Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

சீனியை குறைய போடுங்கோ என்றால்

சீனி இல்லாமல் கொடுத்தால் அவமரியாதை என்று எண்ணுகிறார்களோ என்னமோ?(உறவினர்கள் தெரிந்தவர்கள் வீடுகளில்)

😀...

சிலர் அப்படியும் நினைக்கின்றார்கள். ஒரு வீட்டில் கறி அள்ளும் பெரிய கரண்டியையே சீனியை எடுத்து போடுவதற்கும் பயன்படுத்தினர். 'வெள்ளை' நிறமான உணவுப் பொருட்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு எவ்வளவு கெடுதல்களை விளைவிக்கும் என்று நாங்கள் வாசித்த, பார்த்த ஆயிரக்கணக்கான கட்டுரைகள் அங்கே இன்னும் போய்ச் சேரவில்லை..............

  • Replies 107
  • Views 10.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    படம் இல்லாத இலங்கைப் பயணம் - இரண்டு ---------------------------------------------------------------------- கட்டுநாயக்காவில் இருந்து அப்படியே நேரே ஊர் போவது, கொழும்பிற்கு போவதில்லை என்ற

  • ரசோதரன்
    ரசோதரன்

    படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஆறு ---------------------------------------------------------------- குட்டிக் கடை என்றாலும் எங்கள் வீட்டவர்கள் அங்கும் எட்டு மணித்தியாலங்கள் செலவழிக்கும் த

  • ரசோதரன்
    ரசோதரன்

    படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஏழு - இந்திர விழா -------------------------------------------------------------------------------------- இந்திர விழா என்ற பெயரில் ஒரு விழா கோவலன், கண்ணகி வ

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

பழைய இலக்கத் தகடுகள் உள்ள வான்களில் சீற்பெல்ற் போடத் தேவையில்லை.

வெளிநாடுகளிலும் இதுதான் நடைமுறை என நினைக்கிறேன்.

யூகேயில் 1968 க்கு முந்திய வாகனத்தை ஓட்டும் போது சீட் பெல்ட் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2024 at 20:07, goshan_che said:

நான் அறிய கியூபாவும் இலங்கையும்தான் உலகில் வாகனம் வாங்கினால் விலை appreciate (கூடும்) நாடுகள். 

கொவிட்டுக்கு முன்பே, வெளிநாட்டில் £100 ம் பெறாத 1992 ஆம் ஆண்டு டவுன் ஏஸ் வானை, இலங்கையில் 20 இலட்சம் என்பார்கள்.

வாகன இறக்குமதி தடையை இலங்கை எடுக்கட்டும் இங்கு £100  , £200 அதி சொகுசு வாகனங்கள்  வாங்கி அவற்றை இலங்கையில் நல்ல விலைக்கு விற்கலாம்🤣

On 12/5/2024 at 20:21, goshan_che said:

இந்த நெஸ்கபேயில் ஏலவே சீனியை அள்ளி கொட்டி இருப்பார்கள்.

தேனீரிலும் அதே மாதிரி

On 12/5/2024 at 20:21, goshan_che said:

டீ கிடைக்கும். ஆனால் அதிலும் டின்பால் போடுவார்கள். நாமாக கேட்டால் பால்மாவில் போடுவார்கள்.

சீனி சுவை போதாது என்று நெஸ்ரில் பால்மா ஒன்றையும் ரியில் சேர்த்து கலக்குவார்களாம் கூட வந்தவர்கள் என் காதில் கிசு கிசுத்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

வாகன இறக்குமதி தடையை இலங்கை எடுக்கட்டும் இங்கு £100  , £200 அதி சொகுசு வாகனங்கள்  வாங்கி அவற்றை இலங்கையில் நல்ல விலைக்கு விற்கலாம்🤣

🤣 இறக்குமதி தடை இல்லாத போதும் பல கெடுபிடிகள், விதிகள் இருந்தது. 

