Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                        கனடாவில் கார் களவு.-_
                                                        
         அண்மையில் இரண்டு நாள் கனடா என்று புறப்பட ஆயத்தமானோம்.அயலில் உள்ள நண்பருக்கு பயணம் பற்றி சொல்லி ஏதாவது வாங்கிவரவா என்றேன்.

          நாங்களும் அடுத்த கிழமை போக இருக்கிறோம்.ஆனபடியால் எதுவும் தேவையில்லை.காரில போறீங்கள் கவனமா போட்டு வாங்கோ.

         எதுக்கும் திரும்பி வரும்போது பஸ்சிலதான் வாறீங்களோ தெரியாது.கார் கொள்ளை தலைரித்தாடுது.எனது தம்பியின் றைவேயில் நின்ற புதுக்காரை சொந்த கார் எடுக்குமாப் போல கொண்டு போட்டாங்கள்.கமராவில் எல்லாம் தெளிவாக விழுகுது.முக மூடிகளை போட்டிருக்கிறார்கள்.இனி யாரைப் பிடிக்கிறது.களவு போய் 3 மாதமாச்சு எந்த தகவலும் இல்லை என்கிறார்களாம்.

           சரி என்று கனடா(மிசிசாக்குவா) போனால் ஸ்ரேறிங் லொக் வைத்திருக்கிறீங்களோ?இஞ்சை கார் களவு சரியான மோசம்.

            பொலிஸ்காரனே சொல்லுறான் வீட்டை உடைத்து கார் திறப்பு கேக்கிறாங்கள்.கார் திறப்புகளை முன்னுக்கே வையுங்கோ என்று.

             இது எப்படியான பாதுகாப்பென்றே விழங்கவில்லை.

             இதைவிட காருக்குள்ளேயே திறப்பை வைத்துவிட்டே வரலாமே?வீணாக உடைத்த கதவுகளை யன்னல்களையும் திருத்தத் தேவையில்லை.

              கனடா உறவுகளுக்கும் இதுபோல ஏதாவது நடந்ததோ?
  
               நடந்தா வெட்கப்படாம சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் ஒருவர் சொன்னார் ஒன்ராரியோ இலக்க தகட்டுடன் நைஜீரியாவில் கார் ஓடுகிறது என்று. களவெடுக்கும் கார்கள் கப்பலில் ஏற்றி ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்ப படுகிறதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கனடாவில் கார் திருட்டு அதிகமாக இருக்கலாம், ஆனால் அமெரிக்கா தான் முதலாவதாக, இதிலும், வரும் என்று நினைக்கின்றேன்........😀

ஒரு தடவை நண்பன் ஒருவன் விடிகாலைப் பொழுது ஒன்றில் அவசரமாக கூப்பிட்டிருந்தான். ஓடிப் போய்ப் பார்த்தால், நண்பனின் கார் நான்கு சில்லுகளும் இல்லாமல் மரக்கட்டைகளில் நின்று கொண்டிருந்தது. நான்கு ஹாண்டா சில்லுகளுக்கு களவெடுத்தவர்களுக்கு ஓர்டர் வந்திருக்குது போல, நண்பனின் வீட்டை வந்து இலேசாக கழட்டிக் கொண்டு போயிருக்கினம்......😀

கோவிட் காலத்தில், எங்கும் வைரஸ் எதிலும் வைரஸ் என்ற கலக்கத்தில், பலர் காரை பூட்ட மறந்து விட்டார்கள். நானும் ஒரு நாளோ சில நாட்களோ பூட்டாமல் விட்டு விட்டேன். ஒரு நாள், என்னத்தை உடைக்கிறது, அது தானே திறந்தே இருக்குது, கார் உள்ளுக்கிருந்த சில பொருட்களை அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள். ஊரிலிருந்து 800 பாட்டுகள் அடித்துக் கொண்டு வந்த யுஎஸ்பி டிரைவ் ஒன்றும் போய் விட்டது. அது தான் பெரிய கவலை. 

800 பாட்டுகளில் எத்தனை பாட்டுகளை அந்தக் 'களவாணிப் பயல்கள்' கேட்டிருப்பார்களோ... அது தான் அவர்களுக்கான தண்டனை.....😀 

Edited by ரசோதரன்

ஓம் இங்கு கார் களவு மிகவும் அதிகமாக நடக்கின்றது . கடந்த சனவரி (2024) இல் மட்டும் 963 கார்கள் திருடப்பட்டன. Wheel Lock போட்டாலும், இலகுவாக அதனை வெட்டி அகற்றி விட்டு, களவு எடுக்கின்றனர். வீட்டினுள் faraday box போன்ற, திறப்புகளில் இருந்து மின் சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதை தடுக்கும் பைகளுக்குள் கார் திறப்பை போட்டு வைத்தால், காரைத் திறக்க / இயக்க முடியாவிடின் வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து, வீட்டுக்காரர்களை துப்பாக்கி முனையில் வைத்து கொண்டு, மிரட்டி கார் திறப்புகளை வாங்கி செல்கின்றனர்.

