Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, island said:

கருத்துக்கு நன்றி.

வரலாற்றில் நடந்த சம்பவங்களையே மட்டுமே  நான் இங்கு தெரிவித்தேன்.  வரலாற்று சம்பவங்களை சிலர் மாற்ற தவறான தகவல்களை சொல்ல முற்படுகையில் அதை கூறும் போது போராட்ட வரலாற்றில் இருந்த விடுதலைப்புலிகளைப் பற்றி கூறாமல் தவிர்க்க முடியாது.  உதாரணமாக விடுதலைப்புலிகள் 1990 ல் இருந்து பல வேறு அரசங்களுடன் பேசிய போதிலும் எந்த முன்மொழிவுகளையும் மேற்கொள்ள வில்லை. 2003 ஒகரோபர் மாதத்தில் அவர்கள் தயாரித்த வரைபே அவர்களால் முதன் முதலாக சமர்ப்பிக்கப்பட்ட வரைபு என்ற உண்மை அன்று பத்திரிகைகளில் கூட வந்திருந்தது. இந்நிலையில் 1990 ல் பிரேமதாசாவிடம் முன் மொழிந்ததை விட மேம்பட்ட ஒன்றையே 2003 ல்   முன்மொழிந்ததாக இங்கு தவறான தகவல்   தெரிவிக்கப்பட்டது.   பிரேமதாசா அரசுடனோ சந்திரிக்கா அரசுடனோ அவர்கள் பேச்சு நடத்தினார்களே தவிர எந்த முன் மொழிவையும் அன்று முன் வைத்திருக்கவில்லை என்பது தான் உண்மை. 

நன்றி ISLAND. 

தற்போது(தான்) இந்தத் திரி சற்று ஆக்கபூர்வமான பக்கத்திற்கு நகர்கிறதுபோலத் தெரிகிறது. 

  • Replies 196
  • Views 15.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • 1997 ல் மாகாண சபையை தவற விட்டோம். 2005ல் சமஷ்டியை தவறவிட்டோம்.  2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள். ஏனென்றால்

  • சமஷ்டி(உள்ளக) என்கிற அடிப்படையில் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பும் இணங்கியிருந்தன என்பதுதான் என் புரிதல்.  தற்போது அது தொடர்பான தரவுகள் என்னிடம் இல்லை. முடிந்த அளவு தேடிப்பார்த்த

  • நீங்கள் கேட்கும் மாற்று திட்டம் என்பது,    பேச்சுவார்த்தை முறிவடையும் தறுவாயில் மீண்டும் முன்னரை விட கடுமையாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி தமிழீழம் என்ற இலட்சியத்தை  அடையலாம் அல்லது அதற்குரிய பலத்தை முன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

வரலாறை மாற்றி பொய்யுரைக்கலாம் என்று எண்ணுவது  தாங்கள்  தான் என்பதற்கு உங்கள் கருத்திலேயே ஆதாரம் உள்ளது.

 இடைக்கால வரைபு சமர்ப்பிக்கப்பட்டது 2003 ஓக்ரொபர் மாதத்தில். சுனாமி வந்தது 2004 டிசம்பர் மாதத்தில். “சுனாமியைத் தொடர்ந்த ஒரு இடை ஏற்பாடே இடைக்கால வரைபு” என்று வரலாற்றை  மாற்றி  சுய இன்பம் அடைய எழுதுவது நீங்களே. 

திரு அன்ரன் பாலசிங்கள் அந்த வரைபில் சம்பந்தப்படவில்லை அவர் ஓய்விஇல் இருந்தார் என்பது உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். அனைவருக்கும் தெரியும்.  இந்த உண்மையை எவராலும் மாற்ற முடியாது 

தகவல்கள் தவறு என்றால் அல்லது திகதிகளில் தவறு இருந்தால் திருத்துங்கள். அதை என்றும் வரவேற்பேன். 

சுனாமியை தொடர்ந்து கேட்கப்பட்டது தான் இடைக்கால நிர்வாக அலகு. மற்றவர்களும் இதனை உறுதிப்படுத்தட்டும். 

ஆனால் அதையே வைத்து உங்கள் சொந்த சுய இன்பங்களை இங்கே திணித்து மகிழ்வதை மட்டுமே எதிர்க்கிறேன் எதிர்ப்பேன். 

இனி உங்களிடம் பேச எதுவும் இல்லை. முடிந்தால் மற்றவர்கள் பேசட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

தகவல்கள் தவறு என்றால் அல்லது திகதிகளில் தவறு இருந்தால் திருத்துங்கள். அதை என்றும் வரவேற்பேன். 

சுனாமியை தொடர்ந்து கேட்கப்பட்டது தான் இடைக்கால நிர்வாக அலகு. மற்றவர்களும் இதனை உறுதிப்படுத்தட்டும். 

ஆனால் அதையே வைத்து உங்கள் சொந்த சுய இன்பங்களை இங்கே திணித்து மகிழ்வதை மட்டுமே எதிர்க்கிறேன் எதிர்ப்பேன். 

இனி உங்களிடம் பேச எதுவும் இல்லை. முடிந்தால் மற்றவர்கள் பேசட்டும். 

நீங்கள் கூறியது தகவல் தவறு மட்டுமல்ல, ஒட்டு மொத்தமாக இடைக்கால நிர்வாக அலகு சமர்பிக்கப்பட்ட காரணத்தைக்கூட உங்கள் சுய இன்பத்துக்கக  வசதிகேற்ப மாற்றும் முயற்சி.

