Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Alcohol.png?resize=710,375&ssl=1

70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை.

சவுதி அரேபியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது.

1950 ஆம் ஆண்டு, சவுதி அரேபியாவில் அப்போது ஆட்சி செய்த மன்னர் அப்துல் அஜீஸ் மதுவுக்கு தடை விதித்தார்.

ஜெட்டாவில் தனது மகன்களில் ஒருவரான இளவரசர் மிஷாரி, பிரித்தானிய துணைத் தூதர் சிரில் ஒஸ்மானை சுட்டுக் கொன்ற சம்பவத்துக்குப் பிறகு அவர் அந்த முடிவை எடுத்திருந்தார்.

எனினும் நேற்று (24) சவூதி அரேபியாவின் ரியாத்தில் முஸ்லிம் அல்லாத இராஜதந்திரிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட இந்த மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவை சுற்றுலா மற்றும் வர்த்தக ஸ்தலமாக மாற்றும் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மானின் வேலைத்திட்டத்துடன் இணைந்து இந்த மதுபானக் கடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

https://athavannews.com/2024/1367230

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இராஜதந்திரிகளுக்கு

அப்படியென்றால்  எங்களை போன்றோருக்கு இல்லையா??? 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

அப்படியென்றால்  எங்களை போன்றோருக்கு இல்லையா??? 🤣

நீங்கள் யாழ்.களத்தின் ராஜதந்திரி தானே… 😁😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:
8 minutes ago, Kandiah57 said:

அப்படியென்றால்  எங்களை போன்றோருக்கு இல்லையா??? 🤣

நீங்கள் யாழ்.களத்தின் ராஜதந்திரி தானே

நோ நோ

ஐயா ஜேர்மனியின் ராஜதந்திரி.

10 minutes ago, Kandiah57 said:

அப்படியென்றால்  எங்களை போன்றோருக்கு இல்லையா??? 🤣

ஒரு பியர் அடித்துவிட்டு குப்புற படுக்கிறவை அங்து போய் என்ன செய்ய?

போத்தலைப் பார்த்தாலே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நீங்கள் யாழ்.களத்தின் ராஜதந்திரி தானே… 😁😂

உங்களுக்கு தெரிகிறது,..ஆனால்  உந்த. சவுதிஅரேபியாகாரனுக்கு   தெரிந்தால் தானே?? 🤣

1 hour ago, ஈழப்பிரியன் said:

நோ நோ

ஐயா ஜேர்மனியின் ராஜதந்திரி.

ஒரு பியர் அடித்துவிட்டு குப்புற படுக்கிறவை அங்து போய் என்ன செய்ய?

போத்தலைப் பார்த்தாலே போதும்.

பியர் அடிப்பது விட்டு நாலு வருடங்கள். வரும்    30 வருடங்களாக பியர் குடித்து வெறுத்து போச்சு மட்டுமல்ல கைக்கிறது 1985 இல் இருந்த விருப்பம் இப்ப இல்லை  பியர்  தரம் குறைந்து விட்டுதோ தெரியவில்லை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kandiah57 said:

பியர் அடிப்பது விட்டு நாலு வருடங்கள். வரும்    30 வருடங்களாக பியர் குடித்து வெறுத்து போச்சு மட்டுமல்ல கைக்கிறது 1985 இல் இருந்த விருப்பம் இப்ப இல்லை  பியர்  தரம் குறைந்து விட்டுதோ தெரியவில்லை 

animiertes-milch-bild-0004.gif   animiertes-milch-bild-0026.gif

பியர் தரம் குறையவில்லை. வயதுக் கோளாறால்... உங்களுக்கு பியர் கைக்கிறது. 😂
இனி பாலுக்குள், கற்கண்டு போட்டு குடியுங்கள். 🤣

35 minutes ago, Kandiah57 said:

பியர் அடிப்பது விட்டு நாலு வருடங்கள். வரும்    3

எனக்கும் கண்ணில காட்டக் கூடாத சாமான் இது

(இதை தப்பித்தவறி குடித்தால் அன்று முழுதும் டமால் டுமால் என்று ஒரே வாயுத் தொல்லைதான்...)

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

எனக்கும் கண்ணில காட்டக் கூடாத சாமான் இது

(இதை தப்பித்தவறி குடித்தால் அன்று முழுதும் டமால் டுமால் என்று ஒரே வாயுத் தொல்லைதான்...)

