Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவைக்காய் ஆதிகாலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கோவைக்காய் தீவிரமில்லாத சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தி நல்ல பலனை தரக்கூடியது.

இந்த கோவைக்காயை நாம் அன்றாட உணவுகளில் அதிகளவு சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு தேவையான அளவுக்கு ஆரோக்கியத்தை பெற முடிவதோடு, பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 30 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும். அதுமட்டுமின்றி  பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம்.கோவைக்காய் பித்தம், இரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். (ஐ) 

https://newuthayan.com/article/சர்க்கரைநோயின்_எதிரியாகும்_ கோவைக்காய்!

  • Replies 62
  • Views 5.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    சர்க்கரை - இனிப்பு, பாகற்காய் - கைப்பு. ஆகவே நீரிழிவு நோய்க்குப் பாகற்காய் நிவாரணம் என்று ஒரு புரளி உள்ளது. பாகற்காயில் சர்க்கரை நோயை எதிர்க்கும் ஆற்ற்றல் இல்லையாம். அது ஏனைய மரக்கறி வகைகள் போலவே நார்

  • வெள்ளைச் சீனிக்குப் பதிலாக கருப்பட்டியோ , தேனோ தேவையானளவு எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். அதில் சீனி இல்லை, கலோரி குறைவென்றெல்லாம் சொல்லவில்லை . எனவே அவர் சொல்வது சரி. ஆனால், நீரிழிவு இருக்கும் ஒரு

  • குமாரசாமி
    குமாரசாமி

    தமிழ்க்கடையளிலை விக்கிதோ? கேட்டதாலை குமாரசாமிக்கு சுகர் வருத்தம் இருக்கெண்டு நினைக்கப்படாது சிறித்தம்பி 😂

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

கோவைக்காய் எப்போதாவது வாங்கி சமைப்பதுண்டு.......இனி அப்பப்ப வாங்கி சமைக்க வேண்டும்......!  👍

பகிர்வுக்கு நன்றி தமிழன்பன்......! 

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

அண்மையில் தமிழகத்தை சேர்ந்த குடும்பத்தவர் வீட்டிற்கு வந்திருந்ந போது,
கோவைக்காய் கறி செய்து கொண்டு வந்திருந்தார்கள்.
முதல் முறையாக அப்போதுதான் நாங்கள் கோவைக்காய் கறியை சாப்பிட்டோம்.
மிக நல்ல சுவையாக இருந்தது. அன்றிலிருந்து நாமும் கோவைக்காயை கடையில் கண்டால், வாங்கி சமைக்க  ஆரம்பித்து விட்டோம்.

தமிழன்பன் இணைத்த பதிவை பார்த்த பின்... கோவைக்காயில் உள்ள  மருத்துவ குணங்களை அறிந்ததும் அடிக்கடி அதனை சமைக்க யோசித்துள்ளோம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, தமிழ் சிறி said:

spacer.png

அண்மையில் தமிழகத்தை சேர்ந்த குடும்பத்தவர் வீட்டிற்கு வந்திருந்ந போது,
கோவைக்காய் கறி செய்து கொண்டு வந்திருந்தார்கள்.
முதல் முறையாக அப்போதுதான் நாங்கள் கோவைக்காய் கறியை சாப்பிட்டோம்.
மிக நல்ல சுவையாக இருந்தது. அன்றிலிருந்து நாமும் கோவைக்காயை கடையில் கண்டால், வாங்கி சேமிக்க ஆரம்பித்து விட்டோம்.

தமிழன்பன் இணைத்த பதிவை பார்த்த பின்... கோவைக்காயில் உள்ள  மருத்துவ குணங்களை அறிந்ததும் அடிக்கடி அதனை சமைக்க யோசித்துள்ளோம்.

தமிழ்க்கடையளிலை விக்கிதோ?

கேட்டதாலை குமாரசாமிக்கு சுகர் வருத்தம் இருக்கெண்டு நினைக்கப்படாது சிறித்தம்பி 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

தமிழ்க்கடையளிலை விக்கிதோ?

கேட்டதாலை குமாரசாமிக்கு சுகர் வருத்தம் இருக்கெண்டு நினைக்கப்படாது சிறித்தம்பி 😂

இந்திய கடைகளில் விற்கிறது. பெரும்பாலான இந்தியர்கள் இதனை வாங்கி செல்வார்கள்.
சிலோன் தமிழருக்கு கோவைக்காயின் அருமை தெரியாது.
அதை... பேய் தின்னுற காய் என்று... நக்கல் அடிப்பினம். 😂

உங்களுக்கு சீனி வருத்தம் இல்லையென்று சத்தியம் பண்ணி சொன்னால்தான் நாங்கள் நம்புவம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2024 at 11:53, தமிழ் சிறி said:

சிலோன் தமிழருக்கு கோவைக்காயின் அருமை தெரியாது.
அதை... பேய் தின்னுற காய் என்று... நக்கல் அடிப்பினம். 😂

நான் விசாரணை நடத்தியதில் அப்படி ஒரு மரக்கறிகாய் அங்கே இல்லை .