2003 ஒக்ரோபரில் இடைக்கால நிர்வாக அலகு வரைபு சமர்பிக்கப்பட்டது. சுனாமி நடந்தது 2004 டிசம்பரில். இதை யாரும் உறுதிப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. அல்பேர்ட் அயன்ஸ்ரைனின் பொது சார்பியல் கோட்பாட்டின்படி ரைம் ரவல்ஸ் செய்தாலும் நடந்த உண்மை தேதிகளை உங்கள் வசதிக்காக மாற்ற முடியாது.  அது என்னாலும்  முடியாது. 

நான் கூறியது நடந்த உண்மைகள் மட்டுமே. உண்மைகள் உங்களுக்கு கசந்தால் அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்+
On 14/1/2024 at 09:29, நன்னிச் சோழன் said:

அரத்தினச் சுருக்கமாக,

விடுதலைப் புலிகள் 1990ம் (மட்டு-அம்பாறை, தலைநகர் ஆகியவற்றில் 15,000 தமிழர்கள் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.) ஆண்டில் பிரமதாசாவிடம் எதை முன்மொழிந்தார்களோ அதைவிட நன்கு மேம்பட்ட ஒன்றையே 2003ல் முன்மொழிந்தார்கள். (2002ல் உடன்படிக்கை கைச்சாத்தானது)

1990ல் சுயநிர்ணயத்துடன் கூடிய தன்னாட்சியை முன்மொழிந்தார்கள். அது கைகூடவில்லை.

 

இத்தகவலை நான் 10/07/1990 அன்று விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியினால் மாகாணசபையை நிராகரித்து பிரமதாசாவிற்கு விடுக்கப்பட்ட அலுவல்சார் அறிக்கையில் இருந்தே எடுத்தேன்.

இவ்வறிக்கையானது 11/07/1990 அன்று வெளியான உதயன் மற்றும் ஈழநாதம் (https://noolaham.net/project/229/22830/22830.pdf) நாளேடுகளில் உள்ளது. இவ்வறிக்கையின் இறுதியில் தான் இம்முன்மொழிவு உள்ளது.

நான் அரத்தின சுருக்கமாக எழுதியிருந்த "சுயநிர்ணயத்துடன் கூடிய தன்னாட்சியை" என்பதன் முழு விரிப்பு: "தமிழீழ மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து, முழுமையான அரசியல் அதிகாரங்கள் உடைய மாநில தன்னாட்சி" 

விடுதலைப் புலிகள் இவ்வாறான திட்டம் ஒன்றை சிங்கள அரசு தமிழருக்கு வழங்குமானால் தாம் அதை பரிசீலிக்கத் தயார் என்று அறிவித்திருந்தனர். 

அதாவது தாமே ஒரு அதிகாரம் தொடர்பான சுருக்கமான திட்ட முன்மொழிவை முன்மொழிந்து அதே போன்ற அல்லது கூடிய ஒன்றை எமக்கு சிங்களம் வழங்கினால் தாம் (தமிழர் தரப்பு) அதை பரிசீலிக்கத் தயார் என்று கூறியிருந்தார்கள். அதையே நானும் முன்மொழிந்தார்கள் என்று கூறியிருந்தேன். இதை முழுமையான வரைபாக வழங்கினார்கள் என்று நான் எங்கும் கூறவில்லை. 2003 இல் தான் ஒரு முழுமையான முன்மொழிவிற்கான வரைபை சமர்ப்பித்தனர்.

இந்த முன்மொழிவை விட மேம்பட்டது தான் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை. மாநில தன்னாட்சியை விட இ.த.அ.ச. மேம்பட்டதே!

 

 

//மட்டு-அம்பாறை, தலைநகர் ஆகியவற்றில் 15,000 தமிழர்கள் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.//

ஒட்டு மொத்த தமிழீழத்திலும் என்று வர வேண்டும். ஆனால் இம்மூன்று மாவட்டங்களில் மட்டும் தான் அதிகமான சாவு. (அம்பாறை 1400+2900, மட்டக்களப்பு 1700+5600, தலைநகர் 1175+800 )

Edited by நன்னிச் சோழன்
பிற்சேர்க்கை

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தன்னாட்சி என்று அறிக்கை பேச்சுவார்ததை காலத்தில் கோரிக்கையாகவோ அறிக்கையாகவோ   பிரேமதாசவிடம் பேச்சுவார்ததை மேசையில்  வைக்கப்படவில்லை.  

பேச்சுவார்ததை ஜூன் 10 ம் திகதி  முறிவடைந்து  யுத்தம் ஆரம்பித்த பின்னர் ஒரு அறிக்கையாக விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி வெளியிட்டுருந்த ஒரு சாதாரண அறிக்கையே அது.  இந்த அறிக்கை 11.07.1990 ல்  வெளிவந்த ஈழநாதம் பத்திரிகையிலேயே வெளிவந்துள்ளது. 

யுத்தம் ஆரம்பித்து மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது இலங்கை அரசின் போராட்டதிற்கு எதிரான பரப்ரைபுரைகளை எதிர் கொள்ள  இவ்வாறான அறிக்கைகளை தந்திரோபாய ரீதியில்  முன்னணி வெளியிட்டதில் எந்த தவறும் இல்லை.  இதை இலங்கை அரசு கவனத்தில் எடுக்காது என்பது விடுதலைப்புலிகளுக்கும் தெரியும்.  மக்களுக்கும் தெரியும். 

