Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2ebe5875-9666-4ff3-9217-909dff64f357-955

எமது குடும்பத்து புது வரவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள் .........நீங்களும் உங்கள் குடும்பமும் சகல வளங்களும் பெற்று நலமாக வாழ வாழ்த்துகின்றோம் .......!  💐

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள் சுவை; பேரனுக்கு நாமம் சூட்டியாயிற்றா. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted


பேரனுக்கும், தாத்தாவுக்கு இனிய நல்வாழ்த்துகள் உரித்தாகுக. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நியாயம் said:

வாழ்த்துக்கள் சுவை; பேரனுக்கு நாமம் சூட்டியாயிற்றா. 

அண்ணா சிறு திருத்த‌ம் 

சுவை என்று அழைப்ப‌து சுவைப்பிரிய‌ன் அண்ணாவை

சுவி ஜ‌யாவை சில‌ர் சுவிய‌ர் என்று அழைப்பின‌ம்........சுவி அண்ணா என்று அழைப்பின‌ம்🥰🙏...........

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, நியாயம் said:

வாழ்த்துக்கள் சுவை; பேரனுக்கு நாமம் சூட்டியாயிற்றா. 

ஓம்........பெயர் ஆர்யன் (ARYAN)......!    💐

12 hours ago, nochchi said:


பேரனுக்கும், தாத்தாவுக்கு இனிய நல்வாழ்த்துகள் உரித்தாகுக. 

உங்களுக்கு எனது மருமகளைத் தெரிந்திருக்கும் நொச்சி......ஜெர்மனியில் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு வந்திருந்தோம்......அவாவும் பங்கு பற்றினவா.......நீங்களும் வந்திருந்தீர்கள் , ஆனால் ஆளையாள் தெரியாததால் அறிமுகமாகவில்லை.......அந் நிகழ்ச்சி பற்றி யாழிலும் குறிப்பிட்டிருந்தீர்கள் என்று ஞாபகம்........  😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவியண்ணா, உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன் ...தாயும்,சேயும் நலமாய் இருப்பார்கள் என நம்புகிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, suvy said:

ஓம்........பெயர் ஆர்யன் (ARYAN)......!    💐

உங்களுக்கு எனது மருமகளைத் தெரிந்திருக்கும் நொச்சி......ஜெர்மனியில் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு வந்திருந்தோம்......அவாவும் பங்கு பற்றினவா.......நீங்களும் வந்திருந்தீர்கள் , ஆனால் ஆளையாள் தெரியாததால் அறிமுகமாகவில்லை.......அந் நிகழ்ச்சி பற்றி யாழிலும் குறிப்பிட்டிருந்தீர்கள் என்று ஞாபகம்........  😁

 

ஆர்யனுக்கும், பெற்றோர், உறவுகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். 

ஆர்யன் என்றால் என்ன அர்த்தம்? நீங்கள் ஒரு தமிழ் பழம். பேரனின் பெயர் சூட்டலில் உங்கள் பங்களிப்பு உள்ளதோ. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, நியாயம் said:

 

ஆர்யனுக்கும், பெற்றோர், உறவுகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். 

ஆர்யன் என்றால் என்ன அர்த்தம்? நீங்கள் ஒரு தமிழ் பழம். பேரனின் பெயர் சூட்டலில் உங்கள் பங்களிப்பு உள்ளதோ. 

இப்போதெல்லாம் பிள்ளைகள் "சர்பிரைஸ் " என்று ஏதேதோ செய்கிறார்கள்......அதனால் அவர்கள் சொல்லும்வரை தெரியாது.........!  😁

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/12/2023 at 04:17, suvy said:

ஓம்........பெயர் ஆர்யன் (ARYAN)......!    

IMG-2202.jpg

வணக்கம் சுவி.இது எனது மகனின் மூன்றாவது குழந்தை.

அவன் பெயரும் ஆர்யன் (Ariyaan   )தான்.

வயது 1 1/2 ஆகுது.

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள் சுவி அண்ணா. ஆர்யன் ஆல் போல தழைத்து, அருகு போல வேரோடி, மூங்கில் போல சூழ்ந்து வாழ வாழ்த்து🙏.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆர்யன் பெயர் விளக்கம் 

ஆர்யன் என்பது சம்ஸ்கிருத இந்துப் பெயர். `உயர்வான' என்ற பொருள் உடையது”.

ஷாருக்கானின் மூத்த மகனின் பெயரும் இதுவே.

https://cinema.vikatan.com/amp/story/shah-rukh-khan-shares-the-interesting-reason-behind-naming-his-son-aryan-khan

வட இந்தியர், பிராமணர், ஹிட்லர், யாழ்ப்பாணத்து “ஆரிய” சக்கரவர்திகள்,  பாரதியார் (24 இடங்களில் இந்த சொல்லை பாவித்துள்ளாராம்) அனைவரும் வேறுபட்ட சூழமைவுகளில் இந்த சொல்லை “உயர்ந்த” என்ற அர்தத்திலேயே பாவித்துள்ளனர்.

