Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
news-7.jpg

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தமிழக அரசு சென்னை மேல்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன் தமக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

லண்டனில் உள்ள தமது மகளுடன் வசிப்பதற்காக தாம் விசா பெற போவதாகவும் அதற்கு விண்ணப்பிக்க வேண்டுமாயின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயமாகும் எனவும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தமக்கு உரிய அடையாள அட்டையை வழங்குமாறு மறுவாழ்வு பணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் முருகன் கோரியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்று, நீதிபதிகளான ஆர்.சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது. முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தமிழக அரசு சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி இதன்போது தெரிவித்துள்ளார்.

குறித்த மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்காக மத்திய அரசிற்கு நேற்று கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஒரு வாரத்திற்குள் அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் சட்டத்தரணி மன்றுரைத்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் மத்திய அரசு அனுமதி அளிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதிகள், இலங்கை உயர்ஸ்தானிகரகத்தால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் அடையாள அட்டை தேவையில்லை என அறிவித்து முருகனின் மனுவை நிறைவு செய்து உத்தரவிட்டதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://thinakkural.lk/article/297165

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவாரத்தில் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயாஸ்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ் ஆகியோர் இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக சட்டத்தரணி ஆர். முனியப்பராஜ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்றையதினம் (26.03.2024) சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முருகன் தனக்கு அடையாள அட்டை வழங்குமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அடையாள அட்டை

லண்டனில் உள்ள எனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்க இருப்பதால் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் தேவை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒருவாரத்தில் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயாஸ் | Murugan Jeyakumar Rober Payas Sri Lanka

எனினும், தனக்கு உரிய அடையாள அட்டையை வழங்கும்படி கடந்த ஜனவரி மாதம் மறுவாழ்வு இயக்குநரிடம் விண்ணப்பித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அதில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்திய அரசின் அனுமதி

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்ற போது, முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் தரப்பில் பாஸ்போர்ட் வழங்கவிட்டதாக தமிழக அரசு சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி ஆர். முனியப்பராஜ் தெரிவித்துள்ளார்.

ஒருவாரத்தில் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயாஸ் | Murugan Jeyakumar Rober Payas Sri Lanka

அத்துடன், முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ் ஆகிய மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதி கோரி மத்திய அரசுக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஒருவாரத்தில் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://tamilwin.com/article/murugan-jeyakumar-rober-payas-sri-lanka-1711440183

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி 

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது அவர்கள் நிம்மதியாக வாழட்டும் நல்ல செய்தி .

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பெருமாள் said:

இனியாவது அவர்கள் நிம்மதியாக வாழட்டும் நல்ல செய்தி .

எங்கே போய் வாழ்வது?

இலங்கையிலா?

சாத்தியமா?

  • கருத்துக்கள உறவுகள்

பிளைட்டில் ஏத்தும்வரை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் உதவியை கோருவது நல்லது. அதுவரை உண்ணும் உணவிலிருந்து மருத்துவ பரிசோதனை என்று எதில் வேண்டுமென்றாலும் ஏதும் செய்து றோ அனுப்பினாலும் அனுப்பும்.

ஏற்கனவே சாந்தனின் இறப்பிலுள்ள சந்தேகமும் அதுவே.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, valavan said:

பிளைட்டில் ஏத்தும்வரை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் உதவியை கோருவது நல்லது.

இலங்கையில் நிலமை எப்படி?

சாந்தனின் உயிரற்ற உடலை நோண்டி நொங்கெடுத்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் நிலமை எப்படி?

சாந்தனின் உயிரற்ற உடலை நோண்டி நொங்கெடுத்தவர்கள்.

இந்தியாவில் அனைத்து வழக்குகளும் முடிந்த நிலையிலேயே நாடு திரும்புகிறார்கள், இலங்கையில் அவர்கள்மீது எந்த வழக்குகளும் இருப்பதாக தெரியவில்லை, உயிருடன் திரும்பினால் உடனடியாக சட்ட உதவியை நாடலாம் அதற்கு தமிழ்கட்சிகள்  உதவுவார்களா அல்லது இந்திய/இலங்கை எஜமான விசுவாசம் காண்பிப்பார்களா என்பது எவருக்குமே தெரியல.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, valavan said:

இலங்கையில் அவர்கள்மீது எந்த வழக்குகளும் இருப்பதாக தெரியவில்லை,

வழக்குகள் இல்லாவிட்டால் என்ன இன்னமும் பயங்கரவாத சட்டம் அமுலில்த் தானே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

வழக்குகள் இல்லாவிட்டால் என்ன இன்னமும் பயங்கரவாத சட்டம் அமுலில்த் தானே உள்ளது.