Edited by island
எழுத்து பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, island said:

ரணில் பிரதமராக போய் பதவியிழந்து வந்தார் என்பது தவறான தகவல்.

இல்லை  அது உண்மை தான்   ரணிலின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டபோது  ரணில் இலங்கையில் இருக்கவில்லை   வெளிநாட்டில் இருந்தார்  ஆனால் அமெரிக்கா  இல்லாமல் இருக்கலாம்   இலங்கையில் இல்லை என்பது மிகவும் உறுதியாது   மற்றும் சநதிரிக்கா  பதவிக்கு வந்தது சமாதனப்புறா வேடம்  இட்டு தான்  நான்  பதவிக்கு வந்தால்  இனப்பிரச்சனையை  கண்டிப்பாக தீர்ப்பேன் என்று பிரச்சாரம் செய்து தான்  வெற்றி பெற்றார்   மற்றது. இனப்பிரச்சனை. தீர்வாதர்க்சகான  சந்தர்ப்பம்  இருந்தது  குழப்பியது  சிங்களவர்கள். தான்  தமிழர்கள் ஒருபோதும் குழப்பவில்லை  இப்போது கூட சிங்களவன். தான் விரும்பிய தீர்வை அமுல்படுத்தலாம். பேச்சுவார்த்தை தேவையில்லை   செய்வர்கள??? இல்லை செய்யமாட்டார்கள். இதிலிருந்து தெரிகிறது அவர்கள் தீர்வு தரும் நிலையில் இருந்தது இல்லை  இனிமேலும் தரப்போவதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

இல்லை  அது உண்மை தான்   ரணிலின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டபோது  ரணில் இலங்கையில் இருக்கவில்லை   வெளிநாட்டில் இருந்தார்  ஆனால் அமெரிக்கா  இல்லாமல் இருக்கலாம்   இலங்கையில் இல்லை என்பது மிகவும் உறுதியாது   மற்றும் சநதிரிக்கா  பதவிக்கு வந்தது சமாதனப்புறா வேடம்  இட்டு தான்  நான்  பதவிக்கு வந்தால்  இனப்பிரச்சனையை  கண்டிப்பாக தீர்ப்பேன் என்று பிரச்சாரம் செய்து தான்  வெற்றி பெற்றார்   மற்றது. இனப்பிரச்சனை. தீர்வாதர்க்சகான  சந்தர்ப்பம்  இருந்தது  குழப்பியது  சிங்களவர்கள். தான்  தமிழர்கள் ஒருபோதும் குழப்பவில்லை  இப்போது கூட சிங்களவன். தான் விரும்பிய தீர்வை அமுல்படுத்தலாம். பேச்சுவார்த்தை தேவையில்லை   செய்வர்கள??? இல்லை செய்யமாட்டார்கள். இதிலிருந்து தெரிகிறது அவர்கள் தீர்வு தரும் நிலையில் இருந்தது இல்லை  இனிமேலும் தரப்போவதில்லை 

கந்தையா நீங்கள் கூறியது தவறு. ரணில் விக்கிரமசிங்கா இலங்கையின் பிரதமராக  டிசம்பர் 9,  2001ல் இருந்து ஏபரல் 6, 2004 வரை,  அதாவது,   பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி தோற்கும்வரை பதவியில் இருந்தார். கட்சி போதுமான ஆசனங்களை ஏபரல் 3 ம் திகதி நடந்த தேர்தலில் பெறாததால் பதவியிழந்தார். இதுவே வரலாறு. இந்த உண்மைகளை கூறியதற்காக நீங்கள் எனக்கு சிவப்பு புள்ளி இட்டாலும் இந்த வரலாற்றை உண்மையை  மாற்ற முடியாது. 

பொதுவாக அரசியலமைப்பின் படி பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தாலும் பிரதமரோ அமைச்சர்களோ பதவியிழப்பதில்லை. 

மேலும்,  நீங்கள் எதிர்பார்ககும் தீர்வு கிடைக்காது என்று தானே நானும் கூறினேன்.  அது உண்மை தானே. தீர்வு  கிடைக்கப்போவதில்லை. அதை பெறும் அரசியல் பலம் தமிழர் தரப்பிடம் இப்போது இல்லை, இல்லை, இல்லை என்று தானே பலமுறை எனது பதிவுகளில் கூறியுள்ளேன்.  

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kapithan said:

குசா,

சமஸ்டி தாந்தவங்கள், மாகாணசபை தந்தவங்கள் நாங்கள் வேண்டாம் என்று தட்டிக்கழித்துவிட்டோம் என்கிற அர்த்தத்தில் நான் கூறவில்லை. 

எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை எமது இராசதந்திரமின்மையால் தவற விட்டுவிட்டோம்  என்பது என் நிலைப்பாடு. 

மேலும், தொடர்ச்சியாக புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவற்றை ஊக்குவிக்க வேண்டும். என்கிறேன். 

இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்த பின்னர் ஈழத்தமிழர் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பமாகியது.அதன் பின்னர் தந்தை செல்வாவின் ஆணித்தரமான முன்னெடுப்பின் மூலமாக  தமிழர் உரிமைப்பிரச்சனை பூதாகரமாகியது. அதன் பின் ஆயுத போராட்டங்களும் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கும் பஞ்சமில்லை.இப்போது 2024ம் ஆண்டில் காலடி வைத்துள்ளோம்..
எனவே அன்று தொடக்கம் இன்று வரைக்கும் சிங்களம் ஈழத்தமிழர்களுக்கு எதையுமே விட்டுக்கொடுக்க தயாரில்லை என்பதை எல்லோரும் கண்கூடாகவே பார்க்கின்றோம்.

