Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
Published:Today at 6 AMUpdated:Today at 6 AMமன்சூர் அலிகான் - செல்வப் பெருந்தகை

மன்சூர் அலிகான் - செல்வப் பெருந்தகை

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி சார்பாகப் போட்டியிடும் அதன் நிறுவனர் மன்சூர் அலிகான், காங்கிரஸில் இணையப்போவதாக அறிவித்திருக்கிறார். முன்னதாக, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை மன்சூர் அலிகான் இன்று நேரில் சந்தித்தார்.
மன்சூர் அலிகான் - செல்வப்பெருந்தகை
 
மன்சூர் அலிகான் - செல்வப்பெருந்தகை

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், ``தாய் கழகத்தில் இணைவதற்காகக் கடந்த ஆண்டு நவம்பரிலேயே கடிதம் கொடுத்திருந்தேன். 15 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடனான கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிட்டேன். பின்னர் மீண்டும் இணைய கடிதம் கொடுத்திருந்தேன். ஆனால், அது யாரிடமும் சேரவில்லை என்று நினைக்கிறேன்.

அதனால்தான், இடையில் கட்சி ஆரம்பித்தேன். தற்போது, வேலூர் தொகுதியைத் தவிர எல்லா இடங்களிலும் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறேன் என்று கூறிவந்தேன். அதோடு, சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி என்ற மகராசிக்கு பிரதமருக்கான முகராசி இருக்கு, அவர்தான் பிரதமராக வரவேண்டும் அல்லது ராகுல் காந்தி வரவேண்டும் என்று எனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தேன்'' என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி
 
பிரதமர் மோடி

மேலும், பிரதமரின் சமீபத்திய மத ரீதியிலான பேச்சு குறித்து பேசுகையில், ``முன்னாள் பிரதமர் மன்மோகன் 2006-ல் பேசியதைத் திரித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார். மனிதராக இருப்பதற்கே தகுதியற்றவர். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆளும் பிரதமர், வேலைவாய்ப்பை ஏற்படுத்தாமல் நாட்டு மக்களை யாசகர்களாக்கிவிட்டு, இன்றைக்கு இவரைக் கொலைசெய்ய வெளிநாட்டு சதி நடப்பதாக இவரே கூறுகிறார். இந்த மாதிரி எதையாவது பேசி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். முதலில் அவரை சிறைக்கு அனுப்புங்கள். இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும்" என்று கூறினார்.

Mansoor AliKhan: `தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு | actor and politician Mansoor Ali Khan announced he will join Congress (vikatan.com)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவருடைய காங்கிரஸ் இணைவும் பேச்சுகளும் நாம் தமிழருக்கு பெரிய சிரமங்களை தரப் போகிறது 😭 

  • Like 1
Posted
4 hours ago, விசுகு said:

இவருடைய காங்கிரஸ் இணைவும் பேச்சுகளும் நாம் தமிழருக்கு பெரிய சிரமங்களை தரப் போகிறது 😭 

திராவிடத்தை கடுமையாக எதிர்க்கும் நா.க வில் இருந்து விலகிச் சென்ற சிலர், திமுக வில் இணைந்து, திராவிட சிந்தாந்தத்தை போற்றி வருவது போன்றது தான் மன்சூர் அலிகானும் ஈழத் தமிழர்களை நாசம் செய்த செய்த காங்கிரஸை நா.க வில் இருக்கும் வரைக்கும் எதிர்த்து விட்டு, இன்று அதே காங்கிரசில் சேர்ந்து அவர்களைப் போற்றுகின்றார்... அதுவும் சோனியாவின் மகள் பிரதமராக வேண்டும் என்று விரும்புகின்றார்.

