Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் : முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் : முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

GAbWlc9WkAAiXa3.jpeg

புயல், கனமழை காரணமாக பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்த இரு தினங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தசூழலில் இன்று (டிசம்பர் 3) தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரனையும் தொடர்பு கொண்டு பேசினார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புயல் காரணமாக 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4,967 இதர நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் அழைத்து வந்து தங்க வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 350 பேர் கொண்ட 14 குழுக்கள், 225 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 2.44 கோடி மக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் உள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறோம்.

திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இருந்து 685 பேர் 11 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து அவசரகால கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்படும். புயல் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் மின்கம்பங்கள், மின்கம்பிகள், மரங்கள் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

அமைச்சர்கள் கே.என்.நேரு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், மூர்த்தி, காந்தி, முத்துசாமி உள்ளிட்டோர் மழை மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையை பொறுத்தவரை 1000 இடங்களில் மோட்டார் பம்புகள் வைக்கப்பட்டு மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

 

https://minnambalam.com/tamil-nadu/people-should-not-come-out-because-of-the-cyclone-cm-stalin-interview/

  • கருத்துக்கள உறவுகள்

மிக்ஜாம் புயல்: சென்னையில் கனமழை; சாலைகளில் வெள்ளம் - படகுகள் மூலம் மக்கள் மீட்பு - சமீபத்திய தகவல்கள்

சென்னை வெள்ளம்

பட மூலாதாரம்,NDRF

படக்குறிப்பு,

பெருங்களத்தூரை ஒட்டிய பகுதியில் படகு மூலம் மீட்கப்படும் மக்கள்

30 நவம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்

மிக்ஜாம் புயல் நாளை (டிச. 5) முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயலின் அறிகுறிகள் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே தென்படத் தொடங்கிவிட்டன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் கன கன மழை பெய்து வருகிறது.

பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கியிருப்பதால், சென்னையின் முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறன.

புயல் உருவாகியுள்ள நிலையில், துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பாக்கம் துறைமுகங்களில் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய சேலானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நவம்பர் 30-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் ஒன்றாம் தேதி காலை ஐந்தரை மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

சென்னை வானிலை மையம் கொடுத்த அப்டேட்

தமிழ்நாடு புயல்

பட மூலாதாரம்,RMC, CHENNAI

படக்குறிப்பு,

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் குறித்து, சென்னை மண்டல வானிலை மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் சமீபத்திய நிலவரங்களை பகிர்ந்துள்ளார்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி, மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கு வடகிழக்கே 110 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் இந்த புயல் நகர்ந்து வருகிறது.

இதுதொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தீவிர புயலாக வலுப்பெற்ற பிறகு வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோரத்திற்கு இணையாக நகர்ந்து நாளை முற்பகலில் கரையை கடக்கும் என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே நாளை முற்பகலில் புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

இன்று இரவு வரை இந்த மாவட்டங்களில் மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயலால் என்னென்ன பாதிப்பு?

தமிழ்நாடு புயல்

பட மூலாதாரம்,IMD

மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்துள்ளன.

நீர் நிரம்பி அடைத்திருப்பதால், முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், சில இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

முதலை

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

படக்குறிப்பு,

சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பெருங்களத்தூர் அருகே முதலை ஒன்று சாலையில் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிபிசி இந்தக் காணொளியை சரிபார்க்க இயவில்லை.

பெருங்களத்தூரில் முதலை வந்ததா?

சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பெருங்களத்தூர் அருகே முதலை ஒன்று சாலையில் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிபிசி இந்தக் காணொளியை சரிபார்க்க இயவில்லை.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, "இந்த வீடியோ குறித்து பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.சென்னையில் உள்ள பல நீர்நிலைகளில் சில குவளை முதலைகள் உள்ளன. இவை கூச்ச சுபாவமுள்ள விலங்குகள். மனித தொடர்பைத் தவிர்க்கின்றன. புயலின் தாக்கத்தில் பாரிய மழை காரணமாக நீர் பெருக்கெடுத்துள்ளதால், தயவு செய்து நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். இந்த விலங்குகளை தனியாக விட்டுவிட்டு, தூண்டப்படாமல் இருந்தால், மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை. பீதியடைய தேவையில்லை. வனவிலங்கு பிரிவு உஷார்படுத்தப்பட்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

ரத்தான விமானம் மற்றும் ரயில்கள்

மிக்ஜாம் புயல் விமானம் ரத்து

பட மூலாதாரம்,UGC

படக்குறிப்பு,

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் 20 விமானங்களின் வருகை, புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் கனமழையினால், சென்னை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலைய ஓடுதளத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

விமான ஓடுதளங்களில் தண்ணீர் அதிகளவு தேங்கியிருப்பதால், சென்னையில் தரையிறங்க வேண்டிய மற்றும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானங்கள், தரையிறங்க ஏதுவான சூழல் இல்லாத நிலையில் பெங்களூரூவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

மிகவும் அவசியமான சூழலில் மட்டும் விமான பயணங்களை மேற்கொள்ளுமாறும், பிற பயணிகள் தங்களது பயணங்களை ரத்து செய்யுமாறும் சென்னை விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

கனமழை காரணமாக ஒரு சில ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 6 ரயில்கள், வியாசர்பாடி - பேசின் பிரிட்ஜ் ரயில் பாலத்தில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ரத்தாகியுள்ளன.

அதே போல சென்னைக்கு வர வேண்டிய 6 ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதே போல சென்னை புறநகர் ரயில் சேவையும் இன்று காலை 8 மணி வரை ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

கனமழையின் காரணமாக சென்னையின் ஒரு சில மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் வழக்கம் போல இயக்கப்பட்டாலும், பரங்கிமலை, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

'பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்' - வானிலை ஆய்வு மையம்

டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதி, பொது மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையமும், தமிழ் நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவும் அறிவுறுத்தியுள்ளனர்.

"புயல் கரையை கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும்வரை பொது மக்கள் வெளியில் வராமல் இருக்க வேண்டும்," என வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்திருந்தார்.

மிக்ஜாம் புயலால் கனமழையுடன் 60-70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் அல்லது நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும் மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 4 ஆம் தேதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல்

பட மூலாதாரம்,NDRF

மிக்ஜாம் புயலின் தற்போதைய நிலை என்ன?

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை தற்போது இந்தத் தாழ்வுநிலை சென்னையிலிருந்து தென்கிழக்கே 340கி.மீ தொலைவில் இருக்கிறது.

அது விரைவில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்பின் அது வடமேற்கே நகர்ந்து, டிசம்பர் 4-ஆம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திராவை ஒட்டிய வங்கக் கடலை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு இந்தப் புயல், டிசம்பர் 4-ஆம் தேதியன்று மதியம் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளை வந்தடையும். பிறகு இந்தப் புயல் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை ஒட்டியே நகரும்.

அதையடுத்து டிசம்பர் 5-ஆம் தேதி ஆந்திராவின் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்ணத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் வேகம் 80-90கி.மீ அளவுக்கு இருக்கும்.

இந்த புயல் சின்னத்தின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாகப்பட்டனம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 
சென்னையில் மழை

டிசம்பர் 3, 4 தேதிகளில் தீவிர கன மழை எச்சரிக்கை

இந்தப் புயலின் காரணமாக, டிசம்பர் 3-ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் டிசம்பர் 4-ஆம் தேதியன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டிசம்பர் 4-ஆம் தேதியன்று விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60கி.மீ முதல் 70கி.மீ வேகத்திலும் இடையிடையே 80கி.மீ வேகத்திலும் வீசும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

புயலின் பெயர் எப்படி வைக்கப்பட்டது?

