Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் கடுமையான விசா விதிகளை வெளியிட்டது பிரித்தானியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

uk.jpg?resize=700,375&ssl=1

குடியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் கடுமையான விசா விதிகளை வெளியிட்டது பிரித்தானியா.

வரலாறு காணாத அளவுக்கு இடம்பெயர்வு உயர்ந்ததை அடுத்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார்.

திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச சம்பளத்தை 26,200 பவுண்டில் இருந்து 38,700 பவுண்டாக உயர்த்துவதும் இதில் அடங்கும்.

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு வர தகுதி பெற்ற 300,000 பேர் எதிர்காலத்தில் வர முடியாது என உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப விசாக்களுக்கான குறைந்தபட்ச வருமானமும் 38,700 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது என்றும் உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார்.

2022 இல் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 745,000 ஆக உயர்ந்தகாக கடந்த மாதம் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

https://athavannews.com/2023/1362027

  • கருத்துக்கள உறவுகள்

என்ன..  இதுக்குள்ள.. நம்மாக்களின் ஒரு கருத்தையும் காணம்.

வழமையா நாதமுனி தானே விலாவாரியா எழுதிறவர்... ஆளைக் காணம். 

  • கருத்துக்கள உறவுகள்

இவை மட்டுமல்ல..

சொறீலங்காவில் இருக்கிற வீடு வாசலை எல்லாம் வித்திட்டு.. கேயர் டேக்கர் விசாவில எனி வந்தாலும் குடும்ப அங்கத்தவர்களைக் கூட்டி வர முடியாது.

மாணவர்களாக வாறவையில்.. ஆராய்ச்சி பட்டங்கள்.. தவிர.. இதர முதுகலைமாணிக்கு குடும்ப அங்கத்தவர்களை கூட்டி வர முடியாது என்று அண்மையில் இயற்றப்பட்ட சட்டத்தை இளமாணிக்கும் விரிவாக்க பரிந்துரைக்க கோரப்பட்டுள்ளது.

மேலும்..  குறை நிரப்பு தொழில்கள் பட்டியலை மீளப் பரிசீலிக்கக் கோரப்பட்டுள்ளது. தற்போதைய பட்டியலில்.. பிரிட்டனில் உள்ள கிட்டத்தட்ட எல்லா தொழிலிலும் ஆள் இல்லாத குறை என்பது போல் இருப்பதால்.. ஹிந்தியர்களும் நைஜீரியர்களும் வகைதொகையின்றி வந்து குவிகிறார்கள்.

மேலும் 70 புள்ளி அடிப்படையில்.. கல்வி தகமைக்குரிய புள்ளி இல்லாமலே.. 70 புள்ளியை சோடிப்புக்கள் மூலம் பெற வாய்ப்பிருக்குது. அதனையும் பரிசீலிக்க வேண்டும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nedukkalapoovan said:

என்ன..  இதுக்குள்ள.. நம்மாக்களின் ஒரு கருத்தையும் காணம்.

வழமையா நாதமுனி தானே விலாவாரியா எழுதிறவர்... ஆளைக் காணம். 

ரிசியும், சுலேலாவும் இறக்கவேண்டிய ஆட்களை எல்லாம் இறக்கிப்போட்டு, கதவை பூட்டுகினமாம்.

இனி பூட்டினா என்ன, பூட்டாவிட்டால் தான் என்ன?

ரிசியின் மாமனாரின் infosys ஒரு பெரும் கூட்டத்தையே இறக்கி இருக்கும்.

வந்த கூட்டத்தில், care home வேலை என்று வந்து ஏமாந்த கூட்டத்தினை, கோவில்களில் பிரசாதம் கொடுக்கும் இடங்களில் பார்க்கலாம்.

என்ன விசயம் எண்டால், முந்தி மாதிரி, PR, Citizenship இலகு அல்ல. வாங்கோ, வேலை செய்து வரியை கொடுங்கோ, கிளம்பி போய் கிட்டே இருங்கோ.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றியத்தால் அதிகம் பேர் பிரிட்டனுக்குள் வருகிறார்கள் என்றார்கள். இப்போ ஒன்றியத்தில் இல்லாத போதும் வரலாறு காணாத உயர்வு எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

ஐரோப்பிய ஒன்றியத்தால் அதிகம் பேர் பிரிட்டனுக்குள் வருகிறார்கள் என்றார்கள். இப்போ ஒன்றியத்தில் இல்லாத போதும் வரலாறு காணாத உயர்வு எப்படி?

பிரான்சில் இருந்து, ஆங்கில கால்வாயை கடந்து ஓடுங்கோ என்று ரப்பர் படகினை கொடுத்து, அனுப்பி, பிரான்ஸ் தெருவெல்லாம் சுத்தமாக்கிப் போட்டார் மக்கிறோன்.

