Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை

14-27.jpg

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தீவு ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் இருக்கிறது.

கடந்த 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது கச்சத்தீவு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

நீண்ட காலமாக மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சித்ரவதை செய்வதும், சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

இதையடுத்து கச்சத்தீவை மீண்டும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர.

ஒவ்வொரு பாாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போதும் கச்சத்தீவு விவகாரத்தை தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிகள் கையில் எடுத்து பிரசாரம் செய்து வருகிறது.

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திலும் இந்த பிரச்சனை எதிரொலித்து இருக்கிறது.

இந்த நிலையில் சச்சத்தீவு தொடர்பாக அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு பதில் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கான ஆவணங்களை பெற்ற அண்ணாமலை அதில் கூறப்பட்டுள்ள தகவலை பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1969-ம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவை கொடுக்க எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அப்போது இந்திரா காந்தி இலங்கையுடன் நல்ல நட்புணர்வுடன் இருக்க விரும்பினார். 1968-ம் ஆண்டு அப்போதைய இலங்கை பிரதமர் டட்லி சேனா நாயக்கா இந்திரா காந்தியுடன் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். 1973-ம் ஆண்டு கொழும்பில் நடந்த வெளியுறவு செயலர் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது.

1974-ம் ஆண்டு வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங் மூலம் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கச்சத்தீவுக்கு இலங்கை உரிமை கொண்டாடி வருவதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் எதையும் தரவில்லை என்றும் கேவல் சிங் தெரிவித்தார்.

அந்த சமயம் கச்சத்தீவை இலங்கை உரிமை கோரிய நிலையில் ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது என்ற ஆவணங்களை தமிழக அரசு காட்டவில்லை.

இறுதியாக 1974-ம் ஆண்டு கச்சச்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்ததாக தகவல் அறியும் உரிமை சட்ட பதிலில் இடம்பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு தொடர்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கச்சத்தீவை பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறோம். 1968-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், இலங்கை பிரதமராக இருந்த செனாயும் போட்ட ரகசிய ஒப்பந்தம்தான் கச்சத்தீவு. 1948ம் ஆண்டு வரை கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1974ம் ஆண்டு கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. எதற்காக கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்ற ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளோம். இதை படித்தால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரத்தம் கொதிக்கும். நேரு பிரதமராக இருந்தபோது பைல் நோட்டிங் எழுதுகிறார். இந்த குட்டி தீவுக்கு நான் எந்தவிதமான மரியாதையும் தரப்போவதில்லை. வேறு ஒரு நாட்டிற்கு தர தயாராக இருக்கின்றேன். இது 10-5-1961 ல் நேரு எழுதிய பைல் நோட்டிங்.

முழுமையாக கச்சத்தீவு நம்மிடம் தான் இருக்க வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தும், இலங்கையில் அரசியல் சூழ்நிலை சரியில்லை என்பதால் இந்த பிரச்சனையை தள்ளி போட்டுக்கொண்டே சென்றார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதல் பகுதி இன்று வெளியாகி உள்ளது. நாளை இதன் இரண்டாம் பகுதி வெளியாகும் போது கலைஞர் கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தில் செய்த துரோகம் குறித்து பேசுவோம். நாட்டின் எல்லையை சுருக்கியது காங்கிரஸ் கட்சி.

1960-ல் இருந்து ஒவ்வொரு செங்கல்லாக பிரித்து கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் கட்சி தாரை வார்த்துவிட்டது. இன்று வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முதல் பகுதி மூலம் காங்கிரஸ் எப்படி துரோகம் செய்துள்ளது என்பது தெரிய வருகிறது. நாளை வெளியாகும் இரண்டாவது பகுதியில் கலைஞர் கருணாநிதி செய்த துரோகம் என்ன என்பது தெரியும்.

ஆர்ட்டிக்கிள் 6 ன் படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டாலும் இந்திய மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கலாம் என தெரிவிக்கிறது. ஆனால் தற்போது ஆர்ட்டிக்கிள் 6 இல்லாத காரணத்தினால் மீனவர்கள் தற்போது கச்சத்தீவுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நாளை மக்களின் பார்வைக்காக இரண்டு பகுதியாக வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அனைத்து ஆவணங்களையும் தருகிறோம்.

கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி தாரை வார்த்து கொடுத்தார்கள் என யாருக்கும் தெரியாது. எனவே மக்கள் முதலில் கச்சத்தீவை எப்படி கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது எல்லையை நம் நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை நாம் சென்றோம்… ராமநாத சுவாமி கோவில் சிவபெருமானுக்கு நெடுந்தீவிலிருந்து பால் கொண்டுவரப்பட்டது. கச்சத்தீவை மீட்பது எங்கள் கோரிக்கை மட்டுமல்ல. கண்டிப்பாக மீட்போம் என கங்கணம் கட்டியுள்ளோம். 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டி எல்லாம் சுற்றி இருக்கிறேன். ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

https://akkinikkunchu.com/?p=272571

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

மோடியும் கச்சதீவு பற்றி பேசியிருக்கின்றார். காங்கிரஸ் செய்த பெரும் துரோகம் என்று சொல்லியிருக்கின்றார். அண்ணாமலை அதனை மறு ஒலிபரப்பு செய்கின்றார். கூடுதலாக, நெடுந்தீவு வரை அண்ணாமலை வந்தும் விட்டார். தமிழ்நாட்டில் 19ம் திகதி தேர்தல் முடிவதற்குள், இவர்கள் இலங்கையின் எல்லாத் தீவுகளையும் பிடித்து விடுவார்களோ......🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை நாம் சென்றோம்… ராமநாத சுவாமி கோவில் சிவபெருமானுக்கு நெடுந்தீவிலிருந்து பால் கொண்டுவரப்பட்டது. கச்சத்தீவை மீட்பது எங்கள் கோரிக்கை மட்டுமல்ல. கண்டிப்பாக மீட்போம் என கங்கணம் கட்டியுள்ளோம்.

large.IMG_6299.jpeg.b04bba62b75a0867df6b

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

மோடியும் கச்சதீவு பற்றி பேசியிருக்கின்றார். காங்கிரஸ் செய்த பெரும் துரோகம் என்று சொல்லியிருக்கின்றார். அண்ணாமலை அதனை மறு ஒலிபரப்பு செய்கின்றார். கூடுதலாக, நெடுந்தீவு வரை அண்ணாமலை வந்தும் விட்டார். தமிழ்நாட்டில் 19ம் திகதி தேர்தல் முடிவதற்குள், இவர்கள் இலங்கையின் எல்லாத் தீவுகளையும் பிடித்து விடுவார்களோ......🤣

(இலங்கை பதில்) கொக்கென்று நினைத்தாயா? 

