Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

03 MAY, 2024 | 09:42 PM
image
 
வியட்நாமில் வெப்ப அலை வீசுவதால் நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் குறைந்து இலட்சக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன.

வியட்நாமில் டோங்னாய் மாகாணத்தில் உள்ள 300 ஹெக்டேர் பரப்பளவுள்ள சாங் மே நீர்த்தேக்கத்தில் இறந்த மீன்கள் சூழ்ந்து காணப்படுகிறுது.

அதாவது, கடந்த சில நாட்களில் குறைந்தது 200 தொன் மீன்கள் இறந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவின் ஏனைய பகுதிகளைப் போலவே வியட்நாமும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மழை  பொழிவும் குறைந்து காணப்படுகின்றது.

மீன்களின் இறப்பிற்கு அதிகரித்த வெப்பநிலை மற்றும் முறையற்ற பாராமரிப்பே காரணம் என உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த சில வாரங்களாக நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நீர்த்தேக்கத்தை முகாமைத்துவம் செய்யும் நிர்வாகம்  விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு நீரை வெளியேற்றியது. இன்று அவர்களின் அந்த முயற்சி பாழாகிவிட்டது.

2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில்  மீன்களுக்காக நீர்த்தேக்கத்தில் மேலதிக நீரை வெளியேற்றி சேறு மற்றும் குப்பைகளை அகற்றி நீர்த்தேக்கத்தை ஆழப்படுத்த நிர்வாகம்  தீர்மானித்தது.

இந்நிலையில், வெப்பம் தொடர்ந்து அதிகரித்தமையினால் வெளியேற்றப்பட்ட நீரை மீண்டும் நீர்த்தேக்கத்திற்கு விடுவிக்காமல்  கீழுள்ள பகுதிக்கு வெளியிட நிறுவனம் முடிவு செய்தது. இதுவே  நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவடைய வழிவகுத்தது. மீன்கள் மொத்தமாக செத்து மடிந்தன என அந்நாட்டுப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது நீர்த்தேக்கத்தில் இருந்து அதிகமாக துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

"கடந்த 10 நாட்களாக துர்நாற்றம் வீசுவதால் எங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது" என உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டோங்னாய் மாகாணத்தில் 40 செல்சியசுக்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தென்கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் வரலாறு காணாத அளவில் வெப்ப அலை வீசுகிறது.

ஆசியா முழுவதும் வெப்பத்தின் தாக்கம் மிகவும் கொடூரமான காணப்படுகிறது. இது உலக காலநிலை வரலாற்றில் மிகவும் தீவிரமான நிகழ்வு" என  வானிலை வரலாற்றாசிரியர் மாக்சிமிலியானோ ஹெர்ரேரா தெரிவித்துள்ளார்.

வியட்நாமின் அயல் நாடான கம்போடியாவிலும் வெப்பம் அதிகரித்துள்ளது. அங்கு வெந்நிலை 43C ஐ அடையவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் பாடசாலைகளுக்கு விடுமுறை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை தடுப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க தூண்டியது.

தாய்லாந்தில், உடோன் தானி மாகாணத்தில் வெப்பநிலை 44C க்கும் அதிகமாக அதிகரித்தமையினால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் அணையில் நீர் மட்டம் குறைந்ததால் நீரில் மூழ்கிய 300 ஆண்டுகள் பழமையான நகரத்தின் எச்சங்கள் தென்படுகின்றன.

பங்களாதேஷில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.  பிலிப்பைன்ஸில் கல்வி நடவடிக்கை இணையவழி முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவில் வெப்பம் பக்கவாதம் காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளன.

