Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • தொடங்கியவர்
4 hours ago, பெருமாள் said:

புலி வாந்தி கூட்டத்துக்கு National Post  தான்  தஞ்சம் .

ற்றைய செய்திகள் மித்திரன் வகையானது .

பெருமாள், யாழில் வந்த செய்தி இது:

அத்துடன், மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரியுடனான திருமணத்துக்கு புறம்பான உறவை தொடர்வதற்காக மனைவியையும், அவரது தாயாரையும் கூலிப்படை வைத்து கொல்ல முயன்று, மனைவி மட்டும் உயிரிழந்த சம்பவமும் எம் சமூகத்துக்குள் 2022 இல் நிகழ்ந்தது. 

இப்படியான கொலைகள் எல்லா சமூகத்த்துக்குள்ளும் நிகழ்பவை. இதை இனம் சார்ந்த ஒரு செயலாக நிறம் தீட்ட முடியாது.

ஆனாலும், இப்படியான விடயங்கள் தமிழ் சமூகத்துக்குள் நிகழும் போது, அதனை "தமிழர்கள் பயங்கரவாதிகள், எனவேதான் இப்படியான செயல்களை செய்கின்றனர்" என்று சிங்கள ஊடகங்கள், மற்றும் சமூகவலைத்தளத்தில் இயங்கும் சிங்கள தீவிர இனவாதிகள் எழுதியதையும், இனியும் எழுதுவார்கள் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. அதனால்தான் அந்த இனத்தால் தன்னுடன் இருக்கும் ஒரு இனத்தை இனப்படுகொலை செய்து விட்டு, எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் இருக்க முடிகின்றது.

என்னால் 2 மாதக் குழந்தையையும் படுகொலை செய்ததை, சிங்களவர்களுக்கு எதிராக எழுதுவதன் மூலம் எம் இனத்துக்கு சாதகமாக எழுதுகின்றேன் என்ற கோணத்தில் சிங்கள இனவெறியர்களைப் போல் எழுத முடியாது. அவ்வாறு எழுதினால் அந்த சிங்கள இனவெறியாளர்களுக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விடும்.

  • Replies 82
  • Views 8.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    பெருமாள், யாழில் வந்த செய்தி இது:   அத்துடன், மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரியுடனான திருமணத்துக்கு புறம்பான உறவை தொடர்வதற்காக மனைவியையும், அவரது தாயாரையும் கூலிப்படை வைத்து கொல்ல முயன்று, மனைவி

  • இந்த செய்தி இங்கு இணைக்கப் படும் போதே பெருமாளுடையதைப் போன்ற கருத்துக்கள் வருமென எதிர்பார்த்தேன், அப்படியே நடந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் கொல்லப் பட்ட குழந்தைகளின் பால் கவனத்தைக் காட்டியிருப்பத

  • நிழலி
    நிழலி

    கபிதன்,  இராணுவ முகாம்கள் தாக்கி அழிக்கப்படும் போது, அதை கொண்டாடியதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில், ஆக்கிரமிப்பாளர்களின் முகாம் அது. ஆனால், எம் தமிழ் மக்கள், எல்லைக் கிராமங்களில் உள்ள சிங்கள மக்கள

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

இலங்கையின் பூர்வீக குடிகள் அழிக்கப்பட்டதை கிரிபத் எனும் பாரம்பரிய உணவை கொடுத்து வெடி போட்டு கொண்டாடிய இனத்தில் மனிதாபிமானம் இருக்குமா ?

12 hours ago, Kapithan said:

திஸ் ஸ் டூ மச். 

நாங்கள் ஒன்றும் குறைந்த ஆட்கள் இல்லையே? 😁

முதலில் யார் எழுதியது என்பதை பார்க்காமல் என்ன எழுதபட்டு  உள்ளதென்று கவனியுங்கள் .

ஒன்றரை லட்சம் மனிதர்களை  குண்டு போட்டு அழித்துவிட்டு அந்த அழிவை பெரும் எடுப்பில் கொண்டாடிய சிங்களவர்கள் போன்றா நாங்கள் நடந்து கொண்டோம் ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முதலில் யார் எழுதியது என்பதை பார்க்காமல் என்ன எழுதபட்டு  உள்ளதென்று கவனியுங்கள் .

