Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நம் உடலில் பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகம்தான். இது பழுதாகிவிட்டால் கை, கால், முகம் மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளான நுரையீரலை சுற்றி உள்ள சவ்வுகளில்  கழிவுகள் தேங்கத் துவங்கும். இதனால் நடக்க முடியாமல் போவதோடு மட்டுமல்லாமல் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படும். இந்த சிறுநீரக பிரச்சனை சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ,உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர் ஆகியோரை  எளிதில் தாக்கும். நோய் வந்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசிப்பதை விட அது வராமல் பாதுகாத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம், அந்த வகையில் என்று சிறுநீரகத்தை பலப்படுத்தக் கூடிய உணவுகளை பார்ப்போம்.

பூண்டு

தினமும் ஒரு பள்ளு  பூண்டை பச்சையாக சாப்பிட்டால் இதய நோய் வராமல் பாதுகாப்பதோடு கெட்ட கொழுப்பை கரைக்கும் ,சிறுநீரகக் குழாயில் ஏற்படும் தொற்றை குணப்படுத்தும்.

கொத்தமல்லி இலை

கொத்தமல்லியை கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் வீதம்  குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள டாக்சின்களை  வெளியேற்றி  கிட்னி ஆரோக்கியமாக இருக்கும். இதை வாரம் இரண்டு முறை செய்யலாம்.

திராட்சை

திராட்சையில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் மாரடைப்பை தடுக்கும், சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதையும் தடுக்கும்.

இஞ்சி

இதில் உள்ள ஆன்டி  ஆக்சிடென்ட் சிறுநீர் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும் இது ரத்தம் மற்றும் சிறுநீரகத்தை சுத்திகரிக்கிறது , நல்ல ஜீரண சக்தியையும் கொடுக்கும்.

முட்டைகோஸ்

இதில் உள்ள வளமான ஊட்டச்சத்துக்கள் சிறுநீரக ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாகும். இதில் உள்ள பைட்டிக் ஆசிட் மற்றும் போலிக் ஆசிட் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும். விட்டமின் கே மற்றும் விட்டமின் பி6 ,நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளது, இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்.

மீன்கள்

மீன்களில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோய் வராமல் பாதுகாக்கும். சாலமன் மத்தி கானாங்கெளுத்தி சூரை மீன் போன்றவை மிக ஆரோக்கியமானது இதை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வரலாம்

வெங்காயம்

சின்ன வெங்காயத்தை அதிக அளவு நம் உணவில் எடுத்துக்கொண்டால் சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கலாம் மேலும் சிறுநீரகத்தை சுத்தமாகவும் வைத்துக்கொள்ளும். சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

உணவில் உப்பை குறைத்துக் கொண்டால் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படாது மேலும் அதிக ஆக்சிலேட்  நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் தக்காளியில் அதிக ஆக்சிலேட் உள்ளது எனவே குறைவாக பயன்படுத்துவது சிறந்தது.மண்ணிற்கு கீழ் விளையும் கீரை வகைகளை அதிகம் எடுத்து கொள்ள கூடாது ,அதற்கு பதில் கொடிவகை காய்கறிகளான அவரைக்காய் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்

ஆகவே இந்த உணவு முறைகளை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கோளாறு ஏற்படாமல் தப்பிக்கலாம். [எ]

https://newuthayan.com/article/உங்க_கிட்னியை_புதுசா_வைத்திருக்க_இந்த_பதிவை_படிங்க..!

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல தகவல்கள் .........பொதுவா நீங்கள் சொல்லியவை அனைத்தும் எங்கள் உணவுகளில் இடம்பெறுபவையே ........ ஆயினும் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.......!  👍

நன்றி தமிழன்பன் ......!

  • Like 1
Posted

உள்ளி, இஞ்சி, மஞ்சள் எல்லா வியாதிகளையும் போக்கும் போன்ற மொட்டையான கருத்தியலை விட்டு அறிவியல் நீதியான தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.