வந்த சந்தர்ப்பங்களை தவற விட்டார்கள் என சொல்வதற்கு  ஈழத்தமிழர் பிரச்சனை ஒன்றும் அதிஷ்டலாப சீட்டு விவகாரம் அல்ல. நியாயமான முறையில் சட்டப்படி தீர்க்கப்பட வேண்டிய விவகாரம்.
 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

நியாயமான முறையில் சட்டப்படி தீர்க்கப்பட வேண்டிய விவகாரம்.
 

எப்படிச் செய்வது? யார் செய்வது?

எம்மிடம் அது தொடர்பான திட்டம் ஏதும் உண்டா? 

கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதுவுமே தென்படவில்லை . 

1 hour ago, Kandiah57 said:

அவர்கள் தீர்வு தரும் நிலையில் இருந்தது இல்லை  இனிமேலும் தரப்போவதில்லை 

ஆதலால் எந்த முயற்சியுமின்றி வெறுமனே வேடிக்கை பார்ப்போம் என்கிறீர்களா? 

😏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, Kapithan said:

எப்படிச் செய்வது? யார் செய்வது?

எம்மிடம் அது தொடர்பான திட்டம் ஏதும் உண்டா? 

கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதுவுமே தென்படவில்லை . 

 இலங்கையில் தம்மை ஈழத்தமிழர் பிரதிநிதிகள் என பிரதிநிவப்படுத்தும் எம் ஈழத்தமிழர் பிரதிநிதிகளுடன் வெளிநாட்டு பிரமுகர்கள்  என்ன பேசினார்கள்? இவர்கள் என்ன கோரிக்கை வைத்தார்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால் நாமும் நல்லது கெட்டதை சொல்லலாம். 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எப்படிச் செய்வது? யார் செய்வது?

எம்மிடம் அது தொடர்பான திட்டம் ஏதும் உண்டா? 

கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதுவுமே தென்படவில்லை . 

புலிகளை அழிக்க முன் அமெரிக்க இந்திய மேற்கு நாடுகள்

நாங்கள் புலிகளை அழிக்க போகிறோம்.நடந்து முடிந்த பின் தமிழர் பிரச்சனைகளைத் தீர்ப்போம்.

அதுவரை பேசாமல் இருங்கள் என்று சொல்லி தமிழர் தரப்பில் பேரம்பேசும் சக்தியை அழித்தவர்கள் 

இன்னமும் யாருக்காக ஏன் காத்திருக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

எப்படிச் செய்வது? யார் செய்வது?

எம்மிடம் அது தொடர்பான திட்டம் ஏதும் உண்டா? 

கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதுவுமே தென்படவில்லை . 

எப்படிச் செய்வது? இந்தியாவை இழுத்துவிட்டு  யார் செய்வது?  R&AW 

எம்மிடம் அது தொடர்பான திட்டம் ஏதும் உண்டா? கூத்தமைப்பிடம் உண்டு 

கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதுவுமே தென்படவில்லை . ஆட்டுக்குட்டி அண்ணாமலை முதல் அனைத்து சங்பரிவார் கூட்டங்களும் வடக்கிற்கு அடிக்கும் விசிட்களிலிருந்து தெரியவில்லையா  

கடைசியாக இதற்குத்தானே ஆசைப்படுறீங்கள் ...?

  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2024 at 07:41, Kapithan said:

1) ""சிங்களமும் இந்தியும் தட்டில் வைத்து இருப்பது போலவும் அதை தமிழர்கள் தட்டி விட்டது போலவும் இருக்கிறது உங்கள் பாலர் பாடம்.""

சிங்களத்தையும் இந்தியையும் நான் தொட்டுச் செல்லவில்லை. எமது வாய்ப்புகளை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது என் ஆதங்கம். நீங்கள் சொல்ல விரும்புவது புரிகிறது  என்று  இதற்காகத்தான் குறிப்பிட்டேன். 

2) உங்களில் பிழை சொல்லவில்லை. மதில் மேல் பூனையாக நின்றவர்களின் பார்வை இது தான்

உங்கள் கணிப்பு தவறு. நீங்களும் நானும் எப்படியோ பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனால் நிலத்திலுள்ள மக்களின் நிலையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். எமது தவறுகளை அடையாளம் காண முடியும். 

3) அநேகமான தமிழர்கள் மதிலில் இருந்து இறங்கி ஓரே பக்கம் நின்றிருந்தால் எவரும் எம்மை அழித்து இருக்க முடியாது. அதற்கு ஆதாரமாக பத்து வீதம் போராட்டத்துடன் நின்றே இத்தனையையும் சாதித்தவர்கள் நாம்.

[உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை. ஒரு பேச்சுக்காகச் சொல்கிறேன்,....(சனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள உங்களின் கருத்துப்படி) 90% மான மக்களின் கருத்தைத்தானே 10 வீதமானவர்கள் கேட்டிருக்க வேண்டும்? இல்லையா? ]

எதைச் சாதித்தாலும் வாய்ப்புக்களைத் தவறவிட்டால் இருப்பது இல்லாமல் போகும் என்பதற்கு ஈழத் தமிழரதுப்போராட்டம் சிறந்த உதாரணம். 

