Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

3 நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்

30 DEC, 2023 | 06:44 PM
image

ஆர்.ராம் 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் விஜயமாக எதிர்வரும் நான்காம் திகதி வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

இதன்போது காணிவிடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமான அறிவிப்பினை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து 250மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதனையடுத்து, அவர் கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் யாழ்.மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது பிரசன்னமாகவுள்ளார்.

https://www.virakesari.lk/article/172774

Edited by ஏராளன்
ல் ர் ஆக மாற்றம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் விஜயமாக எதிர்வரும் நான்காம் திகதி வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

தமிழர்களின் நாடிபிடித்தறியும் பயணம்.ஆனால் எங்கடசனமும் எப்பிடியும் பச்சைத்தொப்பியோடை வரவேற்கும். யே.ஆரின் இனஅழிப்பையும், அதன் தொடர்ச்சியாக ரணில் என்ற குட்டி நரி செயற்படுவதையும் தமிழ்மக்கள் உணர்ந்து வருகையை கண்டகொள்ளாதிருப்பதே நன்று.

  • ஏராளன் changed the title to மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடக்கில் தொடர் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ள  ரணில்

1295950256.png

புத்தாண்டில் நான்கு நாள் பயணமாக வடக்குக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் பங்குகொள்கின்றார். அன்று மாலை 7 மணி முதல் 9.30 வரை சிவில் சமூகப் பிரதிநிதிகளை அவர் சந்திக்கின்றார். 5ஆம்திகதி காலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும், மாலை 2 மணி தொடக்கம் 3 மணி வரையில் பூநகரிப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நகர மயமாக்கல் தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொள்கின்றார்.

6 ஆம் திகதி காலை 9 மணி முதல் 10 மணி வரையில் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் கிளிநொச்சி வளாகப் பீடாதிபதி உள்ளிட்ட விரவுரையாளர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து 10 மணிமுதல் 11.30 வரையில் சர்வமதப் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் நலன்புரிச் சங்சத்தின் பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்கின்றார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை யாழ்.மாவட்ட செயலகத்தில் நிபுணர்களுடனான சந்திப்பும், 7 ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் பனை தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது. (ஐ)   
 

https://newuthayan.com/article/வடக்கில்_தொடர்_சந்திப்புகளை_மேற்கொள்ளவுள்ள_ ரணில்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நிச்சயமாக தையிட்டி விகாரையில் பிரித்து ..ஓதுவார்...பிறகு தமிழரைச் சந்திக்கும்போது..காணிவிடுவிப்பன் என்று பெரியதாய்...ஒரு அவுட்டுவிடுவார்..

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்ப ரணில்.. தமிழீழத்துக்கு 3 நாள் வியஜம் போறார் என்றீங்கள். ஏனெனில்.. அவைட கருத்துப்படி.. ஐக்கிய சொறீலங்காவுக்குள்.. ஓர் இடத்தில் இருந்து இன்னோரு இடத்திற்கு பயணம் போவதை வியஜம் என்றா சொல்லுவினம். இல்லை தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதிய வரிகளின் தாக்கம் எப்படி இருக்கும் என்று பலரும் குழம்பி கொண்டு உள்ளார்கள் இந்தநேரத்தில் ஏன் இந்த அணில் ஏன்  கோமணம் இல்லாமல் வடக்கு பக்கமாய்  ஓடுது ?

  • Like 1
Posted
9 minutes ago, பெருமாள் said:

புதிய வரிகளின் தாக்கம் எப்படி இருக்கும் என்று பலரும் குழம்பி கொண்டு உள்ளார்கள் இந்தநேரத்தில் ஏன் இந்த அணில் ஏன்  கோமணம் இல்லாமல் வடக்கு பக்கமாய்  ஓடுது ?

தமிழர் தரப்பில் யாராவது  ஜனாதிபதி  தேர்தலில் நிற்க வேண்டும் என தமிழ் மக்களின் நாடியை பிடித்து பார்க்க தான் பலரையும் சந்திக்கவிருக்கிறார் என நினைக்கிறேன். 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

04 JAN, 2024 | 05:29 PM
image
 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை (4) மாலை 4 மணியளவில் சென்றடைந்தார்.

 

யாழ்ப்பாணம் சென்ஜேம்ஸ் பாடசாலை அருகே உள்ள மைதானத்தில் உலங்குவானூர்தி மூலம் சென்றடைந்த ஜனாதிபதி வாகன தொடரணியாக யாழ். மாவட்ட செயலகத்தை சென்றடைந்தார்.

