Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

பொலிசார் தடிஅடி பிரயோகம் செய்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சகஜம் ....

ஆனால் இங்கு பொலிஸார் கடும் நடவடிக்கைகளை எடுத்து  கலவரத்ததில் ஈடுபட்டவர்களைத் தாக்கி இருந்தால் சிங்களப் பொலிசாரின் அக்கிரமம் என்று  கம்பு சுத்தியிருப்பீர்கள். 

Edited by island

  • Replies 148
  • Views 15.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    அடிதடியில் அரிகரன் நிகழ்ச்சி! ***************************************** *இது முள்ளிவாய்க்காலில்  கஞ்சி  வாங்க நின்ற கூட்டமல்ல!, *முத்த வெளியில்    கரிகரனைப் பார்க்க வந்த   கூட்டம்.!

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    இந்த இசை நிகழ்ச்சியை பல மில்லியன் செலவு செய்து ஒழுங்கு செய்தது.. இந்திரன் (நடிகை ரம்பாவின் கணவர்). காரணம்.. தான் அமைத்த நொதேர்ன் யுனி க்கு புரமோசனுக்கு. இவர் வெளியில் சொல்வது போரால் பாதிக்கப்பட்ட

  • புலவர்
    புலவர்

    இந்த நிகழ்ச்சியை காணொளியாக எடுப்பதற்கு விஜய்  தொலைக்காட்சிக்கு மட்டுமே அனமதி கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். அதற்குப் பெருந் தொகைப் பணத்தை ஏற்பாட்டாளர்கள் வாங்கியிருப்பார்கய். அதனால்தான் முதலில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hariharan-Concert-4-540x375.webp

ஹரிஹரனின் இசை நிகழ்வில் பார்வையாளர்கள் மீது கொடூர தாக்குதல்: காலில் விழுவதாக சொன்ன இந்திய பிரபலம் : பாதியில் இடைநிறுத்தம்!

நேற்றிரவு யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த வெளி அரங்கில் தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் தமன்னா, ரம்பா, யோகிபாபு, ஸ்வேதா மேனன், பாலா, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் பங்குபற்றினர். இந்த நிகழ்வானது தென்னிந்திய நடிகை ரம்பாவின் கணவரான இந்திரன் மற்றும் நோர்த்; யுனியினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வானது கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த நிலையில் அசாதாரண காலநிலை காரணமாக பெப்ரவரி 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

ஆரம்பத்தில் இலவசம் என அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வானது, பின்னர் 25,000, 7,000, 3,000 மற்றும் பின்னால் நின்று பார்ப்பவர்களுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலான கூட்டம் அனுமதிச் சீட்டுகளே இல்லாமல் நுழைந்ததால் குழப்பம் ஏற்பட்டது. முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர்.

பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதிய அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் தடுப்புகள் உடைக்கப்பட்டு பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்ததுடன், தடுப்புகளை உடைத்துக்கொண்டு வரும்போது பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாமல் நின்றவர்களோடு மோதுப்பட்டு பலர் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

அத்துடன் இந்த இசை நிகழ்வில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களுடன் விருந்து அருந்தி புகைப்படம் எடுப்பதற்கு 30,000 ரூபா என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து யாழுக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய பிரபலங்களுடன், புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு பணம் அறவிடப்பட்டால் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடுவோம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா ஊடக சந்திப்பில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இசைநிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தவேளை இரசிகர்கள் தடைகளை உடைத்துக்கொண்டு பாய்ந்து உள்நுழைந்துள்ளனர். இதனால் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் சிக்கலுக்குள்ளாகினர்.

பின்னர் பொலிஸார் மற்றும் volunteer குழுவினரால் இரசிகர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இசை நிகழ்ச்சி இடையிடையே தடைப்பட்டது. பின்னர் இசை நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டது.

சரியான திட்டமிடல் இன்மையே இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் காசு கொடுத்து ரிக்கெட் வாங்கிய பலர் இருக்கைகள் இல்லாமையினால் அங்கலாய்த்துள்ளனர்.