3 வருட புதிய வாகனத்தைதான் இறக்கலாம். சலுகை பெர்மிட்டுகள் இல்லாதவிடத்து 100% முதல் 300% வரை வாகனத்தின் கொள்விலையில் வரி அடிப்பர்.

 எப்படியும் இங்கே 18,000£ க்கு வாங்கும் காரை அங்கே குறைந்தத்து 36,000£ தான் விலை சொல்வார்கள். இனி வரி விதிப்பு இன்னும் அமோகமாக இருக்கும்.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சீனி சுவை போதாது என்று நெஸ்ரில் பால்மா ஒன்றையும் ரியில் சேர்த்து கலக்குவார்களாம் கூட வந்தவர்கள் என் காதில் கிசு கிசுத்தார்கள்.

ஒருவருக்கும் இதை பற்றிய தெளிவு கொஞ்சமும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் இல்லாத இலங்கைப் பயணம் - மூன்று

----------------------------------------------------------------------
இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமே கோவிலுக்கு போவது தான் என்று பல நாட்களாகவே மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது. அம்மன் கோவிலின் 15 நாட்கள் திருவிழாவில் சரி நடுவில் போய் அங்கே இறங்கியிருந்தோம்.
 
எல்லா ஊர்களிலும் அவர்களின் ஊரையும், ஊர்க் கோவில்களைப் பற்றியும் பெருமையான கதைகள் இருக்கும். இங்கும் அதுவே. உலகிலேயே ஒரு சிவன் கோவிலும், ஒரு அம்மன் கோவிலும் அருகருகே இருந்து, ஒரே பொது வீதியை கொண்டிருப்பது இரண்டே இரண்டு இடங்களில் தான் இருக்கின்றது என்று சொல்வார்கள். அதில் ஒன்று இங்கு. அம்மன் கோவிலின் தெற்கு வீதியும், சிவன் கோவிலின் வடக்கு வீதியும் ஒன்றே. சிவன் கோவில் பிரமாண்டமானது. அது தலைவர் அவர்களின் குடும்பக் கோயில் என்ற வரலாறு கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். இன்றும் அவர்களின் குடும்பமே சிவன் கோவிலின் சொந்தக்காரர்களும், நிர்வாகிகளும்.
 
சிவன் கோவிலின் பிரமாண்டம் அதைக் கட்டியவர்கள் ஒரு காலத்தில் இருந்த செல்வாக்கான, மிக வசதியான நிலையைக் காட்டுகின்றது. இன்று அந்தக் கோவிலின் உள்ளே நிற்கும் போது, கோவிலுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய செய்யாமல் விடப்பட்டிருக்கின்றன என்றே தோன்றியது. இன்றைய நிலையில் அவர்களால் எல்லாப் பணிகளையும் செய்வது இயலாத காரியம். ஆட்பலமும் இல்லை, பலரும் இடம் பெயர்ந்து போய்விட்டனர். ஒரு தனியார் கோவிலாகவே சதாகாலமும் இருந்த படியால், பெரிய வரும்படியும் என்றும் இருந்ததில்லை என்று நினைக்கின்றேன். அவர்களும் அதை எதிர்பார்த்ததும் இல்லை. ஆனாலும் எக் காரணம் கொண்டும் அவர்கள் அந்தக் கோவிலை வேறு எவரிடமும் கொடுக்கமாட்டார்கள். புரிந்து கொள்ளக் கூடிய பெருமையே.
 
அம்மன் கோவில் பொதுக் கோவில். சிவன் கோவில் அளவிற்கு கட்டுமானத்தில் பிரமாண்டமானது இல்லை. ஆனால் இதுவும் ஒரு பெரிய கோவில். ஊரே பயந்து பணியும் தெய்வம் அங்கு குடியிருக்கின்றது என்பது பெரும்பாலான ஊரவர்களின் நம்பிக்கை. இங்கு வளரும் காலத்தில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை, ஆனாலும் அடி மனதில் ஒரு பயம் என்றும் தங்கியிருந்தது. இருட்டில் பேய்க்கு பயப்படுவது போல. அம்மை, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் அதிகமாக வரும் சித்திரை, வைகாசி மாதங்களில் கோவில் திருவிழா நாட்கள் வருவதும் 'சாமி, கண்ணைக் குத்தும்' என்ற பயத்தை உண்டாக்கி வைத்திருந்தது.
 
