Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, island said:

@Justin  @Kandiah57  எனது பார்வையில்,   கடந்த 40 ஆண்டுகளாக சுயமாக சிந்திக்கும் திறமையான அரசியல்வாதிகள் தமிழ் அரசியல் பரப்பில் விரும்பதகாதவர்களாகவே உள்ளனர்.   அவ்வாறான அரசியல்வாதிகள், கல்விமான்கள் பலர் அரச ஆயுதப்படையினராலோ, தமிழ் போராளிக்குழுவினர்களாலேயோ  படுகொலை செய்யப்பட்ட வரலாறே உள்ளது.  

2009 ன் பின்னர் கூட சுயமாக சிந்திக்கும்  அரசியல்வாதிகள் வெறுப்புடன் பார்க்கப்படுபவர்களாகவே  உள்ளனர்.  அவ்வாறாக சுயமாக சிந்திக்கும்  அரசியல்வாதிகளை வளரவிட்டால் அவர்கள் கடந்த கால வரலாற்றை நேர்மையுடன்  அணுகி தவறுகளை கேள்விகுட்படுத்துவார்கள் என்ற அச்சம் பலரை வாட்டுவதால் இந்த நிலை தொடர்கிறது.  

இந்த நிலை தொடரும் வரை  தமிழரின் அரசியல் நிலை மேலும் மேலும்  சிங்கள இனவாதிகளின் விருப்பத்தை பூர்ததி செய்யும் வகையிலான பின்னடைவையே  நோக்கிய பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கும். 

2000 களில் வடக்கு கிழக்கில் தமிழ் பா.உ என்றால்  அவர்களது பணிப் பட்டியல் மிகக் குறுகியது:

காசு வாங்கிக் கொண்டு  அரச வேலை எடுத்துக் கொடுத்தல் 

பொலிஸ் பிடித்தால் வெளியே எடுத்து விடுதல் (இதற்கும் கூலி தான்).

வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து காசுக்கு ஆட்களை வெளியே எடுத்து விட்டு வன்னியின் முன்னாள் பா.உ வினோகராதலிங்கம் போன்றோர் கோடிக் கணக்கில் உழைத்தனர். இது போன்ற கோல்மால் வேலைகளில் ஈடுபடாமல் இருந்த ஓரிருவரில் சம்பந்தரும் அடங்குவார்.

இந்த நிலையில் இருந்து, தமிழ் பா.உ என்றால் தீர்வு முயற்சியில் முழுமையாக ஈடு பட வேண்டுமென்ற புதிய தராததரத்தை அறிமுகம் செய்தது சுமந்திரன் என நினைக்கிறேன். 90 களில், இதே போன்ற ஒரு முயற்சியை தேசியப் பட்டியல் மூலம் உள்வாங்கப் பட்ட நீலன் திருச்செல்வமும் செய்ய முயன்று, பின் ஆதரவில்லாமல் வெறுத்துப் போய் விலகினார், பின்னர் புலிகளால் கொல்லவும் பட்டார். அவர் செய்ததெல்லாம், சந்திரிகாவுடனான தனிப் பட்ட நட்பைப் பாவித்து அந்த நேரம் அரசியலைமைப்பு மாற்றம் மூலம் தீர்வுக்கு முயன்றமை தான்.     

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Justin said:

வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து காசுக்கு ஆட்களை வெளியே எடுத்து விட்டு வன்னியின் முன்னாள் பா.உ வினோகராதலிங்கம் போன்றோர் கோடிக் கணக்கில் உழைத்தனர்

சித்தார்த்தனை விட்டுட்டுயளோ?

25 minutes ago, Justin said:

இது போன்ற கோல்மால் வேலைகளில் ஈடுபடாமல் இருந்த ஓரிருவரில் சம்பந்தரும் அடங்குவார்.

அவருக்கு வேறுவழிகள் இருந்ததால் இதில் ஈடுபடலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, ஈழப்பிரியன் said:

சித்தார்த்தனை விட்டுட்டுயளோ?

அவருக்கு வேறுவழிகள் இருந்ததால் இதில் ஈடுபடலையோ?

சித்தார்த்தன் பா. உவை எப்படி மறப்பது😂?

புளொட்டின் வவுனியா பிசினஸ் பொறுப்பு மாணிக்கதாசும் , சின்ன தாஸ் (அல்லது அலவாங்கு தாஸ்) என்ற அடியாளும். இவர்கள் சேர்க்கும் கப்பக் காசின் பங்கை வாங்க சித்தார்த்தன் கொழும்பிலிருந்து இராணுவ உலங்கு வானூர்தியில் யோசப் முகாமிற்கு வருவார், முகாமை விட்டு வெளியே வரார். வாகனத் தொடரணியாக தாஸ் அணி யோசப் முகாமுக்கு வந்து சித்தார்த்தனிடம் பங்கைக் கொடுத்து விட்டு திரும்பிப் போகும். இந்தச் சடங்கு ஓரிரு மாதங்களுக்கொருமுறை நடக்கும்! இரு தாஸ்களையும் புலிகள் கொன்ற பின்னர், ஊத்தை பவான் உள்ளூர் புளொட் தலைவரானார், அதன் பின்னர் சித்தார்த்தன் கை நனைப்பது கொஞ்சம் குறைந்தது. புலிகள் இல்லாமல் போன பின்னர் வவுனியா வந்து வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்டு, தேர்தலில் வென்று இப்போது "என் வேட்டி வெள்ளை" எனத் திரிகிறார்😎!

சம்பந்தரிடம் அரசியல் சார்ந்து முறைப்பாடுகள் இருக்கலாம் . ஆனால், அவர் நிதி ரீதியில் ஊழல்கள் செய்ததாக சிங்களவர்களே சொல்ல மாட்டார்கள். நம் ஆட்கள் தான் காழ்ப்புணர்வினால் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.

