Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

May 04, 2024 10:35AM IST ஷேர் செய்ய : 
WhatsApp-Image-2024-05-04-at-10.32.27_76
 

தேனியில் இன்று (மே 4) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், சமீபத்தில் காவல் துறை அதிகாரிகள், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை இன்று அதிகாலை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு வேனில் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் கோவை மாநகரக் காவல்துறை சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Savukku Shankar has been arrested today by Coimbatore city police cyber crime wing for the offences committed under the following sections. 294(b), 509 and 353 IPC r/w section 4 of Tamilnadu prohibition of harassment of Woman Act and section 67 of Iinformation Technology Act,2000

— கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) May 4, 2024

அதன்படி பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் (294(b)) பெண்களுக்கு எதிராக அவதூறு பேசுதல் (509), அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (353), பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (67) உட்பட ஜாமீனில் வெளிவர முடியாதபடி 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

https://minnambalam.com/political-news/fir-has-been-registered-against-savukku-shankar/

 

  • Replies 58
  • Views 4.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    ஆறெல்லாம் கள்ளானால் அதுக்குள்ளே நான் விழுந்து நீச்சல் அடிப்பேன் நாடெல்லாம் பெண்ணானால் நடுவிலே நான் இருந்து பார்த்து ரசிப்பேன்

  • goshan_che
    goshan_che

    செருப்பை சாணியில் முக்கி அடிப்பது என்பது இதுதானா🤣 அதுவும் அந்த அட்டணக்கால்😎. #மாதர் தம்மை கேலி பேசும் மூட வாயை மூடுவோம்.

  • நிழலி
    நிழலி

    அவர்கள் உடைத்து இருக்க வேண்டியது கையை அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

Souvukku-750x375.png

சவுக்கு சங்கர் தேனியில் கைது! அழைத்துச் சென்ற பொலிஸ்  வாகனம் விபத்து! உரசல் காயத்திற்கு சிகிச்சை!

அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை கோவை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக பணியாற்றி பின் இடைநீக்கம் செய்யப்பட்ட சங்கர், சவுக்கு என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார். மேலும் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் பல்வேறு இணையதளங்களுக்கும் யூடியூப் சனல்களுக்கும் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். அப்படி சனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியே  தற்போது அவருக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரபல யூடியூப் சனல் ஒன்றிடம் பேசிய சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் பொலிசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அவர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது.  அதனால் தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து கோவைக்கு  அழைத்து சென்றனர்.

காவல்துறை வாகனத்தில் சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்துச் சென்றபோது தாராபுரம் பகுதியில் அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தின் முன் பகுதி லேசாக சேதமடைந்த நிலையில் சவுக்கு சங்கர் மற்றும் பொலிசாருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து  கோவை செல்லும் வழியில் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி அளிக்கப்பட்டு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி சிறையில் அடைக்க பொலிசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைவாக  293 (பி),509 மற்றும் 353 ipc r/w section 4, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் section 67 இன்பர்மேஷன் டெக்னாலஜி சட்டம் 2000 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முக்கியமாக தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் பொலிசார் தங்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது கஞ்சா வழக்கு.. டிரைவர், உதவியாளரையும் விடாத தேனி போலீஸ்!

Nantha Kumar RUpdated: Saturday, May 4, 2024, 22:25 [IST]
 

Ganja case registered against Savukku Shankar and his 2 associates in Theni police

தேனி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன்பிறகு யூடியூப் விவாதங்களில் பங்கேற்று வந்தார். அப்போது தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும். அதன்பிறகு அவர் கோவை அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்றபோது அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது தனியார் விடுதியில் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் அவரது காரை சோதனையிட சென்றனர். அந்த சமயத்தில் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் காரில் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகாத வார்த்தையில் போலீசாரை திட்டி பணிக்கு இடையூறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து வைத்து காரில் சோதனையிட்டனர்.

சவுக்கு சங்கர் சர்ச்சைப் பேச்சு! தேனியில் கைது செய்த போலீஸ்! இத்தனை செக்சனில் வழக்கா? என்னென்ன?