2024 ஆம் ஆண்டு வெப்பத்தின் தாக்கம் கொடூரமாக இருக்கும் எனவும், கடந்த ஆண்டை விட வெப்பநிலை அதிகரித்து காணப்படும் எனவும் சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/182594

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவில் கடும் வெப்பம் அலை

Published By: DIGITAL DESK 3   04 MAY, 2024 | 11:54 AM

image

’வெப்ப அலை’ என்பது சாதாரண வெப்ப நிலையை (TEMPERATURE) விட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்து தொடர்ச்சியாக 3 நாட்கள் அல்லது அதற்கு மேல் தொடர்வதைக் குறிக்கும். உலக வானிலை ஆய்வு அமைப்பின்படி தொடர்ச்சியாக 5 தினங்கள் அல்லது அதற்கு மேல் சாதாரண வெப்பநிலையை விட '5 டிகிரி செல்சியஸ்' வரை அதிகமாகும் போது வெப்ப அலை ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.

அதாவது, சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், கடலோரப் பகுதிகளில் குறைந்தபட்சம் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், மலைப் பகுதிகளில் குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தால், அது வெப்ப அலையாக அறிவிக்கப்படும். 

இந்நிலையில்,  முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆசியா முழுவதும் வெப்பம் அதிகரித்து வருகிறது. பல ஆசிய நாடுகளில் கடந்த வாரம் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வெப்ப அலை எழும்பத் தொடங்கியுள்ளது.

அதன்படி, மியன்மாரில் வெப்பம் ஆகக் கூடுதலாக 45 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

அதனையடுத்து, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பங்களாதேஷ், லாவோஸ், வியட்நாம், நேபாளில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சீனாவில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், குறைவான வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் இந்தோனேஷியாவிலும், 37 டிகிரி செல்சியஸ் பிலிப்பைன்ஸிலும், 36 டிகிரி செல்சியஸ் சிங்கப்பூரிலும் பதிவாகியுள்ளது.

GMnbsL2XwAAAw2b.jpg

https://www.virakesari.lk/article/182645

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் காடுகளின் அவசியம் புரிகின்றது.......!   

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு வெக்கை இங்கு இன்னமும் விண்டர் ஜக்கட்  ஓய்வுக்கு போக வில்லை இன்று காலையில் ஓரளவுக்கு வெப்பம் பின்னேரம் இருந்ததும் போச்சு .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வியட்நாம் அமைசர் இப்ப சிறீலங்காவுக்கு விசிட் அடிச்சு ..கருவாடு குறைந்தவிலக்கு தருகிறோம் என்று நம்ம மீன்பிடி அமச்சருக்கு சொன்னாலே போதும்...அதற்கு ஒரு கமிசன் போட்டு மக்கள்  தலையில் கட்டிவிடுவார்கள்....வியட்நாமிலும்  செத்தமீன் கிளீயராகிவிடும்..😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, alvayan said:

இந்த வியட்நாம் அமைசர் இப்ப சிறீலங்காவுக்கு விசிட் அடிச்சு ..கருவாடு குறைந்தவிலக்கு தருகிறோம் என்று நம்ம மீன்பிடி அமச்சருக்கு சொன்னாலே போதும்...அதற்கு ஒரு கமிசன் போட்டு மக்கள்  தலையில் கட்டிவிடுவார்கள்....வியட்நாமிலும்  செத்தமீன் கிளீயராகிவிடும்..😄

இதெல்லாம் புதிதல்ல......
அரச நன்கொடை எனும் பெயரில்  வறிய மக்களுக்கு நாறிப்போன, புழு பிடித்த மீன்களை கொடுத்ததை என் கண்ணால் கண்டிருக்கின்றேன்.😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இந்த வியட்நாம் அமைசர் இப்ப சிறீலங்காவுக்கு விசிட் அடிச்சு ..கருவாடு குறைந்தவிலக்கு தருகிறோம் என்று நம்ம மீன்பிடி அமச்சருக்கு சொன்னாலே போதும்...அதற்கு ஒரு கமிசன் போட்டு மக்கள்  தலையில் கட்டிவிடுவார்கள்....வியட்நாமிலும்  செத்தமீன் கிளீயராகிவிடும்..😄

டக்ளசும் யாழ் இணையம் பார்க்கிறவராம்.