கவனிக்க: இங்கே நாம் என்று என்னால் குறிப்பிடப்படுவது எம் எல்லோரையும் சேர்த்துத்தான. எவரையும் தனியே குறிப்பிடவில்லை. 

[I]t is much better to lose a battleஎனதுk and win the war than to win a battle and lose the war. Resolve to keep your eyes on the big ball.”

 

இது தான் எனது கருத்தும் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, island said:

கந்தையா நீங்கள் கூறியது தவறு. ரணில் விக்கிரமசிங்கா இலங்கையின் பிரதமராக  டிசம்பர் 9,  2001ல் இருந்து ஏபரல் 6, 2004 வரை,  அதாவது,   பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி தோற்கும்வரை பதவியில் இருந்தார். கட்சி போதுமான ஆசனங்களை ஏபரல் 3 ம் திகதி நடந்த தேர்தலில் பெறாததால் பதவியிழந்தார். இதுவே வரலாறு. இந்த உண்மைகளை கூறியதற்காக நீங்கள் எனக்கு சிவப்பு புள்ளி இட்டாலும் இந்த வரலாற்றை உண்மையை  மாற்ற முடியாது. 

பொதுவாக அரசியலமைப்பின் படி பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தாலும் பிரதமரோ அமைச்சர்களோ பதவியிழப்பதில்லை. 

மேலும்,  நீங்கள் எதிர்பார்ககும் தீர்வு கிடைக்காது என்று தானே நானும் கூறினேன்.  அது உண்மை தானே. தீர்வு  கிடைக்கப்போவதில்லை. அதை பெறும் அரசியல் பலம் தமிழர் தரப்பிடம் இப்போது இல்லை, இல்லை, இல்லை என்று தானே பலமுறை எனது பதிவுகளில் கூறியுள்ளேன்.  

 

இல்லை நான் சொன்னது ரொம்பவும் சரியாகும்    ரணில் அரசாங்கம் இரண்டு தடவைகள் கலைக்கப்பட்டது   முதல் தடவையாக  புலிகளின் தலைவருடன் ஒப்பந்தம் செய்து பேச்சுவார்த்தை  நடத்தபோது  ரணிலுக்கும் சந்திரிக்கா அம்மையாருக்கும். தனிப்பட்ட ஈகோ உண்டு  இதனை ரணில்  சந்திரிக்கா   விரும்பதா  தீர்வை  புலிகளிற்கு கொடுப்பதாக நாடகமாடுமடினார். இந்த தீர்வு வருகிறது என்ற நிலையில் இவருடைய அரசாங்கம் கலைக்கப்பட்டது  ரணில் 2001 இருந்து 2004 வரை பிரதமராக இருந்தது உண்மை  அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியவில்லை   இடையில் கலைக்கப்பட்டுவிட்டது   விகடனின் செய்தியை பாருங்கள் 

இரண்டாவது தடவையாக  மைத்திரிபாலா   ரணில் அரசாங்கத்தை கலைத்து  மகிந்த பிரதமர் ஆக்கினார். நியமித்தார் 

ஶ்ரீறிலாங்கா சுதந்திர கட்சி  ஐக்கிய தேசிய கட்சி  இரண்டு கட்சிகளும் தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதில். ஒரேநேரத்தில் ஒரேநிலைப்பாட்டில்  இருந்தது இல்லை இனிமேலும் இருக்கப்போவதில்லை  ஒன்று ஆதரிக்க மற்றது எதிர்க்கும்  இந்த விடயத்தில் இவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்   இது ஒரு கள்ள உறவு    அல்லது இரகசிய உறவு ஒற்றுமை.   இதுவே பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது செய்ய போதுமான காரணியாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

எப்படிச் செய்வது? இந்தியாவை இழுத்துவிட்டு  யார் செய்வது?  R&AW 

எம்மிடம் அது தொடர்பான திட்டம் ஏதும் உண்டா? கூத்தமைப்பிடம் உண்டு 

கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதுவுமே தென்படவில்லை . ஆட்டுக்குட்டி அண்ணாமலை முதல் அனைத்து சங்பரிவார் கூட்டங்களும் வடக்கிற்கு அடிக்கும் விசிட்களிலிருந்து தெரியவில்லையா  

கடைசியாக இதற்குத்தானே ஆசைப்படுறீங்கள் ...?

 இந்தியாவை எதிர்க்கக்கூடிய ஒரு சக்தி மேற்குலகிற்குத் தேவைப்பட்டது(சீனாவுக்கு தாய்வான் போல),  எப்போது விபு க்கள் தமது சொல்லைக் கேட்கும் நிலையில் இல்லை என்று மேற்குலகு உணரத் தலைப்பட்டதோ அந்தக் கணமே விபு க்களை அழிப்பது என்று மேற்கு முடிவு செய்துவிட்டது. அதன் விளைவு May 2009. 

தமிழருடன் ஒப்பிடும்போது சிங்களம் மிகவும் இலகுவாக மேற்கத்தேய அணுகுமுறைகளுடன் ஒத்துப்போகும் ஒரு இனம் என்பதை நாம் ஆழமாகக் கவனிக்க வேண்டும்.  மேற்குலகுக்கு தற்போது உள்ள ஒரே ஒரு பிரச்சனை ராசபக்சேக்களின் சீனா நோக்கிய நகர்வு மட்டும்தான். 