ஒன்ராரியோவில், வேறு நாடுகளில் இருந்து 10 நாள் விசிட்டர் வீசாவில் வந்தெல்லாம் காரைக் களவு எடுக்கின்றனர். அந்தளவுக்கு காரைத் திருடுவதற்கான ஒரு சொர்க்கபுரியாக கனடா, முக்கியமாக ஒன்ராரியோ உள்ளது.

இங்கு இருக்கும் சட்டங்கள் மிக மென்மையாக (Lenient )இருப்பது இதற்கு முக்கிய காரணம். கார் திருட்டில் கைதாகின்றவர்கள் அடுத்த நாளே Bail லில் வந்து, மேலும் திருடுகின்றனர். அதிலும் அனேகமானோர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள். எனவே, சட்டப்படி அவர்களை உள்ளே வைத்து இருக்க முடியாது. கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், அவர்கள் 18 வயதை அடைந்தவுடன், அந்த குற்றம் அவர்களின் records இல் இருந்து நீக்கப்பட்டு விடும். அதன் பின் இன்னொரு குற்றம் செய்யும் வரைக்கும், அவர்கள் குற்றமே செய்யாதவர்களாக கணிக்கப்படுவர். எனவே தான் குழுக்கள் வன்முறைக் குழுக்கள் 18 வயதுக்கும் குறைந்தவர்களைக் திரட்டி இவ்வாறு திருட்டில் ஈடுபட வைக்கின்றனர்.

லிபரல் ஆட்சியில் இல்லாத மாகாணங்களின் முதல்வர்கள், மத்திய அரசிடம் கிரிமினல் கோட் (Criminal code) இனை மாற்றி Bail  லில் வராத மாதிரி செய்யச் சொல்லி பல தடவைகள் கேட்டுவிட்டனர்.  ருடோ போன்ற குற்றவாளிகளுக்கு இடம் கொடுக்கும் ஒருவர் மத்தியில் ஆட்சியிலிருக்கும் வரைக்கும் இது மாறாது.

4 hours ago, nunavilan said:

நண்பர் ஒருவர் சொன்னார் ஒன்ராரியோ இலக்க தகட்டுடன் நைஜீரியாவில் கார் ஓடுகிறது என்று. களவெடுக்கும் கார்கள் கப்பலில் ஏற்றி ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்ப படுகிறதாம்.

ஒன்ராரியோவில் திருடப்படும் கார்கள், மொன்றியலுக்கு கொண்டு செல்லப்பட்டு, துறைமுகமூடாக மத்திய கிழக்கு நாடுகளுக்கே அதிகம் அனுப்பப்படுகின்றது. அதிலும் முக்கியமாக UAE இற்கு.  இவ்வாறு வருவது அந்த நாட்டு அரசுக்கு நன்கு தெரிந்தாலும், அதை அவர்களின் பக்கம் தடுக்க எந்த முயற்சிகளையும் செய்வது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Car thefts have escalated to “national crisis” levels, according to the Insurance Bureau of Canada, an industry group, which said insurers paid out a record 1.2 billion Canadian dollars, or about $890 million, in theft claims in 2022. For victims, it's a dizzying, and sometimes traumatizing, experience.Feb 25, 2024

https://www.nytimes.com/2024/02/24/world/canada/toronto-car-theft-epidemic.html#:~:text=Car thefts have escalated to,in theft claims in 2022.&text=For victims%2C it's a dizzying%2C and sometimes traumatizing%2C experience.

ஆபிரிக்காவில் கனேடிய /வட அமெரிக்க வாகனங்கள். 

😉

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

கனடாவில் கார் திருட்டு அதிகமாக இருக்கலாம், ஆனால் அமெரிக்கா தான் முதலாவதாக, இதிலும், வரும் என்று நினைக்கின்றேன்........😀

ஒரு தடவை நண்பன் ஒருவன் விடிகாலைப் பொழுது ஒன்றில் அவசரமாக கூப்பிட்டிருந்தான். ஓடிப் போய்ப் பார்த்தால், நண்பனின் கார் நான்கு சில்லுகளும் இல்லாமல் மரக்கட்டைகளில் நின்று கொண்டிருந்தது. நான்கு ஹாண்டா சில்லுகளுக்கு களவெடுத்தவர்களுக்கு ஓர்டர் வந்திருக்குது போல, நண்பனின் வீட்டை வந்து இலேசாக கழட்டிக் கொண்டு போயிருக்கினம்......😀

கோவிட் காலத்தில், எங்கும் வைரஸ் எதிலும் வைரஸ் என்ற கலக்கத்தில், பலர் காரை பூட்ட மறந்து விட்டார்கள். நானும் ஒரு நாளோ சில நாட்களோ பூட்டாமல் விட்டு விட்டேன். ஒரு நாள், என்னத்தை உடைக்கிறது, அது தானே திறந்தே இருக்குது, கார் உள்ளுக்கிருந்த சில பொருட்களை அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள். ஊரிலிருந்து 800 பாட்டுகள் அடித்துக் கொண்டு வந்த யுஎஸ்பி டிரைவ் ஒன்றும் போய் விட்டது. அது தான் பெரிய கவலை. 