 சிறுநீரகத்தின் வேலைப் பழுவைக் குறைக்க 3 உணவுக் கட்டுப்பாடுகள் :

1. குறைவான உப்பு, சோடியம் உள்ள உணவுகளை உண்ணுதல்.

2. ஒரு நாளைக்குத் தேவையான அளவான புரதம். இது அதிகமாகவும் இருக்கக் கூடாது குறைவாகவும் இருக்கக் கூடாது. இறைச்சி வகைகளைக் குறைத்து தாவர புரதங்களையும் உண்ணலாம். இறைச்சி மூலம் குறிப்பாக இரத்த இறைச்சி மூலம் இரும்பு மற்றும் அத்தியாவசிய புரதங்கள் கிடைப்பதால் முற்றாகத் தவிர்க்க வேண்டாம். கோழி மீன் வகைகள் போன்றவற்றை மாறி மாறி உண்ணலாம்.

3. பொஸ்பரஸ் அதிகமான உணவுகளைக் குறைவாக உண்ணுதல் (இறைச்சி, மீன், பால் பொருட்கள், பயறு வகைகள்)

இவை தவிர பொட்டாசியம் அதிகமாக உள்ள உணவுகளைப் போதிய அளவில் எடுத்துக் கொள்வதும், பழங்களையும் ஒலிவ் எண்ணை போன்ற தாவர எண்ணைகளையும் (பச்சையாக) போதிய  அளவிலும் சேர்த்துக் கொள்வது நல்லது. ஒவ்வொரு நாளும் போதிய அளவு நீர் அருந்த வேண்டும்.

  • Like 7
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, இணையவன் said:

மேலே இருப்பது போன்ற போலி, அரைவாசிப் போலி மருத்துவ தகவல்களை  தனித்தனியாக மறுத்துரைக்கும் ஆர்வம் இல்லாமல் போய் விட்டது இப்போது! ஆங்கில மூலத்திலும் health.com, medical news போன்ற வியாபாரத் தளங்கள் இது போன்ற அடிப்படையில்லாத நம்பிக்கைகளைப் பரப்புகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதில் வேறு சத்துணவான தக்காளியை குறைவாக சாப்பிடும்படி சொல்கிறார்கள் தமிழர்கள் பலர் ஏற்கெனவே தக்காளி தோல் வருத்தம் கடியை கொண்டுவரும் என்று   குறைவாக அல்லது சாப்பிடுவது இல்லை.

13 hours ago, தமிழன்பன் said:

தக்காளியில் அதிக ஆக்சிலேட் உள்ளது எனவே குறைவாக பயன்படுத்துவது சிறந்தது.மண்ணிற்கு கீழ் விளையும் கீரை வகைகளை அதிகம் எடுத்து கொள்ள கூடாது ,

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அதில் வேறு சத்துணவான தக்காளியை குறைவாக சாப்பிடும்படி சொல்கிறார்கள் தமிழர்கள் பலர் ஏற்கெனவே தக்காளி தோல் வருத்தம் கடியை கொண்டுவரும் என்று   குறைவாக அல்லது சாப்பிடுவது இல்லை.

தக்காளியின் விதைகளை நீக்கி விட்டு சாப்பிடலாம். விதைகளில் தான் ஒக்சலேற் இருக்கிறது. சின்ன வெங்காயத்திலும் ஒக்சலேற் இருக்கிறது (ஆனால், அதை நிறையச் சாப்பிடச் சொல்கிறது பதிவு), "முந்தானை முடிச்சு புகழ்" 😎முருங்கைக் காயிலும் ஒக்சலேற் இருக்கிறது.