அவளைத் தொடுவானேன் வெடிப்பானேன்??😂

  • கருத்துக்கள உறவுகள்

சவுதி அரேபியாவில் முதல் மதுபானக்கடை விரைவில் திறக்கப்படும்

மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த சவுதி அரேபியாவில், முதல் முதலாக மதுபானக்கடையை திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளதாக இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்து உள்ளார்.

சவுதி அரேபியா நாட்டின் ரியாத் நகரத்தில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்காக மதுபானங்கள் விற்பனை செய்ய மதுபானக்கடை ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளது.

4-11.jpg

இவர்கள் மது பெற வேண்டும் என்றால் வெளியுறவு அமைச்சிடம் அனுமதி குறியீடு பெற்று, ’மொபைல் செயலி’ மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த மதுபானக் கடையின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் தூதரகங்களில் பணியாற்றுபவர்களே இருப்பார்கள். கடந்த 70 ஆண்டுக்கால வரலாற்றில் சவுதி அரேபியாவில் மதுபானம் கடை மூலம் விற்கப்படுவது இதுவே முதல்முறை. சவுதிஅரேபியா நாட்டில் முதல் மதுபான கடை திறக்கப்படுவதன் மூலம் இஸ்லாமிய சட்ட கோட்பாட்டில் இருந்து விலகி செல்கிறாரா இளவரசர் முகமதுபின் சல்மான் என கேள்வி எழுந்து உள்ளது.

https://thinakkural.lk/article/289529

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

பியர் அடிப்பது விட்டு நாலு வருடங்கள். வரும்

👍 மகிழ்ச்சி. நாலு வருடங்களாக உடலை fit ஆக்க  தொடங்கிவிட்டீர்கள்.

7 hours ago, Kandiah57 said:

30 வருடங்களாக பியர் குடித்து வெறுத்து போச்சு மட்டுமல்ல கைக்கிறது

அது என்ன கைக்கிறது என்று தேடி கண்டுபித்தாகிவிட்டது 😂
கைக்க-கைத்து : கசத்தல் bitter

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

👍 மகிழ்ச்சி. நாலு வருடங்களாக உடலை fit ஆக்க  தொடங்கிவிட்டீர்கள்.

அது என்ன கைக்கிறது என்று தேடி கண்டுபித்தாகிவிட்டது 😂
கைக்க-கைத்து : கசத்தல் bitter

நீங்கள் வேற,..குடியை விடவில்லை   பியர்   குடிப்பதை மட்டும் விட்டுள்ளேன். 

கசத்தல். சரி தான்,.. முன்பு ஒரு பியர் குடித்தால்  இன்னென்று  குடி என்று விருப்பம் எற்ப்படும். இப்போது அரை போத்தல்  குடிப்பது கூட சிரமம்   

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:
1 hour ago, Kandiah57 said:

நீங்கள் வேற,..குடியை விடவில்லை   பியர்   குடிப்பதை மட்டும் விட்டுள்ளேன். 

இங்கு தமிழ் படங்கள் ஆரம்பிக்க முன்னர் மதுபானம், குடித்தல், புகைத்தல் அப்படி இப்படி என்று நிறைய எழுத்துகிறார்களே. அந்த எச்சரிக்கை எல்லாம் உங்கள் நாட்டில் இல்லையா? மக்களின் உடல் நலத்தில் எமது இலங்கை தேசம் மிகவும் கரிசனையாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Cruso said:

இங்கு தமிழ் படங்கள் ஆரம்பிக்க முன்னர் மதுபானம், குடித்தல், புகைத்தல் அப்படி இப்படி என்று நிறைய எழுத்துகிறார்களே. அந்த எச்சரிக்கை எல்லாம் உங்கள் நாட்டில் இல்லையா? மக்களின் உடல் நலத்தில் எமது இலங்கை தேசம் மிகவும் கரிசனையாக உள்ளது. 

