Jump to content

படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
--------------------------------------------------------------------
ஏப்ரல் 12ம் திகதி, வெள்ளிக்கிழமை மத்தியானம் இலங்கைக்கான விமான பயணம் ஆரம்பித்தது. வீட்டிலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் ஒரு இருபத்தைந்து மைல் தூரத்தில் இருக்கின்றது. வாகன நெரிசல் இல்லாவிட்டால், விமான நிலையம் போவதற்கு 20 நிமிடங்களே அதிகம். நெரிசல் இருந்தால், இதே தூரம் போக இரண்டு மணித்தியாலங்களும் எடுக்கும். உலகில் எல்லாப் பெருநகரங்களிலும் இன்று நிலைமை இதுதான். லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பொதுப் போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருப்பது இந்த நிலையை இன்னும் கொஞ்சம் மோசமாக்குகிறது.
 
லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங், பின்னர் அங்கிருந்து கொழும்பு என்று பயணத்தை திட்டமிட்டிருந்தோம். கதே பசிபிக் விமான நிறுவனம் மற்றைய விமான நிறுவங்களுடன் ஒப்பிடுகையில் இப்பொழுது மிக விரைவாக இலங்கைக்கு இங்கிருந்து போய்க் கொண்டிருக்கின்றது. விமானப் பயணம் மொத்தம் 22 மணித்தியாலங்கள், அதில் இரண்டு மணித்தியாலங்கள் ஹாங்காங்கில் தங்கி நிற்கும் நேரம்.
 
உலகில் மிக மோசமான விமான நிலையங்கள் என்ற தரவரிசையில் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் அடிக்கடி வரும். மிகவும் சிறிய ஒரு இடத்தில், நெருக்கலான, பெரும் நகரின் மத்தியில், ஒரு குதிரை லாட வடிவில் இது அமைந்திருக்கின்றது. அமெரிக்காவின் மேற்கு கரையினூடான பிரதான நுழைவாயிலாக இது இருப்பதால், இந்த விமான நிலையம் எப்போதும் கூட்டமாக இருக்கும். உள்ளூர்க்காரர்கள் இதை ஒரு விமான நிலையம் என்று எண்ணாமல், இதை ஒரு பஸ் நிலையம் போன்று பயன்படுத்துவது பிரச்சனையை இன்னும் சிக்கலாக்குகின்றது.
 
2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இங்கே நடைபெற உள்ளது. இந்த விமான நிலையத்தை காட்டியே ஒலிம்பிக் நிர்வாகக் குழு இந்த நகரத்தை இலகுவாக நிராகரித்து இருக்கலாம். ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக இந்த விமான நிலையத்தில் சில வேலைகள் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. இருக்கும் இந்த சின்ன இடத்தில் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனாலும் இங்குள்ளவர்களின் திட்டமிடும் திறன் மீது நம்பிக்கை உள்ளது. 
 
கதே பசிபிக் விமானம் சிறிது தாமதித்து புறப்பட்டது. ஹாங்காங்கில் போய் கொழும்பு செல்லும் அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு நேரம் மட்டு மட்டாகவே இருப்பது போல தெரிந்தது. சில வாரங்களின் முன், நண்பர் ஒருவருக்கு இதே போன்ற நிலை ஏற்பட்டு ஹாங்காங்கில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தை தவற விட்டுவிட்டார். பின்னர் ஹாங்காங்கிலிருந்து பெங்களூர் போய், அங்கிருந்து கொழும்பு போனார். இரண்டு மணித்தியால இடைவெளிக்கு பதிலாக நான்கு மணித்தியால இடைவெளி இருந்தால் பதற்றம் இருக்காது என்றும் தோன்றியது.
 
மற்றபடி குறை சொல்ல முடியாத விமான நிறுவனம் கதே பசிபிக். விமானங்களில் பணிபுரிபவர்களில் மிகவும் வேகமாகவும், நிதானமாகவும் செயற்படுபவர்கள் என்றால் இவர்களாகத்தான் இருக்க முடியும். பணிபுரிபவர்கள் எல்லோருமே ஜிம்னாஸ்டிக் பயின்றவர்கள் போல, அப்படி இலகுவாக நெளிந்து வளைந்து ஏறி இறங்கி விமானத்தின் உள்ளே இடம் பெயர்கின்றார்கள்.
 
15 மணி நேர முதலாவது பயணம் ஒருவாறு முடிந்தது. அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு போதுமான நேரம் இருந்தது.
 
கட்டுநாயக்காவில் வி எஃப் எஸ் குளோபல் நிறுவனம் இன்னும் விசா வழங்கும் நடைமுறையை ஆரம்பித்திருக்கவில்லை. இலங்கை குடிவரவு அதிகாரிகளே விசாவை வழங்கினர். ஏற்கனவே ஒரு விசாவிற்கு 50 டாலர்கள் என்று எங்கள் நால்வருக்கும் 200 டாலர்களை இணையத்தில் கட்டி இருந்தோம். ஏதோ ஒரு படிவத்தை நிரப்பவில்லை என்று அதை திரும்பவும் நிரப்பச் சொன்னார்கள். நிரப்பிக் கொண்டு போனால், அங்கு எவரும் இல்லை. நாங்கள் அங்கே இறங்கியது புது வருடம் பிறந்த இரவு. புதுவருட பிறப்பை முன்னிட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தின் உள்ளேயே சில இடங்களில் புதுவருட உணவு, இலவசமாக, வழங்கிக் கொண்டிருந்தனர். குடிவரவு அதிகாரிகள் அதற்கு போய் விட்டனர்.
 
ஒரு சாதாரண உரையாடலின் பின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் விசாவை வழங்கினார். கடவுச்சீட்டுகளை வாங்கிக் கொண்டு வெளியில் நடக்க ஆரம்பித்தால், 'ஒரு உதவி செய்ய முடியுமா?' என்று ஒரு குரல் பின்னால் இருந்து வந்தது. திரும்பினால், அங்கே இன்னொரு அதிகாரி வந்து கொண்டிருந்தார். இவருக்கு நாங்கள் என்ன உதவி செய்து விட முடியும் என்றபடியே அவரைப் பார்த்து, 'பரவாயில்லையே நீங்கள் இரண்டு மொழிகளையும் கதைக்கிறீர்கள்' என்றேன். தான் ஒரு தமிழன் என்று அவரது பெயரைக் காட்டினார். இஸ்லாமியர் ஒருவர் அப்படிச் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.
 