மேற்குலகநாடுகளின் குடிமக்களாக உள்ள இலங்கை தமிழர்கள் சிலர் இப்போ கொஞ்சம் சாப்பிடபழக தொடங்கியுள்ளனர்.சுவையானதா என்பது தெரியவில்லை ஆனால் சிறந்த சந்து கொண்டதாம் அது 👍  சில உணவகங்கள் மக்கறி பிற்சாவுக்குள்ளும் அதை போடுவதுண்டு என்று சொல்கிறார்கள்.அது தான் என்று தெரியாமல் அந்த சிறந்ததை சாப்பிட்டு இருக்கலாம்.

சர்க்கரை - இனிப்பு, பாகற்காய் - கைப்பு. ஆகவே நீரிழிவு நோய்க்குப் பாகற்காய் நிவாரணம் என்று ஒரு புரளி உள்ளது. பாகற்காயில் சர்க்கரை நோயை எதிர்க்கும் ஆற்ற்றல் இல்லையாம். அது ஏனைய மரக்கறி வகைகள் போலவே நார்ப்பொருளைக் கொண்டுள்ளதால் இரத்தத்தில் சீனியின் அளைவைக் கட்டுப்படுத்தும். அதுபோல் கோவைக்காய் கைப்பாக இருப்பதால் சர்க்கரை நோய் எதிரியாகக் கருதப்படலாம். எதற்கும் கோவைக்காயில் என்ன மருத்துவப் பொருள் உள்ளது என்று ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

கட்டுரையாளர் கோவைக்காய் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும் என்று உறுதியாகக் கூறுகிறாரே தவிர எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/1/2024 at 11:53, தமிழ் சிறி said:

இந்திய கடைகளில் விற்கிறது. பெரும்பாலான இந்தியர்கள் இதனை வாங்கி செல்வார்கள்.

On 12/1/2024 at 08:43, தமிழன்பன் said:

கோவைக்காய் ஆதிகாலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று.

இந்த விசயம் அமெரிக்க மருந்து கொம்பனியளுக்கு தெரியுமோ? ஏனெண்டால் இயற்கை வைத்தியம் எண்டால் ஆங்கில மருந்து மாத்திரைகள் விக்கிறவங்களுக்கு வயித்தை கலக்கிற விசயமெல்லோ... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2024 at 11:39, தமிழ் சிறி said:

spacer.png

அண்மையில் தமிழகத்தை சேர்ந்த குடும்பத்தவர் வீட்டிற்கு வந்திருந்ந போது,
கோவைக்காய் கறி செய்து கொண்டு வந்திருந்தார்கள்.
முதல் முறையாக அப்போதுதான் நாங்கள் கோவைக்காய் கறியை சாப்பிட்டோம்.
மிக நல்ல சுவையாக இருந்தது. அன்றிலிருந்து நாமும் கோவைக்காயை கடையில் கண்டால், வாங்கி சமைக்க  ஆரம்பித்து விட்டோம்.

தமிழன்பன் இணைத்த பதிவை பார்த்த பின்... கோவைக்காயில் உள்ள  மருத்துவ குணங்களை அறிந்ததும் அடிக்கடி அதனை சமைக்க யோசித்துள்ளோம்.

அவர்கள் சமைத்துக் கொண்டு வந்தது சுவையாய் இருந்தது சரி .....சரி........பிறகு நீங்கள் சமைத்தது சுவையாக இருந்ததா .......!   😂

இங்கு லாச்சப்பலில் கடைகளில் கோவைக்காய் கிடைக்கும் .......நல்லாய் இருக்கும்....நாங்கள் வாங்கி சமைக்கிறனாங்கள் ......ஆனால் சக்கரை நோய்க்கு நல்லதா என்று தெரியாது......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நாங்கள் கோவைக்காயை இரு முறைகளில் வெட்டி சமைத்துப் பார்த்தோம்.
நீளவாட்டில் வெட்டியதை விட, குறுக்கு வாட்டில் ஒரு சென்ரிமீற்றர் அளவில் 
வெட்டியது மிக சுவையாக இருந்தது. 👍
கோவைக்காயை இதுவரை சாப்பிடாமல், வாழ்க்கையின் பெரும் பகுதியை 
வீணாக்கி விட்டேன் என்று இப்போ கவலையாக உள்ளது.  🤣

On 12/1/2024 at 11:48, குமாரசாமி said:

தமிழ்க்கடையளிலை விக்கிதோ?

