந்துள்ளது.
குழந்தைகள் சஹஸ்ரா ஸ்ரீ, அபியா தஸ்நீம் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

அஞ்சலி நாயர் உட்பட அனைவரும் நடிப்பைக் குறையின்றித் தந்துள்ளனர். திபு நிணன் தாமஸ் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கிறது. பாலாஜி சுப்ரமணியனின் ஒளிப்பதிவும் சுரேஷ் ஏ.பிரசாத்தின் படத்தொகுப்பும் திரைக்கதைக்குத் தக்க துணை புரிந்திருக்கின்றன.சிறார் பாலியல் வன்முறையை எப்படித் தடுப்பது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவுவது என்பது குறித்த புரிதலை மேம்படுத்திக் கொள்ள அனைவரும் பார்க்க வேண்டிய படம் ‘சித்தா’.

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1131521-siddharth-stsrrer-chithha-movie-review.html

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பார்த்துவிட்டு, இதே இணைப்பை கொடுப்பென்று பார்த்தால் நிழலி இணைத்துடவிட்டார், நல்ல படம்👍

  • கருத்துக்கள உறவுகள்

'சித்தா' திரைப்பட விமர்சனம் - 'Chithha' Movie Review | S.U.Arun Kumar - Siddharth, Nimisha Sajayan

 


@sivagurusivaranchithan5867
1 month ago
குப்பை படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இப்படியான படங்களுக்கு ஊடகங்கள் கொடுப்பதில்லையே


@santhoshd6631
1 month ago
அருமை தோழரே...நேற்றுதான் இந்த படம் பார்த்தேன்.... உங்கள் விமர்சனம் மீண்டும் படத்தை பார்த்தது போல் உள்ளது....அருமையான விமர்சனம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தைப் பற்றி மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது தான் சித்தார்த் கன்னடாவில் இருந்து விரட்டப்பட்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாட்களுக்கு முன்பு நானும் பார்த்தேன் ...யாழில் வந்து எழுதவேண்டும் என்று நினைத்தேன் ...பஞ்சியாய் இருந்தது விட்டு விட்டேன் ...எனக்கு படம் பிடித்து இருந்தது ...சித்தார்த்தின் நடிப்பு அருமை 
 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தப் படத்தைப் பற்றி மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது தான் சித்தார்த் கன்னடாவில் இருந்து விரட்டப்பட்டாரா?

 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரதி said:

இரண்டு நாட்களுக்கு முன்பு நானும் பார்த்தேன் ...யாழில் வந்து எழுதவேண்டும் என்று நினைத்தேன் ...பஞ்சியாய் இருந்தது விட்டு விட்டேன் ...எனக்கு படம் பிடித்து இருந்தது ...சித்தார்த்தின் நடிப்பு அருமை 
 

 

22 hours ago, நிழலி said:

நேற்று இந்த திரைப்படத்தை பார்த்தேன். மிக நல்ல படம். உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் கண்களில் கண்ணீரை சில கட்டங்கள் வரவழைக்காமல் விடாது. 

எந்த தளத்தில் பார்த்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

 

அமெசானில் 3 டாலர்கள் கட்டினால்த் தான் பார்க்கலாம் போல.

  • தொடங்கியவர்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

எந்த தளத்தில் பார்த்தீர்கள்?

இங்கு IPTV  யில் 

48 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெசானில் 3 டாலர்கள் கட்டினால்த் தான் பார்க்கலாம் போல.

Amazon Prime இல் இருக்காது என நினைக்கின்றேன், ஏனெனில் இது HotStar OTT இல் தான் வெளியானது,

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இங்கு IPTV  யில் 

Amazon Prime இல் இருக்காது என நினைக்கின்றேன், ஏனெனில் இது HotStar OTT இல் தான் வெளியானது,

IMG-2199.png

அமெசான் பிறைமில் இப்படி வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2023 at 07:31, ஈழப்பிரியன் said:

IMG-2199.png

அமெசான் பிறைமில் இப்படி வருகிறது.

 

https://einthusan.tv/movie/browse/?lang=tamil

பார்க்கலாம்👍

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படம் சில இடங்களில் கண்கள் குளமாகி ........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2023 at 19:43, ஈழப்பிரியன் said:

 

எந்த தளத்தில் பார்த்தீர்கள்?

நான் தமிழ் கன்னில் [tamil gun ]பார்த்தேன் 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரதி said:

நான் தமிழ் கன்னில் [tamil gun ]பார்த்தேன் 

நன்றி ரதி.

முன்னர் இப்படிப்பட்ட  தளங்களில் பார்ப்பேன்.இப்போ கொப்பி கிளியராக இல்லாததால் பார்ப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நன்றி ரதி.

முன்னர் இப்படிப்பட்ட  தளங்களில் பார்ப்பேன்.இப்போ கொப்பி கிளியராக இல்லாததால் பார்ப்பதில்லை.

நான் HD கொப்பியில் வந்தால் தான் பார்ப்பது 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நன்றி ரதி.

முன்னர் இப்படிப்பட்ட  தளங்களில் பார்ப்பேன்.இப்போ கொப்பி கிளியராக இல்லாததால் பார்ப்பதில்லை.

ஈழப்பிரியன், Tentkotta தளத்தில் உள்ளது. 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

நான் தமிழ் கன்னில் [tamil gun ]பார்த்தேன் 

3 hours ago, ஈழப்பிரியன் said:

நன்றி ரதி.

முன்னர் இப்படிப்பட்ட  தளங்களில் பார்ப்பேன்.இப்போ கொப்பி கிளியராக இல்லாததால் பார்ப்பதில்லை.

படத்தை காசு குடுத்து பாப்பம் எண்ட சிந்தனை அறவே இல்லைப்போல கிடக்கு :cool:

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

ஈழப்பிரியன், Tentkotta தளத்தில் உள்ளது. 

 

தகவலுக்கு நன்றி.

1 hour ago, குமாரசாமி said:

படத்தை காசு குடுத்து பாப்பம் எண்ட சிந்தனை அறவே இல்லைப்போல கிடக்கு :cool:

 

சரி காசை யாரிடம் கொடுப்பது?

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2023 at 10:39, குமாரசாமி said:

படத்தை காசு குடுத்து பாப்பம் எண்ட சிந்தனை அறவே இல்லைப்போல கிடக்கு :cool:

 

இந்த கூட்டணியில என்னையும் சேர்த்துக்கொள்ளலாம், 1tamilmv.phd இந்த தளத்தில் தரவிறக்கி பார்ப்பதுண்டு, அத்துடம் அமேசன்,நெட்பிளிக்ஸ் தளங்களிலும் பார்ப்பதுண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.