Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே.

தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம்.

இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன்.

இப்போது அதுவல்ல பிரச்சனை.

தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்...
வெட்டுறம்...
கொத்துறம்.....
அடிக்கிறம்...
வெட்டி
தாக்கிறம்...
புடுங்குறம்...
பொங்கிறம்..
படைக்கிறம்...
எங்கடை...
உரிமைகளை..
வெண்டெடுக்கிறம்...
அமெரிக்கவோட...
கதைக்கிறம்...
லண்டனோடை...
கதைக்கிறம்...
குயின்னோடை ...
கதைக்கிறம்...
ஐரோப்பாவோடை...
கதைக்கிறம்....

என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள்.

வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள்.

தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.

அதாவது தேர்தல் புறக்கணிப்பு மூலம் தமிழரின் இருப்பை  இலங்கையில் தக்க வைத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளீர்கள். அது எப்படி  என்றும் அதன் நடைமுறைச்சாத்தியத்தையும் கூறுவீர்களா? 

  • Replies 71
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?  நேற்று நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பிறந்தநாள் ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். சுமார் 8 - 9 ஆண்களும், அதேயளவு பெண்கள

ரஞ்சித்

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய அரசியல்வாதிகளால் தமிழரின் நலனும், தேசமும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒருமுறை நீங்கள் இங்கு பதிய முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால், எந்த அரசு எமக்கான தீர்வ

Kapithan

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? இப்படி ஒரு கேள்வி எழுவதே பிழை என்பது என் எண்ணம்.  நாவற்குழி குடியேற்றமும், கொழும்பில் தேவை நிமித்தம் போய் வ

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 16/4/2024 at 23:34, island said:

அதாவது தேர்தல் புறக்கணிப்பு மூலம் தமிழரின் இருப்பை  இலங்கையில் தக்க வைத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளீர்கள். அது எப்படி  என்றும் அதன் நடைமுறைச்சாத்தியத்தையும் கூறுவீர்களா? 

யார் எதை கூறினாலும் இந்தியாவின் சொற்படியே  எல்லாம் நடக்கும். 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/4/2024 at 04:33, ரஞ்சித் said:

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? 

இல்லை, தமிழர்கள் கொழும்பிலே பெருமளவு நிதியைக்கொட்டியே வாழ்கிறார்கள். யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் சிங்களவர்கள் படைபலத் துணையோடு தமிழரது நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள். கடைசியாகத் தமிழரது மேய்ச்சற்தரைகளும் பறிக்கப்படுகின்றன. புத்தர்சிலைகள் வைத்தல். தமிழரது பாரம்பரிய வாழிடங்களோடு வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்படுகிறது. தமிழர் கொழும்பில் வாழ்வதையும் வட-கிழக்கில் சிங்களம் திட்டமிட்டுக் குடியேற்றம் செய்வதையும் ஒன்றென்பவர்களுக்கு எமது தேசம் குறித்த தெளிவீனம் கரணியமாக இருக்கலாம். அல்லது சிங்களத்திற்கு வக்காலத்து வாங்கும் நோக்கமாகவும் இருக்கலாம். 
நன்றி  

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/4/2024 at 23:34, island said:

அதாவது தேர்தல் புறக்கணிப்பு மூலம் தமிழரின் இருப்பை  இலங்கையில் தக்க வைத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளீர்கள். அது எப்படி  என்றும் அதன் நடைமுறைச்சாத்தியத்தையும் கூறுவீர்களா? 

மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, kalyani said:

மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.

ஏற்கனவே எனது ஐடியாவை சொல்லி அந்த கருத்தை  மறுதலித்த உறவை நோக்கி வைக்கப்பட்ட கேள்வி என்பதை  வாசித்து கிரகித்து  கொண்டு  பின்னர் கேள்வி கேட்க வேண்டும். 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?

இல்லை. இதை false equivalence என்பார்கள்.

ஒன்று தமிழர் காணியில் அடாத்தாக தமிழரை துரத்தி விட்டு, அல்லது தமிழர் பிரதேசத்தில் உள்ள வனப்பகுதிகளை அழித்துவிட்டு அதில் அந்த பகுதியில் உள்ள இனம்பரம்பலுக்கு சரி எதிரான பரம்பலில், அரசே முழு கட்டுமானங்களையும் செய்து, மானியமும், காணியும் வேலையும் கொடுத்து உருவாக்கும் state sponsored colonization.

மற்றையது தனி மனிதர்கள் தம் சுய விருப்பு, முயற்சியில் வாய்ப்பை தேடி இடம் பெயர்வது. Individual enterprise. 
 
சில சிங்களவர் இப்படி என்னிடம் கேட்டு நான் விளக்கம் கொடுத்ததும் ஏற்று கொண்டுள்ளார்கள். பலர் பதில் இல்லாமல் வாயை மூடியுள்ளார்கள்.

உங்கள் நண்பர் படித்தவன் என்கிறீர்கள் - இந்த அடிப்படை வேறுபாட்டை கூட விளங்க முடியவில்லையா அவரால்?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, goshan_che said:

உங்கள் நண்பர் படித்தவன் என்கிறீர்கள் - இந்த அடிப்படை வேறுபாட்டை கூட விளங்க முடியவில்லையா அவரால்?

அவ்வளவு தூரத்திற்கு அவர் பார்க்காமல் இதனைச் சொல்லியிருக்கலாம். அல்லது யாழ்ப்பாணத்தில் மட்டுமே (நாவட்குழியில்) குடியேறியிருக்கும் தமிழர்களைப் பற்றி மட்டும் அவர் பேசியிருக்கலாம். அப்படியிருந்தாலும்கூட, நாவட்குழிக் குடியேற்றமும் அரச ஆதரவுடனேயே நடந்துவருகிறது. அது அவருக்குப் புரிவதில்லை போலும். 83 இற்கு முன்னர் யாழ்ப்பாண நகரில் வேலைவாய்ப்பிற்காக, வியாபாரத்திற்காக வாழ்ந்த சிங்களவர்களைப் பற்றி மட்டுமே அவர் பேசுகிறார் என்றால், அவர் முழு நிலைமையினையும் பார்க்கவில்லையென்றே தோன்றுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/4/2024 at 14:16, island said:

எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே! 