ஒன்றரை லட்சம் மனிதர்களை  குண்டு போட்டு அழித்துவிட்டு அந்த அழிவை பெரும் எடுப்பில் கொண்டாடிய சிங்களவர்கள் போன்றா நாங்கள் நடந்து கொண்டோம் ? 

எங்களைப் போன்று அழுத சிங்களவர்களும் இருக்கின்றனர். 

மேலும், இராணுவ முகாம்களை வெற்றிகொண்டபோது நாங்கள் குதூகலிக்கவில்லையா?  

எந்த ஒரு மனிதனும், குழு மனநிலையில் தான் கொண்டாடியவற்றை தனித்திருந்து அசை போடும்போது நிச்சயம் அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது. 

மரணத்தை கொண்டாடும் மனநிலை மனச்சாட்சியுள்ள மனிதனால் முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி இங்கு இணைக்கப் படும் போதே பெருமாளுடையதைப் போன்ற கருத்துக்கள் வருமென எதிர்பார்த்தேன், அப்படியே நடந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் கொல்லப் பட்ட குழந்தைகளின் பால் கவனத்தைக் காட்டியிருப்பது இன்னும் நாம் இனவாதச் சிங்களவர்களின் தரத்திற்கு இறங்கி விடவில்லையென்று நிரூபிக்கிறது.    

  • தொடங்கியவர்
21 minutes ago, Kapithan said:

எங்களைப் போன்று அழுத சிங்களவர்களும் இருக்கின்றனர். 

மேலும், இராணுவ முகாம்களை வெற்றிகொண்டபோது நாங்கள் குதூகலிக்கவில்லையா?  

எந்த ஒரு மனிதனும், குழு மனநிலையில் தான் கொண்டாடியவற்றை தனித்திருந்து அசை போடும்போது நிச்சயம் அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது. 

மரணத்தை கொண்டாடும் மனநிலை மனச்சாட்சியுள்ள மனிதனால் முடியாது. 

கபிதன், 

இராணுவ முகாம்கள் தாக்கி அழிக்கப்படும் போது, அதை கொண்டாடியதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில், ஆக்கிரமிப்பாளர்களின் முகாம் அது. ஆனால், எம் தமிழ் மக்கள், எல்லைக் கிராமங்களில் உள்ள சிங்கள மக்களை வெட்டிக் கொன்ற நிகழ்வுகளின் போதும், தெஹிவளை ரயில் குண்டு வெடிப்பு போன்று, மக்களை குறிவைத்து செய்த தாக்குதல்களின் போதும் அவற்றை மெச்சி கொண்டாடவும் இல்லை, பாராட்டவும் இல்லை.

மெளனமாக இருந்தது, கொண்டாடியதாக அர்த்தம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, Kapithan said:

ஈழத்தில் இனக்கலவர காலங்கள் தொடக்கம் இன்று வரைக்கும் தமிழர்கள் சிங்கள பொது மக்களை தேடித்தேடி அழிக்கவில்லை. இயக்கங்களும் அதை செய்யவில்லை என நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஈழத்தில் இனக்கலவர காலங்கள் தொடக்கம் இன்று வரைக்கும் தமிழர்கள் சிங்கள பொது மக்களை தேடித்தேடி அழிக்கவில்லை. இயக்கங்களும் அதை செய்யவில்லை என நினைக்கின்றேன். 

சாமியர் பச்சை முடிஞ்சிட்டு...என்னுடைய பாராட்டுக்கள்

2 hours ago, நிழலி said:

கபிதன், 

இராணுவ முகாம்கள் தாக்கி அழிக்கப்படும் போது, அதை கொண்டாடியதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில், ஆக்கிரமிப்பாளர்களின் முகாம் அது. ஆனால், எம் தமிழ் மக்கள், எல்லைக் கிராமங்களில் உள்ள சிங்கள மக்களை வெட்டிக் கொன்ற நிகழ்வுகளின் போதும், தெஹிவளை ரயில் குண்டு வெடிப்பு போன்று, மக்களை குறிவைத்து செய்த தாக்குதல்களின் போதும் அவற்றை மெச்சி கொண்டாடவும் இல்லை, பாராட்டவும் இல்லை.

மெளனமாக இருந்தது, கொண்டாடியதாக அர்த்தம் இல்லை.