அருகில் இருந்த டியூட்டி ஃப்ரீ கடையில் சாக்லேட் வாங்கித் தர முடியுமா என்று கேட்டார். இலவசமா அல்லது இலஞ்சமா, இது என்ன வகை என்று நான் யோசித்தபடியே எதுவும் சொல்லாமல் நின்றேன். புரிந்து கொண்ட அவர், அவரே காசைக் கொடுப்பதாகச் சொல்லி 22 டாலர்களை என்னிடம் கொடுத்தார். கடையில் வாங்க வேண்டிய நான்கு சாக்லேட்டுகளையும் கடைக்குள் வந்து காட்டினார். புதுவருடம் ஆதலால் வீட்டுக்கு போகும் பொழுது பிள்ளைகள் எதையாவது எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றார். இவர் வீட்டில் இருப்பவர்கள் சித்திரை புதுவருடம் கொண்டாடுபவர்கள் என்றால், அவர்/அவர்கள் யாராக இருக்கும் என்ற தேவையில்லாத கணக்கு ஒன்று மனதில் ஓடத் தொடங்கியது.
 
பொதிகள் எல்லாவற்றையும் சேர்த்து எடுத்த பின், எந்தவித சோதனைகளும் இன்றி வெளியில் வந்தோம். நேரம் கிட்டத்தட்ட இரவு 1 மணி. அந்த நடு இரவு நேரத்தில் இருந்த வெக்கையும், புழுங்கலும் வர இருக்கும் நாட்கள் எப்படி இருக்கப் போகின்றன என்ற ஒரு அறிமுகத்தை கொடுத்தன. இரண்டு பிள்ளைகளும் முழித்த முழி அதற்குச் சான்று. 
 
(தொடரும்.....)
  • Like 12
  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரசோதரன் said:

எனக்கும் கூட்டல் பெருக்கல் கணக்கு வருகின்றது.
தொடருங்கள். வாசிக்கலாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 மேலும் தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். சில நாட்களாக காணவில்லை என எண்ணினேன் தாயக பயணமா ?

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிலாமதி said:

 மேலும் தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். சில நாட்களாக காணவில்லை என எண்ணினேன் தாயாக பயணமா ?

👍.....

மூன்று கிழமைகள் ஊர் போயிருந்தேன். திரும்பி வந்தவுடன் கொஞ்சம் அசதியாகப் போய் விட்டது....

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மேலும் தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

உலகில் மிக மோசமான விமான நிலையங்கள் என்ற தரவரிசையில் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் அடிக்கடி வரும். மிகவும் சிறிய ஒரு இடத்தில், நெருக்கலான, பெரும் நகரின் மத்தியில், ஒரு குதிரை லாட வடிவில் இது அமைந்திருக்கின்றது.

நான் ஓரிரு தடவை இறக்கி ஏற்ற வந்திருக்கிறேன்.

உள்ள முழு ரேமினல்களுக்கும் ஓரேஒரு பாதையை வைத்திருக்கிறார்கள்.

உள்ளே நுழைய ரொம்ப நேரமெடுத்தது.அரைவாசி போனால் பிரச்சனை இல்லை.

7 hours ago, ரசோதரன் said:

குறை சொல்ல முடியாத விமான நிறுவனம் கதே பசிபிக்.

சாப்பாடு முக்கியம் தலைவரே.

சாப்பாடு எப்படி இருந்தது?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை புதுவருடத்திற்கு இலங்கை பயணம் 👍

7 hours ago, ரசோதரன் said:

டியூட்டி ஃப்ரீ கடையில் சாக்லேட் வாங்கித் தர முடியுமா என்று கேட்டார்.

ஓம் இலங்கையில் செய்யபடும்  சொக்லேட் மட்டும் சுவை இல்லை .

7 hours ago, ரசோதரன் said:

தான் ஒரு தமிழன் என்று அவரது பெயரைக் காட்டினார். இஸ்லாமியர் ஒருவர் அப்படிச் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.

முஸ்லிம் மதத்தை பின்பற்றும் ஒருவர் தன்னை தமிழன் என்று சொன்னது எனக்கும் ஆச்சரியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ........ தொடர்ந்து வருகின்றோம்.......!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11 hours ago, ஈழப்பிரியன் said:

நான் ஓரிரு தடவை இறக்கி ஏற்ற வந்திருக்கிறேன்.

உள்ள முழு ரேமினல்களுக்கும் ஓரேஒரு பாதையை வைத்திருக்கிறார்கள்.

உள்ளே நுழைய ரொம்ப நேரமெடுத்தது.அரைவாசி போனால் பிரச்சனை இல்லை.

சாப்பாடு முக்கியம் தலைவரே.

சாப்பாடு எப்படி இருந்தது?

சாப்பாடு நல்லாகவே இருந்தது. சிங்கப்பூர், மத்திய கிழக்கு விமான நிறுவனங்கள் போன்ற அதே வகை தெரிவுகளும், உபசரிப்பும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

முஸ்லிம் மதத்தை பின்பற்றும் ஒருவர் தன்னை தமிழன் என்று சொன்னது எனக்கும் ஆச்சரியம்

👍....

இதற்கு நேர்மாறான ஒரு விடயம் பின்னர் ஒரு நாள் நடந்தது.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
18 hours ago, ரசோதரன் said:
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
--------------------------------------------------------------------
ஏப்ரல் 12ம் திகதி, வெள்ளிக்கிழமை மத்தியானம் இலங்கைக்கான விமான பயணம் ஆரம்பித்தது. வீட்டிலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் ஒரு இருபத்தைந்து மைல் தூரத்தில் இருக்கின்றது. வாகன நெரிசல் இல்லாவிட்டால், விமான நிலையம் போவதற்கு 20 நிமிடங்களே அதிகம். நெரிசல் இருந்தால், இதே தூரம் போக இரண்டு மணித்தியாலங்களும் எடுக்கும். உலகில் எல்லாப் பெருநகரங்களிலும் இன்று நிலைமை இதுதான். லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பொதுப் போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருப்பது இந்த நிலையை இன்னும் கொஞ்சம் மோசமாக்குகிறது.
 
லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங், பின்னர் அங்கிருந்து கொழும்பு என்று பயணத்தை திட்டமிட்டிருந்தோம். கதே பசிபிக் விமான நிறுவனம் மற்றைய விமான நிறுவங்களுடன் ஒப்பிடுகையில் இப்பொழுது மிக விரைவாக இலங்கைக்கு இங்கிருந்து போய்க் கொண்டிருக்கின்றது. விமானப் பயணம் மொத்தம் 22 மணித்தியாலங்கள், அதில் இரண்டு மணித்தியாலங்கள் ஹாங்காங்கில் தங்கி நிற்கும் நேரம்.
 
உலகில் மிக மோசமான விமான நிலையங்கள் என்ற தரவரிசையில் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் அடிக்கடி வரும். மிகவும் சிறிய ஒரு இடத்தில், நெருக்கலான, பெரும் நகரின் மத்தியில், ஒரு குதிரை லாட வடிவில் இது அமைந்திருக்கின்றது. அமெரிக்காவின் மேற்கு கரையினூடான பிரதான நுழைவாயிலாக இது இருப்பதால், இந்த விமான நிலையம் எப்போதும் கூட்டமாக இருக்கும். உள்ளூர்க்காரர்கள் இதை ஒரு விமான நிலையம் என்று எண்ணாமல், இதை ஒரு பஸ் நிலையம் போன்று பயன்படுத்துவது பிரச்சனையை இன்னும் சிக்கலாக்குகின்றது.
 
2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இங்கே நடைபெற உள்ளது. இந்த விமான நிலையத்தை காட்டியே ஒலிம்பிக் நிர்வாகக் குழு இந்த நகரத்தை இலகுவாக நிராகரித்து இருக்கலாம். ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக இந்த விமான நிலையத்தில் சில வேலைகள் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. இருக்கும் இந்த சின்ன இடத்தில் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனாலும் இங்குள்ளவர்களின் திட்டமிடும் திறன் மீது நம்பிக்கை உள்ளது. 
 
கதே பசிபிக் விமானம் சிறிது தாமதித்து புறப்பட்டது. ஹாங்காங்கில் போய் கொழும்பு செல்லும் அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு நேரம் மட்டு மட்டாகவே இருப்பது போல தெரிந்தது. சில வாரங்களின் முன், நண்பர் ஒருவருக்கு இதே போன்ற நிலை ஏற்பட்டு ஹாங்காங்கில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தை தவற விட்டுவிட்டார். பின்னர் ஹாங்காங்கிலிருந்து பெங்களூர் போய், அங்கிருந்து கொழும்பு போனார். இரண்டு மணித்தியால இடைவெளிக்கு பதிலாக நான்கு மணித்தியால இடைவெளி இருந்தால் பதற்றம் இருக்காது என்றும் தோன்றியது.
 
மற்றபடி குறை சொல்ல முடியாத விமான நிறுவனம் கதே பசிபிக். விமானங்களில் பணிபுரிபவர்களில் மிகவும் வேகமாகவும், நிதானமாகவும் செயற்படுபவர்கள் என்றால் இவர்களாகத்தான் இருக்க முடியும். பணிபுரிபவர்கள் எல்லோருமே ஜிம்னாஸ்டிக் பயின்றவர்கள் போல, அப்படி இலகுவாக நெளிந்து வளைந்து ஏறி இறங்கி விமானத்தின் உள்ளே இடம் பெயர்கின்றார்கள்.
 
15 மணி நேர முதலாவது பயணம் ஒருவாறு முடிந்தது. அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு போதுமான நேரம் இருந்தது.
 
கட்டுநாயக்காவில் வி எஃப் எஸ் குளோபல் நிறுவனம் இன்னும் விசா வழங்கும் நடைமுறையை ஆரம்பித்திருக்கவில்லை. இலங்கை குடிவரவு அதிகாரிகளே விசாவை வழங்கினர். ஏற்கனவே ஒரு விசாவிற்கு 50 டாலர்கள் என்று எங்கள் நால்வருக்கும் 200 டாலர்களை இணையத்தில் கட்டி இருந்தோம். ஏதோ ஒரு படிவத்தை நிரப்பவில்லை என்று அதை திரும்பவும் நிரப்பச் சொன்னார்கள். நிரப்பிக் கொண்டு போனால், அங்கு எவரும் இல்லை. நாங்கள் அங்கே இறங்கியது புது வருடம் பிறந்த இரவு. புதுவருட பிறப்பை முன்னிட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தின் உள்ளேயே சில இடங்களில் புதுவருட உணவு, இலவசமாக, வழங்கிக் கொண்டிருந்தனர். குடிவரவு அதிகாரிகள் அதற்கு போய் விட்டனர்.
 
ஒரு சாதாரண உரையாடலின் பின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் விசாவை வழங்கினார். கடவுச்சீட்டுகளை வாங்கிக் கொண்டு வெளியில் நடக்க ஆரம்பித்தால், 'ஒரு உதவி செய்ய முடியுமா?' என்று ஒரு குரல் பின்னால் இருந்து வந்தது. திரும்பினால், அங்கே இன்னொரு அதிகாரி வந்து கொண்டிருந்தார். இவருக்கு நாங்கள் என்ன உதவி செய்து விட முடியும் என்றபடியே அவரைப் பார்த்து, 'பரவாயில்லையே நீங்கள் இரண்டு மொழிகளையும் கதைக்கிறீர்கள்' என்றேன். தான் ஒரு தமிழன் என்று அவரது பெயரைக் காட்டினார். இஸ்லாமியர் ஒருவர் அப்படிச் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.
 
அருகில் இருந்த டியூட்டி ஃப்ரீ கடையில் சாக்லேட் வாங்கித் தர முடியுமா என்று கேட்டார். இலவசமா அல்லது இலஞ்சமா, இது என்ன வகை என்று நான் யோசித்தபடியே எதுவும் சொல்லாமல் நின்றேன். புரிந்து கொண்ட அவர், அவரே காசைக் கொடுப்பதாகச் சொல்லி 22 டாலர்களை என்னிடம் கொடுத்தார். கடையில் வாங்க வேண்டிய நான்கு சாக்லேட்டுகளையும் கடைக்குள் வந்து காட்டினார். புதுவருடம் ஆதலால் வீட்டுக்கு போகும் பொழுது பிள்ளைகள் எதையாவது எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றார். இவர் வீட்டில் இருப்பவர்கள் சித்திரை புதுவருடம் கொண்டாடுபவர்கள் என்றால், அவர்/அவர்கள் யாராக இருக்கும் என்ற தேவையில்லாத கணக்கு ஒன்று மனதில் ஓடத் தொடங்கியது.
 
