Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, ரஞ்சித் said:

இதைத் தவிரவும், 2019 இல் தமிழர்களின் வாக்குகள் இல்லாமலேயே சிங்கள ஜனாதிபதியொருவர் பதவிக்கு வரலாம் என்று சிங்களவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழர்கள் யாருக்கு வாக்களித்தால்த்தான் என்ன? 

அனுர வந்தால் மேலே சொன்ன பயன் கிடைக்க வாய்புண்டு அல்லவா?

  • Replies 74
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Justin said:

தேர்ந்து தெரிந்து (Cherry-pick) எழுதும் போக்கு இங்கேயும் தென்பட்டதால் தான் மேலே கேட்டிருந்தேன் "எங்கிருந்து எழுதுகிறீர்கள்? இதயத்தில் இருந்தா மூளையில் இருந்தா?" என்று. நான் பிதற்றுகிறேன் என்று சொல்லி விட்டுக் கடந்து போய் விட்டார்.

புள்ளி விபரம் மட்டுமல்ல: IMF இனை எதிர்கால NPP அரசோ, யாரோ அவ்வளவு சுலபமாக வெளியேற்ற விட முடியாது என்றும் ஒரு குண்டைப் போட்டிருக்கிறார்.

நான் அறிந்த வரையில், IMF நேட்டோ அல்ல, உதவி கேட்கும் அரசு நிபந்தனைகளுக்கு உடன்படா விட்டால் அவர்கள் கடையைப் பூட்டிக் கொண்டு அடுத்த நாட்டைத் தேடிப் போய் விடுவர். IMF உடனான ஒப்பந்தங்களில், அனுர அணி மதில் மேல் பூனையாக இருக்கிறது. "மக்கள் ஆணைக்குட்பட்ட நிபந்தனைகளை மட்டுமே ஏற்றுக் கொள்வோம்" என்று தான் சொல்லி வருகின்றனர். ஒரு ஆய்வாளர் டெய்லி மிரரில் எழுதிய கட்டுரையில் "உதவி கேட்கும் தரப்பின் விருப்பிற்கேற்ப IMF வளைந்து கொடுப்பதை தான் வரலாற்றில் கண்டதில்லை" என உள்குத்தாக எழுதியிருந்தார்.  

இந்த விடயத்தில் நிலாந்தனும் ரஞ்சித்தும் ரொம்பவே உணர்சி வசப்படுகிறார்கள்.

பொ.த.வே நிறுத்துவதால் “செய்தி சொல்லல்” ( பொன்சேக்காவுக்கு வாக்களித்து சொன்னதை போல) என்பதை தாண்டி என்னத்தை சாதிக்ககலாம் என்ற positive case ஐ ஒருவரும் முன் வைப்பாதாக இல்லை.

இதற்குள் பொ.வே ஐ ஆதரிக்கும் விக்கி ஐயாவே, இரெண்டாம் வாக்கை சிங்கள வேட்பாளருக்கு (ரணில் 🤣) போடலாம் என்கிறார். 

இரெண்டாம் வாக்குகளில் தேர்தல் தீர்மானிக்கப்பட்டு, அதில் தமிழ் வேட்பாளர் ஆதரவில் ரணில் வென்றால் என்ன செய்தியை அது சொல்லும்?

அதே போல் @நிழலி இன்னொரு இடத்தில் சொன்னது போல் - பொ.த.வே யை இம்முறை, பொருளாதார காரணங்களுக்காக, புறக்கணித்து,  தமிழர் ரணிலுக்கு போடவும் வாய்ப்பு உண்டு. இப்படி நடந்தால் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை ஆகி விடும்.

புலிகள் கூட ஏன் பொ.த.வே என்ற தெரிவுக்கு போகவில்லை என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/5/2024 at 02:44, Justin said:

மறு பக்கம், எந்த சிங்கள வேட்பாளரின் வாக்குகளை தமிழ் வேட்பாளர் கவர்வார் என்பதைப் பொறுத்து முழு இலங்கையின் மீதான விளைவு இருக்கலாம். ரணிலின் வாக்குகள் கொஞ்சம் குறைய, சஜித் வென்றால் - நிலைமை தற்போது இருப்பது போலவே தொடரலாம். இவர்கள் இருவரும் வாக்குகளில் நலிந்து அனுர வென்றால், "முதற்பலியாக" சர்வதேச நாணய நிதியம் இருக்கும்😂. "பொருளாதாரத்தை சீர் செய்கிறோம்" என்று மீண்டும் சீனாவின் பக்கம் நாடு சாயும். வேற பெயரில் ராஜபக்சர்கள் கொள்கைகள் ஆட்சியாகும்.  

இதனை எந்த அடிப்படையில் இப்படி கூறுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 12/5/2024 at 11:35, ரஞ்சித் said:

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்த உங்களின் கருத்தென்ன அண்ணை? தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அப்படி ஒருவரை தமிழர்கள் ஆதரிக்க வேண்டும் என்றால், எதற்காக என்றும் கூறமுடியுமா? அறிந்துகொள்ளத்தான் கேட்கிறேன்.  

வணக்கம் ரகு

நான் இங்கே முதலிலேயே எழுதியது தான். எமது பலத்தை காட்டவேண்டும் என்றால் ஒற்றுமை முக்கியம். அது இல்லாதபோது அல்லது அதற்கு சந்தர்ப்பமே இல்லாதபோது இதனை செய்வது பொல்லைக் கொடுத்து அடி வாங்கியது போல அல்லது குளிக்க போய் சேறு பூசியது போலத் தான் ஆகும்.

