Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கெல்லி Ng
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

எரிந்து கொண்டிருந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த பயணிகள், விமானப் பணியாளர்களின் அறிவுறுத்தலின்படி தங்கள் கைப்பைகளை விட்டுவிட்டு ஆபத்து கால வழிகளை நோக்கி ஓடினர்.

விமானப் பணியாளர்களின் பேச்சைக் கேட்டு, அவர்கள் தங்கள் பொருட்களை கைவிட்டு தப்பி ஓடியதே விமானத்திலிருந்த 379 பேரும் விரைந்து காப்பாற்றப்பட்டதற்கு முக்கியமான காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.

பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது.

செவ்வாய்க்கிழமை (ஜனவரி 3) ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 516 தரையிறங்கிய போது ஒரு கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது. இந்தச் சிறிய விமானத்திலிருந்து 6 பேரில் 5 பேர் உயிரிழந்தனர்.

379 பேரும் ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி?

இவ்விபத்தில் ஒரு சிறு தடங்கலுமின்றி விமானத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டது உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. விமானவியல் நிபுணர்களும் விமானப் பணியாளர்களும் இது மிகச் சிறப்பாகப் பயிற்சியளிக்கப்பட்டிருந்த விமானப் பணியாளர்களாலும், அவர்களது பாதுகாப்பு அறிவுறுத்தலைக் கேட்டு அதன்படி நடந்த பயணிகளும்தான் இதற்குக் காரணம் என்று பிபிசியிடம் கூறினர்.

கிரீன்விச் பல்கலை கழகத்தின் தீவிபத்துப் பாதுகாப்புக் குழுவின் இயக்குநர் எட் கலீயா கூறுகையில், “நான் பார்த்தவரையில் தரையிலிருந்த ஒரு பயணியும் தங்களது கைப்பைகளைக் கொண்டுவரவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது பயணிகள் வெளியேற்றத்தை தாமதப்படுத்தி மிகப்பெரும் ஆபத்தை விளைவித்திருக்கும்,” என்கிறார் அவர்.

மேலும், “இந்த விபத்து மிகச் சிக்கலான முறையில் நடந்தது, விமானத்தின் மூக்கு கீழ்நோக்கி இருந்தது. இது பயணிகள் வெளியேறுவதைக் கடினமாக்கியது,” என்கிறார் அவர்.

வெளியேறுவதற்கான காற்று நிரம்பிய சறுக்குகள் மூன்று மட்டுமே பயன்படுத்த முடிந்தது. ஆனால், விமானம் நின்றிருந்த கோணத்தால் அவையும் சரியாகச் செயல்படுத்தப்பட முடியவில்லை. அது மிகவும் செங்குத்தாக இருந்திருக்கும்.

"விமானத்தின் அறிவிப்புப் பொறிமுறையும் செயல்படாமல் போனது. அதனால் விமானப் பணியாளர்கள் ஒலிபெருக்கிகள் மூலமும், சத்தமாகக் கத்துவதன் மூலமும் அறிவிப்புகளை வழங்கினர்" என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஒரு பயணிக்குச் சிராய்ப்புகள் ஏற்பட்டதாகவும், 13 பேர் உடல் அசௌகரியத்திற்காக மருத்துவ பரிசோதனையைக் கோரியிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

"பெரும விபத்து நேரிட்டிருந்தாலும் வெறும் ஐந்தே நிமிடங்களில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்" என்று அதில் பயணித்த யமகே என்ற பயணி கூறினார். தீ மளமளவென விமானம் முழுவதும் பரவ பத்து பதினைந்து நிமிடங்கள் ஆனதாக அவர் கூறினார்.

28 வயதான சுபாசா சவாதா (Tsubasa Sawada) "இது ஒரு அதிசயம், ஒருவேளை நாங்கள் இறந்திருக்கக் கூடும்" என்றார்.

"தீ எப்படி ஏற்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன், பதில் கிடைக்கும் வரை எந்த விமானத்திலும் பயணிக்க மாட்டேன்" என்று சவாதா மேலும் கூறினார்.

விபத்துக்குள்ளான விமானம், ஜப்பானின் வடக்கிலிருக்கும் சப்போரோவின் நியூ சிடோஸ் விமான நிலையத்திலிருந்து இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்குக் கிளம்பியது. இரண்டு மணி நேரத்தில் ஹனேடாவில் தரையிறங்கியது.