அரசுடன் இணைவதால் எதனையும் செய்ய முடியும் என்று நினைக்கவில்லை. முடிந்தால் கருணாவோ, பிள்ளையானோ, வியாழேந்திரனோ, டக்கிளசோ தமிழ் மக்களின் நலன்காக்க செய்த விடயங்கள் என்னவென்று அவர்களிடம் கேளுங்கள். அவர்களால் இன்று நடக்கும் எந்த அத்துமீறளையும், ஆக்கிரமிப்பையும் தடுக்க முடியாது. அற்ப சலுககைகளைத் தவிர அவர்களால் அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியவை எவையும் இல்லை. அவர்களுக்குக் கொடுக்கும் சில சலுகைகளைக் காரணம் காட்டி தமிழர் தாயகத்தில் தான் நடத்தும் பருத்துப் பெருகிவரும் குடியேற்றங்களுக்கான மெளனமான‌ ஆமோதிப்பை அவர்களிடமிருந்து அரசு பெற்றுக்கொள்ளும். ஆகவே, அரசுடன் சேர்வதால், அதனது ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டவர்களாக மாறிவிடுவோம். அரசுடன் இணையாதுவிட்டால் மட்டும் ஆக்கிரமிப்பு நடக்காதோ என்று கேட்கவேண்டாம், குறைந்தது எமது விருப்புடன் தான் நடத்துகிறோம் என்று அவர்கள் எம்மைப் பாவிக்க முடியாதல்லவா?

அரசுடன் இணையாது, மாகாணசபைகளையோ அல்லது பாராளுமன்ற ஆசனங்களையோ நாம் கைப்பற்றி, அதனூடு கிடைக்கும் பணத்தினூடாக எமது பகுதிகளை அபிவிருத்தி செய்யலாம். இதற்காக அரசுடன் சேரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. தமிழ்த் தேசியக் கட்சிகளிலோ அல்லது சுயேட்சையாகவோ இதனைச் செய்யலாம். அரசின் ஆக்கிரமிப்பிற்கெதிரான நிலைப்பாட்டுடன், தமது பிரதேச மக்களுக்கான நலன்களைச் செய்வது சாத்தியமே. ஆனால், இப்போதிருக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் நிலையினைப் பார்க்கும்போது அதற்கான சந்தர்ப்பம் இப்போதைக்கு இல்லையென்றே தெரிகிறது.

எமது இருப்பும், நலன்களும் காக்கப்படவேண்டுமானால், பாராளுமன்றத்தைப் பகிஸ்க்கரித்து வெளியில் வரவேண்டும். இதன்மூலம் சர்வதேசத்திற்கு இன்றும் இங்கு நடக்கும் அக்கிரமங்கள் தெரியவரும். தமிழரசுக் கட்சி, பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் பலமுறை பாராளுமன்றப் பகிஷ்கரிப்பை முன்னர் நிகழ்த்தியிருந்தன. மக்களின் ஆதரவும் அன்று அவர்களுக்கு இருந்தது. ஒரேவிடயம் என்னவெனில், அனைவரும் ஒரு கட்சியில் அல்லது ஒரு முன்னணியில் இருந்தனர், ஒரு சிலரைத் தவிர. இன்று இது சாத்தியமா என்பது கேள்விக்குறியே. 

முடிவு : அரசுடன் இணைந்துபோவதால் தமிழரின் நலன் காக்கப்படாது. மாறாக தமிழர் தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்பிற்கும், தமிழர் நலன்களைப் பலவீனப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கும் நாமும் உடைந்தையாக இருப்போம். 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 16/4/2024 at 09:16, விளங்க நினைப்பவன் said:

Vasee இங்கே இதை பற்றி ஒரு படம் செய்தி போட்டிருந்தார்

அந்த பிரதேசம் உப்பு தன்மை கொண்ட மண்  என்று மக்களால் கைவிடபட்ட பிரதேசமாம் (அந்த படத்திலும் தெரிகின்றது) அதில் யப்பான் கொம்பனி ஒன்று சீமான் தொழில்சாலை அமைக்க விரும்பி  முயற்சி செய்ததாம்.அதை விடக்கூடாது தொழில்சாலை அமைய விடக்கூடது நல்ல விடயங்கள் முன்னேற்பாடுகள் ஏதாவது  நடைபெற கூடாது  என்று அரசியல் நோக்கத்திற்காக சிலரை தூண்டி விட்டு அரசியல் செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

On 16/4/2024 at 09:16, விளங்க நினைப்பவன் said:

தொழில்சாலை அமைய விடக்கூடது நல்ல விடயங்கள் முன்னேற்பாடுகள் ஏதாவது  நடைபெற கூடாது  என்று அரசியல் நோக்கத்திற்காக சிலரை தூண்டி விட்டு அரசியல் செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

தமிழரின் நலனில், அவர்களின் தாயகத்தின் காப்பில் உண்மையான அக்கறை கொண்டிருப்பவராக நீங்கள் இருந்திருந்தால் இப்படிக் கேட்டிருக்க மாட்டீர்கள். ஒன்றில் இவற்றால் உருவாக்கப்படும் தாக்கங்கள் குறித்த அறிவு இல்லாமலிருக்கலாம், அல்லது அவற்றால் வரும் அழிவுகள் குறித்த அக்கறை இல்லாமலிருக்கலாம். 
 
Edited by ரஞ்சித்
பந்தி சேர்க்கப்பட்டது
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடாவை மாதிரி இன்னும் சில நாடுகளும் ஏதோ ஒரு வசா கொடுத்தால் இந்த ஆக்கிரமிப்பு என்ற கதையே இருக்காது.வெற்றிடத்தை காற்று நிரப்புமாப்போல எல்லாம் சுபமே நடக்கும்.தாயகத்தில் மக்களின் இருப்பை எப்படி தக்க வைக்கலாம் என்பதை நாம் ஆராய மாட்டோம்.ஏன் என்றால் அது எமது அடி மடி சம்பந்தப்பட்டது.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, சுவைப்பிரியன் said:

கனடாவை மாதிரி இன்னும் சில நாடுகளும் ஏதோ ஒரு வசா கொடுத்தால் இந்த ஆக்கிரமிப்பு என்ற கதையே இருக்காது.வெற்றிடத்தை காற்று நிரப்புமாப்போல எல்லாம் சுபமே நடக்கும்.தாயகத்தில் மக்களின் இருப்பை எப்படி தக்க வைக்கலாம் என்பதை நாம் ஆராய மாட்டோம்.ஏன் என்றால் அது எமது அடி மடி சம்பந்தப்பட்டது.