நிழலி...அழுத்தமான் கருத்து..நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

கபிதன், 

இராணுவ முகாம்கள் தாக்கி அழிக்கப்படும் போது, அதை கொண்டாடியதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில், ஆக்கிரமிப்பாளர்களின் முகாம் அது. ஆனால், எம் தமிழ் மக்கள், எல்லைக் கிராமங்களில் உள்ள சிங்கள மக்களை வெட்டிக் கொன்ற நிகழ்வுகளின் போதும், தெஹிவளை ரயில் குண்டு வெடிப்பு போன்று, மக்களை குறிவைத்து செய்த தாக்குதல்களின் போதும் அவற்றை மெச்சி கொண்டாடவும் இல்லை, பாராட்டவும் இல்லை.

மெளனமாக இருந்தது, கொண்டாடியதாக அர்த்தம் இல்லை.

இராணுவ முகம்களை, இராணுவத் தளங்களை வெற்றிகொள்ளும்போதும் அதன் பின்னரும் எல்லோரைப் போன்று நானும் இறுமாப்பும், பெருமிதமும் கொண்டிருந்தேன். 

ஆனால் பின்னர் வெளிவரும் படங்களில் கொல்லப்பட்ட இராணுவத்தினர்களின் உடல்களையும் போராளிகளின் புகளுடல் ஊர்திகளையும்  காணும்போது எனது பெருமிதம் காணாமல் போய்விடும். 

ஏதோ குற்றவுணர்ச்சி மேலிட்ட உணர்வுதான் மிஞ்சும். 

இங்கே எனது பதிவுகள் பெருமாளின் ஏனைய இனங்களை குறைத்துக் கூறும் விதத்திலான எழுத்துக்களுக்கு பதிலாக வந்ததே தவிர வேறு நோக்கம் இல்லை. 

8 hours ago, குமாரசாமி said:

ஈழத்தில் இனக்கலவர காலங்கள் தொடக்கம் இன்று வரைக்கும் தமிழர்கள் சிங்கள பொது மக்களை தேடித்தேடி அழிக்கவில்லை. இயக்கங்களும் அதை செய்யவில்லை என நினைக்கின்றேன். 

ஒட்டாவாவில் நடைபெற்ற துன்பகரமான நிகழ்வு அந்த இனத்தின் குணத்தை வெளிக்காட்டுவதாக தாங்கள்  கொள்கிறீர்களா ? 

(மேலே நீங்கள் -1 போட்ட எனது எழுத்துக்கள் குழு மனநிலை தொடர்பானது. இனம் தொடர்பானது அல்ல ) 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

ஒட்டாவாவில் நடைபெற்ற துன்பகரமான நிகழ்வு அந்த இனத்தின் குணத்தை வெளிக்காட்டுவதாக தாங்கள்  கொள்கிறீர்களா ? 

இல்லை.

1 hour ago, Kapithan said:

(மேலே நீங்கள் -1 போட்ட எனது எழுத்துக்கள் குழு மனநிலை தொடர்பானது. இனம் தொடர்பானது அல்ல ) 

குழு நிலை அல்ல. கருத்துக்கள் தொடர்பானது மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

இல்லை.

நன்றி.

எந்த ஒரு இனமும் இன்னொரு இனத்தைவிட உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. 

அதேபோல எந்த மனிதனும் எவனுக்கும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை. 

அதுதான் எனது point.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நன்றி.

எந்த ஒரு இனமும் இன்னொரு இனத்தைவிட உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. 

அதேபோல எந்த மனிதனும் எவனுக்கும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை. 

அதுதான் எனது point.

சாமியர்...இது புண்ணுக்கு புனுகு தடவுவது போன்றதுதான்...இது..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

இங்கே எனது பதிவுகள் பெருமாளின் ஏனைய இனங்களை குறைத்துக் கூறும் விதத்திலான எழுத்துக்களுக்கு பதிலாக வந்ததே தவிர வேறு நோக்கம் இல்லை. 

ஏனைய இனம்களை எங்கு நான் குறைத்து கூறினேன் ?

எனது கருத்துக்கள் உங்களால் புரிந்து கொள்ளபட முடியவில்லை என்றால் உங்களில் தான் பிழை பெருமாள் எழுதும் கருத்துக்கள் புரிந்துகொண்டு கருத்து எழுதுவது நல்லது பெருமாள் இப்படித்தான் எழுதுவார் எனவே படிக்காமல் கருத்து போட்டு மொக்கேனை படுவது நீங்கள்தான் .