பொதிகள் எல்லாவற்றையும் சேர்த்து எடுத்த பின், எந்தவித சோதனைகளும் இன்றி வெளியில் வந்தோம். நேரம் கிட்டத்தட்ட இரவு 1 மணி. அந்த நடு இரவு நேரத்தில் இருந்த வெக்கையும், புழுங்கலும் வர இருக்கும் நாட்கள் எப்படி இருக்கப் போகின்றன என்ற ஒரு அறிமுகத்தை கொடுத்தன. இரண்டு பிள்ளைகளும் முழித்த முழி அதற்குச் சான்று. 
 
(தொடரும்.....)

என்னது படம் இல்லாமலா🤣.

படம் கதே பசுபிக்கில் ஏறும் போதே ஆரம்பித்து விட்டதே🤣.

சுவாரசியமாக உள்ளது தொடருங்கள்.

18 hours ago, ரசோதரன் said:

அருகில் இருந்த டியூட்டி ஃப்ரீ கடையில் சாக்லேட் வாங்கித் தர முடியுமா என்று கேட்டார். இலவசமா அல்லது இலஞ்சமா, இது என்ன வகை என்று நான் யோசித்தபடியே எதுவும் சொல்லாமல் நின்றேன். புரிந்து கொண்ட அவர், அவரே காசைக் கொடுப்பதாகச் சொல்லி 22 டாலர்களை என்னிடம் கொடுத்தார். கடையில் வாங்க வேண்டிய நான்கு சாக்லேட்டுகளையும் கடைக்குள் வந்து காட்டினார். புதுவருடம் ஆதலால் வீட்டுக்கு போகும் பொழுது பிள்ளைகள் எதையாவது எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றார். இவர் வீட்டில் இருப்பவர்கள் சித்திரை புதுவருடம் கொண்டாடுபவர்கள் என்றால், அவர்/அவர்கள் யாராக இருக்கும் என்ற தேவையில்லாத கணக்கு ஒன்று மனதில் ஓடத் தொடங்கியது.

அநேகமாக உங்கள் மூலம் டியூட்டி ப்ரீ விலையில் வாங்கி, வெளியில் விற்பார் என நினைக்கிறேன்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

முஸ்லிம் மதத்தை பின்பற்றும் ஒருவர் தன்னை தமிழன் என்று சொன்னது எனக்கும் ஆச்சரியம்

அனைவரும் ஒரு மாதிரி இல்லை. உண்மையில் தம்மை தமிழர் என உணர்வோர் சொற்பமாக இருக்கத்தான் செய்கிறனர்.

ஆனால் இவர் அணுகிய சூழமைவை வைத்து பார்த்தால் - காரியம் நடக்க கதை விட்டுள்ளார் என்றே நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

என்னது படம் இல்லாமலா🤣.

படம் கதே பசுபிக்கில் ஏறும் போதே ஆரம்பித்து விட்டதே🤣.

சுவாரசியமாக உள்ளது தொடருங்கள்.

அநேகமாக உங்கள் மூலம் டியூட்டி ப்ரீ விலையில் வாங்கி, வெளியில் விற்பார் என நினைக்கிறேன்.

🤣.....

படம் எதுவும், ஒரு இடத்தை தவிர, எங்கேயும் எடுக்கவில்லை. அதனால என் பயணத்தில் இரண்டு 'படமும்' இல்லை என்று சொல்ல நினைத்தேன்........நாம என்னதான் அடக்கமாக இருந்தாலும், ஆள் வெளியிலிருந்து வந்திருக்கின்றார் என்று எப்படியோ கண்டு கொள்கின்றனர்.....100 ரூபா கச்சானை 200 ரூபா என்று கோவில் வீதியில் எனக்கு விற்றும் விட்டனர்....... 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

அருகில் இருந்த டியூட்டி ஃப்ரீ கடையில் சாக்லேட் வாங்கித் தர முடியுமா என்று கேட்டார். இலவசமா அல்லது இலஞ்சமா, இது என்ன வகை என்று நான் யோசித்தபடியே எதுவும் சொல்லாமல் நின்றேன். புரிந்து கொண்ட அவர், அவரே காசைக் கொடுப்பதாகச் சொல்லி 22 டாலர்களை என்னிடம் கொடுத்தார். கடையில் வாங்க வேண்டிய நான்கு சாக்லேட்டுகளையும் கடைக்குள் வந்து காட்டினார். புதுவருடம் ஆதலால் வீட்டுக்கு போகும் பொழுது பிள்ளைகள் எதையாவது எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றார்.

நீங்கள் சாக்லேட் வாங்கிக் கொடுப்பதை யாராவது படமெடுத்து போட்டு

அமெரிக்காவிலிருந்து வந்தவர் விமானநிலைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மாட்டிக் கொண்டார் என்று தொலைக்காட்சியில் உங்களைக் காட்ட

இப்படி எனது கற்பனை போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் சாக்லேட் வாங்கிக் கொடுப்பதை யாராவது படமெடுத்து போட்டு

அமெரிக்காவிலிருந்து வந்தவர் விமானநிலைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மாட்டிக் கொண்டார் என்று தொலைக்காட்சியில் உங்களைக் காட்ட

இப்படி எனது கற்பனை போகுது.

🤣......

இதே போன்ற ஒரு கற்பனை என்னுடன் கூட வந்த ஒருவருக்கும் வந்திருந்தது...........😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் சாக்லேட் வாங்கிக் கொடுப்பதை யாராவது படமெடுத்து போட்டு

அமெரிக்காவிலிருந்து வந்தவர் விமானநிலைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மாட்டிக் கொண்டார் என்று தொலைக்காட்சியில் உங்களைக் காட்ட

இப்படி எனது கற்பனை போகுது.