சுவை அண்ணா
அவை க‌ன‌டாவுக்கு போக‌ட்டும் அந்த‌ கால‌த்தில் புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌வை அவை அவேன்ட‌ ஊரில் போய் வ‌சித்தால் அந்த‌ இட‌த்த‌ நாங்க‌ள் நிரப்பலாம்............................

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, சுவைப்பிரியன் said:

கனடாவை மாதிரி இன்னும் சில நாடுகளும் ஏதோ ஒரு வசா கொடுத்தால் இந்த ஆக்கிரமிப்பு என்ற கதையே இருக்காது.வெற்றிடத்தை காற்று நிரப்புமாப்போல எல்லாம் சுபமே நடக்கும்.தாயகத்தில் மக்களின் இருப்பை எப்படி தக்க வைக்கலாம் என்பதை நாம் ஆராய மாட்டோம்.ஏன் என்றால் அது எமது அடி மடி சம்பந்தப்பட்டது.

3 hours ago, வீரப் பையன்26 said:

சுவை அண்ணா
அவை க‌ன‌டாவுக்கு போக‌ட்டும் அந்த‌ கால‌த்தில் புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌வை அவை அவேன்ட‌ ஊரில் போய் வ‌சித்தால் அந்த‌ இட‌த்த‌ நாங்க‌ள் நிரப்பலாம்............................

ரெண்டுமே நியாயமான கருத்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/4/2024 at 05:15, ரஞ்சித் said:

அரசுடன் இணைவதால் எதனையும் செய்ய முடியும் என்று நினைக்கவில்லை. முடிந்தால் கருணாவோ, பிள்ளையானோ, வியாழேந்திரனோ, டக்கிளசோ தமிழ் மக்களின் நலன்காக்க செய்த விடயங்கள் என்னவென்று அவர்களிடம் கேளுங்கள். அவர்களால் இன்று நடக்கும் எந்த அத்துமீறளையும், ஆக்கிரமிப்பையும் தடுக்க முடியாது. அற்ப சலுககைகளைத் தவிர அவர்களால் அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியவை எவையும் இல்லை. அவர்களுக்குக் கொடுக்கும் சில சலுகைகளைக் காரணம் காட்டி தமிழர் தாயகத்தில் தான் நடத்தும் பருத்துப் பெருகிவரும் குடியேற்றங்களுக்கான மெளனமான‌ ஆமோதிப்பை அவர்களிடமிருந்து அரசு பெற்றுக்கொள்ளும். ஆகவே, அரசுடன் சேர்வதால், அதனது ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டவர்களாக மாறிவிடுவோம். அரசுடன் இணையாதுவிட்டால் மட்டும் ஆக்கிரமிப்பு நடக்காதோ என்று கேட்கவேண்டாம், குறைந்தது எமது விருப்புடன் தான் நடத்துகிறோம் என்று அவர்கள் எம்மைப் பாவிக்க முடியாதல்லவா?

அரசுடன் இணையாது, மாகாணசபைகளையோ அல்லது பாராளுமன்ற ஆசனங்களையோ நாம் கைப்பற்றி, அதனூடு கிடைக்கும் பணத்தினூடாக எமது பகுதிகளை அபிவிருத்தி செய்யலாம். இதற்காக அரசுடன் சேரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. தமிழ்த் தேசியக் கட்சிகளிலோ அல்லது சுயேட்சையாகவோ இதனைச் செய்யலாம். அரசின் ஆக்கிரமிப்பிற்கெதிரான நிலைப்பாட்டுடன், தமது பிரதேச மக்களுக்கான நலன்களைச் செய்வது சாத்தியமே. ஆனால், இப்போதிருக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் நிலையினைப் பார்க்கும்போது அதற்கான சந்தர்ப்பம் இப்போதைக்கு இல்லையென்றே தெரிகிறது.

எமது இருப்பும், நலன்களும் காக்கப்படவேண்டுமானால், பாராளுமன்றத்தைப் பகிஸ்க்கரித்து வெளியில் வரவேண்டும். இதன்மூலம் சர்வதேசத்திற்கு இன்றும் இங்கு நடக்கும் அக்கிரமங்கள் தெரியவரும். தமிழரசுக் கட்சி, பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் பலமுறை பாராளுமன்றப் பகிஷ்கரிப்பை முன்னர் நிகழ்த்தியிருந்தன. மக்களின் ஆதரவும் அன்று அவர்களுக்கு இருந்தது. ஒரேவிடயம் என்னவெனில், அனைவரும் ஒரு கட்சியில் அல்லது ஒரு முன்னணியில் இருந்தனர், ஒரு சிலரைத் தவிர. இன்று இது சாத்தியமா என்பது கேள்விக்குறியே. 

முடிவு : அரசுடன் இணைந்துபோவதால் தமிழரின் நலன் காக்கப்படாது. மாறாக தமிழர் தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்பிற்கும், தமிழர் நலன்களைப் பலவீனப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கும் நாமும் உடைந்தையாக இருப்போம். 

இதை தான் சுருக்கமாக குறிப்பிட்டேன்.  எமது தலைமைகளுக்கு போராடி எதிர்ப்பு அரசியல் செய்தும் பெறத் தெரிய வில்லை.  ஆயுத போர் புரிந்தும் பெறத்  தெரியவில்லை . 
இணைந்து அரசியல் செய்தும் பெற தெரிய வில்லை.  

கோட்பாட்டு ரீதியான (Theoretic)  அரசியல்,  உணர்ச்சி ரீதியான வார்த்தை ஜால அரசியல் எழுதும் போதும் அதை  வாசிக்கும் போதும்  புளகாங்கித்தை ஏற்படுத்தும்.  ஆனால், உங்கள் கருத்துக்களில் தற்போதைய தாயக அரசியல் நிலை, ஜதார்த்தம் பற்றி எள்ளவும்  கருத்து எடுப்பதாக தெரியவில்லை.   தற்போதைய நிலையில் எமது மக்களின் இருப்பு  காப்பாற்றப்பட வேண்டும். 
மக்களின் கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம், தொழில்துறை   ஆகியவற்றின்  உயர்வு மட்டுமே எமது வருங்கால இளம் சந்ததியினர் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள உதவும்.  அதற்கான வழிமுறைகளை, தந்திரோபங்களை பற்றி சிந்திப்பதும்  மக்கள் பிரதிநிதிகளின் முக்கிய  கடமையாக இருக்க வேண்டும்.  வெறும் உசுப்பேற்றல் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே நன்மை பயக்கும். 

