Jump to content

ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

images-3-10.jpg

ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!

உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 3.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது என்றும் இது பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட கணிசமாக வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை சர்வதேச நாணய நிதியம், எண்ணெய் ஏற்றுமதி “நிலையாக” இருப்பதாலும், உயர்வாக இருப்பதாலும், அரசாங்க செலவினங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என கூறுகிறது.

மொத்தத்தில், ரஷ்யப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கான சிறந்த நிலைப்பாட்டில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் ரஷ்யா வங்கி அமைப்பை பெருமளவில் மீள்தன்மையுடன் வைத்திருக்க முடிந்ததுடன் உலகளாவிய மந்தநிலையைத் தவிர்க்க முடிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1378768

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2024 at 13:13, தமிழ் சிறி said:

ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!

உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

அப்பிடி போடி அரிவாளை....:cool:

எத்தனை இடர்கள் வந்தாலும் ஒரு நாடு தன்னை தக்க வைக்க இயற்கை வழங்களே உதவி செய்யும். இது அமெரிக்காவிற்கும் பொருந்தும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெடிக்க முன் பலூன் 🎈 நன்றாகத் தான் வீங்கி பளபளக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேற....... நாணய நிதியத்துக்கு  நாணயம் பற்றாகுறை போல அதுதான் ரஸ்யாவை பப்பாவில ஏற்றுது........!  😴

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

தடை செய்த நாடுகள் வீழ்ந்து கிடக்கின்றன.

ஜேர்மனி கடந்த 20 வருசமாய் ரஷ்யாவுக்கு தடைக்கு மேலை தடை போட்டுக்கொண்டுதான் இருக்குது. ஒரு பிரயோசனமும் இல்லை. ரஷ்யாவுக்கான தன் சந்தைய மூடி தன் பொருட்களையே நாசமாக்கியதுதான் மிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேய் வேம்பு! ரெண்டு டிக்கெட்டப் போடுறா ரஸ்யாக்கு! போய் அஸைலம் அடிப்பம்! 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த  நாடக மேற்குலகம் இப்பவரைக்கும் ரஷ்யாவுக்கு போடுற தடைகளை கணக்கு பாத்தால் இத்தடிக்கு ரஷ்ய சனம் பட்டினியாலை எல்லோ செத்திருக்க வேணும்´? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு காரணம் மேற்கு நாடுகளின் தடைதான் என கூறுகிறார்கள், தடைக்கு முன்னரான கால கட்டத்தில் இரஸ்சிய பண முதலைகள் தமது வளங்களை மேற்கு நாடுகளில் முடக்கியுள்ளார்கள் (அதனால் மேற்கு நாடுகளுக்கும் நன்மை) தற்போது இந்த நிலமை இல்லாததால் அந்த வளஙகல் உள்நாட்டிலேயே அதன் வளர்ச்சிக்கு பயன்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனால், மேற்கின் கவனம், அரசியல் போர்வையில் உக்கிரைன் வளமான நிலங்களை கையகப்படுத்துவது (கணிசமான அளவு செய்து விட்டது, கீழே இணைப்பை பார்க்கவும்),

(

தலைப்பை மொழிபெயர்த்து இருக்கிறேன்.     

யுத்த அல்லோலகல்லோலங்களுக்கு மத்தியில், உக்கிரைன் விவசாய நிலங்கள் கபடமாக கையகப்படுத்தப்படுவதை  அம்பலப்படுத்துகிறது (இந்த) புதிய அறிக்கை. 

)

(கிட்டத்தட்ட இதையே, மிலேனியம் கொடையில் தொடக்கப்பார்த்தது அமெரிக்கா இலங்கையில், அனால் இப்போது சிங்களம் அதன் மோட்டு தனத்தால் அதுவாகவே சிக்கி கொண்டு இருக்கிறது. )


உக்கிரைனில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதன் நோக்கம், உணவு உற்பத்தி, வழங்கலை மேற்கு, மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது.

  
இப்படி, மேற்கு அரசியல் / இரணுவ  சமநிலையை குழப்ப எத்தனித்து, கபடமாக செய்வதுடன் (எரியும் வீட்டில் கொல்லி புடுங்கும் மேற்குடன்) , சீனா செய்வதை ஒப்பிட்டால், சீன மிகுந்த வெளிப்படை தன்மையோடு செய்கிறது; அதுவும் சாதரண பொருளாதார, கட்டுமான நிதி அல்லது கடன் என்று வரும் போது (அனால், புள்ளி விபரப்படி, அதன் நிகழ்தகவு   மிகவும் குறைவு).