  • Like 1
  • Thanks 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

அவர் செய்ததெல்லாம், சந்திரிகாவுடனான தனிப் பட்ட நட்பைப் பாவித்து அந்த நேரம் அரசியலைமைப்பு மாற்றம் மூலம் தீர்வுக்கு முயன்றமை தான்.     

நம்பும்படியாக இல்லையே. 

இதற்காகவா புலிகள் கோபமடைந்தார்கள்??

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, island said:

எனது பார்வையில்,   கடந்த 40 ஆண்டுகளாக சுயமாக சிந்திக்கும் திறமையான அரசியல்வாதிகள் தமிழ் அரசியல் பரப்பில் விரும்பதகாதவர்களாகவே உள்ளனர்.   அவ்வாறான அரசியல்வாதிகள், கல்விமான்கள் பலர் அரச ஆயுதப்படையினராலோ, தமிழ் போராளிக்குழுவினர்களாலேயோ  படுகொலை செய்யப்பட்ட வரலாறே உள்ளது.  

2009 ன் பின்னர் கூட சுயமாக சிந்திக்கும்  அரசியல்வாதிகள் வெறுப்புடன் பார்க்கப்படுபவர்களாகவே  உள்ளனர்.  அவ்வாறாக சுயமாக சிந்திக்கும்  அரசியல்வாதிகளை வளரவிட்டால் அவர்கள் கடந்த கால வரலாற்றை நேர்மையுடன்  அணுகி தவறுகளை கேள்விகுட்படுத்துவார்கள் என்ற அச்சம் பலரை வாட்டுவதால் இந்த நிலை தொடர்கிறது.  

இந்த நிலை தொடரும் வரை  தமிழரின் அரசியல் நிலை மேலும் மேலும்  சிங்கள இனவாதிகளின் விருப்பத்தை பூர்ததி செய்யும் வகையிலான பின்னடைவையே  நோக்கிய பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கும். 

உண்மையை தெரிவிக்கும் சிறந்த கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, விசுகு said:

நம்பும்படியாக இல்லையே. 

இதற்காகவா புலிகள் கோபமடைந்தார்கள்??

இதை ஏன் நம்பக் கஷ்டப் படுகிறீர்கள்😅?

புலிகள் விரும்பிய தீர்வல்லாமல் ஒரு தீர்வுப் பொதியை சந்திரிக்காவுடன் சேர்ந்து நீலன் தயாரிக்க முயன்றார். அவருக்கு மேற்கின் ராஜதந்திர மட்டங்களிலும் மரியாதை இருந்தது (அவர் ஒரு அரசியலமைப்பு நிபுணர் என்பதால்). இது புலிகளைக் கோபப் படுத்தா விட்டால் வேறெது கோபப் படுத்தியிருக்கும் என்கிறீர்கள்? அமிர் இப்படி தானே கோபமூட்டினார்?

  • Haha 1
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Justin said:

நீலன் திருச்செல்வம் உலக்கில்  உள்ள பெரும்பாலான் உயர் ராஜதந்திரிகளால் அறியப்பட்ட அவர்களால் மதிக்கப்பட்ட ஒருவர்.  அவரை கொன்றதன் மூலம் அந்த கொலையாளிகள்  எதையும் சாதிக்கவில்லை.  போராட்டத்தின் பின்னடைவுகளுக்கு காரணமான பலவற்றில் நீலனின் கொலையும் ஒன்று. 

ஐநா பொது செயலாளர் பதவிக்குத் தகுதியான ஒருவர் நீலன். 

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
19 minutes ago, Justin said:

இதை ஏன் நம்பக் கஷ்டப் படுகிறீர்கள்😅?

புலிகள் விரும்பிய தீர்வல்லாமல் ஒரு தீர்வுப் பொதியை சந்திரிக்காவுடன் சேர்ந்து நீலன் தயாரிக்க முயன்றார். அவருக்கு மேற்கின் ராஜதந்திர மட்டங்களிலும் மரியாதை இருந்தது (அவர் ஒரு அரசியலமைப்பு நிபுணர் என்பதால்). இது புலிகளைக் கோபப் படுத்தா விட்டால் வேறெது கோபப் படுத்தியிருக்கும் என்கிறீர்கள்? அமிர் இப்படி தானே கோபமூட்டினார்?

அவர் தயாரித்த தீர்வுப் பொதி பற்றி அறியலாமா?

  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Neelan Tiruchelvam’s Absence Felt In The Making Of a New Constitution 

26 January 2019 12:03 am

image_1548440920-d2de9fde5e.jpg

Strove to achieve a peaceful solution to Tamils issue

GL-Neelan package the best scheme of power sharing

An irreparable loss to humanity

75th birth anniversary this week

Advent of CBK opened up fresh space for Constitutional reform

Maintained a fatalistic attitude about death

https://www.dailymirror.lk/amp/dbs-jeyaraj-column/Neelan-Tiruchelvam-s-Absence-Felt-In-The-Making-Of-a-New-Constitution/192-161598I’

வாசிப்புக்காக மட்டுமே 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, Justin said:

இதை ஏன் நம்பக் கஷ்டப் படுகிறீர்கள்😅?

புலிகள் விரும்பிய தீர்வல்லாமல் ஒரு தீர்வுப் பொதியை சந்திரிக்காவுடன் சேர்ந்து நீலன் தயாரிக்க முயன்றார். அவருக்கு மேற்கின் ராஜதந்திர மட்டங்களிலும் மரியாதை இருந்தது (அவர் ஒரு அரசியலமைப்பு நிபுணர் என்பதால்). இது புலிகளைக் கோபப் படுத்தா விட்டால் வேறெது கோபப் படுத்தியிருக்கும் என்கிறீர்கள்? அமிர் இப்படி தானே கோபமூட்டினார்?

தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் எப்படி தமிழர்களின் அபிலாஷைகளை ஓரம் கட்டி அந்த மரியாதையை அவர் தமிழர்களுடன் சேர்ந்தல்லாமல் ஏன் சிங்களத்துக்குமான சேவகமாக செய்ய முனைந்தார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ilankai Tamil Sangam

28th Year on the Web

Association of Tamils of Sri Lanka in the USA

arrow.gifHome
arrow.gifArchives

On the Tightrope Acts of Neelan Thiruchelvam

Eight Critiques 

“…Copious references were made to Neelan being a ‘moderate’, a ‘democrat’, and so on, but surely he was not killed for being any of this? The one writer who came closest to finding the right word to describe the victim in the eyes of the assassin – AND INDEED IN THE EYES OF THE WIDER TAMIL COMMUNITY, was Lakshman Gunasekera (Sunday Observer, August 1). That word was COLLABORATOR.”...

“…Subjectively he might have been convinced to work for the best of his nation and country; objectively he sided with the oppressor in a prominent position and actively supported one side in an armed conflict.”

Front Note by Sachi Sri Kantha

As one would have expected, the Sinhala-owned Colombo news media paid their 8th anniversary tributes to Dr. Neelan Tiruchelvam recently. Among the items I casually glanced at, the Daily Mirror (July 28th) carried a feature authored by Prof. Bertram Bastiampillai, with the caption ‘A Salute to a Great Man: Dr. Neelan Tiruchelvam,’ and a companion piece by Rev. Sydney Knight, entitled ‘Lest We Forget.’ The Mirror's sister publication, the Sunday Times (July 29th) republished a 1999 obituary (titled, ‘Neelan: Why did LTTE kill him?’) written by the Indian pundit Praful Bidwai.

If Colombo’s media moguls think that this kind of soppy sophistry on Neelan’s tightrope acts would make him a paragon of virtue among Tamils, they are sadly mistaken. However enchanting to non-Tamil minds, Neelan Tiruchelvam’s grandiose political exploits during his adventures as a member of the ‘Kitchen Cabinet’ of Madam Chandrika Kumaratunga, can be summed up by a derisive Tamil idiom, ‘Malaiyai kelli eliyai pidiththa kathai’ (i.e., the story of blasting the mountain to grab a rat). After all the huffing and puffing noise of blasting the mountain of Sinhala political hegemony,  in Neelan’s case, what turned out was not a rat - but a gnat!. Neelan Tiruchelvam’s so-called ‘new Constitution-authoring’ façade between 1995 and 1999, turned out to be a damp squib. This malformed, still-born Constitution parented by G.L. Peiris and Neelan Tiruchelvam has been aptly characterized by Prof. John Neelsen in 1999, as follows:

“[S]ince 1995 three different versions, dependent on the situation on the battlefield, have been publicized, none of them official in the sense having been debated and passed by the relevant parliamentary hurdles; and, finally, the government has done nothing either to have a common mandate within the coalition (the Tamil parties in the coalition have reportedly never been consulted, only informed), nor to come to an agreement with the major Opposition - a step absolutely vital in view of the fact that a 2/3rd majority in parliament followed by a referendum of the whole population (!) is required if such constitutional changes are to become law.”

But, being a charmer, Neelan Tiruchelvam had prominent journalist contacts in the international circuit. John Stackhouse, of the Globe and Mail (Toronto) was one such influential hack who spilled the beans about Neelan’s back-door contacts with Madam Chandrika. To quote,

“As a member of President Chandrika Kumaratunga’s ‘kitchen cabinet’, to use his words, he wrote much of the constitution she hopes to present to the nation next month. It stands to radically change Sri Lanka from a unionist to federal state, with an autonomous Tamil region. Neelan believed that it was the best deal the Tamil minority would ever get from Sri Lanka’s Sinhalese majority…He was given official protection – five police officers were injured in his assassination – and extra security at his office, which could be entered only through a garage and up a narrow staircase…” [Globe and Mail, July 30, 1999].

John Stackhouse should have been a super-ignoramus, on affairs relating to Sinhala politics in Colombo. Did he know that once Neelan Tiruchelvam’s bones turned into ashes, President Chandrika Kumaratunga immediately dumped those draft papers as junk? That tells something about Neelan’s much hyped “politically insightful” intellect. Here is an excerpt of a commentary by the ‘political editor’ of a Colombo newspaper, which appeared under the caption, “Package pushed further down” on August 22, 1999.

“The Government's 'package' now seems placed in the back-burner despite the boast before the assassination of Neelan Tiruchelvam that it would be presented to Parliament by August 19. The assassination of the TULF moderate and co-author of the 'package' which comprises constitutional reforms including devolution proposals and the abolition of the Executive Presidency has clearly changed the mood of its advocates, The Sunday Times learns. 

The other co-author, Minister G.L. Peiris met Opposition UNP Leader Ranil Wickremesinghe recently and informed him that the 'package' will have to be approved by the SLFP Central Committee first. This was conveyed to the UNP leader at a dinner hosted by UNP's new Colombo East organiser Milinda Moragoda at his residence a few days ago. The only other guest present was British High Commissioner Linda Duffield. 

Political analysts believe this is clearly a delaying tactic by Prof. Peiris, when considering the fact that it has come hardly a month after a PA leadership meeting announced the proposals would be out by August, and that the LTTE assassinated Dr. Tiruchelvam only a few days later. Hardly two days after Prof. Peiris met the UNP leader at Mr Moragoda's Kirulapone residence, he told a workshop on 'Minority Protection' that the UNP had been given time till September 30 to reach a consensus with the minority parties to support the package. 

It is ironical that Prof. Peiris is pushing the package further down the road, analysts say, when all the minority parties like the TULF, SLMC, CWC and the EPDP are voting with the government. However, government sources said the aim of Prof. Peiris was to get the minority parties to agree to the UNP's position on the reforms package and arrive at some kind of consensual formula...” (Sunday Times, Colombo, August 22, 1999).

https://sangam.org/2007/08/Tightrope.php?uid=2486

3 minutes ago, விசுகு said:

தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் எப்படி தமிழர்களின் அபிலாஷைகளை ஓரம் கட்டி அந்த மரியாதையை அவர் தமிழர்களுடன் சேர்ந்தல்லாமல் ஏன் சிங்களத்துக்குமான சேவகமாக செய்ய முனைந்தார்?

