Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது மூன்றாவது சிறுகதைத் தொகுதி தயாராகிறது. அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்தவர் மூணா அண்ணா. அவருக்கு நன்றி. நிறம் தான் சிறிது மாறிவிட்டது.

 

 

414639594_10220863223363960_224623960628

 

                                                                                                                      என்னுரை

 

பத்து ஆண்டுகளின் முன்னர் என் முதலாவது சிறுகதைத்தொகுதியும் நான்கு ஆண்டுகளின் முன் என் இரண்டாவது சிறுகதைத்தொகுதியும் வெளிவந்தபின் ஐந்து ஆண்டு ஆண்டுகால இடைவெளியில் மூன்றாவது தொகுதி வெளிவருகிறது.

பெண்களால் தொடர்ந்து எழுத முடியாதவாறு பல தடைகள் குடும்பச் சூழலில் இருந்தாலும் அதையும் தாண்டி நான் காண்பவற்றை, கேட்பவற்றை எழுதும் ஆற்றல் எனக்குள்ளும் இருக்கின்றது. யாரின் புகழ்தலுக்காகவும் காத்திருக்காது என்னால் முடிந்ததைத் துணிவுடன் எழுதுவதும் எனக்கு நிறைவைத் தருகிறது.

முக்கியமாய்  யாழ்களமே எனது எழுத்துக்களுக்கு ஊக்கியாய் இன்றுவரை இருக்கின்றது. அதுமட்டுமன்றி என் கதைகளை விமர்சிக்கும் அத்தனை யாழ்கள உறவுகளுக்கும் நன்றிகூற நான் என்றும் கடமைப்பட்டவள். சரியோ தவறோ எம் நன்மைக்காய் விடமின்றி விமர்சிப்பவர்களின் விமர்சனங்களே என் எழுத்துக்களை மெருக்கேற்றிக் கொண்டிருக்கும்.

நான் கேட்டவுடன் நூல் விமர்சனம் ஒன்றை எழுதித் தந்த காரைக்கவி கந்தையா பத்தமநாதன் அவர்களுக்கும், அணிந்துரையை மிகக் குறுகிய காலத்தில் எழுதித் தந்த பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்களுக்கும், அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்த யாழ்கள உறவான மூணா எனப்படும் ஆள்வாப்பிள்ளை செல்வகுமாரன் அண்ணாவுக்கும் நான் என்றும் கடமைப்பட்டவள். 

என்னை எழுதுவதர்க்குத் தூண்டியதே சுமேரிய வரலாறு பற்றிய தூண்டாலே. அதுபற்றிய அடிப்படை அறிவை என்னுள் தூவிய மறைந்த நாதன் சிவகணேசன் அண்ணா அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.

 

                                                                                                               அணிந்துரை

 

தமிழ் பெண் எழுத்தாளர்களுள் புலம்பெயர்ந்து வாழுகின்ற நிவேதா உதயன் கணிப்புக்குள்ளான எழுத்தாளராகஅறியப்படுபவர்.|  அவருடைய தொடர் எழுத்துக்களின் அறுவடையாக“மனதும் இடம்பெயரும்” என்ற மகுடத்துடன் பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுதி வெளிவருகின்றது.ஈழத்துத் தமிழ் புனைவு வெளி புலம் பெயர்ந்த எழுத்தாளர்களினது பங்களிப்பால் சற்று அகலக்கால் வைத்தது என்பதை எவரும் மறுபதற்கில்லை. ஈழத்துக் குடாநாடு,
இலங்கைத் தீவு என்ற நிலவியல் எல்லைகளுக்குள் நீண்ட காலம் பயணம் செய்த புனைவு வெளி, ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு என்ற செயற்பாட்டாலும் அதன் வழி உருவான கருத்துருவாக்கங்களாலும் 'புலம்பெயர் தமிழ் இலக்கியம்" என்ற அந்தஸ்த்தைப் பெற்றது. அதன் பேறாக, நாடுகளும், இயற்கையும் தட்ப வெப்பநிலைகளும், வாழ்வியலும் நேர் மறையாகவும் எதிர்மறையாகவும் நமது மனக்கண்முன் விரிந்தன. 'உலகமயமாதல்" என்ற கருத்தியல் அல்லது
'சுருங்கிய உலகு" என்ற கருத்தியலுக்கு அமைவாக எல்லாம் தான் எமது காலடியில் வந்து குவிந்தன. இதனால் புளகாங்கிதங்களும் கூடவே துயரங்களும் நம்மிடையே நிரம்பி வழிந்தன.