விசுகரிண்ட மகிழ்ச்சியை எழுத்தில் பார்க்கலாமே.

உங்க வந்த ஆட்களை ருவாண்டாவுக்கு அனுப்ப நிக்கினம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nunavilan said:

ஐரோப்பிய ஒன்றியத்தால் அதிகம் பேர் பிரிட்டனுக்குள் வருகிறார்கள் என்றார்கள். இப்போ ஒன்றியத்தில் இல்லாத போதும் வரலாறு காணாத உயர்வு எப்படி?

ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து போனவன் பூரா வெள்ளை.. ஜரோப்பிய கலாச்சாரத்தில் வாழ்ந்தவன்.. பிரித்தானியாவுக்கு கலாச்சார ரீதியில் பெரிய தொந்தரவு இருக்காது பிரித்தானியாவின் கலாச்சாரத்தோடு ஒன்றித்து வாழுவான்.. ஆனால் இது போய் இறங்கி இருக்கிறது பூரா முஸ்லீமும் சங்கியும் கருப்பினத்தவரும்.. அது வேற பிரிக்ஸிற்றை ஆதரித்த வலதுசாரி வெள்ளயளுக்கு வெந்த புண்ணில வேலப்பாய்ச்சினமாதிரி இருக்கும்.. வெளிய சொல்லவும் முடியாது.. வாய மூடி சத்தம் வெளிய வராம அழவேண்டியதுதான்..😂😂😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து போனவன் பூரா வெள்ளை.. ஜரோப்பிய கலாச்சாரத்தில் வாழ்ந்தவன்.. பிரித்தானியாவுக்கு கலாச்சார ரீதியில் பெரிய தொந்தரவு இருக்காது பிரித்தானியாவின் கலாச்சாரத்தோடு ஒன்றித்து வாழுவான்.. ஆனால் இது போய் இறங்கி இருக்கிறது பூரா முஸ்லீமும் சங்கியும் கருப்பினத்தவரும்.. அது வேற பிரிக்ஸிற்றை ஆதரித்த வலதுசாரி வெள்ளயளுக்கு வெந்த புண்ணில வேலப்பாய்ச்சினமாதிரி இருக்கும்.. வெளிய சொல்லவும் முடியாது.. வாய மூடி சத்தம் வெளிய வராம அழவேண்டியதுதான்..😂😂😂

பிரான்ஸ் கமுக்கமாக அகதிகளை பிரிட்டனுக்குள் அனுப்புகிறார்கள் என்பதை நீங்கள் ஒத்து கொள்ள மாட்டீர்களா??

(ஒப்பந்தம் ஒரு புறம் இருக்கட்டும்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/12/2023 at 08:37, தமிழ் சிறி said:

குடியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் கடுமையான விசா விதிகளை வெளியிட்டது பிரித்தானியா.

வெள்ளையனே வெளியேறு எண்டு போட்டு......இப்ப அவங்களே  வெள்ளையன் நாட்டுக்கு அள்ளு கொள்ளையாய் ஓடி வாறாங்கள்...இந்த சித்திரத்திலை இன்னும் சுதந்திர தினம் கொண்டாடி  இனிப்பு குடுக்கிறாங்கள். இருந்த வெள்ளையனை அப்பிடியே இருக்க விட்டிருந்தால் இலங்கை/ இந்தியா கொங்கொங் மாதிரி இருந்திருக்கும்...
 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து போனவன் பூரா வெள்ளை.. ஜரோப்பிய கலாச்சாரத்தில் வாழ்ந்தவன்.. பிரித்தானியாவுக்கு கலாச்சார ரீதியில் பெரிய தொந்தரவு இருக்காது பிரித்தானியாவின் கலாச்சாரத்தோடு ஒன்றித்து வாழுவான்.. ஆனால் இது போய் இறங்கி இருக்கிறது பூரா முஸ்லீமும் சங்கியும் கருப்பினத்தவரும்.. அது வேற பிரிக்ஸிற்றை ஆதரித்த வலதுசாரி வெள்ளயளுக்கு வெந்த புண்ணில வேலப்பாய்ச்சினமாதிரி இருக்கும்.. வெளிய சொல்லவும் முடியாது.. வாய மூடி சத்தம் வெளிய வராம அழவேண்டியதுதான்..😂😂😂

அப்பவே சொன்னால் கேட்டால்தானே.

எப்படியோ பொருளாதாரத்துக்கு வெளிநாட்டர் தேவை எனும் போது, கிழக்கு ஐரோப்பியரை எடுத்தால் அடுத்த தலைமுறை அவனுக்கும் ஒரிஜினல் ஆங்கிலேயனுக்கும் பெயர் மட்டுமே வித்தியாசமாய் இருக்கும்.

அவங்கள திரத்தி போட்டு இப்போ வினையை இறக்குமதி செய்கிறார்கள்.

