Jump to content

அவுஸ்திரேலிய பெற்றோலிய நிறுவனத்தினால் இலங்கையில் 150 எரிபொருள் நிலையங்கள்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
26 FEB, 2024 | 12:33 PM
image
 
யுனைடெட் பெற்ரோலியம் அவுஸ்திரேலியா பிரைவேட் லிமிடெட் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் உள்ளூர் சந்தையில் பெற்றோலிய பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்க்ஷனா ஜயவர்தன மற்றும் யுனைடெட் பெற்ரோலியம் அவுஸ்திரேலியா சார்பாக அதன்  நிறுவனத்தின் உரிமையாளர் என்ற வகையில் எடி ஹேர்ஸ் (Eddie Hirsch) ஆகியோர்  இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான பெற்ரோலிய சில்லறை விற்பனையாளர் மற்றும் இறக்குமதியாளருக்கு இலங்கை முழுவதும் 150 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, மேலும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/177317

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நாடுகளும் பெற்றோல் நிலயம் திறக்க வாகனம் இருக்குமோ...காசு இருக்குமோ...அதைவிட ஆட்கள்  இருப்பினமோ ..என்பதுதான் புரியவில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

எல்லா நாடுகளும் பெற்றோல் நிலயம் திறக்க வாகனம் இருக்குமோ...காசு இருக்குமோ...அதைவிட ஆட்கள்  இருப்பினமோ ..என்பதுதான் புரியவில்லை..

நாடு வங்குரோத்து , பணமில்லை என்று சொல்லலாம். ஆனால் கடைகளிலோ, விடுதிகளிலோ , இன்னும் கலியட்ட்ங்களிலோ இலங்கையில் குறைவில்லை. வாகனங்களுக்கும் இங்கு குறைவில்லை. இறக்குமதிக்கு அனுமதித்தால் நூற்றுக்கணக்கில் வாங்குவதட்கும் தயாராக இருக்கிறார்கள்.

பொதுவாக இரவில் வாகனங்களை நிறுத்துவதட்கு கொழும்பை அண்டிய பகுதிகளில் இடமிருக்காது. எனவே அத்தனை எரிபொருள் நிரப்பு நிலையம் வந்தாலும் வியாபாரம் இருக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2024 at 19:18, alvayan said:

எல்லா நாடுகளும் பெற்றோல் நிலயம் திறக்க வாகனம் இருக்குமோ...காசு இருக்குமோ...அதைவிட ஆட்கள்  இருப்பினமோ ..என்பதுதான் புரியவில்லை..

On 27/2/2024 at 02:31, Cruso said:

பொதுவாக இரவில் வாகனங்களை நிறுத்துவதட்கு கொழும்பை அண்டிய பகுதிகளில் இடமிருக்காது. எனவே அத்தனை எரிபொருள் நிரப்பு நிலையம் வந்தாலும் வியாபாரம் இருக்குது. 

spacer.png

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு SINOPEC  என்று பெயரை மாற்றியது போல் இங்கு செய்துவிட்டால் பொருளாதாரம் உயர்ந்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2024 at 01:31, Cruso said:

இலங்கையில் குறைவில்லை. வாகனங்களுக்கும் இங்கு குறைவில்லை. இறக்குமதிக்கு அனுமதித்தால் நூற்றுக்கணக்கில் வாங்குவதட்கும் தயாராக இருக்கிறார்கள்.

ஓவரா குதிக்ககாதிங்க முடிந்தால் ஒரு இரண்டு கிழமைக்கு வாகன இறக்குமதி தடையை சிங்கள அரசியல்வாதிகள் எடுக்கட்டும் பார்க்கலாம் அதன் பின் சிம்பாவே நாட்டு பணம் போல் சொறி லங்கன் ரூபாயை மாட்டு வண்டிலில் தான் கொண்டு திரிய வேண்டி வரும் . வரும் வரத்தான் போகுது அப்போது வேறு பெயரில் நீங்கள் வராமல் இருந்தால் சரி .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.வரும் வரத்தான் போகுது அப்போது வேறு பெயரில் நீங்கள் வராமல் இருந்தால் சரி .

ஆமா ..இது எங்கையோ உதைக்குதே....அப்ப நான் நினைத்தது சரிதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

ஓவரா குதிக்ககாதிங்க முடிந்தால் ஒரு இரண்டு கிழமைக்கு வாகன இறக்குமதி தடையை சிங்கள அரசியல்வாதிகள் எடுக்கட்டும் பார்க்கலாம் அதன் பின் சிம்பாவே நாட்டு பணம் போல் சொறி லங்கன் ரூபாயை மாட்டு வண்டிலில் தான் கொண்டு திரிய வேண்டி வரும் . வரும் வரத்தான் போகுது அப்போது வேறு பெயரில் நீங்கள் வராமல் இருந்தால் சரி .

கடன்களை திரும்ப அடைக்க வெளிக்கிட்டாலும் இந்த நிலமை வரலாம்.

தேர்தல்வரை அமுக்கி வைத்திருப்பார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2024 at 05:18, alvayan said:

எல்லா நாடுகளும் பெற்றோல் நிலயம் திறக்க வாகனம் இருக்குமோ...காசு இருக்குமோ...அதைவிட ஆட்கள்  இருப்பினமோ ..என்பதுதான் புரியவில்லை..

கடன் வாங்கி கல்யாணம்....

மததள விமான நிலையத்தின் நிலை தெரியும் தானே....பெறறொல் நிலையம் திறக்கப்படும் பிறகு பெற்றோல் இருக்காது ......நிலையம் இருக்கும்...ஆடு மாடுகளுக்கு பெற்றோல் விடுவினம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

கடன்களை திரும்ப அடைக்க வெளிக்கிட்டாலும் இந்த நிலமை வரலாம்.

தேர்தல்வரை அமுக்கி வைத்திருப்பார்கள்.

எந்தப்பக்கம் நகர்ந்தாலும் அடி வாங்க வேண்டி வரும் .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

ஓவரா குதிக்ககாதிங்க முடிந்தால் ஒரு இரண்டு கிழமைக்கு வாகன இறக்குமதி தடையை சிங்கள அரசியல்வாதிகள் எடுக்கட்டும் பார்க்கலாம் அதன் பின் சிம்பாவே நாட்டு பணம் போல் சொறி லங்கன் ரூபாயை மாட்டு வண்டிலில் தான் கொண்டு திரிய வேண்டி வரும் . வரும் வரத்தான் போகுது அப்போது வேறு பெயரில் நீங்கள் வராமல் இருந்தால் சரி .

இதில என்ன குதிக்க இருக்குது. நாட்டில் நடப்பதை எழுதினால் உங்களுக்கு குதிக்கிற மாதிரி இருக்குதோ. நீங்கள் எதோ டாலர்ல உழைக்கிறதால பெரிதாக குதிக்காதீங்கோ.

நாங்களும் டாலரில்தான் பணம் வைத்திருக்கிறோம். இலங்கையில் இருந்தாலும் நாங்களும் எல்லாவற்றையும் அவதானித்து கொண்டுதான் இருக்கிறோம்.

எப்படி இருந்தாலும் பிறந்த நாடடையும் , மண்ணையும் விட்டு ஓட மாட்டொம். நாங்கள் ஒன்றும் கோழைகள் இல்லை. ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் இலங்கையர்கள்  என்பதில் பெருமையடைகிறோம். 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.