Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

“பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்” : நெல்லையில் ஸ்டாலின் பிரச்சாரம்!

KaviMar 25, 2024 21:44PM
1221191.jpg

பாஜகவிற்கு வாக்களிப்பது அவமானம், எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம் என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கடந்த 22 ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இன்று(மார்ச் 25) மாலை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர்களான நெல்லை ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில்  போட்டியிடும் தாரகை ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரு தாய் மக்களாக வாழும் இந்தியாவை வெறுப்பு விதைகளை தூவி, நாசம் செய்து விடுவார்கள்.

தேர்தல் வந்துவிட்டது என அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர், வெள்ளம் வந்தபோது எங்கிருந்தார்?

தென் மாவட்டத்தையும் வட மாவட்டத்தையும் மழை வெள்ளம் பாதித்த போது ஒரு பைசாவாவது கொடுத்தீர்களா?. ஓட்டு கேட்டு வந்தபோது கூட மக்களுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

வெள்ள பாதிப்புக்கு 37 ஆயிரம் கோடி கேட்டோம். ஆனால் தரவில்லை. நாம் உரிமையோடு கேட்பதை தர மறுக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் போகிறோம்.

ஆளுநர் எப்படி மூக்கு அறுபட்டு, வெட்கம் இல்லாமல் இன்னும் அந்தப் பதவியில் உட்கார்ந்து இருக்கிறார்?

பாஜக நிதியையும் தராமல் நமது மக்களை ஏளனமாக பேசுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியை தரமாட்டாராம். ஆனால் மாநில அரசு நிவாரண தொகையை வழங்கினால் அதை பிச்சை என்று  ஏளனம் செய்வாராம்.

மக்களுக்காக அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அது மக்களுடைய பணம். மக்கள் கஷ்டப்படும் போது அவர்களுக்கு உதவுவது தான் அரசின் கடமை.

மக்களை அவமதித்த போதே உங்களுடைய தோல்வி உறுதியாகிவிட்டது. ஆட்சியும் பதவியும் இருப்பதால் பாஜகவினர் ஆணவத்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?

ஒரு ஒன்றிய அமைச்சர் தமிழர்களை பிச்சைக்காரர் என்கிறார், இன்னொரு ஒன்றிய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதி என்று குற்றம் சாட்டுகிறார்.

தமிழக மக்கள் மீது உங்களுக்கு ஏன் இத்தனை கோபம், வெறுப்பு. மக்களிடையே வெறுப்பை விதைத்து பிளவை உண்டாக்கி அதில் குளிர் காய நினைக்கும் பாஜகவின் எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது.

பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்துக் கூற வேண்டும். பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்கின்ற துரோகம் என்று புரிய வைக்க வேண்டும்.

தமிழகத்துக்காக பிரதமர் மோடி கொண்டு வந்த சிறப்பு திட்டங்கள் என்ன? அவரால் பதில் சொல்ல முடியுமா?

தமிழகத்துக்காக ஒரு சிறப்பு திட்டத்தை கூட செய்யாமல் பத்தாண்டு காலம் நீங்கள் என்ன சாதனை செய்தீர்கள்?

நாங்கள் வரிப்பணம் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் திரும்பி வருகிறது.

இதைக் கேட்டாலும் உங்களிடம் பதில் இல்லை. இதற்கும் வாயால் தான் வடை சுடுவீர்களா?

தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களை உங்களை போல் வெறுத்த, வஞ்சித்த பிரதமர் இதுவரை கிடையாது.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது? பிறகு எப்படி தமிழ்நாட்டு மக்கள் நம்புவார்கள்?” என்று கடுமையாக விமர்சித்தார் ஸ்டாலின்.

மேலும் அவர்,  “நேருவை என்ன சொல்லி திட்டலாம், சோனியா காந்தியை எப்படி வசைபாடலாம், ராகுல் காந்தியை பார்த்து பயப்படாதது போல் எப்படி நடிக்கலாம்? தேர்தல் பத்திர ஊழலை எப்படி திசை திருப்பலாம் என மோடி யோசித்துக்கொண்டிருக்கிறார்” எனவும் குறிப்பிட்டார்.
 

https://minnambalam.com/political-news/its-a-shame-to-vote-for-bjp-stalin-campaign-for-kumari-nellai-candidates/

  • Replies 437
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வைரவன்

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

ரசோதரன்

Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

நிழலி

மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்” : நெல்லையில் ஸ்டாலின் பிரச்சாரம்

திமுகவுக்கு  வாக்கு அளித்தால்  வெகுமானம்

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதிமுகவும் பாஜகவும் பிரிந்து போட்டியிடுவதால் யாருக்கு லாபம்?

எடப்பாடி

பட மூலாதாரம்,GETTY IMAGES/ANNAMALAI FACEBOOK

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 26 மார்ச் 2024, 02:27 GMT

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நா.த.க. என பல முனைப் போட்டி ஏற்பட்டிருக்கும் நிலையில் போட்டி தீவிரமடைந்திருக்கிறது.

தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க., தே.மு.தி.க, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

பா.ஜ.க. கூட்டணியைப் பொறுத்தவரை, பா.ஜ.க., பா.ம.க., டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஓ. பன்னீர்செல்வத்தின் அணி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஓ. பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு தெரியாததால், பா.ஜ.க. கூட்டணியை முடிவுசெய்வது இழுத்துக்கொண்டே போனது.

நாம் தமிழர் கட்சி 40 இடங்களிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

எல்லா கட்சிகளுமே தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, பரப்புரையில் இறங்கிவிட்டன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் மயிலாடுதுறை தொகுதிக்கு வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை.

 
உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,UDHAYANIDHI STALIN FACEBOOK

இந்தியத் தேர்தல் வரலாற்றில் பலமுனைப் போட்டிகள்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் இதுபோல பலமுனைப் போட்டி நிலவுவது ஒன்றும் புதிதல்ல. 1951ல் நடந்த பொதுத் தேர்தலில் துவங்கி, 1991 வரையிலான தேர்தல்களில் 1962, 1967ஆம் ஆண்டு தேர்தல் தவிர்த்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலுமே இரு முனைப் போட்டிதான் நிலவியது. 1962, 1967 ஆகிய தேர்தல்களில் மட்டும் காங்கிரஸ் - தி.மு.க. - இடதுசாரிகள் என மும்முனைப் போட்டி நிலவியது.

ஆனால், 1991க்குப் பிறகு தமிழ்நாட்டில் கட்சிகள் உடைந்ததால், புதிய கட்சிகள் துவங்கப்படுவதால் காட்சிகள் மாறின. ஆகவே, 1996ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் பலமுனைப் போட்டிதான் நடைபெற்று வருகிறது.

1996ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, ம.தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி, பா.ம.க. - திவாரி காங்கிரஸ் கூட்டணி என நான்கு முனைப் போட்டி நிலவியது. 1998, 1999, 2004, 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் மும்முனைப் போட்டி நிலவியது.

ஆனால், 2014ல் தேசிய கட்சிகளுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஏற்படாமல் போன நிலையில், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. - தே.மு.திக. கூட்டணி, காங்கிரஸ், இடதுசாரிக் கூட்டணி என ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டது.

அதேபோல, 2019ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. உடைந்ததோடு, நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம் என புதிய கட்சிகளும் களத்தில் இறங்கியதால், அ.தி.மு.க., தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் என ஐந்து முனை போட்டி நிலவியது.

இப்போது, கடந்த தேர்தலில் தனியாக நின்ற கட்சிகள் கூட்டணியில் ஐக்கியமாகியிருப்பதால், மீண்டும் நான்கு முனைப் போட்டிக்கு திரும்பியிருக்கிறது தேர்தல்களம்.

ஆனால், தேர்தல் ஆய்வாளர்களைப் பொறுத்தவரை ஒரு கட்சியையோ, அணியையோ ஒரு முனையாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட அளவு வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"அந்த மூன்றாவது கட்சியோ அல்லது அணியோ கடந்த தேர்தலில் ஆறில் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது, ஒரு வேட்பாளர் தனது டெபாசிட்டைத் திரும்பப் பெற, பெற்றிருக்க வேண்டிய வாக்கு சதவீதமான சுமார் 16.6 சதவீத வாக்குகளைப் பெறும் கட்சியோ, அணியோதான் ஒரு முனையாக இருக்க முடியும். அப்படிப் பார்த்தால், பெரும்பாலான தேர்தல்களில் தமிழ்நாட்டில் இரு முனைப் போட்டியே நிலவியிருக்கிறது" என்கிறார் ஷ்யாம்.