  • கருத்துக்கள உறவுகள்

பா.ஜ.க அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல்; மீனவர்கள் குற்றச்சாட்டு

பா.ஜ.க அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல்; மீனவர்கள் குற்றச்சாட்டு

(மாதவன்)

இந்தியா பா.ஜ.க கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் குப்புசாமி அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்ட நிலையில் கச்சதீவு தொடர்பில் பிதற்ற ஆரம்பித்து விட்டார் என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைப்பு செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர்  கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சதீவு எமது சொத்து இந்தியா இலங்கைக்கு  தாரை பார்த்துவிட்டதாக தமிழக பா.ஜ.க தலைவர் குப்புசாமி அண்ணாமலை தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

அண்ணாமலைக்கு தற்போது தேர்தல் காய்ச்சல் ஆரம்பித்த நிலையில் தமிழக மீனவர்களின் வாக்குகளை அபகரித்துக் கொள்ளும் கபடத்துடன் தான் பேசுவது என்ன எனத் தெரியாமல் புலம்ப ஆரம்பித்தார்.

1974க்கு முன்னர் இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கன்னியாகுமரி நாகப்பட்டினம் ஆகிய பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் காரணமாக அப்போதைய இந்திய அரசாங்கம் இலங்கை மீனவர்களை கட்டுப்படுத்தும் முகமாக ஒப்பந்தம் என்ற போர்வையில் எம்மை கட்டுப்படுத்துவதற்காக வலிந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.

ஆனால் அண்ணாமலை காங்கிரஸ் அரசாங்கம் கச்சதீவை இலங்கைக்கு தாரை பார்த்து விட்டதாக கூறி வருகிறார் என்றார்.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த யார் மாவட்ட கடற் தொழிலாளர் சமாசத்தின் உப தலைவர் பிரான்ஸ்சிஸ் ரட்ணகுமார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு வர முன் பொலிஸ் அதிகாரியாக சொயற்பட்டவர் என ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

இலங்கை மீனவர்கள் பிரச்சினை திருடன் பொலிஸ் விளையாட்டு என அண்ணாமலை நினைக்கக் கூடாது  இது எமது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஆகவே கச்சதீவு எமது சொத்து யாரும் உரிமை கோர முடியாது நிலையில்  அண்ணாமலை தேவையற்ற பொய்களை பரப்ப முனைந்தால் கச்சதீவு எல்லையில் அண்ணாமலையின் கொடும்பாவியை கொழுத்தத் தயங்கோம் என அவர் மேலும் தெரிவித்தார். (ஏ)

பா.ஜ.க அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல்; மீனவர்கள் குற்றச்சாட்டு (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6299.jpeg.b04bba62b75a0867df6b

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அன்று இந்திரா காந்தி அம்மையார் விஞ்ஞான ரீதியாகவே கச்ச தீவை இலங்கைக்கு கொடுக்கும் முடிவை எடுத்தார் என்று அண்ணாமலையாருக்கும், மோடியாருக்கும் பதில் சொல்லியிருக்கின்றார். வளங்கள் கூடிய கடல் பகுதிகளை இந்தியா எடுத்துக் கொண்டு, பிரயோசனமற்ற கச்சதீவை இலங்கைக்கு கொடுத்ததாக அவரின் விளக்கம் போகின்றது.

எல்லாம் சரி, உங்களின் வளங்கள் கூடிய கடலை விட்டுவிட்டு இப்போது ஏன் எங்களின் கடலிற்குள் வந்து எங்களின் கண்டமேடைகளை சுடுகாடாக்குகின்றீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவை இந்திரா காந்தி தாரை வார்த்த போது கருணாநிதி என்ன செய்தார்? இனி மீட்க முடியுமா?

கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரசும் தி.மு.கவும் தாரை வார்த்திருப்பதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால், தி.மு.கவும் காங்கிரசும் இதனை மறுக்கின்றன. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்ட ஒரு X வலைதளப் பதிவில், காங்கிரசையும் தி.மு.கவையும் குற்றம்சாட்ட புதிதாக ஒரு விஷயத்தைக் கையில் எடுத்திருந்தார்.

அவர் அந்தப் பதிவில், "கச்சத்தீவை எவ்வளவு அலட்சியமாக காங்கிரஸ் கொடுத்தது என்பதை புதிய தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியிருக்கிறது. நாம் ஒருபோதும் காங்கிரசை நம்ப முடியாது என்பதை மக்களின் மனதில் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமையையும் நலன்களையும் பலவீனப்படுத்துவதே கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசின் பணியாக இருந்துவருகிறது" என்று குறிப்பிட்டதோடு, நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரையின் இணைப்பையும் பகிர்ந்திருந்திருந்தார்.

கச்சத்தீவு சர்ச்சை

பட மூலாதாரம்,X/NARENDRA MODI

அந்தக் கட்டுரை, பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கட்டுரை கூறுவது என்ன?