அப்படி செய்யாமல் ஏதோ எங்கட வாக்கில தான் சிறீலங்கா அரசு ஓடலாம் என்று ஒரு பயத்தையாவது வைத்திருக்கலாமே. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொது வேட்பாளர் என்பது இலங்கையின் இன பிரச்சனைக்கு எந்த விதமான முன்னேற்றங்களையும் ஏற்படுத்தப்போவதில்லை. இனவாதம் இன ஒடுக்குமுறை என்று வரும் போது  இன சமத்துவ ஜனநாயகத்தைக்காக அனைத்து இனங்களையும் உள்வாங்கிய தூரநோக்கு போராட்டங்களே வெற்றி பெறும். தனியே ஒரு இனத்தை முன்னிறுத்திய வேட்பாளரும் அவரை ஆதரித்து இடம் பெறும் பரப்புரைகளும் மேலும் இனவாத சக்திகளுக்கும் இனவாதத்தை தூண்டும் சக்திகளுக்குமே உதவி செய்யும். இன விரிசலையும் இனங்களுக்கு இடையிலான சந்தேகத்தையும் பகைமையை அதிகரிக்கவே உதவும். இலங்கையின் வரலற்றிலேயே இதற்கு உதாரணங்கள் உண்டு. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/5/2024 at 12:15, Justin said:

தேர்ந்து தெரிந்து (Cherry-pick) எழுதும் போக்கு இங்கேயும் தென்பட்டதால் தான் மேலே கேட்டிருந்தேன் "எங்கிருந்து எழுதுகிறீர்கள்? இதயத்தில் இருந்தா மூளையில் இருந்தா?" என்று. நான் பிதற்றுகிறேன் என்று சொல்லி விட்டுக் கடந்து போய் விட்டார்.

புள்ளி விபரம் மட்டுமல்ல: IMF இனை எதிர்கால NPP அரசோ, யாரோ அவ்வளவு சுலபமாக வெளியேற்ற விட முடியாது என்றும் ஒரு குண்டைப் போட்டிருக்கிறார்.

நான் அறிந்த வரையில், IMF நேட்டோ அல்ல, உதவி கேட்கும் அரசு நிபந்தனைகளுக்கு உடன்படா விட்டால் அவர்கள் கடையைப் பூட்டிக் கொண்டு அடுத்த நாட்டைத் தேடிப் போய் விடுவர். IMF உடனான ஒப்பந்தங்களில், அனுர அணி மதில் மேல் பூனையாக இருக்கிறது. "மக்கள் ஆணைக்குட்பட்ட நிபந்தனைகளை மட்டுமே ஏற்றுக் கொள்வோம்" என்று தான் சொல்லி வருகின்றனர். ஒரு ஆய்வாளர் டெய்லி மிரரில் எழுதிய கட்டுரையில் "உதவி கேட்கும் தரப்பின் விருப்பிற்கேற்ப IMF வளைந்து கொடுப்பதை தான் வரலாற்றில் கண்டதில்லை" என உள்குத்தாக எழுதியிருந்தார்.  

ரஞ்சித் கூறுவது சரிதான், எப்போதும் பிச்சைக்காரர்களுக்கு தெரிவு இருப்பதில்லை எனும் நிலையில்தான் இலங்கை உள்ளது, இலங்கையினால் IMF இனை தவிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம், ஒரு காலத்தில் இனப்பிரச்சினை தீர்வுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இலங்கை தரப்பு தற்போது கடன் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது(இதுவும் ஒரு வகை அமைதிப்பேச்சுவார்த்தைதான்😁).

இலங்கை கடனை திருப்பி செலுத்த தவறிய நிலையில் ஐ எம் எப் இன் உதவியினை நாடியுள்ளது, ஐ எம் எப் இலங்கை தரப்பினையும் கடன் கொடுத்தோரையும் இணக்கப்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிக்கிறது.

கடனினை செலுத்த தவறியதால் இலங்கை அரசு மேலதிகமாக கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டது, அதனால் பல அடிப்படை அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இலங்கை அரசு ஐ எம் எப் உடன் உடன்படிக்கை மூலம் நிதியுதவியினை பெற்றுக்கொண்டு அதன் மூலம் தனது  தேவைகளை பூர்த்தி செய்தது, இந்த இடைப்பட்ட காலத்திற்குள் கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்தி மீண்டும் கடன் பெறுவதற்காக கடன் மறு சீரமைப்பு மூலம் அதனை எட்டுவதுதான் இலங்கை தரப்பினது நோக்கம்,

இது பல கடனை உடைய ஒருவர் அதனை ஒரே ஒரு ஒரு தனிப்பட்ட கடன்(Personal loan) மூலம் எட்ட முயற்சிப்பது போலாகும், தனிப்பட்ட கடனில்  வட்டியும் முதலும் ஒரே அளவாக தவணை அடிப்படையில் செலுத்தவேண்டும் ஆனால் இங்கு கடன் மீழழிப்பு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் (Macro Linked Bonds).

இலங்கை அரசு 30 விகித கடன் தள்ளுபடியினை வலியுறுத்துகிறது(Haircut), அண்மையில் இலங்கை அமைச்சர் அலி சப்ரி 17 பில்லியன் கடன் தள்ளுபடி கிடைக்கலாம் என கூறியுள்ளார்.