இந்த ஊரவர்கள் படம் பார்க்க கடல் கடந்து தமிழ்நாடு போய் வருவார்கள், அம்மன் திருவிழாவிற்கு சேலைகள் எடுக்க போய் வருவார்கள், வேட்டைத் திருவிழா அன்று நடக்கும் வாண வேடிக்கைக்கு வெடிகளும், வாணங்களும் எடுத்து வர போய் வருவார்கள் என்பன பல வருடங்களின் முன்னர் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளே.
 
திருவிழா நாட்களில் பூசைகள் நீண்டவை. சில மணித்தியாலங்கள் எடுக்கும் ஒவ்வொரு பகல் பூசையும், இரவுப் பூசையும். மக்களில் எவருக்கும் நேரம் பற்றிய உணர்வு ஒரு துளி கூட இருக்கவில்லை என்றே எனக்குப் பட்டது. அத்துடன் பூசைகள் பல காரணங்களால் மிகவும் பிந்தி விடுகின்றது அல்லது அதிக நேரம் எடுத்து விடுகின்றது. ஆனாலும் 'இன்று கொஞ்சம் பிந்தி விட்டது...' என்ற ஒரு வரியுடன் எல்லோரும் கடந்து போகின்றனர். கோவிலை சுற்றி மூன்று மடங்களில் அன்னதானம் கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சிறு வயதில் இருந்த காலங்களில், பல திருவிழாக்களின் போது ஒரு மடத்தில் கூட அன்னதானம் கொடுக்கப்பட்டதில்லை. இன்று புலம் பெயர்ந்தவர்களே அன்னதான உபயம். அன்றைய உபயகாரர்களின் பெயர்கள் மடங்களிற்கு வெளியே அறிவிப்புக்களாக எழுதப்பட்டிருக்கின்றது.
 
மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள். கோவில் வீதியில் கூட மேல் சட்டை அணிய முடியாது. அப்படி மீறி அணிந்திருந்தால், யாராவது வந்து ஏதாவது சொல்லுவார்கள். தாங்க முடியாத வெக்கையும், வேர்வையும் என்று வெளியே முன் வீதியில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றேன். வேறு சிலரும், வயதானவர்கள், அங்கே இருந்த ஒரு திண்ணையில் ஏற்கனவே முடியாமல் அமர்ந்திருந்தனர். அதற்குப் பின்னே ஒரு மடம் இருந்தது. ஒருவர் வந்து அருகே நின்றார். சிறிது நேரம் பேசாமல் நின்றவர் மெதுவாக ஆரம்பித்தார்.
 
'தம்பி, இந்த மேல் சட்டை போடக் கூடாது என்று சொல்வது எல்லாம் அந்த நாட்களில் அவர்கள் செய்த சதி' என்றார். இவர் சொல்லும் அந்த 'அவர்கள்' யாராக இருக்கும் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் இவர் யார் என்று எனக்குத் தெரியாது, நான் யாரென்றும் அவருக்கும் தெரிந்திருக்காது. ஆனாலும், எங்கள் இருவருக்குமிடையில் நிச்சயம் ஒரு தொடர்பு, உறவுமுறை இருக்கும். 'யார் பூணூல் போட்டிருக்கின்றார்கள், யார் போடவில்லை என்று பார்ப்பதற்கே இந்த மேல் சட்டையை கழட்டும் வழக்கம் வந்தது' என்றார். பெரியாரின் சீடர் ஒருவர்! சும்மா வெறுமனே இருவரும் பேசி விட்டு போக வேண்டியது தான், வெக்கை தெரியாமல் நேரம் போக இந்தப் பேச்சு உதவுமே தவிர ஒரு மாற்றமும் ஏற்படாத, ஏற்படுத்த முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று.
 