கொலைதான் தீர்வா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Justin said:

என்னுடைய கேள்வி: சுமந்திரன் இளையோரை முன்வர விடாமல் தடுத்தது எப்படி? 

இவ்வளவு நீளமாக எழுதியிருக்கிறீர்கள், இதில் பதில் இருக்கிறதா? அல்லது சும்மா எழுந்தமானமாக சொன்னதை padding செய்திருக்கிறீர்களா?

பதில் உண்டு  விளங்காது விடில்  நான் எதுவும் செய்ய முடியாது  

சுமத்திரன் மட்டுமல்ல எல்லா தலைவர்களும் தான்   இளைஞர்கள் தலைவராக வருவதற்கு தடையாக இருக்கிறார்கள் 

பொதுசபை உறுப்பினர்கள் தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவு செய்கிறார்கள்   ஆனால் இந்த பொதுசபை உறுப்பினர்கள்  சுமந்திரன் மாவை சம்பந்தன்   சிறிதரன்.   போன்ற தலைவர்கள் தெரிவு செய்கிறார்கள்     பிறகு இந்த பொதுசபை உறுப்பினர்கள் தலைவரை தெரிவு செய்கிறார்கள் இந்த பொதுசபை உறுப்பினர்கள் எப்படி வாக்கு அளிப்பார்கள்??? இது சுமத்திரனே மாவையே சம்பந்தனோ சிறிதரன,    ..........யாராக இருந்தாலும் தன்னை தானே தெரிவு செய்வது போல் இல்லையா???  விளங்கியாத.????? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, Kapithan said:

கொலைதான் தீர்வா?

நெல்லைத்தான் சாப்பிட வேண்டுமா? ஏன் புல்லை களையணும்? 

அதுவும் பாவம் என்று குழைத்து சாப்பிட்டால்...?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, விசுகு said:

நெல்லைத்தான் சாப்பிட வேண்டுமா? ஏன் புல்லை களையணும்? 

அதுவும் பாவம் என்று குழைத்து சாப்பிட்டால்...?

கொலைகளை நியாயப்படுத்துகிறீர்களா ? என்று கேட்டால் இல்லை என்பீர்கள். கொலை செய்யப்படுவதும், கொலை செய்வதும் உங்கள் பிள்ளைகள் இல்லையல்லவ?  அதனால் இப்படித்தான் கூறுவீர்கள். 

எத்தனை முள்ளிவாய்க்கால் வந்தாலும் உங்களைப் போன்றவர்கள் நாகரீகம் அடைவதும் இல்லை,  திருந்தப்போவதும் இல்லை. உங்களைப் போன்றவர்கள்தான் எங்கள் இனத்தின் நச்சு வேர்கள். சிறிது சிறிதாக முழு மரத்தையும் அழித்துவிடுவீர்கள். 

😏

  • Downvote 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, Kapithan said:

கொலைதான் தீர்வா?

இல்லை ஒப்பந்தம்களை  தமிழ் தலைவர்கள் மூலம் எழுதுவது ........இந்த தீர்வு காண்கிறோம் என்று விளம்பரங்கள் செய்வது  90 % தமிழர்கள் நம்பி விடுவார்கள்  ஏனெனில் அவர்கள் அறிவு அப்படிப்பட்டது   எழுதியதை. அமுல்படுத்துவதில்லை   கிளிந்து எறிந்து விடுவார்கள்    

கடனுக்கு வெளிநாடுகளில் கையெந்தும்போது   அந்த நாடுகள் உள்நாட்டில் பிரச்சனையைப் பேச்சுவார்த்தை மூலம் திருங்கள். கடன் தரலாம். என்பார்கள் 

இங்கே மீண்டும் ஒப்பந்தம்கள் எழுதுவது  ஆனால் அமுல் படுத்தமாட்டார்கள்  அமுல்படுத்தப்படாத. எந்தவொரு ஒப்பந்தமும். தமிழருக்குக்கான. தீர்வு இல்லை  

தீர்வு என்பது நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.  எழுதுவது தீர்வு இல்லை  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, பகிடி said:

1) தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் இப்பொழுது இருப்பதை விட ஒரு படி ஏனும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்  என்று விரும்புபவர்

13 வருடத்துக்கு மேல் தமிழ் அரசியலில் இருக்கிறார் எத்தனை படி எறி விட்டோம் பதில் சொல்லுங்க ?

21 hours ago, பகிடி said:

2) இப்போதைக்கு அடைய முடியாத தமிழ்க் கனவைக் காண்பவர் அல்லர். 

அது 2௦௦9 எல்லோருக்குமே தெரிந்த ஒன்று சும்முக்கு மட்டும் வேறையா ?பதில் சொல்லுங்க ?

21 hours ago, பகிடி said:

3) லிபரல் கொள்கை கொண்டவர், வலது சாரி மனநிலை இல்லாதவர் ஆகவே one way thinking இல்லாதவர். Critical thinking ability நன்கே உண்டு 

அதைவைத்து எண்ணத்தை தமிழருக்கு பெற்று கொடுத்தார் பதில் சொல்லுங்க ?

21 hours ago, பகிடி said:

4) தமிழனாக உணரும் அதே நேரம் இலங்கையனாகவும் உணர்கின்றார்

சிங்களவருடன் வாழ்வதே தனக்கு பிடித்த ஒன்று அவர் கூறியதை மறந்து கதைக்கிறியல் பதில் சொல்லுங்க ?

21 hours ago, பகிடி said:

5)இந்திய எதிர்ப்பு மனநிலை உள்ளவர்

அப்படியா ? ஏன் இதுவரை இந்தியாவை கண்டிக்க வில்லை ? பதில் சொல்லுங்க ?