800 பாட்டுகளில் எத்தனை பாட்டுகளை அந்தக் 'களவாணிப் பயல்கள்' கேட்டிருப்பார்களோ... அது தான் அவர்களுக்கான தண்டனை.....😀 

இந்த சம்பவம் நடந்தது 15 வருடமாவது இருக்கும். நண்பன் ஒருவர் (அப்போ திருமணம் செய்யவில்லை) நண்பர்களோடு ல் இருந்தவர். அப்போ இருந்த தமிழ் குடும்பம் இரவு உணவுக்காக அழைத்தது. பனியும் கொட்டிய படி உள்ளது. குறிப்பிட்ட நண்பரும் இன்னும் சில அவரின் நண்பர்களையும் கூட்டிக்கொண்டு பின்னேரம் போல் ( 6 - 6:30) போயடைந்தார்கள். போன நண்பர் அதிகம் குடிக்காதவர். கொஞ்சம் வைனுடன் சாப்பிடுபவர். மற்றவர்கள் சொல்ல தேவை இல்லை.  மது, உணவு முடிய 11:30  ஆகி விட்டது. பனியும்  சுமாராக கொட்டி விட்டது. 
"சரி காணும் வாங்கோடாப்பா" என நண்பர்களையும் கூட்டிக் கொண்டு காரை நோக்கி செல்கிறார்கள். காரில் எல்லோரும் ஏறிய பின்னர் காரை start பண்ண எந்த சத்தமும் வரவில்லை. பற்றரி போட்டுது போல இருக்கு  "இறங்கி தள்ளுங்கோடா "என்று கூறி இருக்கிறார். அவர்கள் காரை கொஞ்ச தூரம் தள்ளியும் கார்  startஆக வில்லை. கார் Hood ஐ திறந்து பார்த்த போது என்ஞினை காணவில்லை.😞
அந்த நண்பர் அத்தோடு நியூயோர்க்கை விட்டு பலோ அல்டோ(Palo alto), கலிவோர்ணியாவில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்கிறார். எப்போதும் நியூயோர்க் என்ற பேச்சு வந்தாலே அவரின் இந்த அனுபவத்தை சகலரிடமும் பகிர்வார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

இந்த சம்பவம் நடந்தது 15 வருடமாவது இருக்கும். நண்பன் ஒருவர் (அப்போ திருமணம் செய்யவில்லை) நண்பர்களோடு ல் இருந்தவர். அப்போ இருந்த தமிழ் குடும்பம் இரவு உணவுக்காக அழைத்தது. பனியும் கொட்டிய படி உள்ளது. குறிப்பிட நண்பரும் இன்னும் சில அவரின் நண்பர்களையும் கூட்டிக்கொண்டு பின்னேரம் போல் ( 6 - 6:30) போயடைந்தார்கள். போன நண்பர் அதிகம் குடிக்காதவர். கொஞ்சம் வைனுடன் சாப்பிடுபவர். மற்றவர்கள் சொல்ல தேவை இல்லை.  மது, உணவு முடிய 11:30  ஆகி விட்டது. பனியும்  சுமாராக கொட்டி விட்டது. 
"சரி காணும் வாங்கோடாப்பா" என நண்பர்களையும் கூட்டிக் கொண்டு காரை நோக்கி செல்கிறார்கள். காரில் எல்லோரும் ஏறிய பின்னர் காரை start பண்ண எந்த சத்தமும் வரவில்லை. பற்றரி போட்டுது போல இருக்கு  "இறங்கி தள்ளுங்கோடா "என்று கூறி இருக்கிறார். அவர்கள் காரை கொஞ்ச தூரம் தள்ளியும் கார்  startஆக வில்லை. கார் Hood ஐ திறந்து பார்த்த போது என்ஞினை காணவில்லை.😞
அந்த நண்பர் அத்தோடு நியூயோர்க்கை விட்டு பலோ அல்டோ(Palo alto), கலிவோர்ணியாவில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்கிறார். எப்போதும் நியூயோர்க் என்ற பேச்சு வந்தாலே அவரின் இந்த அனுபவத்தை சகலரிடமும் பகிர்வார்.

🤣🤣.....

இங்கு  கார்களிலிருந்து Catalytic Converterஐ வெட்டி எடுப்பது தான் மிகச் சமீப காலம் வரை பெரிய திருட்டாக இருந்தது. ஒரு பெரிய கும்பல் ஆயிரக்கணக்கான பாகங்களுடன் சமீபத்தில் மாட்டும்பட்டது.

ஒரு வார விடுமுறை நாள் அதிகாலை 6 மணி இருக்கும். வீட்டின் முன்னால் யாரோ மோட்டார் சைக்கிள் ஓடுவது போன்ற சத்தம். பக்கத்து வீட்டில் யாரோ விருந்தாளிகள் வந்திருக்கின்றார்கள் போல, ஏதோ காலையிலேயே ஓடுகின்றார்களாக்கும் என்று நினைத்து விட்டு, அப்படியே எட்டிப் பார்க்காமல் இருந்து விட்டோம்.