வயது போனால் இப்படித் தான் கற்பனைகள் வரும்.😆

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

வயது போனால் இப்படித் தான் கற்பனைகள் வரும்.😆

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

குருத்தோலை இரண்டு சிரிக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
படம் இல்லாத இலங்கைப் பயணம் - இரண்டு
----------------------------------------------------------------------
கட்டுநாயக்காவில் இருந்து அப்படியே நேரே ஊர் போவது, கொழும்பிற்கு போவதில்லை என்று ஏற்கனவே முடிவெடுத்து வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். கொழும்பில் செய்து முடிக்க வேண்டிய அலுவல்கள் இருந்தால் அன்றி, வெறுமனே கொழும்பு போய், பின்னர் அங்கிருந்து ஊர் போவது நாட்களை வீணடிப்பது போலவும் தெரிந்தது. கொழும்பில், வெள்ளவத்தையில், இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அமைப்பும், நெருக்கமும் அங்கே போக வேண்டும் என்ற விருப்பத்தை இல்லாமல் ஆக்குகின்றன. இந்த தொடர் மாடிக் கட்டிடங்களை, குடிமனைகளை இப்படிக் கட்ட எப்படி அனுமதித்தார்கள் என்பது ஆச்சரியமே.
 
வாகனம் வெளியில் தயாராக நின்றது. நீண்ட தூரப் பயணம், இரவு ஓட்டம், ஆகவே வாகன ஓட்டுனருக்கு ஒரு பேச்சுத் துணைக்கு முன்னுக்கு இருக்கலாம் என்று ஏறினேன். ஆனாலும் முன் இருக்கையில் இருக்கவே கூடாது என்று பலர் கூறிய அறிவுரையும் ஞாபகத்தில் இருந்தது. கொழும்பு - யாழ் ஓட்டத்தில் பல விபத்துகள் நடப்பதாகவும், முன் இருக்கையில் இருப்பவர்களே அதிகமான ஆபத்திற்கு ஆளாகுகின்றனர் என்று ஒரு தரவையும் சொல்லியிருந்தார்கள். ஏறி இருந்த பின், சீட் பெல்ட்டை போடலாம் என்று இழுத்தேன். சீட் பெல்ட் இங்கு பார்க்க மாட்டார்கள் என்றார் ஓட்டுநர். அது வேலையும் செய்யவில்லை. அதை திருத்த வேண்டும் என்று அவரே சொன்னார். சினிமாக்களில் வரும் வாகன விபத்தில் முன் கண்ணாடியின் ஊடாக பறந்து விழுந்து உருளும் ஒரு சினிமா கதாநாயகன் ஒரு சிராய்ப்புக் கூட இல்லாமல் அப்படியே எழும்பி நடப்பார். ஒரு கதாநாயகன் ஆகும் சந்தர்ப்பம் உருவாகிக் கொண்டிருந்தது.
 
'புத்தளம் வழியே தான் போவீர்கள்?' என்று சும்மா கேட்டேன். அப்படித்தானே எல்லோரும் வழமையாகப் போவார்கள். புத்தளத்தில் ஒரு கடையில் நிற்பாட்டுவார்கள். புத்தளம் எனக்கு கொஞ்சம் பழக்கமான இடமும் கூட. 90 களில் சில மாதங்கள் அங்கு இருந்திருக்கின்றேன். புத்தளம் வழியே தாங்கள் ஓடுவதில்லை என்றார் ஓட்டுநர். புத்தளம் நகரத்தினூடு செல்லும் வீதிகள் மிக மோசமானவை என்றும், அதை விட போலீஸ்காரர்கள் பல இடங்களில் சும்மா சும்மா நிற்பட்டித் தொல்லைகள் கொடுப்பார்கள் என்றும் சொன்னார். எதற்காக நிற்பாட்டுகின்றனர் என்றேன். வேறு என்னத்திற்கு, எங்களிடம் ஏதாவது வாங்கத்தான் என்று அலுத்துக் கொண்டார் ஓட்டுநர். நாங்கள் நிற்பாட்டா விட்டால், போலீஸ்காரர்கள் வீதியில் வாகனத்தின் குறுக்கே விழுந்து படுத்தும் விடுவார்கள் என்றும் சொன்னார். என்றுமே தீராத கொடுக்கல்களும், வாங்கல்களும்.
 
புத்தளத்தின் பின் பக்க காட்டு பகுதியினூடு வாகனம் சென்றது. குறுகலான, பல திருப்பங்களுடன் இருந்த வீதி அது. நீண்ட நீண்ட தூரங்களிற்கு ஒரு கடையோ, வெளிச்சமோ இல்லாத பகுதிகள். அடிபட்டால் ஏனென்று கேட்பதற்கு ஆள் நடமாட்டமோ, அல்லது வேறு வாகனங்களோ இல்லை. இன்று புது வருட இரவு என்பதால், வேறு வாகனங்கள் தெருவில் இல்லை என்று ஓட்டுநர் சொன்னார். அவர்களின் நிறுவன வாகனங்கள், மொத்தம் 15, அநேகமாக இந்தப் பாதையில் போய் வருகின்றன என்றார். அப்படியே போய் கல்கமுவவில் ஏறி, அனுராதபுரம் போய், பின்னர் யாழ்ப்பாணத்திற்கான வழமையான பாதை என்றார்.
 
விமான நிலையத்தில் இருந்து ஊர் செல்ல ஒரு முழு வாகனத்திற்கு 40,000 ரூபாய் கட்டணம். தனித் தனி இருக்கைகளாகவும் அவர்களே விற்கின்றனர். ஒரு இருக்கை 4, 000 ரூபாய். ஆனால் ஒன்பது பேர்கள் சேர்ந்தால் மட்டுமே இவர்களின் வாகனம் அன்று போகும். ஒன்பது பேர்கள் சேரா விட்டால், சேர்ந்தவர்களை வேறு ஒருவரிடம் கொடுத்து விடுகின்றனர். கொழும்பு - யாழ் ஓடிக் கொண்டிருக்கும் பெரிய சொகுசு பஸ் நிறுவனங்கள் ஒரு இருக்கைக்கு 3,000 ரூபாய் என்று கட்டணம் வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், பொதிகளின் எண்ணிக்கை கூடினால், அதற்கு மேலதிக கட்டணம் அறவிடுகின்றனர். 
 
ஒரு மாதத்தில் ஒரு வாகனம் கொழும்பிற்கு எத்தனை தடவைகள் போய் வரும் என்று கேட்டேன். புலம்பெயர்ந்தவர்கள் அதிகமாக வரும் கோயில் திருவிழா மாதங்களில் பத்து அல்லது பதினைந்து தடவைகள் கூட போய் வருவோம் என்றார். இந்த நாட்களில் உழைப்பது தான் மொத்த வருமானத்தின் பெரும் பங்கு என்றார். ஒரு மாதத்தில் 15, 000 கிலோ மீட்டர்கள் மேல் ஓடுகின்றனர்! இந்த வாகனங்கள் 25 வருடங்களிற்கு மேலாக தெருக்களில் கை மாறி ஓடிக் கொண்டிருக்கின்றன. மொத்தமாக எத்தனை ஆயிரங்கள் கிலோ மீட்டர்கள் இவை ஓடியிருக்கும். இவை எப்படி தாக்குப் பிடிக்கின்றன என்பது ஆச்சரியமே.
 