2௦௦9 ல் நாங்கள்  அழியும்போது  சிங்களவர்கள் வெடிபோட்டு கிரிபத் உணவை பரிமாறி கொண்டாடிய செய்தி இன்றுவரை நீங்கள் கேள்வி படவில்லை போல் தெரிகிறது .

Edited by பெருமாள்
எழுத்து பிழை

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

ஏனைய இனம்களை எங்கு நான் குறைத்து கூறினேன் ?

எனது கருத்துக்கள் உங்களால் புரிந்து கொள்ளபட முடியவில்லை என்றால் உங்களில் தான் பிழை பெருமாள் எழுதும் கருத்துக்கள் புரிந்துகொண்டு கருத்து எழுதுவது நல்லது பெருமாள் இப்படித்தான் எழுதுவார் எனவே படிக்காமல் கருத்து போட்டு மொக்கேனை படுவது நீங்கள்தான் .

2௦௦9 ல் நான்கள் அழியும்போது  சிங்களவர்கள் வெடிபோட்டு கிரிபத் உணவை பரிமாறி கொண்டாடிய செய்தி இன்றுவரை நீங்கள் கேள்வி படவில்லை போல் தெரிகிறது .

சரி பாஸ், 

இதையெல்லாம் பெரிதாக எடுத்தால்?  விட்டுத்தள்ளுங்கோ. அடுத்த subject க்குப் போவோம்’  😀

7 hours ago, alvayan said:

சாமியர்...இது புண்ணுக்கு புனுகு தடவுவது போன்றதுதான்...இது..

இது நன்னாருக்கே 😀

  • கருத்துக்கள உறவுகள்

6 இலங்கையர்கள் படுகொலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்!

கனடாவில் 6 இலங்கையர்களை படுகொலை செய்ய வேட்டையாடும் கத்திக்கு ஒத்த கத்தியையே சந்தேகநபர் பயன்படுத்தியுள்ளதாக ஒட்டாவா பொலிஸ் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், இலங்கையர்கள் ஆறு பேரையும் கொலை செய்ய சந்தேகநபர் ஒரு கத்தியினை பயன்படுத்தினாரா அல்லது பல கத்திகள் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படுகொலைச் சம்பவத்தின் சந்தேகநபரான 19 வயதான இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா எதிர்வரும் வியாழக்கிழமை ஒட்டாவா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் ஒட்டாவா பொலிஸார் பல தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவா பகுதியில் இலங்கையை சேர்ந்த தாயும், அவரது நான்கு குழந்தைகளும் மற்றுமொரு இலங்கையரும் கொல்லப்பட்டதுடன் பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை துப்பாக்கிச்சூடு என்று ஒட்டாவா பொலிஸாரால் முதலில் தவறாக தகவல் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸ் ஊடக சந்திப்பின் போது சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 வயதுடைய சந்தேகநபரின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இறந்தவர்களின் பெயர் பட்டியலை மூன்று முறை சரி செய்து, மூன்றாவது மின்னஞ்சல் செய்தியில் இருந்து இறுதி பெயர் பட்டியல் பெறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த தவறுகளை ஒப்புக்கொண்ட ஒட்டாவா பொலிஸார், கொலை விசாரணைகள் மிகவும் சிக்கலானது என்றும், அவ்வப்போது தகவல்கள் மாறுவதாகவும் கூறியுள்ளனர்.

https://thinakkural.lk/article/295593

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறையினரின் தகவல் பரிமாற்றதில்  முன்னுக்கு பின் முரனான   செய்தி பரிமாற்றங்களை பார்க்க  முடிந்தது..உதாரணததிற்கு இறந்தவர்களை விட ,மற்றும் 7 பேர் காயப்பட்டுள்ளார்கள் என்ற தகவலைக் கூட செய்தி ஊடகங்களுக்கு வழங்கியருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, யாயினி said:

காவல்துறையினரின் தகவல் பரிமாற்றதில்  முன்னுக்கு பின் முரனான   செய்தி பரிமாற்றங்களை பார்க்க  முடிந்தது..உதாரணததிற்கு இறந்தவர்களை விட ,மற்றும் 7 பேர் காயப்பட்டுள்ளார்கள் என்ற தகவலைக் கூட செய்தி ஊடகங்களுக்கு வழங்கியருந்தார்கள்.