சிங்களம் எப்போது மேற்கின் அணுகுமுறைக்கு (மீண்டும்) ஒத்துழைக்கத் தொடங்குகிறதோ அந்தக் கணமே இலங்கையில் இனப்பிரச்சனை உள்ளது எனும் மேற்குலகின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இல்லை நான் சொன்னது ரொம்பவும் சரியாகும்

இல்லை கந்தையா நீங்கள் கூறியது ரொம்ப அல்ல முழுக்க முழுக்க தவறான தகவல். 

நீங்கள் கூறியது:  சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது வெளிநாடு சென்றிருந்த பிரதமர் ரணில் பதவியிழந்து நாடு திரும்பினார் என்பதாகும்.

இதை பற்றி  மட்டுமே  எமது உரையாடல் இருக்கட்டும். வேறு வியடங்களை பேசி திசைதிருப்ப வேண்டாம்.  அவர் பின்பு  மைத்திரி காலத்தில்பதவியிழந்தார் என்பதெல்லாம் இங்கு தேவையற்றது.  எமது உரையாடல் நீங்கள் கூறிய சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தை பற்றியது மட்டுமே. 

உங்கள்  அந்த தவறான தகவலை நட்பு ரீதியாக நான் சுட்டிக்காட்டிதைப் பொறுக்கமுடியாமல் அந்த தகவல் சரி என்று அடம் பிடிக்கின்றீர்கள்.  விடயத்துக்கு தொடர்பற்ற விகடன் செய்தியை இணைக்கிறீர்கள்.  இதைப்பற்றி அறிய பற்றி அறிய எனக்கு விகடன் செய்தி அவசியமில்லை என்ற போதிலும், 
நீங்கள் கூறிய தகவல் எதுவும் உங்களால் இணைக்கப்பட்ட விகடன் செய்தியில் கூட இல்லை.

ரணில் விக்கிரம சிங்க இல்ங்கையின் பிரதமராக 2004 ஏப்ரலில் தேர்தலில் தோற்கும்வரை பதவி வகித்தார் அவர் பதவி இழந்து நாடு திரும்பியதாக நீங்கள் கூறியது தவறான தகவல்.  தேர்தலில் போதுமான ஆசனங்களை பெற்றிருந்தால் அவர் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்திருப்பார்.

மீண்டும் கூறுகிறேன்  பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கும் போது பிரதமரோ அமைச்சர்களோ பதவியிழப்பதில்லை.   

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, island said:

நீங்கள் கூறியது:  சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது வெளிநாடு சென்றிருந்த பிரதமர் ரணில் பதவியிழந்து நாடு திரும்பினார் என்பதாகும்.

ஆமாம் இது சரி தான்   எனக்கு நல்ல ஞாபகம் உண்டு” 

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, Kandiah57 said:

இல்லை நான் சொன்னது ரொம்பவும் சரியாகும்    ரணில் அரசாங்கம் இரண்டு தடவைகள் கலைக்கப்பட்டது   முதல் தடவையாக  புலிகளின் தலைவருடன் ஒப்பந்தம் செய்து பேச்சுவார்த்தை  நடத்தபோது  ரணிலுக்கும் சந்திரிக்கா அம்மையாருக்கும். தனிப்பட்ட ஈகோ உண்டு  இதனை ரணில்  சந்திரிக்கா   விரும்பதா  தீர்வை  புலிகளிற்கு கொடுப்பதாக நாடகமாடுமடினார். இந்த தீர்வு வருகிறது என்ற நிலையில் இவருடைய அரசாங்கம் கலைக்கப்பட்டது  ரணில் 2001 இருந்து 2004 வரை பிரதமராக இருந்தது உண்மை  அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியவில்லை   இடையில் கலைக்கப்பட்டுவிட்டது  

 

 

இதுவே சரியான தகவல். 

வரலாற்றுச் சம்பவங்களை மாற்ற சிலர் தவறான தகவல்களை தான் பிடித்த முயலிற்கு மூன்று கால் என்று கூறுமளவிற்கு இத்திரியில் எழுதுகின்றனர்.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:

ஆமாம் இது சரி தான்   எனக்கு நல்ல ஞாபகம் உண்டு” 

நாங்கள் இங்கு பேசுவது நடந்த உண்மை வரலாற்றைப்பற்றி கந்தையா என்ற  நபரின் ஞாபகத்தில் உள்ள தவறான  தகவல் பற்றி அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நன்னிச் சோழன் said:

 

இதுவே சரியான தகவல். 

வரலாற்றுச் சம்பவங்களை மாற்ற சிலர் தவறான தகவல்களை தான் பிடித்த முயலிற்கு மூன்று கால் என்று கூறுமளவிற்கு இத்திரியில் எழுதுகின்றனர்.

மிக்க நன்றி சோழன்”  இது 20 வருடங்களுக்கு முன்பு நடந்தது உங்களிடம் உரிய சான்றுகள் இருந்தால்  இனைந்து விடுங்கள்  🙏

1 hour ago, Kandiah57 said:

ஆமாம் இது சரி தான்   எனக்கு நல்ல ஞாபகம் உண்டு” 

தவறான தகவல் கந்தையா அண்ணா. ரணில் மட்டுமல்ல இலங்கையின் எந்த அதிபரும் வெளி நாடு சென்ற வேளை பதவி இறக்கப்பட்டவில்லை. 