மேற்குறித்த கருத்து நிலைகள் ஓரளவிற்குத் தேய்மானங்கண்டுள்ள நிலையில் தற்போது புலம்பெயர் தமிழ் மக்களின் தனியாள் அனுபவங்களும் கலாசாரச் சிதைவுகளும் வாழ்வியற் கோலங்களும் அரசல் புரசலாக புனைவுகளில் வெளிவரத் தொடங்கியமையின் வெளிப்பாடாகவே நிவேதாவின் இந்தத் தொகுதியில் அடங்கிய கதைகளிலும் பெரும்பாலும் முகங் காட்டுவதை இனங்காண முடிகின்றது. நமது பாரம்பரியமான பண்பாட்டில் நம் மூத்தோர் கடவுட்குச் சமமாக வைத்தென்னைப் படுபவர்கள், தாய், தந்தை, பேரன், பெயர்த்தி என அந்தத்
தொகுதி நீளும் அந்தப் பெரியோரும் நம்மையும் நம் வாரிசுகளையும் “எம்மில் தம்மைக் கண்டு” மகிழ்வு கொள்பவர்கள்| நம் குடும்ப உறவுகளின்
'எல்லைக்கால்"களா நிற்பவர்கள்| அவர்களே அந்த எல்லைகளை மீறினால்… என்ற கருவை அடியாகக் கொண்ட 'தண்டனை" என்ற கதை வாசகரைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடியது. நமது கலாசார விழுமியங்களைக் கேள்விக் குள்ளாக்கக் கூடியது. எனினும் தன் மனைவியை மத்திய கிழக்கிற்கு அனுப்பி விட்டு தன் சொந்தமகளையே வன்புணர்வு செய்யும் தந்தைகள் நிறைந்த உலகிற்தானே நாமும் வாழுகிறோம் என்று இதனால் சமாதானங் கொள்வதா அல்லது சிக்மன்ட் பிறைட்டின் உளவியற் கோட்பாட்டை முன்நிறுத்திக் சமாதானங்கொள்வதா அல்லது ஏங்கல்ஸ் குறிப்பிடும் 'புனசவா" குடும்பம் என்ற கருத்தியலில் வரலாற்றைப் பின்நோக்கிப் பார்ப்பதா என்ற வினாக்கள் இதனூடாக மேற்கிளம்புகின்றன. இவ்வாறான கருவை  வெளிப்படுத்துவதற்கு 'அயல் நோக்காத்துணிவு" வேண்டும்.  நிவேதாவிடம் அது நிறையவே உண்டு. அவர் பாரம்பரியத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூணாக நிற்க விரும்பவில்லை. 'தானம் நீ", 'மன வாழ்வு", 'மனக்குரங்கு" ஆகிய மூன்று கதைகளின் கருவை ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்க்க முடிகிறது. பெண்களை ஆண்களே பெரும்பாலும் ஏமாற்றுபவர்கள் என்ற பெரும்பான்மையான மதிப்பீடுகளை மறுதலித்து பெண்களும் வாய்ப்புக்கிடைத்தால் ஏமாற்றத் தயங்கார் என்ற கருத்தினை இக் கதைகளூடாக முன்வைக்கிறார் நிவேதா.