 
பல முனைப் போட்டியில் தமிழக தேர்தல் களம்
படக்குறிப்பு,

மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

எந்தெந்த தொகுதிகளில் மும்முனைப் போட்டி

கடந்த தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்தால், இந்தத் தேர்தலிலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அணிகள் மட்டுமே அந்த அளவுக்கு வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்தன.

ஆகவே, இந்த முறையும் இருமுனைப் போட்டி என்றுதான் சொல்ல வேண்டும் என்றாலும், சில தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணியின் முக்கியமான வேட்பாளர்கள் களத்தில் இறங்கியிருப்பதால், அந்தத் தொகுதிகள் மட்டும் மூன்று முனைப் போட்டியைச் சந்திப்பதாகச் சொல்லலாம்.

மிகச் சில இடங்களில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள், கட்சியின் பொதுவான வாக்கு சதவீதத்தைவிட கூடுதல் வாக்கு சதவீதத்தைப் பெறக்கூடும்.

ஒரு இடத்தில் மூன்று முனைப் போட்டி நிலவும்போது, அந்தத் தொகுதியில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் வாக்குகள் பிரிந்து, அந்தத் தொகுதியில் வெற்றிபெறும் வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவானதாகவே இருக்கும்.

கடந்த ஆண்டு தேர்தலில் தேனி தொகுதிதான் மிகக் கடுமையான மும்முனைப் போட்டியை சந்தித்தது. தி.மு.க. கூட்டணியின் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் அ.தி.மு.க. கூட்டணியில் ஓ.பி.எஸ். ரவீந்திரநாத்தும் அ.ம.மு.கவின் சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டனர்.

இதில் ரவீந்திரநாத் 5,04,813 வாக்குகளைப் பெற்றார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 4,28,120 வாக்குகளையும் தங்க தமிழ்ச்செல்வன் 1,44,050 வாக்குகளையும் பெற்றனர். ரவீந்திரநாத் 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றிபெற்றார்.

(வேறு சில தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தாலும், அவை தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி கடுமையாக இருந்ததால் அம்மாதிரி நிலை ஏற்பட்டது. உதாரணமாக சிதம்பரம், வேலூர் தொகுதிகளில் அதுபோன்ற நிலை ஏற்பட்டது)

 

இந்த முறை பின்வரும் 11 தொகுதிகள் மூன்று முனை போட்டியை எதிர்கொள்வதாகச் சொல்லலாம்:

1. தென் சென்னைத் தொகுதி (தி.மு.க. சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க. சார்பில் ஜெ.ஜெயவர்தன், பா.ஜ.க. சார்பில் தமிழிசை சௌந்தர்ராஜன்),

2. வேலூர் தொகுதி (தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் எஸ். பசுபதி, பா.ஜ.க.கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம்),

3. தர்மபுரி தொகுதி (அ.தி.மு.க., தி.மு.க., வேட்பாளர்கள் தவிர, பா.ஜ.க. கூட்டணி சார்பில் சௌமியா அன்புமணி),

4. நீலகிரி தொகுதி (தி.மு.க. சார்பில் ஆ. ராசா, அ.தி.மு.க. சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. சார்பில் மத்திய இணையமைச்சர் எல். முருகன்),

5. கோயம்புத்தூர் தொகுதி (தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை),

6. பெரம்பலூர் தொகுதி (தி.மு.க. சார்பில் அருண் நேரு, அ.தி.மு.க. சார்பில் என்.டி. சந்திரமோகன், பா.ஜ.க. கூட்டணி சார்பில் பாரி வேந்தர்),

7. தேனி தொகுதி (தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க. சார்பில் வி.டி. நாராயணசாமி, பா.ஜ.க. கூட்டணி சார்பில் டிடிவி தினகரன்),

8. விருதுநகர் (தி.மு.க. கூட்டணியில் சார்பில் காங்கிரசின் மாணிக்கம் தாகூர், அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் தே.மு.தி.கவின் விஜய பிரபாகரன், பா.ஜ.க. கூட்டணி சார்பில் ராதிகா சரத்குமார்),

9. ராமநாதபுரம் (தி.மு.க. கூட்டணி சார்பில் முஸ்லீம் லீகின் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள், பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஓ. பன்னீர்செல்வம்),

10. திருநெல்வேலி (காங்கிரசின் சார்பில் சி. ராபர்ட் ப்ரூஸ், அ.தி.மு.க. சார்பில் எம். ஜான்சிராணி, பா.ஜ.க. கூட்டணி சார்பில் நயினார் நாகேந்திரன்),

11. கன்னியாகுமாரி (காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த், அ.தி.மு.க. சார்பில் நாசரேத் பசிலியான், பா.ஜ.க. கூட்டணி சார்பில் பொன். ராதாகிருஷ்ணன்).

பல முனைப் போட்டியில் தமிழக தேர்தல் களம்
படக்குறிப்பு,

தென் சென்னை, வேலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, பெரம்பலூர் ஆகிய தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுவதாகச் சொல்லலாம்.

இந்த 11 தொகுதிகளிலும் தென் சென்னை, வேலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, பெரம்பலூர் ஆகிய தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுவதாகச் சொல்லலாம்.

பா.ஜ.கவின் முக்கியத் தலைவர்கள் போட்டியிடுவது, பா.ஜ.கவுக்கு அடிப்படையிலேயே செல்வாக்குமிக்க தொகுதியாக இருப்பது போன்ற காரணங்களால் இந்தத் தொகுதிகள் மும்முனைப் போட்டியை எதிர்கொள்கின்றன.

மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் பேசுகையில், "அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் எல்லாத் தொகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதம் உண்டு. இதைத் தாண்டி மற்றொரு கட்சியின் வேட்பாளர் வெற்றிபெற வேண்டுமென்றால் நன்கு அறியப்பட்டவர்களாக, தொகுதிக்குள் தொடர்ந்து பணியாற்றியவர்களாக இருக்கவேண்டும்.

அவர்களுக்கு எதிரான அம்சங்கள் ஏதும் அந்தத் தொகுதியில் இருக்கக்கூடாது. அப்படிப் பார்க்கும்போது நயினார் நாகேந்திரன், டி.டி.வி. தினகரன், ஏ.சி. சண்முகம், பாரிவேந்தர், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மூன்றாவது முனையில் கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அவரவர் தொகுதியில் செல்வாக்கைப் பெற்றவர்கள்.

நீலகிரியில் நிற்கும் எல். முருகனும் கோயம்புத்தூரில் நிற்கும் கே. அண்ணாமலையும் நட்சத்திர வேட்பாளர்களாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு சாதகமல்லாத அம்சங்கள் அந்தத் தொகுதிகளில் உண்டு. நீலகிரி தொகுதியில் உள்ள மலையக மக்களின் வாக்குகளை எல். முருகனால் பெற முடியுமா என்பது சந்தேகம்தான்.

அதேபோல, கோயம்புத்தூரில் அ.தி.மு.கவுக்கும் தி.மு.வுக்கும் உள்ள கட்சிக் கட்டமைப்பைத் தாண்டி அடிமட்டத்தில் பா.ஜ.கவால் பணியாற்ற முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்.

தவிர, இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தவிர, நாம் தமிழரும் களத்தில் நிற்கிறது. இரு திராவிடக் கட்சிகளையும் பிடிக்காதவர்கள் நாம் தமிழருக்குப் வாக்களிப்பார்களா, பா.ஜ.கவுக்கு வாக்களிப்பார்களா என்பது முக்கியமான கேள்வியாக இருக்கும்" என்றார்.

இம்மாதிரியான மும்முனைப் போட்டிகளில் வெற்றிவாய்ப்பு யாருக்கு?

"பொதுவாகத் தேர்தல் முடிவுகளை யாரும் கணிக்க முடியாது. இருந்தபோதும், பல முனைப் போட்டி இருக்கும்போது, அ.தி.மு.க., தி.மு.கவின் அடிப்படையான வாக்கு வங்கி அவர்களுக்குச் சென்றுவிடும். மீதமுள்ள வாக்குகளை மற்ற கட்சிகள் எல்லாம் பிரித்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், இதையெல்லாம் தாண்டி கட்சிகளின் பிரச்சாரம், மக்களிடையே உள்ள அதிருப்தி ஆகியவையும் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்" என்கிறார் ஷ்யாம்.

https://www.bbc.com/tamil/articles/c4nd77kwnnko

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சோதனையின் உச்சம். ராமநாதபுரத்தில் 5 "ஓபிஎஸ்"கள் போட்டி. 
 
