Jump to content

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது. 

அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது.

ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 

  • Confused 1
Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?  நேற்று நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பிறந்தநாள் ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். சுமார் 8 - 9 ஆண்களும், அதேயளவு பெண்கள

ரஞ்சித்

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய அரசியல்வாதிகளால் தமிழரின் நலனும், தேசமும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒருமுறை நீங்கள் இங்கு பதிய முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால், எந்த அரசு எமக்கான தீர்வ

Kapithan

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? இப்படி ஒரு கேள்வி எழுவதே பிழை என்பது என் எண்ணம்.  நாவற்குழி குடியேற்றமும், கொழும்பில் தேவை நிமித்தம் போய் வ

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, island said:

உங்களுக்கு தெரியுமா,  யாழ்பாண பல்கலைக்கழகம் அன்றைய தமிழ் தேசிய வாதிகளான  தமிழரசு கட்சியின்,  மிக கடுமையான எதிர்ப்பின் மத்தியிலேயே திறந்து  வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை திறக்க விடபாட்டோம் என்று அவர்கள் அடம் பிடித்தார்கள். யாழ்பாணம் முழுவதும் கறுப்பு கொடி ஆர்பாட்டங்கள் நடந்தன.    கூறப்பட்ட காரணம்,  இராமநாதன் என்ற தமிழினத்தின் மாபெரும் தலைவர் பெயரில் உள்ள இராமநாதன் கல்லூரியை,   அதன் பெருமைகளை அழிக்கவே  அதை அரச பல்கலைக்கழகமாக சிங்கள அரசு மாற்றுகிறது என்பதாகும்.  

அரசின் மிக சிறிய கிராமிய மட்டதிலான  அபிவிருத்தி திட்டங்கள் கூட  தமிழரசு கட்சியால் கடுமையாக எதிர்க்கப்பட்டு  அவற்றிற்கு ஒத்துழைக்க வேண்டாம் என அன்று மக்கள் மத்தியில் கடுமையான  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எதிர் காலத்தில் தாம் உருவாக்க நினைக்கும் தமிழீழ புரட்சிக்கு அது இடையூறு விளைவிக்கும் என தமிழ் தேசியவாதிகள் அன்று கருதினர்.  

அதன் தொடர்சசியாக எந்த தொழிற்துறை யாழில் உருவாக்கப்பட்டாலும் அதை எதிர்க்க காரணங்களை தேடித் தேடி  கண்டுபிடித்து அதை எதிர்கக ஒரு கூட்டம் எப்போதும் இருக்கின்றது.  அப்பாவி மக்களை தூண்டி அவற்றிற்கெதிராக போராட்டம் நடத்த அந்த கும்பல் முயற்சி செய்துகொண்டே இருக்கும். தற்போதைய போலி அறிவியல் வட்சப், யூரிப் காணோளிகள் அதற்கு பலம் சேர்ககின்றன.  

சுற்றுலாதுறையை வளர்கக முற்பட்டால் பல்வேறு நாட்டவர்கள் இங்கு  வருவதால் யாழ்பாண கலாச்சாம் கெடுகிறது என்று ஒரு கூட்டம் வரும்.  

ஒரு காலத்தில் “யாழ்பாண வெங்காயங்கள்” இலங்கை முழுவதும் பிரபல்யமாக அதிக  கேள்வி உள்ளதாக இருந்தது. நிரம்பலை யாழ்பாண விவசாயிகள் செய்து தமது பொருளாதாரத்தை பெருக்க  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா தனது பொருளாதார கோட்பாடுகள் மூலம் உதவி செய்தார். 

 இன்றைய உலகமயமாக்கல் பொருளாதார மாற்றங்களினால் அந்த நிலை இன்று இல்லை என்றாலும் ஏனைய தொழிற்துறைகளை முற்றாக நிராகரித்து   யாழ்பாணத்தில் வெங்காயங்களை உற்பத்தி செய்து சந்தைப்டுத்தி மீண்டும் யாழ்பாண வெங்காயங்களை இலங்கை முழுவதும் பிரபல்யப்படுத்தலாம். 

இலங்கையின் மற்றைய பிரதேசங்கள் பல்வேறு தொழிற் துறைகளால் வளர்சியடைய அவர்களுக்கு தேவையான வெங்காயங்களை நாம் சப்ளை செய்யலாம். 

நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி.
தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும்
யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி.
தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும்
யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.

உண்மை. இந்த பல்கலைக்கழகத்தை திறந்து வைக்க வந்த பிரதமரை யாழ் பலாலியில் யாழ்மக்கள் பெரும் திரளாக வந்து வரவேற்றதை இன்றும் காணொளிகளில் பார்கலாம்.

  தமிழரசுகட்சி தனது குறுகிய அரசியலுக்காக எதிர்த்ததை மக்கள எதிர்த்தார்கள் என்று புரட்டுகளை கூற இன்று கூற  வரலாற்றை திரித்து எழுதுவோர்  முன்வந் துள்ளார்கள்.  இப்போது வவுனியா பல்கலைக்கழகம் யாழ் வளாகமாக இருந்ததை மாற்றி   தனி பலகலைக்கழகமாக மாற்றியதையும் தமிழ் தேசியவாதிகள் எதிர்பபு  தெரிவித்தனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா?

இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால்.

சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா? 

தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை. 

இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம்.

தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.

இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும்.

இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.   

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி.
தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும்
யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.

வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரஞ்சித் said:

இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்

இணையத்தேடுதலில் பின்வரும் இணைப்புகள் கிடைத்தன.  காழ்புணர்வின் காரணமாக இராமநாதன் கல்லூரியின் சொத்துகளை பறிமுதல் செய்து விட்டார்கள் என்று அதையும்  ஒரு காரணமாக தமிழரசு கட்சி பிரச்சாரம் செய்தது நடைபெற்ற விடயம் தான்.  

கிடைத்த இணைப்புகளில் ஒன்று  யாழிணையத்தில் கிருபன் என்ற உறவால் முன்னர் இணைக்கப்பட்ட திரி. 

https://eelanadu.lk/யாழ்ப்பாணப்-பல்கலைக்கழக/

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/யாழ்-பல்கலைக்கழக-உருவாக்கமும்-எதிர்ப்பும்/91-293330

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி. இதுகுறித்து நன்கு அலசப்பட்டே இருக்கிறது.

ஒவ்வொருவரும் எந்த மூலையிலிருந்து இதனை எழுதுகிறார்கள் என்பதைப்பொறுத்தே விமர்சனம் அமைகிறது. 

என்னைப்பொறுத்தவரை இவை தமிழரசுக்கட்சியை விமர்சிக்கவும், தமிழ்த் தேசியத்தை இழிவுபடுத்தவும் எழுதப்பட்டவை என்றே நினைக்கிறேன். இந்த விமர்சனங்களில் ஒரு சிறிய பகுதியேனும் ஆளும் சிங்கள இடதுசாரி இனவாதத்தின் மேல் வைக்கப்படவில்லை என்பது வியப்புத்தான். அதுமட்டுமல்லாமல் சிங்கள இனவாதத்தின் பிதாமகர்களை நல்லவர்களாகக் காட்டும் கைங்கரியமும் இங்கு எனக்குத் தெரிகிறது. 

பரவாயில்லை, செய்யுங்கள். தமிழரசுக் கட்சியின் நம்பகத்தனமையினையும், தமிழ்த்தேசியத்தை வளர்த்துவிட்ட அதன் செயல்களையும் தொடர்ச்சியாக விமர்சியுங்கள். ஈற்றில் சிங்களப் பேரினவாதம் என்று ஒன்றில்லை, எல்லாம் இலங்கை நாட்டு மக்களே என்று நிறுவுங்கள். சுபம் !

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 26/4/2024 at 11:33, island said:

ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது. 

அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது.

ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 

எதிர்காலத்தில் ஜே. ஆரும் அதுலத் முதலியும் நல்லவர்களாக யாழ் களத்தில் இட்டுக்கட்டப்படுவர் என்பதை அண்ணல் ஐலன்ட் அவர்கள் சூசகமாக அறிவிக்கிறார், மா மக்களே!

 

 

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2024 at 19:11, island said:

தமிழரசுகட்சி எப்போதுமே தனது உசுப்பேற்றும் அரசியலுக்காக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் தெரிந்த விடயம் தான்.  

இதைக்கூறுவதற்கு தமிழரசுக் கட்சி மீதான மிகுந்த வக்கிரமும், காழ்ப்புணர்ச்சியும் இருக்கும் ஒருவரால்த்தான் முடியும். அல்லாவிட்டால், அக்கட்சியின் அனைத்துச் செயறபாடுகளும் உசுப்பேற்றும், தீண்டிவிடும், உணர்வூட்டிவிடும் வெறும் இனவாத நடவடிக்கைகள் தான் என்று நீங்களும், நீங்கள் மேற்கோள் காட்டும் உங்களது முகாமின் உறுப்பினர்களும் எழுதப்போவதில்லை. 

On 27/4/2024 at 01:33, island said:

ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ


அப்படிக் கூறிவிட்டு, உங்களின் முகம் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியவுடன் இப்படி எழுதுகிறீர்கள். உண்மையைக் கூறி எழுதுங்கள். ஏன் இவ்வளவு சிரமம்? நான் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவன். இலங்கையின் ஒற்றையாட்சியை நேசிப்பவன். சிங்கள இடதுசாரிகள் எனும் போர்வையில் உலாவரும் பேரினவாதிகளை ஆதரிப்பவன். அதற்காக தமிழ்த் தேசியத்தை ஆதரித்தவர்களை, தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்தவர்களை, தமிழரின் பிரதேச நலன்கள் குறித்து செயற்படுபவர்களை என்னால் முடிந்தவரையில் விமர்சித்துச் சிறுமைப்படுத்துவேன் என்று வெளிப்படையாகவே கூறுங்கள். உங்களைப்போல இன்னுமொருவர் முன்னர் இங்கு உலாவந்தார். துல்பேன் எனும் பெயரில் விமர்சனம் எழுதிய அவரும் உங்களின் கருத்துக்களையே முன்வைத்து வந்தார். அவரும் உங்களின் முகாமிலிருந்து வருபவராக இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

இணைப்பிற்கு நன்றி. இதுகுறித்து நன்கு அலசப்பட்டே இருக்கிறது.

ஒவ்வொருவரும் எந்த மூலையிலிருந்து இதனை எழுதுகிறார்கள் என்பதைப்பொறுத்தே விமர்சனம் அமைகிறது. 

என்னைப்பொறுத்தவரை இவை தமிழரசுக்கட்சியை விமர்சிக்கவும், தமிழ்த் தேசியத்தை இழிவுபடுத்தவும் எழுதப்பட்டவை என்றே நினைக்கிறேன். இந்த விமர்சனங்களில் ஒரு சிறிய பகுதியேனும் ஆளும் சிங்கள இடதுசாரி இனவாதத்தின் மேல் வைக்கப்படவில்லை என்பது வியப்புத்தான். அதுமட்டுமல்லாமல் சிங்கள இனவாதத்தின் பிதாமகர்களை நல்லவர்களாகக் காட்டும் கைங்கரியமும் இங்கு எனக்குத் தெரிகிறது. 

பரவாயில்லை, செய்யுங்கள். தமிழரசுக் கட்சியின் நம்பகத்தனமையினையும், தமிழ்த்தேசியத்தை வளர்த்துவிட்ட அதன் செயல்களையும் தொடர்ச்சியாக விமர்சியுங்கள். ஈற்றில் சிங்களப் பேரினவாதம் என்று ஒன்றில்லை, எல்லாம் இலங்கை நாட்டு மக்களே என்று நிறுவுங்கள். சுபம் !

ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.  

மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.  

நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.  

உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.  

நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள். 

இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.  

இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். 

மிகத் தவறான கருத்து. மிகப் பெரும் வீரம் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு செய்து போராடிய ஓர் இனத்தை இவ்வாறு சிறுமைப் படுத்திவிடவேண்டாம். எந்த இனத்திலும் செயற்பாட்டாளர்கள் மற்றும் நாம் நாடு என்று சிந்திப்பவர்கள் மிகச்சிலராகவும் மதில் மேல் பூனைகளும் நான் என்று சுயநலமாக சிந்திப்பவர்கள் மிக மிக அதிகமாக இருப்பதும் சாதாரண நடைமுறை மற்றும் வரலாறு. 

தமிழர்களின் தலைவர்களை சாட இவ்வாறு அருவரி பாடங்களை தூக்கி வரவேண்டாம். அதற்காக தான் சிவப்பு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா?

நான் எழுதும் மூலை எதுவென்று நீங்கள் தேடவேண்டாம். நானே சொல்லிவிடுகிறேன். இலங்கையில் தமிழர்களுக்கென்று தனியான மொழியும், கலாசாரமும், தேசமும் இருக்கின்றது என்று முற்றிலுமாக நம்பும் மூலையது. சுதந்திரத்திலிருந்து தனிச்சிங்களச் சட்டம், பல்கலைக்கழக அனுமதி, பிரஜாவுரிமை, குடியேற்றங்கள், காலத்திற்குக் காலம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இன வன்முறைகள் என்கிற பெயரிலான‌ இனக்கொலைகள், 1972,1977,1981,1983 - ‍ 2009 என்று இன்றுவரை நிகழ்த்தப்படும், இலங்கையின் சிங்கள பெளத்த இனவாதிகளால் ஒற்றையாட்சியின் கீழ் நடத்தப்படும் இனவழிப்பில் பாதிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான தமிழர்கள் இருக்கும் மூலையில் நான் இருக்கிறேன். முடிந்தால் நீங்கள் இருக்கும் மூலையைச் சொல்லிவிடுங்கள். 

அரசியல் விமர்சனங்களைச் சுட்டிக்காட்டும்போது நான் அதனைத் தட்டிக்கழிக்கவோ அல்லது அதனை ஏற்றுக்கொள்ள முடியாமலோ விதண்டாவாதம் செய்யவேண்டிய தேவையென்ன இருக்கிறது? இங்கு எது அரசியல் விமர்சனம்? அறையினுள் இருக்கும் வெள்ளை யானை எது? தமிழரசுக் கட்சியின் தந்திரமான தலைமையா அல்லது சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதமா? தமிழரசுக் கட்சியை அவமதிக்கவேண்டும், அவர்களையே இன்றுள்ள தமிழ்த் தேசியம் எனும் அருவருக்கத்தக்க கொள்கைக்கான பிதாமகர்களாகக் காட்டவேண்டும் என்று பகீரதப் பிரயத்தனத்தில் எழுதிய நீங்கள், உங்கள் எழுத்துக்களின் இடையே இழையோடிப்போயிருக்கும் சிங்கள இடதுசாரிப் பேரினவாதத்தின், சிங்கள இனவாதத்தின் பிதாமகத் தம்பதிகளை உங்களையறியாமலேயே வாழ்த்துவதும், பாராட்டுவதும் உங்களின் முயற்சியில் அப்பட்டமாகத் தெரிகிறது. நீங்கள் எழுதும் எல்லா விமர்சனத்திற்கும் "சிங்களவர் திறமோ?" என்று நான் கேட்கவில்லை. நீங்கள் எழுதிய இந்த விமர்சனத்திற்குள்ளேயே சிங்களவர்களை வாழ்த்துகிறீர்கள், அதனால்த்தான் கேட்கிறேன். அடுத்தது, சிங்களவர் திறமோ என்று நான் கேட்பதன் மூலம், தமிழரசுக் கட்சியைப் பற்றி நீங்கள் எழுதும் அவதூறுகளை நான் ஏற்றுக்கொண்டேன் என்று யார் உங்களுக்குச் சொன்னது? நீங்களோ, மீனிளங்கோவோ அல்லது சண்முகமோ அல்லது ஈழநாட்டின் யாரோ இரு எழுத்தாளரோ எழுதினால் அது உணமையென்று ஆகிவிட வேண்டுமா? தமிழரசுக் கட்சிகுறித்தும்,  தமிழரின் உரிமைப் போராட்டத்தில் அதன் செயற்பாடுகள் குறித்தும் தமிழினத்திற்குள் ஒரு புரிதல் இருக்கின்றது. அந்தப் புரிதல் சிங்கள அடக்குமுறையின் கீழ் அவர்கள் பட்ட இடையறாத அழிவுகளிலிருந்து தமக்கான அரசியல்த் தலைமையாக அவர்கள் உணர்ந்து ஏற்றுக்கொண்ட தலைமை அது. அந்தத் தலைமையின் செயல் தவறானதென்றால் அன்றே அது தமிழர்களால் தூக்கியெறியப்பட்டிருக்கும். உங்கள் போன்றவர்கள் அன்று நிச்சயமாக இருந்திருப்பார்கள். சிங்கள அரசுகளின் செயற்பாடுகளை நிச்சயம் வர‌வேற்றிருப்பார்கள். ஆனால், மக்களால் ஏறெடுத்தும் பார்க்கப்பட்டிருக்க மாட்டார்கள். 
ஏதோவொரு கட்டுரையில், ஏதோவிரு இடத்தில் "சிங்கள அரசியல்த் தலைமை தனது சுயநலத்திற்காக தமிழரசுக் கட்சியைப் பாவித்தது" என்று மிகுந்த சிரமப்பட்டுக் காட்டவேண்டிய தேவையென்ன? இதன்மூலம் ஒருவிடயம் புலனாகிறதே கவனித்தீர்களா? அதாவது உங்களது தமிழரசுக் கட்சிக்கெதிரான, தமிழ்த்தேசியத்திற்கெதிரான விமர்சனங்களில் நீங்கள் தேவைகருதி விதைக்கும் ஓரிரு "சிங்களவர் மீதான விமர்சனம்" என்பது உங்களை நடுநிலையாளன் என்று காட்டுவதற்காக மட்டும்தான் என்பது. நீங்கள் அதைக்கூடச் செய்திருக்கத் தேவையில்லை. விமர்சிப்பது தமிழரசுக்கட்சியையும், அது ஆரம்பித்த தமிழ்த் தேசியத்தையும் தானென்னும் போது, சிங்களவரை விமர்சிக்கவேண்டிய தேவை ஏன் உங்களுக்கு? அவர்களை விடுங்கள், நேராகவே எம்மை விமர்சியுங்கள். ஏனென்றால், உங்களின் சிங்கள விமர்சனங்களை நாம் ஏற்றுக்கொள்ளவுமில்லை, அது உங்களின் நோக்கமும் அல்ல என்பதும் எமக்கு நன்கு தெரியும். 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.  

உங்களைப்போன்றவர்களும், ஈழநாடும் முன்வைத்த கருத்துக்களும் விமர்சனங்களும் கேட்கப்பட்டிருந்தால் இப்போதிருக்கும் நிலையினை விடவும் எவ்வாறு இருந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சிங்களப் பேரினவாதம் மனம் மாறி தமிழர்களுக்கான உரிமைகளையும், அபிலாஷைகளையும் தந்திருக்கும் என்கிறீர்களா? தமிழரசுக் கட்சி செய்த அரசியல் தவறென்றால், சரியான அரசியல் எதுவென்று நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும், அதை இங்கே பகிரலாமே? உரிமைகேட்டதும், மொழிக்கான அந்தஸ்த்துக் கேட்டதும், எமது நிலங்களை ஆக்கிரமிக்காதீர்கள் என்று கோரியதும், எம்மீதான அரச ஆதரவிலான தாக்குதலை நடத்தாதீர்கள் என்று கேட்டதும் தவறான அரசியல் என்றால், நீங்களும், ஈழநாடும் முன்வைத்த அரசியல் என்ன? 
தமிழர்களின் முன்னால் இரண்டு அரசியல் முறைகள் இருக்கிறது. ஒன்று, இனம் சார்ந்து, இனத்தின் நலன் சார்ந்து, இனத்தின் இருப்புச் சார்ந்து செய்வது. இரண்டாவது, இனத்தின் அடையாளம் தொலைத்து, ஆக்கிரமிப்பை அமைதியாக ஏற்றுக்கொண்டு, சிங்களப் பெருந்தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டு, அடையாளத் துறப்பின் மூலம் சொந்த நலனை மட்டும் காத்துக்கொள்வது. இதில் முதலாவதைத்தான் தமிழரசுக் கட்சியும், அதனால் ஆரம்பிக்கப்பட்டதாக நீங்கள் சாடும் தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கும் மக்களும் செய்ததும், இன்றுவரை செய்துவருவதும்.  நீங்கள் சார்வது எந்த அரசியல் என்பது ஓரளவிற்கு உங்களின் கருத்துக்களில் இருந்தே தெளிவாகிவருகிறது. அப்படியில்லையென்றால், தமிழருக்கு இதுவரை தெரியாத அந்த மூன்றாவது அரசியல்ப் பாதை குறித்து நீங்களே இங்கு சொல்லிவிடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.  

நீங்கள் பேசுவது அரசியல் வரலாறு இல்லை. முற்றான அரசியல் அவதூறு. பல தசாப்த்தங்களாக தமிழரின் நலன்களுக்காக அயராது போராடிய ஒரு அரசியல்த் தலைமையினையும், அரசியல் கட்சியையும் அவதூறு செய்யும் செயல். அதைக்கூட, சிங்களப் பேரினவாதத்தின் கொடுங்கரங்களை ஆதரிப்பதன் மூலம் செய்ய விழைகிறீர்கள். உதாரணத்திற்கு, யாழ் பல்கலைக்கழகத்தை தமிழரின் நலனுக்காகவே சிறிமா கட்டினார் என்பதும், தமிழரின் நலன்களுக்காக சுண்ணக்கற்பாறைகளை அகழ்வதை தமிழர்களின் அரசியல்வாதிகள் அரசியலாக்குகிறார்கள் என்று எழுதினீர்கள். தமிழரின் நலன்குறித்து உண்மையான அக்கறைக் கொண்டிருப்பவராக இருந்திருந்தால், உங்களின் விமர்சனத்தின் அடிப்படை எமது நலன்களை மீளப் பெற்றுக்கொள்வதாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அங்கேதான் உங்களின் அடையாளம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பதன் மூலம், தமிழர்கள் இனிமேல் எதுவும் செய்யமுடியாது, கல்வியில், தொழில்நுட்பத்தில், வேலைவாய்ப்பில் உங்களை வளர்த்துக்கொள்ள அரசுடன் இணைந்து இலங்கையர்களாக செயற்படுங்கள் என்கிற வாத‌த்தை முன்வைக்கிறீர்கள்.  
எமக்குள் இருப்பது இரு முகாம்கள். நான் ஏலவே கூறியது போல, தமிழர்களின் நலன்களைக் காக்க, அல்லது மிளப்பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் "தமிழ்த்தேசிய இனவாதிகளின்"முகாம். மற்றையது, அதே நலன்களை கைவிட்டு விட்டு சிங்களத்துடன் இணங்கிச்சென்று ஐக்கியமாகிவிடுபவர்களின் முகாம். எனது முகாமை நான் கூறிவிட்டேன், நீங்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.  