இந்திய, தமிழக அரசியல் கட்சிகளும் இலங்கையில் இன்றிருக்கும் தமிழ் கட்சிகளும் ஒரே குட்டைக்குள் ஊறிக்  கிடக்கும் கட்சிகள். இவற்றில் இது நல்லது, அது நல்லது என்ற வித்தியாசம் எதுவும் இல்லை.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய காங்கிரஸ் பழைகாலத்து தலைவராக இருந்த காமராசர் என்பவரை சீமான் புகழ்ந்து பேசியதை நான் யாழ்களத்தில்  படித்து இருக்கின்றேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நிழலி said:

கடைசியில் ஐயா நெடுமாறனும் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த வகையில் சீமானை போற்ற வேண்டும். எந்த இடர் வந்தாலும்,தொடர் தோல்விகள் வந்தாலும் கொண்ட கொள்கையை விட்டு மாறவில்லை. 👍🏼

ஒவ்வொரு அரசியல்வாதிகளிடமும், அரசியல் தலைவர்களிடமும் அவரவற்கு பிடித்த குணங்கள் ஏதாவது ஒன்றிருக்கும். அதனை அவர்கள் பாராட்டுவதில் என்ன தவறு?

நாம் எதிர்க்கும் சிங்கள இனவாதிகளும் தலைவர் பிரபாகரனை பாராட்டிய வரலாறுகள் உண்டு அல்லவா? 
எது இருப்பினும் எங்கள் ஈழ அரசியல் உணர்சியையும் தமிழ்நாட்டவர்களின் ஈழ அரசியல் உணர்ச்சியையும் ஒரே தராசில் வைக்க முடியாது என்பது என்னைப்போன்றவர்களின் கருத்து.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இந்திய காங்கிரஸ் பழைகாலத்து தலைவராக இருந்த காமராசர் என்பவரை சீமான் புகழ்ந்து பேசியதை நான் யாழ்களத்தில்  படித்து இருக்கின்றேன்.

ப‌ல‌ வாட்டி அதை சொல்லி பெரும் த‌லைவ‌ரை புக‌ழ்ந்து இருக்கிறார்.......................பெரும் த‌லைவ‌ர் கால‌த்தில் இருந்த‌ காங்கிர‌ஸ் ம‌க்க‌ள் ம‌த்தியில் பெருத்த‌ ஆத‌ர‌வோடு இருந்த‌வ‌ர்க‌ள்

பெரும் த‌லைவ‌ரின் ம‌றைவுக்கு பிற‌க்கு த‌மிழ் நாட்டில் காணாம‌ போச்சு காங்கிர‌ஸ் 

2013ம் ஆண்டு ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌ அழிப்புக்கு எதிராக‌ அகிம்சை வ‌ழியில் போராடின‌ மாண‌வ‌ர்க‌ளை த‌மிழ் நாட்டு காங்கிர‌ஸ் குண்ட‌ர்க‌ள் தாக்கினார்க‌ள் அதில் ஒரு சில‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு காய‌ம் ஏற்ப‌ட்ட‌து உற‌வே.........................

10ஆண்டு ஆட்சியை இழ‌ந்து விட்டின‌ம் மோடி வ‌ட‌ நாட்டு ம‌க்க‌ளின் ஆத‌ர‌வோடு மீண்டும் பிர‌த‌ம‌ர் ஆகுவார் அடுத்த‌ 5 ஆண்டுக்குள் என்ன‌ ந‌ட‌க்கும் ஏது ந‌ட‌க்கும் என்று யாருக்கும்  தெரியாது..............................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

கடைசியில் ஐயா நெடுமாறனும் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துவிட்டார்.

ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா சொல்ல‌வ‌தை யார் கேட்டு ந‌ட‌க்க‌ போகின‌ம்

ஜ‌யாவுக்கு வ‌ய‌து போய் விட்ட‌து

அண்ணாம‌லை மேடையில் அண்ணாம‌லையை புக‌ழ் பாடினார்

இப்போது காங்கிர‌ஸ்சுக்கு ஆத‌ர‌வு..................ம‌ற்ற‌ ப‌க்க‌ம் அண்ண‌ன் திருமாள‌வ‌ன் போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் அவ‌மான‌ ப‌டுகிறார்...................

