Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழ இராச்சியத்துக்கு இடமில்லை - சரத் வீரசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU     06 DEC, 2023 | 09:43 PM

image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கில் சிறுவர்களின் மனங்களில் சிங்களவர் தொடர்பில் வைராக்கியம் விதைக்கப்படுகிறது. தனி ஈழ இராச்சியத்துக்கு நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை.

சிங்களவர்களும் இடமளிக்க மாட்டார்கள். நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் தமிழ் அரசியல்வாதிகளும், அவர்களின் குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளிக்கமாட்டோம். அவர்களும் யுத்தக் களத்துக்கு செல்ல வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு, புத்தசாசனம்,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

புத்த சாசனத்தை பாதுகாக்க வேண்டுமாயின் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த தொல்பொருள் சின்னங்கள் மற்றும் மரபுரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. வெடுக்குநாறி பகுதியில் பௌத்த சின்னங்களை அழித்து அதன் மீது பிற மதத்தின் சின்னங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மத்திய அரசுக்குள் இருக்கும் நிலையில் பௌத்த சின்னங்கள் அங்கு அழிக்கப்படுகிறது என்றால் தனி இராச்சிய அதிகராத்தை வழங்கினால்  என்ன நேரிடும் என்பதை சிந்திக்க வேண்டும். இதனால் தான்  ஒற்றையாட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அண்மையில் மாவீரர் தினம் வடக்கு மற்றும் கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்டது. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காகவே 29 ஆயிரம் வீரர்கள் உயிர் நீத்தார்கள். பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரம் பயங்கரவாதிகளை நினைவு கூர்வற்கு அல்ல என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மாவீரர் தினத்தன்று யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் கீழ்த்தரமான செயற்பாடு என்று இடம்பெற்றுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பின்  சீருடையை சிறுவர்களுக்கு அணிவித்து அவர்களின் கழுத்தில் சயனைட்  மாதிரியிலான குப்பிகளை அணிவித்து அவர்களை மாவீரர் தின நிகழ்வுகளில் பங்குப்பற்ற செய்துள்ளார்கள். இவ்வாறான செயற்பாடுகளையிட்டு வெட்கமடைய வேண்டும். சிறு பிள்ளைகளின் மனங்களில் சிங்களவர்கள் தொடர்பில் வைராக்கியம் விதைக்கப்படுகிறது.

தனி ஈழம் இராச்சியத்துக்கு நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை. சிங்கள மக்கள் எவரும் இடமளிக்கமாட்டார்கள். யுத்தம் என்பதொன்று தோற்றம் பெற்றால் தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளிக்கமாட்டோம். அவர்களும் யுத்த களத்துக்கு செல்ல வேண்டும்.

https://www.virakesari.lk/article/171113

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால் இனவாதம் பேசி, பதவிக்கு கொண்டு வந்து அமர்த்திய, கோத்தாவையே, காப்பாத்த முடியவில்லை. அதுக்குள்ளே தனி ஈழ இராச்சியத்துக்கு நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லையாம்.

இப்படித்தான் போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், பிரிட்டிஷ்காரரும் மிக அண்மையில இந்தியரும் கொக்கரித்தார்கள்.

இலங்கை வரலாறில், போர்த்துக்கேயனை உள்ளே கொண்டுவந்தது சிங்களவன். சுதந்திரமாக இருந்த கண்டி ராச்சசியத்துனுள் பிரிட்டிஷ்காரனை கொண்டுவந்து சேர்த்தது சிங்களவன்.

இந்திய படைகளை கொண்டு வந்து இறக்கினது சிங்களவன்.

இப்போது சீனனை கொண்டுவந்தது சிங்களவன்.

போர்த்துகேயனுடன் சரணாகதி அடையாமல் போர்க்களத்தில் மாண்டவன் யாழ்ப்பாண தமிழ் மன்னன் சங்கிலியன். 

பிரிட்டிஷ்காரனுடன் வன்னியில் போரிட்டு, போர்க்களத்தில் மாண்டவன் பண்டாரவன்னியன்.

கண்டியில் இறுதியில் சூழ்ச்சி வெல்லும் வரை பிரிட்டிஷ்காரனுடன் போரிட்டவன் ஸ்ரீவிக்கிரமராசசிங்கன், தமிழன்.