தற்போதைய பலவீனமான தமிழர் அரசியலில் தம்மை தக்க வைத்து எமது இருப்பு காப்பாற்ற எப்படியான அரசியல் தந்திரோபாயங்கள் தமிழர் தரப்பில் கடைப்பிடிக்க படல் வேண்டும் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை.  மாகாண சபை, பாராளுமன்ற உறுப்பினராகி எமது பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யலாம் என்று கூறி விட்டு அடுத்த பந்தியில் பாராளுமன்றத்தை பகிஸ்கரிப்பு செய்து வெளியில் வரவேண்டும் என்றும் கூறுகின்றீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, island said:

இதை தான் சுருக்கமாக குறிப்பிட்டேன்.  எமது தலைமைகளுக்கு போராடி எதிர்ப்பு அரசியல் செய்தும் பெறத் தெரிய வில்லை.  ஆயுத போர் புரிந்தும் பெறத்  தெரியவில்லை . 
இணைந்து அரசியல் செய்தும் பெற தெரிய வில்லை.  

முதலில் பெறத் தெரியவில்லை, பெறத் தெரியவில்லை என்று கூறுவதன் மூலம், சிங்களவர்கள் நல்லவர்கள், கேட்கிற மாதிரிக் கேட்டால்த் தருவார்கள், எமக்குத்தான் கேட்கத் தெரியவில்லை, எம்மில்த்தான் பிழை என்று கூறுவதை நிறுத்துங்கள். ஏனென்றால், நீங்கள் எப்படிக் கேட்டாலும் அவர்கள் தரப்போவதில்லை. இணக்க அரசியலால் உந்தப்பட்டு கருத்தெழுதும் உங்களிடமிருந்து இதனைத்தவிர‌ வேறு எதனைத்தான் எதிர்பார்க்க முடியும்?

54 minutes ago, island said:

தற்போதைய நிலையில் எமது மக்களின் இருப்பு  காப்பாற்றப்பட வேண்டும். 

இதை எப்படிச் செய்வதாக உத்தேசம்? அரசுடன் இணைந்தா? இதுவரை அரசுடன் இணைந்த தமிழ் அரசியல்வாதிகளைக் காட்டிலும் பெரிதாக வேறு எதனைச் சாதித்து விடப்போகிறீர்கள்? 

56 minutes ago, island said:

மக்களின் கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம், தொழில்துறை   ஆகியவற்றின்  உயர்வு மட்டுமே எமது வருங்கால இளம் சந்ததியினர் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள உதவும்

இதற்கும் தமிழ் மக்கள் தமது இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்கும் இடையே இருக்கும் தொடர்பென்ன? கல்வி, வேலைவாய்ப்பு, தொழிநுட்பம், பொருளாதாரத்தில் தமிழ் மக்கள் சோபிக்கவில்லை என்று நினைக்கிறீர்கள் போல. எப்போதும்போலத் தமிழர்கள் இந்த விடயங்களில் நன்றாகவே செயற்படுகிறார்கள். காலத்திற்குக் காலம் கல்வியில், தொழிவாய்ப்பில் ஏற்ற இறக்கங்கள் வரலாம், ஆனால் நிரந்தரமாக வீழ்ந்ததில்லை. ஆனால், தமிழரின் பொருளாதாரமும், கல்வியும், வேலைவாய்ப்பும், தொழிநுட்பமும் அவர்களின் இருப்பைத் தக்கவைக்கப் போவதில்லை. ஏனென்றால், இவற்றிற்கும், அவர்களின் இருப்பிற்கும் தொடர்பில்லை. 1983 இலேயே தமிழர்களின் வாழ்க்கைத்தரம் கொழும்பிலும் பிற இடங்களிலும் எப்படி இருந்ததென்பதும், அவற்றினால்க்கூட‌ அவர்களை கறுப்பு யூலையில் இருந்து  காப்பாற்ற முடியாமற்போனதென்பதையும் நீங்கள் மறக்கமாட்டீர்கள். யுத்த காலத்திலும் வடமாகாணமும், பிற்காலத்தில் கிழக்கு மாகாணமும் எப்படியிருந்தன‌ என்பது நாம் தெரியாதது அல்ல. 

இன்று புலம்பெயர் தமிழரிடையே இருக்கும் செல்வமும், அறிவும், தொழிநுட்பமும் தமிழரின் இருப்பை இலங்கையில் தக்கவைக்கப் போதுமானவையாகத் தெரியவில்லை. கோடீஸ்வரனனான சுபாஷ்கரன் கூட பிக்குகளின் காலில் வீழ்ந்தே வியாபாரம் செய்யவேண்டியிருக்கிறது. அவரால்க் கூட இருப்பைத் தக்கவைக்க முடியாது. 

தமிழர் மீதான கலவரங்களில் சிங்களம் முதலில் இலக்குவைப்பது அவர்களது பொறுளாதாரத்தை. பின்னர் கல்வி, வேலைவாய்ப்பு என்று தொடரும். இவை தமிழரின் இருப்பைத் தக்கவைக்கப் போதுமானவை அல்ல. வேண்டுமானால் தனி மனிதர்களாக, அடையாளத் துறப்பின் ஊடாக தமிழர்கள் சொந்த நலன்களைக் காத்துக்கொள்ளலாம். கதிர்காமரைப் போல, நீலனைப் போல. ஆனால், ஒரு இனமாக அவர்களால் முடியாது. 

1 hour ago, island said:

மாகாண சபை, பாராளுமன்ற உறுப்பினராகி எமது பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யலாம் என்று கூறி விட்டு அடுத்த பந்தியில் பாராளுமன்றத்தை பகிஸ்கரிப்பு செய்து வெளியில் வரவேண்டும்

தமது தொகுதிகளில் சில விடயங்களைச் செய்யலாம் என்பதற்காகவே அப்படி கூறினேன். ஆனால், எனது தெரிவு பாராளுமன்றப் பகிஷ்கரிப்புத்தான். இதன்மூலமே தமிழ் இனம் இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் தனக்கான உரிமைகளைப் பெறவோ, நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளவோ முடியாது என்கிற பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியும். இலங்கையின் ஒற்றையாட்சியியையும் பாராளுமன்றத்தையும் முற்றாகப் பகிஷ்கரிப்பதனூடாக தமிழர்கள் இன்று நடக்கும் அரசிடமிருந்து தம்மை அந்நியப்படுத்தியவர்களாக காண்பிக்க வேண்டும். தொடர்ச்சியான மக்களின் நடவடிக்கைகளே ஈற்றில் சர்வதேசத்தின் கண்களை ஈர்க்கும். ஆனால், இன்றிருக்கும் இணக்க அரசியல் செய்யும் நபர்களும், சலுகைகளின் பின்னால் திரியும் அவர்களின் ஆதரவாளர்களும், உணர்விழந்த மக்களும் இதனைச் செய்வார்களா என்பது கேள்விக்குறிதான். 