ஆம். சென்ற சனிக்கிழமை  சிலோன் தமிழ்க்கடையிலும் விற்பதை கண்டேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கோவைக்காய் மருத்துவம் போன்ற பல செய்திகள் உதயன் பத்திரிகையில் வருகின்றன. அவற்றை தமிழன்பன் இங்கே இணைக்கிறார் என நினைக்கிறேன். உதயன் எங்கேயிருந்து எடுக்கிறதெனத் தெரியவில்லை. ஆனால், அனேகமாக ஊதிப் பெருப்பிக்கப் பட்ட நன்மைகள். சில தகவல்கள் முற்றிலும் தவறு. (இன்னொரு திரியில் பனஞ்சீனியில் வெள்ளைச் சீனியை விட அதிக நன்மை, குறைந்த கலோரி என்று ஒரு உருட்டலும் போகிறது - சீனி சீனி தான், வெள்ளை, கறுப்பு வித்தியாசமெல்லாம் சீனியை ஆரோக்கியமாக மாற்றாது)

  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2024 at 15:34, இணையவன் said:

சர்க்கரை - இனிப்பு, பாகற்காய் - கைப்பு. ஆகவே நீரிழிவு நோய்க்குப் பாகற்காய் நிவாரணம் என்று ஒரு புரளி உள்ளது. பாகற்காயில் சர்க்கரை நோயை எதிர்க்கும் ஆற்ற்றல் இல்லையாம். அது ஏனைய மரக்கறி வகைகள் போலவே நார்ப்பொருளைக் கொண்டுள்ளதால் இரத்தத்தில் சீனியின் அளைவைக் கட்டுப்படுத்தும். அதுபோல் கோவைக்காய் கைப்பாக இருப்பதால் சர்க்கரை நோய் எதிரியாகக் கருதப்படலாம். எதற்கும் கோவைக்காயில் என்ன மருத்துவப் பொருள் உள்ளது என்று ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

உங்கள் புரளியும் அதே புரளி போன்றதுதான் 
சக்கரைநோய்க்கு நிவாரணி என்றுதான் சொல்லப்படுகிறது 

நீங்கள் இனிப்பு தாது பொருட்களை குறைத்து 
பாவற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால் 
நீரிழிவு நோய்யை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம் என்றுதான் சொல்கிறார்கள் 

பாவற்காய் சாப்பிட்டால் நீரிழிவு நோய் மாறும் என்று தவறாக எண்ணுபவர்கள் போல்தான் உங்கள் எண்ணமும் 

"உணவே மருந்து" இதைத்தான் சொல்கிறார்கள் 
இதன் பொருள் நீங்கள் நோய்க்ளை உண்டாக்கிய பின்பு உணவு சாப்பிட்டால் நோய் குணம் ஆகும் என்பதல்ல 
மருந்துபோல உணவை சாப்பிட்டு வந்தால் நோய் இன்றி வாழலாம் என்றுதான் சொல்கிறார்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15/1/2024 at 12:40, தமிழ் சிறி said:

நாங்கள் கோவைக்காயை இரு முறைகளில் வெட்டி சமைத்துப் பார்த்தோம்.
நீளவாட்டில் வெட்டியதை விட, குறுக்கு வாட்டில் ஒரு சென்ரிமீற்றர் அளவில் 
வெட்டியது மிக சுவையாக இருந்தது. 👍

ஓ....கோவ காயை வெட்டுறதிலையும் விசயம் இருக்கு எண்டுறியள்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

இந்த கோவைக்காய் மருத்துவம் போன்ற பல செய்திகள் உதயன் பத்திரிகையில் வருகின்றன. அவற்றை தமிழன்பன் இங்கே இணைக்கிறார் என நினைக்கிறேன். உதயன் எங்கேயிருந்து எடுக்கிறதெனத் தெரியவில்லை. ஆனால், அனேகமாக ஊதிப் பெருப்பிக்கப் பட்ட நன்மைகள். சில தகவல்கள் முற்றிலும் தவறு. (இன்னொரு திரியில் பனஞ்சீனியில் வெள்ளைச் சீனியை விட அதிக நன்மை, குறைந்த கலோரி என்று ஒரு உருட்டலும் போகிறது - சீனி சீனி தான், வெள்ளை, கறுப்பு வித்தியாசமெல்லாம் சீனியை ஆரோக்கியமாக மாற்றாது)