நொதேண் யுனியில் கல்வி கற்கும் மாணவர்களும் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனை நொதேண் யுனியில் கல்வி கற்கும் மாணவர்களிடம் கூறும்போது அவர்கள், தாங்கள் சம்பளத்துக்கு வேலை செய்யவில்லை என்றும், தாங்கள் கல்வி கற்கும் காரணத்தால் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், இது குறித்து மேற்பார்வையாளர்களிடம் முறையிடுமாறும் தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்தோஷ் நாராயணன் அவர்களது இசை நிகழ்ச்சி அதே அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு முற்றிலும் இலவசமாக நடைபெற்றதுடன், அதில் எந்த குழப்பங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1369201

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, island said:

ஆனால் இங்கு பொலிஸார் கடும் நடவடிக்கைகளை எடுத்து  கலவரத்ததில் ஈடுபட்டவர்களைத் தாக்கி இருந்தால் சிங்களப் பொலிசாரின் அக்கிரமம் என்று  கம்பு சுத்தியிருப்பீர்கள். 

மீண்டும் சொல்லுகிறேன் சுத்துவோம் இங்கு யாரும் புனிதர்கள் அல்ல ......தடிஅடி செய்து கல்வரத்தை அடக்க வேணும் துப்பாக்கி பிரயோகம் செய்தால் கம்பு சுத்துவோம் ...சோசலிச ஜனநாயக குடியரசில் அந்த உரிமை கூட இல்லையா>..

9 minutes ago, தமிழ் சிறி said:

அதில் எந்த குழப்பங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு கவர்ச்சி காட்ட நடிகைகள் வரவில்லையே ...அது தான் குழப்பம் நடை பெறவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 👇 சமூக வலைத்தளங்களில் வந்த சில பதிவுகள். 👇

இருந்தாலும் நாகரீகமற்ற முறை இளம் காவாலிகள் யாழ்ப்பாணத்தில் அதிகம் என்பதை காட்டியுள்ளது . யாழ்ப்பாணத்திற்கு நாங்கள் வரமாட்டம் என நடிகர்கள் கூறினார்கள் என்பதற்கு இவர்கள் நடந்தவிதம் நிருபணமாகியதில்.மிகவும் வெட்கப் பட வேண்டிய விடயம்.

Elam Tamil

##############   #################   ##############

இசை கலைகளை ரசியுங்கள். ஆனால் கவர்ச்சிக்கு விலை கொடுக்காதீர்கள்.
இதை "கல்வி ஒழுக்கம்" எ‌ன்று‌ பயன்படுத்தாதீர்கள்.
எமது புதிய தலைமுறைகளின் எதிர்பார்ப்பை நன்கு அறிந்து கொண்டவர்கள் இவர்கள் என்பதை மிக கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் நம்மால் புரிந்து கொள்ளாத முடிய எமது புதிய தலைமுறை உறவுகள்.

கலவரம் நடந்ததை மிகவும் கவலை அடைய வேண்டும் ஏனென்றால் நல்ல கல்வி ஒழுக்கத்தை கற்றுக் கொண்டவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள்.
ஆனால் கவர்ச்சி நடிகை நடனம் முடிந்த பின் தான் கலவரமே தொடங்கியது. ஏன் இந்த கலவரம். பின்னால் நின்றவர்கள் எல்லாம் முன்னால் வந்தது ?🤔 இன்னும் புரியவில்லை என்றால் நாங்கள் இவர்களைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ள ஒரு கல்வி ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும்.

நாளும் பொழுதும் விலைவாசி அதிகம் என புலம்பிக் கொண்டு, டெங்கு காய்ச்சல் என்று அலம்பி கொண்டு, இன்று எங்கு வந்து நிற்கிறார்கள் என்று பாருங்கள். விவசாயத்தை மறந்து, வீட்டுத் தோட்டத்தை பாரமென நினைத்த பெற்றோர்கள் அனுப்பி வைத்த பிள்ளைகள் இவர்கள் "இல்லாதவர்கள்" அல்லவா? கஞ்சாவுக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையில் கலை நிகழ்ச்சி தானே என்று நானும் கொஞ்ச நேரம்பேசாமல் இருந்தேன். ஆனால் அங்கு கஞ்சாவுக்கு துணையாக கவர்ச்சியும் வந்தது. எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லையே முன்னிடத்தில் என்று மனக்கவலை கொண்டே வந்தது கலவரம்🤔