தன் கல்லூரிக் காலத்தில் காதல் செய்த செந்தூரனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, தன்னைக் கட்டியவனுடன் போலிவாழ்வு வாழ்ந்து காதலனைக் கரம்பிடிக்கத் துடித்த நயனி, தன்னிலும் வயது கூடிய வெளிநாட்டு மணமகனைக் கரம்பிடித்து விட்டு வங்கியில் தன்னுடன் பணியாற்றும் வாகீசனுடன் வாழத்துடிக்கும் ஜீவா,கரம்பிடித்த காதலனும் கணவனுமான ரவியிடமிருந்து விவாகரத்துப் பெற்று மூன்று பிள்ளைகளுடன் கஷ்டஜீவனம் செய்தவருக்கு ஆபத்பாந்தவனாக வந்து கை கொடுத்து மறுவாழ்வு தந்து கடனாவுக்கு கூட்டி வந்து வாழவு தந்தவனை ஏமாற்றிய 'மனக்குரங்கு" கதையின் நாயகி" என இவர்கள் எல்லாம் ஏமாற்றுக்காரிகளாக நம்பிக்கைத் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை தான் நினைத்தவனை அடைதல் பெண்
களுக்கான சுதந்திரம் என்ற கருத்தியலை இவ்விடத்தில் நிலைநாட்ட நிவேதா முனைகிறாரோ என்று எண்ணத்தோன்றினும் (ஏனெனில் அவரது முந்தைய
கதைகள் அவ்வாறானவை) கதைகளின் முடிவுகளின் படி, நம்பி நடந்த ஆண் மக்களை ஏமாற்றிய பெண்களின் கதைகளாகவே அவற்றைக் கருத முடிகிறது.
இதில் சித்திரிக்கப்பட்டுள்ள ஆண்கள் மிகவும் கண்ணியமானவர்களாகவே உள்ளனர்.

நிவேதாவின் இந்த மனமாற்றம் அல்லது கருத்தியல் புலம்பெயர் வாழ்வில் பெண்களின் நத்தைக்கோலங்களின் அபத்தங்களால் ஏற்பட்ட மன உளைச்சல்தான் காரணமாக அல்லது பிழைவிடுபவர் எல்லாத் தரப்பிலுமஉளர் என்ற சமாதானமா? எதுவெனப் புரியவில்லை. 'மருந்தே இல்லா நோய்" என்ற கதை இன்னோர் வகைமையான பெண்ணைக் கண்முன் நிறுத்துகிறது. பிரான்ஸில் பிறந்த மது என்ற பெண், புலம் பெயர் நாடுகளில் இன்னமும் வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்ற சாதீயத் தடைகளைத் தாண்டி, பெற்றோர் திர்ப்பையும் மீறிக் காதலித்த நவீன் என்பவனைக் கரம்பிடித்து இரு குழந்தைகள் பெற்ற பின்பும் தன்கணவன் வேறோர் பெண்ணுடன் காதலுறவு கொண்டுள்ளான் என்பதை அறிந்த மது அவனைத் தீவிரமாகக் கண்காணித்து கையும் மெய்யுமாக பிடித்து அவனிடமிருந்து பிரிந்து விடுவதாக இக்கதை அமைந்துள்ளது. தன் கணவன் எல்லை மீறுகிறான் என்பதை நிதானத்துடன் செல்லிடப்பேசியின்தொழில் நுட்பத்துடன் கண்காணித்து உண்மையை வெளிக்கொணரும் திறன் வாய்ந்த வளாக அவள் உருவாக்கப்பட்டுள்ளாள். ஒரு வகையில் இரு ஒரு புலனாய்வு சார்ந்த தன்மையுடன்  கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை வேறோர் வகையில் 'உளவியல் நாடகம்" என்றும் கட்டமைக்கலாம். குற்றமிழைத்த ஒருவரை அவர் சந்தேகப்படும்படியாக நடக்காமல் அவருடன் இயல்பாகப் பழகி, அதனூடாகக் கண்காணிப்பு அல்லது புலனாய்வை நிகழ்த்தி இறுதியில் இக்கட்டான ஒரு சூழலில் சிக்க வைத்து குற்றவாளியின் வாயிலாகவே குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதை உளவியல் நாடகம் (Phலஉhழ னுசயஅய) என்பர்.
உளவியலாளர் அந்த முறைமைதான் இக்கதையிலும் நடந்தேறியுள்ளது. இன்னோர் வகையில் அந்தப் பெண்ணின் ஆளுமையும் தெரிய வருகிறது. தன்
கணவன் தனக்குத் துரோகம் செய்வதை எந்தப் பெண்ணால் தான் பொறுத்துக்கொள்ளமுடியும் என்ற பொதுவிதியைத் தாண்டி, கல்லானாலும் கணவன் என்ற கீழைத்தேய நியமங்களைக் கடந்து, மூக்குச் சிந்தி அழுது ஆர்ப்பரிக்காது அப்பெண் நடந்து கொண்டவிதம் அவளுக்கு மேலைத்தேய வாழ்க்கை முறை தந்த துணிவும், தன்னம்பிக்கையம் தான் என எண்ணத் தோன்றியது.