அப்போது காரில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. மொத்தம் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது போலீசார் 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://tamil.oneindia.com/news/theni/ganja-case-registered-against-savukku-shankar-and-his-2-associates-in-theni-police-603425.html
 

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png 

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் கொல்லப்பட்டார்.
அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் பொய் கூறியது.
அப்போது பொலிசாரையும் நீதிமன்றத்தையும் நியாயப்படுத்தி பேட்டி கொடுத்த ஒரே நபர் சவுக்கு சங்கர்.
இப்போது சவுக்கு சங்கர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புலிகள் போதைப் பொருள் கடத்துவதாக கூறினார். இப்போது அவரே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறை அவருக்கு ஒரு நல்ல பாடத்தை கொடுக்கட்டும்.

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

spacer.png 

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் கொல்லப்பட்டார்.
அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் பொய் கூறியது.
அப்போது பொலிசாரையும் நீதிமன்றத்தையும் நியாயப்படுத்தி பேட்டி கொடுத்த ஒரே நபர் சவுக்கு சங்கர்.
இப்போது சவுக்கு சங்கர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புலிகள் போதைப் பொருள் கடத்துவதாக கூறினார். இப்போது அவரே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறை அவருக்கு ஒரு நல்ல பாடத்தை கொடுக்கட்டும்.

தோழர் பாலன்

சிறையில் கற்று பிரபல தேசியக்கட்சியின் அரசியல்வாதியாக வெளியேவந்தாலும் ஆச்சரியப்படமுடியாது.
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

சிறையில் கற்று பிரபல தேசியக்கட்சியின் அரசியல்வாதியாக வெளியேவந்தாலும் ஆச்சரியப்படமுடியாது.
நன்றி.

இவ‌ருக்கு கொள்கை கோட்பாடு என்று எதுவும் இல்லை
யார் காசு கொடுக்கின‌மோ அவைக்கு முட்டு கொடுப்ப‌து
இவ‌னை ந‌ம்பி ப‌ழ‌னிச்சாமி ஜ‌யா ஏமாந்து போன‌து தான் மிச்ச‌ம்

அடுத்த‌வ‌ர்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கையை பொது வெளியில் சொல்வ‌து வெக்க‌க் கேடு......................ஊட‌க‌ம் என்ர‌ பெய‌ரில் அடுத்த‌வ‌ர்க‌ளை பார்த்து சிரிப்ப‌து ,  முத‌ல் முறை சிறைக்கு போன‌ போது இவ‌ருக்கு ஆத‌ர‌வு கொடுத்த‌ ப‌ல‌ர் இம்முறை இவ‌ரின் அட்டூழிய‌ம் தெரிந்து பெரிசாக வார்த்தையை வெளியில் விட‌ வில்லை....................

போன‌ வ‌ருட‌ம் உத‌ய‌நிதியை எப்ப‌டி எல்லாம் கிழித்தார் த‌டிச்ச‌ வார்த்தையில்

உத‌ய‌நிதியை நேரில் ச‌ந்திச்ச‌ பிற‌க்கு அவ‌ரை விம‌ர்சிப்ப‌து கிடையாது

சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் இவ‌ரை பெரிசா யாருக்கும் தெரியாது த‌ன்னை பெரிய‌ புல‌னாய்வு புலி போல‌  காட்டி கொண்டார் பிற‌க்கு தான்  xxxxxxxx என்று நிறுபித்து காட்டி விட்டார்.......................எல்லாம் காசுக்காக‌ கூவும் ந‌ப‌ர் தான் இவ‌ர்.........................

பிர‌பாக‌ர‌ன் க‌ஞ்சா க‌ட‌த்தினார் என்று அவ‌தூற‌ ப‌ர‌ப்பின xxxxxxxxxx.......................த‌லைவ‌ரின் ஒழுக்க‌ம் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும்
இவ‌ன்ட‌ பொய் பித்த‌லாட்ட‌த்துக்கு சிறைக்குள் ப‌ல‌ மாத‌ம் இருந்துட்டு வெளியில் வ‌ர‌ட்டும்.................சிறை க‌ழிவ‌றையை கூட‌ இவ‌ன் சுத்த‌ம் செய்ய‌னும் அப்ப‌ தான் xxxxxxகு புத்தி வ‌ரும் , 
இவ‌ரின் அழுக்கு நிறை இருக்கு 
எழுதிட்டே இருக்க‌லாம்...................... இந்த‌ சிறையோடையாவ‌து பாட‌ம் க‌ற்று வெளியில் வ‌ர‌ட்டும் ப‌ண‌ வியாபாரி ச‌வுக்கு.........................................................................