(உக்கிரைன், மற்ற எல்லா முறுகல், முரண்பாடு, யுத்த முனைப்புகளின் மேற்கின், குறிப்பாக US இன்  உந்துதல், இங்கே சிலர் குத்திமுறிவது போல சனநாயக, உரிமைகள் ... அல்ல (அனால் அது போர்வையாக பாவிக்கப்படுகிறது) . மேற்கின், குறிப்பாக US இன் அடுத்த கட்ட முயற்சி (மேலாண்மையை தக்க வைக்க), உலகின் முக்கிய பொருளாதாரங்களை USக்கு, மேற்கிற்கு rentier பொருளாரமாக மாற்றுவதற்கு, மற்ற பொருளாதரங்கள் முதலாளித்துவ தன்மையை கொண்டு இருந்தாலும்).     

(US இல், மற்றும் மேற்கில் இருப்பது plutocracy பக்கம், plutocracy, oligarchy கலவையான அதிகார அமைப்பு (ஆம், சனநாயக, உரிமைகள் ... போர்வைகள், சோடனைகள், சில யதார்த்தங்களுடன்). )  

https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund.

https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund.
 

Amidst Chaos of War, A New Report Exposes the Stealth Take-over of Ukrainian Agricultural Land

 

...

Oakland, CA — One year after the Russian invasion of Ukraine, a new report from the Oakland Institute, War and Theft: The Takeover of Ukraine’s Agricultural Land, exposes the financial interests and the dynamics at play leading to further concentration of land and finance.

“Despite being at the center of news cycle and international policy, little attention has gone to the core of the conflict — who controls the agricultural land in the country known as the breadbasket of Europe. Answer to this question is paramount to understanding the major stakes in the war,” said Frédéric Mousseau, Oakland Institute’s Policy Director and co-author of the report.

The total amount of land controlled by oligarchs, corrupt individuals, and large agribusinesses is over nine million hectares — exceeding 28 percent of Ukraine’s arable land. The largest landholders are a mix of Ukrainian oligarchs and foreign interests — mostly European and North American as well as the sovereign fund of Saudi Arabia. Prominent US pension funds, foundations, and university endowments are invested through NCH Capital, a US-based private equity fund.

Several agribusinesses, still largely controlled by oligarchs, have opened up to Western banks and investment funds — including prominent ones such as Kopernik, BNP, or Vanguard — who now control part of their shares. Most of the large landholders are substantially indebted to Western funds and institutions, notably the European Bank for Reconstruction and Development (EBRD) and the World Bank.

Western financing to Ukraine in recent years has been tied to a drastic structural adjustment program that has required austerity and privatization measures, including the creation of a land market for the sale of agricultural land. President Zelenskyy put the land reform into law in 2020 against the will of the vast majority of the population who feared it would exacerbate corruption and reinforce control by powerful interests in the agricultural sector. Findings of the report concur with these concerns. While large landholders are securing massive financing from Western financial institutions, Ukrainian farmers — essential for ensuring domestic food supply — receive virtually no support. With the land market in place, amidst high economic stress and war, this difference of treatment will lead to more land consolidation by large agribusinesses.

The report also sounds the alarm that Ukraine’s crippling debt is being used as a leverage by the financial institutions to drive post-war reconstruction toward further privatization and liberalization reforms in several sectors, including agriculture.

.....

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் போர் ஆரம்பிக்க முதல் பல வருடங்களுக்கு முன்னரே....
ஐரோப்பாவிற்கும் ஜேர்மனிக்கும் உக்ரேன் என்ற நாட்டின் விளைநிலத்தின் முக்கியத்துவம் பற்றிய கருந்துக்களை இங்கே பதிந்துளேன். அதை விட உக்ரேன் விளை நிலங்களில் ஜேர்மனிய முதலாளிகளின் முதலீடும் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த முதலீடுகள் அனைத்தும் ஜேர்மனிய அரசின் உத்தரவாதம்,பாதுகாப்புக்கிற்கு அமையவே இடம்பெற்றது.ஆனால் எல்லாம் தலைகீழாக மாற.......
ஒவொருவரின் வாயை அடைக்க யுத்தம் துணை புரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

உக்ரேன் போர் ஆரம்பிக்க முதல் பல வருடங்களுக்கு முன்னரே....
ஐரோப்பாவிற்கும் ஜேர்மனிக்கும் உக்ரேன் என்ற நாட்டின் விளைநிலத்தின் முக்கியத்துவம் பற்றிய கருந்துக்களை இங்கே பதிந்துளேன். அதை விட உக்ரேன் விளை நிலங்களில் ஜேர்மனிய முதலாளிகளின் முதலீடும் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த முதலீடுகள் அனைத்தும் ஜேர்மனிய அரசின் உத்தரவாதம்,பாதுகாப்புக்கிற்கு அமையவே இடம்பெற்றது.ஆனால் எல்லாம் தலைகீழாக மாற.......
ஒவொருவரின் வாயை அடைக்க யுத்தம் துணை புரிகின்றது.

உண்மை தான். ஆனால் இதில் முதலிட்டவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உக்ரைன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடமை. இதில் பல கோடி மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் வாழ்வு இருக்கிறது. இதை உணர்ந்து தான் புட்டினும் நரித்தனம் செய்தார். 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.