ஓரினச் சேர்க்கையாளர்கள் தாம் விரும்பியவாறு சேர்ந்து வாழமுடியும் என்ற மேலைத்தேய அனுமதியை அனுசரித்துச் செல்கிறது. 'நான் வசந்தன்' என்ற
கதை. கதையின் ஓட்டம் சராசரியாக இருந்தாலும் கதையின் முடிவில் நிவேதா எழுதிய உரையாடல் அந்த உறவின் நன்மையை அல்லது உணர்ச்சியை
புரிந்துகொள் வைக்கிறது. அழைப்பு மணி அடிக்க அகிலுக்கு இதே வேலையாய்ப் போச்சு என்று மனதுக்குள் திட்டியபடி கதவைத் திறக்கிறேன்.
“நான் எங்காவது போயிருந்தால் என்ன செய்வாய்? திறப்பை மறக்காமல் எடுத்துக் கொண்டு போ என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா?”
“நான் எப்ப வருவேன் என்று நீ எனக்காகக் காத்திருப்பாய் என்று எனக்குத் தெரியுமே” என்றபடி வசந்தனை ஆசை தீர இறுக அணைக்கிறான்
அகில். இதில் தெரியவருவது இரண்டு ஆத்மாக்களின் ஆழமான அன்பு தான்.  அது அபத்தமல்ல என்பதை நிவேதா நிறுவ முனைகிறார்.

இந்தத் தொகுதியில் உள்ள ஏனைய கதைகள் நிவேதாவின் அனுபவம் சார்ந்தவை. ஆயின் “அவனும் அவர்களும்” என்ற கதை நிவேதாவிற்கு உருவச்
செழுமையுடனும் கதை சொல்ல முடியும் என்பதற்குப் பதந் சோறாக அமைகிறது. மரணமடைந்தவரே கதை சொல்லியாக மாறி, நனவோடை உத்தியில் கதையை நகர்த்திச் செல்லும் விதத்தால் அக்கதையை இத் தொகுதியின் கணிப்புக்குள்ளாகும் கதையாக மாறியுள்ளது. தவிர நிவேதாவின்கதை சொல்லும் முறை இன்னமும் நேர்கோட்டு முறையியலைத் தாண்டிச் செல்லவில்லை. ஆயின் கதைகளின் முடிவில் அதிர்ச்சி தருவதும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்துவதும் சில விடயங்களை வாசகரிடமே யுகத்துக்கு விட்டு விடுவதும் நல்ல சிறுகதைகளுக்கான குணாம்சங்கள். அவை நிவேதாவின் எழுத்துக்களில் துலங்கத் தொடங்கியுள்ளன. உரை நடையில் செம்மை சேர்வதும் அல்லது பேச்சோசை மிகுவதும் கதைகளின் களத்தைப் பொறுத்ததேயன்றி கதைசொல்லியின் மனவோட்டத்தை பொறுத்ததல்ல என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். மற்றும் சுய
விருப்பும் வெறுப்புகளுடனான தீர்வுகள் அல்லது அபிப்பிராயங்கள் கதை சொல்லியின் நேர்மையைச் சோதிப்பனவாய் அமைந்தால் அது வெறும் வக்கிரங்களின் வெளிப்பாடாய் அமைந்துவிடும் அபாயங்களும் உண்டு. எனவே முன்வைக்கும் கருத்தைத் தர்க்கத்துடனும் ஆதாரத்துடனும் சமூகவியல் கண்ணோட்டத்துடனும் அழகியலுடனும் படைக்கும் போது கதை சொல்லி நின்று நிலைப்பார்| கதைகள் சாகாவரம் பெறும்.

நிறைவாக நிவேதா எனும் கதைசொல்லி இன்றும் கடந்து செல்ல வேண்டிய களமும் காலமும் அவர் முன் விரிந்து கிடக்கின்றன. அவற்றை
ஒருமுகப்படுத்தும் திறன் நிவேதாவிடம் நிறையவே உண்டு. அவற்றைக் கலா பூர்வமாகக் கட்டமைத்து நமது புனைவு வெளியில் தனித்துவமான தாக்கத்தை
ஏற்படுத்தக் கூடிய எழுத்தாளராக நிவேதா நிலைக்க வேண்டும் என்பது என் அவா. அது ஈடேனும் என்பதில் அசைக்க முடியா நம்பிக்கையும் எனக்குண்டு.