"சுதந்திரத்திற்குப் பிறகு அந்தத் தீவின் மீது உரிமை கொண்டாடிய இலங்கை, இந்தியக் கடற்படை தனது அனுமதி இல்லாமல் அங்கே பயிற்சி செய்யக்கூடாது என்று கூறியதாகவும் 1955ல் தனது விமானப் படை பயிற்சியை அங்கே மேற்கொண்டதாகவும் அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. இந்த விவகாரத்தை முக்கியத்துவமில்லாத விவகாரமாக பிரதமர் 1961ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி எழுதிய குறிப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.

"இந்தச் சிறிய தீவுக்கு நான் எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அதன் மீதான உரிமையை விட்டுத்தர எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த விவகாரம் நீண்ட காலத்திற்கு நிலுவையில் இருப்பதையோ, மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவதையோ நான் விரும்பவில்லை" என நேரு குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் தீவின் மீதான உரிமையை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி ராமநாதபுரம் ராஜாவுக்கு அளித்திருப்பதால், அதன் மீது நமக்கு உரிமை இருக்கிறது என அப்போதைய அட்டர்னி ஜெனரல் எம்.சி. செடல்வத் கூறியிருந்தார்.

அப்போது வெளியுறவுத் துறையின் இணைச் செயலராக இருந்த கே. கிருஷ்ணாராவ், உரிமை குறித்து உறுதியாக இல்லை. ஆனால் அந்தத் தீவைச் சுற்றி மீன் பிடிக்கும் உரிமையைக் கோர சட்ட ரீதியில் வாய்ப்பு இருக்கிறது என்பதை அவர் குறிப்பிட்டார்.

1968ல் இலங்கைப் பிரதமர் டட்லி சேனநாயக இந்தியாவுக்கு வந்தபோது, இந்தத் தீவை இலங்கைக்கு அளிப்பது குறித்து ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இதற்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த இந்திரா காந்தி அரசு, அப்படி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகச் சொல்வதை மறுத்தது. ஆனால், அது சர்ச்சைக்குரிய பகுதி எனக் குறிப்பிட்டது. இரு தரப்பு உறவுகளை மனதில் வைத்து, இந்தியா உரிமை கோர வேண்டுமென்றும் கூறியது.

கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?

1973ல் கொழும்புவில் நடந்த வெளியுறவுத் துறை செயலர்கள் மட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கச்சத் தீவு மீதான உரிமையை விட்டுத்தர இந்தியா முடிவு செய்தது. இந்த விவரம் வெளியுறவுத் துறைச் செயலர் கேவல் சிங் மூலம் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதிக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் அந்தத் தீவு மீதான ராமநாதபுரம் ராஜாவின் உரிமையும், தனக்குத்தான் அந்தத் தீவு சொந்தமெனக் கூறும் இலங்கைத் தரப்பால் அதற்கு சாட்சியமாக எவ்வித ஆதாரத்தையும் காட்ட முடியாததும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், இலங்கை பிடிவாதமாக இருப்பதாக கேவல் சிங் குறிப்பிட்டார். 1925 முதல் இலங்கை அந்தத் தீவின் மீது உரிமை கோரிவருவதையும் அவர் குறிப்பிட்டார்.

அந்தக் கடற் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதை இந்தியா கண்டறிந்திருந்ததாலும் இலங்கை அரசின் மீது சீன ஆதரவுக் குழுக்களின் செல்வாக்கு அதிகரித்துவந்ததாலும் உடனடியாக முதலமைச்சர் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமென கேவல் சிங் வலியுறுத்தினார். அதற்கு கருணாநிதி ஒப்புக்கொண்டார்" என அந்தக் கட்டுரை கூறுகிறது.

கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?

கச்சத்தீவு - பாஜக குற்றச்சாட்டு என்ன?

பிரதமர் நரேந்திர மோதியின் எக்ஸ் வலைதள பதிவிற்குப் பிறகு, தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பலரும் இந்த விவகாரம் குறித்துப் பேச ஆரம்பித்தனர்.

இதற்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து மீண்டும் ஒரு பதிவை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோதி, "தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க தி.மு.க. எதையும் செய்யவில்லை. கச்சத் தீவு விவகாரத்தில் புதிதாக வெளிவரும் தகவல்கள் தி.மு.கவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. காங்கிரசும் தி.மு.கவும் குடும்பக் கட்சிகள். தங்கள் மகன்களையும் மகள்களையும் வளர்ப்பது பற்றி மட்டும்தான் அவர்கள் கவலைப்படுவார்கள். கச்சத்தீவு விவகாரத்தில் அவர்கள் காட்டிய அலட்சியம் ஏழை மீனவர்களின் நலன்களுக்கு பாதகமாகிவிட்டது" என்று குறிப்பிட்டார்.

கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதற்குப் பிறகு, திங்கட்கிழமையன்று பா.ஜ.கவின் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். இந்திய மீனவர்களின் உரிமையை பறிகொடுத்துவிட்டு, அதற்குப் பொறுப்பேற்க காங்கிரஸ் மறுப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, பழைய விவகாரமான கச்சத்தீவு பிரச்னையை எழுப்புவது தவறு என்று கூறிய அவர், "தொடர்ந்து இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் இது தொடர்பாக தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடந்துவருகிறது" என்றும் குறிப்பிட்டார்.

மேலும், காங்கிரசைச் சேர்ந்த பிரதமர்கள் கச்சத்தீவு விவகாரத்தில் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.

கச்சத்தீவைக் கொடுப்பதற்கு தி.மு.க. எதிராக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது முழுமையாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார் ஜெய்சங்கர்.

ஜெய்சங்கர் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஜெய்சங்கர் வெளியுறவுச் செயலாளராக இருந்தபோது, 2015 ஜனவரி 27ஆம் தேதி வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலை இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர் மறுக்கிறாரா?

இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்குச் சொந்தமான நிலப்பரப்பைக் கையகப்படுத்துவது அல்லது விட்டுக்கொடுப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இல்லை, ஏனெனில் கேள்விக்குரிய பகுதி ஒருபோதும் வரையறுக்கப்படவில்லை. ஒப்பந்தங்களின்படி, கச்சத்தீவு இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டின் இலங்கைப் பகுதியில் அமைந்துள்ளது. என்று 2015ஆம் ஆண்டில் கச்சத்தீவு குறித்த ஆர்.டி.ஐ கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது" என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?