இலங்கை அரசுக்கெதிராக இவர்கள் இயங்கியதுக்கு ஆதாரங்கள் வழக்குகள்  எதுவும் இருந்தால்தானே பயங்கரவாத சட்டம் இவர்கள் மீது பாயும்?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, valavan said:

இலங்கை அரசுக்கெதிராக இவர்கள் இயங்கியதுக்கு ஆதாரங்கள் வழக்குகள்  எதுவும் இருந்தால்தானே பயங்கரவாத சட்டம் இவர்கள் மீது பாயும்?

இந்த சட்டத்தின்படி காரணமே சொல்லத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இந்த சட்டத்தின்படி காரணமே சொல்லத் தேவையில்லை.

போர் சூழல் இல்லாத நிலையில் காரணம் எதுவும் சொல்லாது எவரையும் சிறையிலடைக்கும் நிலமை இப்போது அமுல்படுத்தப்படுகிறதா தெரியவில்லை,

நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம் ஈழபிரியன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது நிம்மதியாக இவர்கள் வாழட்டும்........! 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

போர் சூழல் இல்லாத நிலையில் காரணம் எதுவும் சொல்லாது எவரையும் சிறையிலடைக்கும் நிலமை இப்போது அமுல்படுத்தப்படுகிறதா தெரியவில்லை,

நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம் ஈழபிரியன் அண்ணா.

வெளியே உள்ள போராளிகள் எவரும் இன்னமும் சுதந்திரமாக இல்லை.

புலனாய்வுப் பிரிவுகளின்(இலங்கை இந்திய) கெடுபிடிகளுக்குள்த் தான் வாழ்கிறார்கள்.

இவர்கள் வேறு நாடுகளுக்கு போக முடியுமானால் அதைத் தான் தெரிவு செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எங்கே போய் வாழ்வது?

இலங்கையிலா?

சாத்தியமா?

லண்டன் விசா கிடைக்கும்வரை இலங்கையில் இருக்க வேண்டி வருமே அவர்களின் உண்மையான விடுதலை இலங்கை இந்திய நாடுகளில் இருந்து வெளியேறும் நாளே உண்மையான விடுதலை நாள். 

மிக மகிழ்ச்சியான செய்தி. இனியாவது அவர்கள் உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வாய்ப்பை பெற வேண்டும்.

முருகனுக்கு லண்டன் வீசா கிடைக்குமா என்பது சந்தேகமே. பொதுவாக பிரித்தானியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள், கொலைக் குற்றம் ஒன்றில் குற்றவாளியா நீதிமன்றத்தால் தீர்க்கப்பளிக்கப்பட்டவர்களுக்கு வீசா வழங்குவது கிடையாது. அவர் ஒரு அரசின் ராஜதந்திரியாக / அமைச்சராக இருப்பினும் கூட, வீசா வழங்க தயக்கம் காட்டுவன.


 

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி…!

இந்தியா என்னும் நரகத்திலிருந்து வெளியேறினாலே போதும்…!

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவை விட வேறெங்காவது போக முடியுமெனில் அது நல்லது. முதலில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா ஒரு சாத்தியமான தெரிவாக இருக்கக் கூடும், அவரது உறவினர்கள் நண்பர்கள் எவராவது ஏற்கெனவே அங்கே இருந்தால்  .....

இந்தியாவின் கனடாவிற்கான கடல் கடந்த பயங்கரவாதமும் சாத்தியமான முன்னிலை அனுபவங்களையும் விபரங்களையும் பெறுவதற்கு கனடா ஆவலாக இருக்கும்.

அமெரிக்காவும் மூடிய கதவின் பின்னாலிருந்து இதனை ஆதரிக்கும். அவர்களுக்கெல்லாம் இஃதொரு கோல்டன் ஒப்பேர்ச்சுனிடி ....

  • கருத்துக்கள உறவுகள்

2009 இல் அவர்கள் அனுப்ப முயற்சித்த கப்பல் இன்னமும் நங்கூரம் எடுபடாமலே இருக்கு ....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.