இறுதியாக, உணர்ச்சியற்றவை என்று எதுவும் இல்லை. நாம் இனமாக காக்கப்பட வேண்டும் என்பதும், இருப்பிற்காகப் போராடவேண்டும் என்பதும் கூட ஒரு உணர்வுதான். உணர்வற்றவர்கள் ஜடங்கள் என்று அழைக்க‌ப்படுவர், நீங்கள் எப்பிடி?

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, island said:

 தற்போதைய தாயக அரசியல் நிலை, ஜதார்த்தம் பற்றி எள்ளவும்  கருத்து எடுப்பதாக தெரியவில்லை.   தற்போதைய நிலையில் எமது மக்களின் இருப்பு  காப்பாற்றப்பட வேண்டும். 
மக்களின் கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம், தொழில்துறை   ஆகியவற்றின்  உயர்வு மட்டுமே எமது வருங்கால இளம் சந்ததியினர் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள உதவும்.  அதற்கான வழிமுறைகளை, தந்திரோபங்களை பற்றி சிந்திப்பதும்  மக்கள் பிரதிநிதிகளின் முக்கிய  கடமையாக இருக்க வேண்டும்.  வெறும் உசுப்பேற்றல் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே நன்மை பயக்கும். 

தற்போதைய பலவீனமான தமிழர் அரசியலில் தம்மை தக்க வைத்து எமது இருப்பு காப்பாற்ற எப்படியான அரசியல் தந்திரோபாயங்கள் தமிழர் தரப்பில் கடைப்பிடிக்க படல் வேண்டும் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை.  மாகாண சபை, பாராளுமன்ற உறுப்பினராகி எமது பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யலாம் என்று கூறி விட்டு அடுத்த பந்தியில் பாராளுமன்றத்தை பகிஸ்கரிப்பு செய்து வெளியில் வரவேண்டும் என்றும் கூறுகின்றீர்கள். 

ஆமாம்

அபிவிருத்தி இலவசம் மற்றவர் கையை எதிர் பார்த்தல் என்று ஒரு பலவீனமான தலைமுறையை உருவாக்கி வருகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/4/2024 at 12:23, ரஞ்சித் said:

சீமேந்துத் தொழிற்சாலை அமையக் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராடுவது அரசியல் விடயமா? எப்படி? ஒரு சீமேந்துத் தொழிற்சாலை அமைவதால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அறிந்திருக்கிறீர்களா? இல்லையென்றால், காங்கேசந்துறைத் தொழிற்சாலையைச் சுற்றியிருந்த பல நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் ஏன் இன்று தரிசாகக் கிடக்கின்றன என்று சென்று பாருங்கள். அப்பகுதிகளில் காணப்படும் பாரிய அகழிகளால் ஏற்பட்டிருக்கும் சூழல் நாசத்தைச் சென்று பாருங்கள். குறுகிய கால வேலைவாய்ப்பிற்காகவும், வருமானத்திற்காகவும் ஒரு பிரதேசத்தினை நாசமாக்குவதைத் தடுக்க அப்பிரதேச மக்கள் போராடுவதை அரசியல் என்று கொச்சைப்படுத்த வேண்டாம். 

பவளப்பாறை பாதுகாப்பிற்காக மேலை நாடுகளில் (கடல் விலங்கியல்) பெருமளவு பணம் நேரம் என்பவற்றை செலவு செய்து அதனை காப்பாற்றுகிறார்கள், ஆனால் 3ஆம் உலக நாடுகளில் ஒரு தொலைநோக்கு சிந்தனை இன்றி தமது மண்ணை அழிப்பதற்கு முன்னிற்கும் பனத்திற்காக விலைபோன அம்மக்களின் பிரதிநிதிகள், இதுதான் எமது மக்களின் நிலை. 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/4/2024 at 05:15, ரஞ்சித் said:

அரசுடன் இணைவதால் எதனையும் செய்ய முடியும் என்று நினைக்கவில்லை. முடிந்தால் கருணாவோ, பிள்ளையானோ, வியாழேந்திரனோ, டக்கிளசோ தமிழ் மக்களின் நலன்காக்க செய்த விடயங்கள் என்னவென்று அவர்களிடம் கேளுங்கள். அவர்களால் இன்று நடக்கும் எந்த அத்துமீறளையும், ஆக்கிரமிப்பையும் தடுக்க முடியாது. அற்ப சலுககைகளைத் தவிர அவர்களால் அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியவை எவையும் இல்லை. அவர்களுக்குக் கொடுக்கும் சில சலுகைகளைக் காரணம் காட்டி தமிழர் தாயகத்தில் தான் நடத்தும் பருத்துப் பெருகிவரும் குடியேற்றங்களுக்கான மெளனமான‌ ஆமோதிப்பை அவர்களிடமிருந்து அரசு பெற்றுக்கொள்ளும். ஆகவே, அரசுடன் சேர்வதால், அதனது ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டவர்களாக மாறிவிடுவோம். அரசுடன் இணையாதுவிட்டால் மட்டும் ஆக்கிரமிப்பு நடக்காதோ என்று கேட்கவேண்டாம், குறைந்தது எமது விருப்புடன் தான் நடத்துகிறோம் என்று அவர்கள் எம்மைப் பாவிக்க முடியாதல்லவா?

அரசுடன் இணையாது, மாகாணசபைகளையோ அல்லது பாராளுமன்ற ஆசனங்களையோ நாம் கைப்பற்றி, அதனூடு கிடைக்கும் பணத்தினூடாக எமது பகுதிகளை அபிவிருத்தி செய்யலாம். இதற்காக அரசுடன் சேரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. தமிழ்த் தேசியக் கட்சிகளிலோ அல்லது சுயேட்சையாகவோ இதனைச் செய்யலாம். அரசின் ஆக்கிரமிப்பிற்கெதிரான நிலைப்பாட்டுடன், தமது பிரதேச மக்களுக்கான நலன்களைச் செய்வது சாத்தியமே. ஆனால், இப்போதிருக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் நிலையினைப் பார்க்கும்போது அதற்கான சந்தர்ப்பம் இப்போதைக்கு இல்லையென்றே தெரிகிறது.