பட மூலாதாரம்,X/JAIRAM RAMESH

கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் கச்சத்தீவு விவகாரம் பல முறை முக்கியமான அரசியல் பிரச்னையாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கச்சத்தீவு விவகாரம் தேசிய அளவில் விவாதிக்கப்படுவது கடந்த பல வருடங்களில் இதுவே முதல் முறை.

இந்தியா கச்சத்தீவு மீதான தனது உரிமையில் உறுதியாக இல்லை என்பது உண்மைதான் என்கிறார் கச்சத்தீவு குறித்து பல நூல்களை எழுதியவரும் சென்னை பல்கலைக் கழகத்தின் தெற்கு மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான மையத்தின் முன்னாள் இயக்குநருமான வி. சூரியநாராயண்.

"கச்சத்தீவு விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படுமானால், அது சரிந்துகொண்டிருக்கும் சிறீமாவோவின் இமேஜிற்கு பெரிய அளவில் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியா தனது அண்டை நாடுகளை ஆதிக்கம் செலுத்தத் திட்டமிடுகிறது என்று இலங்கையிலிருந்த இடதுசாரி சக்திகள் குரலெழுப்பி வந்தன. கச்சத்தீவு விவகாரத்தை அதற்கு ஒரு உதாரணமாக சுட்டிக்காட்டின. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவது அந்த வாதத்தை முறியடிக்கும் என நம்பப்பட்டது" என்று தனது நூலில் குறிப்பிடுகிறார் சூர்யநாராயண்.

1974ஆம் ஆண்டின் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, கச்சத்தீவை இந்தியாவுக்குச் சொந்தமான தீவாகக் கருதாமல், சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதி இந்தியா முடிவெடுத்து எனக் குறிப்பிடும் வி. சூர்யநாராயண், அந்தத் தீவு தனக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்கிறார்.

மேலும், 1974ஆம் ஆண்டில் ஒப்பந்தத்தின் கீழ் இந்திய மீனவர்களுக்கு சில உரிமைகள் அளிக்கப்பட்டிருந்தன. அந்த உரிமைகள், 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் நீக்கப்பட்டன. இப்படியாகத்தான் அந்தத் தீவு மீதான உரிமையை இந்தியா முழுவதுமாக இழந்தது என்கிறார் அவர்.

கச்சத்தீவு சர்ச்சை
படக்குறிப்பு,

வி. சூர்யநாராயண்

கச்சத்தீவு - ஒப்பந்தம் கையெழுத்தான போது கருணாநிதி என்ன செய்தார்?

கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்கும் விவகாரத்தில் அப்போதைய தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தது என்கிறார் வி. சூர்யநாராயண். "இது தொடர்பாக பிரதமர் இந்திரா காந்தியைச் சந்திக்க முதலமைச்சர் மு. கருணாநிதியும் அமைச்சர் எஸ். மாதவனும் சென்றனர். பிரதமரைச் சந்தித்த போது இந்த விவகாரத்தில் தனது கடுமையான எதிர்ப்பை மு. கருணாநிதி தெரிவித்ததாக மாதவன் சொன்னார்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒரு கடிதமாக எழுதி பிரதமரிடம் அளித்தார் மு. கருணாநிதி. மாநில அரசு சேகரித்த ஆதாரங்களின்படி, கச்சத்தீவின் மீது இலங்கை அரசானது ஒருபோதும் இறையாண்மையைச் செலுத்தியதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. கச்சத்தீவைக் கட்டுப்படுத்திய ராமநாதபுரம் ராஜா எந்தக் காலகட்டத்திலும் இலங்கை அரசுக்கு வாடகையோ, ராயல்டியோ செலுத்தியதில்லை என கருணாநிதி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டினார்" என்கிறார் சூர்யநாராயண்.

மேலும், "இந்த கடல்சார் ஒப்பந்தமானது மாநில அரசின் உரிமையைக் கடுமையாக பாதித்தாலும் அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகளைக் கூட மாநில அரசுடன் விவாதிக்க மத்திய அரசு முன்வரவில்லை என தொடர்ந்து சொல்லிவந்தார் கருணாநிதி. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த காலத்தில் அவர் பிரதமர் இந்திரா காந்தியையும் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளையும் சந்தித்து கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் அதனை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தினார். தமிழக மக்களின் கோபத்தையும் அதிருப்தியையும் காட்டும் வகையில் 1974 ஜூன் 29ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. 1974 ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது" என்கிறது வி. சூர்யநாராயணின் புத்தகம்.

கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

1974 ஆகஸ்ட் 21ஆம் தேதி முதலமைச்சர் மு. கருணாநிதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பின்வரும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்: "இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவுடன் தமிழ்நாட்டிற்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கச்சத்தீவு தொடர்பாக இந்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்து இந்த மன்றம் ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறது. இந்திய அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கச்சத்தீவின் மீது இந்திய இறையாண்மையைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் இலங்கையுடனான ஒப்பந்தத்தைத் திருத்த வேண்டும் என்றும் அதன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் இந்த மன்றம் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது". இந்தத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விட்டு நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு. கருணாநிதி அந்தத் தருணத்திலேயே நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும் என்கிறார் வி. சூர்யநாராயண். "மேற்கு வங்கத்தில் இருக்கும் பேருபரி பகுதியை கிழக்கு பாகிஸ்தானோடு இணைக்க அப்போதைய பிரதமர் நேரு முடிவுசெய்தபோது, அம்மாநிலத்தின் காங்கிரஸ் முதல்வரான பி.சி. ராய் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது தடுத்து நிறுத்தப்பட்டது" என்கிறார் அவர்.