அவ்விடத்தில், புத்தாண்டன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்க ஒரு சிறிய கடலோரக் காவல்படை விமானம் நின்றிருந்தது. அதனோடு பெரிய விமானம் எப்படி மோதியது என்பதைப் பற்றிய விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

ஜப்பான் விமான விபத்து

பட மூலாதாரம்,REUTERS

‘மிகவும் அதிர்ஷ்டசாலிகள்’

பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு பிபிசியிடம் பேசிய ஒரு முன்னாள் ஜப்பானிய விமானப் பணியாளர் தப்பித்த பயணிகள் ‘மிகவும் அதிர்ஷ்டசாலிகள்’ என்றார்.

“பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டதை அறிந்து நிம்மதியாக இருந்தது. ஆனால் ஆபத்து கால வெளியேற்ற வழிமுறைகளை நினைத்தால் பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது. இந்த விபத்தில் விமானங்கள் மோதிக்கொண்ட விதத்தையும், தீ பரவியதையும் பார்க்கையில் இந்த விபத்து மிக மோசமாக இருந்திருக்கக் கூடும்,” என்கிறார் அந்தப் பெண்.

நிஜத்தில் பயணிகளை பதற்றமடையாமல் இருக்க வைப்பது மிகக் கடினம் என்ற அவர், அவர்கள் காப்பாற்றப்பட்டது கற்பனை செய்ய முடியாத அளவு கடினமானது என்றார். “இது பணியாளர்களின் மிகச்சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் அவர்களின் அறிவுறுத்தலின்படி நடந்த பயணிகள் ஆகியவற்றால் சாத்தியப்பட்டது,” என்றார்.

கைகொடுத்த பயிற்சிகள்

விமானப் பணிப்பெண்கள் மூன்று வார தீவிரப் பயிற்சிக்குப் பிறகே பணியமர்த்தப்படுவார்கள் என்றார் அவர். இது ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும்.

“எழுத்துத் தேர்வு, நிஜ சம்பவங்களைப் பற்றிய விவாதங்கள், செய்முறைப் பயிற்சிகள் ஆகியவை இதில் அடக்கம். விமானம் கடலில் விழுந்தால் என்ன செய்வது, விமானத்தில் தீப்பிடித்தால் என்ன செய்வது, போன்றவை கற்றுத்தரப்படும். பராமரிப்புப் பணியாளர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது,” என்றார் 10 வருடங்களுக்குமுன் பணியிலிருந்து விலகிய அந்தப்பெண்.

தென்கிழக்கு ஆசிய விமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் விமானியும் விமானப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்ட தீவிரமான பயிற்சிதான் இந்த மீட்புப் பணியில் உதவியது என்றார்.

“இங்கு பயிற்சி மிக முக்கியப் பங்காற்றியது என்று நினைக்கிறேன். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் யோசிப்பதற்கு நேரமே இருக்காது. பயிற்சியில் கற்றுக்கொண்டதைச் செயல்படுத்த மட்டுமே முடியும்,” என்றார் அவர்.

பயணிகள் விமானங்கள் சர்வதேச சான்றிதழ் பெறுவதற்கு, விமானத்தில் இருக்கும் அனைவரும் 90 வினாடிகளில் வெளியேற முடியும் என்று விமானத் தயாரிப்பாளர்கள் காண்பிக்க வேண்டும். சில சமயம் பரிசோதனை மீட்பு முயற்சிகள் உண்மையான பயணிகளை வைத்து செய்யப்படுகின்றன, என்கிறார் அவர்.

ஜப்பான் விமான விபத்து

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

தரையிலிருந்த ஒரு பயணியும் தங்களது கைப்பைகளைக் கொண்டுவரவில்லை

கடந்த கால விபத்துகள்

கடந்த கால விபத்துகளுக்குப் பிறகு விமானப் பாதுகாப்பு நெறிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் அந்த விமானி.

உதாரணமாக, 1977-ஆம் ஆண்டு ஸ்பெயினில் இரண்டு போயிங் 747 ரக விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 583 பேர் கொல்லப்பட்டனர். இது விமான வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாகப் பார்க்கப்படுகிறது. இது விமானப் பணியாளர்கள் மற்றும் விமானப் போக்குவரத்து நிர்வாகிகள் ஆகியோரிடையே நடந்த தகவல் பரிமாற்றத்தில் இருந்த சிக்கல்தான் இதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து விமானத்திலிருக்கும் விமானி அறை மற்றும் ரேடியோ தொலைதொடர்பு சாதனங்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டன.

1985-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸ் ஒரு விபத்தை எதிர்கொண்டது. டோக்கியோவிலிருந்து ஒசாகாவிற்குக் கிளம்பிச் சென்ற 123 என்ற விமானம், கிளம்பிய சற்றி நேரத்திலேயே ஒரு மலையில் மோதியது. அந்த விமானத்தில் பயணித்த 524 பேரில் 4 பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர்.