21 hours ago, பகிடி said:

6) மேற்குக்கு விசுவாசமானவர்

டொராண்டோவில் இறங்கி தனது கறுப்பு பண முதலீட்டில் உருவாக்கப்பட்ட பிளட்களுக்கு வாடகை பணத்தில் பயணிக்கும் காரில் தானே ஒட்டி செல்லும் அளவுக்கு மேற்கு விசுவாசம் இருக்குது என்பது நமக்கும் தெரியும் .

21 hours ago, பகிடி said:

7) காசுக்காக அவர் அரசியல் செய்யவில்லை

அப்ப வடகிழக்கில் நடக்கும் கஞ்சா பவுடர் கேஸ்களில் ஆஜராகுவது சுமத்திரன் ஆட்கள்தானே ?பதில் சொல்லுங்க ?

22 hours ago, பகிடி said:

😎 சட்டம் தெரிந்து இருப்பதால் உள்குத்து வேலைகளை சட்டப்படி எப்படி செய்வது என்று தெரியும்

அப்படி தெரிந்து தமிழருக்கு என்ன பலன் நீங்களே 10) இவர் செய்த தவறு இனப்படுகொலை விசாரணை விஷயத்தில் இலங்கை அரசு தப்பிக்க உதவியாய் இருந்தது ( அதையும் சட்ட வியாக்கியானம் செய்து தான் தவறு செய்யவில்லை என்று விளங்கப்படுத்தி இருப்பார் இதுதானே தமிழர் அனுபவித்த கதை 

பதில் சொல்லுங்க ?

22 hours ago, பகிடி said:

9) சுமத்திரனின் பலம் தெளிவான அவரின் விளங்கப்படுத்தும் திறமை

நானும் ஈஸ்ட்காமில் ஆண்டு நினைவில் இல்லை சில கேள்விகள் கேட்டேன் வந்த பதில் இத்தனை ஆவது சட்ட புத்தக தொகுதியை படித்து தெளிந்து கொள்ளுங்க என்றார் மேலும் கேள்விகள் கேட்க இந்த கூட்டத்தை  விட்டு பவுன்சர் மூலம் வலுகட்டயாமாக வெளியேற்றபடுவீர்  என்று நேரடியாகவே எனக்கு எச்சரிக்கை செய்தார் .இதுவா அவரின் விளங்கபடுத்தும் திறமை ?  பதில் சொல்லுங்க ?

22 hours ago, பகிடி said:

11) தி மு க அனுதாபி 

இது அவரால் எங்கும் வெளிப்படுத்த படவில்லை யாழ் களத்துள் உள்ளோரை திருப்தி செய்ய உங்களால் உருவாக்கப்பட்ட செய்தி .பதில் சொல்லுங்க ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஈழப்பிரியன் said:

சிங்கள இனவாதிகளின் வேண்டுதலின் பேரிலேயே சுமந்திரனும் சாணக்கியனும் தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டதாகவே பலரின் கருத்தாக உள்ளது.

அப்படி என்றால் இந்த மாபெரும் (?)  தமிழரசு கட்சி சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் இருக்குறது என்று சொல்லுகிறீர்கள். 

23 hours ago, பகிடி said:

நான் சுமத்திரனை மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்து அணுகாமல் சுமத்திரன் தன் வாயால் என்ன தான் சொல்கிறார் என்பதை அவர் அரசியலுக்கு வந்த காலம் முதல் கொடுத்த பத்திரிகை, தொலைக்காட்சிப் பேட்டிகள் மூலம் மட்டுமே அணுகியிருந்தேன். 

காய்தல் உவர்தல் இன்றி நான் கவனித்ததில் என்னைப் பொறுத்த வரையில் சுமந்திரன்

1) தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் இப்பொழுது இருப்பதை விட ஒரு படி ஏனும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்  என்று விரும்புபவர்

2) இப்போதைக்கு அடைய முடியாத தமிழ்க் கனவைக் காண்பவர் அல்லர். 

3) லிபரல் கொள்கை கொண்டவர், வலது சாரி மனநிலை இல்லாதவர் ஆகவே one way thinking இல்லாதவர். Critical thinking ability நன்கே உண்டு 

4) தமிழனாக உணரும் அதே நேரம் இலங்கையனாகவும் உணர்கின்றார்

5)இந்திய எதிர்ப்பு மனநிலை உள்ளவர்

6) மேற்குக்கு விசுவாசமானவர்

7) காசுக்காக அவர் அரசியல் செய்யவில்லை

😎 சட்டம் தெரிந்து இருப்பதால் உள்குத்து வேலைகளை சட்டப்படி எப்படி செய்வது என்று தெரியும்

9) சுமத்திரனின் பலம் தெளிவான அவரின் விளங்கப்படுத்தும் திறமை

10) இவர் செய்த தவறு இனப்படுகொலை விசாரணை விஷயத்தில் இலங்கை அரசு தப்பிக்க உதவியாய் இருந்தது ( அதையும் சட்ட வியாக்கியானம் செய்து தான் தவறு செய்யவில்லை என்று விளங்கப்படுத்தி இருப்பார் 😭😭)

11) தி மு க அனுதாபி 

மிகவும் சரியான கருத்து. அநேகமானோர் அவரைப்பற்றி எதிர்மறையான எண்ணத்தில் இருப்பதால் அவர்களால் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, island said:

நீலன் திருச்செல்வம் உலக்கில்  உள்ள பெரும்பாலான் உயர் ராஜதந்திரிகளால் அறியப்பட்ட அவர்களால் மதிக்கப்பட்ட ஒருவர்.  அவரை கொன்றதன் மூலம் அந்த கொலையாளிகள்  எதையும் சாதிக்கவில்லை.  போராட்டத்தின் பின்னடைவுகளுக்கு காரணமான பலவற்றில் நீலனின் கொலையும் ஒன்று. 

ஐநா பொது செயலாளர் பதவிக்குத் தகுதியான ஒருவர் நீலன். 