இது பெயர்களை விளங்கிக் கொள்வதில் ஏற்பட்ட சாதாரண குழப்பத்தினால் விளைந்ததென ஊகிக்கிறேன். இறந்த தாயின் முழுப் பெயரைப் பாருங்கள்: Darshani Banbaranayake Hama Walwwe Darshani Dilanthika Ekanyake

சிங்களப் பெயர்கள் பரிச்சயமில்லாத கனேடியர்கள், இது ஒரு பெயர் என்று புரிந்து கொள்ளக் கஷ்டப் படுவர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, alvayan said:

சாமியர்...இது புண்ணுக்கு புனுகு தடவுவது போன்றதுதான்...இது..

அல்வாயர்! இதுகளை நம்பாதேங்கோ...அவ்வளவும் ஆக்சன்...நடிப்பு 🤣

F_pBhrKXUAA3wYW.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2024 at 16:15, island said:

இங்கிலாந்து, கனடா,  பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து என பல நாடுகளில் தமிழர்களிடையே இது போன்ற  பல சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. அப்போதெல்லாம் இலங்கைப் பத்திரிகையில் கொட்டை எழுத்தில் செய்தி வரவில்லையே

ஐயா...! நான் ஒன்றும் நடக்காததை  இட்டு வைச்சு காழ்ப்புணர்வில் சொல்லவில்லை. உலக நாடுகளில் எங்கே குண்டு வெடித்தாலும் இலங்கையிலிருந்து விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் விடுதலைப்புலிகளுக்கும் அவர்களுக்கும் முடிச்சுப்போட்டு பத்திரிகைகளில்  கொட்டை எழுத்திலும் தொலைக்காட்சியிலும்செய்தி வந்ததே, கொழும்பில் பல காரணங்களுக்காக போலீசில் பதிந்து வசித்த தமிழரை சுற்றி  வளைத்து பிடித்து தாக்குதல் நடத்த வந்த புலிகள் என செய்திகள் வெளியிட்டு சிங்களம் மகிழவில்லை?  மக்களை ஏமாற்றவில்லை இலங்கை செய்திகள்? அப்பாவி இளைஞரை கொன்றுவிட்டு அவர்ளுக்கு அருகில் ஆயுதங்களை வைத்து புகைப்படம் எடுத்து, உறவுகளை இவர்கள் புலிகள் என்று கைப்பட எழுதித்தந்தாற்தான் உடலை உங்களிடம் கையளிப்போமென மிரட்டி கையெழுத்து வாங்கி பத்திரிகைகளில் வெளியிடவில்லை? இங்கு இறந்தவர்களை பற்றி நாங்கள் விமர்சிக்கவில்லை,  கொலை செய்தவனையும் இலங்கை அரசின் செயற்பாடுகளையுமே விமர்சிக்கிறோம். அது ஏன் பலருக்கு வெறுப்பை உண்டாக்கி வேறு திசையில் கொண்டு போகிறார்கள்? விடுதலைப்புலிகள் என்கிற பெயரில் பல ஆயிரம் தமிழ் மக்களை கொன்று குவித்து பாற்சோறு உண்டு, வெடி கொழுத்தி கொண்டாடி, அந்த வெற்றியை நாடளாவிய ரீதியில் பெரிய அளவில் கொண்டாட முனைப்புகள் செய்யும் போது மழை கொட்டிதீர்த்து தென்பகுதி வெள்ளத்தில் மிதந்தபோது, தம் அழிவிலிருந்து மீண்டெழாத தருணத்திலும் அந்த மக்களுக்கு உணவுகளை திரட்டி வாகனகளில் அனுப்பி வைத்தவர்கள் நாம். மணலாற்றில் போர்முனையில்  இறந்த போராளிகளின் உடல்களை அவமானப்படுத்தி மகிழ்ந்து வக்கிரபுத்தியை வெளிப்படுத்தியவர்கள் யார்? தங்கள் மாவீரரின் புகழுடலுக்கு தாம் இறுதி மரியாதை செய்வது போல், இறந்த இராணுவ வீரரும் இராணுவ இறுதி மரியாதைக்குரியவர்களே என எண்ணி, அவர்களுக்குரிய உடை அணிவித்து, உரிய மரியாதையுடன் செஞ்சிலுவை சங்கம் ஊடாக அனுப்பி வைத்தபோது, அவர்களின் உடலை  வாங்க மறுத்து அந்த இடத்திலேயே கொழுத்தி அவமரியாதை செய்தவர்கள் யார்? அதன்பின் விடுதலைப்புலிகள் இறந்த இராணுவத்தினரின் உடலை தகனம் செய்து சாம்பலை அவர்களின் உறவுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். ஏதோ நாங்கள் நாகரிகம் அற்றவர்கள் என பாடம் நடத்துபவர்கள், நடந்த உண்மை தெரியாமல் பகட்டுக்கு எழுதித்தள்ளுகிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