இவ்விபத்திற்கான காரணமாக போயிங் நிறுவனம் விமானத்தில் செய்த பழுதுவேலையைச் சரியாகச் செயவில்லை என்று சொல்லப்பட்டது.

2006-ஆம் ஆண்டு இந்த விபத்தின் இடிபாடுகளை வைத்து ஜப்பான் ஏர்லைன்ஸ் ஒரு அருங்காட்சியகம் அமைத்தது. இது பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது.

“அந்த விபத்திற்குப் பின், குடும்பத்தாரை இழந்து தவித்தவர்களின் வலி, வேதனை ஆகியவற்றைப் பார்த்தபின், அதுபோன்ற ஒரு சம்பவத்தை மீண்டும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று சபதம் எடுத்துக்கொண்டோம்,” என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

ஜப்பான் விமானத்தில் இருந்த 379 பேரும் வெறும் ஐந்தே நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி? - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

Japan-ல் பயணிகள் உயிர் தப்பியது எப்படி? தீப்பிடித்த போது Flight-க்குள் என்ன நடந்தது? வெளியான வீடியோ

 

1 hour ago, பிழம்பு said:

கிரீன்விச் பல்கலை கழகத்தின் தீவிபத்துப் பாதுகாப்புக் குழுவின் இயக்குநர் எட் கலீயா கூறுகையில், “நான் பார்த்தவரையில் தரையிலிருந்த ஒரு பயணியும் தங்களது கைப்பைகளைக் கொண்டுவரவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது பயணிகள் வெளியேற்றத்தை தாமதப்படுத்தி மிகப்பெரும் ஆபத்தை விளைவித்திருக்கும்,” என்கிறார் அவர்.

மேலும், “இந்த விபத்து மிகச் சிக்கலான முறையில் நடந்தது, விமானத்

எங்கட இலங்கை இந்திய சனம் என்றால் , கைப்பையை மட்டுமல்ல விமானத்தில் பாவிக்க கொடுத்த ear phone, blankets எல்லாவற்றையும் அந்த அவசரத்திலும் தூக்கி கொண்டு இறங்கி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

எங்கட இலங்கை இந்திய சனம் என்றால் , கைப்பையை மட்டுமல்ல விமானத்தில் பாவிக்க கொடுத்த ear phone, blankets எல்லாவற்றையும் அந்த அவசரத்திலும் தூக்கி கொண்டு இறங்கி இருக்கும்.

நான் நினைக்கிறேன் கொடுக்கப்பட்ட அறிவித்தல் தரமானதாக இருந்திருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

அந்த விபத்திற்குப் பின், குடும்பத்தாரை இழந்து தவித்தவர்களின் வலி, வேதனை ஆகியவற்றைப் பார்த்தபின், அதுபோன்ற ஒரு சம்பவத்தை மீண்டும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று சபதம் எடுத்துக்கொண்டோம்,” என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

ஏனைய விமான சேவைகளின் பணியாளர்கள் தரமான பயிற்சி எடுத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரிதான் ஆனால் பெரியவிமானம் எதற்காக போய் நின்றுகொண்டிருந்த சின்ன விமானத்துடன் மோதியது.......ஓட்டுனருக்கு பயிற்சி பத்தாதோ அல்லது காலநிலை சரியில்லையோ ........!  😢

33 minutes ago, suvy said:

எல்லாம் சரிதான் ஆனால் பெரியவிமானம் எதற்காக போய் நின்றுகொண்டிருந்த சின்ன விமானத்துடன் மோதியது.......ஓட்டுனருக்கு பயிற்சி பத்தாதோ அல்லது காலநிலை சரியில்லையோ ........!  😢

இன்றைய பிபிசி தகவல்களின் படி, சிறிய விமானத்துக்கு பறப்பதற்கு அனுமதி அளித்து இருக்கவில்லை. ஆனால் பெரிய விமானத்துக்கு இறங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார்கள். எனவே பெரிய விமானம் தனக்கான ஓடுபாதையில் இறங்கிக் கொண்டு இருக்கும் போது, சிறிய விமானம் அதே ஓடுபாதையில் புறப்பட தொடங்கியமையால் இந்த விபத்து இடம்பெற்று உள்ளது.

3 hours ago, விசுகு said:

நான் நினைக்கிறேன் கொடுக்கப்பட்ட அறிவித்தல் தரமானதாக இருந்திருக்கலாம் 

ஒழுங்குமுறைகளை அப்படியே கடைப்பிடிப்பதற்கு யப்பானியர்கள் உலகம் பூராவும் பெயர் போனவர்கள். மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கை முறை அவர்களுடையது. 