அதை விட அவர் சொன்ன இன்னொரு தகவல் ஆச்சரியம். சில வருடங்களில் முன் இதே வாகனத்தை 25 இலட்சம் ரூபாய்களுக்கு வேறு ஒருவரிடம் இருந்து வாங்கியிருக்கின்றனர். பின்னர் 12 இலட்சங்கள் செலவழித்து திருத்த வேலைகள் செய்திருக்கின்றனர் (ஆனால் சீட் பெல்ட்டை திருத்தவில்லை.....😀). இந்த வாகனத்தின் தற்போதைய பெறுமதி 68 இலட்சங்கள் என்றார். சாதாரண வாகனங்களின் பெறுமதி இப்படி அதிகரிக்கும் என்பது வெளிநாடுகளில் வாழும், வீட்டுத் தேவைக்கு வாகனங்கள் வைத்திருக்கும் எங்களுக்கு நம்ப முடியாத ஒரு விடயம்.
 
ஒரே ஒரு இடத்தில் நிற்பாட்டி இலங்கையில் எங்கும் எல்லோரும் அருந்தும் நெஸ்கஃபே ஒன்று குடித்தோம். யாராவது கடையில் நல்ல ஒரு தேநீர் போட்டுக் கொடுக்க மாட்டார்களா என்று ஏக்கமாக இருந்தது. பின்னர் முறிகண்டியில் ஒரு சின்ன வழமையான தரிப்பு. அங்கும் கடையில் நெஸ்கஃபே இயந்திரமே. ஆனையிறவில் இராணுவ வீரர் ஒருஅர் வலுக் கட்டாயமாக வாகனத்தை நிறுத்தினார். இங்கு வேகத்தை குறைக்க வேண்டும், நீ ஏன் குறைக்கவில்லை என்று ஓட்டுநருடன் முறைத்தார். பணம் எதுவும் இருவருக்குமிடையில் கை மாற்றப்படவில்லை. அதை தாண்டியவுடன், 'இவங்களுக்கு வேற வேலை' என்று ஓட்டுநர் சொன்னார். எனக்கு அந்த இராணுவ வீரர் செய்தது சரி என்றே பட்டது.
 
ஆனையிறவைப் பற்றி பிள்ளைகளுக்கு பெரிய கதை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பிள்ளைகள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். பிறகு இன்னொரு தடவை சந்தர்ப்பம் வரும் போது சொல்லுவோம் என்று விட்டுவிட்டேன். பளை எங்கும் புதிய தென்னம் பிள்ளைகள் வளர்ந்து  கொண்டிருக்கின்றன.   
 
சரியாக காலை 6:30 மணி அளவில், ஊரில் இருக்கும் வீட்டு வாசலின் முன் வாகனத்தை கொண்டு வந்து நிற்பாட்டினார். 5 1/2 மணி நேரங்களில் விமான நிலையத்தில் இருந்து வல்வெட்டித்துறைக்கு. இது ஒரு சாதனையாகத்தான் இருக்கும். நாங்கள் எட்டு அல்லது ஒன்பது மணிக்குத்தான் வந்து சேருவோம் என்று வீட்டில் இருந்த எவரும் அந்த நேரத்தில் எழும்பி இருக்கவில்லை.
 
(தொடரும்..........)
 
  • Like 10
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரசோதரன் said:

--ஏறி இருந்த பின், சீட் பெல்ட்டை போடலாம் என்று இழுத்தேன். சீட் பெல்ட் இங்கு பார்க்க மாட்டார்கள் என்றார் ஓட்டுநர். அது வேலையும் செய்யவில்லை. அதை திருத்த வேண்டும் என்று அவரே சொன்னார். சினிமாக்களில் வரும் வாகன விபத்தில் முன் கண்ணாடியின் ஊடாக பறந்து விழுந்து உருளும் ஒரு சினிமா கதாநாயகன் ஒரு சிராய்ப்புக் கூட இல்லாமல் அப்படியே எழும்பி நடப்பார். ஒரு கதாநாயகன் ஆகும் சந்தர்ப்பம் உருவாகிக் கொண்டிருந்தது.

'புத்தளம் வழியே தான் போவீர்கள்?' என்று சும்மா கேட்டேன். அப்படித்தானே எல்லோரும் வழமையாகப் போவார்கள். புத்தளத்தில் ஒரு கடையில் நிற்பாட்டுவார்கள். புத்தளம் எனக்கு கொஞ்சம் பழக்கமான இடமும் கூட. 90 களில் சில மாதங்கள் அங்கு இருந்திருக்கின்றேன். புத்தளம் வழியே தாங்கள் ஓடுவதில்லை என்றார் ஓட்டுநர். புத்தளம் நகரத்தினூடு செல்லும் வீதிகள் மிக மோசமானவை என்றும், அதை விட போலீஸ்காரர்கள் பல இடங்களில் சும்மா சும்மா நிற்பட்டித் தொல்லைகள் கொடுப்பார்கள் என்றும் சொன்னார். எதற்காக நிற்பாட்டுகின்றனர் என்றேன். வேறு என்னத்திற்கு, எங்களிடம் ஏதாவது வாங்கத்தான் என்று அலுத்துக் கொண்டார் ஓட்டுநர். நாங்கள் நிற்பாட்டா விட்டால், போலீஸ்காரர்கள் வீதியில் வாகனத்தின் குறுக்கே விழுந்து படுத்தும் விடுவார்கள் என்றும் சொன்னார். என்றுமே தீராத கொடுக்கல்களும், வாங்கல்களும்.
 
இந்த சீட் பெல்ட் விசயம் மிக மோசமான பிரச்சினை. 

ஒவ்வொரு முறையும் இங்கே இருந்து ஏற்பாடு செய்யும் போதும் - பெல்ட் இருக்கா, வேலை செய்யுமா என கேட்பேன். ஆம் என்பார்கள். அங்கே போனால் இராது அல்லது வேலை செய்யாது. 

2000 க்கு பிந்தி வந்த வாகனங்களை அமர்த்தினால் இந்த பிரச்சனை குறைவு.