Edited by நிழலி
வசவு மற்றும் அநாகரீக வார்த்தைகள் நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
 
featured_channel.jpg?v=5d1f2662
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
0:59 / 27:16
 
 
 
 
 

சிறையில் சவுக்கு சங்கருக்கு அதிர்ச்சி | கஞ்சா வழக்கு போட்டது எதற்காக? | ஓராண்டுக்கு பெயில் கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக ஓராண்டுக்கு முன்பு, சவுக்கு சிறையால் வந்த போது, அவரை அண்ணன் சீமான் ஆரத்தழுவி வரவேற்று, சீமானுக்கு சவுக்கு பொன்னாடை போத்தி, சவுக்கும் சீமானும் ஒன்றாக அமர்ந்து பேட்டி கொடுத்த அரிய நிகழ்வின் காணொளி கீழே.

இதில் சவுக்குக்கு இனிமேல் என்ன பிரச்சனை வந்தாலும் தான் பக்கபலமாக நிற்பேன் என அண்ணன் சீமான் சூளுரைத்தார்.

# கஞ்சா குடிக்கியை கட்டிப்புடி🤣

# சின்னக் கருணாநிதி

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

சரியாக ஓராண்டுக்கு முன்பு, சவுக்கு சிறையால் வந்த போது, அவரை அண்ணன் சீமான் ஆரத்தழுவி வரவேற்று, சீமானுக்கு சவுக்கு பொன்னாடை போத்தி, சவுக்கும் சீமானும் ஒன்றாக அமர்ந்து பேட்டி கொடுத்த அரிய நிகழ்வின் காணொளி கீழே.

இதில் சவுக்குக்கு இனிமேல் என்ன பிரச்சனை வந்தாலும் தான் பக்கபலமாக நிற்பேன் என அண்ணன் சீமான் சூளுரைத்தார்.

# கஞ்சா குடிக்கியை கட்டிப்புடி🤣

# சின்னக் கருணாநிதி

 

சரியாக ஒராண்டுக்கு முன்பு இங்கையும் ஒரு சிலர்பேர் சவுக்கு சங்கருக்கு ஜால்ரா போட்டவை. இப்ப கொஞ்சப்பேர் அடக்கி வாசிக்கினை.  இன்னும் கொஞ்சப்பேர் பிளேட்டை மாத்திப்போடுகினை.😂

மலர்பனி  சாபம் சும்மா விடாது தேவேந்திரனை!😂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாலி said:

சரியாக ஒராண்டுக்கு முன்பு இங்கையும் ஒரு சிலர்பேர் சவுக்கு சங்கருக்கு ஜால்ரா போட்டவை. இப்ப கொஞ்சப்பேர் அடக்கி வாசிக்கினை.  இன்னும் கொஞ்சப்பேர் பிளேட்டை மாத்திப்போடுகினை.😂

 

ஓமோம்….நானும் கவனிச்சனான்🤣.

அதே ஆட்கள் 3 வருடம் முதல் சவுக்கு திமுக சொம்பு என இதே யாழில் எழுதினவை.

சவுக்கு மட்டும் இல்லை இவர்களும் சவுக்கு போல அங்கேயும், இங்கேயும் தாவி திரிவதை நினைக்க ஒரே சிரிப்பு🤣

 

4 hours ago, தமிழ் சிறி said:

புலிகள் போதைப் பொருள் கடத்துவதாக கூறினார். இப்போது அவரே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அண்ணன் சீமான், கஞ்சாவை பொலிஸ்தான் வைத்தது என சவுக்குக்கு ஆதரவாக பேசிய காணொளி.