ஆனால், 1974, 1976ஆம் ஆண்டின் ஒப்பந்தங்களை இப்போது முறித்துக்கொள்வது சாத்தியமில்லை என்கிறார் அவர். "சர்வதேச ஒப்பந்தங்களுக்கு என ஒரு புனிதத்தன்மை உண்டு. அதை மீறக்கூடாது. பல அண்டை நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அவையெல்லாம் சிக்கலுக்குள்ளாகும்" என்கிறார் வி. சூர்யநாராயண்.

கச்சத்தீவு - திமுக விளக்கம் என்ன?

கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரை அந்தத் தருணத்தில் தி.மு.க. முடிந்த அளவு எதிர்ப்பைப் பதிவுசெய்தது என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன். "கேவல் சிங் முதலமைச்சரைச் சந்தித்து இந்த விவகாரத்தை விளக்கும்போது, இந்த ஒப்பந்தம் நிலம் தொடர்பான ஒப்பந்தம் மட்டும்தான். அந்த நிலத்தின் மீது உள்ள மீன் பிடி உரிமைகள் அப்படியே நீடிக்கும் என்று கூறினார். காரணம், அந்த நிலம் இந்தியாவுக்குச் சொந்தம் என்பதற்கான ஆவணங்கள் நம்மிடம் இல்லை. மாறாக, யாழ்ப்பாணத்துடன் அந்தப் பகுதி இணைந்திருந்ததைக் காட்டும் ஆவணங்கள் உள்ளன என்றார் கேவல் சிங். இருந்தபோதும் ஒப்பந்தம் கையெழுத்தானதும் தி.மு.க. அரசு அது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

1974ல் வழங்கப்பட்ட உரிமைகள், 1976ல் பறிக்கப்பட்டன. அப்போது தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. இந்த விவகாரத்தில் தி.மு.கவைக் குற்றம்சாட்டுவது முழுக்க முழுக்க அபத்தமானது" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

இந்த விவகாரத்தை அரசியலாக்குவதன் மூலம் பா.ஜ.க. எவ்விதமான பலனையும் பெற முடியாது என்கிறார் கான்ஸ்டைன்டீன். "பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்கள் இப்போது இந்த விவகாரத்தைப் பேசுவது ஏன்? இப்போதும்கூட, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கச்சத்தீவை மீட்போம் என உறுதியளிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. அரசு எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை நாங்கள் முன்வைக்கும், அதற்கு பதில் சொல்ல முடியாமல் இதைச் செய்கிறார்கள். இதெல்லாம் அரசியல் சித்து விளையாட்டு. இதற்கு எந்த பலனும் இருக்காது" என்கிறார் அவர்.

கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?

கச்சத்தீவு - நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா?

கான்ஸ்டைன்டீன் கருத்தையே எதிரொலிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். இந்த விவகாரம் எந்த வகையிலும் பா.ஜ.கவுக்கு பலனளிக்காது, மாறாக எதிர்மறையாகச் செல்லலாம் என்கிறார் அவர்.

"இந்த விவகாரத்தை இப்படி விவாதிப்பதே தவறு. காரணம், இது தொடர்பாக, அ.தி.மு.க., தி.மு.க., வேறு சில தனி நபர்கள் தொடர்ந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. தவிர, கச்சத்தீவு ஒப்பந்தம் ஏற்பட்ட சூழலை புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்கள். 1974ஆம் ஆண்டு மே மாதம் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்தார். இதனால் சர்வதேச அரங்கில் இந்தியா தனிமைப்பட்டது. அப்போது, இலங்கையை இந்தியா பக்கமே வைத்திருக்கவே இதை செய்ததாகப் பார்க்கலாம்" என்கிறார் ஷ்யாம்.

1974ல் இந்தியாவும் வங்கதேசமும் தங்களது எல்லைகளை வரையறுக்கும் போது இந்தியா சில பகுதிகளை விட்டுக்கொடுத்தது. அதற்கு இந்தியா தனது அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியிருந்தது. "அதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம் 100வது முறையாகத் திருத்தப்பட்டது. இது நடந்தது 2015ல் நரேந்திரமோதியின் ஆட்சியில்தான். அதற்காக, அவர் இந்திய நிலப்பகுதியை விட்டுக்கொடுத்துவிட்டார் என்று சொல்ல முடியுமா? இரு நாட்டு எல்லைகளை வரையறுக்கும்போது, சில நிலப்பரப்புகளை விட்டுத்தருவது நடந்தே ஆகும்" என்கிறார் ஷ்யாம்.

கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?

ஆனால், கச்சத்தீவு விவகாரத்தை பிரதமரே எழுப்புவது போன்ற தாக்குதலை தி.மு.க. எதிர்பார்த்ததா? "பா.ஜ.க. தமிழ்நாட்டிற்கு எதாவது செய்ததா என்ற கேள்வியை முதலமைச்சர் மீண்டும் மீண்டும் முன்வைத்து வருகிறார். நாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த போது தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தது, மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டுவந்தது போல அவர்களால் ஏதாவது ஒரு சாதனையைச் சொல்ல முடியுமா எனக் கேட்டார் முதலமைச்சர். அவர்களால் எந்த பதிலும் சொல்ல முடியாத நிலையில், இதைப் போல எதையாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம்" என்கிறார் தி.மு.கவின் கான்ஸ்டைன்டீன்.

இந்த விவகாரத்திற்கு இப்போதைக்கு நேரடியாக பதில் சொல்வதை தி.மு.க. தவிர்க்கும்; ஆனால், பா.ஜ.க. இதனை மேலும் மேலும் பெரிதாக்கினால் அவர்களும் தீவிரமாக பதில் சொல்ல ஆரம்பிப்பார்கள் என்கிறார் ஷ்யாம்.

https://www.bbc.com/tamil/articles/cglkmeze9lgo

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் வந்து கொண்டிருக்கும் கச்சதீவு சிரிப்புகள்.