 

வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயமாக சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

 

ஜனாதிபதியின் பங்கேற்புடன் யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பமானது.

இதேவேளை, யாழ்ப்பாணம் பழைய பூங்காவுக்கு அருகில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

பழைய பூங்காவிற்கு அருகில் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து வைத்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதி

04 JAN, 2024 | 10:24 PM
image
 

யாழில்  நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் கூட்டத்தில் இந்தியாவின் zee தமிழ் சரிகமப நிகழ்வின்  வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய கில்மிஷா உதயசீலனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்தார். 

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 31/12/2023 at 10:09, ஏராளன் said:

3 நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்

30 DEC, 2023 | 06:44 PM
 

தொடர்ந்து 250மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

 

இந்த பாலி ஆற்று நீர் திடத்தை ஒன்றும் 250 மில்லியன் ரூபாயில் செய்ய முடியாது. நான் அறிந்த வரைக்கும் அந்த நிதி ஒதுக்கீடானது அங்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ஒதுக்கப்படட பணம் என்றே அறிகிறேன். அதுவும் நடக்குமா என்பதும் சந்தேகம்தான். எனவே இதெல்லாம் தேர்தலுக்கான நடவடிக்கையே தவிர மற்றப்படி கண்துடைப்புதான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் பாதுகாப்பு உச்சம்: மூவர் கைது


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில்  வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டு முழுமையாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு இன்று (04) வருகைதரும் ஜனாதிபதி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மாலை 3 மணி முதல் 5.30 வரை  நடைபெறும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/யழல-பதகபப-உசசம-மவர-கத/175-330943

  • கருத்துக்கள உறவுகள்
Posted

3-2-1.jpg?resize=750,375&ssl=1

ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்  ‘சரிகமப‘ நிகழ்ச்சியின்  வெற்றியாளர் கில்மிஷா எடுத்துக் கொண்ட செல்பியானது  இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

இதன்போது நேற்றிரவு யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி,  கில்மிஷாவை நேரில் அழைத்துப்  பாராட்டினார்.

இதேவேளை ஜனாதிபதியுடன் புகைப்படங்கள்  எடுத்துக்கொண்ட கில்மிஷா, அவர் முன்னிலையில் பாடல்  பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1364997

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Jaffna-DDC-Meeting-2-scaled.jpg?resize=7

வடக்கில் காணிவிடுவிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் : ஜனாதிபதி அறிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் காணி விடுப்பு செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலாலி விமான நிலையம் மற்றும் பாதுகாப்புத்துறைக்கு தேவையான காணிகள் தொடர்பில் பெப்ரவரி மாதமளவில் இறுதி தீர்மானத்தை எடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது யாழ்ப்பாணத்திற்கு சென்று காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காணி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

வடக்கின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கான இரு திட்டங்களுக்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட குடிநீர் திட்டங்களுக்கு செலுத்தப்பட வேண்டியிருந்த கொடுப்பனவுகளை பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, மீன்பிடித்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பீ.எம்.எஸ்.சார்ள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் ராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வடக்கு மாகாணத்துக்கான ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எம்.இளங்கோவன், ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அம்பலவானன் சிவபாதசுந்தரன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

https://athavannews.com/2024/1364965

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பூநகரி பிரதேசத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

05 JAN, 2024 | 07:49 PM
image
 

 

வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (05) பிற்பகல் பூநகரி பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.

 

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட பூநகரி நகர அபிவிருத்தித் திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

 

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பூநகரி நகர அபிவிருத்திக்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

அதற்கிணங்க, உரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தித் திட்டங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தினார்.

 

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூநகரி கோட்டையை பார்வையிட்டார்.

 

மேலும், பூநகரி பிரதேசத்தில் இயங்கிவரும் உயர்தர முந்திரி உற்பத்தி நிறுவனமான "வன்னி கெசு" முந்திரி உற்பத்தி நிறுவனத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்து அதன் செயற்பாடுகளையும் அவதானித்தார்.

 

இயந்திரவியல் பொறியாளரான யுவதி ஒருவரால் நடத்தப்படும் இந்த கைத்தொழில் நிறுவனம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது.

 

நவீன தொழில்நுட்பத்துடன் இங்கு அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறுவதோடு, கஜு சுத்தப்படுத்தலில் இருந்து அதன் இறுதி செயற்பாடு வரையில் பயன்படுத்தப்படும் அனைத்து இயந்திரங்களும் குறித்த யுவதியால் தயாரிக்கப்பட்டிருக்கின்றமை சிறப்பம்சமாகும்.