இது புயலாக உருமாறிய பிறகு இதற்கு, 'மிக்ஜாம்' எனப் பெயரிடப்பட உள்ளது. இந்தப் பெயர் மியான்மரால் வழங்கப்பட்டது.

இந்தப் புயலின் காரணமாக, வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மூன்றாம் தேதி காலை வரை 80கி.மீ. வேகத்திலும் அன்று மாலை வரை மணிக்கு 70 முதல் 80கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் மூன்றாம் தேதி மாலை முதல் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, டிசம்பர் 4ஆம் தேதி மாலை முதல் மணிக்கு 80 முதல் 90கி.மீ வேகத்திலும் இடையிடையே 100 கி.மீ வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும்.

இதன் காரணமாக மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்களும் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

சென்னையில் மழை

புயல் கரையைக் கடக்கும்போது என்ன செய்யக்கூடாது?

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று 10 முக்கிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. புயல் வரும் சமயத்தில் வெளியே, குறிப்பாக கடற்கரைப் பகுதிகளுக்கு, சென்று வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தாக அமையலாம்

2. வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். வீட்டின் கதவோ, சன்னல் கதவோ நல்ல நிலையில் இல்லாவிட்டால், அதை உடனடியாக சரி செய்துகொள்வது நல்லது.

3. காற்றின் அழுத்தத்தால் சன்னல் கண்ணாடிகள் விரிசல் விட்டு உடையவோ, உடைந்து சிதறவோ வாய்ப்புண்டு. மரப்பலகை, துணி ஏதேனும் இருந்தால், சன்னலை அதை வைத்து மூடிக்கொள்ளுங்கள். கண்ணாடித் துண்டுகள் காற்றின் வேகத்தில் வீட்டுக்குள் சிதறுவதை அது தடுக்கும்.

4. சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் பழைய கட்டடங்களுக்கு உள்ளேயோ அருகிலோ இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

5. பலத்த காற்றின் காரணமாக மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டார்ச் லைட், பவர் பேங்க், மெழுகுவர்த்தி, இன்வர்ட்டர் போன்றவற்றை தயார் செய்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.

6. பலத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் முன்னெச்சரிக்கையாக காய்கறிகள், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை ஓரிரு நாட்களுக்கு தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

7. உங்கள் பகுதியில் உள்ள அரசு மற்றும் தொண்டூழிய அமைப்புகளின் உதவி எண்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

8. மின்சாரம் இல்லாமல் போனால், தொலைக்காட்சி செய்திகளை எல்லோரும் பார்க்க முடியாது. செல்பேசியே தகவல்களை பெற வழியாக இருக்கும். பேட்டரியில் இயங்கும் பழைய டிரான்சிஸ்டர் இருந்தாலும் அது உதவியாக இருக்கும். அதனால் சமூக ஊடகங்களில் வரும் அனைத்து தகவல்களையும் நம்பி விடாமல், போலிச் செய்திகள் குறித்து கவனமாக இருங்கள்.

9. புயல் கரையைக் கடக்கும்போது பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியில்லாமல் வெளியே செல்ல நேர்ந்தால் கவனமாக இருக்கவும். இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் கவனம் தேவை.

10. கனமழையும் புயலுடன் சேர்ந்து வரும். தாழ்வான பகுதிகளில் உங்கள் வீடு இருந்தால், விலைமதிப்புள்ள பொருட்களையும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பத்திரப்படுத்திவிட்டு, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது நல்லது.

சென்னையில் மழை

பட மூலாதாரம்,IMD.GOV.IN

சென்னையில் மழை

தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர்

படகுகள், தண்ணீரில் இருக்கும் போது பயன்படுத்தப்படும் டியூப்கள், என மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் கமாண்டோ குழுக்கள் சென்னையில் தயார் நிலையில் உள்ளன. இரவு நேரங்களில் வெள்ள நீர் சூழந்து மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்களை மீட்புப் பணிகளை தொடங்குவார்கள்.