இங்கே பல்பொருள்  அங்காடியில்  சாப்பாடு சாமன் தொடக்கம் குடிவகை வரை வாங்கலாம் விற்கிறார்கள் அதாவது பலசரக்கு கடையில் குடிவகை தொட்டு அனைத்தும் விற்கிறார்கள்  சிகரெட் பெட்டியில் எச்சரிக்கை செய்து கொண்டு உலகம் முழுவதும் விற்பனையில் உண்டு” 

இலங்கை கரிசனையாக உள்ளதா??  அது தான்  போதைப்பொருள் இல்லாத வடக்கு கிழக்கில் அனுதினமும். ஆண் பெண் வேறுபாடுகளின்றி கண்டு பிடிக்கிறார்கள்,சும்மா பகிடி விடாதீர்கள் 🤣🤣🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 26/1/2024 at 14:02, தமிழ் சிறி said:

70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை.

சவுதி அரேபியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது.

நல்ல விசயம். எதையும் மறைத்து வைத்தால் தான் களவு செய்யத் தோன்றும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நல்ல விசயம். எதையும் மறைத்து வைத்தால் தான் களவு செய்யத் தோன்றும்.

அது வெளிநாட்டவர்களுக்கு மட்டும் தான் அண்ணை. அந்நாட்டு குடிமகனுக்கு குடிக்க  முற்றுமுழுதாக  அனுமதி இல்லை என நினைக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன் மொறோக்கோவில் விடுதி ஒன்றில் மதுபானங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. உரிமையாளரிடம் விசாரித்தபோது சொன்னார், மதுபானம் மொத்த விற்பனை செய்யும் இடத்தில் மட்டுமே விடுதி, பார் உரிமையாளர்கள் வாங்க முடியும். ஆனால் இங்கு பலர் வீடுகளில் பதுக்கி வைத்து மது அருந்துகின்றனர்.

சென்ற வருடம் அல்ஜீரியாவிலிருந்து மாணவ வீசாவில் வேலையும் செய்து படிப்பதற்காக ஒரு இளம் பெண் வந்துள்ளார். நான் வேலை செய்யும் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை செய்கிறார். வேலை முடிந்ததும் அருகிலுள்ள பார் ஒன்றில் ஒரு கையில் பியரும் மறுகையில் சிகரெட்டுமாகக் இவரைக் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/1/2024 at 00:02, தமிழ் சிறி said:

முஸ்லிம் அல்லாத இராஜதந்திரிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட இந்த மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது.

1 hour ago, nunavilan said:

அது வெளிநாட்டவர்களுக்கு மட்டும் தான் அண்ணை. அந்நாட்டு குடிமகனுக்கு குடிக்க  முற்றுமுழுதாக  அனுமதி இல்லை என நினைக்கிறேன்.

87ஆம் தொடக்கம் 94 ஆம் ஆண்டு வரை சவூதி அரேபியாவில் பணி புரிந்தேன் ..சட்டவிரோதமாக கசிப்பு காச்சுவார்கள் ...அதை சில சவுதி அரேபிய பிரஜைகளும் களவாக வாங்கி அருந்துவார்கள்....மேலும் அரம்கோ என்ற அமேரிக்க நிறுவனத்தில் மது கிடைக்கும் அதை அங்கு பணிபுரிபவர்கள் மட்டும் பாவிக்கலாம்..வெளியே கொண்டு வர முடியாது ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nunavilan said:

அது வெளிநாட்டவர்களுக்கு மட்டும் தான் அண்ணை. அந்நாட்டு குடிமகனுக்கு குடிக்க  முற்றுமுழுதாக  அனுமதி இல்லை என நினைக்கிறேன்.

இராஜதந்திரிகளுக்கு என்றுதான் அரசு சொல்லும். அங்கேயும் ஓட்டைகள் இருக்கத்தானே செய்யும். மது குடிக்கேலாது என்பது சட்டம். குடிக்கிற ஆக்கள் பிடிபடாமல் குடியுங்கோ.🤣

ஈரானியனியர்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். அரச அதிகாரிகளுக்கு தெரியாமல் பன்றி இறைச்சி  வாங்க முடியுமாம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

87ஆம் தொடக்கம் 94 ஆம் ஆண்டு வரை சவூதி அரேபியாவில் பணி புரிந்தேன்

அல்ஹம்துலில்லாஹ்
பலஸ்த்தீனர்கள்,  மார்க்கத்தவர்கள் பற்றிய நல்ல நேரடி சிறப்பு அனுபவத்தை பெற்றிருப்பீர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.