அன்று சொன்ன"கல்வி ஒழுக்கம்"🌿 மறைந்தாலும் அவர் சொன்ன வார்த்தைகளை இன்றும் நினைவில் கொள்வதில் பெருமையாக இருக்கிறது. மறைந்தாலும் இவர் உரையாடல் பெருமையையும் மகிழ்ச்சியையும் இன்றும் தருகிறது. ஆனால் நிகழ்வுகள் பார்வையில் தலைகீழாக இருக்கின்றது, அதனால் மனக்கவலையுடன் இந்தப் பதிவை உங்களுக்கும் தருகிறேன்.
நன்றி ✍️

Naguleswary Nagalingam  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

மீண்டும் சொல்லுகிறேன் சுத்துவோம் இங்கு யாரும் புனிதர்கள் அல்ல ......தடிஅடி செய்து கல்வரத்தை அடக்க வேணும் துப்பாக்கி பிரயோகம் செய்தால் கம்பு சுத்துவோம் ...சோசலிச ஜனநாயக குடியரசில் அந்த உரிமை கூட இல்லையா>..

சரி. அப்படியே கம்பு சுத்திக்கொண்டு நின்ற இடத்திலேயே நிற்கும் உரிமை உங்களுக்கு உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nedukkalapoovan said:

ஆக.. கல்வி தமிழர்களின் முதலீடு என்று தெரிந்து.. அதில் முதலிட்டு இலாபம் ஈட்டுவதற்காக நடத்தப்படும் ஒரு நிகழ்வே இது.

மிக சரியான பார்வை மற்றும் கருத்துகள்  இதை இந்திரன்  வெளிப்படையாக சொல்லி இருக்க வேண்டும் நான் செலவிட்ட பணத்தை உங்களிடமிருந்து மீள  இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறேன். அள்ளி  அள்ளி தாருங்கள்” என்று கேட்டீருக்கலாம்  அதை விட்டுட்டு போரில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுகிறேன்......கல்வி எங்கள் சொத்து    போராட்டம் முடிச்சுது   .... சினிமாக்காரர்கள் வருவது ஒரு சந்தோசம்  .    இப்படி நாடகம் ஆடி இருக்க கூடாது    யாழ்ப்பாணம்  இந்த சினிமா கூத்தாடிகளின் சந்தையாக மாற்றும் முயற்சிகள் தோல்வி இதில் கவலைப்பட எதுவுமில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, island said:

சரி. அப்படியே கம்பு சுத்திக்கொண்டு நின்ற இடத்திலேயே நிற்கும் உரிமை உங்களுக்கு உண்டு. 

சுத்தாமல் நின்ற ஆட்களும் முன்னேறின மாதிரி தெரியவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

ரிக்கற் விலை விபரம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, putthan said:

ராஜா அதென்ன யாழ்ப்பாணத்து தமிழன் மட்டும் சுத்தமாக ,நல்ல பிள்ளைகளாக வாழ வேணும் என்ற ஒர் விம்பத்தை ஏற்படுத்துகின்றீர்கள் ...உலகத்தில் பல இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது சில இடங்களில் அசம்பாவிதங்களும் நடை பெற்றுள்ளது ..பொலிசார் தடிஅடி பிரயோகம் செய்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சகஜம் .....

இதனால் யாழ்ப்பாணத்தானுக்கோ,உலக தமிழ் மக்களுக்கோ இழுக்கு என நான் பார்க்கவில்லை....
இசை நிகழ்ச்சியில் அசம்பாவிதம் நடை பெற்றுள்ளது அம்பிட்டும் தான்....

இனக்கொலை செய்தவர்கள் ,இனப் படுகொலை செய்பவர்கள் எல்லாம் உலகில் சிவப்பு கம்பள வரவேற்பில் கொர்ட் சூட் போட்டு உலா வரும் பொழுது ....

இந்த இசை நிகழ்ச்சி அசம்பாவிதம் உலக தமிழருக்கு ஒர் இழுக்காக நான் பார்க்கவில்லை...