சில மணி நேரங்களின் பின்னர் போலீஸ் கார்களின் நீலமும், சிவப்புமான வெளிச்சத்தை பார்த்து, வெளியில் போன பின் தான் தெரிந்தது..........பக்கத்து வீட்டுக்காரர்களின் ஒரு காரின்  Catalytic Converterஐ வெட்டி எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள் என்று. சைலன்சர் குழாயையும் சேர்த்து அரிந்து எடுத்துப் போயிருக்கின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

நண்பர் ஒருவர் சொன்னார் ஒன்ராரியோ இலக்க தகட்டுடன் நைஜீரியாவில் கார் ஓடுகிறது என்று. களவெடுக்கும் கார்கள் கப்பலில் ஏற்றி ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்ப படுகிறதாம்.

இதையே தான் மற்றவர்களும் சொல்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை என்னவென்றால் வாகனக் காப்பீடு இப்பிடி கார் களவு போகும் இடங்களில் வாழ்பவர்களுக்கு வருடா வருடம் கூடிக்கொண்டு போகின்றது.

மாசம் $10000 சம்பாதித்தாலும் வாழ்வு என்னவோ வறுமைக் கோட்டுக்கு சற்று மேல்.. அவ்வளவு தான் கனடா வாழ்வு!!😭😭😭

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

இங்கு இருக்கும் சட்டங்கள் மிக மென்மையாக (Lenient )இருப்பது இதற்கு முக்கிய காரணம். கார் திருட்டில் கைதாகின்றவர்கள் அடுத்த நாளே Bail லில் வந்து, மேலும் திருடுகின்றனர். அதிலும் அனேகமானோர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள். எனவே, சட்டப்படி அவர்களை உள்ளே வைத்து இருக்க முடியாது. கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், அவர்கள் 18 வயதை அடைந்தவுடன், அந்த குற்றம் அவர்களின் records இல் இருந்து நீக்கப்பட்டு விடும். அதன் பின் இன்னொரு குற்றம் செய்யும் வரைக்கும், அவர்கள் குற்றமே செய்யாதவர்களாக கணிக்கப்படுவர். எனவே தான் குழுக்கள் வன்முறைக் குழுக்கள் 18 வயதுக்கும் குறைந்தவர்களைக் திரட்டி இவ்வாறு திருட்டில் ஈடுபட வைக்கின்றனர்.

கூடுதலாக சிறுவர்களே இதில் ஈடுபடுவதாக சொன்னார்கள்.

நீங்கள் போட்ட புள்ளிகளை தொடுக்கும் போது தான் இதைப்பற்றிய முழு படமும் வருகிறது.

முழுமையான தகவல்களுக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

இங்கு  கார்களிலிருந்து Catalytic Converterஐ வெட்டி எடுப்பது தான் மிகச் சமீப காலம் வரை பெரிய திருட்டாக இருந்தது. ஒரு பெரிய கும்பல் ஆயிரக்கணக்கான பாகங்களுடன் சமீபத்தில் மாட்டும்பட்டது.

நீங்கள் சொல்வது சரி.

இது பரவலாக முழு அமெரிக்கா இங்கிலாந்து என்று நடக்கிறது.

எல்லா கார்களிலும் அல்ல.

2010 க்க உள்பட்ட கார்களுக்கு ஏதோ சிறிய பிளாட்டினம் உள்ளே இருப்பதாக சொல்கிறார்கள்.

இங்கு கார்களவு ரயர் களவு என்பது நல்ல பணக்கார இடங்களில் அதிகாலை 2-4 க்கு அலுவல் நடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

கூடுதலாக சிறுவர்களே இதில் ஈடுபடுவதாக சொன்னார்கள்.

நீங்கள் போட்ட புள்ளிகளை தொடுக்கும் போது தான் இதைப்பற்றிய முழு படமும் வருகிறது.

முழுமையான தகவல்களுக்கு நன்றி.

அமெரிக்காவிலும் பதின்ம வயதுக் காரர்களை வைத்து குற்றக் கும்பல்கள் இப்படி இயங்கி வருகின்றன. துறைமுகங்கள் அதிகம் இருக்கும் கிழக்கு, தென் கிழக்கு, மேற்குக் கரைகளை ஒட்டிய நகரங்கள் தான் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, கிழக்குக் கரையின், நியூ ஜேர்சியில் திருடப் படும் வாகனங்கள் எலிசபெத் துறைமுகமூடாக (Sea Port) ஆபிரிக்க நாடுகளுக்குக் கடத்தப் படுவதாக சொல்கிறார்கள். சுங்கப் பரிசோதனை, பாதுகாப்பெல்லாம் இறுக்கமான ஒரு அமெரிக்க துறைமுகத்தினுள் இருப்போரின் ஒத்துழைப்பின்றி இதைச் செய்ய முடியுமென நான் நம்பவில்லை.

