Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
maithripala-300x200.jpg

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் இன்று அது தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது என்பது தனக்குத் தெரியும் எனவும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் பயங்கரவாதிகள் தொடர்பிலான விடயம் சரியானது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

தன்னால் கைது செய்யப்பட்டவர்களே நீதிபதிகள் குழாத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாகவே யார் செய்தார் என்பதனை எவரும் இன்னும் கூறவில்லை என தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துக் கூறுமாறு நீதிமன்றம் தன்னிடம் கோரிக்கை விடுத்தால், அல்லது உத்தரவு பிறப்பித்தால், யார் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டார்கள் என்பதனை கூறுவதற்கு தான் தயாராகவுள்ளதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அதனை மிகவும் இரகசியமாக பேணுவது நீதிபதிகளின் பொறுப்பு எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/296776

  • கருத்துக்கள உறவுகள்

பக்கா அரசியல்வாதி. 

நாளை வேறொன்றைச் சொல்லுவார். 

😏

  • கருத்துக்கள உறவுகள்

சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணை தேவை என்று பாதிக்கப்பட்டவர்கள் பலகாலமாக கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். உள்ளூரிலேயே எல்லாம் தெரிந்த ஒருவர் இருப்பது இப்போது தான் எங்களுக்கு தெரியுது.....😀

எத்தனை குத்துக்கரணங்கள் தான் இவர்கள் எல்லோரும் அடிப்பார்கள்.....🫣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

IMG-6057.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்   தெரியும் சொல்ல மாட்டேனே .....

......மைத்திரி. 😄😁

  • கருத்துக்கள உறவுகள்

நடத்தியது இந்தியா. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

ரணில் மைத்திரி அரசு தமிழ் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை ஓரளவுக்கு முன்னேறி புதிய அரசியல் அமைப்பு, ஒன்று பட்ட இலங்கைக்குள் ஓரளவுக்கு சமஷ்டி அமைப்புடன் தீர்வு என்று நகர்ந்த பொழுது அதை குழப்ப இந்தியா செய்த வேலை அது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ஏராளன் said:

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வேறை நாடுகளிலை இப்பிடி சொல்லிப்போட்டு வீட்டுக்குள்ள நிம்மதியாய் இருக்கேலாது. ஆளை ஒரே அமுக்காய் அமுக்கி ஜெயிலில் போட்டு விடுவார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதலை செய்தது யார் என 3 வாரங்களுக்கு முன்னரே தகவல் கிடைத்தது!

maithripala-sirisena.jpg

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாக செய்தது யார் என்பது தமக்கு தெரியும் என தாம் கூறியது, மூன்று வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலுக்கமையவே என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (23) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களை தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் இரகசிய சாட்சி வழங்க தாம் எதிர்பார்த்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பகிரங்கமாக நீதிமன்றத்தில் சாட்சி வழங்கினால் தனது உயிருக்கும் தனது குடும்பத்தவர்களின் உயிருக்கும் அது அச்சுறுத்தலாக அமையும்.

இந்த தகவலை அரசியலுக்காக அல்லாமல், மிகவும் நேர்மையுடன் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/296876

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரியிடம் விசாரணை நடத்த உத்தரவு!

23 MAR, 2024 | 08:01 PM
image
 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு  உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/179541

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளாரா? பிள்ளையானுக்கு சந்தேகம்! 

23 MAR, 2024 | 10:42 PM
image

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் துணிந்த  நேர்மையான அரசியல் தலைவராக இருந்தால் யார் என்பதை அவர் வெளிப்படையாக விரைவாக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை என பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்க்களப்பில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இனமத நல்லிணக்க அறிதலும் புரிதலும் எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை (23) அஞ்சனா மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தியவர்களை தெரியும் என தெரிவித்த கருத்தை நான் ஊடகங்களில் பார்த்தேன்.

ஒரு சாதாரண மனிதனைப்போல  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசுகின்றார். இந்த குண்டு வெடிப்பு இடம்பெறுகின்ற போது அவர் நாட்டின் தலைவராக இருந்தார். தலைவருடைய பொறுப்பு யாராக இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியதே.