கடன் கொடுத்தோர் இந்த கணிப்பீடினை (Macro Linked Bonds) இலங்கைக்கு சார்பான ஐ எம் எப் இன் கணிப்பு அல்லாமல் மாற்றீடான கணிப்பினை வலியுறுத்துகிறார்கள்.

இலங்கை தரப்பு பொருளாதார வளர்ச்சி ஏற்படாமல் எதிர்பாரா பொருளாதார பாதிப்பினை கருத்தில் கொண்டு கடன் செலுத்தும் திட்டம் இருக்கவேண்டும் என கோருகிறது (குடுத்த கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுக்கக்கூடாது😁).

ஆனால் இலங்கை; எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியினை விட அதிகமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் அதற்கேற்ப திருப்பி செலுத்தும் தொகையினை அதிகரிக்க கூடாது என இலங்கை நிபந்தனை வைக்கிறது இது கொஞ்சம் வடிவேலுவின் எனக்கு வந்தா தக்காளி சட்னி உனக்கு வந்தா இரத்தம்தான் (கடன் பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தனின் நிலையில் இலங்கைக்கு கடன் கொடுத்தோரின் நிலை😁).

இந்த கடன் மறு சீரமைப்பில் உண்மைத்தன்மையாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் இருந்தாலே முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை பெறமுடியும் ஆனால் இலங்கை இதுவரை வரலாற்றில் இல்லாத முறையில் சீனாவுடன் ஒரு உடன்படிக்கையும் (சீனாவுக்கு சாதகமாக) மற்ற தரப்புகளுடன் ஒரு உடன்படிக்கைக்கு முயற்சிக்கிறது இது நிலமையினை சிக்கலாக்கும்.

2027 இல இந்த புதிய பணமுறி வெளியிடப்படும் என்பதாக நினைவுள்ளது அதுவரை இலங்கை கடனை திருப்பி செலுத்தாமல் சந்தோசமாக செலவு செய்யலாம் அதுவரை இலங்கைக்கு தேவையான 2.9 பில்லியன் கடனை (சரியாகநினைவில்லை) பகுதி பகுதியாக ஐ எம் எப் வழங்கும், இங்கு ஐ எம் எப் இனை துரத்தினால் இலங்கை 2027 வரை தாக்குபிடிக்கமுடியாது (இலங்கையில் மீண்டும் மக்கள் மாட்டு வண்டியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் (உல்லாச பயணிகள் முன்பு  மாட்டு வண்டியில் பயணித்ததுபோல😁) அத்துடன் கடன் மறு சீரமைப்பும் தடைப்பட்டுவிடும், இதனால் இலங்கைக்கு வேறு தெரிவில்லை ஆனால் 2027 பின் துரத்தினால் பிரச்சினை இல்லை என கருதுகிறேன் (இலங்கை அதை செய்யும் என நம்புகிறேன், அந்த வரலாற்று சாதனையினை இலங்கை படைத்தால் உலகம் முழுவது இலங்கையினை பார்த்து வியப்பார்கள்😁), 

  • Thanks 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, island said:

பொது வேட்பாளர் என்பது இலங்கையின் இன பிரச்சனைக்கு எந்த விதமான முன்னேற்றங்களையும் ஏற்படுத்தப்போவதில்லை. இனவாதம் இன ஒடுக்குமுறை என்று வரும் போது  இன சமத்துவ ஜனநாயகத்தைக்காக அனைத்து இனங்களையும் உள்வாங்கிய தூரநோக்கு போராட்டங்களே வெற்றி பெறும். தனியே ஒரு இனத்தை முன்னிறுத்திய வேட்பாளரும் அவரை ஆதரித்து இடம் பெறும் பரப்புரைகளும் மேலும் இனவாத சக்திகளுக்கும் இனவாதத்தை தூண்டும் சக்திகளுக்குமே உதவி செய்யும். இன விரிசலையும் இனங்களுக்கு இடையிலான சந்தேகத்தையும் பகைமையை அதிகரிக்கவே உதவும். இலங்கையின் வரலற்றிலேயே இதற்கு உதாரணங்கள் உண்டு. 

ஆகவே அல்லது எனவே யாருக்கு தமிழர்கள் வாக்கைப் போடலாம்?

இங்கே கருத்து தெரிவித்த பலர் பொதுவேட்பாளர் கூடாது என்கிறார்களே தவிர யாரை ஆதரிக்கலாம் என்பதில் தீக்கோழி மாதிரி இருக்கிறார்கள்.

துணிந்து ஏதாவதொரு முடிவை எடுக்கலாமே?

  • Like 2
Posted
6 hours ago, vasee said:

ரஞ்சித் கூறுவது சரிதான், எப்போதும் பிச்சைக்காரர்களுக்கு தெரிவு இருப்பதில்லை எனும் நிலையில்தான் இலங்கை உள்ளது, இலங்கையினால் IMF இனை தவிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம், ஒரு காலத்தில் இனப்பிரச்சினை தீர்வுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இலங்கை தரப்பு தற்போது கடன் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது(இதுவும் ஒரு வகை அமைதிப்பேச்சுவார்த்தைதான்😁).

ஜேவிபி ஐ.எம்.எப் இனை முற்றாகத் தவிர்ப்பதாக எங்கும் சொல்லவில்லை. அவர்கள் சொல்வது எல்லாம், தாம் பதவிக்கு வந்தால், ஐ,எம்.எப் உடனான பேச்சுவார்த்தையை / கடன் வாங்குவதற்கான நிபந்தனைகளை மீண்டு புதிதாக ஆரம்பிப்போம் என்பது மாத்திரமே. ஒரு வேளை, பதவிக்கு வந்தால், தாம் ஒரு போதும், அவர்களை எதிர்க்கவில்லை என்று மக்களுக்கு சொல்லலாம்.
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நிழலி said:

யார்பதவிக்கு வந்தாலும் ஐ எம் எவ் இன் உதவி இல்லாமல் எழுந்து நிறக முடியாது.