இதுக்கு தான் புத்தியை தீட்டி சீமானை ஆத‌ரிக்கிறோம்

சின்ன‌ ப‌ட‌ த‌யாரிப்பாள‌ர் க‌ட்சி தொட‌ங்கி 7ச‌த‌ வீத‌ வாக்கு பெறுவ‌து லேசு ப‌ட்ட‌ விடைய‌ம் கிடையாது...............இப்ப‌ இருக்கும் 7 ச‌த‌ வீத‌ம், யூன் 4ம் திக‌தி 11 ச‌த‌ வீத‌ம் ஆக‌லாம்🙏🥰...........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, குமாரசாமி said:

இந்த வகையில் சீமானை போற்ற வேண்டும். எந்த இடர் வந்தாலும்,தொடர் தோல்விகள் வந்தாலும் கொண்ட கொள்கையை விட்டு மாறவில்லை. 👍🏼

நிச்சியமாக  ஏனென்றால் எல்லோரும் ஓடிச்சென்று விடுவார்கள்   கடைசியாக. இவர் மட்டும் தான்  கட்சியில் இருப்பார் 🤣🤣😂.     மன்சூர். அலிகானின். முடிவு சரியானது   தான்  ஒவ்வொரு முறையும் தேர்தலில் தோற்பதை விட. இப்படி குத்துகரணமடித்து   வெற்றி பெறலாம்   🙏

  • Downvote 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kandiah57 said:

நிச்சியமாக  ஏனென்றால் எல்லோரும் ஓடிச்சென்று விடுவார்கள்   கடைசியாக. இவர் மட்டும் தான்  கட்சியில் இருப்பார் 🤣🤣😂.     மன்சூர். அலிகானின். முடிவு சரியானது   தான்  ஒவ்வொரு முறையும் தேர்தலில் தோற்பதை விட. இப்படி குத்துகரணமடித்து   வெற்றி பெறலாம்   🙏

உங்கள் கொள்கையை ஏற்கனவே அறிந்ததுதானே.
ஏனவே ஆச்சரியம் ஏதுமில்லைலை.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

கடைசியில் ஐயா நெடுமாறனும் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துவிட்டார்.

எந்த ஊடகத்தில் அவர் காங்கிரஸ் பக்கம் சாய்ந்து விட்டதாக செய்தி வந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, விசுகு said:

இவருடைய காங்கிரஸ் இணைவும் பேச்சுகளும் நாம் தமிழருக்கு பெரிய சிரமங்களை தரப் போகிறது 😭 

மன்சூர் அலிகான் 1994 காலப்பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவு .  (அப்பொழுது நான் இந்தியாவில் இருந்தேன். ) 1999 இல் Dr கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்தில் சேர்ந்து  சட்டசபை தேர்தலில் பெரியகுளத்தில் கிட்டதட்ட ஒரு இலட்சம் வாக்குகளை பெற்று 3  ஆம் இடத்தை பிடித்தார். ( புதிய தமிழகம் இம்முறை அதிமுக கூட்டணி). 2009 இல் சுயேட்சையாக கேட்டார். (நாடாளுமன்ற தேர்தல்). 2019 இல் நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார்.  அதன் பிறகு ‘தமிழ்த் தேசிய புலிகள்’ என்ற கட்சியை உருவாக்கினார்.  இப்பொழுது காங்கிரஸ். அடுத்தது ?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கந்தப்பு said:

எந்த ஊடகத்தில் அவர் காங்கிரஸ் பக்கம் சாய்ந்து விட்டதாக செய்தி வந்தது?

நெடுமாறன் காங்கிரஸ் ஆதரவு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கந்தப்பு said:

எந்த ஊடகத்தில் அவர் காங்கிரஸ் பக்கம் சாய்ந்து விட்டதாக செய்தி வந்தது?

இந்தியா கூட்ட‌மைப்புக்கு ஆத‌ர‌வு தெரிவித்து இருக்கிறார்

க‌ந்த‌ப்பு அண்ணா

த‌ன்னை அக் க‌ட்சியில் இணைக்க‌ வில்லை.................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, குமாரசாமி said:

உங்கள் கொள்கையை ஏற்கனவே அறிந்ததுதானே.
ஏனவே ஆச்சரியம் ஏதுமில்லைலை.