எமது இருப்பும், நலன்களும் காக்கப்படவேண்டுமானால், பாராளுமன்றத்தைப் பகிஸ்க்கரித்து வெளியில் வரவேண்டும். இதன்மூலம் சர்வதேசத்திற்கு இன்றும் இங்கு நடக்கும் அக்கிரமங்கள் தெரியவரும். தமிழரசுக் கட்சி, பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் பலமுறை பாராளுமன்றப் பகிஷ்கரிப்பை முன்னர் நிகழ்த்தியிருந்தன. மக்களின் ஆதரவும் அன்று அவர்களுக்கு இருந்தது. ஒரேவிடயம் என்னவெனில், அனைவரும் ஒரு கட்சியில் அல்லது ஒரு முன்னணியில் இருந்தனர், ஒரு சிலரைத் தவிர. இன்று இது சாத்தியமா என்பது கேள்விக்குறியே. 

முடிவு : அரசுடன் இணைந்துபோவதால் தமிழரின் நலன் காக்கப்படாது. மாறாக தமிழர் தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்பிற்கும், தமிழர் நலன்களைப் பலவீனப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கும் நாமும் உடைந்தையாக இருப்போம். 

நீங்கள் கூறிய பாராளுமன்ற பகிஸ்கரிப்பு மூலம் நாம் இழந்தவை மிக அதிகம் என்பதற்கு பல உதாரணங்களை கண் முன்னே கண்ட பிறகும் இவ்வாறு நடைமுறை சாத்தியம் அற்ற முன்மொழிவை  கூறுகின்றீர்கள்.  இவ்வாறு நடைமுறை சாத்தியம் அற்ற கற்பனை வாதங்களை விடுத்து உண்மை உலகுக்கு வாருங்கள் என்று உங்களை நான் கேட்க போவதில்லை ஏனெனில்,  உங்களை அவ்வாறு கேட்பது  உங்கள் முன்மொழிவுகள்  போலவே useless ஆன விடயம் என்பது எனக்கு தெரியும்.  இன்னும் பத்து வருடங்களுக்குப் பிறகும்கூட  இப்படியான useless கருத்துகளை  கூறிக்கொண்டு அதே இடத்திலேயே நிற்பீர்கள்.  அதற்கான பூரண சுதந்திரம் உங்களுக்கு உண்டு. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, island said:

நீங்கள் கூறிய பாராளுமன்ற பகிஸ்கரிப்பு மூலம் நாம் இழந்தவை மிக அதிகம் என்பதற்கு பல உதாரணங்களை கண் முன்னே கண்ட பிறகும் இவ்வாறு நடைமுறை சாத்தியம் அற்ற முன்மொழிவை  கூறுகின்றீர்கள்.

பாராளுமன்ற பகிஸ்கரிப்பு என்றால் தாங்கள் ஏதோ வெற்றி மந்திரம் என்று நினைத்து காலமும் இருந்தது இன்று கழுதை தேய்ந்து கடடேறும்பு ஆனது தான் உண்மைநிலை என்று பல அய்யாமார்கள் அண்ணைமார்கள் சொல்ல அறிந்துள்ளேன்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, vasee said:

பவளப்பாறை பாதுகாப்பிற்காக மேலை நாடுகளில் (கடல் விலங்கியல்) பெருமளவு பணம் நேரம் என்பவற்றை செலவு செய்து அதனை காப்பாற்றுகிறார்கள், ஆனால் 3ஆம் உலக நாடுகளில் ஒரு தொலைநோக்கு சிந்தனை இன்றி தமது மண்ணை அழிப்பதற்கு முன்னிற்கும் பனத்திற்காக விலைபோன அம்மக்களின் பிரதிநிதிகள், இதுதான் எமது மக்களின் நிலை. 

நீங்கள் இணைத்த படத்தில் அமைச்சர் செல்லும் பிரதேசம் மக்கள் இல்லாத  வெளி காடாக உள்ளது.
உண்மையிலேயே அந்த மக்கள்  சீமேந்துத் தொழிற்சாலை அமைவதால் அந்த பிரதேசத்தின் சுற்று சூழலுக்கு  ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்து தெளிவு பெற்று தான் அதை எதிர்த்து போராடினார்கள் என்று நீங்கள் நம்புகின்றீர்களா
சுற்றுச்சூழலை பாதிக்க பண்ணாத  சீமேந்து தொழிற்சாலை மேற்குலகநாடுகளில் கூட கிடையாது .இங்கே அவற்றை சுற்றுபுறசூழல் கொலைகாரன் என்றும் சொல்வார்கள். சீமேந்து தொழில்சாலை வேண்டாம் என்று எதிர்த்து போராடியவர்கள் மேற்குலகநாடுகளில் இருந்து சீமேந்தை இறக்குமதி செய்து கொள்ளலாம் .இப்படியே ஒவ்வொன்றாக வேண்டாம் என்று எதிர்த்து கொண்டிருந்தால் அவர்கள் வேலைவாய்புக்களுக்கு தான் பாதிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

யாழ்ப்பாணம் மயோசின் காலத்தில் கடல் உயிரினங்களின் இறந்த உடல்களின் எச்சங்கள் மூலம், பின்னர் தரை உயர்வால் உருவாக்கப்பட்டதாக கூறுகிறார்கள் (கிட்டதட்ட 20 மில்லியன் ஆண்டுகள்).

அதனால் யாழ்ப்பாணம் சுண்ணாம்புக்கல் நிலப்பிரதேசம் என வகைப்படுத்துகிறார்கள் (அதனால நிலத்தடி நீர் கொண்டுள்ளது).

இந்த சுண்ணாம்புக்கற்கள் உறுதியானவை இல்லை, அதனாலேயே சில குகை அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் இலகுவாக காணப்படுகிறது.

இந்த சீமெந்து தயாரிப்பு நிலத்தடி நீரினையும் யாழ்ப்பாண நிலப்பரப்பின் உறுதித்தன்மையினையும் பாதிக்கும் அத்துடன் காற்று மாசுபட்டுதலலால் மக்களுக்கு பெருமளவில் சுவாச சம்பந்தமான நோய் ஏற்படுவதுடன் புற்றுநோயும் ஏற்படலாம்.