ஆனால் அவர் அதைவிட்டுவிட்டு இப்போது இரகசிய வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என கருத்துக்களை சொல்லுகின்றார். எனவே ஒருவேடிக்கையான மனிதரை இந்த நாட்டு அரசியலுக்கு கொண்டுவந்துள்ளோம்  என்பதையிட்டு நாங்கள் வெட்டகப்படவேண்டும்.

ஏன் அவர் இரகசிய வாக்குமூலம் தேவை என்கின்றார். எதற்கு?  யாருக்கு ?  அச்சப்படுகின்றார். அப்படியென்றால் இந்த குண்டு வெடிப்பிற்கு அவரும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு  உண்டு ஆகவே அவர் ஒரு துணிந்த  நேர்மையான அரசியல் தலைவராக இருந்தால் யார் என்பதை வெளிப்படையாக விரைவாக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/179536

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை 3 வாரங்களுக்கு முன்னரே அறிந்தேன் : உண்மையை பகிரங்கப்படுத்தினால் உயிருக்கு ஆபத்து - மைத்திரி

24 MAR, 2024 | 08:12 AM
image

(இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் உண்மை சூத்திரதாரி தொடர்பில் மூன்று வாரங்களுக்கு முன்னரே எனக்கு தகவல் கிடைத்தது.

நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தால் இரகசிய வாக்குமூலம் வழங்குவேன். திறந்த மன்றில் பகிரங்க வாக்குமூலம் வழங்கினால் எனக்கும், எனது குடும்பத்தாரின் உயிருக்கும் ஆபத்து நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் சனிக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகச்சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

குண்டுத் தாக்குதலை யார் நடத்தியது என்பது தொடர்பான தகவல்கள் எனக்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே கிடைக்கப்பெற்றது.

அதன் பின்னரே நேற்று முன்தினம் கண்டியில் வைத்து நான் அவ்வாறு குறிப்பிட்டேன். உண்மையை வெளிப்படுத்துமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தால் நீதிமன்றத்துக்கு இரகசிய வாக்குமூலம் வழங்குவேன்.

திறந்த மன்றில் பகிரங்கமாக வாக்குமூலம் வழங்க முடியாது, ஏனெனில் அவ்வாறு வழங்கினால் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் உயிராபத்து ஏற்படும்.

ஆகவே நீதிமன்றத்துக்கு வாக்குமூலம் வழங்க தயாராக உள்ளேன். அரசியல் எதிர்பார்ப்புக்களை அடிப்படையாக்க கொண்டு நான் இவ்வாறு குறிப்பிடவில்லை. உண்மையை வெளிப்படுத்தவே எதிர்பார்க்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/179548

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியை கைது செய்யுமாறு முறைப்பாடு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், அந்த கருத்து தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

“இது இரகசியமாக வைக்கப்பட வேண்டிய விடயம் அல்ல. கட்டாயமாக நாட்டு மக்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டு அப்பாவி மக்களின்உயிர்களே அழிக்கப்பட்டன என்றார்.
 

http://www.samakalam.com/மைத்திரியை-கைது-செய்யுமா/

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாக செய்தது யார் என்பது தமக்கு தெரியும் என தாம் கூறியது, மூன்று வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலுக்கமையவே

தேர்தலுக்கு இன்னும் எத்தனை வாரங்கள் இருக்கின்றன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் சிஐடியினர் நாளை வாக்குமூலம் பதிவு!

24 MAR, 2024 | 02:45 PM
image

உயிர்த் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெறவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை (25) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இது தொடர்பான வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தாம் தெரிவித்த கருத்து குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ  இதனைத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179582

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் சிறை செல்வார் - உதய கம்மன்பில

24 MAR, 2024 | 09:04 PM
image

(இராஜதுரை ஹஷான்)  

பயங்கரவாதம், அரசுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் தகவல் தெரிந்தும் அதை மறைப்பது 10 வருடகால சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். 