 

புலிகள் போதை பொருள் கடத்தினார்கள் எனும் சவுக்குக்கு ஏன் சீமான் முட்டு கொடுக்க வேண்டும்.

யோசிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓமோம்….நானும் கவனிச்சனான்🤣.

அதே ஆட்கள் 3 வருடம் முதல் சவுக்கு திமுக சொம்பு என இதே யாழில் எழுதினவை.

சவுக்கு மட்டும் இல்லை இவர்களும் சவுக்கு போல அங்கேயும், இங்கேயும் தாவி திரிவதை நினைக்க ஒரே சிரிப்பு🤣

 

நேற்று அண்ணன் சீமான், கஞ்சாவை பொலிஸ்தான் வைத்தது என சவுக்குக்கு ஆதரவாக பேசிய காணொளி.

 

புலிகள் போதை பொருள் கடத்தினார்கள் எனும் சவுக்குக்கு ஏன் சீமான் முட்டு கொடுக்க வேண்டும்.

யோசிக்கவும்.

சீமானை ச‌ந்திச்சு ப‌ல‌ மாத‌த்துக்கு பிற‌க்கு தான் த‌லைவ‌ர் மீது ச‌வுக்கு போலி குற்ற‌ சாட்டு வைச்ச‌வ‌ர்
ச‌ந்திப்புக்கு முத‌ல் சொல்ல‌ வில்லை

ச‌வுக்கு காசுக்காக‌ கூவும் ம‌னித‌ர் அம்ம‌ட்டும் தான்...................கொள்கை கோட்பாடு என்று எதுவும் இல்லை
ச‌வுக்கு ச‌ங்க‌ருக்கு நான் யாழில் ஆத‌ர‌வாய் ஒரு ப‌திவு கூட‌ எழுதின‌து கிடடையாது
இது தான் உண்மை.......................
ஜ‌யா ப‌ழ‌னிச்சாமி இவ‌ரை ந‌ம்பி ஏமாந்து விட்டார்.........................இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் திமுக்கா காசு கொடுத்தால் அவ‌ர்க‌ளுக்கும் ஆத‌ர‌வாய் பேச‌க் கூடிய‌ ந‌ப‌ர் தான் இப‌ர்.....................

1 hour ago, வாலி said:

சரியாக ஒராண்டுக்கு முன்பு இங்கையும் ஒரு சிலர்பேர் சவுக்கு சங்கருக்கு ஜால்ரா போட்டவை. இப்ப கொஞ்சப்பேர் அடக்கி வாசிக்கினை.  இன்னும் கொஞ்சப்பேர் பிளேட்டை மாத்திப்போடுகினை.😂

மலர்பனி  சாபம் சும்மா விடாது தேவேந்திரனை!😂

யாழில் நான் இவ‌ருக்கு ஆத‌ர‌வாய் ஒரு வ‌ரி கூட‌ எழுதின‌து கிடையாது அண்ணா....................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:
 
 
 
 
featured_channel.jpg?v=5d1f2662
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
0:59 / 27:16
 
 
 
 
 

சிறையில் சவுக்கு சங்கருக்கு அதிர்ச்சி | கஞ்சா வழக்கு போட்டது எதற்காக? | ஓராண்டுக்கு பெயில் கிடையாது

ச‌வுக்கு ச‌ங்க‌ருக்கும் சாட்டை துரை முருக‌னுக்கும் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் இவ‌ர்க‌ளுக்குள் நிறைய‌ மோத‌ல்க‌ள் இருக்கு

சாட்டை இதை கொண்டாடி தீக்கிறார்

 

ச‌வுக்கு ச‌ங்க‌ர் யார் அவ‌ரை தூக்கி விடுகின‌மோ அந்த‌ ந‌ன்றிய‌ ம‌ற‌க்கும் ந‌ப‌ர்

காசுக்காக‌ எந்த‌ எல்லைக்கும் போவார்

 

த‌னிப்ப‌ட்ட‌ முறையில் ச‌வுக்கு போதையில் மித‌க்கும் ம‌னித‌ர்.....................இவ‌ரின் அசிங்க‌ம் நிறைய‌ இருக்கு சொல்ல‌........................நிழ‌லிய‌ர் என‌து ப‌திவை திருத்த‌ம் செய்து இருக்கிறார் என்றால் பாருங்கோவேன் நான் எப்ப‌டி ச‌வுக்கை க‌ழுவி ஊத்தி இருப்பேன் என்று ஹா ஹா  

 

ச‌வுக்கு நிர‌ம் மாறும் ம‌னித‌ர்

இவ‌ரை ந‌ம்பினால் ஆவ‌த்தில் தான் போய் முடியும்...................................