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் நிலையில் அவருக்கு போட்டியாக அதே பெயரில் அதே இனிஷியலில் இதுவரை 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாமக, பாஜக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் என 400- க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் பாஜக சார்பில் சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக உரிமை மீட்பு குழு தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அது போல் அன்றைய தினமே உசிலம்பட்டி தாலுக்கா மேக்கிலார்பட்டியை சேர்ந்த ஓச்சப்பன் மகன் பன்னீர் செல்வம் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது ஓபிஎஸ்ஸுக்கு சிக்கலை ஏற்படுத்தும் நிலை உள்ளது. நேற்று வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளரும் சுயேச்சை என்பதால் சின்னங்கள் ஒதுக்கீடு என்பது வேட்புமனு ஏற்கும் நாளன்றுதான் தெரியவரும். இருவரும் சுயேச்சைகள் என்பதால் சின்னத்தை எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் ஓபிஎஸ்.இந்த நிலையில் ஓபிஎஸ் என்ற ஒரே பெயர் இனிஷியலில் மேலும் 3 பேர் இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனராம். இன்று மட்டும் மதுரையை சேர்ந்த 3 பேர் ஓ. பன்னீர் செல்வம் என்ற பெயரில் வேட்புமனு செய்துள்ளனராம். அதில் ஒருவர் தெற்காட்டூர் கிராமத்தை சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர் செல்வம். எனவே தற்போது களத்தில் 5 ஓபிஎஸ்கள் உள்ளனர். 

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணிக்கு சென்றார் ஓபிஎஸ், அப்போது அவர்களிடம் இரு தொகுதிகளை கேட்ட நிலையில் தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு மறுத்தார். 2 தொகுதிகள் வேண்டுமானால் தாமரை சின்னம், சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியென்றால் ஒரு தொகுதிதான் என பாஜக கூறிவிட்டதாம். இதனால் ஓபிஎஸ் தனி சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளராம். இதற்காக ராமநாதபுரத்தை அவர் தேர்வு செய்துள்ளார். எடப்பாடி தலைமையிலான அதிமுக இந்த தேர்தலில் வெல்லாது என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எப்படியாவது தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என ஓபிஎஸ் போட்டியிடுகிறார். ஆனால் அவருக்கு சோதனையாக மேலும் 4 பேர் அதே பெயர் இனிஷியல் கொண்டவர்கள் களத்தில் இருக்கிறார்கள். இதனால் ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கெனவே பதவி போய், கட்சி போய், பல முறை நீதிமன்றங்களுக்கு சென்றும் ஒரு பயனும் அளிக்காத நிலையில் இது போன்ற ஒரு சிக்கலால் ஓபிஎஸ் வேதனையில் இருக்கிறாராம். ஒரு வேளை ஓபிஎஸ்ஸை எப்படியாவது தோற்கடிக்க அதிமுகவினர் யாராவது ஓபிஎஸ் என்ற பெயர் கொண்டவர்களை தேடி தேடி பிடித்து அனுப்புகிறார்களா, இல்லை இது பாஜக வேலையா என்றெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றன. நாளை வேட்புமனு தாக்கல் முடிவடைவதற்குள் இன்னும் எத்தனை ஓபிஎஸ் வருவார்களோ தெரியவில்லை.

Read more at: https://tamil.oneindia.com/news/ramanathapuram/there-are-5-members-who-have-same-name-and-initials-o-paneer-selvam-files-nomination-in-ramanathapur-593821.html

 

Edited by ரசோதரன்
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, ரசோதரன் said:

சோதனையின் உச்சம். ராமநாதபுரத்தில் 5 "ஓபிஎஸ்"கள் போட்டி. 
 

Read more at: https://tamil.oneindia.com/news/ramanathapuram/there-are-5-members-who-have-same-name-and-initials-o-paneer-selvam-files-nomination-in-ramanathapur-593821.html

 

😂ட்ரம்பின் சிவப்புக் கட்சியிடமிருந்து இவர்கள் கற்றார்களா அல்லது இவர்களிடமிருந்து ட்ரம்ப் அணி கற்றதா எனத் தெரியவில்லை.

2020 பொதுத் தேர்தலின் போது புளோரிடாவில் கார்சியா (Garcia) என்ற பரவலாக காணப்படும் ஸ்பானிய பெயரை வைத்து, ஒரு நீலக் கட்சி வேட்பாளரின் வாக்குகளை திசைமாற்றினார்கள். ஒரிஜினல் வேட்பாளரின் பெயரை ஒத்த பெயரில், யாரென்றே தெரியாத டசின் கார்சியாக்களை  ட்ரம்ப் அணி களத்தில் இறக்கி, வாக்காளர்களைக் குழப்ப முயன்றதை ஊடகங்கள் கண்டறிந்து வெளிப்படுத்தின.

Posted
20 hours ago, ரசோதரன் said:

 நேற்று முகூர்த்த நாள் என்பதால் திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாமக, பாஜக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் என 400- க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

 

ஆனால் தாம் பெரியாரின் வழிவந்த பகுத்தறிவு கொள்கையை கைக்கொள்கின்றவர்கள் என்பர்!

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
51 minutes ago, Justin said:

😂ட்ரம்பின் சிவப்புக் கட்சியிடமிருந்து இவர்கள் கற்றார்களா அல்லது இவர்களிடமிருந்து ட்ரம்ப் அணி கற்றதா எனத் தெரியவில்லை.

2020 பொதுத் தேர்தலின் போது புளோரிடாவில் கார்சியா (Garcia) என்ற பரவலாக காணப்படும் ஸ்பானிய பெயரை வைத்து, ஒரு நீலக் கட்சி வேட்பாளரின் வாக்குகளை திசைமாற்றினார்கள். ஒரிஜினல் வேட்பாளரின் பெயரை ஒத்த பெயரில், யாரென்றே தெரியாத டசின் கார்சியாக்களை  ட்ரம்ப் அணி களத்தில் இறக்கி, வாக்காளர்களைக் குழப்ப முயன்றதை ஊடகங்கள் கண்டறிந்து வெளிப்படுத்தின.

😀......

சும்மா தனிய விட்டாலே ஓபிஎஸ்ஸிற்கு பெரிதாக எதுவும் கிடைக்காது.....

மற்ற நான்கு ஆட்களுக்கும் தமிழில் 'ஒ' என்ற குறிலும், ஓபிஎஸ்ஸிற்கு 'ஓ' என்ற நெடிலும் என்று நேற்று நியூஸ் 18 இல் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர்...........ஆங்கிலத்தால் தான் பிரச்சனையே......🤣

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேனி: தினகரன் - தங்கதமிழ்செல்வன் உக்கிர போட்டிக்கு நடுவே அதிமுக என்ன செய்கிறது?

தேனி - நாடாளுமன்ற தேர்தல்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 27 மார்ச் 2024

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை தேனி நாடாளுமன்ற தொகுதி அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளுள் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அங்கே போட்டியிடுவதே.

அவரை எதிர்த்து இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இவர் கடந்த தேர்தலில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டு மூன்றாமிடம் பிடித்தவர்.

தேனி மக்களவைத் தொகுதி எம்.ஜி.ஆர் காலம் முதலே அதிமுகவுக்கு சாதகமாக இருந்து வருகிறது. ஆனால் அந்த தொகுதியில் இம்முறை அமமுக, திமுக இடையேயான போட்டியாக பார்க்கப்படுவதன் பின்னணி என்ன? தேனி தொகுதியில் அதிமுகவின் நிலைமை என்ன? திமுக - அமமுக உக்கிர போட்டிக்கு நடுவே அதிமுக என்ன செய்கிறது?நாடாளுமன்றத் தேர்தல் தேனி மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதை அறிய தேனிக்கு நேரடியாக சென்றது பிபிசி தமிழ்.

தேனி தொகுதியில் பலமான கட்சி எது?

தேனி தொகுதி அமமுக அதிமுக திமுக டிடிவி தினகரன்

தேனி நாடாளுமன்ற தொகுதி, முன்பு பெரியகுளம் மக்களவைத் தொகுதியாக இருந்தது. அப்போது அதில் பெரியகுளம்,தேனி, போடிநாயக்கனூர்,கம்பம், ஆண்டிபட்டி, சேடபட்டி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.

இதி்ல் 1952 முதல் 2008-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 14 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் சரிபாதியாக அதாவது 7 முறை அதிமுக கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 4 முறையும், திமுக, சுதந்திர கட்சி, சுயேட்சை தலா ஒரு முறையும் வெற்றியை தன் வசப்படுத்தியிருக்கிறது.

பின்னர் 2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு தேனி நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது.

அப்போது பெரியகுளம், கம்பம், போடி, ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிகள், மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகள் தேனி தொகுதியுடன் இணைக்கப்பட்டன. அதன் பிறகு 2009, 2014, 2019 ஆகிய மூன்று முறை நடைபெற்றத் தேர்தலில் அதிமுக இரண்டு முறை, காங்கிரஸ் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.