வாழ்த்துக்களுடன்
பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன்
தகைசால் வாழ்நாட்பேராசிரியர்
பேராதனைப் பல்கலைக்கழகம்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்காவின் மூன்றாவது சிறுகதைத் தொகுதி "மனமும் இடம்பெயரும்" புத்தகமாக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஏராளன் said:

சுமே அக்காவின் மூன்றாவது சிறுகதைத் தொகுதி "மனமும் இடம்பெயரும்" புத்தகமாக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற வாழ்த்துகள்.

நன்றி ஏராளன்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றி யாயினி

அக்கோய் அது நானெல்லோ!😇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

அக்கோய் அது நானெல்லோ!😇

வாக்கு மாறிப்போச்சு 😀😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வாக்கு மாறிப்போச்சு 😀😂

யாயினி அக்காவும் லைக்கை போட குழம்பிற்றியள் போல!

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வாக்கு மாறிப்போச்சு 😀😂

மேலோட்டமாக பதியப்பட்டு இருந்த தகவலைக் கொண்டு வந்து உங்களின் பக்கத்து வீட்டில் ஒட்டி விட்டேன்..அது இண்டைக்கு இங்கன நிக்கிற றபிக் பொலிஸார் தூக்கிட்டினம் போல காணம்..சிவனே என்று இருந்திட்டா போதும் போல ஆகிடுது..

எனிவே..எனது நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்..எப்போ கனடாவில் வெளியீடு அறியத் தாருங்கள்.🖐️

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு படைப்பாளி நீங்கள்......எவ்வளவோ வேலைப்பளுக்களின் மத்தியிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறீர்கள்.......பாராட்டுக்கள் .......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/12/2023 at 16:47, யாயினி said:

மேலோட்டமாக பதியப்பட்டு இருந்த தகவலைக் கொண்டு வந்து உங்களின் பக்கத்து வீட்டில் ஒட்டி விட்டேன்..அது இண்டைக்கு இங்கன நிக்கிற றபிக் பொலிஸார் தூக்கிட்டினம் போல காணம்..சிவனே என்று இருந்திட்டா போதும் போல ஆகிடுது..

எனிவே..எனது நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்..எப்போ கனடாவில் வெளியீடு அறியத் தாருங்கள்.🖐️

நான்தான் தூக்கச் சொன்னேன். நான் போடமுதல் நீங்கள் பக்கத்து வீட்டில் ஒட்டினால் 😀வருகைக்கு நன்றி. கனடாவில் எதுக்கு வெளியீடு???

On 25/12/2023 at 17:51, suvy said:

நல்லதொரு படைப்பாளி நீங்கள்......எவ்வளவோ வேலைப்பளுக்களின் மத்தியிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறீர்கள்.......பாராட்டுக்கள் .......!  👍

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமே.

  • கருத்துக்கள உறவுகள்

'மனமும் இடம்பெயரும்' நூலுக்கான 'என்னுரை'யையும் 'அணிந்துரை'யையும் வாசித்தேன். மிக நன்று. இவற்றில் நூலின் சிறப்பு தெள்ளிதின் விளங்கி நிற்பது.

            இவ்வாசிப்பின் மூலம் ஆசிரியர் சகோதரி நிவேதா உதயராஜனின் சில கதைகளை ஓரளவு வாசித்தேன். மேலும் வாசிக்க எண்ணம். வாசித்தவற்றை மீள்வாசிப்பு செய்யவும் எண்ணம். ஈழத் தமிழில் தற்கால சிறுகதை இலக்கியம் வாசிக்கும் அனுபவம் புதுமை. 

          குறிப்பாக 'நான் வசந்தன்' எனும் சிறுகதையை ரசிக்கும் போது, முன்னர் என் மகள் இணையத்தில் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. நிவேதா அவர்களின் கதைக்கும் என் மகளின் கட்டுரைக்கும் தொடர்பு இல்லைதான். அவள் அக்கட்டுரை பற்றி என்னிடம் சொல்லவில்லை. தயக்கமாயிருக்கலாம். அத்தயக்கத்தை மதித்து, தற்செயலாக நான் அதனை வாசித்ததைக் காட்டிக் கொள்ளவில்லை. இருப்பினும் பேசாப் பொருள்களைப் பெண்கள் வெளியில் அதிகம் பேச ஆரம்பித்தது குறித்து மகிழ்ச்சி ஏற்பட்டது. நிவேதா அவர்கள் 2020 லேயே யாழில் பதிவு செய்தது அறிந்து கூடுதல் மகிழ்ச்சி. மேலும் அவருக்கு வெகு இயல்பாக வரும் அந்த எழுத்திற்கு வாழ்த்து.