பாரிசால‌ன் அண்ண‌ன் சீமானை அப்ப‌வே எச்ச‌ரிச்ச‌வ‌ர் ச‌வுக்கு ச‌ங்க‌ர் விடைய‌த்தில்...........................................................

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வீரப் பையன்26 said:

சீமானை ச‌ந்திச்சு ப‌ல‌ மாத‌த்துக்கு பிற‌க்கு தான் த‌லைவ‌ர் மீது ச‌வுக்கு போலி குற்ற‌ சாட்டு வைச்ச‌வ‌ர்
ச‌ந்திப்புக்கு முத‌ல் சொல்ல‌ வில்லை

 

ஓம்…

ஆனால் இப்படி புலிகள் மீது அபாண்டம் சொன்ன சவுக்கு மீது…கஞ்சா வழக்கு பாய்ந்த பின்….

சீமான் என்ன சொல்கிறார்?

எந்த ஆதாரமும் இல்லாமல், “யார் சவுக்கு காரில் கஞ்சாவை வைத்தது” என கேட்டு, காவல் துறை மீது மறைமுகமாக பழி போட்டு, சவுக்குக்கு முட்டு கொடுக்கிறார்.

புலிகளை போதை பொருள் வியாபாரிகள் என சொன்ன சவுக்க்கு இப்போதும் ஏன் சீமான் எட்டாய் வளைந்து முட்டு கொடுக்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

ஓம்…

ஆனால் இப்படி புலிகள் மீது அபாண்டம் சொன்ன சவுக்கு மீது…கஞ்சா வழக்கு பாய்ந்த பின்….

சீமான் என்ன சொல்கிறார்?

எந்த ஆதாரமும் இல்லாமல், “யார் சவுக்கு காரில் கஞ்சாவை வைத்தது” என கேட்டு, காவல் துறை மீது மறைமுகமாக பழி போட்டு, சவுக்குக்கு முட்டு கொடுக்கிறார்.

புலிகளை போதை பொருள் வியாபாரிகள் என சொன்ன சவுக்க்கு இப்போதும் ஏன் சீமான் எட்டாய் வளைந்து முட்டு கொடுக்கிறார்?

இதை ச‌வுக்கு சொல்லி இர‌ண்டு மாத‌த்துக்கு மேல் இருக்கும்

ச‌வுக்கு ஒரு கோமாளி
சீமான் ச‌வுக்கு விடைய‌த்தில் த‌ள்ளி நிப்ப‌து ந‌ல்ல‌ம்

த‌லைவ‌ர் மீதான‌ போலி குற்ற‌ சாட்டுக்கு அப்போது த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் யாரும் வாய் திற‌க்க‌ வில்லை

அது 
திருமாள‌வ‌னாய் இருந்தாலும் ச‌ரி சீமானாய் இருந்தாலும் ச‌ரி

அந்த‌ விடைய‌த்தில் மாமா ப‌ய‌ல் ச‌வுக்கு மீது என‌க்கு க‌டும் கோப‌ம் வ‌ந்த‌து......................இந்த‌ எளிய‌ பிள்ளையால் என்ன‌ செய்ய‌ முடியும் மிஞ்சி போனால் ஒரு மிம்ஸ் செய்து ச‌வுக்கு எதிராக‌ போட‌த் தான் முடியும்......................