நான் மாய உலகில் சஞ்சரிக்கின்றேனா? எப்படி? எமது நலன்களையும், இருப்பையும், தேசத்தையும், மக்களையும் காத்துக்கொள்வதென்பது மாய உலகில் சஞ்சரிப்பதாக உங்களுக்குத் தெரிவது எப்படி? இது, எல்லாச் சாதாரண, தனது இனம் குறித்த அக்கறையும், பிரக்ஞையும் இருக்கின்ற எவருக்கும் வரக்கூடிய ஒரு உணர்வுதானே? இது எப்படி மாய உலக சஞ்சாரமாகிறது உங்களுக்கு? அப்படியானால், நீங்கள் வாழும் நிஜ உலகில் இவைகுறித்துப் பேசவேண்டாம் என்கிறீர்களா? அல்லது இவை எதுவுமே தேவையற்றவை என்கிற முடிவிற்கு வந்துவிட்டீர்களா? நீங்கள் ஒருவிடயம் நோக்கிப் பயணிக்கிறீர்கள். அந்தவிடயம் என்பது உங்களைப்பொறுத்தவரை மிகவும் அவசியமானதாக இருக்கிறது. ஆகவே, அதனை அடைவதற்கு உங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் முயல்கிறீர்கள். இதுவரையான உங்கள் முயற்சிகள் தகுந்த பலனைத் தரவில்லையென்பதற்காக அந்த விடயத்தை மாய உலகம் என்று விட்டுவிடுவீர்களா அல்லது தொடர்ந்து முயல்வீர்களா? உங்களுக்கு அந்தப் பிரச்சினை இருக்காது என்று நம்புகிறேன். ஏனென்றால், அந்த விடயம் அவசியமானதென்று நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆகவேதான் முயற்சிப்பவர்களை நோக்கி வசைபாடுகிறீர்கள். 

3 hours ago, island said:

நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும்.

தமிழரசுக் கட்சி செய்ததெல்லாமே உணர்சியூட்டி மக்களைத் தவறாக வழிநடத்தியமைதான் என்று பந்தி பந்தியாக‌ எழுதியது அவர்கள் மீதான வாழ்த்துபா என்கிறீர்களா? தமிழரசுக் கட்சிகுறித்தும், செல்வநாயகம் குறித்தும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். நீங்கள் கூறும் அந்த "உலகம் அறியும்" என்னும் "அந்த உலகத்தில்" எத்தனை பேர் இருக்கிறீர்கள்? தனிச்சிங்களச் சட்டம் பிறந்து, பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்டு, தமிழ் இளைஞர்கள் அவதியுற்றுக்கொண்டிருந்தபோது, அந்த அரசாங்கத்தையே வாழ்த்திப்பாடிய ஒருசிலர் வாழும் உலகமாக அது இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள். 

இதை யாரும் மறுக்கவில்லையே? தேசியத்தை விற்று பணம் பார்க்கும் கூட்டம் எப்போதும் போல இருந்துகொண்டு தான் இருக்கும். பல போலிகளை அவ்வப்போது காலம் எமக்குக் காட்டிக்கொண்டே வருகிறது. தமிழ் மக்களும் இவர்களைத் தாண்டி சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையான தேசியவாதிகள் யார்,  போலிகள் யாரென்பதை அவர்களால் மிக இலகுவாக உணர்ந்துகொள்ளமுடிவது போல, இனத்திற்குள் இருப்பதாகப் பாசாங்கு செய்துகொண்டு, அந்த இனத்தின் இருப்பையே அரித்துக்கொண்டு, அடக்குமுறையாளனுக்கு சாமரம் வீசும் சிலர் குறித்தும் அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள். இதனாலேயே இவர்களைப்போன்றவர்களால் இனத்திற்குள் ஒட்டிவிட முடியாது தனியே பிதற்றவேண்டியிருக்கிறது. 

3 hours ago, island said:

இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,

ஆக, நான் அனுமானித்ததை உங்களின் இந்தக் கூற்று உறுதிப்படுத்துகிறது என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். 

3 hours ago, island said:

ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே.

நானும் இதைத்தான் சொல்கிறேன். இலங்கையின் ஒற்றையாட்சி யாப்பினை ஏற்றுக்கொண்டு பாராளுமன்றக் கதிரைகளை நிரப்பும் அனைவரும் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்பவர்கள்தான். அதனால்த்தான், பகிஷ்கரிக்கவேண்டும் என்று கேட்கிறேன். 

3 hours ago, island said:

புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே

உண்மை. இன்றிருக்கும் தமிழரசுக் கட்சியின் நிலையினால் தமிழர்களின் அரசியல் ஆர்வம் குறைந்துவருவதை மறுக்கவில்லை. அதற்காக, தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதையும், அதன் சரித்திரச் செயற்பாடுகளையும், தமிழ் மக்களின் நலனில் அது கொண்டிருந்த அக்கறையினையும் இன்றிருக்கும் கொழும்புசார் தமிழ் அரசியல்வாதிகளுடன் ஒப்பிடமுடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலை

நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள்? புலத்திலா? அப்படியானால், அங்கிருக்கும் மக்களின் மனோநிலையினை இவ்வளவு கீழ்த்தரமாக உங்களால் மதிப்பிட முடிந்திருக்காது. நீங்கள் பழகும் குறுகிய வட்டத்திற்குள், உங்களைப்போன்றே சரணாகதி, இணக்க அரசியல், அடையாளம் துறப்பு எனும் மனோநிலையில் சஞ்சரிக்கின்ற ஒரு சிலரின் மனவோட்டங்களை ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களினதும் மனவோட்டமாக மடைமாற்றப்ப பார்க்கிறீர்கள். 

3 hours ago, island said:

ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.  

இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே

உங்களின் மீது வசைமாறி பொழியவேண்டிய தேவை எனக்கு இல்லை. உங்களின் விமர்சனத்தை, என்பக்க நியாயங்களோடு விமர்சிக்கிறேன். அவ்வளவுதான். உங்களைப்போன்ற பலரை நான் பார்த்தாயிற்று. பலருடன் விவாதிப்பதில் பயனில்லை என்று நகர்ந்து சென்றுவிடுவேன். உங்களின் கண்ணியமான எழுதிற்காகத் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணினேன். அவ்வளவுதான். 

நீங்கள் உங்களின் பார்வையில் சரியென்று நினைப்பதை எழுதுகிறீர்கள். அது மற்றையவர்களுக்கும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. நான் எழுதுவதும் அப்படியே. எனக்குச் சரியென்று பட்டதை எழுதிவருகிறேன். நோக்கமொன்றுதான், எனது இனம் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பிலிருந்து என்றோவொருநாள் விடுபடவேண்டும் என்பது. உங்கள் நோக்கமும் அதுவென்றால், மகிழ்ச்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

எனது இனம் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பிலிருந்து என்றோவொருநாள் விடுபடவேண்டும் என்பது. உங்கள் நோக்கமும் அதுவென்றால், மகிழ்ச்சி.

எனது விருப்பமும் அதுதான். எனக்கு பல இன நண்பர்கள் இருக்கின்றார்கள். ஆனால் உந்த சிங்கள இனத்தில்தான் “ஹாய்” என்று சொல்லுவதற்குக்கூட ஒருவருமில்லை. இனியும் எவரையும் சேர்ப்பேன் என்றும் நினைக்கவில்லை.

இந்தத் திரியில் அலசப்பட்ட எல்லா கருத்துக்களையும் வாசிக்கவில்லை. எனினும் தமிழர்கள் ஒற்றையாட்சிக்குக் கீழே வாழுவதை ஏற்றுக்கொள்ளும் நிலை இன்னும் வரவில்லை.

கையாலாகாத தமிழ்த் தேசிய அரசியல் கோமாளிகளால் மக்களின் ஆதர்சனமான அரசியல் விருப்பங்கள் முன்னெடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியத்தை நலிவுபெறச் செய்து இலங்கைத் தேசியத்தை ஏற்றுக்கொள்ளவைக்க பல செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. தமிழ்த் தேசிய முன்னெடுப்பு என்பது தோல்வி தழுவிய கோஷம் என்பதும், பொருளாதார அபிவிருத்தியே போதும் என்பதும், மக்கள் கொண்டாட்டத்தையும், கேளிக்கைகளையும் விரும்புவதால் அவற்றுக்கான வெளிகளை திறந்துவிடுவதன் மூலம் தேசிய உணர்வை மழுங்கடிக்கலாம் என்றும் பல வேலைத்திட்டங்கள் நடக்கின்றன.

ஆனால் சிங்கள இனம் தமது ஒடுக்குமுறை அரசியலில் இருந்து ஒரு இம்மிகூட நகரவில்லை. வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்பும், பொருளாதார நடவடிக்கைகளில் இறுக்கமான பிடியும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

தேசிய அரசியலை முழுமையாக நீர்த்துப்போகச் செய்ய தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தி அவர்களை நீதிமன்றுக்கு ஏறச் செய்தாயிற்று. 

தாயகத் தமிழரை புலம்பெயர் தமிழரிடம் இருந்து பிரிக்கும் வேலைத்திட்டங்களும் நடக்கின்றன.

நிலாந்தனின் கட்டுரையைப் படித்தால் பலவற்றைப் புரிந்துகொள்ளமுடியும்.

👇🏾

 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ரஞ்சித்   நான் எழுதும் விடயங்களை முழுமையாக புரிந்து கொள்ள முயலாமல் என்னை ஒரு பரம வைரி போலும் தமிழ் தேசியத்துக்கு எதிரானவன் போலவும்,  ஒற்றையாட்சியை வலியுறுத்துபவன் போலவும் சித்தரித்து நீங்கள் எழுத, பின்னர் நான் உங்களுக்கு இன்றைய அரசியல் நிலையின் உண்மை நிலையையும் இந்த நிலைக்கு எம்மைக் கொண்டு வந்து விட்டதன் கடந்த கால  அரசியலைப் பற்றிக் கூறி  பதிலெழுத, நீங்கள் முன்னதை விட ஆக்கோஷத்துடன் என்மீது  வசைமாரி பொழிய இப்படியே  இவ் விவாதம்  நீண்டு செல்கிறது.  எனவே, இந்த  விவாதத்தை நிறுத்தி நீங்கள்  முன் வைக்கும் அரசியல் முன் மொழிவு விரைவில்  நடைமுறைச் சாத்தியமாக மக்களால் ஏற்றுகொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு அந்த  அரசியல் வெற்றியளித்து,  உங்களது அரசியல் முன்மொழிவின் வினைதிறனால்  அடுத்த ஓரிரு ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தாலே போதும் நான் எனது இன்றைய நிலை தொடர்பாக எனது   கருத்துகளை வாபஸ் வாங்கி உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இந்தத் திரியில் அலசப்பட்ட எல்லா கருத்துக்களையும் வாசிக்கவில்லை. எனினும் தமிழர்கள் ஒற்றையாட்சிக்குக் கீழே வாழுவதை ஏற்றுக்கொள்ளும் நிலை இன்னும் வரவில்லை.

 

நானும் வாசிக்கவில்லை.

ஆனால் ஜியினை போலவே ஒற்றையாட்சியை நாட்டில் வாழும் தமிழர்கள், இத்தனை பின்னடைவுக்கு பின்னும், ஏற்று கொண்டதாக நானும் நினைக்கவில்லை.