          2020ல் யாழில் பதிவான அக்கதை தொடர்பில் அங்கு எழுத இயலாததால் இங்கு எழுதிவிட்டேன். இனி மகள் எழுதிய கட்டுரையின் இணைப்பு கீழே :

https://puthu.thinnai.com/2022/01/30/எது-பிறழ்வு/

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான்தான் தூக்கச் சொன்னேன். நான் போடமுதல் நீங்கள் பக்கத்து வீட்டில் ஒட்டினால் 😀வருகைக்கு நன்றி. கனடாவில் எதுக்கு வெளியீடு???

 

ஓ..நல்லது.நீங்கள் சொன்னீர்களா..? பிரச்சனையே இல்லை.அனேகமான புத்தக வெளியீடுகள் ஒரு நாட்டில் மட்டும் நடப்பது குறைவு தானே.அதனால் தான் கனடாவில் வெளியீடு நடந்தா(ல்) அறியத்தரவும் என்று சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  மேரி 🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 25/12/2023 at 16:00, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனது மூன்றாவது சிறுகதைத் தொகுதி தயாராகிறது.

தமிழை உயிராகக்கொண்டு இறுதிக்காலம் வரை தமிழோடு பயணித்த இரு தமிழ்ச் சிற்பிகளால் தமிழுக்கு வரப்பெற்ற எழுத்தாளராக வலம்வரும் உங்களுக்கு வாழத்துகளும் பாராட்டுகளும். நூல் வெளியீடு சிறப்புற வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2023 at 17:45, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள் சுமே.

நன்றி அண்ணா

On 27/12/2023 at 17:58, சுப.சோமசுந்தரம் said:

'மனமும் இடம்பெயரும்' நூலுக்கான 'என்னுரை'யையும் 'அணிந்துரை'யையும் வாசித்தேன். மிக நன்று. இவற்றில் நூலின் சிறப்பு தெள்ளிதின் விளங்கி நிற்பது.

            இவ்வாசிப்பின் மூலம் ஆசிரியர் சகோதரி நிவேதா உதயராஜனின் சில கதைகளை ஓரளவு வாசித்தேன். மேலும் வாசிக்க எண்ணம். வாசித்தவற்றை மீள்வாசிப்பு செய்யவும் எண்ணம். ஈழத் தமிழில் தற்கால சிறுகதை இலக்கியம் வாசிக்கும் அனுபவம் புதுமை. 

          குறிப்பாக 'நான் வசந்தன்' எனும் சிறுகதையை ரசிக்கும் போது, முன்னர் என் மகள் இணையத்தில் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. நிவேதா அவர்களின் கதைக்கும் என் மகளின் கட்டுரைக்கும் தொடர்பு இல்லைதான். அவள் அக்கட்டுரை பற்றி என்னிடம் சொல்லவில்லை. தயக்கமாயிருக்கலாம். அத்தயக்கத்தை மதித்து, தற்செயலாக நான் அதனை வாசித்ததைக் காட்டிக் கொள்ளவில்லை. இருப்பினும் பேசாப் பொருள்களைப் பெண்கள் வெளியில் அதிகம் பேச ஆரம்பித்தது குறித்து மகிழ்ச்சி ஏற்பட்டது. நிவேதா அவர்கள் 2020 லேயே யாழில் பதிவு செய்தது அறிந்து கூடுதல் மகிழ்ச்சி. மேலும் அவருக்கு வெகு இயல்பாக வரும் அந்த எழுத்திற்கு வாழ்த்து.

          2020ல் யாழில் பதிவான அக்கதை தொடர்பில் அங்கு எழுத இயலாததால் இங்கு எழுதிவிட்டேன். இனி மகள் எழுதிய கட்டுரையின் இணைப்பு கீழே :

https://puthu.thinnai.com/2022/01/30/எது-பிறழ்வு/

வாராதவர் என்பதிவுக்கு வந்துள்ளீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சியுடன் நன்றிகள்

On 27/12/2023 at 19:23, யாயினி said:

ஓ..நல்லது.நீங்கள் சொன்னீர்களா..? பிரச்சனையே இல்லை.அனேகமான புத்தக வெளியீடுகள் ஒரு நாட்டில் மட்டும் நடப்பது குறைவு தானே.அதனால் தான் கனடாவில் வெளியீடு நடந்தா(ல்) அறியத்தரவும் என்று சொன்னேன்.