கலை கலாச்சாரம் என்றால் யாழ்ப்பாணம் என்ற விம்பம் ஏற்படுத்தப்பட்டது அல்லவா அதற்க்காக சொன்னேன்  தற்போது வடகிழக்கே தலைகீழாக மாறியுள்ளது கலை கலாச்சாரத்தில் .....................சிவாஜி திரைப்படத்தில் ஒரு காட்சியில் விவேக் சொல்லுவார் இனி ஸ்ரைற்றா இலங்கை யாழ்ப்பாணத்துக்கு போய்த்தான் பொண்ணு பார்க்கணும் என்று   

அசம்பாவிதங்கள் நடைபெறுவது வழமைதான் ஆனாலும் அதே அசம்பாவிதம் ராஜிவ் கொல்லப்பட்ட பின்னர் ஒட்டுமொத்த இந்திய மக்கள் மனநிலையில் ஈழத்தமிழர்கள் இன்னும் எங்கே நிற்கிறார்கள் என பார்ப்போமானால் அங்கே இருக்கும் அகதி மக்களை கேட்டால் புரியும் ............................
எனக்கு இசை நிகழ்ச்சி பற்றி கவலை இல்லை ஆனால் 25000 ரூபா காசு கொடுத்து ரிக்கட் வாங்கி பார்க்கும் அதே பகுதியில் தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த சிலர் தற்கொலையும் செய்துள்ளார்கள் (வடக்கு கிழக்கில்) புத்தன் .

நம்மவர்கள் தற்போது சாதிக்க துடிப்பது திரைத்துறையில்  ஒன்று பாடகராக  டான்சராகவும்,  அல்லது நடிகராக  அவர்களை இச்சம்பவங்கள் பாதிக்கக்கூடாது அல்லவா  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல 

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் இடை நிறுத்தப்பட்டது யாழ்ப்பாணத்தின் இசை நிகழ்ச்சி

பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் இடை நிறுத்தப்பட்டது யாழ்ப்பாணத்தின் இசை நிகழ்ச்சி

தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று(9) மாலை நடைபெற்றது.

குறித்த இசைநிகழ்ச்சிக்காக நடிகை தமன்னா, யோகி பாபு, புகழ், சான்னி மாஸ்டர், ஆலியா மானசா, சஞ்சீவ், கலா மாஸ்டர், ரச்சிதா, ஸ்டான்லி, டிடி திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தந்திருந்தனர்.

Hariharan-Concert-3.webp

இதன்போது, பாதுகாப்பு வேலைகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த இளைஞர்கள் நிகழ்ச்சியை நடத்த விடாமல் சத்தமிட்டதுடன், அரங்கத்திற்குள்ளும் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பல நட்சத்திரங்கள் அமைதியாக இருக்கும்படியு கேட்டும் இளைஞர்கள் ஓய்ந்தபாடில்லை.

Hariharan-Concert-2.webp

இதன்போது, “ஆடியன்ஸ் ப்ளீஸ், ப்ளீஸ் உங்க கால்ல விழுறம்” என கலா மாஸ்டர் யாழ் இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.

எனினும் கட்டுக்கடங்காத கூட்டத்தாலும், கலவரத்தாலும், குறித்த ஹரிகரன் இசை நிகழ்வு நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

GFzkkQMX0AANPOn.jpg

மேலும், இத்தனை அமளிக்கு மத்தியிலும் நடிகை தமன்னாவின் நடனம் ஒன்று அரங்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

25000 ரூபா அனுமதிச் சீட்டு, 7000 ரூபா அனுமதிச் சீட்டு, 3000 ரூபாய் அனுமதிச் சீட்டு என கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்நதும் அதன்பின்னே இலவசமாக நின்றவாறும் இசைநிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

GFzkkQPWcAA6z3H.jpg

ஆனாலும் கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலான கூட்டம் அனுமதிச் சீட்டுகளே இல்லாமல் நுழைந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர்.