6 hours ago, கிருபன் said:

கையாலாகாத தமிழ்த் தேசிய அரசியல் கோமாளிகளால் மக்களின் ஆதர்சனமான அரசியல் விருப்பங்கள் முன்னெடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியத்தை நலிவுபெறச் செய்து இலங்கைத் தேசியத்தை ஏற்றுக்கொள்ளவைக்க பல செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. தமிழ்த் தேசிய முன்னெடுப்பு என்பது தோல்வி தழுவிய கோஷம் என்பதும், பொருளாதார அபிவிருத்தியே போதும் என்பதும், மக்கள் கொண்டாட்டத்தையும், கேளிக்கைகளையும் விரும்புவதால் அவற்றுக்கான வெளிகளை திறந்துவிடுவதன் மூலம் தேசிய உணர்வை மழுங்கடிக்கலாம் என்றும் பல வேலைத்திட்டங்கள் நடக்கின்றன.

💯 உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

ஆனால் சிங்கள இனம் தமது ஒடுக்குமுறை அரசியலில் இருந்து ஒரு இம்மிகூட நகரவில்லை. வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்பும், பொருளாதார நடவடிக்கைகளில் இறுக்கமான பிடியும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

மீண்டும் 100% யதார்த்தமான பார்வை.

நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது.

நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை.

அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்….

ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது.

சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது.

சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.

நமக்குள் நாம் பேச ஒன்றிணைந்து செயலாற்ற இந்த அடிப்படை தான் ஆகக் குறைந்த வரம்பு. 

எமக்கு முன்னால் தம்மால் முடிந்த அளவு செய்து விட்டு போன எவரையும் கனம் செய்யாமல் எவரையும் எம்முடன் இணைக்க முடியாது. எம் முன்னே தம் வாழ்வை கொடுத்து செயலாற்றிவிட்டு சென்றவர்களை சார்ந்த இந்த மாதிரி  தூற்றுதல்கள் அடுத்த தலைமுறையை வேண்டாம் இந்த பழி என்று பின் வாங்க செய்து விடும். 

உலக வரலாற்றில் தம்மால் முடிந்த அளவு செய்தவர்களை நகரங்கள் வீதிகள் மற்றும் கேடயங்கள் என்று அவர்களது பெயர் குறிக்கப்பட்டு பெருமை படுத்துதல் தொடர்வது இதற்காகத் தான். நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் இன்றைய வெற்றிகளில் ஒன்று......
ஈழத்தமிழர்களின் இன , உரிமை பிரச்சனைகளை கடந்து போர் குற்றம் எனும்  சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்டு...


அதிலேயே  நம்மவர்கள் நேர காலங்களை கடத்திக்கொண்டிருக்க......