அதே நேரத்தில் JVP யின் அழுத்தத்தால் ரணில் இடை நடுவில் பதவி இறக்கப்பட்டார்

https://www.aljazeera.com/news/2004/2/7/sri-lankas-parliament-is-dissolved

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2024-01-15-211445.png

https://www.parliament.lk/ta/prime-ministers

இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்தில் இருந்து வெட்டி எடுத்த படத்தை மேலே இணைத்துள்ளேன்.
 

இலங்கையின் சனாதிபதியும் ஐக்கிய தேசியக்
கட்சியின் தலைவருமானவர்

HERW.jpg

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2022 ஜூலை மாதம் 21 ஆம் திகதி  இலங்கையின் சனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அவர் ஆறு முறை இலங்கையின் பிரதமராக பதவிவகித்துள்ளார். சனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், 1993–94 காலப்பகுதியில் முதற் தடவையாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், சந்திரிக்கா குமாரதுங்க சனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் 2001 முதல் 2004 வரை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை வழிநடத்த, பிரதமராக பதவியேற்றார். 2015 ஜனவரியில், சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் உருவான கூட்டரசாங்கத்தின் பிரதமராக அவர் பதவியேற்றார். அவரது இந்நியமனம் 2015 ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் இலங்கை மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. 2018 அக்டோபரில் அவரை சட்டவிரோதமாக பதவியிலிருந்து அகற்றிய பின்னர், 2018 டிசம்பர் மாதம் மீண்டுமொருமுறை அவரை பிரதமராக நியமிப்பதற்கு சனாதிபதி சிறிசேன நிர்ப்பந்திக்கப்பட்டார். 2019 நவம்பரில், ஐ.தே.க.வின் சனாதிபதி வேட்பாளர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அவர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். 2022 ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் சீரழிவைத் தடுத்துநிறுத்த, தனது நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் வழங்குவதற்காக ஓர் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்குமாறு சனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் 2022ஆம் ஆண்டு மே மாதம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் 1946 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட இலங்கையின் மிகப் பழமையான அரசியற் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராவார். அவர் 1977 ஆம் ஆண்டிலிருந்து (2020 ஆகஸ்ட் முதல் 2021 ஜூன் வரை ஒரு பத்து மாத இடைவெளியைத் தவிர) அனைத்துப் பாராளுமன்றங்களிலும் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றிய இலங்கையின் மிகவும் மூத்த, அனுபவமிக்க ஒருவராவார்.

https://www.presidentsoffice.gov.lk/index.php/the-president/?lang=ti

 

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka plunges into constitutional crisis

இலங்கை அரசியல் யாப்பு நெருக்கடிக்குள் மூழ்கிப்போயுள்ளது

By K. Ratnayake
5 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மூன்று ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அமைச்சர்களை முக்கிய பொறுப்புக்களில் இருந்து விரைவாக வெளியேற்றவும் பாராளுமன்றத்தை நவம்பர் 19 வரை ஒத்திவைப்பதற்காகவும் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியதன் மூலம், நேற்று ஒரு கூர்மையான அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்தார். குமாரதுங்க, அரசாங்கத்துக்கு எதிரான தனது நடவடிக்கைகளை மேற்கொண்டது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாஷிங்டனில் இருந்துகொண்டிருந்த போதேயாகும். அவர் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை இன்று சந்திக்கவிருந்தார்.

குமாரதுங்க பாதுகாப்பு, உள்துறை மற்றும் ஊடக அமைச்சுக்களை தனது கைகளில் எடுத்துக்கொண்டதோடு, திலக் மாரபன, ஜோன் அமரதுங்க மற்றும் இம்தியாஸ் பகீர் மார்கர் ஆகியோரையும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கினார். இந்த மூவரும் எஞ்சிய பொறுப்புக்களை கொண்டிருப்பதோடு அமைச்சரவையிலும் உள்ளனர். ஒவ்வொரு அமைச்சுக்குமான உயர் மட்ட அலுவலர்களும் பதிலீடு செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற ஒத்திவைப்பானது நவம்பர் 12 அன்று முன்வைக்கப்படவிருந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதைத் தடுக்கும்.

இராணுவத்தை வழிநடத்தும் வகையில், ஜனாதிபதி தேசிய தொலைக்காட்சி நிலையங்கள், வானொலி, அரசாங்க அச்சகம் மற்றும் தலைநகரில் உள்ள பிரதான மின்நிலையங்களில் துருப்புக்களை குவித்துள்ளார். அமைச்சர்களை விலக்குவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதா என்பதை நிச்சயிப்பதற்காக ஒரு விசேட பொலிஸ் குழுவொன்று அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அமெரிக்க, பிரித்தானிய, நோர்வே மற்றும் இந்தியத் தூரகங்களுக்கு வெளியிலும் மற்றும் இலங்கைக் கண்காணிப்புக் குழுவுக்கு வெளியிலும் பாதுகாவலர்கள் இருத்தப்பட்டனர். நாடு பூராவும் பொலிசார் அதிக விழிப்புடன் இருத்தப்பட்டிருந்ததோடு எல்லா விடுமுறைகளும் விலக்கப்பட்டன. நாட்டின் வடக்கில், கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பிரதான பாதையில் நுழைவாயிலில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நேற்றுப் பின்னிரவு தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய குமாரதுங்க அவரது நடவடிக்கைகள் "தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு" அவசியமானது எனக் குறிப்பிட்டார். "கடந்த சில மாதங்களாக காணப்பட்ட கொந்தளிப்பான அபிவிருத்திகள் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட விளைபயனற்ற நடவடிக்கைகளும் என்னை உறுதியானதும் நிலையானதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தள்ளியது," என அவர் குறிப்பிட்டார். ஆனால் அவர் தனது அசாதாரணமான நகர்வுக்கு தெளிவான காரணங்களையோ அல்லது தனது அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதையிட்டோ தெளிவுபடுத்தவில்லை.