ச‌வுக்கு பொய்யையும் உண்மை போல் சொல்லும் ந‌ப‌ர்
கைபேசிய‌ ச‌வுக்கு நிப்பாட்டினால் ச‌வுக்கு ப‌ற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது..............................
த‌னி க‌ட்சி தொட‌ங்கி உத‌ய‌நிதி போட்டியிடும் தொகுதியில் நிக்க‌ போகிறேன் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா ச‌வுக்கு ஒரு காமெடி பீஸ் என்று ஹா ஹா....................................

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, வீரப் பையன்26 said:

த‌லைவ‌ர் மீதான‌ போலி குற்ற‌ சாட்டுக்கு அப்போது த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் யாரும் வாய் திற‌க்க‌ வில்லை

அது 
திருமாள‌வ‌னாய் இருந்தாலும் ச‌ரி சீமானாய் இருந்தாலும் ச‌ரி

மிச்சம் எல்லாரும் தருணம் தப்பிகள்.

ஏன் சீமான் வாயை திறக்கவில்லை?

@புலவர் நீங்களும் பதில் சொல்லலாம்.

45 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ எளிய‌ பிள்ளையால் என்ன‌ செய்ய‌ முடியும் மிஞ்சி போனால் ஒரு மிம்ஸ் செய்து ச‌வுக்கு எதிராக‌ போட‌த் தான் முடியும்......................

👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வர் நீங்களும் பதில் சொல்லலாம்.

சுவுக்கு அடிப்படையில்  கம்மனியூசுக்களுக்கு ஆதரவாக இருந்தவர். கம்னியூஸ்ட்டுக்களுக்கு புலிகள் என்றால் அலர்ஜி(தா.பாண்டியன் போன்றோர் விதிவிலக்கு). சவுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்தார்.இந்தமுறை அதிமுகவை ஆதரித்தார். கம்னியூசத்தை கைவிட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது. சவுக்கு புலிகளுக்கு எதிராக பல முறை கருத்து தெரிவித்திருக்கிறார்.கடந்த முறை சிறைக்குப் போய் வந்த பிறகு திமுகவை கடுமையாக விமர்சித்தார்.  எதிரியின் எதிரி நன்பன் என்ற வகையில் கடந்த முறை சிறைக்குப் போன பொழது சீமான் அவருக்கு ஆதரவளித்தார். புலிகள் போதைப் பொருள் கடத்தியதாக ஒருமுறை குரத்துத் தெரிவித்திருந்தார். அதற்கு சீமான் நேரடியாக சவுக்குச் சங்கரை கண்டித்ததாக நான் அறியவில்லை. சீமான் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் நாம் தமிழர்கட்சி சவுக்கு சங்கரை பலமாக விமர்சித்திருக்கிறது. குறிப்பாக சுவுக்குக்கு எதிராக சாட்டை  துரைமுருகன் சாட்டைவலையொளியில் பல முறை விமர்சித்திருக்கிறார்.  அண்மைக்காலமாக சவுக்கு சங்கர் நாம் தமிழரை ஒரு கட்சியாகவே  மதிப்பதில்லை.( யாழில் இருக்கும் சில சீமான் எதிர்ப்பாளர்களும் கிட்டத்தட்ட அந்த நிலைப்பாடுதான்).அதை ஒரு எங்சினியரிங் கொலிங் என்று விமர்சித்திருந்தார். ஒரு தொகுதி படிப்பு முடிந்து வெளியேற அடுத்த தொகுதி மாணவர்கள் வருவது போல என்றார். சின்னமே சிக்கவில்லை. நாடு எப்படிச்சிக்கும் என்று எக்காளமிட்டுச் சிரித்தார்.இடையில் அரசியலில் இறங்கப் போவதாக ஒரு ஸ்டன்ட் அடித்தார். யூன்  ஆ ம்திகதி தேர்தலில் நாம் தமிழ் கட்சியின் வாக்கு சதவீதம் அது எஞசியனியரிங் கொலிங்சா இல்லை களத்தில் நிற்கும் அரிசியல் கட்சியா என்று தெரியவரும். என்கு கொம்னியூஸ்ட்டுக் கொள்கையைும் அதனைப் பின்பற்றுவோரையும் அறவே பிடிக்காது. ஆது எல்லோரையும் குறை சொல்லிக் கொண்டிருக்குமே ஒழிய  எந்த முன்னேற்றத்திற்கும் உதவாது. ஆது ஒரு ஒரு தோல்வி அடைந்த கோட்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

புலிகள் போதைப் பொருள் கடத்தியதாக ஒருமுறை குரத்துத் தெரிவித்திருந்தார். அதற்கு சீமான் நேரடியாக சவுக்குச் சங்கரை கண்டித்ததாக நான் அறியவில்லை. சீமான் கண்டித்திருக்க வேண்டும்

நன்றி.