தேனி தொகுதி அமமுக அதிமுக திமுக டிடிவி தினகரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2019ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் தேனியைத் தவிர திமுக கூட்டணி 38 தொகுதிகளை கைப்பற்றியது. தேனி்யில் அதிமுக வெற்றது.

இதில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி,கேஸ் இளங்கோவனை 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன் 1,44,050 வாக்குகளைப் பெற்றார். அதிமுக பணத்தை வாரி வழங்கி வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

தேனி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து முன்னாள் அதிமுக முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

திமுக - அமமுக உக்கிர போட்டி

தேனி தொகுதி அமமுக அதிமுக திமுக டிடிவி தினகரன்

தேனி மக்களவை தொகுதி இம்முறை கவனம் பெற முக்கிய காரணம் பாஜக கூட்டணியின் சார்பில் அங்கு களமிறங்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

இவரை எதிர்த்து இந்தியா கூட்டணியி்ல் திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். இவர் கடந்த முறை அமமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் சந்தித்து மூன்றாமிடம் பிடித்தார்.

2019 தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரன் மீது ஏற்பட்ட அதிருப்தியால் அக்கட்சியில் இருந்து விலகிய தங்க தமிழ்செல்வன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு தேனி மாவட்டத்தின் வடக்கு மாவட்ட செயலாளராக தற்போது உள்ளார்.

டிடிவி தினகரன், கடந்த 1999-ல் பெரியகுளம் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு அடுத்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 2009-ல் அதிமுக, 2019-ல் அமமுக என இருமுறை களம் கண்டு தோல்வியை சந்தித்துள்ளார். ஆனாலும் தங்க தமிழ்செல்வனுக்கு தொகுதியில் நல்ல அறிமுகம் உள்ளது.

மேலும் முன்பு இரட்டை இலை சின்னத்தில் நின்ற இருவரும் மாற்றுக் கட்சிகளில் இணைந்து தற்போது வெவ்வேறு சின்னங்களில் களம் காண உள்ளனர்.

தேனியின் அதிமுக வேட்பாளராக 40 ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றிய வி டி நாராயணசாமி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் மதன் ஜெயபால் போட்டியிடுகிறார். ஆனால் தேனி தொகுதியில் டிடிவி தினகரனா? தங்கதமிழ்செல்வனா? என இருமுனைப் போட்டியாகவே பார்க்கப்படுவதாக தொகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இதனால் அதிமுக எப்படி இவர்களை தாண்டி வாக்காளர்களை ஈர்க்கும் என அனைவரும் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது.

தேனி மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மாவட்டம் விவசாயம் அது சார்ந்த பணிகள் பிரதானமாக உள்ளன. இந்த தொகுதி வாக்காளர்கள் தங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள், கடந்த முறை வென்ற எம்.பி எதை செய்தார், எதை செய்யத் தவறினார் என்பதை அறிந்து கொள்ள அந்த தொகுதியைச் சேர்ந்த பலரிடமும் பிபிசி தமிழ் பேசியது.

 

‘கட்சிக்குதான் வாக்கு, வேட்பாளருக்கு இல்லை’

தேனி தொகுதி அமமுக அதிமுக திமுக டிடிவி தினகரன்

கட்சி அடிப்படையிலேயே வாக்கு அளிப்போம் என்கிறார் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த விவசாயி பெ. முத்து காமாட்சி.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறும் போது."தேர்தலில் எங்களது பகுதிக்கு யார் நல்லது செய்வார்கள் எனக் கவனித்து வாக்கை செலுத்துவேன். எனக்கு 40 வயது ஆகிறது. நான் உதயசூரியன் சின்னத்திற்கு தான் வாக்கைச் செலுத்தி வருகிறேன். ஏனென்றால் எனது பகுதியில் உள்ள திமுகவினர் எங்களது பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைத்து இருக்கிறார்கள். டிடிவி தினகரன் மீண்டும் இந்த முறை தேனி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதால் தேர்தல் களம் எப்படி இருக்கும் என்பது போகப்போகத்தான் தெரிய வரும்", என கூறினார்.

தன்னுடைய வாக்கு அதிமுகவிற்கு கிடையாது, என்கிறார் 78 வயதான செல்வராஜ்.

"நான் எம்.ஜி.ஆர் கட்சி துவங்கிய காலத்திலிருந்து அதிமுகவின் கட்சியின் உறுப்பினராக உள்ளேன். அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி் தலைமை பொறுப்பேற்றவுடன் அங்கிருந்து விலகி விட்டேன். நான் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தான் வாக்கு செலுத்த உள்ளேன். ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டத்திற்கு பாலங்கள், சாலைகள் என வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். இப்பொழுது ஓ.பி.எஸ், டிடிவி தினகரனும் இணைந்து இருப்பதால் அவருக்கு தான் என் ஆதரவு."

‘அதிமுகவுக்கு அறிமுகம் தேவையில்லை’

தேனி தொகுதி அமமுக அதிமுக திமுக டிடிவி தினகரன்

அதிமுக வேட்பாளர் வெளியே தெரியவில்லை என்பது உண்மைதான். இருந்தாலும் எளிய மனிதரான நாராயணசாமிக்கு மக்கள் ஆதரவு நிச்சயம் உள்ளது என்கிறார் தேனி பஜாரில் நகைப்பட்டறை வைத்திருக்கும் சிதம்பரம்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறும் போது,"தேனி நாடாளுமன்ற தொகுதியில் தினகரன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமே வேட்பாளராக வெளியில் தெரியலாம். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இணைந்து போட்டியிட்டாலும் அதிமுகவிற்கான வாக்குகள் அப்படியே தான் இருக்கும், அது எங்கேயும் சிதறிவிடாது," எனத் தெரிவித்தார்.

"கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் எவ்வளவோ திட்டங்களை தேனிக்கு செய்து இருக்கலாம். அவர் செய்யத் தவறிவிட்டார். குறிப்பாக சுருளிப்பட்டியில் திராட்சை உலர்த்தும் தொழிற்சாலை, பெரியகுளத்தில் மாம்பழம் கூலிங் செய்யும் தொழிற்சாலைகளை கொண்டு வந்திருந்தால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கும்" என்றார் சிதம்பரம்.

தங்கதமிழ்ச்செல்வன் பல கட்சிகள் மாறி இருப்பதால் அவருக்கு வாக்களிக்க மக்கள் யோசிப்பார்கள் என பிபிசியிடம் பேசியவர்களில் சிலர் தெரிவித்தனர்.

"தற்போதைய நிலவரப்படி, திமுக - அமமுக இடையே போட்டி இருப்பதாக தெரிந்தாலும், அதிமுக வேட்பாளர் களமிறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் துவங்கினால் தேனி தொகுதியில் நிச்சயம் மும்முனை போட்டி இருக்கும்", என்கிறார் வியாபாரியான சிதம்பரம்.

மகளிர் வாக்கு யாருக்கு?

தேனி தொகுதி அமமுக அதிமுக திமுக டிடிவி தினகரன்

தன் கணவர் சொல்லும் கட்சிக்கே இதுவரை வக்களித்து வந்துள்ளேன். இம்முறையும் அப்படியே செய்வேன், என்கிறார் தேனி அரப்படிதேவன்பட்டியைச் சேர்ந்த குடும்பத் தலைவியான அபர்ணா.

"நாங்கள் தேர்தலை பெரிதாகக் கண்டு கொள்வது கிடையாது. எங்கள் தொகுதியில் டிடிவி தினகரன், தங்கதமிழ் செல்வன் போட்டியிடுவதாக எனது தந்தை கூறினார். தேர்தல் சமயத்தில் என் கணவரோ, அப்பாவோ எந்த வேட்பாளர் நம் தொகுதிக்கு நல்லது செய்வார்கள் என்று என்னிடம் சொல்வார்கள். அதை வைத்து என் வாக்கை செலுத்துவேன்," என தெரிவித்தார்.

தேனி தொகுதியில் பல்வேறு பெண்களிடம் பிபிசி தமிழ் பேசியபோது அவர்களின் கருத்தும் அபர்ணாவை கருத்தை எதிரொலிப்பதாகவே இருந்தது.

‘மீண்டும் போட்டியிட விரும்பினேன்’

தேனி தொகுதி அமமுக அதிமுக திமுக டிடிவி தினகரன்

பட மூலாதாரம்,P.RAVINDHRANATH /FACEBOOK

"தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டாம் முறையாக போட்டியிட விரும்பினேன். ஆனால் காலத்தின் கட்டாயத்தாலும், மூத்த தலைவர்களின் விருப்பத்தாலும் டி.டி.வி. தினகரன் போட்டியிட வழிவிட்டு அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன்", என்கிறார் தேனி தொகுதி எம்பியான ஓ.பி ரவீந்திரநாத்.