சென்னையில் மழை

தி.நகர் ,மேற்கு மாம்பலம் உள்ளிட்ட எந்தெந்த தண்ணீர் தேங்கியிருக்கிறதோ, அங்கு மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் முன்கூட்டியே சென்று தயாராக இருக்க, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தி.நகர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் செல்லக் கூடிய ரங்கராஜன் சுரங்கப்பாதையில் மழை நீர் வெளியேற்றப்படுவது சவாலாக இருப்பதால், அங்கு கூடுதல் மோட்டார்கள் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c80w795ej5xo

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை | கனமழை -வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டடம் மண்ணுக்குள் புதைந்தது

04 DEC, 2023 | 12:38 PM
image
 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டடம் மண்ணுக்குள் புதைந்தது. இதற்குள் பலர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, சென்னை வேளச்சேரியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று மண்ணுக்குள் இறங்கி உள்ளது. இந்த கட்டிடத்திற்குள் கேஸ் நிலைய ஊழியர்கள் சிக்கியுள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ‘மிக்ஜாம்’ புயல் நேற்று உருவானது. புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது.

chennai_rain_2023.jpg

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். அதன்பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் விடியவிடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் இரவில் இருந்தே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது.

chennai_rain3.jpg

குறிப்பாக சென்னை வேளச்சேரியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தான் சென்னை ரேஸ்கோர்ஸ் சாலை அருகே கிண்டி 5 பர்லாங்க் ரோட்டில் கியாஸ் நிரப்பும் நிலையம் உள்ளது. இந்த நிலையத்துக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. ஊழியர்கள் தங்கும் வகையில் இந்த கட்டடம் அமைந்துள்ளது.

இந்நிலையில் தான் இன்று காலையில் கனமழை தொடர்ந்து பெய்த நிலையில் திடீரென்று அந்த கட்டடம் தரையில் இறங்கியது. இதனால் கட்டடம் மண்ணுக்குள் சென்றது. இந்த கட்டத்தில்எரிவாயு  நிலைய ஊழியர்கள் இரவு பணியை முடித்து தங்கியிருந்தனர். முதலில் 10 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியானது.

ஆனால் 3 ஊழியர்கள் மட்டுமே அந்த கட்டத்துக்குள் சிக்கினர். இதில் 2 பேர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மீட்பு பணியில் கிண்டி, வேளச்சேரி தீயணைப்பு வீரர்கள், கிண்டி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

chennai_rain_20231.jpg

இதற்கிடையே கட்டடம் மண்ணில் புதைந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

https://www.virakesari.lk/article/170923

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்களை வெளியேற வேண்டாம் என குறும் செய்திகள் அனுப்பப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை நாராயணன் ஏரி உடைந்து வெள்ளம் வெளியேறுகிறதாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

4ஆயிரம் கோடி சிலவளித்து சென்னையை நீர் தேங்காமல் பார்த்துகொண்ட கதை அவ்வளவும் பொய்த்து விட்டது .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

4ஆயிரம் கோடி சிலவளித்து சென்னையை நீர் தேங்காமல் பார்த்துகொண்ட கதை அவ்வளவும் பொய்த்து விட்டது .

 

இனி 200 ரூபாய் உபிஸ் என்னா உருட்டு உருட்ட போராங்களோ!

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ள அனர்த்தங்கள் வசதி படைத்த நாடுகளிலும் அடிக்கடி எற்படுகின்றது தான். ஆனால் வெள்ள அழிவுகள் நடந்த இடத்தில் இன்னுமொரு முறை நடக்காத முறையில் நிவர்த்தி செய்து பாதுகாத்து விடுவார்கள். ஆனால் எனக்கு தெரிந்த காலம் தொடக்கம் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் வருடா வருடம் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வெள்ளம் பார்க்க புறப்பட்டு விடுவார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளத்தில் மிதக்கும்  சென்னை  விமான நிலையம்.  
இது இந்தியாவின் 5´வது பெரிய விமான நிலையம் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இனி 200 ரூபாய் உபிஸ் என்னா உருட்டு உருட்ட போராங்களோ!