சொல்லியாச்சில்ல இனி செய்து முடித்திடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

டக்ளசும் யாழ் இணையம் பார்க்கிறவராம்.

சொல்லியாச்சில்ல இனி செய்து முடித்திடுவார்.

எனக்கொன்றும் ஆபத்திலைய்யே...?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

எனக்கொன்றும் ஆபத்திலைய்யே...?

நீங்க இலங்கை போகும்போது சொன்னால் 

போட்டுக்குடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இலங்கை ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளது, வடக்கு கிழக்கு உட்பட 9 மாவட்டங்களில் 52 பாகை செண்டிகிரேட் வரை வெப்பம் கூடும் வாய்புள்ளதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது நான் நினைகிறேன், இயற்கையானா நீர் தேக்கத்தில் ஒரு பகுதியை வலை மூலம் பிரித்து, அடிப்பபரப்பையும் வலை மூலம் பிரித்து கட்டப்பட்ட மிக ஆழம் குறைந்த செயற்கை  நீர் தேக்கம்.

(படத்தில் உள்ளவரால் எப்படி நிற்க முடிகிறது?)
 
அநேகமாக  எல்லா மேற்றப்பரப்பு, நீந்தும் (ஆழ் நீர்) மீன்களுக்கு நீந்தும் காற்றுப் பை (swim bladder) இருக்கிறது. (இப்படி இல்லாதது சுறாவும், திருக்கையும், ஆனால், அவற்றின் ஈரலில் உள்ள எண்ணெய் மிதத்தலுக்கு உதவுகிறது).

எனவே, (மேற்பரப்பு) சூழலில் ஏதும் மாற்றம் என்றால், விரைவாக ஆழத்துக்கு செல்லும், குடியகலும் (schooling, ஆங்கிலத்தில், ஒரே திசையில் செல்லும் மீன் குழு) தன்மை கொண்டவை.     

(அடைக்கப்படாமல் இருந்தால் இவை அநேகமாக தப்பி இருக்கும்)   

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

✍️இனிமேல்... மரத்தையும், மலையையும்  வெட்ட மாட்டேன். 

✍️இனிமேல்... மரத்தையும், மலையையும்  வெட்ட மாட்டேன். ✍️

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kadancha said:

இது நான் நினைகிறேன், இயற்கையானா நீர் தேக்கத்தில் ஒரு பகுதியை வலை மூலம் பிரித்து, அடிப்பபரப்பையும் வலை மூலம் பிரித்து கட்டப்பட்ட மிக ஆழம் குறைந்த செயற்கை  நீர் தேக்கம்.

(படத்தில் உள்ளவரால் எப்படி நிற்க முடிகிறது?)
 
அநேகமாக  எல்லா மேற்றப்பரப்பு, நீந்தும் (ஆழ் நீர்) மீன்களுக்கு நீந்தும் காற்றுப் பை (swim bladder) இருக்கிறது. (இப்படி இல்லாதது சுறாவும், திருக்கையும், ஆனால், அவற்றின் ஈரலில் உள்ள எண்ணெய் மிதத்தலுக்கு உதவுகிறது).

எனவே, (மேற்பரப்பு) சூழலில் ஏதும் மாற்றம் என்றால், விரைவாக ஆழத்துக்கு செல்லும், குடியகலும் (schooling, ஆங்கிலத்தில், ஒரே திசையில் செல்லும் மீன் குழு) தன்மை கொண்டவை.     

(அடைக்கப்படாமல் இருந்தால் இவை அநேகமாக தப்பி இருக்கும்)   

வணக்கம், கடஞ்சா!

இது போல அவுஸ் நீர்த்தேங்கங்களிலிம் இவ்வாறு நிகழ்வதுண்டு. நீரின் வெப்ப நிலை அதிகரிப்பதால், நீரில் கரைந்திருக்கும் பிராணவாயுவின் அளவு குறைவடையும். இது மீன்கள் இறக்கக் காரணமாக அமைகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

438162185_837288215102819_67667312821945

spacer.png

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.