அவர்களோ எந்தவொரு இடைஞ்சல்கள் இல்லாமல் தமிழர் பகுதிகளில் அத்துமீறிய குடியேற்றங்களையும் விகாரை நிறுவுதல்களையும் செய்து கொண்டு தமது வரலாற்றை புதிதாக எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் : ஒரு காலக்கணக்கெடுப்பு – பகுதி 3   January 31, 2024 | Ezhuna மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தன. அதற்கேற்ப, விம்பம் அமைப்பு எழுநாவின் அனுசரணையுடன் கட்டுரைப் போட்டியொன்றை நடத்தியது. இப் போட்டியில் வெற்றி பெற்ற வெவ்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகள் 'மலையகம் 200' எனும் தலைப்பில் தொடராக எழுநாவில் வெளியாகின்றன. இனக்கலவரமும் இலக்கிய வெளிப்பாடும் மலையகத் தமிழர் வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் தொட்டு தொழிற்சங்க அடிப்படையிலும் இன, வர்க்க அடிப்படையிலும் பல்வேறுவிதமான எழுச்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இடம்பெற்று வந்துள்ளன. அவ்வாறு எழுச்சி பெறுகின்ற ஒவ்வொரு காலப்பகுதியிலும் அதற்கெதிராக அவர்களை ஒடுக்குவதற்கான நடைமுறைகளும் திட்டமிட்டு இடம்பெற்று வந்துள்ளன. இந்தியர் எதிர்ப்பு வாதம், இனவாதம் போன்ற கருத்து நிலைகள் இதில் முதன்மை வகித்தன. இவ்வாறு வளர்ந்து வந்த ஒடுக்குமுறைகள் எழுபதுகளில் தீவிர இனவாதமாக மாற்றம் பெற்றன. 1972, 1981, 1983 ஆம் ஆண்டுகளில் பாரிய இனவெறிச் சம்பவங்கள் நடைபெற்றன. ஓ.ஏ. இராமையா (2018:2016) 1973ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் நாடு முழுவதும் சிறுபான்மை தமிழர்களுக்கெதிராக மிகவும் மோசமான முறையில் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு ஆகிய பிரதேசங்களில் வாழும் தமிழர்களின் சொத்துக்களுக்குப் பெரும் அழிவுகள் ஏற்பட்டதோடு பலர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இது மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களது வரலாற்றில் மிக மோசமான பாதிப்புகளையும் சிதைவுகளையும் ஏற்படுத்தியது. பௌத்த இன மேலாண்மைச் சிந்தனையின் உச்சக்கட்ட தாக்குதலை மலையகத் தமிழர்கள் எதிர்கொண்டனர். மலையகத் தேசியவாதச் சிந்தனைகள் வளர்ச்சிபெற்று வந்த காலப்பகுதியிலேயே இவ்வாறான சம்பவங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இனக்கலவரம் குறித்த இலக்கியப் பதிவுகளை கணக்கிடும்போது கவிதைகள் சிலவற்றில் அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், சிறுகதைகள் மற்றும் நாவல்களில் இவ்விடயம் பெரிதும் உருக்கொள்ளவில்லை. மலையகத்தில் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘நாங்கள் பாவிகளாய் இருக்கிறோம் அல்லது 1983’ என்ற நாவல் இதனை வெளிப்படுத்தும் இலக்கியப் பதிவாகக் கொள்ள முடியும். இந்நாவல் 1983 இனக்கலவரத்தை பிரதானப்படுத்தி எழுதப்பட்டிருந்தாலும் மலையகத் தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடூரங்களை மையப்படுத்தியதாக அமையவில்லை. மலையகத் தமிழர் செறிவாக வாழும் நுவரெலியா, பதுளை மற்றும் அவர்கள் சிங்களவர்களுடன் இணைந்து வாழக்கூடிய கேகாலை, இரத்தினபுரி போன்ற பிரதான நகரங்களிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் மலையக மக்கள் இனக்கலவரங்களால் பெரிதும் தாக்கப்பட்டனர். எனினும் இந்நாவல் கொழும்பை கதைக்களமாக கொண்டு எழுதப்பட்டமை கவனிக்கத்தக்கதாகும். ஆகவே மொத்தமாக அவதானிக்கும்போது இனக்கலவரத்தையும் அதன் பின்னணிகளையும் அடிப்படையாகக் கொண்ட மலையக இலக்கியங்கள் பெரிதும் கவனப்படுத்தப்படவில்லையென்றே குறிப்பிட முடியும். எண்பதுகளின் இலக்கிய முகிழ்ப்பு : இனத்துவம், வர்க்க நிலை, தொழிற்சங்கச் சிதைவுகள் எண்பதுகளின் ஆரம்பத்தில் இனமுரண்பாடுகளும் இனவாத நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டபோது மலையகத் தமிழர்களிடையே இனத்துவச் சிந்தனைகள் வெளிக்கிளம்புகின்றன. இனவொடுக்குமுறைகளுக்கு எதிராக மலையகத் தமிழர்களின் இனப்பிரச்சினையை பேசும் வகையிலான கவிதைகளும், மற்றும் அரசியல் தலைவர்களிடையே இனவாதச் சிந்தனைகள் செயற்படுவதை எள்ளலாக சிறுகதைகளில் சொல்லும் இலக்கியப் பண்புகளும் வளர்ந்திருந்தன (மு.சிவலிங்கம்).  எண்பதுகளில் மலையக இலக்கியத் தளத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பண்புநிலை மாற்றமானது மலையக புவியியல் பிரதேசங்களில் எல்லை நிலங்களில் வாழக்கூடிய மக்களைப் பற்றிய இலக்கியப் படைப்புகள் உருப்பெற்றமையாகும். குறிப்பாக மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி முதலிய பகுதிகளில் வாழக்கூடிய மக்களைப் பற்றிய பதிவுகள் இலக்கியத்தில் இடம்பெறத் தொடங்கின. இப்பகுதிகளில் மலையகத் தமிழர்கள் சிங்களவர்களுடனும் சில பிரதேசங்களில் முஸ்லிம் மக்களுடனும் இணைந்து வாழுகின்றனர். இவர்கள் குறித்த இலக்கிய உருவாக்கம் இக்காலப்பகுதியிலேயே இடம்பெறுகின்றன. மாத்தளை மலரன்பன், அல் அலீமத் ஆகியோரது படைப்புகளில் இதனை அவதானிக்கலாம். மாத்தளை மலரன்பனது எழுத்துக்களில் மலையகத் தமிழர் சிங்களவர்களுடன் இணைந்து அந்நியோன்யமாக வாழ்வதையும் அவர்கள் ஒன்றாக இணைந்து அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் காணமுடிகிறது (கோடிச்சேலை-1989, பிள்ளையார் சுழி-2008). பெரும்பாலும் இறப்பர் தோட்ட வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட இக்கதைகளில் பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளர்களைப் போலவே அங்கு வேலை செய்யும் சிங்களத் தொழிலாளர்களையும் சமாந்தரமாகப் படைத்துள்ளார். இச்சிறுகதைகளில் சிங்களவர், தமிழர் உறவைச் சிறப்பாகப் பேணும் நோக்கில் பாத்திரங்களை உருவாக்கியிருப்பது சிறப்புக்குரியதாகும். (1983) இனக்கலவரத்திற்கு பின்னர் ஏற்பட்ட இலக்கியப் படைப்புகளில் இனத்துவ நல்லிணக்கத்தை பேணும் இலக்கிய உருவாக்கத்தைக் காணமுடிந்தது. வர்க்கநிலை  1980களில் மலையக இலக்கிய உருவாக்கப் போக்குகளில் இனத்துவ சிந்தனைகள் முனைப்பு பெறத் தொடங்கியபோதும் அதனைக் கடந்த வர்க்கநிலைப்பாட்டை வலியுறுத்தும் இலக்கிய அமைப்புகளும் உருவாகாமலில்லை. 1982ம் ஆண்டு வெளிவந்த ‘தீர்த்தக்கரை’ சஞ்சிகை இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. தீர்த்தக்கரை என்ற பெயரில் இயங்கிய குழுவினர்கள் மார்க்சியப் பார்வை கொண்டவர்களாகவும் மலையகத் தமிழர்களது வரலாற்றையும் அவர்களின் விடுதலையையும் வர்க்க அணுகுமுறையில் நோக்குபவர்களாகவும் செயற்பட்டனர். இவர்களால் வெளியிடபப்ட்ட தீர்த்தக்கரை சஞ்சிகையும் இக்கருத்துநிலையைக் கொண்ட ஆக்கங்களைச் சுமந்தவையாகும். குறிப்பாக இதில் இயங்கிய எல். சாந்தகுமார், எல். ஜோதிகுமார் ஆகியோர் மலையகச் சமூகம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டனர். மலையகத் தமிழரது வரலாற்றில் தீர்க்கமான கருத்துநிலைகள் கலை இலக்கியத் தளங்களில் இக்காலத்தில் உருவாகத் தொடங்கியது. தொழிற்சங்கச் சிதைவுகள் கவிதை இலக்கியத்துறையில் மல்லிகை.சி. குமார், சு. முரளிதரன் போன்ற கவிஞர்கள் தீவிரமாக சமூக விமர்சனத்துடன்கூடிய கவிதைகளை எழுதினர். இவர்களது கவிதைகள் சிறந்த கவித்துவத்துடனும் வீரியத்துடனும் மலையகத்தைப் பேசின. அதுவரைக்காலமும் தொழிற்சங்க பலத்துடன் மக்களை நிர்வகித்து வந்த தலைமைகள் மற்றும் நிர்வாகிகளை விமர்சித்தும் மக்களின் விடிவுக்கான சரியான பாதைகளை கண்டறிவதற்கான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துவதாக அவை அமைந்தன. “தொழிற்சங்கங்கள் புகுந்ததும் துயர்மூச்சு போனதா? சில சமயங்களில் இவைகள் துரைசங்கங்களாகும்” (சு. முரளிதரன் : தீவகத்து ஊமைகள்) “தொழிற்சங்கங்கள் உன் நிழலில் ஒதுங்கின” (சு. முரளிதரன்: தியாக யந்திரங்கள்) முதலிய கவிதைகளில் தொழிற்சங்கங்கள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை உடைவதையும் அவற்றின் போக்குகள் எவ்வாறு மக்கள் சார்பற்ற நிலைக்கு மாறியுள்ளன என்பதையும் அவதானிக்கலாம். ஞானசேகரன் போன்ற நாவலாசிரியர்களின் இக்கால நாவல்கள் தொழிற்சங்கங்களின் சிதைவுகளையும் அவை அரசியல் கட்சிகளாக மாறுவதையும் பிரதிபலித்தன. ஒரே தோட்டத்தில் பல தொழிற்சங்கங்கள் தங்களுக்கிடையே தொழிலாளர்களை பகிர்ந்து கொள்வதனால் தோட்டங்களில் தொழிற்சங்கப் போட்டியும் பகைமையும் வளர்க்கப்பட்டு தொழிலாளர்கள் பல துண்டுகளாகும் நிலையேற்பட்டது. மேலும் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் தீவிரமாக உருவாகிய தொழிற்சங்கங்கள் பின்னரைப் பகுதியில் சிதைவுறுகின்ற அவலநிலை உருவாகியது. தொழிற்சங்கங்கள் பலம் இழக்கத்தொடங்கியது மட்டுமல்லாது அவை கட்சிகளாக மாறுகின்ற காலப்பகுதியில்தான் இந்நாவல் வெளிவருகிறது (சு.தவச்செல்வன் : 2018). மலையக தமிழர்களது இலக்கிய உருவாக்க வளர்ச்சியில் இக்காலப்பகுதியில் கோட்பாட்டு ரீதியான படைப்பாக்க அணுகுமுறை முளைவிடத் தொடங்கியது. குறிப்பாக மார்க்சிய இலக்கியக் கோட்பாட்டுப் புரிதலுடன் எழுதுகின்ற போக்கு உருவாகத் தொடங்கியது. சாந்திகுமாரின் ‘மலையக சமூகம்’ பற்றிய ஆய்வுக்கட்டுரை தொடங்கி தீர்த்தக்கரை சஞ்சிகையில் சிறுகதைகள் படைத்த ஆனந்த ராகவன், பிரான்சிஸ் சேவியிர், கேகாலை கையிலைநாதன் ஆகியோர் எழுதித் தொகுத்த தீர்த்தக்கரைக் கதைகள் வரை இதன் அடிப்படைகளை உணரலாம். மலையக மக்களின் வாழ்க்கையையும், உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் சிறுகதைகள் தீர்த்தக்கரையில் வெளிவந்தன. திறமையுள்ள இளைய எழுத்தாளர்களின் படைப்புகள் அவை (வல்லிக்கண்ணன்:1995). தீர்த்தக்கரை சஞ்சிகையின் தொடக்கமாக அமைந்த இக் கோட்பாட்டெழுத்துக்கள் தொடர்ந்து தொண்ணூறுகளில் நந்தலாலாவாக உருமாறுகின்றது. தீர்த்தக்கரையிலிருந்து விரிந்த தளத்தில் ஆரம்பகால நந்தலாலா சஞ்சிகை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த கோட்பாட்டு ரீதியான இலக்கிய படைப்புகளும் இலக்கியப் புரிதல்களும் அக்காலப்பகுதியில் படைப்புத்துறையில் அதிகமாக பங்களிப்புச் செய்த மல்லிகை சி. குமாரது படைப்புகளிலும் வெளிப்பட்டது. மலையகத் தமிழர்களது சமூக அரசியலையும் அதன் பிரதானிகளையும் நன்கு புரிந்துகொண்ட எழுத்தாளராக மல்லிகை சி. குமாரை மதிப்பிடலாம். மலையக இலக்கியத்தில் மக்கள் இலக்கிய கோட்பாட்டைத் தொடக்கி வைத்தவர் சி.