இந்திய படைகளை அடித்து விரட்டியவன் பிரபாகன் என்ற தமிழன்.

இறுதியாக, பெரும் வல்லரசுகளை போரில் சந்தித்து, போர்க்களத்தில் வீழ்ந்தவன் தமிழன் பிரபாகரன்.

சுதந்திரத்தை காக்க தமிழன். நோகாமல் நொங்கு குடிக்க நினைக்கும் சிங்களவனே, கொண்டுவந்த சீனனை திரத்த ஒரு தமிழனை தேடும் போது, புத்தி வரும். அதுவரை பிழைத்துப் போ, மூடகனே.   😡

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இவரால்.. சொறீலங்காவை விட்டே வெளிய போகேலாத நிலை.

இவைட நினைப்பு.. சொறீலங்கா.. ஏதோ பெரிய உபகண்டம். தாங்கள் உலக வல்லரசு. இவர் அந்த உலக வல்லரசின் கொள்வை வகுப்பாளர் என்று.

சொறீலங்காவை விட்டு வெளிய வந்தால்.. ஒரு சல்லிக் காசுக்கும் பெறுமதியில்லாத கூட்டம். சும்மா கூவி கூவி தானும் கெட்டு கூட இருப்பவர்களை கெடுத்து நாசம் பண்ணியது தான் மிச்சம். சொறீலங்கா இதுகளால் தான் பிச்சை எடுக்கும் நாடாகியுள்ளது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா ..எனக்கொரு ஆசை...நான் தமிழீழம் பார்க்கவேணும்...நீங்கள் டக்கென்று தற்கொலை செய்யுங்க்கோவன்  பிளீஸ்..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

தனி ஈழம் இராச்சியத்துக்கு நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை.

பிரச்சனையில்லை உங்கள் மறைவுக்கு பிறகு தமிழ் ஈழம் அமையட்டும்.....😂🤣🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, Kandiah57 said:

பிரச்சனையில்லை உங்கள் மறைவுக்கு பிறகு தமிழ் ஈழம் அமையட்டும்.....😂🤣🙏

ஓ..... இன்னும் அந்த நினைப்பு வேறை இருக்கோ? :cool:
ஆசை தோசை அப்பளம் வடை...😷

  • கருத்துக்கள உறவுகள்

அவர்... தான் உயிர் வாழும்வரை வைத்து நடத்தும் பிழைப்பை பற்றி சொல்கிறார்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, satan said:

அவர்... தான் உயிர் வாழும்வரை வைத்து நடத்தும் பிழைப்பை பற்றி சொல்கிறார்!

அட நீங்களும் வந்துட்டியளே?கண்டதில் சந்தோசம் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

தனி ஈழம் இராச்சியத்துக்கு நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை. சிங்கள மக்கள் எவரும் இடமளிக்கமாட்டார்கள்.

போற போக்கைப் பார்த்தால் பட்டினியால் முழு சனமுமே செத்துப் போயிடும் போல இருக்கே சார்.

ஏன் அவசரம்?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

கண்டியில் இறுதியில் சூழ்ச்சி வெல்லும் வரை பிரிட்டிஷ்காரனுடன் போரிட்டவன் ஸ்ரீவிக்கிரமராசசிங்கன், தமிழன்.

ப்ரோ,

இவ்வளவு நாளா இவர நாயக்கர், தெலுங்கர் - சிங்கள மூதாதை என சொல்லி கம்பு சுத்தினீங்க?

ஓ….

தமிழ் நாட்ட்டில் நீங்கள் ஆதரிக்கும் அரசியலுக்கு தேவைப்படும் போது இவர் தெலுங்கன்.

இலங்கையில், அந்நியரை எதிர்த்து போரிட்ட தமிழர் என மார்தட்ட தேவைப்படின் அதே ஆள் தமிழர்🤣.

பக்கா லொஜிக் ப்ரோ.

பிகு

சரத் இலங்கை பாரளுமன்றில் கம்பு சுத்த….

பதிலுக்கு அண்ணைமார் விசை பலகை முன்னிருந்து சவால் விட்டு கம்பு சுத்த….