சாத்தான் இங்கு நடை பெற்றது ஒரு குடும்பத்துக்குள் நடந்த தனிப்பட்ட  கொலைச்சம்பவம். இதே போன்ற பல கொலைச்சம்பவங்கள் புலம் பெயர் நாடுகளில் தமிழர் குடும்பங்களுக்குள்ளும் நடைபெற்றுள்ளன. இதற்குள் அரசியலை இழுத்து பந்தி பந்தியாக  புராணம் பாடும் அளவுக்கு நட்டு கழன்றவர்களாக நாம் இருக்கவேண்டியதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, island said:

On 13/3/2024 at 10:49, Kapithan said:

இராணுவ முகம்களை, இராணுவத் தளங்களை வெற்றிகொள்ளும்போதும் அதன் பின்னரும் எல்லோரைப் போன்று நானும் இறுமாப்பும், பெருமிதமும் கொண்டிருந்தேன். 

ஆனால் பின்னர் வெளிவரும் படங்களில் கொல்லப்பட்ட இராணுவத்தினர்களின் உடல்களையும் போராளிகளின் புகளுடல் ஊர்திகளையும்  காணும்போது எனது பெருமிதம் காணாமல் போய்விடும். 

ம் ..... நாமேதோ நாகரீகமற்றவர்கள், மனிதநேயமற்றவர்கள் என்பதுபோல் எழுதிய கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதில், சிங்கள அரசாங்கம் வெளியிட்ட செய்திகளின் முறை பற்றிய விளக்கம் எழுதப்போய் அது பந்தியாகி உங்களுக்கு வாசிச்சு நட்டு களர வைத்ததற்காக தாங்கள் என்னை மன்னித்தருள்க.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

ம் ..... நாமேதோ நாகரீகமற்றவர்கள், மனிதநேயமற்றவர்கள் என்பதுபோல் எழுதிய கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதில், சிங்கள அரசாங்கம் வெளியிட்ட செய்திகளின் முறை பற்றிய விளக்கம் எழுதப்போய் அது பந்தியாகி உங்களுக்கு வாசிச்சு நட்டு களர வைத்ததற்காக தாங்கள் என்னை மன்னித்தருள்க.

இந்தத் திரியில் நீங்கள் பதிலளித்த எந்த கருத்திலாவது தமிழரை பற்றி அவதூறு கூறிய கருத்து இருந்ததா?  அது எது என்று கூறமுடியுமா?  அப்படியிருக்க அவ்வாறு இருந்ததாக பச்சைப்பொய்கூறியதும்  தேவையற்று அரசியலை இழுத்ததும் ஏன்? 

மாறாக இதை வைத்து அந்த குடும்பத்தை நோக்கிய இனவாத கருத்துக்களே இங்கு வைக்கப்பட்டிருந்தன. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

அந்த குடும்பத்தை நோக்கிய இனவாத கருத்துக்களே இங்கு வைக்கப்பட்டிருந்தன. 

என்னது.... ? அந்த குடும்பத்தை நோக்கிய இனவாத கருத்துக்களா? நான் எழுதினேனா?  எங்கேயென காட்டுங்கள். நான் எழுதியது, கொலையாளியை பற்றியதும் இலங்கை செய்திகள் பற்றியதும். வேறேதும் யான் அந்தக்குடும்பத்தை பற்றி எழுதவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, satan said:

என்னது.... ? அந்த குடும்பத்தை நோக்கிய இனவாத கருத்துக்களா? நான் எழுதினேனா?  எங்கேயென காட்டுங்கள். நான் எழுதியது, கொலையாளியை பற்றியதும் இலங்கை செய்திகள் பற்றியதும். வேறேதும் யான் அந்தக்குடும்பத்தை பற்றி எழுதவில்லை.  