அண்ணை   ஏன் இப்படி கூறுகிறீர்கள்  சீமான்  50%.   60%.  வாக்குகள் பெற்று முன்னிலையில் நின்றால்  நான் இப்படி கூறுவேனா?? இல்லையே??  எப்படி கூற முடியும்??? அந்த நிலையில் அவரை ஆதரிக்க முடியும் ஆதரிப்பேன்   தமிழ்நாட்டில் கட்சி தாவுதல் ஒன்றும் புதினம் இல்லை   எங்கே பதவியும் பணமும் கிடைக்குமே  அங்கே போய் சேர்வார்கள்  சீமான் கடசியில். இவை கிடைக்காது   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, வீரப் பையன்26 said:

இந்தியா கூட்ட‌மைப்புக்கு ஆத‌ர‌வு தெரிவித்து இருக்கிறார்

க‌ந்த‌ப்பு அண்ணா

த‌ன்னை அக் க‌ட்சியில் இணைக்க‌ வில்லை.................................

சிலவேளை பிஜேபி வரக்கூடாததிற்காக திமுக காங்கிரசுக்கு அவர் ஆதரவு தெரிவித்திருக்கலாம். முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்பு நடந்த தேர்தலில் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தலில் மக்கள் மகிந்தா தோற்பதற்காக சரத் பொன்சேகாவுக்கு அதிகளவு வாக்களித்தார்கள். அத்தேர்தலில் போட்டியிட்ட விக்கிரமபாகு கருணாரத்னா , சிவாஜிலிங்கத்துக்கு யாழில் குறைந்த வாக்குகளே கிடைத்தது.

அத்தேர்தலில் யாழ்மாவட்டத்தில் சரத் பொன்சேகா 63.84%.
மகிந்தா 24.75%
சிவாஜிலிங்கம் 1.8%
விக்கிரமபாகு கருணரட்னா  0.63% வீத வாக்குகளை பெற்றார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கந்தப்பு said:

இருக்க‌லாம் அண்ணா
ஆனால் சோச‌ல் மீடியாக்க‌ளில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் தொட்டு த‌மிழ‌க‌ இளைஞ‌ர்க‌ள்

ஜ‌யா நெடுமாற‌னையும்
அண்ண‌ன் திருமாள‌வ‌னையும் த‌டிச்ச வார்த்தையில் எழுதுகின‌ம்

க‌ருணாநிதி குடும்ப‌த்தோட‌ சேர்ந்தாப் பிற‌க்கு திருமாள‌வ‌ன் எப்ப‌டி ப‌ட்ட‌ ந‌ப‌ர் என்று நான் சொல்லி தெரிய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை உங்க‌ளுக்கே அவ‌ரை ப‌ற்றி தெரியும்
ஈழ‌த்தை அழித்த‌ காங்ர‌ஸ் கூட‌ ஒரு போதும் கூட்ட‌னி கிடையாது என்று சொல்லி விட்டு 
இப்ப‌ செய்யும் செய‌ல்க‌ளை  பார்த்து ப‌ல‌ர் கோவ‌ப் ப‌டுகின‌ம் க‌ந்த‌ப்பு அண்ணா.........................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, வீரப் பையன்26 said:

நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில

1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு.

மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன். 

நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?

  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நீங்க‌ள் ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா ப‌ற்றி எழுதின‌து100/100 உண்மை

இதை விய‌ன‌ரசு ஜ‌யா கூட‌ அன்மையில் சொல்லி இருந்தார்

ஆனால் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா கூட‌ ப‌ய‌ணம் செய்த‌ சில‌ருக்கு கூட‌ ஜ‌யாவின் செய‌ல் பாடு பிடிக்க‌ வில்லை

க‌ந்துப்பு அண்ணா கோவிக்க‌ வேண்டாம் 2009த‌லைவ‌ரின் ம‌றைவோட‌ இல‌ங்கை அர‌சிய‌லை நான் எட்டியும் பார்ப்ப‌து கிடையாது

க‌ண்ண‌ க‌ட்டி காட்டில‌ விட்ட‌ மாதிரி தான் என‌க்கும் இல‌ங்கைக்குமான‌ அர‌சிய‌ல் அங்கு ந‌ட‌ப்ப‌து ப‌ற்றி என‌க்கு ஒரு கோதாரியும் தெரியாது.........................த‌லைவ‌ர் 2002க‌ளில் உருவாக்கின‌ த‌மிழ்தேசிய‌ கூட்ட‌மைப்பில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஒரு சில‌ர‌ தெரியும் மீதிப் பேர‌ தெரியாது....................................................