GFzB8SgaIAAqMqF.jpg

பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந் நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதிய அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் தடுப்புகள் உடைக்கப்பட்டு பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்ததுடன்,தடுப்புகளை உடைத்துக்கொண்டு வரும்போது பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாமல் நின்றவர்களோடு மோதுப்பட்டு பலர் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவங்களும் நடந்தது.

GF7F8LHWMAA6WcS.jpgGF7F77iWEAAQhxR.jpgGF7F7giXQAA4Cui.jpgGF7F6IDXoAAF_ZV.jpgGF0Av-oWEAAoJis.jpgGF0Av-fXsAAXCS1.jpgGF0Av-fXgAAAxhQ.jpgGF0Av-eXYAArCt6.jpgGFyxaSrbIAA39dv.jpg

 

https://trueceylon.lk/hariharan-musical-show-postbont-25254/#google_vignette

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சுடும்.

முள்ளிவாய்க்கால் கோரநேரம் மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருந்தது தமிழகம் மட்டுமல்ல. புலம் மட்டுமே வீதியில்...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

உண்மை சுடும்.

முள்ளிவாய்க்கால் கோரநேரம் மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருந்தது தமிழகம் மட்டுமல்ல. புலம் மட்டுமே வீதியில்...

இன்னும் புலம் பெயர்ந்தவர்கள் ஓரணியில் திரளமுடியமலே இருக்கிறார்கள் என்ன செய்யலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

spacer.png

யாழ்ப்பாணத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய சிறப்பு ரிக்கற்றுகள். வடக்கன்ஸ்

spacer.png

 

spacer.png

animiertes-gefuehl-smilies-bild-0091.gifவடக்கன்ஸ். animiertes-gefuehl-smilies-bild-0415.gif யாழ்ப்பாணத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய சிறப்பு ரிக்கற்றுகள். animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

spacer.png

ரிக்கற் விலை விபரம். 😂 🤣

அநியாயம். .. இசைஅரங்குக்கு வெளியில் மரம் உண்டு  அதற்கு 30 ஆயிரம் 20 ஆயிரம் 10 ஆயிரம் கட்டணம் யாழ்ப்பாணத்தில் ஒரு கூலி தொழிலாளர் சம்ளம் ஒரு மாதம் எவ்வளவு?? குமாரசாமி அண்ணையை காணவில்லையே யாழ்ப்பாணத்தில். நிக்கிறாரே?? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் புலம் பெயர்ந்தவர்கள் ஓரணியில் திரளமுடியமலே இருக்கிறார்கள் என்ன செய்யலாம்

ஏன் நீங்கள் அதை செய்து தொடக்க கூடாது???

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

ஏன் நீங்கள் அதை செய்து தொடக்க கூடாது???

இனி ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்யும் அளவுக்கு யாரும் இல்லை அந்த மனநிலையிலும் மக்கள் இல்லை மாறாக களியாட்டங்களுக்கு காணலாம் இந்த நிகழ்ச்சி உதாரணம் 
வடகிழக்கில் இராணூவ பிரசன்னம் சிங்களவர்கள் காணிகளை பிடிக்கிறார்கள் கோவில்களில் குடியேறுகிறார்கள் ஆர்ப்பாட்டம் என்றால் யாரும் இல்லை ஒழுங்கு செய்பவர் மட்டும் உட் கார்ந்து இருப்பார் இதுதான் இங்குள்ள நிலமை விசுகர் 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கலை கலாச்சாரம் என்றால் யாழ்ப்பாணம் என்ற விம்பம் ஏற்படுத்தப்பட்டது அல்லவா அதற்க்காக சொன்னேன்  தற்போது வடகிழக்கே தலைகீழாக மாறியுள்ளது கலை கலாச்சாரத்தில் .....................சிவாஜி திரைப்படத்தில் ஒரு காட்சியில் விவேக் சொல்லுவார் இனி ஸ்ரைற்றா இலங்கை யாழ்ப்பாணத்துக்கு போய்த்தான் பொண்ணு பார்க்கணும் என்று   