ஆனால், கல் உருவாக வெறுமனே ஒக்சலேற் அதிகரிப்பது மட்டும் போதாது, சிறு நீரில் கல்சியமும் அதிகரிக்க வேண்டும் - அப்படி அதிகரிக்காமல் தவிர்க்க மேலே இணையவன் சொன்ன வழிகள் தான் நிரூபணமான வழிகள்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, தமிழன்பன் said:

நம் உடலில் பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகம்தான். இது பழுதாகிவிட்டால் கை, கால், முகம் மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளான நுரையீரலை சுற்றி உள்ள சவ்வுகளில்  கழிவுகள் தேங்கத் துவங்கும். இதனால் நடக்க முடியாமல் போவதோடு மட்டுமல்லாமல் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படும். இந்த சிறுநீரக பிரச்சனை சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ,உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர் ஆகியோரை  எளிதில் தாக்கும். நோய் வந்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசிப்பதை விட அது வராமல் பாதுகாத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம், அந்த வகையில் என்று சிறுநீரகத்தை பலப்படுத்தக் கூடிய உணவுகளை பார்ப்போம்.

பூண்டு

தினமும் ஒரு பள்ளு  பூண்டை பச்சையாக சாப்பிட்டால் இதய நோய் வராமல் பாதுகாப்பதோடு கெட்ட கொழுப்பை கரைக்கும் ,சிறுநீரகக் குழாயில் ஏற்படும் தொற்றை குணப்படுத்தும்.

கொத்தமல்லி இலை

கொத்தமல்லியை கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் வீதம்  குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள டாக்சின்களை  வெளியேற்றி  கிட்னி ஆரோக்கியமாக இருக்கும். இதை வாரம் இரண்டு முறை செய்யலாம்.

திராட்சை

திராட்சையில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் மாரடைப்பை தடுக்கும், சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதையும் தடுக்கும்.

இஞ்சி

இதில் உள்ள ஆன்டி  ஆக்சிடென்ட் சிறுநீர் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும் இது ரத்தம் மற்றும் சிறுநீரகத்தை சுத்திகரிக்கிறது , நல்ல ஜீரண சக்தியையும் கொடுக்கும்.

முட்டைகோஸ்

இதில் உள்ள வளமான ஊட்டச்சத்துக்கள் சிறுநீரக ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாகும். இதில் உள்ள பைட்டிக் ஆசிட் மற்றும் போலிக் ஆசிட் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும். விட்டமின் கே மற்றும் விட்டமின் பி6 ,நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளது, இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்.

மீன்கள்

மீன்களில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோய் வராமல் பாதுகாக்கும். சாலமன் மத்தி கானாங்கெளுத்தி சூரை மீன் போன்றவை மிக ஆரோக்கியமானது இதை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வரலாம்

வெங்காயம்

சின்ன வெங்காயத்தை அதிக அளவு நம் உணவில் எடுத்துக்கொண்டால் சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கலாம் மேலும் சிறுநீரகத்தை சுத்தமாகவும் வைத்துக்கொள்ளும். சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

உணவில் உப்பை குறைத்துக் கொண்டால் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படாது மேலும் அதிக ஆக்சிலேட்  நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் தக்காளியில் அதிக ஆக்சிலேட் உள்ளது எனவே குறைவாக பயன்படுத்துவது சிறந்தது.மண்ணிற்கு கீழ் விளையும் கீரை வகைகளை அதிகம் எடுத்து கொள்ள கூடாது ,அதற்கு பதில் கொடிவகை காய்கறிகளான அவரைக்காய் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்

ஆகவே இந்த உணவு முறைகளை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கோளாறு ஏற்படாமல் தப்பிக்கலாம். [எ]

https://newuthayan.com/article/உங்க_கிட்னியை_புதுசா_வைத்திருக்க_இந்த_பதிவை_படிங்க..!

நன்றி இணைப்புக்கு தமிழன்பன் . 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, இணையவன் said:

உள்ளி, இஞ்சி, மஞ்சள் எல்லா வியாதிகளையும் போக்கும் போன்ற மொட்டையான கருத்தியலை விட்டு அறிவியல் நீதியான தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.

 சிறுநீரகத்தின் வேலைப் பழுவைக் குறைக்க 3 உணவுக் கட்டுப்பாடுகள் :

1. குறைவான உப்பு, சோடியம் உள்ள உணவுகளை உண்ணுதல்.