செய்யப்படட தவறுகளுடன் இந்த மாபெரும் தவறையும் செய்து விடடார்கள். நல்ல ஒரு நேர்மையான , நீதியான , மற்றவர்களால் மதிக்கப்படட ஒரு தலைவரை கொலை செய்தது மன்னிக்க முடியாத குற்றம். 😭

Edited by Cruso
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, பெருமாள் said:

13 வருடத்துக்கு மேல் தமிழ் அரசியலில் இருக்கிறார் எத்தனை படி எறி விட்டோம் பதில் சொல்லுங்க ?

அதட்கு முதல் எத்தனையோ தசாப்தங்கள் இந்த கட்சியில் இருக்கிறோம். எத்தனை படி ஏறி விட்டொம்? கீழே இறங்கிக்கொண்டிருந்த நாம அந்த இடத்திலே , இன்னும் கிழே போகாமல் இருப்பது நல்லதுதானே?

அது 2௦௦9 எல்லோருக்குமே தெரிந்த ஒன்று சும்முக்கு மட்டும் வேறையா ?பதில் சொல்லுங்க ?

சும் அதட்கு முன்னரும் ஏற்றுக்கொள்ளவில்லை தானே?

அதைவைத்து எண்ணத்தை தமிழருக்கு பெற்று கொடுத்தார் பதில் சொல்லுங்க ?

ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை. அதைத்தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார். எல்லோருக்கும் ஒவ்வொரு கொள்கையிருக்கும். அப்படி என்றால் ஈழம் இப்போதே கிடைத்திருக்க வேண்டுமே?

சிங்களவருடன் வாழ்வதே தனக்கு பிடித்த ஒன்று அவர் கூறியதை மறந்து கதைக்கிறியல் பதில் சொல்லுங்க ?

அதில் என்ன தப்பு? தென் பகுதியில் வாழும் மக்கள் இந்திகாராருடனா வாழ முடியும். எனக்கும் சிங்கள மக்களுடன் வேலை செய்ய , வாழ பிடிக்கும். நீங்கள் அதை  தீர்மானிக்க முடியாது. விக்கியின் பிள்ளைகள் எங்கே   இருக்கிறார்கள்? அதட்காக அவர்கள் சிங்களவர்களாக முடியுமா?

அப்படியா ? ஏன் இதுவரை இந்தியாவை கண்டிக்க வில்லை ? பதில் சொல்லுங்க ?

இந்தியாவுக்கே அது தெரியும். பிறகு எதுக்கு கண்டிப்பான? அதை விளங்க நீங்கள் அரசியல் படிக்கவேண்டும். தலைமைத்துவ தெரிவில் இந்தியா அதை வெளிக்காட்டியதை நீங்கள் அறிந்தாலே பெரிய காரியம். 

டொராண்டோவில் இறங்கி தனது கறுப்பு பண முதலீட்டில் உருவாக்கப்பட்ட பிளட்களுக்கு வாடகை பணத்தில் பயணிக்கும் காரில் தானே ஒட்டி செல்லும் அளவுக்கு மேற்கு விசுவாசம் இருக்குது என்பது நமக்கும் தெரியும் .

இதில் என்ன பிரச்சினை என்று விளங்கவில்லை. தெரிந்தவர்கள் பதில் வழங்குவார்கள். 

அப்ப வடகிழக்கில் நடக்கும் கஞ்சா பவுடர் கேஸ்களில் ஆஜராகுவது சுமத்திரன் ஆட்கள்தானே ?பதில் சொல்லுங்க ?

தொழில் ரீதியாக எவரும் ஆஜராவதில் பிரச்சினையில்லை. அவர்கள் குற்றவாளிகளா , சுற்றவாளிகளா என்பதை நீதி மன்றம் தீர்மானிக்கும். இதை சொல்லுவதட்கு எவருக்குமே தார்மீக உரிமை இல்லை. பயங்கரவாதிகளுக்காக இவர்கள் ஆஜராகின்றார்கள் என்று சிங்களவர்கள் சொல்வதைப்போல இருக்கின்றது. 

அப்படி தெரிந்து தமிழருக்கு என்ன பலன் நீங்களே 10) இவர் செய்த தவறு இனப்படுகொலை விசாரணை விஷயத்தில் இலங்கை அரசு தப்பிக்க உதவியாய் இருந்தது ( அதையும் சட்ட வியாக்கியானம் செய்து தான் தவறு செய்யவில்லை என்று விளங்கப்படுத்தி இருப்பார் இதுதானே தமிழர் அனுபவித்த கதை 

அதன்மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் ஆஜராகி எத்தனையோ வழக்குகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. அது இங்குள்ளவர்களுக்கு தெரியும். எப்படியோ , இப்போது உள் குத்து வெட்டுகளுக்கு சடட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

நானும் ஈஸ்ட்காமில் ஆண்டு நினைவில் இல்லை சில கேள்விகள் கேட்டேன் வந்த பதில் இத்தனை ஆவது சட்ட புத்தக தொகுதியை படித்து தெளிந்து கொள்ளுங்க என்றார் மேலும் கேள்விகள் கேட்க இந்த கூட்டத்தை  விட்டு பவுன்சர் மூலம் வலுகட்டயாமாக வெளியேற்றபடுவீர்  என்று நேரடியாகவே எனக்கு எச்சரிக்கை செய்தார் .இதுவா அவரின் விளங்கபடுத்தும் திறமை ?  பதில் சொல்லுங்க ?

அங்குள்ளவர்களுக்குத்தான் அதன் உண்மை தண்மை தெரியும். 

இது அவரால் எங்கும் வெளிப்படுத்த படவில்லை யாழ் களத்துள் உள்ளோரை திருப்தி செய்ய உங்களால் உருவாக்கப்பட்ட செய்தி .பதில் சொல்லுங்க ?

இந்திய எதிர்ப்பாளர் என்று தெளிவாக முதலில் குறிப்பிட்டுளார். அதன் அர்த்தம் புரிந்தால் உங்களுக்கு விளங்கும். தனியாக குறிப்பிட்டு எங்கும் பேச வேண்டியதில்லை. 