 

இந்த தொழில் நிறுவனமானது தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி, இது நாட்டின் ஏனைய இளைஞர் யுவதிகளுக்கும்  முன்னுதாரணமாகும் என்றும் குறிப்பிட்டார்.

 

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் இக்கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்டனர்.

பூநகரி பிரதேசத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பூநகரி பொலிஸார் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு!

கிளிநொச்சி – பூநகரியில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்குமாறு கோரி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பூநகரி பிரதேச செயலகத்தில் ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் பல கலந்துரையாடல்கள் இன்று (05) மாலை இடம்பெறவுள்ள நிலையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், பொன்னாவெளி பகுதியில் சீமெந்து நிறுவனமொன்றுக்கு அகழ்வு பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆர்பாட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் 10 பேருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். எவ்வாறாயினும், ஜனாதிபதி தலைமையிலான கலந்துரையாடல், பொதுமக்கள் மற்றும் க.பொ.த உயர் தர பரீட்சைக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையிலும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காத வகையிலும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க அரசியலமைப்பில் உரிமை காணப்படுவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறன்றி, சட்டத்திற்கு விரோதமாக ஆர்பாட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில், பொலிஸாரினால் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை கைது செய்ய முடியுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், ஆர்பாட்டத்தின் போது சட்ட விரோத நடவடிக்கைகள் இடம்பெறும் பட்சத்தில் பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களுக்கு உட்பட்டு அவற்றை தடுக்க பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/287148

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழ் சிறி said:

3-2-1.jpg?resize=750,375&ssl=1

ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்  ‘சரிகமப‘ நிகழ்ச்சியின்  வெற்றியாளர் கில்மிஷா எடுத்துக் கொண்ட செல்பியானது  இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

இதன்போது நேற்றிரவு யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி,  கில்மிஷாவை நேரில் அழைத்துப்  பாராட்டினார்.

இதேவேளை ஜனாதிபதியுடன் புகைப்படங்கள்  எடுத்துக்கொண்ட கில்மிஷா, அவர் முன்னிலையில் பாடல்  பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1364997

கண்டால் வரச்சொல்லுஙக பாடலா?🙃

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரணில் யாழுக்கு போகும் போது 5,6 பேர் ஆர்ப்பாட்டம் செய்தவை ...அவைக்கு தாங்கள் என்னத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்யிறம் என்டே தெரியவில்லை🙂 ...அதில் வேலன் சுவாமி என்பவர் மாட்டை கொல்வதை தடை செய் என்று கத்தினார்😍 ...அவருக்கு பக்கத்தில் இருந்து கத்தினவர்களே மாடு சாப்பிடுபவர்களாய்த் தான் இருப்பார்கள்🤣 ...ரணிலை பார்க்கிற ஆசையில் முன்னுக்கு நின்ட பேருந்தை எடுக்க சொல்லியும் கத்தினார்கள்🤩

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, alvayan said:

கண்டால் வரச்சொல்லுஙக பாடலா?🙃

 

இருக்கும் இருக்கும்.......அவரைத்தானே இப்ப சிங்களச்சனம் உட்பட எல்லாரும் தேடீனம்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அகிலத்திருநாயகியை நேரில் சந்தித்து ஜனாதிபதி பாராட்டு

06 JAN, 2024 | 09:33 PM
image
 

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி  கௌரவித்து  மதிப்பளித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, வயது என்பது வெறும் இலக்கம் மட்டுமே என்பதை நிரூபித்து அகிலத்தை வென்ற அகிலத்திருநாயகிக்கு ஜனாதிபதி வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களுக்கு ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இவருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் ஆளுநருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான தடகளப் போட்டியில் (National Masters & Seniors Athletics) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த திருமதி அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த இவர், 1,500 மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

அப்போட்டிக்கு முன்னர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 22 ஆவது ஆசிய சிரேஷ்ட பிரஜைகளுக்கான போட்டியில் பங்கேற்ற இவர், அதில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றார்.

இவர் ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/173305

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மத ஸ்தங்களுக்கு விரைவில் தீர்வு

adminJanuary 7, 2024
32-1-1-scaled.jpg?fit=1170%2C557&ssl=1

வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகள் வழங்கப்படும் எனவும், அந்த மத ஸ்தலங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை மத தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். அதற்கு மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பணிகள் பாரியதாக இருக்கும்.