மஹரக பகுதியில் நேற்று  சனிக்கிழமை (23) இடம்பெற்ற மேலவை இலங்கை கூட்டணியின் மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,  

பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாட்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் மாற்றம் வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.  நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் மத்திய வங்கியை மோசடி செய்து, பொருளாதார பாதிப்புக்கு வித்திட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்களுக்கிடையிலான அதிகார போட்டியால் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பின் பலவீனத்தை அடிப்படைவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரதூரமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்தியவர் யார் என்பதை தான் அறிவேன், நீதிமன்றம் அழைப்பு விடுத்தால் உண்மையை பகிரங்கப்படுத்த தயார் என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இவ்விடயத்தில் நீதிமன்றத்துக்கு செல்ல கூடாது பொலிஸூக்கு செல்ல வேண்டும் என்று மைத்திரிபால சிறிசேனவுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

பயங்கரவாதம், அரசுக்கு எதிராக செயற்பாடுகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தும் அதனை உரிய தரப்புக்கு அறிவிக்காமல் மறைப்பது 10 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிகடை சிறைக்கு செல்வார்.

69 இலட்ச மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2019 ஆம் ஆண்டு கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள். இலங்கை அரசியல் வரலாற்றில் கோட்டபய ராஜபக்ஷவை போன்று எவரும் மக்களாணையை காட்டிக் கொடுக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான மக்களாணையை ரணில் விக்கிரமசிங்கவிடமே ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டு தப்பியோடினோர்.

கோட்டபய ராஜபக்ஷவின் செயற்பாடு வெறுக்கத்தக்கது. சஜித் பிரேமதாச, அனுர குமார திஸாநாயக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் 69 இலட்ச மக்களாணையை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. 69 இலட்ச மக்களாணையை நாங்களே தோற்றுவித்தோம், ஆகவே நாங்களே 69 இலட்ச மக்களாணைக்கு தலைமைத்துவம் வழங்குவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/179599

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

spacer.png

 

spacer.png

 

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார்.

குறித்த விசாரணை இன்றையதினம் (25.03.2024) காலை 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் உள்ள பிரதான சூத்திரதாரிகளை தனக்கு தெரியும் என கடந்த சில தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார்.

சிஐடி விசாரணைக்கு

இதனையடுத்து, அவர் மீது உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

https://www.facebook.com/LankasriTv/videos/407240731913452/?ref=embed_video&t=0

அதற்கமைய, இன்றையதினம் மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதனால், அப்பகுதியில் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் குவிந்துள்ளதோடு பொலிஸாரினால் பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/maithripala-sirisena-easter-attack-issue-1711342639

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிஐடியிலிருந்து வெளியேறினார் மைத்திரிபால சிறிசேன!

Published By: DIGITAL DESK 3   25 MAR, 2024 | 04:36 PM

image

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றிருந்த  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு   தாக்குதல் தொடர்பில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன வெளியிடப்பட்ட  சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட  அழைப்பையடுத்து  அவர் இன்று திங்கட்கிழமை (25) அங்கு சென்று வாக்குமூலம் வழங்கினார்.

https://www.virakesari.lk/article/179681

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் வாக்குமூலம் ; உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த முக்கிய விடயத்தினை தனக்கு தெரிவித்தவர் யார் என்பதை சிறிசேன தெரிவிக்கவில்லை

Published By: RAJEEBAN   26 MAR, 2024 | 11:22 AM

image

சிஐடியினருக்கு வாக்குமூலம் வழங்கியவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு முக்கியமான விடயங்களை தெரிவித்தவர் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் யார் என்பது தனக்கு தெரியும் என கண்டியில் வெளியிட்டகருத்துக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி நேற்று சிஐடியினரிடம் ஐந்து மணிநேரத்திற்கு மேல்  வாக்குமூலம் வழங்கினார்.

காலை பத்தரைமணிக்கு  இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற அவர் 3.50 அளவில் அங்கிருந்து வெளியேறினார்.

முன்வாசல் வழியாக வந்த சிறிசேன வழமையான கேள்விகளை எதிர்கொண்டார் என சிஐடி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கண்காணிப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். குறுக்கு விசாரணைகளும் இடம்பெற்றுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரிகள் யார் என்பது மூன்று வாரத்திற்கு முன்பே தனக்கு தெரியவந்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன தனக்கு யார் அந்த விடயத்தினை தெரிவித்தது என்பதை தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த விடயங்களை மீளாய்வு செய்வோம் என தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரியொருவர் சட்டமா அதிபரின் உத்தரவின் படி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த விடயங்களை  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சிஐடியினர் திட்டமிட்டுள்ளனர்  எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/179720

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.