"தேனி நாடாளுமன்றத் தொகுதிக்காக கடந்த 5 ஆண்டுகளில் 850 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன். அதில் 550 கோடி ரூபாயில் மதுரை- போடிநாயக்கனூர் இடையேயான ரயில்பாதை திட்டம் முடிக்கப்பட்டது மிக முக்கியமான திட்டம். இது தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது." என்றார் அவர்.

திமுக vs அமமுக

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், மத்தியில் யார் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். கடந்த 2 முறை நல்லாட்சி கொடுத்த மோதி மூன்றாவது முறையாக வரவேண்டுமென நாங்கள் சேர்ந்து கூட்டணியில் நிற்கிறோம். மோதி தலைமையிலான ஆட்சிக்கு அதிக அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கிருந்து சென்றால் தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான திட்டங்களை கொண்டு வருவார். தேனியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கதமிழ் செல்வன் கடந்த முறை அமமுகவில் நின்று போட்டியிட்டவர். எனவே தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டிடிவி தினகரன் எளிதில் வெற்றி பெறுவார். தேனியில் அதிமுக வேட்பாளர் யாரென்று கூட மக்களுக்குத் தெரியாது”, எனக் கூறினார்

"ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவரை அனைத்து தரப்பு மக்களும் நன்கு அறிவார்கள். எனவே ஓ.பி.எஸ் ராமநாதபுரத்திலும், டி.டி.வி. தினகரன் தேனியிலும் போட்டியிடுகின்றனர். இதனால் தங்கள் தரப்பு வெற்றி உறுதியாகியுள்ளது" என்று ரவீந்திரநாத் தெரிவித்தார்.

தினகரன் கூறுவது என்ன?

தேனி தொகுதி அமமுக அதிமுக திமுக டிடிவி தினகரன்

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமுமுக வேட்பாளர் டிடிவி தினகரன் பரப்புரைகளில் " கடந்த 15 ஆண்டுகளாக வனவாசம் சென்றது போல நான் தேனி மாவட்டத்தை விட்டு சென்றாலும் மீண்டும் உங்களை நோக்கி வந்திருக்கிறேன். இந்த முறை எனக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். தற்பொழுது நமக்கு ஜெயலலிதாவிற்கு பதிலாக நரேந்திர மோதி கிடைத்திருக்கிறார்.

அவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக நடைபெறும் தேர்தல் என்பதால் அவரது கூட்டணியில் போட்டியிடும் எனக்கு உங்களது வாக்கினை செலுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஸ்டாலினை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் அவர் பிரதமர் ஆகிவிட முடியுமா?", என கேள்வியை முன் வைக்கிறார், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமமும் எனக்கு நன்றாகத் தெரியும் மக்களின் தேவையை நான் நிறைவேற்றுவேன் என பொதுவான பிரச்சாரமே”, செய்கிறார்.

தங்கதமிழ்செல்வன் பிரசாரம்

தங்கதமிழ்செல்வன்

திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்செல்வன் தனது பரப்புரைகளில் டி.டி.வி தினகரை குறிவைத்து விமர்சனத்தை முன்வைக்கிறார்.

“தேனியில் எனக்கு எதிராக ஒருவர் போட்டியிடுகிறார் அவர் இந்த மாவட்டத்தை சேராதவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து சென்றவர், இன்று மீண்டும் வந்திருக்கிறார். அவர் மீது இருக்கும் வழக்கிலிருந்து தப்பிக்க பாஜக கூட்டணியில் இணைந்திருக்கிறார். அவர் வெற்றி பெற்றால், அவரை எளிதில் நீங்கள் தொடர்பு கொள்ள இயலாது. டி.டி.வி. தினகரன் ஆர்.கே நகரில் இருபது ரூபாய் டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றி வெற்றியை வசப்படுத்தியவர்.. அதேபோல தேனியிலும் செய்துவிடலாம் என நினைக்கிறார். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.“

அதிமுக வேட்பாளர் கூறுவது என்ன?

அதிமுக தரப்பில், மற்ற இரண்டு வேட்பாளர்களும் அதிமுகவில் சார்பாக போட்டியிட்டு விலகிச் சென்றவர்கள் என்ற பரப்புரை முன்வைக்கப்படுகிறது.

“தேனியில் இந்த முறை போட்டியிடும் மற்ற இரண்டு வேட்பாளர்களும் அதிமுகவிலிருந்து சென்றவர்கள். மக்கள் உண்மையான அதிமுக யார் என்பதை உணர்ந்து அவர்களுக்கு தங்களது வாக்கினை செலுத்த வேண்டும்,” என்று கூறி அதிமுக வேட்பாளர் வி டி நாராயணசாமி வாக்கினை சேகரிக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/ckrxej0dlzpo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்?

துரைவைகோ

பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 28 மார்ச் 2024, 02:34 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.

 
தொல். திருமாவளவன்

பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB

படக்குறிப்பு,

தொல். திருமாவளவன்

நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது.

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.

 
சீமான்

பட மூலாதாரம்,NAAM TAMILAR

படக்குறிப்பு,

சீமான்

சட்டம் என்ன சொல்கிறது?

அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார்.

குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை.

1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.

 

2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக.

ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார்.

ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.

 
வைகோ

பட மூலாதாரம்,FACEBOOK

சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்?

ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும்.

இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.

கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன.

பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன.

ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 
டிடிவி தினகரன்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,

டிடிவி தினகரன்

சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள்

இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு.

"விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார்.

இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி.

தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.

 
கேட்டும் கிடைக்காத பம்பரம், பானை, கரும்பு விவசாயி சின்னங்கள்: `ஒருதலைபட்சமாக` செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்?
படக்குறிப்பு,

மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்

"சின்னம் முக்கியம் தான்"

தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார்.

மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர்.

”பாஜகவுக்கு பங்கு இல்லை”

தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது?

தமிழ்நாடு பரப்புரை

பட மூலாதாரம்,X/UDHAY/ANI

28 மார்ச் 2024, 05:54 GMT

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார்.

இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.

 
பிரச்சாரக் களத்தின் விவாதப் பொருள்

பட மூலாதாரம்,X/UDHAY

'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம்

அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார்.

இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார்.

இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.

 
பிரச்சாரக் களத்தின் விவாதப் பொருள்

பட மூலாதாரம்,X/EPSTAMILNADU

மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.

 
பிரச்சாரக் களத்தின் விவாதப் பொருள்

பட மூலாதாரம்,X/ANI

பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.

 
பிரச்சாரக் களத்தின் விவாதப் பொருள்

பட மூலாதாரம்,X/ANNAMALAI_K

'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை

அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார்.

“2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

பிரச்சாரக் களத்தின் விவாதப் பொருள்

பட மூலாதாரம்,X/RAMAAIADMK

இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன.

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார்.

  • பிரச்சாரக் களத்தின் விவாதப் பொருள்

தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.

 
பிரசாரக் களத்தின் விவாதப் பொருள்

பட மூலாதாரம்,X/DRARAMADOSS

பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார்.

தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழக அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள் என்ன? அவை தேர்தல் வெற்றியில் தாக்கம் செலுத்துமா?

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் சொல்வதெல்லாம் சாத்தியமா?

பட மூலாதாரம்,DMK/GETTY/NAAMTAMILARORG/ANBUMANI RAMADOSS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அ.தி.மு.க., தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

தேர்தல்களில் இந்தத் தேர்தல் அறிக்கைகள் எவ்வளவு முக்கியமானவை, இதை வைத்து மக்கள் வாக்களிக்கிறார்களா?

2024ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடும் புதுச்சேரியும் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவை எதிர்கொள்ளும் நிலையில், தமிழ்நாட்டின் முக்கியக் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

 
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அமெரிக்காவில் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளில் அவற்றின் பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை, தொடர்பான விஷயங்கள் இடம்பெற்றிருக்கும்.

தேர்தலுக்கு முன்பாக தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது எல்லா நாடுகளிலுமே வழக்கத்தில் இருக்கும் ஒரு நடைமுறைதான். அமெரிக்காவில் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளில் அவற்றின் பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை, நிர்வாகச் சீர்திருத்தங்கள், குடியேற்றக் கொள்கை தொடர்பான விஷயங்கள் இடம்பெற்றிருக்கும்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வெளியாகும் தேர்தல் அறிக்கைகளும் அக்கட்சிகளின் கொள்கைகளை வெளிப்படுத்தும். பூடானில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றின் ஒப்புதலுடனேயே அறிக்கைகள் வெளியிடப்படும். மதம், இனம், பிராந்தியம் சார்ந்த விஷயங்களை முன்வைத்து வாக்குறுதிகள் இருந்தால் அவை நீக்கப்படும்.

தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதைப் பொறுத்தவரை, பூடானில் மூன்று வாரங்களுக்கு முன்பாக வெளியிட வேண்டும். அமெரிக்காவில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக வெளியிட வேண்டும். மெக்ஸிகோவில் ஐந்து மாதங்களுக்கு முன்பாக வெளியிட வேண்டும்.

 
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தியா சுதந்திரம் பெற்று முதன்முதலில் பொதுத் தேர்தல்கள் நடக்க ஆரம்பித்தபோது காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகள் தேர்தல் அறிக்கைளை வெளியிட்டன.

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை எப்போது தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டும் என்பதில் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஆகவே தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் துவங்குவதற்கு முன்பாக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகின்றன. தேர்தல் பிரசாரத்தில் அந்தத் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட சில விஷயங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்வது வழக்கமாக இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்று முதன்முதலில் பொதுத் தேர்தல்கள் நடக்க ஆரம்பித்தபோது காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகள் தேர்தல் அறிக்கைளை வெளியிட்டன. இருந்தாலும், அந்தக் காலகட்டத்தில் தேர்தல் அறிக்கைகளுக்குப் பெரிய முக்கியத்துவம் இருந்ததில்லை. எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் பொதுத் தேர்தலை ஒட்டி தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றன.

இப்படி வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில், அக்கட்சிகளின் பொதுவான கொள்கைகள் தவிர, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் போன்ற விஷயங்களும் இடம்பெற்றிருக்கும். சில பிரிவினருக்கு சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன. பல நேரங்களில் பொருளாதார ரீதியான அறிவிப்புகள் பெரும் விமர்சனத்தையும் எதிர்கொள்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஆளும் கட்சியான பா.ஜ.கவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் வெகுவாகக் கவனிக்கப்படும். இருந்தபோதும் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி விரிவான தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றன.

 

தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகளில் தி.மு.க., அ.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது வரை மாநிலக் கட்சிகளே தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருப்பதால், அவற்றில் பெரிதும் மாநில உரிமை சார்ந்த விஷயங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் பல கோரிக்கைகள் ஒன்றுபோல் அமைந்துள்ளன. ஒன்றிரண்டு விஷயங்களில் மட்டுமே முரண்பாடு காணப்படுகிறது.

மத்திய - மாநில அரசுகள் வரி வருவாயைப் பகிர்ந்து கொள்வது, உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்துவது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்குவது, கச்சத் தீவை மீட்பது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெறுவது, நீட் தேர்விலிருந்து விலக்கைக் கோருவது, பொது சிவில் சட்டம் வராமல் தடுப்பது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, இந்தியா முழுவதும் மகளிருக்கு உரிமைத் தொகை அளிப்பது (தொகை வேறுபடுகிறது) போன்ற விவகாரங்களில் இந்த நான்கு தேர்தல் அறிக்கைகளுமே ஒத்துப் போகின்றன.

வேறு சில விஷயங்களை சில கட்சிகள் ஒன்று போல் அணுகுகின்றன. உதாரணமாக, ஆளுநரை நியமிக்கும்போது மாநில அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும் என தி.மு.கவும் அ.தி.மு.கவும் தங்கள் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளன. நாம் தமிழர் கட்சி ஆளுநர் பதவியையே நீக்க முயல்வோம் என்கிறது. நதிகள் இணைப்பை பாட்டாளி மக்கள் கட்சியும் அ.தி.மு.கவும் வலியுறுத்துகின்றன.

அதேபோல கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் அளிப்பது குறித்தும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பது குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சி, அ.தி.மு.க. ஆகியவை ஒன்றுபோல கருத்துகளை முன்வைக்கின்றன. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை தி.மு.க., அ.தி.மு.க,, பா.ம.க. ஆகிய கட்சிகள் வலியுறுத்துகின்றன. மாநில அரசுகளைக் கலைக்க ஏதுவாக உள்ள அரசமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவு நீக்கப்பட வேண்டும் என்பதில் தி.மு.க., நாம் தமிழர்கள் கட்சிகள் ஒன்றுபடுகின்றன.

மக்களவை இடங்களைப் பொறுத்தவரை தற்போதுள்ள நடைமுறை தொடர வேண்டும் என்கிறது தி.மு.க. 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி என்பதற்குப் பதிலாக, மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்குப் பதிலாக ஒரு நாடாளுமன்றத் தொகுதி என மாற்ற வேண்டும் என்கிறது நாம் தமிழர் கட்சி.

ஒவ்வொரு தேர்தல் அறிக்கையாக எடுத்துப் பார்த்தால், ஒவ்வொரு கட்சியும் தாம் நீண்ட காலமாகப் பேசிவரும் விஷயங்களை இந்தத் தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளன.

 

திமுகவின் தேர்தல் அறிக்கை கூறுவது என்ன?

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆளுநர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 361வது பிரிவை நீக்கும் நடவடிக்கையை தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ளது திமுக.

தி.மு.கவின் தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரை,

  • மத்திய - மாநில அரசுகளின் உரிமை குறித்து ஆராய்வதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட நான்கு ஆணையங்களின் பரிந்துரைகளைப் பரிசீலனை செய்து, மாநிலங்களுக்கு கூடுதல் சுயாட்சி அளிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவது.
  • ஆளுநர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 361வது பிரிவை நீக்குவது
  • மத்திய அரசின் பணிகளுக்கான தேர்வுகளையும் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளையும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வலியுறுத்துவது.
  • சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த மீண்டும் முயற்சிகளை மேற்கொள்வது
  • மீண்டும் திட்டக் குழுவை அமைப்பது, யுபிஎஸ்சி தேர்வு கமிட்டியில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்குவது
  • ரயில்வே நிர்வாகத்தை மாநிலங்களிடம் ஒப்படைப்பது
  • தேசிய கல்விக் கொள்கை - ஒரே நாடு ஒரே தேர்தல் முறை - அக்னி பாத் திட்டம் ஆகியவற்றைக் கைவிடுவது ஆகியவற்றை முன்வைக்கிறது.
 

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது?

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

விவசாயிகளுக்கு ஐயாயிரம் ரூபாய் ஓய்வூதியம், கோயம்புத்தூரிலும் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளது அதிமுக.

அ.தி.மு.கவை பொறுத்தவரை,

  • நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை சென்னையில் நடத்த வேண்டும்
  • குற்ற நடைமுறைச் சட்டங்களின் பெயர் மாற்றத்தைக் கைவிடவேண்டும்.
  • இட ஒதுக்கீட்டிற்கான வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும்
  • இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும்
  • எரிவாயு, பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்துவது.
  • விவசாயிகளுக்கு ஐயாயிரம் ரூபாய் ஓய்வூதியம்
  • கோயம்புத்தூரிலும் எய்ம்ஸ் மருத்துவமனை
  • சென்னை முதல் விழுப்புரம் வரை மின்சார ரயில் நீட்டிப்பு, செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு, ராமநாதபுரம், கன்னியாகுமரியில் விமான நிலையம்
  • என்எல்சியில் புதிய சுரங்கப் பணிகள் கூடாது
  • சிஏஏ சட்டத்தில் இஸ்லாமியர்களையும் ஈழத் தமிழர்களையும் உள்ளடக்குவது ஆகியவற்றை முன்வைத்திருக்கிறது.
 

பாமகவின் தேர்தல் அறிக்கை கூறுவது என்ன?

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

பட மூலாதாரம்,ANBUMANI RAMADOSS / X

படக்குறிப்பு,

ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது பாமக.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை,

  • இட ஒதுக்கீட்டிற்கு உள்ள 50 சதவீத உச்சவரம்பை நீக்குவது, தனியார் துறையிலும் நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு, தனியார் நிறுவனங்களில் 80 சதவீத பணிகளை மாநில மக்களுக்கு ஒதுக்க நடவடிக்கை.
  • தொழில் திட்டங்களுக்கு வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்தத் தடை, என்எல்சியின் சுரங்க விரிவாக்கத் திட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுவதோடு, படிப்படியாக என்எல்சியை அகற்ற நடவடிக்கை, தமிழ்நாட்டை அணு உலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை.
  • ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்வது, ஐஐடிக்கு இணையாக டிஐடி என்ற நிறுவனத்தை உருவாக்குவது, பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவது.
  • ஜிஎஸ்டி வரி முறையை இரண்டு அடுக்குகளாக மாற்றுவது, பெட்ரோல் - டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது
  • இந்தி பிரசார சபைக்கு இணையாக தமிழ் பரப்புரை அவை அமைக்க நடவடிக்கை
  • ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும், தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை அறிமுகம் செய்யப்படும்,
  • அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆகிய விஷயங்களை முன்வைக்கிறது.
 