கனடாவை விட அமெரிக்காவில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்க இங்கே துப்பாக்கி வைத்திருக்கும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது ஒரு காரணம். அண்மையில், வாசிங்ரன் டி.சி யின் புறநகரப் பகுதியில், அதிகாலை சத்தம் கேட்டு விழித்த ஒரு வீட்டுக் காரர், தனது கைத்துப்பாக்கியோடு வெளியே போய்ப் பார்த்த போது, அவரது காருக்கு அருகில் ஒருவரைக் கண்டிருக்கிறார். உடனே வெடி தான், காருக்கு அருகில் நின்றவர் மரணமானார். மரணித்தவர் 15 வயது சிறுவன். ஆதாரங்களைப் பரிசோதித்த காவல் துறை, சுட்ட வீட்டுக் காரரை கைது செய்யக் கூட இல்லை. அதிகாலை 3 மணிக்கு, தன் 15 வயது மகன் வீட்டில் இருக்கிறானா என்று தேடிப் பார்க்க துப்பில்லாத பெற்றோர், சுட்டவரைக் கைது செய்யும் படி ஆர்ப்பாட்டம் செய்தும் எதுவும் நடக்கவில்லை.

இப்படியான சம்பவங்கள் ஓரளவுக்கு அமெரிக்காவில் கனடா போன்ற நிலை வராமல் வைத்திருக்கின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Justin said:

சுங்கப் பரிசோதனை, பாதுகாப்பெல்லாம் இறுக்கமான ஒரு அமெரிக்க துறைமுகத்தினுள் இருப்போரின் ஒத்துழைப்பின்றி இதைச் செய்ய முடியுமென நான் நம்பவில்லை.

இதைத் தான் நானும் நினைத்தேன்.வின் நம்பரை எல்லாம் எப்படி மாற்றுகிறார்கள்.

கனடாவில் அண்மையில் ஒரே காரை திரம்ப திரும்ப களவெடுத்து 

திரும்ப திரும்ப வின் நம்பருகளை மாற்றி விற்று கடைசியில் பிடிபட்டிருக்கிறார்கள்.

எப்படி அதற்கு ரெஜிஸ்ரேசன் செய்கிறார்கள் என்றால்

கனடாவில் தனிப்பட்டவர்களுக்கு மோட்டர் வேகிள் திணைக்கள வேலைகளை பகிர்ந்தளிக்கிறார்கள்.

மேற்படி 3 தடவையும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் ஏஜென்சியில் பத்திரங்கள் மாற்றப்பட்டு அவர்களும் பிடிபட்டுள்ளனராம்.

1 hour ago, பகிடி said:

பிரச்சனை என்னவென்றால் வாகனக் காப்பீடு இப்பிடி கார் களவு போகும் இடங்களில் வாழ்பவர்களுக்கு வருடா வருடம் கூடிக்கொண்டு போகின்றது.

வாகன காப்பீட்டு கம்பனிகள் எப்படியும் கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்களிடம் சுரண்டிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

7 hours ago, நிழலி said:

அதிலும் அனேகமானோர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள். எனவே, சட்டப்படி அவர்களை உள்ளே வைத்து இருக்க முடியாது. கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், அவர்கள் 18 வயதை அடைந்தவுடன், அந்த குற்றம் அவர்களின் records இல் இருந்து நீக்கப்பட்டு விடும். அதன் பின் இன்னொரு குற்றம் செய்யும் வரைக்கும், அவர்கள் குற்றமே செய்யாதவர்களாக கணிக்கப்படுவர்.

போன வருஷம் recreation center க்கு ஜிம் க்கு போயிருந்த பொழுது  எனது உடைகள் கைப்பை பர்ஸ் உள்ளிட்டவற்றை  ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துப் பூட்டிவிட்டுத்தான் ஜிம்முக்கு போனேன், இரவு 11 மணி அப்படி வந்து திறந்து பார்த்தபொழுது பர்சை   காணவில்லை. உடனே வீட்டுக்கு ஓடி வந்து  வங்கிக் கணக்கை திறந்து பார்த்தால் 200 டாலர்ஸ் வரை கிரெடிட் கார்டில் இருந்து போயிருந்தது, உடனே வங்கிக்கு  அழைப்பை எடுத்து என்னுடைய வங்கி அட்டைகளை deactivate செய்துவிட்டு  காவல்துறையிடம் புகார் அளித்திருந்தேன். இத்தனைக்கும் என்னுடைய அனைத்து அடையாள அட்டைகள், வாகன சாரதி பத்திரம்,   $300தாள் காசு, என எல்லாமே போய்விட்டன, அடுத்த நாள் வேலைக்கு போக முடியவில்லை. இழந்த பத்திரங்களைப் பெற  பெற  ஒரு பத்து நாள் ஆனது.

 ஒரு மாதம் கழித்து களவு செய்திருந்தவனை பிடித்திருந்தார்கள் போலீசார். களவு  செய்தவன் ஒரு 15 வயது சோமாலியன்.

 பெயர் முஹமட்.

 சில மாதங்களுக்கு முன்னர் இளம் வயது குற்றவாளிகளை சீர்திருத்தம் அமைப்பொன்று மேற்படி நபர் தான் செய்த குற்றத்தை உணர்ந்து கொண்டதாகவும் அவரை என்னை வந்து சந்திக்கும்படியும் கேட்டுக் கொண்டார்கள். நான் கேட்டேன் வந்து சந்திப்பதற்கு எனக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தருவீர்கள் என்று? மறுபுறத்தில் என்னுடன் கதைத்துக் கொண்டிருந்த பெண்ணோ அந்த குற்றவாளி திருந்துவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் எந்த பணமும் தர முடியாது என்றும் சொன்னார்.