எம்மூரில் தான் செய்யும் எண்ணம்

On 27/12/2023 at 20:36, Kandiah57 said:

வாழ்த்துக்கள்  மேரி 🙏

மேரியா???  அது யார் ?? வருகைக்கு நன்றி

On 27/12/2023 at 20:38, nochchi said:

தமிழை உயிராகக்கொண்டு இறுதிக்காலம் வரை தமிழோடு பயணித்த இரு தமிழ்ச் சிற்பிகளால் தமிழுக்கு வரப்பெற்ற எழுத்தாளராக வலம்வரும் உங்களுக்கு வாழத்துகளும் பாராட்டுகளும். நூல் வெளியீடு சிறப்புற வாழ்த்துகள்.

உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமே ஆன்ரி!

நூல் வரவுக்காகக் காத்திருக்கின்றோம். 😀

மூனா அண்ணாவின் அட்டைப்படத்தைக் காணவில்லை!

36 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மேரியா???  அது யார் ??

நீங்கள்தான்! உங்கள் நீளமான பெயரில் தங்களுக்குப் பிடித்தமானவர்களைக் காண்கின்றார்கள்😊

மெசோ, மியா, சுமே, மேரி- இன்னும் எத்தனையோ!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்ததுக்கள் சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2023 at 10:18, கிருபன் said:

வாழ்த்துக்கள் சுமே ஆன்ரி!

நூல் வரவுக்காகக் காத்திருக்கின்றோம். 😀

மூனா அண்ணாவின் அட்டைப்படத்தைக் காணவில்லை!

நீங்கள்தான்! உங்கள் நீளமான பெயரில் தங்களுக்குப் பிடித்தமானவர்களைக் காண்கின்றார்கள்😊

மெசோ, மியா, சுமே, மேரி- இன்னும் எத்தனையோ!

நூலை நேரில் பார்த்தால் மட்டும்தான் என்னால் மிகுதியைக் கூற முடியும். பழுப்பு நிறத்தில் வரவேண்டிய அட்டை வேறு நிறத்தில் வந்துவிட்டனர். அதனால் நானும் போடவேண்டியதாப் போச்சு. நூல் சரியான நிறத்தில் தான் வரும் என்று அவர் சொன்னாலும் நேரில் பார்த்தால்தான் தெரியும். மூணா அண்ணா என் வேண்டுகோளுக்கு இணங்க சில மாற்றங்களைச் செய்தார். அதனாலத்தான் அவரதுபோல் தெரியவில்லை.

On 31/12/2023 at 20:14, Kavi arunasalam said:

வாழ்ததுக்கள் சுமேரியர்

மிக்க நன்றி அண்ணா

On 30/12/2023 at 10:18, கிருபன் said:

மெசோ, மியா, சுமே, மேரி- இன்னும் எத்தனையோ!

இதில் சுமே என்னும் பெயரே எனக்குப் பிடித்தமானது .😀

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமோ 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

1324959499.jpg

"மனமும் இடம் பெயரும்" என்ற சிறுகதைத்தொகுப்பு நூல் கிளிநொச்சியில் வெளியீட்டு: 
 

(யோகி)
 

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்டு தற்போது புலம்பெயர்ந்து வாழும் நிவேதா உதயராஜன் எழுதிய "மனமும் இடம்பெயரும் "என்ற சிறுகதைத்தொகுப்பு நூல் வெளியீடு (28)இன்றைய தினம் கிளிநொச்சி கல்வி பண்பாட்டு அபிவிருத்தி நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது.

 கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள்  வித்தியாலய அதிபர் பெ.கணேசன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கவிஞர்கள்,மாவட்ட பொது அமைப்பு சார்ந்தோர்,பாடசாலை மாணவர்கள்  என  பலர் கலந்து கொண்டனர்.
 

https://newuthayan.com/article/"மனமும்_இடம்_பெயரும்"_என்ற_சிறுகதைத்தொகுப்பு_நூல்_கிளிநொச்சியில்_வெளியீட்டு:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.