கண்கொள்ளா காட்சி.

# அட்டைகத்தி

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

பிரச்சனையில்லை உங்கள் மறைவுக்கு பிறகு தமிழ் ஈழம் அமையட்டும்.....😂🤣🙏

நாமதான் ஈழம் கிடைக்காது எண்டு மறந்தாலும் அவர்கள் ஈழத்தை  கொடுப்பார்கள் போல இருக்குது. சரத் வீரசேகரா எதோ ஒரு பயத்தில் சீவிக்கிறார் போலத்தான் தெரியுது. அந்த பயமே ஈழம் கிடைத்த மாதிரிதான்.😂

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Cruso said:

நாமதான் ஈழம் கிடைக்காது எண்டு மறந்தாலும் அவர்கள் ஈழத்தை  கொடுப்பார்கள் போல இருக்குது. சரத் வீரசேகரா எதோ ஒரு பயத்தில் சீவிக்கிறார் போலத்தான் தெரியுது. அந்த பயமே ஈழம் கிடைத்த மாதிரிதான்.😂

ஒரு வெளிநாட்டுக்காரனும் விசா தாறான் இல்லை என்ற கவலையில் ஏதேதோ உளறுகிறார்.

நீங்க வேற.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

ஒரு வெளிநாட்டுக்காரனும் விசா தாறான் இல்லை என்ற கவலையில் ஏதேதோ உளறுகிறார்.

நீங்க வேற.

ஓ இப்படி எல்லாம் உளறினால் விசா கிடைக்கும் எண்டு நினைக்கிறார் போல. அது சரி. 😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஓ..... இன்னும் அந்த நினைப்பு வேறை இருக்கோ? :cool:
ஆசை தோசை அப்பளம் வடை...😷

உண்மையில் நான் மறந்து போனேன் 🤣😂 ஆனால் சரத் வீரன்.  [என்ன தமிழ் பெயர்??? ஆக இருக்கிறது ]    ஞாபகப்படுத்தி விட்டார்  நான் மட்டுமல்ல அனைத்து தமிழர்களும்  மறந்து விடுவார்கள்    சரத்.  போன்றோர் மறக்கிறார்கள் இல்லை  திரும்ப திரும்ப  தமிழ் ஈழம்   தமிழ் ஈழம் ...... என்று பேசிய படியே தான்   இப்படி பட்டவர்களுக்கு ஆவாது தமிழ் ஈழம் அமைவது நல்லது,அமையும்  

6 hours ago, Cruso said:

நாமதான் ஈழம் கிடைக்காது எண்டு மறந்தாலும் அவர்கள் ஈழத்தை  கொடுப்பார்கள் போல இருக்குது. சரத் வீரசேகரா எதோ ஒரு பயத்தில் சீவிக்கிறார் போலத்தான் தெரியுது. அந்த பயமே ஈழம் கிடைத்த மாதிரிதான்.😂

ஆமாம் மறுக்க முடியாத உண்மை 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

என்ன தமிழ் பெயர்??? ஆக இருக்கிறது

குலசேகரன், வீரசேகரன், வர்ணர் குலசூரியன், அழகப்பெருமாள், குருசிங்கன், விக்ரமசிங்கன், இப்படி பல தமிழ் பெயர்களை அவர்கள் எடுத்து கொண்டார்கள்.

நாங்கள், ரொஷான், நிஷான், குஷான், சச்சின், கிச்சின், பாத்ரூம் என வைத்துகொண்டிருக்கம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

குலசேகரன், வீரசேகரன், வர்ணர் குலசூரியன், அழகப்பெருமாள், குருசிங்கன், விக்ரமசிங்கன், இப்படி பல தமிழ் பெயர்களை அவர்கள் எடுத்து கொண்டார்கள்.

நாங்கள், ரொஷான், நிஷான், குஷான், சச்சின், கிச்சின், பாத்ரூம் என வைத்துகொண்டிருக்கம்🤣.

இதில் உங்கட பெயரை பார்க்க பயமாக இருக்குதே? இதுதான் உங்கட உண்மையான பெயரா?😂

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களச் சீமான் சரத் விஜயசேகரவின்  கோமாளித்தன பச்சை இனவாதம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.