 இந்த விஷயத்தை வீட்டில் மனுஷியிடம் சொன்ன பொழுது என்னை கடிந்து கொண்டு என்னைப் போய் அவனை சந்திக்கும்படி சொல்லப்பட்டது.

 நான் போகவில்லை

 இரண்டு காரணங்கள்

 ஒன்று :சொந்த ஊர் சோமாலியா இரண்டாவது காரணம் :பெயரோ முகமட் இப்படிப்பட்டவர்கள் திருந்துவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியிலையும் முந்தி உப்பிடி கார்க்களவுகள் எக்கச்சக்கமாய் நடந்தது. இப்பவும் கார் உள்ளுக்குள் இருக்கும் முக்கிய உதிரி பாகங்களை திருடுகின்றார்கள். இருந்தாலும் முந்திய மாதிரி இல்லாமல் கார்க்களவை கட்டுப்படுத்தி விட்டார்கள்.

இங்கே கார்க்களவுக்கு பிரபலமானவர்கள் ஆரெண்டால் போலந்துகாரர்,உக்ரேன்காரர்,ரஷ்யக்காரர்,ருமேனியா பல்கேரியா ஆக்கள் தான் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இங்கே கார்க்களவுக்கு பிரபலமானவர்கள் ஆரெண்டால் போலந்துகாரர்,உக்ரேன்காரர்,ரஷ்யக்காரர்,ருமேனியா பல்கேரியா ஆக்கள் தான் 🤣

பழைய சோவியத் என்று சுருக்கமா சொல்லுங்கோ.

4 hours ago, தமிழ் சிறி said:

spacer.png

இங்கே ஒரு சுற்று சுற்றி வந்தால் உண்மையான படத்தையே போடலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

பழைய சோவியத் என்று சுருக்கமா சொல்லுங்கோ.

ச்...சா என்னதொரு புத்திசாலி பயல் 🤣

vadivelu-memes-vadivelu-gif.gif

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

                                                        கனடாவில் கார் களவு.-_
                                                        
         அண்மையில் இரண்டு நாள் கனடா என்று புறப்பட ஆயத்தமானோம்.அயலில் உள்ள நண்பருக்கு பயணம் பற்றி சொல்லி ஏதாவது வாங்கிவரவா என்றேன்.

          நாங்களும் அடுத்த கிழமை போக இருக்கிறோம்.ஆனபடியால் எதுவும் தேவையில்லை.காரில போறீங்கள் கவனமா போட்டு வாங்கோ.

         எதுக்கும் திரும்பி வரும்போது பஸ்சிலதான் வாறீங்களோ தெரியாது.கார் கொள்ளை தலைரித்தாடுது.எனது தம்பியின் றைவேயில் நின்ற புதுக்காரை சொந்த கார் எடுக்குமாப் போல கொண்டு போட்டாங்கள்.கமராவில் எல்லாம் தெளிவாக விழுகுது.முக மூடிகளை போட்டிருக்கிறார்கள்.இனி யாரைப் பிடிக்கிறது.களவு போய் 3 மாதமாச்சு எந்த தகவலும் இல்லை என்கிறார்களாம்.

           சரி என்று கனடா(மிசிசாக்குவா) போனால் ஸ்ரேறிங் லொக் வைத்திருக்கிறீங்களோ?இஞ்சை கார் களவு சரியான மோசம்.

            பொலிஸ்காரனே சொல்லுறான் வீட்டை உடைத்து கார் திறப்பு கேக்கிறாங்கள்.கார் திறப்புகளை முன்னுக்கே வையுங்கோ என்று.

             இது எப்படியான பாதுகாப்பென்றே விழங்கவில்லை.

             இதைவிட காருக்குள்ளேயே திறப்பை வைத்துவிட்டே வரலாமே?வீணாக உடைத்த கதவுகளை யன்னல்களையும் திருத்தத் தேவையில்லை.

              கனடா உறவுகளுக்கும் இதுபோல ஏதாவது நடந்ததோ?
  
               நடந்தா வெட்கப்படாம சொல்லுங்க.

வாகனம் களவு போனால் காப்புறுதி காசு தரமாட்டார்களோ? அதில் இன்னோர் புதிய வாகனத்தை வாங்குங்கோ. 

வீட்டில் இரண்டு கடி நாயை வளர்க்கலாம்.  பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்து இருக்கலாமோ? வீட்டை உடைத்து உள்ளே வருபவர் நெற்றியில் ஒரு பொட்டு வைத்து விட்டால் சரி. 

Edited by நியாயம்

  • கருத்துக்கள உறவுகள்

13 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் சொல்வது சரி.

இது பரவலாக முழு அமெரிக்கா இங்கிலாந்து என்று நடக்கிறது.

எல்லா கார்களிலும் அல்ல.

2010 க்க உள்பட்ட கார்களுக்கு ஏதோ சிறிய பிளாட்டினம் உள்ளே இருப்பதாக சொல்கிறார்கள்.