வி. வேலுப்பிள்ளையென்றால் இருபத்தோராம் நூற்றாண்டு படைப்பிலக்கியத் துறையிலும் அதனை வளர்த்தெடுத்துச் சென்றவர் மல்லிகை சி. குமாராவார். அவரது ‘மாடும் வீடும்’ கவிதைத்தொகுதி, பத்திரிகைகள், இதழ்களினூடாக வெளிவந்த சிறுகதைகள் மற்றும் நாவல்களில் மலையகத் தமிழர்களது வாழ்வியல் கூறுகளின் நுட்பமான பதிவுகளைக் காணமுடியும். இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்தில் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலக்கியப் படைப்பாக்கங்கள் உருவாகுகின்றன. குறிப்பாக மாத்தளை கார்த்திகேசு (வழி பிறந்தது-1992), புலோலியூர் சதாசிவம் (ஒரு நாட் பேர்-1995), தி. ஞானசேகரன் (லயத்துச் சிறைகள்-1994), மாத்தளை ரோகினி (இதயத்தில் இணைந்த இரு மலர்கள்-1997) ஆகிய நாவலாசிரியர்கள் பல்வேறு கோணங்களில் மலையகத் தமிழர்களின் பின்னணிகளை தமது எழுத்தில் பதிவு செய்தனர். இக்காலப்பகுதியில் முகிழ்த்தெழுந்த மற்றுமொரு கவிஞர் இராகலைப் பன்னீர் மலையகத் தொழிலாளர்களது விடுதலைக் கருத்துநிலையை அடிப்படையாகக் கொண்டு கவிதைகள் படைத்தவராக அறியப்படுகிறார் (புதிய தலைமுறை-1999). மலையக இலக்கியம் பற்றிய தேடல் மற்றும் ஆய்வு முயற்சிகள் முதன் முதலாக இக்காலப்பகுதியிலேயே தொடக்கி வைக்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது (மலையகத் தமிழர் இலக்கியம்-1994). சாரல் நாடன் மற்றும் அந்தனி ஜீவா போன்றோர் ஆரம்பகால மலையக இலக்கியம் மற்றும் இலக்கிய ஆளுமைகளைப்  பற்றி பதிவு செய்யத் தொடங்கினர். மலையகத்தில் தோற்றம் பெற்ற நாவல்களை அடிப்படையாகக் கொண்ட பல்கலைக்கழக புலமைநிலைப்பட்ட ஆய்வை பேரா.க. அருணாசலம் தொடக்கி வைக்கின்றார் (மலையகத் தமிழ் நாவல்கள் அறிமுகம்-1999).  இரண்டாயிரத்துக்குப் பின்னரான சமூக மாற்றமும் இலக்கியப் பரிமாணமும் தொண்ணூறுகளில் தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்படுகின்றன. இதனையடுத்து தோட்டங்களை தனியார் கம்பனிகள் குத்தகைக்கு எடுத்துக்கொள்கின்றன. இதனால் தொழிலாளர்கள் மீதான நிர்வாகங்களின் கெடுபிடிகள் அதிகரித்தன. இச்சூழ்நிலைகள் இரண்டாயிரமாம் ஆண்டை நெருங்கும்போது பல பரிமாணங்கள் அடைந்தன. இரண்டாயிரமாம் ஆண்டுகளில் மலையகத்தில் ஏற்பட்ட பிரதான மாற்றங்களாக; தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளாக மாற்றமுற்றமை, பிரதான தொழிற்சங்கங்களில் ஏற்பட்ட பிளவுகள், மற்றும் புதிய தொழிற்சங்கங்கள் உருவாகியமை, தொழிலாளர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வேறு வழிகளைத் தேடத்தொடங்குதல், இதனால் தேயிலை தொழிற்துறை மீதான ஈடுபாடு குறைவடைதல், வேறு தொழில்களை நாடுதல், நகர்ப்புற தொழில்கள் மீதான கவனம், தொழிலுக்காக கொழும்புக்கு இடப்பெயர்வு, வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுதல், புலம்பெயர்வு ஆகியன அதிகரித்தமை ஆகியனவற்றைக் குறிப்பிடலாம் (சு. தவச்செல்வன்:30). மலையகத்தில் மத்தியதர வர்க்கமானது இரண்டாயிரத்துக்குப் பின்னரேயே பெரும்படையாக எழுச்சிபெறுகின்றது. இவர்கள் தொழிலாளர்களிலிருந்து அந்நியமாகின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கின்ற நிலப்பகுதிகளிலிருந்து வெளியேறியதோடு அவர்களது பண்பாட்டிலிருந்தும் அந்நியமாயினர். இவற்றோடு மட்டுமல்லாது இலங்கையில் உலகமயமாக்களின் தாக்கம் இரண்டாயிரத்துக்குப் பின்பே மலையகத்தில் அதிகமாக உணரப்பட்டது. இவ்வாறான சமூக மாற்றங்கள் தொழிலாளர்களிடையே பல்வேறு சிக்கல் வாய்ந்த நிலைமைகளை உருவாக்கியதோடு தொழிலாளர்களை உதிரிகளாக்கின. தொழிற்சங்க போர்வைகளைப் பயன்படுத்திக்கொண்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மட்டுமே தக்கவைத்துக்கொண்ட அரசியல் கட்சிகள் மக்களது வாக்குகளை சேகரிப்பதிலேயே கவனம் செலுத்தத் தொடங்கின. பெருந்தோட்டங்களில் சடுதியாக இடம்பெற்ற இந்த இடப்பெயர்வுகள், புலம்பெயர்வுகள் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் யுவதிகளையும் கொழும்பு போன்ற பிரதான நகரங்களுக்கு தொழில்தேடிச் செல்வதற்கு வழிவகுத்தன. இவ்வாறு தொழில் நாடி இடம்பெயர்ந்தவர்கள் பலர் அப்பகுதிகளில் நிரந்தரவாசிகளாகவும் மாறினர். இரண்டாயிரத்துக்குப் பின்னர் மலையகச் சமூகத்தில் கல்வி சார்ந்த விழிப்புணர்வுகள் ஏற்பட்டமையால் பாடசாலைக் கல்வி வளர்ச்சியேற்பட்டது. பெருந்தோட்ட மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் அதிகம் நாட்டம் கொண்டமையால் பாடசாலைக் கல்வியில் வெற்றிபெற்ற சிலர் உயர்கல்வி நாடிச்சென்று பல்வேறு பதவிநிலைகளைப் பெற்றனர். கல்விநிலை சார்ந்த இந்தச் சமூக நகர்வானது (Social Mobility) ஒரு சில மாற்றங்களைக் கொண்டுவந்தன. குறிப்பாக அதிகமான ஆசிரியர்களைக் கொண்டதொரு மத்தியதர வர்க்கம் உருவானது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உயர்கல்வியைத் தொடரும் உயர்கல்வி வாய்ப்புகளை சிலர் பெற்றாலும் பெரும்பாலான மாணவர்கள் இடைவிலகினர். இடைவிலகியவர்கள் தோட்டங்களைவிட்டு கொழும்பு போன்ற புறநகர் பகுதிகளில் தொழில் புரிந்தனர். சிறுவர் தொழிலாளர்கள் (Child Labour) என்றதொரு பிரிவினரும் இதில் உருவாகினர். எஞ்சியோர் தோட்டத் தொழிற்துறையிலேயே பேர் பதிந்து கொண்ட புதிய தலைமுறைத் தொழிலாளர்களாயினர். மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகள் தோட்டத் தொழிற்துறை சார்ந்த தொழிலாளர்களது எண்ணிக்கையில் பெருமளவான வீழ்ச்சியை ஏற்படுத்தியது. இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் இடம் பெற்ற இவ்வாறான சமூக மாறுதல்களை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு இலக்கியப் படைப்புகள் வெளிவந்தன. குறிப்பாக மு. சிவலிங்கத்தின் ‘ஞானப்பிரவேசம்’, ‘விட்டில் பூச்சிகள்’, ‘மார்கழிப்பனி’, ‘நிலைமை கொஞ்சம் மாறும்போது’ போன்ற சிறுகதைகளை உள்ளடக்கிய ‘ஒரு விதைநெல்’ (2005), தெளிவத்தையின் சிறுகதைகள் மற்றும் பதுளை சேனாதிராஜாவின் ‘குதிரைகளும் பறக்கும்’ (2014) போன்ற சிறுகதைகளில் கொழும்புக்கு வேலைக்குச் சென்று அவ்வீடுகளில் பிரச்சினைக்கு உள்ளாகின்ற சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் பிரச்சினைகளும், வீட்டு வேலைக்குச் செல்கின்ற பெண்கள் பற்றிய பிரச்சினைகளும் பேசப்பட்டுள்ளன. புதிய தலைமுறை எழுத்தாளர்கள் இருபத்தோராம் நூற்றாண்டில் முதலாவது தசாப்த காலப்பகுதியில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியின் காரணமாக மலையக இலக்கியத்துக்கு புதிய தலைமுறை எழுத்தாளர்கள் சிலர் பங்களிப்புச் செய்யத் தொடங்கினர். நவீன இலக்கிய வாசிப்பு, புதிய இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய தேடல், உயர்கல்வித் தொடர்புகள் மற்றும் இக்காலப்பகுதியில் இயங்கிய சமூக அரசியல், இலக்கிய இயக்கச் செயற்பாடுகளின் உந்துதல் முதலிய காரணிகளால் இவர்கள் உலகளாவிய இலக்கிய படைப்புகளை வாசித்து தமது படைப்புத்தளத்தை உருவாக்க முயற்சித்தனர். குறிப்பாக மாரிமுத்து சிவகுமார், வே. தினகரன், சண்முகம் சிவகுமார், சு. தவச்செல்வன், சிவனு மனோஹரன், பிரமிளா செல்வராஜா, மு. கீர்த்தியன், செ.ஜெ. பபியான், வே. கிருஸ்ணபிரியன், எட்டியாந்தோட்டை கருணாகரன், லுனுகலை ஸ்ரீ, எஸ்தர் லோகநாதன் போன்றவர்கள் இக்காலப்பகுதியில் இயங்கிவரும் புதிய தலைமுறை எழுத்தாளர்களாவர். புதிய தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பல்வேறு கோட்பாடுகளின் செல்வாக்கு காணப்படுகின்றன. குறிப்பாக மார்க்சியம், பெண்ணியம், பின்நவீனத்துவக் கோட்பாடுகளின் செல்வாக்கு இவர்களது எழுத்துக்களில் வெளிப்படுவதை அவதானிக்க முடிகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் மலையக மக்களிடையே இடம்பெற்ற உலகமயம் மற்றும் தனியார் மயமாக்கல் பிரச்சினைகளுடன் தொடர்புபட்ட வாழ்க்கை முறைகளின் பிரதிபலிப்புகளை இவ்வெழுத்தாளர்களின் படைப்புகளில் காணமுடிகிறது. இப்படைப்பாளிகளின் படைப்புகள் நூலுருவில் பின்னர் வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது. மலைச்சுவடுகள் (மாரிமுத்து சிவகுமார்), சிவப்பு டைனோசர்கள், டார்வினின் பூனைகள் (சு. தவச்செல்வன்), ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும், கோடாங்கி, மீன்களைத்தின்ற ஆறு (சிவனு மனோஹரன்), குதிரைகளும் பறக்கும், உயிருதிர்காலத்தின் இசை (பதுளை சேனாதிராஜா), பீலிக்கரை, பாக்குபட்டை (பிரமிளா செல்வராஜ்), மல்லியப்பூ சந்தி (திலகர்), நாளை வரும் மழை (மு. கீர்த்தியன்), உயிர்த்தெழச் சொல்லுங்கள் (செ.ஜெ. பபியான்), மோட்ச முழக்கம் (லுனுகலை ஸ்ரீ), அவமானப்பட்டவனின் இரவு (எட்டியாந்தோட்டை கருணாகரன்), வேரின் பிரசவங்கள், மூதன்னையின் பாடல் (கிருஸ்ண பிரியன்) முதலான படைப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும். புதிய தலைமுறை எழுத்தாளர்கள் இக்காலத்தில் மலையகத்தில் எழுதத் தொடங்கியிருந்தாலும் அறுபதுகள் தொடக்கம் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதோடு அவர்களது படைப்புகளும் வெளிவந்துகொண்டிருந்தன. குறிப்பாக மு. சிவலிங்கம், தெளிவத்தை ஜோசப், மாத்தளை மலரன்பன், மல்லிகை சி. குமார், இரா. சடகோபன், அல் அஸீமத் ஆகியோர் தொடர்ந்தும் எழுதிவருகின்றனர். இவர்களது எழுத்துக்களில் தற்கால அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் செயற்பாடுகளைப் பற்றிய விமர்சனங்கள் அதிகம் காணப்படுகின்றன. மு. சிவலிங்கம் (ஒரு விதைநெல்), மல்லிகை சி. குமார் (வேடத்தனம்), மல்லியப்பு சந்தி திலகர் (மல்லியப்பூ சந்தி) ஆகியோரது சமகாலப் படைப்புகளில் தமது அரசியல் தலைமைகள் மீதான எதிர்ப்பு, தலைவர்களின் ஏமாற்றுத்தனங்கள் போன்ற விடயங்களை எள்ளலுடன் முன்வைக்கும் உத்திமுறைகளை காணலாம். மலையகத் தமிழர்களது வரலாற்று நிலைப்பட்ட எழுத்துகள் இரண்டாயிரமாம் ஆண்டுகளின் முதல் கால்நூற்றாண்டு எழுத்து முயற்சிகளில் குறிப்பிடத் தகுந்த புதிய விடயமாக இம்மக்களது வரலாற்று நிலைப்பட்ட எழுத்துக்களின் வரவைக் குறிப்பிடலாம். முன்னதாக எண்பதுகளில் சி.வி. வேலுப்பிள்ளை (நாடற்றவர் கதை), பீ.ஏ. காதர் (இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்) போன்றோர் மலையகத் தமிழர்களது வரலாற்றை எழுத ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியாக இரண்டாயிரமாம் ஆண்டின் இரண்டாவது தசாப்தத்தில் மலையகத் தமிழர்களது வரலாற்றையும் அதன் மூலங்களையும் தேடும் முயற்சி இடம்பெற்றது. குறிப்பாக கோப்பிக்கால மக்கள் வாழ்வியல் மற்றும் வரலாற்றை ‘கண்டிச் சீமையிலே’ என்ற நூலினூடாக இரா. சடகோபன் எழுதியுள்ளார். ‘மலையகத் தமிழர் வரலாறு’ என்று நேரடியாகவே சாரல்நாடன் எழுதியுள்ளார். மலையகத் தமிழர்களது முதலாவது நூல், முதல் பத்திரிகை எழுத்து, முதல் பெண் ஆளுமை, முதல் நாவல் எழுத்து போன்றவற்றை தேடி எழுதுகிறார் மு. நித்தியானந்தன். ‘தூரத்துப் பச்சை’ நாவலுக்குப் பின் மலையகத் தமிழர்களது வரலாற்றை புனைவாக்கியுள்ளனர் சிலர். மு. சிவலிங்கத்தின் ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ மற்றும் மாத்தளை சோமுவின் ‘கண்டிச் சீமை’ ஆகிய நாவல்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. எனினும் மாத்தளை சோமுவின் நாவல் மலையக மக்களது வரலாற்று எழுதுகைக்கு முரணாகவே அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. மேற்குறிப்பிட்ட வரலாற்றுநிலைப்பட்ட எழுத்துகள் புனைவு (பஞ்சம் பிழைக்க வந்த சீமை, கண்டிச்சீமை) அபுனைவு (கண்டிச்சீமையிலே, கூலித்தமிழ்) ஆகிய இருநிலைப்பட்டவையாக அமைகின்றமை கவனிக்கத்தக்கது. மலையக சமூகம் மற்றும் கலை இலக்கியம் தொடர்பான ஆய்வுத்துறை வளர்ச்சி மலையகம் குறித்த பல்வேறு வகைப்பட்ட ஆய்வுத்துறைகளின் வளர்ச்சி இரண்டாயிரமாம் ஆண்டுகளுக்குப் பின்னரே மிகத்துரிதமாக இடம்பெறுகிறது. மலையக இலக்கியத்துடன் தொடர்புபட்ட விமர்சனங்கள் மற்றும் ஆய்வுகள், சமூக அரசியல் ஆய்வுகள், இலக்கியங்கள் குறித்த ஆராய்ச்சிகள், பண்பாட்டுத் துறை ஆய்வுகள் என பல்வேறு வகையில் விரிந்தன. இவை தனிப்பட்ட ஆய்வுகள், நிறுவனம் சார்ந்த ஆராய்ச்சிகள் என இருநிலைப்பட்டன. மேற்குறிப்பிட்ட ஆய்வுகளை பல்கலைக்கழகங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பெரிதும் மேற்கொண்டிருந்தன. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அந்தனி ஜீவா, சாரல்நாடன், க. அருணாசலம் போன்றோரால் ஆரம்பிக்கப்பட்ட மலையக இலக்கியம் பற்றிய ஆய்வுகள் சி.வி பற்றிய எழுத்துகள், நடேசய்யர் பற்றிய ஆய்வுகள் முதலியவற்றோடு மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள், மீனாட்சியம்மாள் பற்றிய அறிமுகம், வாய்மொழி இலக்கிய ஆய்வுகள் என்று தொடர்ந்தன. மலையக இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளுடன் கூடிய விமர்சனங்களையும் இக்காலப்பகுதியில் இணைத்து மேற்கொண்டவராக லெனின் மதிவானம் விளங்குகிறார். ‘ஊற்றுக்களும் ஓட்டங்களும்’, ‘மீனாட்சியம்மாள் முதல் மார்க்ஸிம் கார்க்கி (2012)’, ‘மலையகம் தேசியம் சர்வதேசம் (2010)’ என்பவை மதிவானத்தின் குறிப்பிடத்தக்க நூல்களாகும். வ. செல்வராஜ் , ஜெ. சற்குருநாதன், மொழிவரதன் போன்றோரும் இலக்கிய மேடைகளில் ஆய்வுகளை மேற்கொண்டதோடு சில சஞ்சிகைகளிலும் விமர்சனங்களை எழுதி வருகின்றனர். இருபத்தோராம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் எழுதத் தொடங்கிய பெ. சரவணகுமார், சு. தவச்செல்வன், எம்.எம். ஜெயசீலன் ஆகியோரது எழுத்துகள் முன்னைய ஆய்வாளர்களிலிருந்து வேறுபட்ட தளங்களை நோக்கி விரிவடைவதை இக்காலத்தில் அவதானிக்க முடிகிறது. மலையக இலக்கிய ஆய்வுத்துறையில் இயங்கும் மேற்குறிப்பிட்டோரின் எழுத்துக்களைத் தவிர்த்து இலங்கையிலுள்ள தமிழ் பல்கலைக்கழகங்களில் பட்டக்கல்வி மாணவர்களின் ஆய்வேடுகள் மலையகக் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கூத்துக்கள் என்று பரந்து விரிந்த தளங்களிலும் தலைப்புகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்நிலைப் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்ட ஆய்வேடுகளில் இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் பெரும்பாலான ஆய்வுகள் நூல் வடிவம் பெறாமையாலும் வெளியிடப்படாமையாலும் அவை சமூக வாசிப்புக்குட்படுத்தப்படவில்லை. பல்கலைக்கழக புலமைநிலைப்பட்ட ஆய்வுகளில் குறிப்பாக மலையகக் கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகள் அதிகம் கையாளப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான கல்விசார் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை நிறுவன மயப்படுத்தப்பட்ட கல்விசார் கல்விப் பிரச்சினைகளுக்கே முக்கியத்துவமளித்துள்ளன. மாறாக மலையக சமூகநிலைப் பிரச்சினைகளோ, மக்கள் பிரச்சினைகளோ முன்னிலைப்படுத்தப்பட்ட தன்மை மிக மிகக் குறைவு. பண்பாட்டுத்துறை ஆய்வுகள்  மலையக மக்களிடம் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்த கலை வடிவங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ச்சிபெற்று வடிவமாற்றம் பெற்றன. நாட்டார் பாடல், கும்மி, கோலாட்டம், ஒப்பாரி போன்ற வாய்மொழிப் பாடல் மற்றும் நடன வடிவங்களும் காமன்கூத்து, அர்ச்சுணன் தபசு, பொன்னர் சங்கர், பவளக்கொடி, காத்தவராயன் கூத்து, கெங்கையம்மன் கூத்து போன்ற கூத்து வடிவங்களும் காலமாற்றத்திற்கேற்பவும் மலையக புவியியல் அமைப்புக்கேற்பவும் வளர்ச்சி பெற்றிருந்தன. இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இக்கலைவடிவங்கள் தொடர்பான ஆய்வுகள் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக காமன் கூத்து பற்றிய கண்ணோட்டங்கள் பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படத் தொடங்கியன. சந்தனம் சத்தியநாதன், மாத்தளை வடிவேலன், அ. லெட்சுமணன், சோபனாதேவி, ஹரிஸ், பொன். பிரபாகரன் போன்றோரால் காமன் கூத்துப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இப்பண்பாட்டு நிலைப்பட்ட ஆய்வுகளில் பொன். பிரபாகரனின் ‘காமன்கூத்து ஓர் அரசியல் பொருண்மிய ஆய்வு’ என்ற நூலானது மலையகத் தமிழர்களது தேசிய கூத்தாக காமன் கூத்தை நிறுவும் முயற்சியாக அமைவதோடு மலையகத் தேசியத்தை நிறுவதற்கான அடிப்படை கூறுகளை காமன்கூத்து எவ்வாறு கொண்டிருக்கிறது என்பது பற்றியதுமாகும்.  மலையகப் பண்பாட்டுத்துறை ஆய்வுகளில் 1993ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வு நூல்கள் மிக முக்கியமானவை. ந. வேல்முருகு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ‘மலையக மக்களின் சமய நம்பிக்கைகளும் சடங்கு முறைகளும்’ என்ற ஆய்வு நூல் மலையக மக்களது சமய வழிபாட்டு நம்பிக்கைகள் அவர்களின் வாழ்க்கை மரபுகளுடன் ஒன்றிணைந்து காணப்படும் தன்மைகளை வெளிக்கொணர்ந்தது. தொடர்ச்சியாக இதே ஆண்டில் உதயம் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும்’ என்ற ஆய்வுத்தொகுதி பண்பாட்டுத்துறை குறித்த புதிய திசைவெளிகளை காண்பிப்பதாய் அமைந்தது. குறிப்பாக பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்வாய்வுகள் ஒன்பது ஆய்வாளர்களின் பதினொரு வெவ்வேறு கலை மற்றும் பண்பாடு குறித்த தேடலாகவும் பதிவுகளாகவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. முடிவுரை  மலையகத் தமிழர்களது இருநூறு வருட வரலாறானது கோப்பிக் காலம் முதல் இன்றுவரை (1823 – 2023) கணிக்கப்பட்டு ஒரு காலக்கணக்கெடுப்பு இக்கட்டுரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்துச் சமூக நிலையையும் அச்சமூக நிலைமைகளை அக்காலகட்டத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் எவ்வாறு பிரதிபலித்து வந்துள்ளன என்பதையும் இக்கட்டுரை மதிப்பீடும் செய்துள்ளது. இம்மதிப்பீட்டில் முடிவுரையாக சில கருத்துகளை முன்வைக்க வேண்டியுள்ளது. ஆங்கிலத் துரைமாரின் எழுத்துக்களிலிருந்தே மலையக எழுத்துகள் தொடக்கம் பெற்றுள்ளமையை இத்தேடலின் வழியாக உறுதிசெய்துகொள்ள முடிகிறது. குறிப்பாக கோப்பிக் கால மலையகத் தமிழர் சமூகத்தின் நிலைமைகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாக துரைமாரின் எழுத்துகளே நமக்கு கிடைக்கின்றன. இரண்டாவதாக, மலையகத் தொழிலாளர்கள் தொழிற்சங்கமாக சேர்ந்து இயங்கத் தொடங்கிய காலத்திலேயே அவர்கள் மத்தியில் இலக்கிய உருவாக்கமும் இடம்பெறத் தொடங்கிவிட்டன. இன்று வரையிலும் கூட மலையகத் தமிழர்களது பிரச்சினைகளை அல்லது மக்கள் இலக்கியப் பணிகளை மேற்கொண்டதில் அதிக பங்கு மலையகத் தொழிற்சங்கவாதிகளுக்கே உண்டு. மலையக இலக்கியத்தின் செழுமையான பக்கங்களை வளர்த்தெடுத்தவர்கள் தொழிற்சங்கவாதிகளாகவோ அல்லது அதனுடன் தொடர்புபட்டவர்களாகவே அமைகின்றனர். மலையக மக்கள் வரலாறும், தொழிற்சங்க அரசியல் வரலாறும், இலக்கிய வரலாறும் ஒன்றாகவே பயணிக்கின்றன. மலையக அரசியலின் தொடக்கத்தை இருநிலைப்பட்டதாகவே அறிய முடிகிறது. தொழிற்சங்க உருவாக்கத்துடன் கூடிய மக்கள் அரசியல் ஒரு தொடக்கமென்றால், இந்திய நலன்பேணும் முதலாளித்துவ நலன் சார்ந்த அரசியல் மற்றொரு தொடக்கம். முதலாவது தொடக்கம் இடையிலேயே முறியடிக்கப்பட்டு இரண்டாவது அரசியல் தளம் மேலோங்கி வந்திருந்தாலும் இடதுசாரி பாரம்பரியத்துடன் கூடிய மக்கள் அரசியல் ஒவ்வொரு காலத்திலும் செயற்பட்டே வந்துள்ளது. அது இலக்கியத்திலும் பேசப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மலையக அரசியலின் வரலாற்றுப் போக்கில் சில இடங்களில் ஏற்பட்ட உடைவுகளே அரசியல் ரீதியாக தீர்க்கமான முடிவுகளை எட்ட முடியாமைக்கான காரணமாகவும் அமைந்துள்ளன. இரண்டாயிரத்துக்கு பின்னரான சமூக மாற்றங்கள் சடுதியானவை. இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் காலாண்டை எட்டியிருக்கும் இருபத்திரண்டு ஆண்டுகளில் மலைய இலக்கியத் துறையில் பன்முகத்தன்மை கொண்ட படைப்புகள், ஆய்வுகள் வெளிவந்திருந்தாலும் அவை குறித்து இங்கு விரிவாக நோக்கப்படவில்லை. குறிப்பாக இக்காலத்தில் மலையக கல்வித்துறை வளர்ச்சியுடன் இணைந்து ஆய்வுத்துறை வளர்ச்சிபெற்றமை விசேடத்துவ அம்சமாக கருதமுடிகிறது. இருநூறு வருடகால மலையக சமூகமும் இலக்கியமும் பற்றிய இக்காலக்கணக்கெடுப்பு ஒரு முன்னோடி முயற்சியாகவே அமைகிறது. இம்மதிப்பீட்டினை மேலும் விரிவுபடுத்தி நோக்கவும் இடமுண்டு.  சான்றாதாரங்கள்  சடகோபன் இரா (2014), கண்டிச் சீமையிலே, கோப்பி கால வரலாறு (1823-1893) வீரகேசரி வெளியீடு. ஜெயவர்த்தனா. கு. (2009), இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம், தமிழில் க. சண்முகலிங்கம், குமரன் புத்தக இல்லம். சாரல் நாடன் (2011), மலையகத் தமிழர் வரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். சிவராஜா அம்பலவாணர் (1997), இலங்கை வாழ் (இந்திய வம்சாவளி) மலையகத் தமிழரின் வரலாற்றின் ஆரம்பம் பற்றிய சில குறிப்புகள். மலையக தமிழாராய்ச்சி மாநாட்டு மலர். வேலுப்பிள்ளை சி.வி (1983), மலைநாட்டு மக்கள் பாடல்கள், கலைஞன் பதிப்பகம். நித்தியானந்தன். மு. (2014), கூலித்தமிழ், க்ரியா. மோகன்ராஜ். க. (2014) இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், ஈழ ஆய்வு நிறுவனம். சாரல் நாடன். (2014), இலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள், குமரன் புத்தக இல்லம். ஜெயவர்த்தனா. குமாரி. (2011), இலங்கையின் இனவர்க்க முரண்பாடு, குமரன் புத்தக இல்லம். நல்லம்மா (1928), மகளிரும் வாக்குரிமையும், இலங்கை இந்தியன் பத்திரிகைக் கட்டுரைகள், The Ceylon Indian. மீனாட்சியம்மாள், கோ.ந. (1940), இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை. கணேஷ் பிரஸ். நடேசய்யர். கோ. (2017), இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம், மீள்பதிப்பு குமரன் புத்தக இல்லம். நடேசய்யர். கோ. (1939), தொழிலாளர் சட்ட புஸ்தகம், கணேஷ் பிரஸ். லெனின் மதிவானம் (2012), ஊற்றுக்களும் ஓட்டங்களும், பாக்கியா பதிப்பகம். சாரல் நாடன் (2013), இலங்கைத் தமிழ்ச் சுடர் மணிகள், சி.வி. வேலுப்பிள்ளை, குமரன் புத்தக இல்லம். அந்தனி ஜீவா (2005), மலையகத் தொழிற்சங்க வரலாறு, மலையக வெளியீட்டகம். தவச்செல்வன். சு. (2016), கொலைச்சிந்தும் கலகக்குரலும், தாயகம் சஞ்சிகை. சாரல் நாடன் (2015), மலையக விடிவெள்ளி கோ.ந. மீனாட்சியம்மாள், குமரன் புத்தக இல்லம். முத்துலிங்கம். பெ. (2012), தொகுப்பாசிரியர், மலையக முச்சந்தி இலக்கியம், பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள், கயல்கவின் வெளியீடு. தவச்செல்வன். சு. (2019), புனைகதையும் சமூகமும், மழை வெளியீடு. சிவானந்தன். அரு. (2020), சென்று வருகிறேன் ஜென்ம பூமியே, பாக்யா பதிப்பகம். பன்னீர் செல்வம், சி. (2006), ஒரு சாலையின் சரிதம், மக்கள் கண்காணிப்பகம், தமிழ்நாடு. கந்தையா. மு.சி. (2015), சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள், விடியல் பதிப்பகம். தோழர் ஓ.ஏ. இராமையாவின் நிழலும் நிஜமும், (2018), தோழர் ஓ.ஏ. இராமையா ஞாபகார்த்த மன்றம். மலரன்பன் (1989), கோடிச்சேலை. மலரன்பன் (2008), பிள்ளையார் சுழி, எஸ். கொடகே சகோதரர்கள். முரளிதரன். சு. (1986), தியாக யந்திரங்கள், மலையக வெளியீட்டகம். முரளிதரன். சு. (1988), கூடைக்குள் நேசம், மலையக வெளியீட்டகம். முரளிதரன். சு. (2001) தீவகத்து ஊமைகள், மலையக வெளியீட்டகம். தீர்த்தக்கரை கதைகள் (1995), நந்தலாலா வெளியீடு, அன்ன பதிப்பு. அருணாசலம். க. (1999), மலையகத் தமிழ் இலக்கியம், தென்றல் பப்ளிகேசன். சாந்திகுமார். எல். (2022), காலமும் மனிதர்களும். சாரல்நாடன் (2022), வானம் சிவந்த நாட்கள், குமரன் வெளியீடு. செவ்வொளி. (2016) மலையகத்தின் சமகால இலக்கிய பண்பாடு சார்ந்த சிந்தனை, ஆய்வரங்க சிறப்பு மலர், சென்.ஜோசப் கல்லூரி மஸ்கெலியா.   https://ezhunaonline.com/compilation/200-years-of-literary-journey-of-up-country-part-3/    