 

1 hour ago, புலவர் said:

ஆனால் நாம் தமிழர்கட்சி சவுக்கு சங்கரை பலமாக விமர்சித்திருக்கிறது

நாதக தம்பிகள் பலர் உண்மையானவர்கள் என்பதே என் நிலைப்பாடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவுக்கு சங்கரை ஒரு மனிசனெண்டு நினைச்சு பெரிய ஜாம்பவான்கள் கருத்து எழுதுவதை என்னவென்பது?

நிரந்தரமாக உள்ளுக்குள் இருக்க வேண்டிய நபர்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

சவுக்கு சங்கரை ஒரு மனிசனெண்டு நினைச்சு பெரிய ஜாம்பவான்கள் கருத்து எழுதுவதை என்னவென்பது?

நிரந்தரமாக உள்ளுக்குள் இருக்க வேண்டிய நபர்.

அண்ணனே சவுக்கை ஆரத்தழுவி சரி சமமாக இருத்தி பிரஸ்மீட் கொடுக்கும் போது, சாம்பார்வான்கள் கருத்தெழுதலாம்தானே🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, goshan_che said:

அண்ணனே சவுக்கை ஆரத்தழுவி சரி சமமாக இருத்தி பிரஸ்மீட் கொடுக்கும் போது, சாம்பார்வான்கள் கருத்தெழுதலாம்தானே🤣.

இந்த படத்தை பற்றி ஒரு விளக்கம் தரவும்.

கருணா – பிரபாகரன் பிளவிற்கு என்ன ...

நம்பிக்கை தான் வாழ்க்கை.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

இந்த படத்தை பற்றி ஒரு விளக்கம் தரவும்.

கருணா – பிரபாகரன் பிளவிற்கு என்ன ...

நம்பிக்கை தான் வாழ்க்கை.

இங்கே வலது பக்கத்தில் இருப்பவர், இடது பக்கத்தில் இருப்பவர் நம்பத்தகாதவர் என தெரிந்ததும் ஒதுக்கி விட்டார்.

சின்ன கருணாநிதி - என தெரிந்தும் ஆதரிப்பது நம்பிக்கை அல்ல.

மூடநம்பிக்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, goshan_che said:

இங்கே வலது பக்கத்தில் இருப்பவர், இடது பக்கத்தில் இருப்பவர் நம்பத்தகாதவர் என தெரிந்ததும் ஒதுக்கி விட்டார்.

எப்போது ஒதுக்கினார்?
கை சுட்ட பின்னர் தானே?
நம்பிக்கை தான் வாழ்க்கை.👈🏽

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எப்போது ஒதுக்கினார்?
கை சுட்ட பின்னர் தானே?
நம்பிக்கை தான் வாழ்க்கை.👈🏽

ஓம்.

ஆனால் சீமான் விடயத்தில் உங்களை போன்றோர் - கை பலமுறை சுட்டும் ஒதுக்காமல் இருப்பது நம்பிக்கை அல்ல, மூடநம்பிக்கை.

அல்லது கதாநாயக வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கு சங்கரை சீமான் தனது தேவைக்கு பாவித்த போது நினைத்தேன் தேவையற்ற ஓணானை பிடித்து மடிக்குள் விடுகிறார் என்று. வாயை மட்டுமே மூலதனமாக வைத்து கொண்டு வித்த ஒரு சில வடைகள் விற்பனையாகியதால் தன்னை பெரிய ஜாம்பவான் என்று தலைக்கனம் வந்து கை வைக்க கூடாத இடத்தில் கை வைத்து நாறுகிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.