தற்போது சுவாச சம்பந்தமான நோய் உலகில் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது, இந்த துறை ஒரு செல்வம் கொழிக்கும் ஒரு துறையாக உள்ளது இந்த நோய் ஒரு நீண்ட கால நோயகிவிடுவதால் இந்த வியாதிகளுக்கான மருந்து உற்பத்தி ஒவ்வொரு ஆண்டிற்கும் அதிகரித்து செல்லுகிறது.

இந்த வேலை வாய்ப்புகள் மூலம் பெறுவதினை விட பல மடங்கு அந்த மக்கள் இழப்பார்கள்.

ஆனாலும் யாழ்ப்பாணத்திலிருந்து முன்னரும் கிளிங்கரில் (சீமெந்தாக இல்லாமல்) தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக நினைவுள்ளது சின்ன வயதில் தெருவில் பச்சை சிறிய கற்கள் பார்த்த நினைவுள்ளது.

மக்கள் சிந்தனையில்லாத தலைவர்கள் இருக்கும்வரை மக்கள் போராட்டங்களால் எந்த பிரயோசனமும் கிடையாது என்றே நினைக்கிறேன், கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதைபட்டே ஆகவேண்டும் எனும் நிலையில் எமது மக்களின் நிலை!

Edited by vasee
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

ண்மையிலேயே அந்த மக்கள்  சீமேந்துத் தொழிற்சாலை அமைவதால் அந்த பிரதேசத்தின் சுற்று சூழலுக்கு  ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்து தெளிவு பெற்று தான் அதை எதிர்த்து போராடினார்கள் என்று நீங்கள் நம்புகின்றீர்களா

உங்களுக்கு தெரியுமா,  யாழ்பாண பல்கலைக்கழகம் அன்றைய தமிழ் தேசிய வாதிகளான  தமிழரசு கட்சியின்,  மிக கடுமையான எதிர்ப்பின் மத்தியிலேயே திறந்து  வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை திறக்க விடபாட்டோம் என்று அவர்கள் அடம் பிடித்தார்கள். யாழ்பாணம் முழுவதும் கறுப்பு கொடி ஆர்பாட்டங்கள் நடந்தன.    கூறப்பட்ட காரணம்,  இராமநாதன் என்ற தமிழினத்தின் மாபெரும் தலைவர் பெயரில் உள்ள இராமநாதன் கல்லூரியை,   அதன் பெருமைகளை அழிக்கவே  அதை அரச பல்கலைக்கழகமாக சிங்கள அரசு மாற்றுகிறது என்பதாகும்.  

அரசின் மிக சிறிய கிராமிய மட்டதிலான  அபிவிருத்தி திட்டங்கள் கூட  தமிழரசு கட்சியால் கடுமையாக எதிர்க்கப்பட்டு  அவற்றிற்கு ஒத்துழைக்க வேண்டாம் என அன்று மக்கள் மத்தியில் கடுமையான  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எதிர் காலத்தில் தாம் உருவாக்க நினைக்கும் தமிழீழ புரட்சிக்கு அது இடையூறு விளைவிக்கும் என தமிழ் தேசியவாதிகள் அன்று கருதினர்.  

அதன் தொடர்சசியாக எந்த தொழிற்துறை யாழில் உருவாக்கப்பட்டாலும் அதை எதிர்க்க காரணங்களை தேடித் தேடி  கண்டுபிடித்து அதை எதிர்கக ஒரு கூட்டம் எப்போதும் இருக்கின்றது.  அப்பாவி மக்களை தூண்டி அவற்றிற்கெதிராக போராட்டம் நடத்த அந்த கும்பல் முயற்சி செய்துகொண்டே இருக்கும். தற்போதைய போலி அறிவியல் வட்சப், யூரிப் காணோளிகள் அதற்கு பலம் சேர்ககின்றன.  

சுற்றுலாதுறையை வளர்கக முற்பட்டால் பல்வேறு நாட்டவர்கள் இங்கு  வருவதால் யாழ்பாண கலாச்சாம் கெடுகிறது என்று ஒரு கூட்டம் வரும்.  

ஒரு காலத்தில் “யாழ்பாண வெங்காயங்கள்” இலங்கை முழுவதும் பிரபல்யமாக அதிக  கேள்வி உள்ளதாக இருந்தது. நிரம்பலை யாழ்பாண விவசாயிகள் செய்து தமது பொருளாதாரத்தை பெருக்க  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா தனது பொருளாதார கோட்பாடுகள் மூலம் உதவி செய்தார். 

 இன்றைய உலகமயமாக்கல் பொருளாதார மாற்றங்களினால் அந்த நிலை இன்று இல்லை என்றாலும் ஏனைய தொழிற்துறைகளை முற்றாக நிராகரித்து   யாழ்பாணத்தில் வெங்காயங்களை உற்பத்தி செய்து சந்தைப்டுத்தி மீண்டும் யாழ்பாண வெங்காயங்களை இலங்கை முழுவதும் பிரபல்யப்படுத்தலாம். 

இலங்கையின் மற்றைய பிரதேசங்கள் பல்வேறு தொழிற் துறைகளால் வளர்சியடைய அவர்களுக்கு தேவையான வெங்காயங்களை நாம் சப்ளை செய்யலாம். 

  • Thanks 1
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, island said:

யாழ்பாண பல்கலைக்கழகம் அன்றைய தமிழ் தேசிய வாதிகளான  தமிழரசு கட்சியின்,  மிக கடுமையான எதிர்ப்பின் மத்தியிலேயே திறந்து  வைக்கப்பட்டது.

The government, facing the surge in popularity of the J. R. Jayewardene-led UNP opposition, was anxious to keep the TUF on its side. Sirimavo Bandaranaike announced her government’s decision to open a university campus in Jaffna, to appease the Tamils who wanted a Tamil university to be set up in Trincomalee. She announced that she would personally open the campus.

It was a tactical political announcement. The youths saw through it. They said the government’s real objective was to kill the Tamil demand for a university in Trincomalee and to drive a wedge between northern and eastern Tamils. The University authorities acted in a hurry. They appointed Prof. K. Kailasapathy as the president of the Jaffna Campus and selected Parameswara College founded by Sir Ponnampalam Ramanathan as its premises.   Srimavo Bandaranaike went on an official visit to Jaffna on 6 October 1974, to declare Jaffna University Campus open.  Militant youths called upon the public to boycott the opening ceremony and all other functions organized by government supporters to welcome the prime minister. They organized a black flag demonstration. TUF members and its parliamentarians obeyed the decision taken by the militant youths. The decision making power of the Tamil people thus passed into the hands of the Tamil militants.