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுவது என்ன?

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

பட மூலாதாரம்,NAAMTAMILARORG / X

படக்குறிப்பு,

ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிடத் தடை விதிப்பது, வாக்களிப்பதை கட்டாயமாக்குவது உள்ளிட்ட பல விஷயங்களை முன்வைத்துள்ளது நாம் தமிழர் கட்சி.

இதில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை பல சுவாரஸ்யமான விஷயங்களை முன்வைக்கிறது.

  • இந்தியாவில் குடியரசுத் தலைவரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும், ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகளுக்குப் புதிது புதிதாக சின்னங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் அல்லது எண்களை வழங்க வேண்டும்.
  • ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிடத் தடை விதிப்பது, வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவது, ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் மரணமடைந்தால் அடுத்த நிலையில் வாக்கு பெற்றவரை உறுப்பினராக்குவது, தங்கள் கட்சி சின்னத்திற்குப் பதிலாக, இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடத் தடை.
  • மாநிலங்களுக்கு உட்பட்ட விவகாரங்களில் உயர்நீதிமன்றமே தலைமை நீதிமன்றமாக இருக்கும் நிலையை ஏற்படுத்துவது, நீதிபதி பதவிகளில் இருந்து ஓய்வு பெறுபவர்கள் அரசுப் பதவிகளிலோ, ஆளுநராகவோ, அரசியலிலோ சேரத் தடை விதிப்பது, மாநில நிலப்பரப்பின் மீது மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை நீக்கும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வருவது.
  • வடமாநிலத்தவர் பெருகுவதால் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல் உள்நுழைவுச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது, தேசிய புலனாய்வு முகமையைக் கலைக்க முயற்சிகள் மேற்கொள்வது, அண்டை நாட்டு கடற்படையின் வன்முறைத் தாக்குதல்களை முறியடிக்க நெய்தல் படை அமைப்பது, வேளாண் தொழில் சார்ந்த அனைத்தையும் அரசு வேலையாக அறிவிக்கத் தனி சட்டம் இயற்ற வேண்டும்.
  • ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என சட்டமியற்றுவது போன்றவற்றை அக்கட்சி முன்வைத்துள்ளது.
 

தேர்தல் அறிக்கைகள் கட்சிகளின் வெற்றிக்கு உண்மையில் உதவுகிறதா?

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

பட மூலாதாரம்,LINKEDIN

படக்குறிப்பு,

"கட்சிகளைத் தேர்வு செய்வதில் தேர்தல் அறிக்கைகள் பெரிய அளவில் தாக்கம் செலுத்துவதில்லை என்பதுதான் உண்மை," என்கிறார் ராஜரத்தினம் கண்ணன்.

தேர்தல் அறிக்கைகளைப் பொறுத்தவரை, அரசியல் கட்சிகள் இதற்கென ஒரு குழுவை அமைத்து, பல வாரங்கள் உழைத்து உருவாக்குகின்றன. செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி அவற்றை வெளியிடுகின்றன. ஆனால், கட்சிகளைத் தேர்வு செய்வதில் தேர்தல் அறிக்கைகள் எந்த அளவுக்கு மக்களிடம் தாக்கம் செலுத்துகின்றன?

"பெரிய அளவில் தாக்கம் செலுத்துவதில்லை என்பதுதான் உண்மை. ஆனால், வெகு சில தேர்தல்களில் அதுபோல நடக்கிறது," என்கிறார் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியவரான ராஜரத்தினம் கண்ணன்.

"உதாரணமாக 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வீட்டிற்கும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இலவசமாக வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் இருந்த வாக்குறுதி, மக்களால் வெகுவாக கவனிக்கப்பட்டது.

கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தலின் ஹீரோ அந்தத் தேர்தல் அறிக்கைதான் என ப. சிதம்பரம் குறிப்பிடும் அளவுக்கு அந்தத் தேர்தல் அறிக்கை இருந்தது. அதற்குப் பலனும் கிடைத்தது," என்கிறார் அவர்.

ஆனால், அதே நேரத்தில் தேர்தல் அறிக்கைக்கு வெளியில் அளிக்கப்படும் சில வாக்குறுதிகள் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுவிடுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"கடந்த 1967ஆம் ஆண்டில் ரூபாய்க்கு மூன்று படி அரசி என்பது தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை. ஆனால், தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அந்த வாக்குறுதியை அண்ணா அளித்தார். அந்த வாக்குறுதியைச் செயல்படுத்தவில்லையென்றால் எங்களைக் கேட்கலாம் என்றும் உறுதி அளித்தார். அதற்கும் பலன் இருந்தது," என்கிறார் கண்ணன்.

ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது மாநிலக் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பு இருக்கிறது?

"மாநிலக் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளுக்குப் பெரிய மதிப்பு இல்லைதான். ஆனால், தங்களுடைய கூட்டணிக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வரும்போது தங்களால் அழுத்தம் தர முடியும் என்று சொல்வார்கள். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.

தமிழக கட்சிகள் அனைத்தும் மாநில சுயாட்சி, மாநில உரிமை குறித்துப் பேசுகின்றன. ஆனால், மற்ற மாநிலங்கள் இதைப் பற்றிப் பேசுவதே கிடையாது. அவற்றைப் பொறுத்தவரை, கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்தாலே போதும் என்றுதான் அவை நினைக்கின்றன," என்கிறார் கண்ணன்.

https://www.bbc.com/tamil/articles/czdzlje9d00o

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/3/2024 at 08:30, Kavi arunasalam said:

திமுகவுக்கு  வாக்கு அளித்தால்  வெகுமானம்

🤣 வெகுமானத்துக்கு வாக்கை விற்றால்…

வைப்பீர்கள் உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தை அடமானம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

image-2024-04-01-105011614.png

 

கோடி கோடியா கடத்துபவனை எல்லாம் இந்த தேர்தல் பறக்கும் படை விட்டு விடுவினம்..

roflphotos-dot-com-photo-comments-201711

  • கருத்துக்கள உறவுகள்
Posted

image-2024-04-03-114210129.png

சாமி காசை வாங்கி புள்ளடிய மாத்தி குத்தினியள் .. என்டா சாமி கண்ணை குத்தி போடும்..

image-2024-04-03-114557155.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேர்தலுக்குள் கச்சதீவை மீட்டால் எங்கள் வாக்கு பா.ஜ.கட்சிக்கே – நாம் தமிழர் சீமான்

April 3, 2024
 

தேர்தலுக்குள் கச்சதீவை மீட்டு கொடுத்தால் நானும் எனது கட்சியினரும் பா.ஜ.கவுக்கு வாக்களிக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பவன் நான் மட்டுமே. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கட்சிக்கு ஆதரவான காங்கிரஸ், தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றும் கூறினார்.

தேனியில் பிரசாரத்தில் “சின்னம் முடக்கப்பட்ட போதும் எண்ணத்தை மாற்ற முடியாது என்ற அடிப்படை யில் அவர்கள் கொடுத்த சின்னத்துடன் களத்தில் நிற்கிறோம். தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா பெரிய கட்சி என்கின்றனர். ஆனால் தனித்து நிற்கபயப் படுகின்றனர்.

“கச்சதீவை மீட்காமல் 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்து விட்டு 10 நாட்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் இதுபற்றி பா.ஜ.க. பேசி வருகிறது. நான் 13 ஆண்டுகளாக கச்சதீவை பற்றி பேசி வருகிறேன். 6 மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு இது குறித்து கடிதம் எழுதினேன். தேர்தலுக்குள் கச்சதீவை மீட்டு கொடுத்தால் நானும் எனது கட்சியினரும் பா.ஜ.கவுக்கு வாக்களிக்கிறோம்” என்றும் அவா் தெரிவித்தாா்.

 

https://www.ilakku.org/தேர்தலுக்குள்-கச்சதீவை-ம/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பவன் நான் மட்டுமே.

large.IMG_6326.jpeg.8640da4e72e9313e11f8

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kavi arunasalam said:

large.IMG_6326.jpeg.8640da4e72e9313e11f8

நான் தான் பிரபாகரன் என்று சொல்லாதது வரை மகிழ்ச்சி தான்   நான் இலங்கையில் 1975,..1983   காலங்களில் வை.கோ  இன் பேச்சுக்களை விரும்பி தேடி வாசிப்பேன்,.வை.கோ வும்   நெடுமாறனும்.  இந்திராகாந்தியை  தனித்தனியாகக் சந்தித்து இலங்கை பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளார்கள். இவருக்கு முன்பு பலரும் உழைத்து உள்ளார்கள்  

மேலும் படம் நன்றாக உள்ளது  ஒரு மாநில அரசு மீனவர்களிடம். குண்டுகள் கொடுத்து கடலுக்கு அனுப்ப முடியுமா?? 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/3/2024 at 18:10, ரசோதரன் said:

நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀

ப‌ழ‌சை எப்ப‌டி ம‌ற‌ப்பார் ஹா ஹா.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பையன்26 said:

ப‌ழ‌சை எப்ப‌டி ம‌ற‌ப்பார் ஹா ஹா.......................