இங்கு கார்களவு ரயர் களவு என்பது நல்ல பணக்கார இடங்களில் அதிகாலை 2-4 க்கு அலுவல் நடக்குது.

வாகனங்களில் பெட்ரோல்/டீசல் எரிவதால் வரும் நச்சுக் வாயுக்கள் CO, NO2 போன்றவறை நச்சுத்தனமை அற்ற அல்லது மிகவும் குறைந்த CO2, NO, N வாயுக்களாக மாற்றுவதற்கு இது துணை புரிகின்றது. பிளாட்டினம் பொதுவாக வேறு எந்த மூலகத்துடனும் சாதாரண நிலையில் தாக்கம் புரியாது, தங்கம் போன்று. அது இங்கு ஒரு ஊக்கியாக மட்டுமே தொழிற்படுகின்றது.

சிறு வயதில் விஞ்ஞான பாடத்தில் விஞ்ஞான விளக்கம் என்று ஒரு கேள்வி வரும். அன்று அங்கு கார் பெரிய புழக்கத்தில் இல்லாததால், இந்தக் கேள்வி அங்கு பரீட்சையில் வரவில்லை.....😀 

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நியாயம் said:

வாகனம் களவு போனால் காப்புறுதி காசு தரமாட்டார்களோ? அதில் இன்னோர் புதிய வாகனத்தை வாங்குங்கோ. 

பணம் தருவார்கள்.

நீங்கள் அதற்கேற்ற கட்டணத்தை செலுத்தினால்

நாங்க எது குறைய இருக்கிறதோ அதைத் தானே கட்டுவது.

நாங்க யாருக்காவது இடித்தால் அவர்களுக்கு மட்டும் பணம் கொடுப்பார்கள்.

27 minutes ago, நியாயம் said:

வீட்டில் இரண்டு கடி நாயை வளர்க்கலாம்.  பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்து இருக்கலாமோ? வீட்டை உடைத்து உள்ளே வருபவர் நெற்றியில் ஒரு பொட்டு வைத்து விட்டால் சரி. 

எமது திட்டங்களை விட திருடர்கள் மன்மாதிரியான திட்டங்கள் வைத்திருப்பர்.

அதைவிட கார் போனால் வாங்கலாம் உயிர் போனால் போனது தான்.

17 minutes ago, ரசோதரன் said:

வாகனங்களில் பெட்ரோல்/டீசல் எரிவதால் வரும் நச்சுக் வாயுக்கள் CO, NO2 போன்றவறை நச்சுத்தனமை அற்ற அல்லது மிகவும் குறைந்த CO2, NO, N வாயுக்களாக மாற்றுவதற்கு இது துணை புரிகின்றது. பிளாட்டினம் பொதுவாக வேறு எந்த மூலகத்துடனும் சாதாரண நிலையில் தாக்கம் புரியாது, தங்கம் போன்று. அது இங்கு ஒரு ஊக்கியாக மட்டுமே தொழிற்படுகின்றது.

சிறு வயதில் விஞ்ஞான பாடத்தில் விஞ்ஞான விளக்கம் என்று ஒரு கேள்வி வரும். அன்று அங்கு கார் பெரிய புழக்கத்தில் இல்லாததால், இந்தக் கேள்வி அங்கு பரீட்சையில் வரவில்லை.....😀 

இது எல்லா வாகனங்களிலும் இருக்க வேண்டுமே?

ஏன் கொண்டாவில் அதுவும் 2010 க்கு குறைவான வாகனத்தில் மட்டும்.

இப்போது அக்குறாவிலும் கை வைக்கிறார்கள்.

58 minutes ago, குமாரசாமி said:

ச்...சா என்னதொரு புத்திசாலி பயல் 🤣

புத்திசாலி பையன் என்று வந்திருக்கணும்.

35 minutes ago, நியாயம் said:

வீட்டில் இரண்டு கடி நாயை வளர்க்கலாம்.  பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்து இருக்கலாமோ? வீட்டை உடைத்து உள்ளே வருபவர் நெற்றியில் ஒரு பொட்டு வைத்து விட்டால் சரி. 

இங்கு மனிதர்களை நாய் காவல் காப்பது இல்லை. நாய்களைத் தான் மனிதர்கள் காவல் காக்கின்றனர். உயர் ரக நாயினம் என்றால், அதைக் களவெடுப்பதற்கு என்றே திருட்டுக் கும்பல்கள் உண்டு இங்கு.

பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்து இருந்து, அவர் திருடர் ஒருவரை சுட்டுவிட்டால், கொலை வழக்கு பதிந்து சுட்டவரை உள்ளே தூக்கி வைத்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

பணம் தருவார்கள்.

நீங்கள் அதற்கேற்ற கட்டணத்தை செலுத்தினால்

நாங்க எது குறைய இருக்கிறதோ அதைத் தானே கட்டுவது.

நாங்க யாருக்காவது இடித்தால் அவர்களுக்கு மட்டும் பணம் கொடுப்பார்கள்.

எமது திட்டங்களை விட திருடர்கள் மன்மாதிரியான திட்டங்கள் வைத்திருப்பர்.