வந்தாங்க 2௦15 விட பாரிய மழை பொழிவு இந்த அனர்த்தத்தை யாருமே தடுக்க முடியாது என்று உருட்டினார்கள் 2௦23 தற்போது 34 cm தான் மழை 2௦15ல் 33 cm அந்த 1 cm பாரிய அனர்த்தமா ?இதுக்குதான் 4ஆயிரம் கோடி சிலவா? என்று கேள்விகள் பறக்க 2௦௦கூட்டம் எஸ்கேப் ஆகிட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்

Chennai-ஐ கலங்கடித்த Michaung; ஒரே இரவில் 2015-ஐ நினைவுபடுத்திய புயல் - சென்னை எப்படி இருக்கு?

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

வந்தாங்க 2௦15 விட பாரிய மழை பொழிவு இந்த அனர்த்தத்தை யாருமே தடுக்க முடியாது என்று உருட்டினார்கள் 2௦23 தற்போது 34 cm தான் மழை 2௦15ல் 33 cm அந்த 1 cm பாரிய அனர்த்தமா ?இதுக்குதான் 4ஆயிரம் கோடி சிலவா? என்று கேள்விகள் பறக்க 2௦௦கூட்டம் எஸ்கேப் ஆகிட்டுது .

ப‌தில் இல்லாட்டி சொல்லாம‌ கொள்ளாம‌ ஓடுவ‌து தானே அவ‌ர்க‌ளின் ப‌ழ‌க்க‌ம்.................

  • கருத்துக்கள உறவுகள்

மிரட்டும் மிக்ஜாங்: No Electricity; Airport Closed - Chennai Situation? | Michaung Cyclone

 

  • கருத்துக்கள உறவுகள்

மிரட்டும் மிக்ஜாங்: No Electricity; Airport Closed - Chennai Situation? | Michaung Cyclone

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்றாடம் கூலி வேலைக்கு போற மக்களின் நிலை என்னவாகிறது...........வேலைக்கு போனால் தான் உண‌வு சாப்பிட‌ முடியும் என்ர‌ ம‌க்க‌ளை நினைக்க‌ க‌வ‌லையாக இருக்கு...............

3 hours ago, குமாரசாமி said:

 

நீச்ச‌ல் குள‌த்தில் ம‌க்க‌ள் நீந்துவ‌து போல் வாக‌ன‌ம் நீந்துது...............

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா ஆட்சியின் போது பெரு வெள்ளம் ஏற்பட்ட நிலையில்,  
முன் அறிவித்தல் இல்லாமல்  இரவில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப் பட்ட போது.. 
ஏற்பட்ட காட்டு வெள்ளத்தில்... நமது கள உறவு  @புரட்சிகர தமிழ்தேசியன் னின் 
பிறந்து சில மாதங்களே நிரம்பிய ஆண்  குழந்தை வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்ட 
சோக நிகழ்வும் நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

xy.jpg

உக்கார்ந்து சாப்பிட 60 பொதி சாப்பாடு 65 நெகிழிக்கு கூடுதல் விலை..5
சரி சாப்பிட்டு விட்டு கழிவுகளை குப்பையில் போடுகினமா அதுவும் கிடையாது.. நாளை காலை கொடுங்கையூரில் கழிவு நீர் பதையை அடைத்த நெகிழிய கொண்டுவந்து கொட்டுவீனம்.. அப்போது தெரியும்..

Kodungaiyurdumpyard.jpg
 
அது போக வடிகால் வசதியில்லா அடுக்குமாடி குடியிருப்பு மொள்ளமாறித்தனம்..