அசம்பாவிதங்கள் நடைபெறுவது வழமைதான் ஆனாலும் அதே அசம்பாவிதம் ராஜிவ் கொல்லப்பட்ட பின்னர் ஒட்டுமொத்த இந்திய மக்கள் மனநிலையில் ஈழத்தமிழர்கள் இன்னும் எங்கே நிற்கிறார்கள் என பார்ப்போமானால் அங்கே இருக்கும் அகதி மக்களை கேட்டால் புரியும் ............................
எனக்கு இசை நிகழ்ச்சி பற்றி கவலை இல்லை ஆனால் 25000 ரூபா காசு கொடுத்து ரிக்கட் வாங்கி பார்க்கும் அதே பகுதியில் தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த சிலர் தற்கொலையும் செய்துள்ளார்கள் (வடக்கு கிழக்கில்) புத்தன் .

நம்மவர்கள் தற்போது சாதிக்க துடிப்பது திரைத்துறையில்  ஒன்று பாடகராக  டான்சராகவும்,  அல்லது நடிகராக  அவர்களை இச்சம்பவங்கள் பாதிக்கக்கூடாது அல்லவா  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல 

உங்கள் மனக்கவலை புரிகின்றது ..
கோவில்களில்(புலம் பெயர் பிரதேசம்) விசேட திருவிழாக்க‌ளில், ஐயர் பூக்களை பக்தர்களை நோக்கி எறிவார் அதை எடுப்பதற்கு மக்கள் அடிபடுவது , சூரன் போரின் பொழுது சூரனின் மாம்பழத்தை   பரிப்பதற்க்கு பக்தர் அடி படுவது ...சில மனிதர்கள் அந்த சமயத்தில் பக்தி வெறி கொண்டு அலை வார்கள்...அதே போல இந்த இளஞர்களும் தமன்னா வெறி கொண்டு தங்களுடைய சுயத்தை இழந்துள்ளனர்...
எது எப்படியோ இலவச நிகழ்ச்சி என்ற காரணத்தால் மக்கள் அலைமோதியுள்ளனர்...தமன்னாவின் காவலா ஆட்டத்தை திரையில் பார்த்த அறுபது வயதை தாண்டிய எனக்கே மனசு சஞ்சலப்ப்டும்பொழுது  இருபது வயசு இளசுகள் வெறி கொள்வதில் தப்பில்லை

யாழ்ப்பாண கலாச்சாரம் ,பண்பாடு என ஒன்று இல்லை என்பது என் கணிப்பு..கிடுகுவேலி கலாச்சாரம் மலையெறி 40 வருடங்களுக்கு மேலாகிறது....
இந்திராகாந்தியை கொலை செய்த சீக்கிய சமுகம் இந்தியாவில் இன்றும் நனறாகத்தான் இருக்கிறது...ஆகவே ராஜீவ் கொலை சம்பந்தமாக ஈழத்தமிழர்கள் சார்பாக் இந்திய பார்வையை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள  தேவையில்லை 

13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இனி ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்யும் அளவுக்கு யாரும் இல்லை அந்த மனநிலையிலும் மக்கள் இல்லை மாறாக களியாட்டங்களுக்கு காணலாம் இந்த நிகழ்ச்சி உதாரணம் 
வடகிழக்கில் இராணூவ பிரசன்னம் சிங்களவர்கள் காணிகளை பிடிக்கிறார்கள் கோவில்களில் குடியேறுகிறார்கள் ஆர்ப்பாட்டம் என்றால் யாரும் இல்லை ஒழுங்கு செய்பவர் மட்டும் உட் கார்ந்து இருப்பார் இதுதான் இங்குள்ள நிலமை விசுகர் 

தமன்னாவை அழைத்து ஆர்ப்பாட்டம் வைச்சா சனம் வரும்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

ஆகவே ராஜீவ் கொலை சம்பந்தமாக ஈழத்தமிழர்கள் சார்பாக் இந்திய பார்வையை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள  தேவையில்லை 