பனங்கட்டி குருதியின் சீனி அளவைக் கூட்டுமா கூட்டாதா? (பனங்கட்டியை கனக்க சாப்பிடுரதெண்டில்லை சதாரணமாக தேநீர் அல்லது உளுத்தம்களியுடன்)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஓ....கோவ காயை வெட்டுறதிலையும் விசயம் இருக்கு எண்டுறியள்? 😎

ஓம். அந்த "ரெக்னிக்கை"  நான் தான் கண்டு பிடித்தனான். 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

உங்கள் புரளியும் அதே புரளி போன்றதுதான் 
சக்கரைநோய்க்கு நிவாரணி என்றுதான் சொல்லப்படுகிறது 

நீங்கள் இனிப்பு தாது பொருட்களை குறைத்து 
பாவற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால் 
நீரிழிவு நோய்யை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம் என்றுதான் சொல்கிறார்கள் 

பாவற்காய் சாப்பிட்டால் நீரிழிவு நோய் மாறும் என்று தவறாக எண்ணுபவர்கள் போல்தான் உங்கள் எண்ணமும் 

"உணவே மருந்து" இதைத்தான் சொல்கிறார்கள் 
இதன் பொருள் நீங்கள் நோய்க்ளை உண்டாக்கிய பின்பு உணவு சாப்பிட்டால் நோய் குணம் ஆகும் என்பதல்ல 
மருந்துபோல உணவை சாப்பிட்டு வந்தால் நோய் இன்றி வாழலாம் என்றுதான் சொல்கிறார்கள் 

"நீங்கள் இனிப்பு தாது பொருட்களை குறைத்து 
பாவற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால் 
நீரிழிவு நோய்யை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம் என்றுதான் சொல்கிறார்கள்👍, கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்

On 13/1/2024 at 22:34, இணையவன் said:

 அது ஏனைய மரக்கறி வகைகள் போலவே நார்ப்பொருளைக் கொண்டுள்ளதால் இரத்தத்தில் சீனியின் அளைவைக் கட்டுப்படுத்தும்.

8 hours ago, Maruthankerny said:

நீங்கள் இனிப்பு தாது பொருட்களை குறைத்து 
பாவற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால் 
நீரிழிவு நோய்யை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம் என்றுதான் சொல்கிறார்கள் 

மதுரங்கேணி, நான் எழுதியதைத்தான் நீங்களும் எழுதியுள்ளீர்கள். இதில் எங்கே புரளி உள்ளது ? 🙂
பாகற்காய்க்குப் பதிலாக புடலங்காயைச் சேர்த்துக் கொண்டாலும் ஒன்றுதான். அது தவிர மரக்கறியிலுள்ள நார்ப்பொருள் இரத்தத்தில் சீனியின் அளவைக் (glycemic index) கட்டுப்படுத்துமே தவிர நீரிழிவு நோயைக் (இன்சுலின்) கட்டுப்படுத்தாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாதவூரான் said:

பனங்கட்டி குருதியின் சீனி அளவைக் கூட்டுமா கூட்டாதா? (பனங்கட்டியை கனக்க சாப்பிடுரதெண்டில்லை சதாரணமாக தேநீர் அல்லது உளுத்தம்களியுடன்)

பனங்கட்டியில் இருப்பதும் சீனி தான் - எனவே இரத்தத்தில் சீனியின் அளவைக் கூட்டும் தான். வெள்ளைச் சீனியைக் கட்டுப் படுத்தும் படியான மருத்துவ ஆலோசனை பனங்கட்டிக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:
On 15/1/2024 at 06:40, தமிழ் சிறி said:

நாங்கள் கோவைக்காயை இரு முறைகளில் வெட்டி சமைத்துப் பார்த்தோம்.
நீளவாட்டில் வெட்டியதை விட, குறுக்கு வாட்டில் ஒரு சென்ரிமீற்றர் அளவில் 
வெட்டியது மிக சுவையாக இருந்தது. 👍

ஓ....கோவ காயை வெட்டுறதிலையும் விசயம் இருக்கு எண்டுறியள்

இதை கையால சாப்பிடுகிறீர்களா

கம்பிலால சாப்பிடுகிறீர்களா

என்பதிலும் நிறைய விடயமிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

@Justin இந்த காணொளி பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

@Justin இந்த காணொளி பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

வெள்ளைச் சீனிக்குப் பதிலாக கருப்பட்டியோ , தேனோ தேவையானளவு எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். அதில் சீனி இல்லை, கலோரி குறைவென்றெல்லாம் சொல்லவில்லை . எனவே அவர் சொல்வது சரி.