2. ஒரு நாளைக்குத் தேவையான அளவான புரதம். இது அதிகமாகவும் இருக்கக் கூடாது குறைவாகவும் இருக்கக் கூடாது. இறைச்சி வகைகளைக் குறைத்து தாவர புரதங்களையும் உண்ணலாம். இறைச்சி மூலம் குறிப்பாக இரத்த இறைச்சி மூலம் இரும்பு மற்றும் அத்தியாவசிய புரதங்கள் கிடைப்பதால் முற்றாகத் தவிர்க்க வேண்டாம். கோழி மீன் வகைகள் போன்றவற்றை மாறி மாறி உண்ணலாம்.

3. பொஸ்பரஸ் அதிகமான உணவுகளைக் குறைவாக உண்ணுதல் (இறைச்சி, மீன், பால் பொருட்கள், பயறு வகைகள்)

இவை தவிர பொட்டாசியம் அதிகமாக உள்ள உணவுகளைப் போதிய அளவில் எடுத்துக் கொள்வதும், பழங்களையும் ஒலிவ் எண்ணை போன்ற தாவர எண்ணைகளையும் (பச்சையாக) போதிய  அளவிலும் சேர்த்துக் கொள்வது நல்லது. ஒவ்வொரு நாளும் போதிய அளவு நீர் அருந்த வேண்டும்.

எல்லா மக்களுக்கும் புரியும் விதத்தில் சொல்லவேண்டும் .  நாட்டு மாட்டு பாலுக்கு பதில் ஜெஸி மாடுகளை புகுத்தியவர்கள் தான் வெள்ளைக்காரர். எங்களது நாட்டு வைத்தியம் முற்றுலும் உண்மை. தமிழரிடம் இல்லாத அறவினை புதுமை என்ற பெயரில் நம்பவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
22 hours ago, தமிழன்பன் said:

முட்டைகோஸ்

முட்டைக்கோஸை யார் இந்தியா, இலங்கைக்குள் புகுத்தியவர்கள்? வெள்ளையராக இருந்தால் அதை எப்படி நல்லது என்று ஏற்றுக்கொள்ளமுடியும்?🥱

சுகர் வருத்தங்களுக்கு கரும்பைப் புரொசஸ் செய்து சீனியாக்கும் முறையைக் கண்டுபிடிச்சவர்களைத்தான் திட்டவேண்டும்!

Edited by கிருபன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, கிருபன் said:

முட்டைக்கோஸை யார் இந்தியா, இலங்கைக்குள் புகுத்தியவர்கள்? வெள்ளையராக இருந்தால் அதை எப்படி நல்லது என்று ஏற்றுக்கொள்ளமுடியும்?🥱

சுகர் வருத்தங்களுக்கு கரும்பைப் புரொசஸ் செய்து சீனியாக்கும் முறையைக் கண்டுபிடிச்சவர்களைத்தான் திட்டவேண்டும்!

 ஏன்  என்ற விவாதத்தை விட , முட்டைகோஸை தந்தவர்கள் இந்தியர்கள். அதில் என்ன விமர்சனம் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, தமிழன்பன் said:

 என்ற விவாதத்தை விட , முட்டைகோஸை தந்தவர்கள் இந்தியர்கள். அதில் என்ன விமர்சனம் ?

இந்தியர்கள் முட்டைக்கோஸை தரவில்லை அன்பரே.

ஜேர்ஸி மாட்டை அறிமுகப்படுத்திய காலனித்துவ சக்திகள்தான் முட்டைக்கோஸை அறிமுகப்படுத்தியவர்கள்.  முட்டைக்கோஸ் (cabbage) ஐரோப்பாவில் இருந்துதான் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு கொண்டுவரப்பட்டது. நீண்ட கப்பல் பயணங்களில் போகும் மாலுமிகளுக்கு விற்றமின் குறைபாடால் முரசு கரைதல் ஏற்படுவதுண்டு. அதனைக் குறைக்க முட்டைக்கோஸை கப்பல்களில் கொண்டுசென்றார்கள்.