Edited by Cruso
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 16/2/2024 at 02:26, island said:

இப்படியான பிரச்சனைகளில் ஆட்களை போட்ட காலம் முடிந்து இப்ப வழக்கு  போடும் காலம் வந்தது ஒரு முன்னேற்றம் தானே. 😂 

நல்ல முன்னேற்றம் பாருங்கோ. 🤣

On 16/2/2024 at 02:26, island said:

Edited by Cruso
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

நம்பும்படியாக இல்லையே. 

இதற்காகவா புலிகள் கோபமடைந்தார்கள்??

ஒரு தீர்வு வரைபை  வடக்கு கிழக்கு இணைத்து ...எல்லாளன் ஆண்ட பகுதி அனுரதபுரத்தையும். சேர்த்து தருவோம். என்று எழுதலாம்    இப்படி எழுதப்படுவதெல்லாம். தீர்வு இல்லை  எது நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ அது தான் தீர்வு ஆகும்  போராட்டம் வளர்ச்சி பதையில் சென்று கொண்டிருந்த போது  அதை குழப்பி அடிக்க. எழுதப்பட்டதே  நீலனின். போலித் தீர்வு  கடந்த காலங்களில்  இது போன்று   எழுதப்பட்ட ஒப்பந்தம்கள் நடைமுறை படுத்தப்படாமையால்  தான்  ஆயுதத்துடன் புலிகள் இயக்கம் தோன்றியது     அந்த இயக்கத்தை  அழிக்க எழுதப்பட்டது தான்  நீலனின்  வரைபு   தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்குவதற்கு அல்ல என்பது சிறு பிள்ளைகளுக்கும் தெரியும் 

நீலன்  சர்வதேசத்திலும் இலங்கையிலும் செல்வாக்கு உள்ளவராக இருக்கலாம்  ஆனால் தீர்வு ஒருபோதும் பெற்று தந்திருக்கமாட்டார்.  அது எவராலும் முடியாது 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீலன் விஷயத்திலோ அல்லது லக்ஸ்மன் கதிர்காமர் விஷயத்திலோ நான் விடுதலைப் புலிகளை வைய மாட்டேன்.

காரணம் புலிகள் தாம் எடுத்துக்கொண்ட கொள்கைக்கு நேர்மையாய் இருந்தனர் என்ற ஒரே காரணத்தால்த் தான்.

தமிழரின் தாயகம் தமிழ் ஈழத் தாயகம் என்பதில் உறுதியாக அவர்கள் இருந்ததால் அதற்கு குறைந்த எந்த தீர்வையும் முன்மொழியும் அனைவரும் அவர்களுக்கு துரோகிகளே

தன் லட்சியதுக்காக தன்னையும் தன் குடும்பத்தையும் இழந்த தலைவரின் நேர்மை சந்தேகத்துக்கு இடமற்றது

அந்தந்த காலத்துக்கு எற்றால் போல் தான் காரியங்கள் நடைபெறும், அதை அந்த காலப்பொருளில் உள்வாங்கிக் கொள்ளல் வேண்டும்.

இன்று காலம் +நிலைமை வேறு என்பதால் வேறு நிலைப்பட்டுடன் சிந்திக்க வேண்டி உள்ளது 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, பகிடி said:

நன்றி நான் எழுத வேண்டும் என்று வந்ததை அப்படியே எழுதி விட்டிருக்கிறீர்கள்.

தடம் மாறினால் தன்னையே அகற்றும்படி செயற்பட்ட தலைமையின் கீழ் இருந்தவர்கள் நாம். 

தடி இல்லாமல் தமிழர்களை வழி நடாத்த முடியாது என்பது இன்று மேலும் மேலும் உறுதியாகி வருகிறது. நன்றி. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kapithan said:

கொலைகளை நியாயப்படுத்துகிறீர்களா ? என்று கேட்டால் இல்லை என்பீர்கள். கொலை செய்யப்படுவதும், கொலை செய்வதும் உங்கள் பிள்ளைகள் இல்லையல்லவ?  அதனால் இப்படித்தான் கூறுவீர்கள். 

எத்தனை முள்ளிவாய்க்கால் வந்தாலும் உங்களைப் போன்றவர்கள் நாகரீகம் அடைவதும் இல்லை,  திருந்தப்போவதும் இல்லை. உங்களைப் போன்றவர்கள்தான் எங்கள் இனத்தின் நச்சு வேர்கள். சிறிது சிறிதாக முழு மரத்தையும் அழித்துவிடுவீர்கள். 

😏

நன்றி

இதைத் தான் உங்களிடம் எதிர் பார்த்தேன். 

புலிகளுடன் நின்றேன் புலிகளின் அத்தனை செயற்பாடுகளையும் ஆதரித்தவன் அதற்காக செயற்பட்டவன் என்று கூறியபோது இது புரியவில்லை உங்களுக்கு???

காலத்திற்கு ஏற்ப என்னால் மாறமுடியாது அதனால் என் முகம் வேண்டாம் இனி என்று ஒதுங்கி இருக்கிறேன். நீங்கள் உங்கள் புதிய முகங்களுடன் செயற்படுங்கள் அப்படி ஏதாவது செய்கிறீர்களா என்று கேட்டபோது இது புரியவில்லை உங்களுக்கு??

கொலை தான் தீர்வா என்றால் ஆமாம் ஆமாம். எங்கள் அப்பன் என்றாலும்.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பகிடி said:

நீலன் விஷயத்திலோ அல்லது லக்ஸ்மன் கதிர்காமர் விஷயத்திலோ நான் விடுதலைப் புலிகளை வைய மாட்டேன்.

காரணம் புலிகள் தாம் எடுத்துக்கொண்ட கொள்கைக்கு நேர்மையாய் இருந்தனர் என்ற ஒரே காரணத்தால்த் தான்.