https://www.wsws.org/tamil/articles/2003/nov/101103_SLConCris.shtml

1 hour ago, Kandiah57 said:

மிக்க நன்றி சோழன்”  இது 20 வருடங்களுக்கு முன்பு நடந்தது உங்களிடம் உரிய சான்றுகள் இருந்தால்  இனைந்து விடுங்கள்  🙏

 

  • கருத்துக்கள உறவுகள்

https://en.m.wikipedia.org/wiki/13th_Parliament_of_Sri_Lanka

Sri Lankan Parliament dissolved; early election called

COLOMBO

PUBLISHED FEBRUARY 8, 2004

👆Glpbe and News -Canada

 

Sri Lanka's President Moves to End Political Dispute, Calls for Early Elections - 2004-02-08

Last updated on: October 30, 2009 10:53 AM

Sri Lanka's president has called for new elections three years early. The move is seen as an attempt to end a political crisis that began late last year. 

After dissolving Sri Lanka's 225-member parliament late Saturday night, President Chandrika Kumaratunga called for elections on April 2. 

The move is being widely seen as an attempt to end months of feuding and a political deadlock with her main rival, Prime Minister Ranil Wickremesinghe, who is from a different party. 

Ms. Kumaratunga precipitated a crisis in November, when she exercised her constitutional power to take over three ministries, including defense, which had been under the prime minister's control. 

Representatives of the two sides have met several times, but failed to find a way for the president and prime minister to work together. They had hoped to avoid new parliamentary elections, which many believe could be violent. Elections were not due until 2007. 

On a recent visit to the Indian capital, New Delhi, Sri Lanka Foreign Minister Tyronne Fernando, an ally of Mr. Wickremesinghe, said new polls would not change the political deadlock. 

"That would be extremely divisive, would lead to more violence, and is no solution, because we will probably be back where we are," he said. "And the president won't change." 

No matter what the outcome of the parliamentary election, the president remains in office, because she is elected in a different poll. 

Prime Minister Wickremesinghe's party has the most seats in parliament - a situation the president would like to reverse. But analysts say if the president fails to win a majority, little will change. 

"A lot, I think, is going to depend on the campaign to create a momentum or swing towards one side of the other....," said Paikiasothy Saravanamuttu of the Center for Policy Alternatives, a Colombo think tank. "Otherwise we do end up sort of having gone around in a circle and coming back where we started." 

The Tamil Tiger rebels will be closely watching the election. The rebels are the source of much of the friction between the president and prime minister. 

Ms. Kumaratunga charges that Mr. Wickremesinghe has been too soft on the rebels in talks aimed at ending their 20-year war for greater rights for the ethnic Tamil minority. 

The rebels signed a cease-fire with Mr. Wickremesinghe nearly two years ago, but peace talks have been stalled for almost a year. The rebels have warned that war could resume if the political crisis in Colombo is not resolved.

https://www.voanews.com/amp/a-13-a-2004-02-08-22-sri/390954.html

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மூன்று ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அமைச்சர்களை முக்கிய பொறுப்புக்களில் இருந்து விரைவாக வெளியேற்றவும் பாராளுமன்றத்தை நவம்பர் 19 வரை ஒத்திவைப்பதற்காகவும் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியதன் மூலம், நேற்று ஒரு கூர்மையான அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்தார். குமாரதுங்க, அரசாங்கத்துக்கு எதிரான தனது நடவடிக்கைகளை மேற்கொண்டது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாஷிங்டனில் இருந்துகொண்டிருந்த போதேயாகும். அவர் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை இன்று சந்திக்கவிருந்தார்.

நன்றிகள் பல ஏராளன் அவர்களே  உங்களது  நேரத்திற்கும் உழைப்புக்கும் தலைவணங்கிறேன் 🙏🙏🙏வணக்கம்  இதை தான்  நான்  குறிப்பிட்டேன்   மேலும் 

 இந்த ஐனதிபதி பதவி குறித்து  அந்த காலத்தில் ஜே.ஆர்   கூறியது  ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும்  மாற்ற  முடியாது ஒழிய  மற்ற அனைத்தையும் ஐனதிபதி பதவியானால். செய்யலாம்  என்றார்   

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் கூட வழங்கப்படுவதை அல்லது பூரண மாநில சுயாட்சியை நிறுவுவதை  மேற்குலகு ஒருபோதும் தடுக்கவும் தலையிடவும் மாட்டார்கள்   மேற்குலகு முழுவதும் மாநில சுயாட்சி கொண்டது தான்    சிங்கப்பூர் எப்படி  அனைவரும் பெறுமதியான குடிமகன் ஆக மதிக்கத்தக்கவர்கள் எனறான் சிங்கை அதிபர்  அவ்வாறே இலங்கையில் அனைத்து குடிமகன்களும் வாழ முடியும்   மேற்குலகில் ஆயிரம் பிரச்சனைகளுண்டு   உந்த குட்டி நாடு  இலங்கை பற்றி கவலைபடுவதில்லை   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.