2 minutes ago, நிழலி said:

ஜேவிபி

ஜேவிபி ஜனாதிபதியானால் ரணில் வெளிநாட்டுக்கு தப்பியோட வேண்டி வரலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆகவே அல்லது எனவே யாருக்கு தமிழர்கள் வாக்கைப் போடலாம்?

இங்கே கருத்து தெரிவித்த பலர் பொதுவேட்பாளர் கூடாது என்கிறார்களே தவிர யாரை ஆதரிக்கலாம் என்பதில் தீக்கோழி மாதிரி இருக்கிறார்கள்.

துணிந்து ஏதாவதொரு முடிவை எடுக்கலாமே?

பொது வேட்பாளர் என்பது ஒரு யுக்தி.  இன பிரச்சனை தீர்வுக்கு இந்த யுத்தி எந்த பலனையும் கொடுக்காது என்பதையே பொதுவான  கருத்தாக பலரால்  தெரிவிக்கப்பட்டது.  அது ஏற்கப்படலாம் அல்லது புறக்கணிக்கப்படலாம். 

ஆனால்,  யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டியது ஆட்சி மாற்றத்தின் விளைவுகளை அனுபவிக்கப்போகும், வாக்களிக்கவிருக்கும் மக்களே. பல ஆயிரம் கிலோமீற்றர் தூரத்தில்  இருக்கும் எம்மால் அதை எப்படிக் கூற முடியும்.   ஆட்சி மாற்றத்தினால் வரும் விளைவுகளை எதிர் கொள்ள தயார் அற்ற  வேடிக்கை மட்டும் பார்கக இருக்கும் நானோ நீங்களோ  யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்யலாம்? 

Edited by island
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, vasee said:

ரஞ்சித் கூறுவது சரிதான், எப்போதும் பிச்சைக்காரர்களுக்கு தெரிவு இருப்பதில்லை எனும் நிலையில்தான் இலங்கை உள்ளது, இலங்கையினால் IMF இனை தவிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம், ஒரு காலத்தில் இனப்பிரச்சினை தீர்வுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இலங்கை தரப்பு தற்போது கடன் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது(இதுவும் ஒரு வகை அமைதிப்பேச்சுவார்த்தைதான்😁).

இலங்கை கடனை திருப்பி செலுத்த தவறிய நிலையில் ஐ எம் எப் இன் உதவியினை நாடியுள்ளது, ஐ எம் எப் இலங்கை தரப்பினையும் கடன் கொடுத்தோரையும் இணக்கப்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிக்கிறது.

கடனினை செலுத்த தவறியதால் இலங்கை அரசு மேலதிகமாக கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டது, அதனால் பல அடிப்படை அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இலங்கை அரசு ஐ எம் எப் உடன் உடன்படிக்கை மூலம் நிதியுதவியினை பெற்றுக்கொண்டு அதன் மூலம் தனது  தேவைகளை பூர்த்தி செய்தது, இந்த இடைப்பட்ட காலத்திற்குள் கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்தி மீண்டும் கடன் பெறுவதற்காக கடன் மறு சீரமைப்பு மூலம் அதனை எட்டுவதுதான் இலங்கை தரப்பினது நோக்கம்,

இது பல கடனை உடைய ஒருவர் அதனை ஒரே ஒரு ஒரு தனிப்பட்ட கடன்(Personal loan) மூலம் எட்ட முயற்சிப்பது போலாகும், தனிப்பட்ட கடனில்  வட்டியும் முதலும் ஒரே அளவாக தவணை அடிப்படையில் செலுத்தவேண்டும் ஆனால் இங்கு கடன் மீழழிப்பு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் (Macro Linked Bonds).

இலங்கை அரசு 30 விகித கடன் தள்ளுபடியினை வலியுறுத்துகிறது(Haircut), அண்மையில் இலங்கை அமைச்சர் அலி சப்ரி 17 பில்லியன் கடன் தள்ளுபடி கிடைக்கலாம் என கூறியுள்ளார்.

கடன் கொடுத்தோர் இந்த கணிப்பீடினை (Macro Linked Bonds) இலங்கைக்கு சார்பான ஐ எம் எப் இன் கணிப்பு அல்லாமல் மாற்றீடான கணிப்பினை வலியுறுத்துகிறார்கள்.

இலங்கை தரப்பு பொருளாதார வளர்ச்சி ஏற்படாமல் எதிர்பாரா பொருளாதார பாதிப்பினை கருத்தில் கொண்டு கடன் செலுத்தும் திட்டம் இருக்கவேண்டும் என கோருகிறது (குடுத்த கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுக்கக்கூடாது😁).

ஆனால் இலங்கை; எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியினை விட அதிகமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் அதற்கேற்ப திருப்பி செலுத்தும் தொகையினை அதிகரிக்க கூடாது என இலங்கை நிபந்தனை வைக்கிறது இது கொஞ்சம் வடிவேலுவின் எனக்கு வந்தா தக்காளி சட்னி உனக்கு வந்தா இரத்தம்தான் (கடன் பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தனின் நிலையில் இலங்கைக்கு கடன் கொடுத்தோரின் நிலை😁).