டிஸ்கி :
நாளைக்கு மறுநாள் ஆரியம்  vs திராவிடம் என்று ஒரு உருட்டு உருட்டுவினம் பாருங்கள் சனம் எல்லாத்தையும் மறந்து மறுபடி  புள்ளடி போடுவினம்.. அட போங்கப்பா..

ஒரே நாளில் 32 சென்டிமீட்டர் மழை சென்னையில் கொட்டியுள்ளது. அதாவது 320 மில்லி மீட்டர். இப்படி மழை கொட்டினால் உலகில் எந்த நாட்டிலும் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியாது. அது சென்னையாக இருந்தால் என்ன நியூயோர்க்காக் இருந்தால் என்ன...

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

ஒரே நாளில் 32 சென்டிமீட்டர் மழை சென்னையில் கொட்டியுள்ளது. அதாவது 320 மில்லி மீட்டர். இப்படி மழை கொட்டினால் உலகில் எந்த நாட்டிலும் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியாது. அது சென்னையாக இருந்தால் என்ன நியூயோர்க்காக் இருந்தால் என்ன...

 

2௦15ல் 33 சென்டிமீட்டர் இந்த முறை 34 சென்டிமீட்டர் இந்த ஒரு cm தான் கூட இந்த இடைப்பட்ட எட்டு வருட காலத்தில் கழிவு நீர் கால்வாய்கள் சுத்தபடுத்துகிறோம் என்று திமுக 4௦௦௦ கோடிசெலவு செய்ததாக கணக்கு காட்டி யுள்ளார்கள் உண்மையிலே அவர்கள் சுத்தபடுத்தி இருந்தால் 2௦15 விட பாதிப்பு குறைவாக இருக்கணும் அல்லவா ?

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 4ஆயிரம் கோடியை என்ன செய்தார்கள் என்று எடப்பாடி கேட்கிறார் என்று ஒரு செய்தியாளர் கேட்க்க எதிர்கட்சிகளின் நையாண்டி கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்று சொல்லி விட்டு நழுவுகிறார் .

 

19 minutes ago, பெருமாள் said:

2௦15ல் 33 சென்டிமீட்டர் இந்த முறை 34 சென்டிமீட்டர் இந்த ஒரு cm தான் கூட இந்த இடைப்பட்ட எட்டு வருட காலத்தில் கழிவு நீர் கால்வாய்கள் சுத்தபடுத்துகிறோம் என்று திமுக 4௦௦௦ கோடிசெலவு செய்ததாக கணக்கு காட்டி யுள்ளார்கள் உண்மையிலே அவர்கள் சுத்தபடுத்தி இருந்தால் 2௦15 விட பாதிப்பு குறைவாக இருக்கணும் அல்லவா ?

 

பாதிப்பு 2005 இல் அதிகமா இப்ப அதிகமா என தெரியவில்லை. ஆனால் ஒரே நாளில் கொட்டுகின்ற  34 சென்டிமீட்டர் மழை நீரை தாங்கக்கூடிய அளவுக்கு சனம் நிறைந்த நகரங்களில் வாய்க்கால்கள் அமைக்க முடியாது என நம்புகிறேன். இதனால் தான் ஃப்ளோரிடா போன்ற தொடர்ந்து வெள்ளம் பாதிப்பு வருகின்ற அமெரிக்க மாகாணங்களில் கூட வெள்ளப்பெருக்கை தடுக்க முடிவதில்லை.

எத்தனை குளங்களை ஆறுகளை தூர்வாரினாலும் சடுதியாக ஏற்படுகின்ற இத்தகைய அதிக நீர் வீழ்ச்சியில் உருவாகும் வெள்ளத்தை தாங்கும் கழிவு வாய்க்கால்களை அமைக்க முடியாது என்று நம்புகிறேன்.அதுவும் இந்தியா / தமிழ்நாடு போன்ற முறையற்ற அனுமதியற்ற விதத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்ட நகரத்தில் இது சாத்தியமா என தெரியவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மழையும் ,புயலும் இலங்கைக்கு போகாமல் இருந்தால் சரி 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.