******

கச்சதீவை மீட்க நான் பாடுபடுவேன் -- ஓபிஎஸ்

மற்ற நான்கு ஓபிஎஸ் வேட்பாளர்கள் நவ்: நாங்களும் கச்சதீவை மீட்போம்

******

கன்னித்தீவுக்கும் கச்சதீவுக்கும் என்ன வித்தியாசம், அண்ணே?

அடேய்

தினம் தினம் பேப்பர்ல கதையா வந்தா அது கன்னித்தீவு

தேர்த்லுக்கு தேர்தல் பழங் கதையா வந்தா அது கச்சதீவு

*******

கச்சதீவு டைவர்ஸன்: மேல இருக்கிற அருணாச்சல் பிரதேசத்தை சீனாக்காரன் அது தன்னோட இடம் என்று அறிவிச்சிட்டான். மேல பார்த்து யாரும் கேள்வி கேட்கக் கூடாதுனு கீழ இருக்கிற கச்சதீவை மேல கொண்டு வர்றாங்க போல.......

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரசோதரன் said:

கன்னித்தீவுக்கும் கச்சதீவுக்கும் என்ன வித்தியாசம், அண்ணே?

அடேய்

தினம் தினம் பேப்பர்ல கதையா வந்தா அது கன்னித்தீவு

தேர்த்லுக்கு தேர்தல் பழங் கதையா வந்தா அது கச்சதீவு

கவுண்டரும், செந்திலும்😛

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kavi arunasalam said:

கவுண்டரும், செந்திலும்😛

உங்களின் கார்ட்டூனில் இது இன்னும் நல்லா வரும்.....😀

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

(இலங்கை பதில்) கொக்கென்று நினைத்தாயா? 

உண்மைதான்.. எனக்கு தெரிந்த இந்த வருடம் இலங்கைக்கு சுற்றிப்பார்க்க வந்த பல வெள்ளைகள் என்னை தொடர்புகொள்ளும்போது ஆச்சரியப்படுகிறார்கள்.. என்ன இலங்கை இவ்வளவு வேகமாக பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வந்திருக்கிறது என்று.. சிங்களவனின் அதுவும் ரணில் போன்ற படித்த சிங்களவர்களின் அறிவு அபாரமானது.. எல்லாப்பக்கத்தையும் சமாளித்து வெட்டி ஓடி வென்று விடுவார்கள்.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு இலங்கையின் வட மாகாணத்தின் ஓரங்கம்.

எமக்கு ஒரு சுயாட்சி தேசம். அல்லது தனி நாடோ அமைந்தால் அது எம் நிலம்.

இப்போ கேள்வி…

கச்சதீவை இந்தியாவுக்குள் எடுப்போம் என்போர் எம் நண்பர்களா? இந்தியாவின் நண்பர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இறக்குமதி தளர்வு கடனை திரும்ப செலுத்துதல் போன்றவை வரும்போது நிலமை மாறலாம்.

இப்போ டாலரை வெளியே போகாவண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள்.

மக்கள் மீதும் தாங்கேலாத சுமையை ஏற்றுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மைதான்.. எனக்கு தெரிந்த இந்த வருடம் இலங்கைக்கு சுற்றிப்பார்க்க வந்த பல வெள்ளைகள் என்னை தொடர்புகொள்ளும்போது ஆச்சரியப்படுகிறார்கள்.. என்ன இலங்கை இவ்வளவு வேகமாக பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வந்திருக்கிறது என்று.. சிங்களவனின் அதுவும் ரணில் போன்ற படித்த சிங்களவர்களின் அறிவு அபாரமானது.. எல்லாப்பக்கத்தையும் சமாளித்து வெட்டி ஓடி வென்று விடுவார்கள்.. 

அண்ணனுக்கு ஒரு துரோகி பட்டம் பார்சல்!

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அந்தர் பல்டி அடிப்பது ஏன்? ப.சிதம்பரம்

02 APR, 2024 | 09:12 AM
image
 
கச்சத்தீவு விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சரமாரியாகக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

இது தொடர்பாக பஇசிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் “பழிக்குப் பழி எல்லாம் பழங்கதை. ட்வீட்டுக்கு ட்வீட் தான் புதிய ரக ஆயுதம். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 27.1.2015 தேதியிடப்பட்ட ஆர்டிஐ மனுவை திரும்பப் பார்க்குமாறு வேண்டுகிறேன்.அந்தத் தேதியில் அவர் தான் நம் நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருந்தார் என நினைக்கிறேன். அந்த ஆர்டிஐ பதிலில் இலங்கையிடம் கச்சத்தீவை இந்தியா வழங்கியதற்கான சூழலை நியாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்போது ஏன் வெளியுறவு அமைச்சகமும் அமைச்சரும் அந்தர் பல்டி அடிக்கின்றனர் எனத் தெரியவில்லை.

எப்படி மனிதர்களால் இவ்வளவு வேகமாக நிறம் மாறிக்கொள்ள முடிகிறது? ஒரு சாதுவான தாராள சிந்தனை கொண்டவராக இருந்தவர் ஒரு புத்திசாலித்தனமான வெளியுறவு அமைச்சராக ஆர்எஸ்எஸ் - பாஜகவின் ஆதரவாளராக மாறியிருக்கிறார். ஜெய்சங்கரின் காலமும் வாழ்க்கையும் வரலாற்றில் பதிவு செய்யப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

இன்னொரு ட்வீட்டில் “கடந்த 50 ஆண்டுகளாக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மையே. அதேபோல் இந்தியாவும் நிறைய இலங்கை மீனவர்களை சிறைப்பிடித்துள்ளது. இங்கிருந்த ஒவ்வொரு அரசாங்கமும் இலங்கை அரசுடன் சமரசப் பேச்சுவார்த்தை பேசி அவ்வப்போது நமது மீனவர்களை மீட்டும் உள்ளது. இது ஜெய்சங்கர் வெளியுறவு அதிகாரியாக இருந்தபோதும் நடந்துள்ளது. அவர் வெளியுறவு அமைச்சராக இருந்தபோதும் நடந்துள்ளது.