இந்த கடன் மறு சீரமைப்பில் உண்மைத்தன்மையாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் இருந்தாலே முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை பெறமுடியும் ஆனால் இலங்கை இதுவரை வரலாற்றில் இல்லாத முறையில் சீனாவுடன் ஒரு உடன்படிக்கையும் (சீனாவுக்கு சாதகமாக) மற்ற தரப்புகளுடன் ஒரு உடன்படிக்கைக்கு முயற்சிக்கிறது இது நிலமையினை சிக்கலாக்கும்.

2027 இல இந்த புதிய பணமுறி வெளியிடப்படும் என்பதாக நினைவுள்ளது அதுவரை இலங்கை கடனை திருப்பி செலுத்தாமல் சந்தோசமாக செலவு செய்யலாம் அதுவரை இலங்கைக்கு தேவையான 2.9 பில்லியன் கடனை (சரியாகநினைவில்லை) பகுதி பகுதியாக ஐ எம் எப் வழங்கும், இங்கு ஐ எம் எப் இனை துரத்தினால் இலங்கை 2027 வரை தாக்குபிடிக்கமுடியாது (இலங்கையில் மீண்டும் மக்கள் மாட்டு வண்டியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் (உல்லாச பயணிகள் முன்பு  மாட்டு வண்டியில் பயணித்ததுபோல😁) அத்துடன் கடன் மறு சீரமைப்பும் தடைப்பட்டுவிடும், இதனால் இலங்கைக்கு வேறு தெரிவில்லை ஆனால் 2027 பின் துரத்தினால் பிரச்சினை இல்லை என கருதுகிறேன் (இலங்கை அதை செய்யும் என நம்புகிறேன், அந்த வரலாற்று சாதனையினை இலங்கை படைத்தால் உலகம் முழுவது இலங்கையினை பார்த்து வியப்பார்கள்😁), 

2 hours ago, நிழலி said:

ஜேவிபி ஐ.எம்.எப் இனை முற்றாகத் தவிர்ப்பதாக எங்கும் சொல்லவில்லை. அவர்கள் சொல்வது எல்லாம், தாம் பதவிக்கு வந்தால், ஐ,எம்.எப் உடனான பேச்சுவார்த்தையை / கடன் வாங்குவதற்கான நிபந்தனைகளை மீண்டு புதிதாக ஆரம்பிப்போம் என்பது மாத்திரமே. ஒரு வேளை, பதவிக்கு வந்தால், தாம் ஒரு போதும், அவர்களை எதிர்க்கவில்லை என்று மக்களுக்கு சொல்லலாம்.
 
நிச்சயமாக அப்படிச் சொல்லவில்லை: உண்மையில் "கோத்தா தாமதமாக நாணய நிதியத்தை நாடினார், அதனால் பேரிழப்பு" என்று கூட அனுர கூறியிருந்தார். இதைத் தான் மேலே குறிப்பிட்டிருந்தேன் "மக்கள் ஆணைக்கு ஏற்ப இருக்கும் IMF நிபந்தனைகளை மட்டும் தான் ஏற்றுக் கொள்வோம்" என்பது NPP யின் தற்போதைய நிலைப்பாடு. சர்வதேச நாணய நிதியம் எப்படி இயங்குகிறது என்பதை அறிந்தவர்கள், மக்கள் ஆணையை விட போட்ட காசு இழக்காமல் இருக்க வேணும் என்ற கொள்கையில் அவர்கள் இயங்குவதை அறிவார்கள். NPP இனை ஆதரிக்கும் மக்கள், பெரும்பாலும் IMF இன் கசப்பு மாத்திரைகளை விழுங்க விரும்பாத மக்களாகவும் இருக்கும் போது, முடிவு எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.

இப்படி நாணய நிதியம் விலக வேண்டிய ஒரு நிலை வரும் போது, மேற்கின் ஏஜெண்டான ஜப்பானிடமோ, அயல் நாடான இந்தியாவிடமோ  ஒரு எதிர்கால NPP அரசு போகாது. சீனா தான் சரணாகதி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

சீனா தான் சரணாகதி.

ஏதோ ஒரு நாட்டின் சரணாகதியாகத் தானே அரசு போகிறது.

சீனாவாக இருந்துட்டு போனால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏதோ ஒரு நாட்டின் சரணாகதியாகத் தானே அரசு போகிறது.

சீனாவாக இருந்துட்டு போனால் என்ன?

இதையெல்லாம் மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டிய நிலையில் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் எனும் போது..நேரம் விரயமாக்காமலே இருந்து விடத் தோன்றுகிறது😇.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீனாவிடம் சரணடைந்து அடிமையாக சீரழிவதை விட ஐஎம்எப்பை அனுசரித்து  மேற்குலகில் ஈழதமிழர்கள் தலை நிமிர்ந்து வசதிகள் கொண்ட வாழ்க்கை வாழ்கின்ற நடைமுறையை  தான் இலங்கை அரசு முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும். இலங்கை வாழ் தமிழர்களுக்கும் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீனாவிடம் சரணடைந்து அடிமையாக சீரழிவதை விட ஐஎம்எப்பை அனுசரித்து  மேற்குலகில் ஈழதமிழர்கள் தலை நிமிர்ந்து வசதிகள் கொண்ட வாழ்க்கை வாழ்கின்ற நடைமுறையை  தான் இலங்கை அரசு முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும். இலங்கை வாழ் தமிழர்களுக்கும் நல்லது.

சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மனித உரிமைகள் மற்றும் நீதி போன்ற விடயங்களில் எந்த அழுத்தங்களையும் கொடுக்காதவை. தமிழரை எதிரியாக பார்ப்பவை. 

ஆனால் மேற்குலகு சில அழுத்தங்களை வைக்கும். எனவே சிறீலங்கா சீன இந்திய கால்களை தான் குளிப்பாட்டும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, நிழலி said:

ஜேவிபி ஐ.எம்.எப் இனை முற்றாகத் தவிர்ப்பதாக எங்கும் சொல்லவில்லை. அவர்கள் சொல்வது எல்லாம், தாம் பதவிக்கு வந்தால், ஐ,எம்.எப் உடனான பேச்சுவார்த்தையை / கடன் வாங்குவதற்கான நிபந்தனைகளை மீண்டு புதிதாக ஆரம்பிப்போம் என்பது மாத்திரமே. ஒரு வேளை, பதவிக்கு வந்தால், தாம் ஒரு போதும், அவர்களை எதிர்க்கவில்லை என்று மக்களுக்கு சொல்லலாம்.
 
4 hours ago, Justin said:

நிச்சயமாக அப்படிச் சொல்லவில்லை: உண்மையில் "கோத்தா தாமதமாக நாணய நிதியத்தை நாடினார், அதனால் பேரிழப்பு" என்று கூட அனுர கூறியிருந்தார். இதைத் தான் மேலே குறிப்பிட்டிருந்தேன் "மக்கள் ஆணைக்கு ஏற்ப இருக்கும் IMF நிபந்தனைகளை மட்டும் தான் ஏற்றுக் கொள்வோம்" என்பது NPP யின் தற்போதைய நிலைப்பாடு. சர்வதேச நாணய நிதியம் எப்படி இயங்குகிறது என்பதை அறிந்தவர்கள், மக்கள் ஆணையை விட போட்ட காசு இழக்காமல் இருக்க வேணும் என்ற கொள்கையில் அவர்கள் இயங்குவதை அறிவார்கள். NPP இனை ஆதரிக்கும் மக்கள், பெரும்பாலும் IMF இன் கசப்பு மாத்திரைகளை விழுங்க விரும்பாத மக்களாகவும் இருக்கும் போது, முடிவு எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.

இப்படி நாணய நிதியம் விலக வேண்டிய ஒரு நிலை வரும் போது, மேற்கின் ஏஜெண்டான ஜப்பானிடமோ, அயல் நாடான இந்தியாவிடமோ  ஒரு எதிர்கால NPP அரசு போகாது. சீனா தான் சரணாகதி.

ஐ எம் எப் நேரடியாக தனியார் முதலீட்டாளர்களுடன் இலங்கைக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில்லை என நினைக்கிறேன் ஆனால் பாரிஸ் கிளப் (கடன் வழங்கும் நாடுகள்) உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது அதில் எட்டப்படும் உடன்பாடுகள் நேரடியாக முதலீட்டாளர்களை வததடைகிறது.

ஐ எம் எப் இலங்கை கடனை மீள செலுத்துவதற்கான புறச்சூழலை உருவாக்குகிறது அதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது.

இலங்கை அரசு தற்போது இணங்கிய 30 கடன் தள்ளுபடியினை  மேலும் அதிகரிக்க வலியுறுத்துகிறது இலங்கையின் GDP 80 பில்லியனுக்கு கீழ் செல்லும்போது மேலும் 20% கடன் தள்ளுபடியினை வலியுறுத்தியுள்ளது(Haircut) அதாவது மொத்தமாக 50 விகித கடன் தள்ளுபடி(55 பில்லியன்? கடனில் பாதியளவினைதான் இலங்கை திருப்பி செலுத்தும்).

ஆனால் இலங்கை அரசு பொதுத்துறை சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதனை ஒரு அலகாக ஐ எம் எப் கடன் வழங்குனர் வலியுறுத்துகிறார்கள், பொருளாதார வளர்ச்சியுடன்(GDP) அதன் வளர்ச்சி விகிதத்திற்கு ஏற்ப வரிவிகித கணிப்பில் ஊழல் கண்காணிப்பினை ஒரு அலகாக இணைக்கிறார்கள்(Governance linked bond).

இந்த நடாவடிக்கையால் நேரடியாக பாதிப்படைவது அரசியல்வாதிகளும் பொதுத்துறை ஊழல்வாதிகளும்தான் ஆனாலும் அதிகரித்த வரி விகித அதிஅகரிப்பு பொதுத்துறை ஊழியர்கள் பணிநீக்கம் என்பவற்றால் மக்களும் [பாதிப்படைவார்கள்.

அண்மையில் இலங்கை அன்னிய செலாவணியில் நிகர வருமானம் பெற்றதாக செய்தி வாசித்த நினைவுள்ளது அது போல பொருளாதார வளர்ச்சி தொடர்பான தகவலை திரித்து வெளியிட்டு மேலதிக கடன் தள்ளுபடி செய்ய முயன்றால் ஆர்ஜென்ர்ரினா அரசு போல் அபராத தொகை செலுத்தவேண்டும்.