4 minutes ago, நந்தன் said:

இது தமிழ் பெயரா

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/12/2023 at 10:57, ஈழப்பிரியன் said:

IMG-2202.jpg

வணக்கம் சுவி.இது எனது மகனின் மூன்றாவது குழந்தை.

அவன் பெயரும் ஆர்யன் (Ariyaan   )தான்.

வயது 1 1/2 ஆகுது.

 

இப்படியான பெயரில் ஆறு/ஏழு வயதில் எனக்கு தெரிந்த ஒருத்தரும் உள்ளார். நான் நினைக்கின்றேன் இந்த பெயர் கடந்த பல ஆண்டுகளாக பிரபலம் போலும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, நியாயம் said:

 

இப்படியான பெயரில் ஆறு/ஏழு வயதில் எனக்கு தெரிந்த ஒருத்தரும் உள்ளார். நான் நினைக்கின்றேன் இந்த பெயர் கடந்த பல ஆண்டுகளாக பிரபலம் போலும்.

எனக்கும் இதே வயசில் ஒருவரை தெரியும். தமிழ் நடிகர் ஆர்யா வரவின் பின் பிரபலமாகி இருக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

எனக்கும் இதே வயசில் ஒருவரை தெரியும். தமிழ் நடிகர் ஆர்யா வரவின் பின் பிரபலமாகி இருக்கலாம்.

 

எனது மனைவியின் தகப்பனை எமது பிள்ளைகள் ஐயா என்று தான் அழைப்பார்கள்.

2002 இல் காலமாகிவிட்டார்.பேரப் பிள்ளைகள் மிகவும் நேசித்தார்கள்.மகன் திருமணமாகியவுடனேயே மகன் பிறந்தால் ஐயா என்று தான் பெயர் வைக்க போவதாக சொல்லுவான்.

முதலாவதாக மகன் பிறந்தான்.அய்யன் என்று பெயர் வைத்து வீட்டில் ஐயா என்றே அழைப்போம்.

பின்னர பிறந்த குழந்தைகளுக்கும் அ வில் பெயர் வர வேண்டுமென்று அப்படியே செய்கிறான்..
 

Ayaan

Anaya

Ariyaan

அடுத்தது சித்திரையில் பிறக்க போறான்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/12/2023 at 10:17, suvy said:

ஓம்........பெயர் ஆர்யன் (ARYAN)......!    💐

உங்களுக்கு எனது மருமகளைத் தெரிந்திருக்கும் நொச்சி......ஜெர்மனியில் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு வந்திருந்தோம்......அவாவும் பங்கு பற்றினவா.......நீங்களும் வந்திருந்தீர்கள் , ஆனால் ஆளையாள் தெரியாததால் அறிமுகமாகவில்லை.......அந் நிகழ்ச்சி பற்றி யாழிலும் குறிப்பிட்டிருந்தீர்கள் என்று ஞாபகம்........  😁

வணக்கம் சுவியவர்களே, நினைவிருக்கிறது. நிழற்படப்பதிவில் உங்களைக் காணமுடிந்தது. இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. பேரனைப் பார்க்க வந்துபோயிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். அழகான, அற்புதமான தருணங்கள் வாய்க்கப்பெற்றுள்ளீர்கள். வாழ்க நலமுடனும் வளமுடனும் என வாழ்த்தவதில் மனநிறைவடைகின்றேன். 

On 10/12/2023 at 19:55, ஈழப்பிரியன் said:

எனது மனைவியின் தகப்பனை எமது பிள்ளைகள் ஐயா என்று தான் அழைப்பார்கள்.

2002 இல் காலமாகிவிட்டார்.பேரப் பிள்ளைகள் மிகவும் நேசித்தார்கள்.மகன் திருமணமாகியவுடனேயே மகன் பிறந்தால் ஐயா என்று தான் பெயர் வைக்க போவதாக சொல்லுவான்.

முதலாவதாக மகன் பிறந்தான்.அய்யன் என்று பெயர் வைத்து வீட்டில் ஐயா என்றே அழைப்போம்.

பின்னர பிறந்த குழந்தைகளுக்கும் அ வில் பெயர் வர வேண்டுமென்று அப்படியே செய்கிறான்..
 

Ayaan

Anaya

Ariyaan

அடுத்தது சித்திரையில் பிறக்க போறான்.

வணக்கம் ஈழப்பிரியனவர்களே, உங்கள் பேரக்குழந்தைகள் பற்றிய பகிர்வைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள்.

  • Like 2


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.