புத்தள பாதை - அவ்வளவு மோசம் இல்லை. தவிர புத்தளம்-அனுராதபுரம் இடையே ஓரளவு சுத்தமான கழிப்பறையுடன் கூடிய சேர்விஸ் நிலையமும் உண்டு.

வேகமாக ஓடுவதற்காக, பொலிஸ்சுக்கு கப்பம் கட்டுவதை தவிர்க்க காட்டு பாதை வழியாக உங்கள் ஓட்டி வந்துவிட்டு, சாட்டு சொல்லியுள்ளார் என நினைக்கிறேன்.

47 minutes ago, ரசோதரன் said:
ஒரு மாதத்தில் ஒரு வாகனம் கொழும்பிற்கு எத்தனை தடவைகள் போய் வரும் என்று கேட்டேன். புலம்பெயர்ந்தவர்கள் அதிகமாக வரும் கோயில் திருவிழா மாதங்களில் பத்து அல்லது பதினைந்து தடவைகள் கூட போய் வருவோம் என்றார். இந்த நாட்களில் உழைப்பது தான் மொத்த வருமானத்தின் பெரும் பங்கு என்றார். ஒரு மாதத்தில் 15, 000 கிலோ மீட்டர்கள் மேல் ஓடுகின்றனர்! இந்த வாகனங்கள் 25 வருடங்களிற்கு மேலாக தெருக்களில் கை மாறி ஓடிக் கொண்டிருக்கின்றன. மொத்தமாக எத்தனை ஆயிரங்கள் கிலோ மீட்டர்கள் இவை ஓடியிருக்கும். இவை எப்படி தாக்குப் பிடிக்கின்றன என்பது ஆச்சரியமே.
 
அதை விட அவர் சொன்ன இன்னொரு தகவல் ஆச்சரியம். சில வருடங்களில் முன் இதே வாகனத்தை 25 இலட்சம் ரூபாய்களுக்கு வேறு ஒருவரிடம் இருந்து வாங்கியிருக்கின்றனர். பின்னர் 12 இலட்சங்கள் செலவழித்து திருத்த வேலைகள் செய்திருக்கின்றனர் (ஆனால் சீட் பெல்ட்டை திருத்தவில்லை.....😀). இந்த வாகனத்தின் தற்போதைய பெறுமதி 68 இலட்சங்கள் என்றார். சாதாரண வாகனங்களின் பெறுமதி இப்படி அதிகரிக்கும் என்பது வெளிநாடுகளில் வாழும், வீட்டுத் தேவைக்கு வாகனங்கள் வைத்திருக்கும் எங்களுக்கு நம்ப முடியாத ஒரு விடயம்.

நான் அறிய கியூபாவும் இலங்கையும்தான் உலகில் வாகனம் வாங்கினால் விலை appreciate (கூடும்) நாடுகள். 

கொவிட்டுக்கு முன்பே, வெளிநாட்டில் £100 ம் பெறாத 1992 ஆம் ஆண்டு டவுன் ஏஸ் வானை, இலங்கையில் 20 இலட்சம் என்பார்கள்.

இப்போ காசு பெறுமதியிழந்து விட்டது. வாகன இறக்குமதி தடை.

வாகனங்கள் 2019இல் வாங்கிய விலையின் பலமடங்கு போகிறன.

ஆனால் இதில் ஒரு நல்ல விடயம். வெளிநாடு போல், வாகனத்தை உடனே தூக்கி எறியாமல் - எந்த பிழையையும் அங்கே ரிப்பேர் செய்ய முடிகிறது.

மீள்சுழற்சி எனப்பார்க்கின் இது 👍.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ரசோதரன் said:

அங்கும் கடையில் நெஸ்கஃபே இயந்திரமே.

இந்த நெஸ்கபேயில் ஏலவே சீனியை அள்ளி கொட்டி இருப்பார்கள். கோப்பி சுவை - அதை நெஸ்கபே கோப்பி என்று சொன்னால் நெஸ்கபே காரன் செருப்பால் அடிப்பான்.

ஆனால் இது பொதுவாக பெரேரா அண்ட் சன்சை ஒத்த இடைத்தர கடைகளில்தான்.

கீழ் மட்ட கடைகளில் கோப்பி இராது ஆனால் டீ கிடைக்கும். ஆனால் அதிலும் டின்பால் போடுவார்கள். நாமாக கேட்டால் பால்மாவில் போடுவார்கள்.

கொழும்பில் Barista, Java Lounge போன்ற பல கடைகளில் மிக தரமான கோப்பி அருந்தலாம்.

ஆனால் இந்த cafe culture கொழும்பை தாண்டி இல்லைத்தான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

கட்டுநாயக்காவில் இருந்து அப்படியே நேரே ஊர் போவது, கொழும்பிற்கு போவதில்லை என்று ஏற்கனவே முடிவெடுத்து வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். கொழும்பில் செய்து முடிக்க வேண்டிய அலுவல்கள் இருந்தால் அன்றி, வெறுமனே கொழும்பு போய், பின்னர் அங்கிருந்து ஊர் போவது நாட்களை வீணடிப்பது போலவும் தெரிந்தது.

நானும் போன நேரங்களில் நேரா யாழ் தான்.

இடைத்தங்கலில் நிற்கும் போதே சாரதியின் விபரம் வான் இலக்கத்தகடு வாங்கிவிடுவேன்.

1 hour ago, ரசோதரன் said:

ஏறி இருந்த பின், சீட் பெல்ட்டை போடலாம் என்று இழுத்தேன். சீட் பெல்ட் இங்கு பார்க்க மாட்டார்கள் என்றார்

பழைய இலக்கத் தகடுகள் உள்ள வான்களில் சீற்பெல்ற் போடத் தேவையில்லை.

அனேகமானதில் வேலையும் செய்யாது.

2 hours ago, ரசோதரன் said:

ஒரே ஒரு இடத்தில் நிற்பாட்டி இலங்கையில் எங்கும் எல்லோரும் அருந்தும் நெஸ்கஃபே ஒன்று குடித்தோம்

அனுராதபுரத்தில் வெளிநாட்டுப் பாணியில் ஒரு கடை. 

சுத்தமாக இருக்கும்.(கழிவறையும்)

சாப்பாடும் பரவாயில்லை.