அதுபோன்றுதான் அதிகம் பால் கறக்கும் ஜேர்ஸி மாடுகளும் காலனித்துவ சக்திகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றும்படி ஊர்மாடும், ஜேர்ஸிமாடும் சுரப்பது ஒரே பால்தான்! 

எனவே இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை உடலுக்கு தேவையான அளவுடன் உண்டும், மேலதிகமான கலோரிகளை எரிக்க உடற்பயிற்சி செய்தும் வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, கிருபன் said:

தரவுகளுக்கு நன்றி நண்பரே , எங்கள் ஊரில் இதனை கோவா என்று அழைப்பார்கள் , அதனால் இந்தியா என நினைத்துவிட்டேன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் கொஞ்ச நாளில் இலங்கையில் இந்திய தமிழ் மொழி வந்து  எங்கள் தமிழை சல்லடையாக்கும் பாருங்கோ 

இப்பவே இங்கிலிசுலதான் .......... நுனி நாக்கில பிரளுது இதுக்குள்ள அங்குள்ள மரக்கறி பெயர்களும் நம்மை முளீ பிதுங்க வைக்கிறது 

வாதங்களில் கிட்னி சட்னி (சம்பல் ) ஆகாமல் இருந்தால் சரி 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, தமிழன்பன் said:

எங்கள் ஊரில் இதனை கோவா என்று அழைப்பார்கள்

நாங்களும் முட்டைக்கோஸ் என்று சொல்வதில்லை. கோவாதான்! கோவாலில் வந்து இறங்கிய போர்த்துக்கீசர் கொண்டு வந்திருக்கின்றார்கள் போலிருக்கு!

4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் கொஞ்ச நாளில் இலங்கையில் இந்திய தமிழ் மொழி வந்து  எங்கள் தமிழை சல்லடையாக்கும் பாருங்கோ 

ப்ரோ😁, உதயன் போன்ற செய்தித் தளங்களே ஊரில் புழங்கும் வார்த்தைகளை பாவிக்காமல் இந்தியத் தமிங்கிலத்தை பாவித்தால் நாம என்ன செய்யமுடியும்?

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, கிருபன் said:

நாங்களும் முட்டைக்கோஸ் என்று சொல்வதில்லை. கோவாதான்! கோவாலில் வந்து இறங்கிய போர்த்துக்கீசர் கொண்டு வந்திருக்கின்றார்கள் போலிருக்கு!

ப்ரோ😁, உதயன் போன்ற செய்தித் தளங்களே ஊரில் புழங்கும் வார்த்தைகளை பாவிக்காமல் இந்தியத் தமிங்கிலத்தை பாவித்தால் நாம என்ன செய்யமுடியும்?

இப்ப குறிப்பாக சொன்னால் யாழ்ப்பாண பக்கம் தான் வாசிப்பு பத்திரிகை என செய்தி வருகிறது கிழக்கு பக்கம் கிழங்கு சுத்தத்தான் பத்திரிகை 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் கொஞ்ச நாளில் இலங்கையில் இந்திய தமிழ் மொழி வந்து  எங்கள் தமிழை சல்லடையாக்கும் பாருங்கோ 

இப்பவே இங்கிலிசுலதான் .......... நுனி நாக்கில பிரளுது இதுக்குள்ள அங்குள்ள மரக்கறி பெயர்களும் நம்மை முளீ பிதுங்க வைக்கிறது 

வாதங்களில் கிட்னி சட்னி (சம்பல் ) ஆகாமல் இருந்தால் சரி 

எனக்கு தெரிந்தவர்கள் சொன்னார்கள் இப்போது இலங்கை தமிழ் ரேடியோவிலும் தமிழுடன் ஆங்கிலத்தை கலந்து கதைக்கும் இந்திய பாணியிலான முறையை திணிக்க தொடங்கிவிட்டனர் என்று ☹️