ஆனால், நீரிழிவு இருக்கும் ஒருவரின் உடலுக்கு வெள்ளை சீனியும், கருப்பட்டியும் , தேனும் ஒன்று தான். குறைக்க வேண்டியது தான்.

வெள்ளைச் சீனியினால் நேரடியாக பெண்களில் புற்று நோய் வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால், சீனிப் பதார்த்தங்களைக் கட்டுப் பாடின்றி எடுத்துக் கொண்டு உடல் பருமனானால் மார்பக, கருப்பை புற்று நோய்கள் அதிகரிக்கும். மீண்டும், இந்தப் புற்று நோய்களைத் தடுக்கும் வலு கருப்பட்டிக்கு, தேனுக்கு இருக்கிறதா என யாரும் ஆராய்ந்து பார்க்கவில்லை. ஆராய்ந்து பார்க்காமல் மருத்துவர் சிவராமன் பேசும் விடயங்கள் பிரச்சாரமாகத் தான் பார்க்கப் பட வேண்டும், மருத்துவ ஆலோசனையாக எடுக்கப் படக் கூடாதென நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

   0;48    குறைவான அளவு  எடுத்துக் கொள்ளலாம் .என சொல்கிறார். 
சக்கரை நோயாளிகளுக்கு இனிப்புவகை ஒரு (கெலி ) தீராத ஆசை மாதிரி. 

அளவோடு எடுத்தல் நலமே .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இதை கையால சாப்பிடுகிறீர்களா

கம்பிலால சாப்பிடுகிறீர்களா

என்பதிலும் நிறைய விடயமிருக்கு.

 ஆ....  வாயால சாப்பிடுறம். இருக்கிற விசருக்கு கேக்கிற கேள்வியைப்பார் 😛

ஹலோ பெரிசு!  சாப்பிடேக்கை ஆறுதலாய் மென்று அசைபோட்டு உமிழ்நீர் சுரக்க சாப்பிட வேணுமாம். உமிழ் நீரிலையும் கனக்க விசயம் இருக்காம்.தண்ணிய குடிக்கிறது எண்டாலும் உமிழ்நீர் சுரக்க குடிக்க சொல்லீனம். உமிழ்நீர் இயற்கை தந்த அற்புத மருந்தாம் எல்லே......

ஆதாரம், உறுதி,போட்டோ,ஆராச்சி சான்று எல்லாம் கேட்கப்படாது. டொட்😎

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

வெள்ளைச் சீனிக்குப் பதிலாக கருப்பட்டியோ , தேனோ தேவையானளவு எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். அதில் சீனி இல்லை, கலோரி குறைவென்றெல்லாம் சொல்லவில்லை . எனவே அவர் சொல்வது சரி.

ஆனால், நீரிழிவு இருக்கும் ஒருவரின் உடலுக்கு வெள்ளை சீனியும், கருப்பட்டியும் , தேனும் ஒன்று தான். குறைக்க வேண்டியது தான்.

வெள்ளைச் சீனியினால் நேரடியாக பெண்களில் புற்று நோய் வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால், சீனிப் பதார்த்தங்களைக் கட்டுப் பாடின்றி எடுத்துக் கொண்டு உடல் பருமனானால் மார்பக, கருப்பை புற்று நோய்கள் அதிகரிக்கும். மீண்டும், இந்தப் புற்று நோய்களைத் தடுக்கும் வலு கருப்பட்டிக்கு, தேனுக்கு இருக்கிறதா என யாரும் ஆராய்ந்து பார்க்கவில்லை. ஆராய்ந்து பார்க்காமல் மருத்துவர் சிவராமன் பேசும் விடயங்கள் பிரச்சாரமாகத் தான் பார்க்கப் பட வேண்டும், மருத்துவ ஆலோசனையாக எடுக்கப் படக் கூடாதென நினைக்கிறேன். 

தகவலுக்கு நன்றி ஜஸ்ரின்.

கடந்த 10 வருடமாக வீட்டில் தேநீருடன் ஒன்று சில வேளை பாதி பேரிச்சம்பழத்துடன் குடிக்கிறேன்.

இதிலும் அதே சீனி இருக்கிறதா?

அல்லது என்னை நானே ஏமாற்றுகிறேனா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேரீச்சம் பழம் சுகருக்கு சொன்ன சாமான்  :cool:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.