அங்கே அகதியாக செல்பவர்களை குத்திக்காட்டுவது தொடர்கிறது  இந்திய காவல்படையால்  மூன்று நாளைக்கு முன்னர் சென்ற குடும்பத்தை க்கியூ பிரிவு விசாரிகிறதாம் இத்தனைக்கும் 3 குழந்தைகள் தாய் தகப்பன் இது என்ன நிலை?  கைக்குள் அகப்பட்டவனுக்கே மூச்சு திணறல் தெரியும் 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனாலும் ஈழத்தில் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தால் கூட அதை பகிஷ்கரிக்க வேண்டும் என்று சிலரது மனநிலை இது என்னவாக இருக்கும் விரும்பியவர் பார்க்கட்டும் விருப்பமில்லாதவர் போகட்டும்

நாங்கள் மட்டுமே எல்லாம் அனுபவித்து இன்பம் அடைவோம். அங்கே உள்ளவர்கள் புரச்சி போராட்டம் என்று தங்களை உருக்கி பழமை எல்லாவற்றையும் கட்டி காப்பாற்றி கலாச்சாரமாக வாழவேண்டும்.

____________________


இதே இடத்தில் 50 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற இசைநிகழ்சியிலும் இப்படி நடந்திருக்கின்றது.
50 வருடங்களுக்கு பின்பும் மாறவில்லை.
Island தகவல்  கவலை அளிப்பதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

அங்கு கவர்ச்சி காட்ட நடிகைகள் வரவில்லையே ...அது தான் குழப்பம் நடை பெறவில்லை

அப்படியானால் 1980 ல் ஜேசுதாசின் நிகழ்வில் கவர்சசி இல்லையே. அங்கும் இதை போல  காவாலித்தனம் நடைபெற்றது ஏன்?  

  • கருத்துக்கள உறவுகள்

Whats-App-Image-2024-02-10-at-1-43-17-PM

மேலே உள்ள படங்களில் உள்ள ஒழுக்கமான மனிதர்களும் யாழ்ப்பாணத்தில் தான்  வாழ்ந்தார்கள் .அதே முற்ற வெளி , தலைவரின் சுதுமலை பிரகடனத்தில் நம் மக்கள் நிற்கும் நிலையை பாருங்களேன் எத்தனை நேர்த்தி..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

VideoCapture_20231226-155245-750x375.jpg

தென்னிந்திய கலைஞர்களுக்கும் எமது மக்களுக்கும் ஏற்பட்ட ஏமாற்றம் வருத்தமளிக்கிறது: அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு.

தென்னிந்தியப் பாடகர் ஹரிகரன் தலைமையில் இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா, இவ்வாறான சம்பவங்கள் எமது மக்களை தொடர்ந்தும் துன்பத்தில் அமுழ்த்தி குளிர்காய விரும்பும் சுயநலத் தரப்புக்களுக்கு வாய்ப்பாக மாறிவிடும் எனவும் வருத்தம்  தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று(09) இடம்பெற்ற தென்னிந்திய திரைப்  பிரலங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
 
“‘இவ்வாறான சம்பவங்கள் எமது பிரதேசங்களில் இடம்பெறுவது வேதனையளிக்கின்றது.  எமது மக்களின் வாழ்வாதாரத்தினையும் வாழ்வியலையும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவதற்கு எமது புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்ற வேளையில், புலம்பெயர் முதலீட்டாளர் ஒருவரின் மமுயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில், இவ்வாறான அசௌகரியங்கள் ஏற்படுவது, மக்கள் நலன் சார்ந்த  எமது எதிர்பார்ப்புக்களுக்கு பின்னடைவுகளையே ஏற்படுத்தும்.
 
எமது மக்களை தொடர்ந்தும் அவலங்களுக்குள் அமுழ்த்தி வைத்திருந்து,  அதன்மூலம் அரசியல் இலாமீட்ட முனைகின்ற சுயலாப தரப்புக்கள், எமது பிரதேசங்களில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் இல்லை என்ற கருத்தினை பரப்புவதில் கண்ணும் கருத்துமாக செயற்பபட்டு வருகின்றனர்.
 