Pirapaharan: Vol.1, Chap. 8 First Military Operation – Ilankai Tamil Sangam

இந்தப் பொய்யிலேயே ஒருவரின் முகத்திரை கிழிந்துவிட்டது.

தமிழர்கள் தமக்கென்று தமிழ்பேசும் ஒரு பல்கலைக்கழகத்தைக் கேட்டது திருகோணமலையில். ஆனால், வடக்குத் தமிழர்களையும் கிழக்குத் த்கமிழர்களையும் பிரித்தாள நினைத்த சிறிமா யாழ்ப்பாணத்திலேயே கட்டுவேன், நானே திறந்துவைப்பேன் என்று பிடிவாதமாக அதனைக் கட்டினார்.  யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்றினைக் கட்டும் சிறிமாவின் முடிவினை எதிர்த்து, அவர் யாழ்ப்பாணம் வரும்போது பொதுமக்களும், இளைஞர்களும் ஆர்ப்பாட்டத்திக்ல் ஈடுபட்டனர்.

இதுதான் நடந்தது. 

இணக்க அரசியலால் உந்தப்பட்டு, தமிழர்களின் நலன்களைக் காவுகொள்ள பொய்களையும் புரட்டுக்களையும் பரப்பும் இதுபோன்ற கருத்துக்களை நிர்வாகம் கவனத்தில் எடுக்கவேண்டும். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
33 minutes ago, ரஞ்சித் said:

எதிர்கக வேண்டும் என்று முடிவெடுத்தால் அதற்கான காரணங்களை தேடுவதும் இளைஞர்களை தூண்டி  விடுவதும் தமிழரசு கட்சியின் கைவந்த கலை என்பது இலங்கை அரசியலை புரிந்து கொண்ட அனைவருக்கும் தெரியும்.  பொதுமக்களும் இளைஞர்களும் ஆர்பட்டதில் ஈடுபட்டார்கள் என்று கூறப்பட்டாலும் அவர்களை கொம்பு சீவி விட்டது தமிழரசு கட்சியே என்பது வெள்ளிடை மலையாக தெரியும். 

பலகலை கழகம் திருகோணமலையில் அமைத்திருந்தால் அது  தமிழரின் முழுகட்டுப்பாடில் இருந்திருக்காது என்ற ஜதார்த்தத்தை கூட புரிய முற்படவில்லை. 

அப்படியே அங்கு திறந்திருந்தாலும்  தமிழரின் கலாச்சார தலைநகரை புறக்கணித்து சிங்கள ஆக்கிரமிப்புக்காக திருகோணமலையில் பல்கலை கழகம் திறந்ததாக புரட்டு கூறி பிரச்சாரம் செய்திருப்பார்கள் இந்த தமிழரசு கட்சியினர் என்பது தமிழரசு கட்சியின் செயல்களை பார்தவர்கள் அனைவருக்கும் புரியும். 

தமிழரசுகட்சி எப்போதுமே தனது உசுப்பேற்றும் அரசியலுக்காக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் தெரிந்த விடயம் தான்.  அவை எல்லாம் ஆதாரங்கள் அல்ல.. 

Edited by island
மேலதிக சேர்ககை.
  • Downvote 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு பொய்யை மறைக்க இன்னொரு புரட்டு.

ஆக இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறப்பதற்கான எதிர்ப்பு மேல்த்தட்டு வர்க்க யாழ்ப்பாணிகளினால் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழரசுக்கட்சியின் உந்துதலினால் மக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு என்று வந்துவிட்டது. 

கூறப்பட்டது புரட்டு என்றாலும், அதில் அன்றிருந்த தமிழரசுக் கட்சி மீதான காழ்ப்புணர்வு கொட்டிக் கிடக்கிறது. 

ஆக, தமிழர் கண்ட ஜனநாயகவழி அரசியல்வாதிகளில் மிகவும் சிறந்தவரான தந்தை செல்வா அன்று ஆரம்பித்த கட்சியும், அதன் செயற்பாடுகளும் உணர்ச்சியால் தூண்டப்பட்டவை என்ற முடிவிற்கு வந்தாயிற்று.

அன்றிருந்த தமிழர்களுக்க்கு ஒரே நம்பிக்கையாக இருந்தவர் செல்வா. அவரது அரசியலே தவறு என்றால், இக்கருத்தாளர் அன்று எந்தப் பக்கம் நின்றிருக்கிறார் என்பது தெளிவாகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, ரஞ்சித் said:

ஆக இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறப்பதற்கான எதிர்ப்பு மேல்த்தட்டு வர்க்க யாழ்ப்பாணிகளினால் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழரசுக்கட்சியின் உந்துதலினால் மக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு என்று வந்துவிட்டது

தமிழரசு கட்சியாலேயே அந்த எதிர்ப்பு  மேற்கொள்ளப்பட்டதாகவே நான் கூறியுள்ளேன். அதை வாசிக்க வில்லையா?  அல்லது வாசித்தும்  ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக எழுதி உள்ளீர்களா? 

இப்போதும் கருத்துக்களை நேர்மையாக எதிர் கொள்ளாமல் தந்தை செல்வாவின் பிரபல்யத்துக்கு  பின்னால் ஒழிய வேண்டிய நிலை.  

தந்தை செல்வா இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்து அவர் ஆயுததாரிகளால்  சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் நீங்கள் பிளேட்டை மாத்தி கூறி இருப்பீர்கள். 😂

Edited by island

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு. கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது. அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  
    • இங்கு ஆறு பக்கம் தாண்டி இந்த திரி ஓடுது சுருக்கமா சொல்லணும் என்றால் சுத்து மாத்து சுமத்திரன்  பதவிக்காக யாரின் காலில் விழுந்து நக்கியாவது பாராளுமன்றம் சென்று விடுவார் நாங்கள்தான் நேரத்தை விரயமாக்குகிறோம் . தேர்தலில் தோல்வியை சந்தித்தவர் தேசிய பட்டியல் மூலம் செல்ல கூடாது எனும் சட்டத்தை கொண்டு வரனும் கொண்டு வர விடுவார்களா ? நாமல்குஞ்சு  தேசிய பட்டியல் மூலம் உள்ளே வருதாம் .  
    • நீ பாதி நான் பாதி கண்ணே -- ஜோன் ஜெரோம் & ஜீவிதா  
    • உண்மையான் பையன். மிகச் சரியாக சொல்கின்றீர்கள்.  
    • பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.