    • நாளை நாளை என்றால் இல்லை இல்லை என்றே அர்த்தம். பொதுவேட்பாளர் பற்றி ஆராய்கிறோம் என்பது இது தான். ஐயா கதைக்க பேசவே மாட்டார். தனது முடிவை எப்படி சுமந்திரனிடம் சொன்னார்? ஏன் சுமந்திரனின் காதுக்குள் மட்டும் சொன்னார்? அப்போ யாருக்கு ஆதரவு வழங்க போகிறார்?
    • வீரப்பையா இப்போ உள்ள புள்ளி பட்டியலை படம் எடுத்து வீட்டில தொங்க விடுங்கள்.
    • சம்பந்தனின் பெயரில் சுமந்திரன் கருத்துரைக்கின்றமை வலுவான சந்தேகத்தைத் தருகின்றது – சுரேஷ் May 19, 2024     சம்பந்தனின் பெயரில் சுமந்திரன் கருத்துரைக்கின்றமை வலுவான சந்தேகத்தைத் தருகின்றது என அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றார் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அவரது அறிக்கையின் முழு விவரம் வருமாறு:- ‘கடந்த சில மாதங்களாக தமிழ்ப் பொது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக தமிழ் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் தமது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். பெருமளவிலான தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரின் தேவையை உணர்ந்திருக்கின்றனர். இது தொடர்பாக பல்வேறுபட்ட கூட்டங்களும் நடைபெற்றுள்ளன. தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளை இணைத்து இவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு செயற்பாட்டுக்குழுவை அமைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழரசுக் கட்சி ஒரு கட்சியாக முழுமையாக இணைந்து பணியாற்றுவதற்கு 19ஆம்திகதிவரை கால அவகாசம் கோரியிருந்தார்கள். வடக்கிலும் கிழக்கிலும் இருக்கக்கூடிய தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இதற்கான தமது சாதகமான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழரசுக் கட்சியின் போஷகராக இருக்கக்கூடிய – மூத்த தலைவராக பேசப்படுகின்ற – சம்பந்தன் அவர்கள் பொது வேட்பாளர் ஒருவர் இப்பொழுது தேவையில்லை என்றும் உள்ளக சுயநிர்ணய உரிமை மூலம் சமஷ்டி ஆட்சிமுறையை உருவாக்குகின்ற ஒஸ்லோ பிரகடனத்தைக் கைவிட்டுவிடக்கூடாது என்றும் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் பொதுவேட்பாளர் தெரிவை அங்கீகரிக்கக்கூடாது என்றும் கூறினார் என சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ஒரு பொது வேட்பாளர் தொடர்பாக தவறான – பிழையான – அதற்கு எதிரான – கருத்துகளைக் கொண்டிருக்கக்கூடிய சுமந்திரன் சம்பந்தன் இவ்வாறான கருத்துகளைக் கூறியிருக்கிறார் என்று சொல்வது வலுவான சந்தேகங்களை உருவாக்குகின்றது. சம்பந்தன் வயதில் முதிர்ந்த ஒரு அரசியல் தலைவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவரது வயது முதிர்ச்சி என்பது அந்த முதிர்ச்சிக்கே உரிய பல்வேறுபட்ட உளவியல், உடலியல் மாற்றங்களுக்கு உட்பட்டிருப்பதுடன் அவர் பேசுவதை யாருமே புரிந்துகொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய ஒரு சூழ்நிலையில், சம்பந்தன் பொது வேட்பாளர் தொடர்பில் பல கருத்துகளைக் கூறியிருக்கிறார் என்பது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. சம்பந்தன் நடமாட முடியாத சூழ்நிலையிலும், செயற்படும் திறனற்றவராகவும் இருக்கிறார் என்றும், அவர் நாடாளுமன்ற பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் சம்பந்தன் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தவர் சுமந்திரன் ஆவார். செயற்பட முடியாத – பேச்சாற்றல் குறைந்திருக்கக்கூடிய – ஒருவரின் கூற்றாக தனது தேவை கருதி அவற்றை முதன்மைப்படுத்தும் நடவடிக்கையில் சுமந்திரன் ஈடுபட்டு வருகிறார். தமிழ்ப் பொது வேட்பாளரின் தேவையையும் அவசியத்தையும் முழுமையாக உணர்ந்துகொள்ளாமல் எழுந்தமானமாக அது ஓஸ்லோ உடன்படிக்கையை கைவிட்டு விடுவதாக அமைந்துவிடும் என்று கற்பனை அடிப்படையில் கூறுவது தவறானதும் மக்களைத் தவறாக வழிநடத்துவதுமாகும். யுத்தத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதினேழு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியது. இதில் ஓஸ்லோ உடன்படிக்கை குறித்து எதுவும் பேசப்படவில்லை. பின்னர் மைத்திரிபால சிறிசேன அவர்களது அரசாங்கத்தில் நான்கு வருடங்களாக ஒரு புதிய அரசியல் சாசனம் பற்றிப் பேசப்பட்டது. அப்போதும் ஓஸ்லோ உடன்படிக்கை குறித்து பேசப்படவில்லை. ஆனால் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேசம் எதிர்பார்க்கும் ஜனநாயக வழியில் நின்று வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் களத்தை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாகக் கையாள வேண்டும் என்ற நோக்கில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதானது ஓஸ்லோ உடன்படிக்கைகளுக்கு விரோதமானது என்ற கருத்தை பொதுவெளியில் குறிப்பிடுவதும் அதற்கு எதிராகச் செயற்படுமாறு தமிழரசுக் கட்சியினரைக் கோருவதும் தமிழரசுக் கட்சி இது தொடர்பாக ஒரு சாதகமான முடிவை எடுத்துவிடக் கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றது. சுமந்திரன் அவர்கள் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் தவறானதும் பிழையானதுமான கருத்துகளை சரியான கருத்துகள்போல் பேசிவந்துள்ளார். உதாரணமாக ஐ.நா.சபையால் ஒரு நிபுணர்குழு அமைக்கப்பட்டு அந்தக்குழு ஓர் அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளரிடம் கையளித்திருந்தது. பின்பு அந்த அறிக்கை ஐ.நா. பொதுச் செயலாளரினால் மேல் நடவடிக்கைக்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திடம் கையளிக்கப்பட்டது. இதனையே சுமந்திரன் அவர்கள் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றும், இனி உள்ளக விசாரணைகள் மூலம் தண்டனை வழங்வது மட்டுமே மீதமுள்ள நடவடிக்கை என்றும் கூறிவந்திருக்கின்றார். ஆனால் இன்றுவரை யுத்தக்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்வது தொடர்பாக தமிழர் தரப்பு தொடர்ந்தும் போராடி வருகின்றது. இதனைப் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற ஒரு பொய்யான விடயத்தையும் அவர் கூறி வந்திருக்கின்றார். ஆகவே தமிழ் மக்களைப் பிழையான பாதையில் வழிநடத்தும் கைங்கரியத்தை அவர் தொடர்ச்சியாக செய்து வருகின்றார். அதன் இன்னொரு வெளிப்பாடாகவே தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான அவரது கருத்துகள் அமைகின்றன. தற்போது களத்திலிருக்கக்கூடிய சிங்களத் தரப்பு வேட்பாளர்கள் யாரும் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவோ அல்லது தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் காணி அபகரிப்புகள், சிங்கள குடியேற்றங்கள், பௌத்த சின்னங்களை நிறுவுதல், சைவஆலயங்களை இடித்து அழித்தல், மேய்ச்சல் நிலங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றுதல், தமிழ் மக்களின் பாரம்பரிய சின்னங்களை அரசுடைமை ஆக்குதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவிதமான கருத்துகளையும் கூறாமல் அதனை ஏற்றுக்கொண்ட பார்வையாளர்களாகவே இருந்து வருகின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்றும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் வரும்வரையில் நாங்கள் எத்தகைய நகர்வுகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் கருதுவது அபத்தமான செயற்பாடாகும். ஜனாதிபதி தேர்தல்களத்தில் ஒருவர் வெல்வதென்பது தமிழ் மக்களின் வாக்குகளிலும் தங்கியிருக்கின்றது. வடக்கு-கிழக்கில் இருக்கின்ற ஏறத்தாழ பன்னிரண்டு இலட்சம் வாக்குகள் என்பது ஒருவரின் வெற்றிக்கு மிகக் காத்திரமான பங்களிப்பைச் செலுத்தக்கூடியவை. இந்த நிலையில் யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் குறைந்தபட்சம் மாகாணசபைத் தேர்தலைக்கூட நடத்தாமல் கடந்த ஐந்து வருடத்திற்கும் மேலாக மாகாணசபையின் நிர்வாகமற்ற சூழலில் இந்த நாட்டில் தேசிய இனப் பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்றும் வெறுமனே பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமே இருக்கின்ற தென்றும் பேசிவரும் சூழ்நிலையில் இவை எதுவும் தீர்க்கப்படவில்லை என்பதை முழுமையாக வெளிக்காட்டவும் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு தேவை என்பதை சிங்கள அரசியல் சமூகத்திற்கும் இராஜதந்திர சமூகத்திற்கும் வெளிப்படுத்தும் முகமாகவும் தமிழ் வாக்குகளை தமிழர் ஒருவர் பெற்றுக்கொள்வதன் ஊடாக இதனை வெளிப்படுத்த முடியும் என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு விளங்கும். இந்த நிலையில், தமிழ் தரப்புகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் அனாவசியமான கருத்துகளை முன்வைத்து இந்த கோரிக்கைகளை முறியடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதானது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகளை முறியடிப்பதாகவே அமையும். தமிழரசுக் கட்சி இந்த யதார்த்தங்களை உணர்ந்துகொண்டு இப்பொழுதாவது சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கும் என்று நம்புகின்றோம்” என்று உள்ளது.   https://www.ilakku.org/சம்பந்தனின்-பெயரில்-சுமந/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.