மோடன் பிரெக்சிற்றில உழக்கினால் முப்பது இடத்தில.

5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிரிக்ஸிற்றை ஆதரித்த வலதுசாரி வெள்ளயளுக்கு

நோ..நோ சம் லண்டன் டமில்ஸ் ஆல்சோ வாண்டட் பிரெக்சிற்.

மேலே கருத்து கூட எழுதியுள்ளவரில் இருவர் கூட. இப்ப சுருதியை குறைக்துள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

பிரான்ஸ் கமுக்கமாக அகதிகளை பிரிட்டனுக்குள் அனுப்புகிறார்கள் என்பதை நீங்கள் ஒத்து கொள்ள மாட்டீர்களா??

(ஒப்பந்தம் ஒரு புறம் இருக்கட்டும்)

பிரான்சில் இருந்து வரும் படகு அகதிகளுக்கும் இதுக்கும் அதிக சம்பந்தமில்லை.

1. மேலே சொல்லப்படும் 750 ஆயிரம் ஆட்கள் 2022 வந்தது சட்ட பூர்வமாக வருவோரின் எண்ணிகை. இப்போ அதைதான் குறைக்க சட்டத்தை இறுக்கிறார்கள்.

2. சட்ட பூர்வமின்றி (படகு) வருவோருக்கு, வேறு வழியில் ஆப்பு இறுகுகிறது. அப்படியே பிடித்து ருவாண்டா அனுப்ப திட்டம். உச்ச நீதி மன்றம் இதை தடுத்த பின்னும், ருவாண்டா வுடன் சர்வதேச ஒப்பந்தம், பாராமன்றில் நேரடி சட்டம் - இவை மூலம் உச்ச நீதி மன்று தலையிட முடியாதவாறு அதே திட்டத்தை சில மாறுதல்களோடு செயல்படுத்த முனைகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் விசா: பல இந்தியர்களுக்கு இனி கனவாகவே கலைந்து போகும் ஆபத்து

பிரிட்டன் விசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரிட்டனுக்குள் குடியேறும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியாக விசா நடைமுறைகளில் கடுமையான மாற்றங்களை பிரிட்டன் அரசு கொண்டு வந்துள்ளது.

புலம்பெயர்வோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பிரிட்டன் எடுத்த மிகப்பெரிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. பிரிட்டனுக்குள் வருபவர்கள் எண்ணிக்கைக்கும் வெளியே செல்பவர்கள் எண்ணிக்கைக்கும் இடையேயான வித்தியாசம் அதிகரித்துள்ளது.

இதனால் யாருக்கெல்லாம் பாதிப்பு என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

 
பிரிட்டன் விசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரிட்டன் விதித்திருக்கும் புதிய கட்டுப்பாடு என்ன?

பிரிட்டனுக்கு குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. நிகர குடியேற்றம் எனப்படும் பிரிட்டனுக்குள் வரும் நபர்கள் மற்றும் பிரிட்டனை விட்டு வெளியேறும் நபர்களுக்கு இடையேயான நிகர புலம்பெயர்ந்தோர் வித்தியாசம் கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவாக 7 லட்சத்து 45 ஆயிரத்தை எட்டியது.

தற்போதைய புலம்பெயர் எண்ணிக்கை என்பது மிக அதிகமாக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் கூறியிருந்தார்.

இந்நிலையில்தான் விசா விதிகளில் பிரிட்டன் அரசு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. மாற்றப்பட்ட விதிகள் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. அதன்படி, வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டனில் வேலை செய்ய சிறப்புத் திறன் பணியாளர் விசாவை பெறுவதற்கான தற்போதைய குறைந்தபட்ச ஆண்டு ஊதியமாக 26,200 பவுண்ட் உள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 27 லட்சம் ரூபாய் ஆகும். தற்போது இந்த உச்ச வரம்பு 38,700 பவுண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம் ஆயிரம் ரூபாய்.

அதேநேரம் சுகாதார மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சம்பள அளவின் (National Pay Scale) கீழ் வரும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது மத்திய தர திறன்மிகு பணியாளர்களை பாதிக்கக்கூடும் என புலம்பெயர்ந்தோர் கண்காணிப்பகம் கூறுகிறது. சமையல் வேலை மற்றும் கசாப்பு வேலைகள் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் பொதுவாக ஆண்டுக்கு 30,000 பவுண்டுக்கும் குறைவாக சம்பாதிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
பிரிட்டன் விசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

குடும்பத்தை அழைத்துச் செல்வதில் என்ன கட்டுப்பாடு?

பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள் வெளிநாட்டில் உள்ள தங்களின் குடும்ப உறுப்பினர்களையோ, துணையையோ அழைத்துவந்து உடன்வாழ விரும்பும் பட்சத்தில், Family Visa எனப்படும் குடும்ப விசா பெற அவரது குறைந்தபட்ச வருமானம் 38,700 பவுண்டாக இருக்கவேண்டும். அதாவது சுமார் 40 லட்சம் இந்திய ரூபாய். மாதத்துக்கு சுமார் 3 லட்சத்து 33 ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்ட வேண்டும்.

முன்னதாக இது ஆண்டுக்கு 18,600 பவுண்டாக இருந்தது. தற்போது இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறைந்த வருவாய் ஈட்டும் நபர்கள், இளைஞர்கள், பெண்கள், லண்டனுக்கு வெளியே வசிப்பவர்கள் ஆகியோர் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்

ஆகவே குடும்பத்துடன் பிரிட்டன் குடியேற விரும்பும் நபர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் விசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

யாரெல்லாம் குடும்பத்தை அழைத்து வர முடியாது?

அடுத்ததாக, பிரிட்டனில் வேலை செய்யும் வெளிநாடுகளைச் சேர்ந்த பராமரிப்புப் பணியாளர்கள் தங்களின் இணையரையோ குழந்தைகளையோ தங்களுடன் பிரிட்டனுக்குள் அழைத்துவர முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற வேலை விசாக்கள் மூலம் பிரிட்டனுக்கு வருபவர்களை விட சுகாதாரம் மற்றும் பராமரிப்புப் பணியாளர்களாக வருபவர்களால் அதிகளவில் குடும்ப உறுப்பினர்கள் அழைத்துவரப்படுவதாக பிரிட்டன் உள்துறை அலுவலகம் தரவுகள் கூறுகின்றன.

நடப்பு ஆண்டின் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், 1 லட்சத்துக்கும் அதிகமான பராமரிப்புப் பணியாளர்களுக்கு விசா வழங்கப்பட்டது. அவர்கள் தொடர்புடையவர்களுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்பட்டன

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தடையால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பராமரிப்பு நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன. எனினும், பிரிட்டனில் பராமரிப்புப் பணிகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் என நம்புவதாக பிரிட்டன் அரசு கூறுகிறது.

தேசிய சுகாதார சேவையை பயன்படுத்துவதற்காக வருடாந்திர கட்டண விசா வைத்திருப்பவர்கள் செலுத்தும் மருத்துவத்திற்கான தனி மேற்கட்டணம் 624 பவுண்டுகளிலிருந்து 1,035 பவுண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 1லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் இதற்கு மட்டும் செலுத்தவேண்டம்.

அதே சமயம் சுகாதார மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்கு இந்த மேற் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு சில சலுகை உள்ளது.

பிரிட்டன் விசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாணவர்களுக்கு என்ன சிக்கல்?

பிரிட்டனில் படிப்பை முடிப்பவர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை அங்கு தங்கியிருக்க பட்டதாரி விசா அனுமதியளிக்கிறது.

இந்த விசா தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கும்பொருட்டு, திட்டத்தை மீளாய்வு செய்யவுள்ளோம் என பிரிட்டன் அரசு கூறியுள்ளது. மேலும் மாணவர்கள் பெற்றோர்களை அழைத்துவருவதற்கான அனுமதியை குறைக்கும் திட்டங்களையும் பிரிட்டன் அரசு முன்னதாக வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் படிப்பை முடிக்கும் முன்னரே முழு நேர வேலை செய்வதற்கான அனுமதியை வழங்கும் Work விசாவுக்கு மாற அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் விசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியர்களுக்கு என்ன பிரச்னை?

பிரிட்டனுக்கு புலம்பெயர்வோர்கள் பட்டியலில் அதிகம் இருப்பது ஐரோப்பியர் அல்லாத நாட்டினர்தான்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இந்தியர்கள் இருக்கிறார்கள். ஜூன் 2023 நிலவரப்படி, ஓராண்டில் புலம்பெயர்ந்தவர்களில் 2,53,000 பேர் இந்தியர்கள். இதற்கு அடுத்தபடியாக நைஜீரியர்கள் உள்ளனர்.

1,41,000 நைஜீரியர்கள் கடந்த ஆண்டு புலம்பெயர்ந்துள்ளனர். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் சீனர்கள், பாகிஸ்தானியர்கள், யுக்ரேனியர்கள் உள்ளனர்.

எனவே, பிரிட்டனின் புது விசா நடைமுறை இந்த ஐந்து நாட்டைச் சேர்ந்தவர்களை அதிகளவில் பாதிக்கக்கூடும்.

https://www.bbc.com/tamil/articles/c0k2l5rrqydo

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் தன்னட்ட இவ்வளவு காசு இருக்கு,இவ்வளவு உழைக்கிறன்  என்று பொய் சொல்லி ஏமாத்தி ஊரில் இருந்து பொம்பிளை எடுக்க முடியாது🤣 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.