அனைத்து மதத் தலைவர்களும் நல்லூர் ஆலய  பொறுப்பாளர்களும் விரும்பினால் நல்லூர் ஆலயத்தை விட பெரிய ஆலயத்தை அமைக்க முடியும். கிறிஸ்தவ தேவாலயங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக மடு தேவாலயத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

யுத்த காலத்தில் முஸ்லிம் மக்கள் இந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேறியதாகவும், அவர்கள் மீள்குடியேறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இனம் மற்றும் மதம் என்ற அடிப்படையில் பிளவுபட வேண்டிய அவசியமில்லை. அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பெற்றுக் கொண்டு ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். நாட்டின் சமய மற்றும் கலாசார விழுமியங்களை முன்வைத்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்தார்.

32-2-1.jpg?resize=800%2C42032-3-1.jpg?resize=800%2C379
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

nallai-aathinam.jpeg?resize=275,183&ssl=

ஜனாதிபதியை பிறிதொரு இடத்திற்கு சென்று சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை – நல்லை ஆதீனம்!

நல்லை ஆதீன குருமுதல்வர் பிறிதொரு இடத்திற்கு சென்று ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய தேவையில்லை என ஆதீனத்தின் செயலாளர் ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (06..1.24) சர்வமத தலைவர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பில் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசபந்த பராமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொள்ளவில்லை.

இது தொடர்பில் ஆதீன செயலாளர் ஆறுதிருமுருகனிடம் கேட்ட போதே   இதனை வலியுறுத்தி உள்ளார்.

https://athavannews.com/2024/1365128

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி ரணிலிடம் மூன்று கோரிக்கைகளை இந்து அமைப்புக்கள் கூட்டிணைந்து முன்வைப்பு

Published By: VISHNU   07 JAN, 2024 | 04:50 PM

image

மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், இந்து சமயத்தை அரசியலமைப்பில் முன்னுரிமைச் சமயம் ஆக்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் இந்து சமய அமைப்புக்கள் கூட்டிணைந்து முன்வைத்துள்ளன. 

குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜரை இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மாவட்டபுரம் அருள்மிகு கந்தசாமி கோயில் தலைவர் குருக்கள் ஐயா சிவ பூமி அறக்கட்டளை தலைவர் ஆறு திருமுருகன் சிவ சேனை தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் உள்ளிட்ட நூற்றுக்கும் கூடுதலானோர் கையொப்பமிட்டிருந்த நிலையில், இலங்கை இந்து அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் சிவபால தேசிகர், செயலாளர் சிறீந்திரன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் வைத்து கையளித்தனர்.

குறித்த மகஜரில், உங்கள் ஆட்சிக் காலத்தில் திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்தாரின் பௌத்த மேலாதிக்க அடாவடித்தனத்தை நிறுத்தினீர்கள், வெடுக்குநாறி மலையில் உடைந்த சைவத் திருவுருவங்களை மீண்டும் நிறுவ வழி செய்தீர்கள், பகவத் கீதைக்கான உலக மாநாட்டையும் சமஸ்கிருத மொழிக்கான உலக மாநாட்டையும் இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறீர்கள், இந்து சமய வழிபடு பயணிகளுக்காகக் காங்கேயன்துறை நாகப்பட்டினம் கப்பல் சேவையை ஏற்றினீர்கள் உள்ளிட்ட பத்து விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த நடவடிக்கைகளுக்காக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து அம்மகஜரில், தங்களது மேற்படி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இந்து சமயத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை, மதமாற்றத் தடைச் சட்டம், பசுக் கொலைத் தடைச் சட்டம் ஆகிய மூன்றையும் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றி இலங்கையில் இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் வாழ்வியலையும் நன்நெறியையும் இடையூறின்றிக் பேணவும் போற்றவும் ஆவண செய்வீர்களாக.

இந்த மூன்று கோரிக்கைகளுக்கும் செவி சாய்த்து உரிய நடவடிக்கை எடுப்பீர்களானால்  இந்துக்களின் வாக்கு வங்கி ஆதரவை உங்களுக்காகப் பெற்று தருவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கை சிவபூமி. இலங்கையின் ஆதிசமயம் சைவ சமயம். சைவர்களோடு சேர்ந்து புத்தர்களும் விஷ்ணுவை சிவனை உமையை கண்ணகியை கல்வி செல்வம் வெற்றிகான அம்மன்களை விநாயகரை முருகனை வழிபடுகிறார்கள்.  இந்துக்கள் இந்த நாட்டில் உரிமையோடு வாழ்வதைப் புத்த சமயத்தவரும் உறுதி செய்கிறார்கள். இலங்கை சிவ பூமி என்பதைப் புத்த சமயத்தவரும் உறுதி செய்கிறார்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/173347



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.