அதைவிட கார் போனால் வாங்கலாம் உயிர் போனால் போனது தான்.

இது எல்லா வாகனங்களிலும் இருக்க வேண்டுமே?

ஏன் கொண்டாவில் அதுவும் 2010 க்கு குறைவான வாகனத்தில் மட்டும்.

இப்போது அக்குறாவிலும் கை வைக்கிறார்கள்.

புத்திசாலி பையன் என்று வந்திருக்கணும்.

EV மற்றும் Hydrogen எரிபொருள் உபயோகிக்கும் வாகனங்கள் தவிர்ந்த எல்லா வாகனங்களிலும் இது இருக்கும். சில வாகனங்களில் இலகுவாக வெட்டி எடுக்கக் கூடியவாறு வெளிப்பகுதியிலேயே இந்தப் பகுதி அமைந்திருக்கின்றது போல. பழைய வாகனங்களில் அதிக அளவு பிளாட்டினம் இருக்கலாம்....

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நியாயம் said:

வாகனம் களவு போனால் காப்புறுதி காசு தரமாட்டார்களோ? அதில் இன்னோர் புதிய வாகனத்தை வாங்குங்கோ. 

வீட்டில் இரண்டு கடி நாயை வளர்க்கலாம்.  பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்து இருக்கலாமோ? வீட்டை உடைத்து உள்ளே வருபவர் நெற்றியில் ஒரு பொட்டு வைத்து விட்டால் சரி. 

19 minutes ago, நிழலி said:

இங்கு மனிதர்களை நாய் காவல் காப்பது இல்லை. நாய்களைத் தான் மனிதர்கள் காவல் காக்கின்றனர். உயர் ரக நாயினம் என்றால், அதைக் களவெடுப்பதற்கு என்றே திருட்டுக் கும்பல்கள் உண்டு இங்கு.

பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்து இருந்து, அவர் திருடர் ஒருவரை சுட்டுவிட்டால், கொலை வழக்கு பதிந்து சுட்டவரை உள்ளே தூக்கி வைத்து விடுவார்கள்.

நிழலி சொல்லியிருப்பது சரி: நல்ல இன தூய நாய் வளர்த்தால், அதைக் காக்க எஜமானர் மேலும் அதிக கவனமெடுக்க வேண்டும்😂.

அடுத்தது: துப்பாக்கி வைத்திருத்தல். கனடாவில், துப்பாக்கி லைசென்சோடு வைத்திருக்கலாம் என்றாலும், சுட்டு விட்டு பிரச்சினையில்லாமல் இருக்க முடியாது. அமெரிக்காவில், மாநிலத்திற்கு மாநிலம் விதிகள் வேறுபடும். புளோரிடா போன்ற மாநிலங்களில், stand your ground சட்டம் இருக்கிறது. துப்பாக்கி வைத்திருப்பவர், தன்னை அச்சுறுத்தும் நபரிடமிருந்து பின்வாங்கி அகலவோ, ரென்சனைத் தணிக்க (de-escalate) முயலவோ முயற்சிக்க வேண்டியதில்லை. அச்சுறுத்தும் எதிராளியைச் சுட்டு விட்டு பிரச்சினையில்லாமல் இருக்கலாம்.

நியூ யோர்க் போன்ற நீல மாநிலங்களில், சுட முதல் பல முறை எச்சரிக்க வேண்டுமெனச் சட்டம் இருக்கிறது. உதாரணமாக, வீட்டை திருடன் உடைத்தாலும், திருடன் கதவுக்கு வெளியே என்றால் சுடுவது பிரச்சினை. கதவைத் தாண்டி உள்ளே வந்தால் சுடலாம்.

எனவே, வாழுமிடத்தைப் பொறுத்து, இது ஒரு சவாலான விடயம் தான்.

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

அயலவர் ஒருவர், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், அன்று என்னுடன் வேலை செய்தவரும் கூட. 'ஏனப்பா நீ ஒரு துப்பாக்கி வாங்கக் கூடாது?' என்று ஒரு தடவை கேட்டார். அவரிடம் துப்பாக்கி இருந்தது. 'நீங்கள் தான் எல்லோரும் நல்லா சுடுவீர்களே' என்று இன்னும் மேலாலும் சொன்னார். அந்தளவிற்கு எல்லாம் எனக்கு துணிவில்லை என்று சொல்லி சமாளித்துவிட்டேன்.

உண்மையிலும் துணிவும் இல்லை. ஒரு துப்பாக்கியால் காவல் காக்கும் அளவிற்கு வீட்டிற்குள் என்ன பொருள் இருக்கிறது என்றும் தெரியவில்லை.

அயலவர் வீட்டிற்கு ஒரு திருடன் ஒரு நாள் சொல்லி வைத்தது போலவே வந்தான். அயலவர் மேலே இருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். திருடன் மேலே போக, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அவ்வளவு தான் நடந்தது, கிளிண்ட் ஈஸ்ட்வூட் படங்களில் வருவது போன்று எதுவும் நடக்கவேயில்லை. திருட வந்தவர் திருடிக் கொண்டு போய்விட்டார்..........😀  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.