தமிழரின் தாயகம் தமிழ் ஈழத் தாயகம் என்பதில் உறுதியாக அவர்கள் இருந்ததால் அதற்கு குறைந்த எந்த தீர்வையும் முன்மொழியும் அனைவரும் அவர்களுக்கு துரோகிகளே

தன் லட்சியதுக்காக தன்னையும் தன் குடும்பத்தையும் இழந்த தலைவரின் நேர்மை சந்தேகத்துக்கு இடமற்றது

அந்தந்த காலத்துக்கு எற்றால் போல் தான் காரியங்கள் நடைபெறும், அதை அந்த காலப்பொருளில் உள்வாங்கிக் கொள்ளல் வேண்டும்.

இன்று காலம் +நிலைமை வேறு என்பதால் வேறு நிலைப்பட்டுடன் சிந்திக்க வேண்டி உள்ளது 

கோத்தபாயவின் ஆதரவாளர்களும் சிங்கள இனவாதிகளும் இதையே கூறினால்  நீங்கள் அந்த காலத்திற்கு ஏற்றாற்போல காரியங்கள் நடந்தன என்று  ஏற்றுக்கொள்ளுவீர்களா?  

Guest
This topic is now closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுபோல இந்த தலைமயிர் வெட்டும் தமிழ் அண்ணையள், கழுத்தை முடக்கி நெட்டி முறிப்பதும் ஆபத்தான வேலை. அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன்…நெட்டி முறித்தவுடன் ஆள் அப்படியே…பரலைஸ்ட் ஆகி படுத்து விடுவார். இதன் பின் வழமையான தமிழ் அண்ணையிடம் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்.  வேண்டாம் என்றபின்னும் பழக்க தோசத்தில் திருப்பி விட்டால் என்ற பயம்தான்.
    • உண்மைதான். முண்நாண் எமக்கு உயிர் போன்றது. வலு சிக்கலான அமைப்பு. விபத்துக்களில் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டாலே… வாழ் நாள் முழுக்க பெரும் அவதியை சந்திக்க வேண்டி வந்து விடும். யாரோ… மசாஜ்சை பற்றி அடிப்படை அறிவு தெரியாதவர்கள்,  “சுளுக்கு” எடுக்கிறன் என்று அந்தப் பெண்ணின் உயிரை எடுத்து விட்டார்கள்.
    • 75 வது வயதை நோக்கி ரஜனிகாந்த் அந்த வயது ஒரு மனிதனின் 100% ஆயுட்காலம்,  99%மான மனிதர்கள் 100 வயதுவரை வாழ்வதில்லை, அதுக்கு பின்னரெல்லாம் பெரும்பாலானோருக்கு சும்மா பெயருக்கு நடமாடி திரியும் மனித உடம்பு. இந்த வயதில் உச்சத்திலிருந்தபடி நூறு கோடிகளில் சம்பளம் வாங்கும் முதலும் கடைசியுமான இந்திய ஹீரோ ரஜனியாகத்தானிருப்பார். இப்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை பார்த்தால் இன்னும் மூன்று வருடம் நடிக்க வாய்ப்பிருக்கு. கமலும் அதே தளத்திலிருந்தாலும், ரஜனியைவிட 4 வயசு இளையவர் இன்னும் 5 வருடத்தின் பின்னர் ரஜனிபடம் போல் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக இருப்பாரோ தெரியவில்லை ஏனென்றால் இப்போதே அந்த நிலையில் அவர் இல்லை. ஸ்டைல் நடிப்பில் ரஜனிதான் ஆரம்பம் என்றில்லை, பழைய படங்களில் ஸ்டைலில் சிவாஜிதான் அனைவருக்கும் முன்னோடி. எங்கள் தங்கராஜா, வசந்தமாளிகை, தங்கப்பதக்கம் போன்ற படங்களில் ஸ்டைலில் பின்னுவார் சிவாஜி. அதுவும் நல்லதொரு குடும்பம் பாடலில் ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு ஒரே பாடலில் அத்தனை ஸ்டைலும் முக பாவம் , நடனத்தில் சிவாஜியைபோல் இன்றுவரை யாரும் காட்டியதில்லையென்றும் சொல்லலாம். அதேபோல்தான் வசந்தமாளிகை ,  இன்னும் சொல்லபோனால்  யாரடி நீமோகினி பாடலில் இருந்தே  சிவாஜியின் நடை ஸ்டைலை ரஜனி கொப்பி அடித்தாரோ என்று எண்ண தோன்றும்.   சினிமா என்பது பொழுது போக்கு , அதை தனியே சீரியசுக்கு பாவிக்க கூடாது என்பதில் ரஜனி தெளிவாக இருந்தார் . தியேட்டருக்கு வந்தால் வயசு வித்தியாசம் இன்றி அனைவரும்  சிரிச்சு விசிலடிச்சு குஷியாகி வீட்டுக்கு போகணும் என்பதை தனது கொள்கையாக வைத்திருக்கிறார் . அதில் அவர்பெற்ற அசைக்க முடியாத வெற்றி இன்றுவரை தொடர்கிறது. ரஜனி ரசிகனை சூடாக்கி சில்லறை பார்க்க தெரிந்த மனிதன்.
    • மசாஜ் செய்ய எவ்வளவு நல்ல பாகங்கள் உடலில் இருக்க….. சும்மா கொண்டுபோய் கழுத்தை ஏன் கொடுப்பான்….🤣 அதுகுள்ளானதான் முண்நாண் எனப்படும் நரம்பு கோர்வையே போறது. ஏங்கோ எசகு பிசகாக அளுத்தி விட்டது போல.  
    • நிச்சயமாக….. அனுர போன்ற ஒரு இனவாதிக்கு கூட, அவர்களால் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் மத்தியில் கூட நேரடி, மறைமுக ஆதரவாளர்கள் இருப்பதை கண்டோமே? ஆனால் எவருக்காகவேனும் உண்மையாக போராடினால் - அவர்களை அந்த மக்களில் பெரும்பாலோனோர் காலத்துக்கும் நினைவில் வைத்திருப்பார்கள். ❤️❤️❤️
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.