நீங்கள் எழுதியதாக நானும் குறிப்பிடவில்லையே! அவ்வாறான கருத்துக்கள் இந்த திரியில் வைக்கப்பட்டிருந்த போதிலும் அதைவிடுத்து தமிழருக்கு எதிராக என்னால் அவதூறு கூறப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக நீங்கள் தெரிவித்த கருத்தைப்பற்றியே கேள்வி கேட்டேன். அந்த கருத்து என்ன என்று கேள்வி கேட்டேன். அதற்கு பதிலளிக்க உங்களால் முடியாததால் வழமையான பாணியில் வேறு ஒன்றைப் பிடித்து தொங்க முயற்சித்துள்ளீர்கள். பரவாயில்லை உங்களால் அப்படியாக என்னால் எழுதப்பட்ட  கருத்தைக் காட்ட முடியாது என்பதை புரிந்து கொள்ளுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, island said:

நீங்கள் எழுதியதாக நானும் குறிப்பிடவில்லையே! அவ்வாறான கருத்துக்கள் இந்த திரியில் வைக்கப்பட்டிருந்த போதிலும் அதைவிடுத்து தமிழருக்கு எதிராக என்னால் அவதூறு கூறப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக நீங்கள் தெரிவித்த கருத்தைப்பற்றியே கேள்வி கேட்டேன்.

16 hours ago, island said:

இந்தத் திரியில் நீங்கள் பதிலளித்த எந்த கருத்திலாவது தமிழரை பற்றி அவதூறு கூறிய கருத்து இருந்ததா?  அது எது என்று கூறமுடியுமா?  அப்படியிருக்க அவ்வாறு இருந்ததாக பச்சைப்பொய்கூறியதும்  தேவையற்று அரசியலை இழுத்ததும் ஏன்? 

இங்கு நான் குறிப்பிட்டதுகடந்தகால தமிழர் பற்றிய செய்திகளுக்கு இலங்கைச் செய்தியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றியதே, நான் யாரிடம்? எங்கே? உங்களைப்பற்றி உண்மைக்கு புறம்பான செய்தி தெரிவித்தேனென சொல்வது சிவத்தப்பொய் என உங்கள் உரைநடையில் சொல்லலாமா? நான் எழுதியது இலங்கை செய்திகள் பற்றியதே என மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இதில் பச்சைப்பொய் சிவத்தப்பொய் என்று ஒன்றுமில்லை.

21 hours ago, satan said:

அப்போதெல்லாம் இலங்கைப் பத்திரிகையில் கொட்டை எழுத்தில் செய்தி வரவில்லையே

21 hours ago, satan said:

உலக நாடுகளில் எங்கே குண்டு வெடித்தாலும் இலங்கையிலிருந்து விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் விடுதலைப்புலிகளுக்கும் அவர்களுக்கும் முடிச்சுப்போட்டு பத்திரிகைகளில்  கொட்டை எழுத்திலும் தொலைக்காட்சியிலும்செய்தி வந்ததே,

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

இங்கு நான் குறிப்பிட்டதுகடந்தகால தமிழர் பற்றிய செய்திகளுக்கு இலங்கைச் செய்தியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றியதே, நான் யாரிடம்? எங்கே? உங்களைப்பற்றி உண்மைக்கு புறம்பான செய்தி தெரிவித்தேனென சொல்வது சிவத்தப்பொய் என உங்கள் உரைநடையில் சொல்லலாமா? நான் எழுதியது இலங்கை செய்திகள் பற்றியதே என மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இதில் பச்சைப்பொய் சிவத்தப்பொய் என்று ஒன்றுமில்லை.

எனக்கு முதலில் நீங்கள் கொடுத்த பதில் தொடர்பாக கேள்வி கேட்டதற்கு (அதாவது  இது தனிப்பட்ட குடும்ப விவகாரம் இதற்குள் அரசியலை ஏன் இழுக்கின்றீர்கள் என்று  நான் கேட்டதற்கு) 

 நாமேதோ நாகரீகமற்றவர்கள் மனித நேயமற்றவர்கள் என்ற பொருள்பட எழுதிய கருத்துக்கு வழங்கப்பட்ட பதில் இப்படி நீண்டுவிட்டது  என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.  அப்படி நான் எழுதியதாக நீங்கள் கூறியது உண்மைக்கு புறம்பானது. அந்த கருத்து எங்கே உள்ளது என்று  இந்தத் திரியில் காட்டுமாறு மட்டுமே நான் கேட்கிறேன். முடிந்தால் அதை மட்டும் காட்டுங்கள். இல்லை என்றால் நான் அப்படி எழுதியதாக நீங்கள் கூறியது பொய் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.