2 hours ago, ரசோதரன் said:

சரியாக காலை 6:30 மணி அளவில், ஊரில் இருக்கும் வீட்டு வாசலின் முன் வாகனத்தை கொண்டு வந்து நிற்பாட்டினார்

குருநாகல் பாதை நல்லதென்று கூடுதலானவர்கள் பாவிப்பதாக சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2024 at 00:09, ரசோதரன் said:

படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று

எளிமையான எழுத்துநடை. நன்று. பயணக்கட்டுரை உறவுகளுக்குப் பயனுள்ளதாக இருப்பதோடு, அங்கு செல்லும்போது எந்த விடயங்களில் விழிப்பாக இருக்கவேண்டும் என்பதையும் காணமுடிகிறது.

நன்றி  
 
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

இந்த சீட் பெல்ட் விசயம் மிக மோசமான பிரச்சினை. 

ஒவ்வொரு முறையும் இங்கே இருந்து ஏற்பாடு செய்யும் போதும் - பெல்ட் இருக்கா, வேலை செய்யுமா என கேட்பேன். ஆம் என்பார்கள். அங்கே போனால் இராது அல்லது வேலை செய்யாது. 

2000 க்கு பிந்தி வந்த வாகனங்களை அமர்த்தினால் இந்த பிரச்சனை குறைவு.

புத்தள பாதை - அவ்வளவு மோசம் இல்லை. தவிர புத்தளம்-அனுராதபுரம் இடையே ஓரளவு சுத்தமான கழிப்பறையுடன் கூடிய சேர்விஸ் நிலையமும் உண்டு.

வேகமாக ஓடுவதற்காக, பொலிஸ்சுக்கு கப்பம் கட்டுவதை தவிர்க்க காட்டு பாதை வழியாக உங்கள் ஓட்டி வந்துவிட்டு, சாட்டு சொல்லியுள்ளார் என நினைக்கிறேன்.

நான் அறிய கியூபாவும் இலங்கையும்தான் உலகில் வாகனம் வாங்கினால் விலை appreciate (கூடும்) நாடுகள். 

கொவிட்டுக்கு முன்பே, வெளிநாட்டில் £100 ம் பெறாத 1992 ஆம் ஆண்டு டவுன் ஏஸ் வானை, இலங்கையில் 20 இலட்சம் என்பார்கள்.

இப்போ காசு பெறுமதியிழந்து விட்டது. வாகன இறக்குமதி தடை.

வாகனங்கள் 2019இல் வாங்கிய விலையின் பலமடங்கு போகிறன.

ஆனால் இதில் ஒரு நல்ல விடயம். வெளிநாடு போல், வாகனத்தை உடனே தூக்கி எறியாமல் - எந்த பிழையையும் அங்கே ரிப்பேர் செய்ய முடிகிறது.

மீள்சுழற்சி எனப்பார்க்கின் இது 👍.

நீங்கள் சொல்வது மிகவும் சரி, எந்த நிலையிலிருக்கும் வாகனத்தையும் திருத்த வேலைகள் செய்து தயாராக்கி விடுகின்றனர். வாகனப் புத்தகம் என்பது ஒரு பேருக்கு அன்றி, வாகனங்களில் இருக்கும் எந்த விதமான பகுதிகளுக்கும், வாகனத்தின் பெயருக்கும் சம்பந்தம் கிடையாது. 

22 hours ago, goshan_che said:

இந்த நெஸ்கபேயில் ஏலவே சீனியை அள்ளி கொட்டி இருப்பார்கள். கோப்பி சுவை - அதை நெஸ்கபே கோப்பி என்று சொன்னால் நெஸ்கபே காரன் செருப்பால் அடிப்பான்.

ஆனால் இது பொதுவாக பெரேரா அண்ட் சன்சை ஒத்த இடைத்தர கடைகளில்தான்.

கீழ் மட்ட கடைகளில் கோப்பி இராது ஆனால் டீ கிடைக்கும். ஆனால் அதிலும் டின்பால் போடுவார்கள். நாமாக கேட்டால் பால்மாவில் போடுவார்கள்.

கொழும்பில் Barista, Java Lounge போன்ற பல கடைகளில் மிக தரமான கோப்பி அருந்தலாம்.

ஆனால் இந்த cafe culture கொழும்பை தாண்டி இல்லைத்தான்.  

மலாயன் கபே இல் டீ ஒன்று கொடுத்தார்கள். சீனியை குறைவாகப் போடுங்கள் என்று அவர்களுக்கு சொல்ல மறந்து விட்டேன், மற்றபடி ஓரளவு நன்றாகவே இருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

சீனியை குறைவாகப் போடுங்கள் என்று அவர்களுக்கு சொல்ல மறந்து விட்டேன், மற்றபடி ஓரளவு நன்றாகவே இருந்தது. 

சீனியை குறைய போடுங்கோ என்றால்

சீனி இல்லாமல் கொடுத்தால் அவமரியாதை என்று எண்ணுகிறார்களோ என்னமோ?(உறவினர்கள் தெரிந்தவர்கள் வீடுகளில்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

பழைய இலக்கத் தகடுகள் உள்ள வான்களில் சீற்பெல்ற் போடத் தேவையில்லை.

அனேகமானதில் வேலையும் செய்யாது.

👍....

இவர்கள் ஓடும் ஓட்டத்திற்கு வாகனம் எந்த வருடத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் சீட் பெல்ட் இல்லாமல் இருப்பது பெரும் ஆபத்து அல்லவே.

வரும் வழியில் சில பெரிய விபத்துகள் நடந்த இடத்தை ஓட்டுநர் காட்டி விளக்கம் சொல்லிக் கொண்டு வந்தார். ஒரு விபத்து நடந்தால், பின்னர் அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு விபத்துகள் தொடராக நடக்கின்றன என்ற ஒரு நம்பிக்கையையும் ஓட்டுநர் சொன்னார்.

பின்னர் வேறொரு நாளில் வாகனம் திருத்துபவர் ஒருவருடன் கதைத்த பொழுது, தான் முன்னர் யாழ் - கொழும்பு வாகனம் ஓடியதாகவும், ஆனால் இப்போது அதை விட்டு விட்டதாகவும் சொன்னார். இரவில் குடித்து விட்டு வீதியில் படுத்திருந்த ஒருவரின் மேல் இவரின் வாகனம் ஏறிவிட்டது. அந்த இருட்டில் அந்த நபர் அங்கிருந்தது தனக்குத் தெரியவில்லை என்று சொன்னார். 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.