நேற்று ஓபிஎஸ்ஸை பார்த்தீர்களா? அவருடைய பலாப்பழ சின்னத்தை பக்கத்தில் வைத்துக் கொண்டே இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று சொல்லி விட்டார்.........பின்னர் சமாளித்து, பழக்க தோசம் என்று சொன்னார்.

நேற்று ஒரு கூட்டத்தில் காயத்ரிக்கு 'கனிமவளம்' என்ற சொல்லு வரவே மாட்டன் என்று அடம் பிடித்தது. பக்கத்தில் நின்றவர் டியூசன் எடுக்கின்றார். அப்பவும் கனிமவளம் வரவில்லை. கடைசியில் கல், மண், பாறை என்று நிகரான சொற்கூட்டம் ஒன்றை அவருக்கு சொல்லிக் கொடுத்து சமாளித்தனர்.

விந்தியா ஒரு பிரச்சாரத்தில் சொன்னார் திமுகவிற்கு ஓட்டு போடுவதும், குரங்கிற்கு கோட் போடுவதும் ஒன்று தான் என்று. ஒரு எதுகை மோனைக்காக என்னவெல்லாம் சொல்லுகின்றார்கள்........😀

துன்பம் வரும் போது சிரி என்றார்கள், அது கஷ்டம், ஆனால் தேர்தல் வந்தால் சிரிப்போ சிரிப்பு......

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ரசோதரன் said:

நேற்று ஓபிஎஸ்ஸை பார்த்தீர்களா? அவருடைய பலாப்பழ சின்னத்தை பக்கத்தில் வைத்துக் கொண்டே இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று சொல்லி விட்டார்.........பின்னர் சமாளித்து, பழக்க தோசம் என்று சொன்னார்.

நேற்று ஒரு கூட்டத்தில் காயத்ரிக்கு 'கனிமவளம்' என்ற சொல்லு வரவே மாட்டன் என்று அடம் பிடித்தது. பக்கத்தில் நின்றவர் டியூசன் எடுக்கின்றார். அப்பவும் கனிமவளம் வரவில்லை. கடைசியில் கல், மண், பாறை என்று நிகரான சொற்கூட்டம் ஒன்றை அவருக்கு சொல்லிக் கொடுத்து சமாளித்தனர்.

விந்தியா ஒரு பிரச்சாரத்தில் சொன்னார் திமுகவிற்கு ஓட்டு போடுவதும், குரங்கிற்கு கோட் போடுவதும் ஒன்று தான் என்று. ஒரு எதுகை மோனைக்காக என்னவெல்லாம் சொல்லுகின்றார்கள்........😀

துன்பம் வரும் போது சிரி என்றார்கள், அது கஷ்டம், ஆனால் தேர்தல் வந்தால் சிரிப்போ சிரிப்பு......

ஜி கே வாச‌ன் கைசின்ன‌த்துக்கு வாக்கு அளியுங்க‌ள் என்று சொன்ன‌து கேட்டேன் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் தேர்த‌ல் காமெடி காணொளின் என் க‌ண்ணில் ப‌ட‌ வில்லை உற‌வே.................த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் என்றாலே காமெடி தான் அதிக‌ம்

இவ‌ர்க‌ளின் த‌டுமாற்ற‌த்துக்கு வ‌ய‌தும் ஒரு கார‌ண‌ம்...............ஜி கே வாச‌ன் த‌மிழ் நாட்டில் க‌ட்சி வைத்து இருப்ப‌து பெரிசா த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு தெரியாது...................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, பையன்26 said:

ஜி கே வாச‌ன் கைசின்ன‌த்துக்கு வாக்கு அளியுங்க‌ள் என்று சொன்ன‌து கேட்டேன் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் தேர்த‌ல் காமெடி காணொளின் என் க‌ண்ணில் ப‌ட‌ வில்லை உற‌வே.................த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் என்றாலே காமெடி தான் அதிக‌ம்

இவ‌ர்க‌ளின் த‌டுமாற்ற‌த்துக்கு வ‌ய‌தும் ஒரு கார‌ண‌ம்...............ஜி கே வாச‌ன் த‌மிழ் நாட்டில் க‌ட்சி வைத்து இருப்ப‌து பெரிசா த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு தெரியாது...................................

நியூஸ் 18 இல் 'தேர்தல் கச்சேரி' என்று ஒன்று தினமும் போடுகின்றனர். அமெரிக்க மேற்கு கரை நேரப்படி பின்னேரம் 6 மணிக்கும், வேறு சில நேரங்களிலும். முழுச் சிரிப்பு.

நேற்று வாசன் அவரின் வேட்பாளர் இல்லாமலேயே அவரின் மற்ற தொகுதியில் வாக்குக் கேட்டதையும் அதில் போட்டுக் காட்டினர்...அதற்கும் ஒரு மீம்ஸ்.....

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த அநீதிக்கும், கச்ச தீவு இழப்புக்கும், மீனவர் பிரச்சினைகளுக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் பொறுப்பு - ராஜ்நாத் சிங் விமர்சனம்

09 APR, 2024 | 10:07 AM
image

இலங்கைக்கு கச்சதீவை பரிசாக கொடுத்த காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் தமிழர் உரிமைகள் குறித்துப் பேச தகுதியில்லை என இந்திய  பாதுகாப்புஅமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். நாகை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்ஜிஎம். ரமேஷ் கோவிந்த்தை ஆதரித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாகவும், பொருளாதாரம் வேகமாக வளரும் நாடாகவும் மாறியுள்ளது. பிரதமராக மோடி ஆட்சிப்பொறுப்பேற்பதற்கு முன்பு ரூ.600 கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாடப் பொருட்களின் ஏற்றுமதி, இன்று ரூ.26 ஆயிரம் கோடியை எட்டி உள்ளது. அதுபோல் 5ஜி மொபைல் இணைப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது. மேலும் 6ஜி-க்கு இந்தியா தயாராகி வருகிறது. உலகிலேயே மிக மலிவான மொபைல் டேட்டா சேவை இந்தியாவில்தான் கிடைக்கிறது.

இதற்கு பிரதமர் மோடியின் நுட்பமான ஆட்சித் திறனே காரணம். இதன் காரணமாக நாட்டில் சாமானிய குடிமகன்கள் கூட சிறிய பணப் பரிவர்த்தனைகளைக் கூட டிஜிட்டல் முறையில் செய்து பயனடைந்து வருகிறார்கள். நாட்டிலேயே தமிழகத்திலும், உத்தர பிரதேசத்திலும் மட்டுமே 2 பாதுகாப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மோடி அரசில் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்கின்ற நோக்கத்தில் 1.25 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனாலும், நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக உள்ள மோடி குறித்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். சேற்றை வாரி இறைக்கிறார்கள். எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறார்களோ, அதே அளவுக்கு தாமரை மலரும் என்பதில் சந்தேகம் இல்லை.

இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த அநீதிக்கும், கச்சத்தீவு இழப்புக்கும், மீனவர் பிரச்சினைகளுக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் பொறுப்பு. இந்த 2 கட்சிகளும் சேர்ந்துதான் இலங்கைக்கு கச்சத்தீவை பரிசாக கொடுத்தன. இதனால் அவர்கள் தமிழர்கள், மீனவர்கள் உரிமை குறித்துப் பேச எந்தத் தகுதியும் இல்லை. தேசம் தான் முதன்மையானது என்பது எங்கள் நோக்கம். ஆனால், குடும்பம் தான் முதன்மையானது என்பது எதிர்க்கட்சியினரின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரன், அமமுக மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், தமாகா மாவட்டத் தலைவர் தினகரன், நாகை மக்களவைத் தொகுதி தேர்தல் குழு பொறுப்பாளர் புரட்சி கவிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, தென்காசி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியனை ஆதரித்து ராஜ்நாத் சிங் நேற்று மாலை ராஜபாளையத்தில் பிரச்சாரம் செய்தார். ராஜபாளையம் சொக்கர் கோயில் முதல் பழைய பேருந்து நிலையம் வரை திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

https://www.virakesari.lk/article/180784




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.