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார்.

ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை.

பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம்.

இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும்.

ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர்.

மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.

Edited by goshan_che
  • Like 4
  • Thanks 1
Posted
58 minutes ago, goshan_che said:

நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார்.

ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை.

உண்மை, ஆனால் அதே நேரம், தலைவர் பிரபாகரன் அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றார் என்று சொல்கின்ற, போலிகா தலைவரின் மகள் தான் என்று சொல்கின்ற கூட்டத்துடன் அவரும் இருக்கின்றார் என்பது தான் வேதனையான விடயம். 
வயது முதிர்ச்சியால், ஆட்டுவித்தவர்களின் பொய்களை நம்பித் தான் அவ்வாறு சொன்னார் / சொல்கின்றார் என்று சிலர் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, நிழலி said:

தலைவர் பிரபாகரன் அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றார் என்று சொல்கின்ற, போலிகா தலைவரின் மகள் தான் என்று சொல்கின்ற கூட்டத்துடன் அவரும் இருக்கின்றார் என்பது தான் வேதனையான விடயம். 

உண்மைதான்.

ஆனால் ஏமாற்றப்படுகிறார் என்றே நான் நினைக்கிறேன்.

நிச்சயமாக தன்நலத்தின் பால் இதை அவர் செய்வதாக நான் நினைக்கவில்லை. அப்படி என்றால் என்றோ செய்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, கந்தப்பு said:

(அப்பொழுது நான் இந்தியாவில் இருந்தேன். )

இந்தியாவை பற்றி இவ்வளவு விபரமாக எப்படி கதைக்கிறீர்கள் என்பது விளங்கிவிட்டது😄

9 hours ago, கந்தப்பு said:

சிலவேளை பிஜேபி வரக்கூடாததிற்காக திமுக காங்கிரசுக்கு அவர் ஆதரவு தெரிவித்திருக்கலாம். முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்பு நடந்த தேர்தலில் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தலில் மக்கள் மகிந்தா தோற்பதற்காக சரத் பொன்சேகாவுக்கு அதிகளவு வாக்களித்தார்கள். அத்தேர்தலில் போட்டியிட்ட விக்கிரமபாகு கருணாரத்னா , சிவாஜிலிங்கத்துக்கு யாழில் குறைந்த வாக்குகளே கிடைத்தது.

ஆனால் மகிந்தா தோற்க்க வேண்டும் என்பதற்காக இன்னொருவருக்கு வாக்களிப்பதானால்  தங்கள் வாக்கை சிவாசிலிங்கத்திற்கே அளித்திருக்கலாமே.நான் இலங்கை பிரசையாக இலங்கையில் இருந்தால் அப்படி தான் செய்திருப்பேன்    நான் நம்புகின்றேன் அவர்கள் விரும்பி தான் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தனர்
அல்லது தமிழ் அரசு கட்சி யாருக்கு வாக்களிக்கும் படி சொல்கின்றதோ அவருக்கு தான் வாக்களிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார்.

ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை.

பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம்.

இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும்.

ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர்.

மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.

நெடுமாறன் ஜயாவின் வரலாறு தெரியாமல் இருப்பது தான் காரணம். நாமெல்லாம் வெறும் தூசி அவர் முன்னால். 

நெடுமாறன் ஜயா, வைகோ போன்ற சிலர் வெளியில் தெரியும் ஆனால் முகம் தெரியாத எத்தனையோ திராவிடர் கழக, திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் பல லட்சக்கணக்கில்....?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, விசுகு said:

நெடுமாறன் ஜயாவின் வரலாறு தெரியாமல் இருப்பது தான் காரணம். நாமெல்லாம் வெறும் தூசி அவர் முன்னால். 

நெடுமாறன் ஜயா, வைகோ போன்ற சிலர் வெளியில் தெரியும் ஆனால் முகம் தெரியாத எத்தனையோ திராவிடர் கழக, திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் பல லட்சக்கணக்கில்....?

உண்மை…உண்மை.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.