அவ்வாறானவர்களின்  கருத்துக்களை வலுப்படுத்துவதாக இவ்வாறான சம்பவங்கள் அமைந்து விடும். கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பார்க்கின்றபோது, ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பிற்கும் அதிகமான மக்கள் வருகை தந்தமையும், ஒழுங்குபடுத்தலில் இருந்த குறைபாடுகள் சிலவுமே இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
 
இந்தச் சம்பவமானது, இசை நிழச்சியை கண்டுகளிக்கும்  எதிர்பார்ப்புடன் காத்திருந்த எமது மக்களுக்கும், ஆர்வத்துடன் வருகைதந்த தென்னிந்திய கலைஞர்களுக்கும் அதேபோல் ஏற்பாட்டாளர்களுக்கும் ஏமாற்றத்தினை அளித்திருக்கின்றது.
 
இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது வருத்தத்தினை தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றபோது, தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி செய்வதை ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.” என்று தெரிவித்துள்ளார்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

spacer.png

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்துவதென்றால், முற்றுமுழுதாக இலவசமாக நடத்தவேண்டும்.

இல்லையேல் முற்றுமுழுதாக கட்டணம் வசூலித்து நடத்தப்பட்டிருக்கவேண்டும்.

வெறும் திரைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பிரபலங்களை பார்த்து வந்த கூட்டம் தூரத்தே நின்று பார்க்கும்போது  புள்ளி புள்ளியாய் தெரிந்தால் அவர்களை நெருங்கி பார்க்க கண்டிப்பாக ஆர்வகோளாறில் முயலும், அவர்கள் வயசு அப்படி.

உலக பணக்கார நாடு ஒன்றில் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் இந்திரனுக்கு இசை நிகழ்ச்சி வியாபாரத்தில் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற வாய்ப்பிருக்கு என்று கண்டிப்பாக தெரிந்திருக்கும், அதனால்தான் பலாலி விமான நிலையத்திலேயே குழப்பம் விளைவித்துவிடாதீர்கள்  பிரபலங்கள் வரமாட்டோம் என்று கூறியும் வற்புறுத்தி கூட்டி வந்தோம் என்று அபாயமணியை அட்வான்சா அடிச்சிருந்தார்.

பணம் புரளும் ஒரு நிகழ்வை ஒழுங்குபடுத்தாமல் பாதி இலவசம் பாதி கட்டணம் என்று  கோமாளிதனமாக  நடத்தி அதை கலவரமாக்கி  ஒட்டுமொத்த யாழ்மக்களுக்கும் அவபெயரை சம்பாதித்துகொடுத்த பெருமை இந்திரனையே சாரும் வேறு எவர்மீதும் விரல் நீட்டி குற்றம் சாட்ட முடியாது.

உலகம் முழுவதுமே ஒழுங்கு படுத்தப்படாத கேளிக்கை நிகழ்வுகளில்  குழப்பமும் , தடங்கலும் . கலவரமும் சகஜம் அதை ஒட்டுமொத்த இனத்தின் பழக்கங்களில் ஒன்றாகவோ, ஒரு பிரதேசத்தின் பண்புகளில் ஒன்றாகவோ சமூக ஊடகங்களிலும், இன்ன பிற வழிகளும் விமர்சிப்பது சிறுபிள்ளைதனமானது, இதுக்கு டக்ளஸ் வேற வக்காலத்து முதலீடு பாதிக்கப்படுமாம் சொல்றார்.

அப்படி பார்த்தால் இவரை ஒரு மக்கள் பிரதிநிதியாக ஒட்டுண்ணி அரசியல்வாதியாக பெற்றதற்கு இந்த இனம் எத்தனை தடவை பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்?

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இனி ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்யும் அளவுக்கு யாரும் இல்லை அந்த மனநிலையிலும் மக்கள் இல்லை மாறாக களியாட்டங்களுக்கு காணலாம் இந்த நிகழ்ச்சி உதாரணம் 
வடகிழக்கில் இராணூவ பிரசன்னம் சிங்களவர்கள் காணிகளை பிடிக்கிறார்கள் கோவில்களில் குடியேறுகிறார்கள் ஆர்ப்பாட்டம் என்றால் யாரும் இல்லை ஒழுங்கு செய்பவர் மட்டும் உட் கார்ந்து இருப்பார் இதுதான் இங்குள்ள நிலமை விசுகர் 

அப்படியானால் எதுக்காக புலம்பெயர் தமிழர்கள் ஒன்றாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.