வேலைக்கு போகு அவசர நேரங்களிலும் அவர்கள் ரயில் நிலையங்களில் காத்திருந்து ரயில் ஏறும் வீடியோக்கள் பல சமூகவலைத்தளங்களில் உள்ளன. விதிகளை அப்படியே கடைப்பிடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில வாரங்களை இந்தியாவில் விடுமுறையில் செலவிட்டிருந்தேன்.

டெல்லி மெட்ரோ அடிக்கடி பயன்படுத்தியிருந்தேன். உலகத்தரம் வாய்ந்ததாக இருந்தது.

எதிர்பாராத விடயம் ஒன்றையும் அவதானித்தேன்.

இரயில் வந்து நின்றததும் பயணிகள் வாசலருகே ஏறுவதற்காக அமைதியாக  வரிசையில் காத்து நின்றனர். இறங்குபவர்களை வாசலின் ஒருபக்கமாக இறங்க விட்டு இவர்கள் ஒவ்வொருவராக உள்ளே ஏறிக்கொண்டிருந்தனர்.

யப்பானியசத்தை டில்லியில்  கண்ட நேரம் அது.

இந்தியா வெகு விரைவாக வயதுக்கு வந்து கொண்டிருக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

எங்கட இலங்கை இந்திய சனம் என்றால் , கைப்பையை மட்டுமல்ல விமானத்தில் பாவிக்க கொடுத்த ear phone, blankets எல்லாவற்றையும் அந்த அவசரத்திலும் தூக்கி கொண்டு இறங்கி இருக்கும்.

இந்த விமான விபத்தில் இருந்து உயிர்களைக் காப்பாற்றியது ஜப்பானியர்களின் கட்டுப்பாடும்  ஒழுக்கமும் என்கிறீர்கள். 

அது 100%

1 hour ago, சாமானியன் said:

கடந்த சில வாரங்களை இந்தியாவில் விடுமுறையில் செலவிட்டிருந்தேன்.

டெல்லி மெட்ரோ அடிக்கடி பயன்படுத்தியிருந்தேன். உலகத்தரம் வாய்ந்ததாக இருந்தது.

எதிர்பாராத விடயம் ஒன்றையும் அவதானித்தேன்.

இரயில் வந்து நின்றததும் பயணிகள் வாசலருகே ஏறுவதற்காக அமைதியாக  வரிசையில் காத்து நின்றனர். இறங்குபவர்களை வாசலின் ஒருபக்கமாக இறங்க விட்டு இவர்கள் ஒவ்வொருவராக உள்ளே ஏறிக்கொண்டிருந்தனர்.

யப்பானியசத்தை டில்லியில்  கண்ட நேரம் அது.

இந்தியா வெகு விரைவாக வயதுக்கு வந்து கொண்டிருக்கிறது .

எதுக்கும் ஒருமுறை திரும்பவும் யோசித்துப்பாருங்கள்,.....டெல்லி மெட்ரொ ஸ்ரேசனைப்  பார்க்கும்போது அனேகமாக  நீங்கள் படுக்கையில் நித்திரையில் இருந்திருப்பீர்கள் .

இந்தியனாவது திருந்துவதாவது,...😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இந்த விமான விபத்தில் இருந்து உயிர்களைக் காப்பாற்றியது ஜப்பானியர்களின் கட்டுப்பாடும்  ஒழுக்கமும் என்கிறீர்கள். 

அது 100%

எதுக்கும் ஒருமுறை திரும்பவும் யோசித்துப்பாருங்கள்,.....டெல்லி மெட்ரொ ஸ்ரேசனைப்  பார்க்கும்போது அனேகமாக  நீங்கள் படுக்கையில் நித்திரையில் இருந்திருப்பீர்கள் .

இந்தியனாவது திருந்துவதாவது,...😏

உங்களுக்கு ஏமாற்றம் அளிக்க வேண்டியிருப்பதற்கு வருந்துகிறேன் கப்பித்தான். சிலநாட்களுக்கு முன்னரேதான் அவதானித்த விடயம் என்பதால் மறந்திருக்கவும் சந்தர்ப்பம் இல்லை. இன்னுமொரு சுவாரசியமான விடயம் - "துப்பினால் 250 ரூபாய் தண்டம்"-  என்றும் மெட்ரோ நிலையங்களில் ஆங்காங்கே எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டி வைத்திருக்கிறார்கள்.         எவராவது மெட்ரோ நிலையங்களில் துப்பி நான் காணவில்லை.

 முந்தைய வருட(2022)  இறுதியில் பாரிஸ் மெட்ரோவை பல நாட்கள் உபயோகித்திருந்தேன். டெல்லி,  பாரிஸ் மெட்ரோ இரண்டிலுமே அறிவித்தல் மொழியை விட வித்தியாசம் வேறேதும் கண்டிலேன்.

Edited by சாமானியன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.