பெரும்பாலும் ஐ என் எப் இன் நடவடிக்கையினால் இலங்கைக்கு நன்மைதான் ஏற்படும் வரி விகித அதிகரிப்பினால் மக்கள் பாதிப்படையக்கூடும் நீண்டகாலத்தில் அது ஒரு பிர்ச்சினையாக இருக்காது என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/5/2024 at 10:02, Kavi arunasalam said:

ரஞ்சித் குறிப்பிடுவது போல்யாசகம் செய்து வாழ முடியாதுஎன்ற வாசகத்தை விட்டுசேர்ந்து வாழ்தல்என்ற முறையை எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இன்று கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இல்லை. ஒருவேளை பின்னாட்களில் ஏதாவது மாற்றங்கள் வரலாம். வழிகள் கிடைக்கலாம்.

யாருக்கு வாக்குப் போட வேண்டும் என்ற பொறுப்பை மதிப்புக்குரிய பொதுமகனிடமே விட்டு விடுவது நல்லது. அங்கே வாழும் அவருக்கு எல்லாமே தெரிந்திருக்கும்.

பொதுமகன்கள் அமோகமாக தேர்ந்தெடுத்த அரசியலில் கூட எவ்வித முன்னேற்றமும் கிடைக்காத தமிழ் அவையில் தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதாவது  ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும் சேர்ந்து தமிழர்விடுதலை கூட்டணிக்கு வாக்களித்து தமிழர் ஒருவர் சிங்கள இனவாத பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரும் வாய்ப்பை கொடுத்தனர்.
அந்த காலங்களில் இனக்கலவரங்களைதவிர இயக்கங்களின் தாக்குதல்கள் சொல்லுமளவிற்கு இல்லை. அந்த காலங்களிலேயே தமிழர்களின் அடிப்படை பிரச்சனை தீர்க்க முடியவில்லை எனில்....இனி எக்காலமும் இல்லை.

பொதுமகன் வாக்களித்து தோல்வியடைந்த பூமி அது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

ஐ எம் எப் நேரடியாக தனியார் முதலீட்டாளர்களுடன் இலங்கைக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில்லை என நினைக்கிறேன் ஆனால் பாரிஸ் கிளப் (கடன் வழங்கும் நாடுகள்) உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது அதில் எட்டப்படும் உடன்பாடுகள் நேரடியாக முதலீட்டாளர்களை வததடைகிறது.

ஐ எம் எப் இலங்கை கடனை மீள செலுத்துவதற்கான புறச்சூழலை உருவாக்குகிறது அதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது.

இலங்கை அரசு தற்போது இணங்கிய 30 கடன் தள்ளுபடியினை  மேலும் அதிகரிக்க வலியுறுத்துகிறது இலங்கையின் GDP 80 பில்லியனுக்கு கீழ் செல்லும்போது மேலும் 20% கடன் தள்ளுபடியினை வலியுறுத்தியுள்ளது(Haircut) அதாவது மொத்தமாக 50 விகித கடன் தள்ளுபடி(55 பில்லியன்? கடனில் பாதியளவினைதான் இலங்கை திருப்பி செலுத்தும்).

ஆனால் இலங்கை அரசு பொதுத்துறை சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதனை ஒரு அலகாக ஐ எம் எப் கடன் வழங்குனர் வலியுறுத்துகிறார்கள், பொருளாதார வளர்ச்சியுடன்(GDP) அதன் வளர்ச்சி விகிதத்திற்கு ஏற்ப வரிவிகித கணிப்பில் ஊழல் கண்காணிப்பினை ஒரு அலகாக இணைக்கிறார்கள்(Governance linked bond).

இந்த நடாவடிக்கையால் நேரடியாக பாதிப்படைவது அரசியல்வாதிகளும் பொதுத்துறை ஊழல்வாதிகளும்தான் ஆனாலும் அதிகரித்த வரி விகித அதிஅகரிப்பு பொதுத்துறை ஊழியர்கள் பணிநீக்கம் என்பவற்றால் மக்களும் [பாதிப்படைவார்கள்.

அண்மையில் இலங்கை அன்னிய செலாவணியில் நிகர வருமானம் பெற்றதாக செய்தி வாசித்த நினைவுள்ளது அது போல பொருளாதார வளர்ச்சி தொடர்பான தகவலை திரித்து வெளியிட்டு மேலதிக கடன் தள்ளுபடி செய்ய முயன்றால் ஆர்ஜென்ர்ரினா அரசு போல் அபராத தொகை செலுத்தவேண்டும்.

பெரும்பாலும் ஐ என் எப் இன் நடவடிக்கையினால் இலங்கைக்கு நன்மைதான் ஏற்படும் வரி விகித அதிகரிப்பினால் மக்கள் பாதிப்படையக்கூடும் நீண்டகாலத்தில் அது ஒரு பிர்ச்சினையாக இருக்காது என கருதுகிறேன்.

தொழில் நுட்ப ரீதியான விளக்கங்களுக்கு நன்றி. நாணய நிதியத்தின் சீர் திருத்தங்கள் நன்மை தான் செய்யும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், இப்படி NPP கட்சி நினைக்க வேண்டும், அப்படி நினைக்காது என்பது தான் என் அவதானிப்பும், எதிர்வுகூரலும். எனவே, நீங்கள் எழுதும் எதுவும் JVP/NPP யின் காலங்காலமாக இருந்து வரும் கொள்கைகளான வர்க்கப் போர், முதலாளித்துவ எதிர்ப்பு, மேற்கு எதிர்ப்பு, தனியார் துறை எதிர்ப்பு ஆகியவற்றை மாற்றாது. இதனால் தான் IMF இனை தங்கள் தேர்தல் வெற்றியின் பின்னர் மீளப் பேச அழைத்து 2008 இல் முறிந்த அரசு-புலிகள் பேச்சுவார்த்தைகள் போல ஆக்குவார்கள் என நினைக்கிறேன்.