  • Like 1
Posted

பல தளங்கள் தமிங்கிலத்தை அல்லது ஆங்கில வார்த்தையை தமிழில் எழுதுகிறார்கள்.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தமிழன்பன் said:

எல்லா மக்களுக்கும் புரியும் விதத்தில் சொல்லவேண்டும் .  நாட்டு மாட்டு பாலுக்கு பதில் ஜெஸி மாடுகளை புகுத்தியவர்கள் தான் வெள்ளைக்காரர். எங்களது நாட்டு வைத்தியம் முற்றுலும் உண்மை. தமிழரிடம் இல்லாத அறவினை புதுமை என்ற பெயரில் நம்பவேண்டாம்.

இந்திய கோமாதா துதி பாடும் ஊடகங்களில் வருகிற போலித் தகவல்களை நம்புகிறீர்கள் என ஊகிக்கிறேன். ஜேர்சி மாட்டின் பால்,  உள்ளூர் சிந்தி வழி மாட்டின் பாலை விட உள்ளடக்கத்தில் வேறல்ல - வித்தியாசம் பால் அளவில் தான் உள்ளூர் மாடு ஷொப்பிங், சுவரொட்டியைச் சாப்பிட்டு விட்டு, முதலீடு இல்லாமல் ஒரு லீற்றர் கறக்கும், ஜேர்சி புண்ணாக்கும் புல்லும் மெனக்கெட்டுப் போட்டால் 10 மடங்கு அதிகம் கறக்கும்!

ஒரு கேள்வி: "பூண்டு" என்றால் என்ன? ஈழத் தமிழில் பூண்டு என்றால் களை என்று தான் அறிந்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Justin said:

கேள்வி: "பூண்டு" என்றால் என்ன? ஈழத் தமிழில் பூண்டு என்றால் களை என்று தான் அறிந்திருக்கிறேன்

வெள்ளைப்பூடு ,உள்ளி என அறிந்திருந்திருக்கிறன்

5 hours ago, விளங்க நினைப்பவன் said:

எனக்கு தெரிந்தவர்கள் சொன்னார்கள் இப்போது இலங்கை தமிழ் ரேடியோவிலும் தமிழுடன் ஆங்கிலத்தை கலந்து கதைக்கும் இந்திய பாணியிலான முறையை திணிக்க தொடங்கிவிட்டனர் என்று ☹️

கனகாலமாக நடந்து வருகிறது but,so,அப்புறம், இந்திய தமிழ் வாசனை இறங்கியுள்ளது ஐயா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, இணையவன் said:

ஒவ்வொரு நாளும் போதிய அளவு நீர் அருந்த வேண்டும்.

சும்மா குடிக்கும் தண்ணீரைக் கூட இப்ப குடிக்க முடியாமல் உள்ளது.

அதுவும் முக்கியமாக இரவு வேளைகளில் தண்ணீர் தேவைக்கு கூட குடிக்க முடியாமல் உள்ளது.

மீறி குடித்தால் இரவில் சலங்கழிக்க என்று குறைந்தது 1-2 தரம் எழும்ப வேண்டியுள்ளது.

அதுக்காக உடம்பில் சீனி அதிகம் என்றில்லை.
 
A1C -6.0

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, ஈழப்பிரியன் said:

சும்மா குடிக்கும் தண்ணீரைக் கூட இப்ப குடிக்க முடியாமல் உள்ளது.

அதுவும் முக்கியமாக இரவு வேளைகளில் தண்ணீர் தேவைக்கு கூட குடிக்க முடியாமல் உள்ளது.

மீறி குடித்தால் இரவில் சலங்கழிக்க என்று குறைந்தது 1-2 தரம் எழும்ப வேண்டியுள்ளது.

அதுக்காக உடம்பில் சீனி அதிகம் என்றில்லை.
 