ஆனால் இப்போது மட்டும் காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக ஜெய்சங்கர் பேச என்ன மாறிவிட்டது? வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும் பாஜக ஆட்சியில் இருந்தபோதும் அது பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோதும் நடந்துள்ளது. 2014-ல் மோடி பிரதமரான பின்னர் இலங்கையால் மீனவர்கள் கைது செய்யப்படவே இல்லையா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற ஆர்டிஐ தகவலால் இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி வருகிறது. பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் திமுகவின் ‘இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது’ என்று கூறி விமர்சித்த நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரம் தொடர்பாக  பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில் “கச்சத்தீவு பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்வது முக்கியம். இந்த பிரச்சினை நீண்ட காலமாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு விவகாரம் கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. உண்மையில் தமிழக முதல்வர் எனக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நான் 21 முறை கச்சத்தீவு தொடர்பாக பதில் அளித்துள்ளேன். இது திடீரென எழுந்த பிரச்சினை அல்ல. பல ஆண்டுகளாக உள்ள இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நேரடி பிரச்சினை.

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது மாநில அரசிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று திமுக கூறுவதை ஏற்க முடியாது. இந்தியாவின் நிலப்பரப்பில் அப்போதைய மத்திய அரசும் பிரதமர்களும் காட்டிய அலட்சியமே இது மாதிரியான பிரச்சினைகள் தொடர்ந்து எழக் காரணம். முன்னாள் பிரதமர்கள் யாரும் கச்சத்தீவு பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் உண்மை” எனக் கூறியிருந்தார். நேருஇ இந்திரா காந்தியை தன் உரையில் அவர் சாடியிருந்தார். இந்நிலையில்தான் ப.சிதம்பரம் இந்த ட்வீட்களைப் பதிவு செய்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180201

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவை, சிங்களம் 'விலை' கொடுத்து வாங்கவில்லை.

கச்சதீவு, சரியாக சொன்னால் சிங்களத்தின் கட்டுப்பாட்டில்  தான் இருக்கிறது.

இவை உரிமை மாற்றங்கள் அல்ல. நிர்வாகங்கள்  (கிந்திய, சிங்கள) மாற்றறிக்கொண்டன . (கச்சதீவு மாற்றம் கிந்தியாவின் எல்லையை அதன் யாப்பில் மாறவில்லை).

கச்சதீவை, ஹிந்தியா விரும்பினால் எடுக்கலாம் (அது எந்த நிலைமையாகவும் இருக்கலாம், உள்நாட்டு அழுத்தம், பாதுகாப்பு, அல்லது அதன் விருப்பு). 

இதுவே Crimea நிலையும் (ருசியா எடுத்து கொண்டது, இதை மேற்கத்தி தவிர வேறு எவரும் திருப்பி கொடுக்கும் படி அழுத்தமாட்டார்கள்).

ஜம்மு - காஷ்மீர் - இதன் எதிர் உதாரணம். 

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல மறந்து விட்டேன் 

சரியான உரிமை மாற்றம் உதாரணம், அலாஸ்கா,  அமெரிக்கா - ருசியா இடையில். 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாமலையார் 'கச்சதீவு துரோகம் - பகுதி 2' ஐ அடுத்த நாள் வெளியிடுவதாகச் சொல்லி இரண்டு நாட்கள் போய்விட்டன. இன்னமும் வெளிவரவில்லை.....🤣

ஜீவன் தொண்டமான் இலங்கையிலிருந்து பதில் சொல்லியிருக்கின்றார் - இந்தியா கச்சதீவை ஒரு போதும் திருப்பிக் கேட்கவும் இல்லை, நாங்கள் கொடுக்கப் போவதும் இல்லை என்ற ரீதியில்.

ஜீவனும், அண்ணாமலையும் இனி இந்த விடயத்தை பார்த்துக் கொள்வார்கள் போல...😀 

  • கருத்துக்கள உறவுகள்

On 2/4/2024 at 16:26, ரசோதரன் said:

ஜீவன் தொண்டமான் இலங்கையிலிருந்து பதில் சொல்லியிருக்கின்றார் - இந்தியா கச்சதீவை ஒரு போதும் திருப்பிக் கேட்கவும் இல்லை, நாங்கள் கொடுக்கப் போவதும் இல்லை என்ற ரீதியில்.

சிங்களம் கதைக்க தேவை  இல்லை.

அனால், தொண்டைமானின் பதிலில், திருப்பிக்கேட்டால்,  மறுக்கமுடியாத பிரச்சனை இருப்பது மறைமுகமாக காட்டுகிறது.

On 2/4/2024 at 16:26, ரசோதரன் said:

அண்ணாமலையார் 'கச்சதீவு துரோகம் - பகுதி 2' ஐ அடுத்த நாள் வெளியிடுவதாகச் சொல்லி இரண்டு நாட்கள் போய்விட்டன.

அங்கெ ஒன்றும் இல்லை. பொய் சொல்லுகின்றது கிந்தியா.

கச்சத்தீவு, ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு (ராமநாத சேதுபதி) சொந்தம் என்று ஆதாரம் இருக்கிறது.

அதுவும் செப்பேட்டில் உள்ளது.

 இது எல்லாமே கிந்தியா அதிகாரம், மற்றும் வரலாற்று வட்டத்துக்கு நன்கு தெரியும்.

மல்லு சூரியநாராயணன் சொல்வது உண்மை - வன்மையாக எதிர்த்து. அந்த காலம் அவசரக்கலசட்டத்தை பிரயோகித்து,உப்புச் சப்பில்லாத மாநில அதிகாரத்தை  தூக்கி எறிந்து கிந்தியாவே தமிழருக்கு துரோகம் செய்தது.

உண்மையில் இந்த நீரிணையின் பெயர் பாக்கு நீரிணை  இல்லை. 