சஜித்தை விட்டு விட்டு  நான் NPP பற்றிப் பேச இன்னொரு காரணம், IMF போன்ற வெளி நிறுவனங்கள் சில கடின நிபந்தனைகளை விதிக்கும் போது, உள்ளூர் மக்களிடையே ஒரு தேசிய அலை பலம் பெறுவது வழமை. அப்படியான தேசியவாத அலையை மகிந்த தரப்பு அறுவடை செய்ய இயலாத நிலையில், JVP/NPP தான் அதன் பயனாளியாக இருக்கும். இது தான் அவர்கள் IMF இனை நேரே எதிர்க்காமல், வெல்லும் வரை பொறுத்திருக்கக் காரணம். வென்றால் நிலைமை வேறு - நிழலி சொன்னது போல "எதிர்த்தோம்" என்றும் சொல்லலாம், "எதிர்க்கவில்லை" என்றும் மழுப்பலாம்.

ஆனால், இதெல்லாம் ஏன் தமிழ் பொது வேட்பாளரோடு தொடர்பாகிறது என்பதே பிரதான கேள்வி: யாருக்குப் போடும் வாக்கை தமிழ் வேட்பாளர் குறைப்பார் என்பதே பிரதான கேள்வி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

ஆனால் மேற்குலகு சில அழுத்தங்களை வைக்கும்.

ஆமா ஆமா

அதுதான் பலஸ்தின இஸ்ரேல் போரில் காண்கிறோமே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, Justin said:

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தற்போது ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டை மீறமுடியாது,  அப்படி மீறினால் சட்ட ரீதியான சிக்கலில் இலங்கை மாட்டிக்கொண்டு அபராத தொகை கட்டவேண்டிய நிலை உருவாகும் ஆனால் ஐ எம் எப் இனை வெளியேற்றலாம்.

அப்படி வெளியேற்றுவது இலங்கைக்கு புதிய கடன் பெறுவதில் மேலும் சிக்கலை உருவாக்கும் எனவே ஐ எம் எப் இனை வெளியேற்றுவது என கூறுவது மக்களை ஏமாற்றுவதற்காக கூறப்படுவதாக இருக்கலாம்.

இலங்கை விரும்பினாலும் இனி ஐ எம் எப் இனை தவிர்க்கமுடியாது என்பதே நிதர்சனம், ஐ எம் எப் வெளியேற்றம் என்பது நடைமுறை சாத்தியமற்ற விடயம் இலங்கை அரசியலில்.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மறு பக்கம், எந்த சிங்கள வேட்பாளரின் வாக்குகளை தமிழ் வேட்பாளர் கவர்வார் என்பதைப் பொறுத்து முழு இலங்கையின் மீதான விளைவு இருக்கலாம். ரணிலின் வாக்குகள் கொஞ்சம் குறைய, சஜித் வென்றால் - நிலைமை தற்போது இருப்பது போலவே தொடரலாம். இவர்கள் இருவரும் வாக்குகளில் நலிந்து அனுர வென்றால், "முதற்பலியாக" சர்வதேச நாணய நிதியம் இருக்கும்😂. "பொருளாதாரத்தை சீர் செய்கிறோம்" என்று மீண்டும் சீனாவின் பக்கம் நாடு சாயும். வேற பெயரில் ராஜபக்சர்கள் கொள்கைகள் ஆட்சியாகும்.  

3 hours ago, Justin said:

ஆனால், இதெல்லாம் ஏன் தமிழ் பொது வேட்பாளரோடு தொடர்பாகிறது என்பதே பிரதான கேள்வி: யாருக்குப் போடும் வாக்கை தமிழ் வேட்பாளர் குறைப்பார் என்பதே பிரதான கேள்வி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/5/2024 at 00:14, ஈழப்பிரியன் said:

ஆமா ஆமா

அதுதான் பலஸ்தின இஸ்ரேல் போரில் காண்கிறோமே.

இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால்....??? ஒப்பீட்டளவில்

ரசியா சீனா மற்றும் இந்தியா என்ன செய்கின்றன செய்தன என்பது புரியும் அண்ணா.

Posted

பொது சனாதிபதி வேட்பாளர் தொடர்பான கட்டுரை என்பதால் இங்கு இணைப்பை தருகின்றேன்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழ் வேட்பாளர் ஒருவர் வருவதால் ரணிலின் வெற்றிவாய்ப்புக் குறைந்துவிடும் அல்லது கூடிவிடும் என்றோ, அநுர குமார வந்துவிடுவார் என்றோ, சஜித் வராது போய்விடுவார் என்றோ கவலைப்பட்டு "சிங்ஹள‌ ஜனாதிபதிதுமாவை ஆதரிக்கக் காத்திருக்கும் தெமலர்கள்" இதனைப் பார்ப்பது நல்லது.

இந்த இனக்கொலையாளிகளை ஆதரிப்பதோ புறக்கணிப்பதோ இல்லை இதன் பொருள் என்பதும், அது தமிழ் மக்களின் ஒற்றுமை சார்ந்த விடயமென்பதும் இந்த "சிங்ஹள தெமலர்களுக்குப்" புரிய வாய்ப்பில்லை என்பதும் எனக்குத் தெரியும்.  

Edited by ரஞ்சித்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்த்தேசியம் பற்றிய கருணாகரனின் அண்மைய கட்டுரை.. 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.