A1C -6.0

 இது உங்களுக்கு மட்டுமல்ல சற்று வயதாக சிறுநீர்ப்பை தளர்ச்சி   அடைந்து விடுகிறது . அதனால் தான் இரவில் எழும்ப வேண்டி வருகிறது .தேவைக்கு குடிக்க தானே வேண்டும். சிலருக்கு  சிலமருந்துகளுக்கு வாய் வரடசி ( drymouth )ஏற்படும் . அளவாக குடிக்கலாம். 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

சும்மா குடிக்கும் தண்ணீரைக் கூட இப்ப குடிக்க முடியாமல் உள்ளது.

அதுவும் முக்கியமாக இரவு வேளைகளில் தண்ணீர் தேவைக்கு கூட குடிக்க முடியாமல் உள்ளது.

மீறி குடித்தால் இரவில் சலங்கழிக்க என்று குறைந்தது 1-2 தரம் எழும்ப வேண்டியுள்ளது.

அதுக்காக உடம்பில் சீனி அதிகம் என்றில்லை.
 
A1C -6.0

5.7 முதல் 6.5 என்றால் நீரிழிவுக்கு முன்னான pre-diabetic நிலை, எனவே கவனம் தேவை! (மற்றையது முன்னிற்கும் (prostate) சுரப்பி பெரிதானாலும் இரவில் அடிக்கடி போக வேண்டியிருக்கும்)

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, Justin said:

5.7 முதல் 6.5 என்றால் நீரிழிவுக்கு முன்னான pre-diabetic நிலை, எனவே கவனம் தேவை! (மற்றையது முன்னிற்கும் (prostate) சுரப்பி பெரிதானாலும் இரவில் அடிக்கடி போக வேண்டியிருக்கும்)

கடந்த 10-15 வருடமாக ஒரே போராட்டம் தான்.

குளிசை இல்லாமல் கட்டுப்படுத்த முயன்று கொண்டே இருக்கிறேன்.

கொஞ்சம் கூடும் குறையும் சராசரி 6.0 இல் நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, Justin said:

இந்திய கோமாதா துதி பாடும் ஊடகங்களில் வருகிற போலித் தகவல்களை நம்புகிறீர்கள் என ஊகிக்கிறேன். ஜேர்சி மாட்டின் பால்,  உள்ளூர் சிந்தி வழி மாட்டின் பாலை விட உள்ளடக்கத்தில் வேறல்ல - வித்தியாசம் பால் அளவில் தான் உள்ளூர் மாடு ஷொப்பிங், சுவரொட்டியைச் சாப்பிட்டு விட்டு, முதலீடு இல்லாமல் ஒரு லீற்றர் கறக்கும், ஜேர்சி புண்ணாக்கும் புல்லும் மெனக்கெட்டுப் போட்டால் 10 மடங்கு அதிகம் கறக்கும்!

ஒரு கேள்வி: "பூண்டு" என்றால் என்ன? ஈழத் தமிழில் பூண்டு என்றால் களை என்று தான் அறிந்திருக்கிறேன்.

இந்திய வழக்கம் தான் பூண்டு, எங்களது ஊரில் உள்ளி என்று தான் சொல்கின்றோம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/2/2024 at 12:06, ஈழப்பிரியன் said:

கடந்த 10-15 வருடமாக ஒரே போராட்டம் தான்.

குளிசை இல்லாமல் கட்டுப்படுத்த முயன்று கொண்டே இருக்கிறேன்.

கொஞ்சம் கூடும் குறையும் சராசரி 6.0 இல் நிற்கிறது.

இரவில் அதிக நேரம் தூக்கமில்லாது இருப்பதும் இவற்றுக்கு ஒரு காரணம்..நான் சொல்லவில்லை மருத்துவர்கள் சொல்கிறார்கள்..மேலதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் இந்திய குழந்தை நல வைத்தியர்கள் அருண்குமார் மற்றும் சிவபிரகாஸ் போன்றவர்களும் இவ்வாறன விளங்களை யூருப்பில் கொடுத்திருக்கிறார்கள் போய் பார்க்கலாம்.
இரவு ஏழு, எட்டு மணிக்கு மேல் எதுவும் குடிக்காமல் நித்திரைக்கு போக முயற்சியுங்கள் அய்யா.✍️

  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.