இது தமிழரின் உரிமையை அழிப்பதற்கு 1760 அல்லது 1770 களில் அப்போதைய விட்டு சென்ற ஆளுநரின் பெயரின் பகுதி robert palk சூட்டப்படது.

பின், பிரித்தானிய, கச்சத்தீவு நிர்வாகத்தை, இலங்கைத்தீவுக்கு மாற்றியது.

கவலை தரும் விடயம், தமிழ் நாட்டில் உள்ள ஒரு அரசியல்வாதிக்கு கூட ஒன்றில் இது தெரியாது அல்லது சொல்ல தைரியம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2024 at 03:16, goshan_che said:

கச்சதீவு இலங்கையின் வட மாகாணத்தின் ஓரங்கம்.

எமக்கு ஒரு சுயாட்சி தேசம். அல்லது தனி நாடோ அமைந்தால் அது எம் நிலம்.

இப்போ கேள்வி…

கச்சதீவை இந்தியாவுக்குள் எடுப்போம் என்போர் எம் நண்பர்களா? இந்தியாவின் நண்பர்களா?

இப்போதே இந்திய பிரதமர் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கச்சதீவு மீட்பு போரில் அவர்களுடன் யாழ்கள ஈழத்து உறவு ஒருவரும் பங்குபற்றுவார் போல தெரிகிறதே 😭

  • கருத்துக்கள உறவுகள்

சாதரணமாக வாங்கும் பொருளுக்கே வாங்குபவரே கவனமாக இருக்க வேண்டும்.

அனால், கிந்தியவுக்கு  பகிரப்பட்ட பகுதி (அதுவும் பிரச்சனைக்கு உரியதுதான், அனால் அதற்கு உரித்து ஆதாரம் இல்லை, எனவே இலங்கைத்தீவு வடக்கு கடற்படுக்கைக்குள் வந்து இருக்கும், வேண்டும் என்றால் மேலும் நீட்டவும் வசதி ) வடமாகாணத்துக்கு சொந்தம், அதில் தான் எண்ணெய் தோண்ட கிந்தியா  UN  இல் விண்ணப்பித்து உள்ளது.

சிங்களம் கச்சத்தீவில் படம் காட்ட எண்ணெய் தோண்டுகிறது. 

தேவை இல்லாமல் பிரச்னை வரும் தமிழ் நாட்டுடன் - கிந்தியாவுக்கும், சிங்களத்துக்கும்  அது தேவை. 

வரலாறு தெரியாமல், ஒண்ணனை பிடித்து மடிக்குள் விடப்போகிறோம் என்றால் ....

அனால், பிரித்தானியர் செய்தது அந்த பிராந்திய தமிழ் தொடர்ச்சி(பாதுகாப்பு)  பூட்டை உடைத்தது - இப்போதைய அதிகார அமைப்பில் அந்த பூட்டு இப்போது  சிங்களத்திடம்.

சிங்களம், கிந்தியா  பூட்டை (மீண்டும்) உடைப்பதையே  நாடின. (இந்த பூட்டு எனபது விளங்காவிட்டாலும் பறவாயில்லை).

இது தான் கச்சதீவு பரிமாற்றத்தின் அடிநாதம் சிங்களத்துக்கும், கிந்தியாவுக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் ஒரு மாற்றமுமே வரப் போவதில்லை. ஒரு துரும்பு கூட நகரப் போவதில்லை.

@Kavi arunasalam அவர்கள் போட்டிருக்கும் கார்ட்டூனில் இருப்பது போல, இந்த ஈழ விடயங்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் தமிழக, இந்திய அரசியல்வாதிகளுக்கு இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் சட்னி, மிளகாய்ப் பொடி போல.

தலையில் பலாப்பழத்தை தூக்கி வைத்துக் கொண்டு கச்ச தீவை மீட்போம் என்று சொல்லுகிறவரும் அங்கே இருக்கின்றார். அவரின் கரை வேட்டியையே அவருடன் முன்னர் கூட இருந்தவர்களிடமிருந்து அவரால் மீட்க முடியவில்லை.........🫣  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

சீன எல்லை பிரச்சினையைப் பேசியதால் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையிலெடுத்துள்ளது: கனிமொழி

08 APR, 2024 | 02:16 PM
image
 
தூத்துக்குடி: சீன எல்லைப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் மத்தியில் ஆளும் பாஜக அரசு கச்சத்தீவு விவகாரத்தை திசைதிருப்பும் அரசியலாகக் கையில் எடுத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் இருந்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தூத்துக்குடியில் திமுக வெற்றி உறுதி. இத்தனை ஆண்டு காலம் நாட்டாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பியபோதெல்லாம் அமைதி காத்த பாஜகவுக்கு தேர்தல் வந்துவிட்டதாலும், சீன எல்லைப் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்புவதாலும் கச்சத்தீவு பிரச்சினை நினைவுக்கு வந்துவிட்டது” என்று சாடியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட தமிழகத்தில் இதுதொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. கச்சத்தீவை யார் தாரைவார்த்தது என்ற விவாதங்களுக்கு மத்தியில் அதை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.

“கச்சத்தீவை தாரைவார்த்தது, இலங்கைத் தமிழர்கள் படுகொலையை வேடிக்கை பார்த்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசுதான். அதை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் அவர்களால் எடுக்கப்படவில்லை. இலங்கையில் போர் நடைபெற்றபோது பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசுதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால், இவர்களால் இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முடியவில்லை. அதற்கான முயற்சிகளையும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மேற்கொள்ளவில்லை” என எதிர்க்கட்சிகள் கச்சத்தீவு மற்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கருத்து தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே, “கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பது குறித்து இந்தியாவில் இருந்து வெளியாகும் தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை” என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இந்நிலையில், சீன எல்லைப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் தான் மத்தியில் ஆளும் பாஜக அரசு கச்சத்தீவு விவகாரத்தை திசைதிருப்பும் அரசியலாகக் கையில் எடுத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180712

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.