காலை பத்து மணிக்கு ஆரம்பித்த பூசை முடியும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு மடத்தில் அன்னதானம். மடத்தில் வயது போனவர்கள் இருப்பதற்கு சில கதிரைகளும், ஒன்றிரன்டு வாங்கில்களும் போட்டிருந்தனர். மற்றவர்கள் நிலத்தில் சம்மணம் போட்டே இருக்கவேண்டும். நிலத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு எழும்பும் போது சிரமமாகவே இருந்தது. போதாக்குறைக்கு அந்த வாரம் கரப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் அடிபட்டு இடது முழங்கால் சில்லில் ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருந்தது. விமானப் பயணம் நல்லதல்ல என்ற மருத்துவர்களின் ஆலோசனையை மீறியே பயணம் போய்க் கொண்டிருந்தது.
 
தினமும் மதியமும், இரவும் இதுவா நிலைமை என்ற நினைப்பு கண்ணைக் கட்டியது.
 
(தொடரும்..........)
 
  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2024 at 13:21, ரசோதரன் said:

😀...

சிலர் அப்படியும் நினைக்கின்றார்கள். ஒரு வீட்டில் கறி அள்ளும் பெரிய கரண்டியையே சீனியை எடுத்து போடுவதற்கும் பயன்படுத்தினர். 'வெள்ளை' நிறமான உணவுப் பொருட்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு எவ்வளவு கெடுதல்களை விளைவிக்கும் என்று நாங்கள் வாசித்த, பார்த்த ஆயிரக்கணக்கான கட்டுரைகள் அங்கே இன்னும் போய்ச் சேரவில்லை..............

நாட்டின் மக்களின் அன்றாட பொருளாதாரத்தையும் நாங்கள் நினைத்துக் கொள்ள வேணுமல்லவா...போற இடமெல்லாம் எங்களுக்கு சுமுகமாகத் தான் எல்லாம் இருக்கும் என்றும் என்று இல்லைத் தானே..அதே நேரம் அவர்கள் நடை முறைப்படுத்த நினைத்தாலும் சந்தர்ப்பம் சூழ் நிலை எப்படியோ தெரியாது தானே.என் மனதுக்கு தோன்றியது.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரசோதரன் said:

மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள். கோவில் வீதியில் கூட மேல் சட்டை அணிய முடியாது. அப்படி மீறி அணிந்திருந்தால், யாராவது வந்து ஏதாவது சொல்லுவார்கள்.

இது இன்னமும் மாறவில்லையா!

ஊரில் இருக்கும்போது ஒரே ஒரு முறை திருவிழா இல்லாத, ஆளரவம் அற்ற நாள் ஒன்றில் சிவனுக்கும் அம்மனுக்கும் பொதுவான வீதியில் சைக்கிளை உருட்டிக்கொண்டு போகும்போது திடீரென்று ஒருத்தர் வந்து சேர்ட்டைக் கழட்டச் சொன்னார்! நான் கோவிலுக்குள் போகவில்லை; வீதியால்தானே போகின்றேன் என்று சொன்னபோது, மிரட்டல் பார்வையுடன் சேர்ட்டைக் கழட்டித்தான் போகவேண்டும் என்றார்! 

சரி ஏன் பிரச்சினை என்று சேர்ட்டைக் கழட்டிவிட்டு, சாரத்துடன் சைக்கிளை உருட்டினேன்.

வீட்டில் இருந்து காற்சட்டையோடு வெளியே போனால் அம்மா தூர இடம் போகின்றான் என்று கண்டுபிடித்துவிடுவார். அதனால் ஊர் உலாத்தப்போகும்போது சாரத்தை எப்பவும் காற்சட்டைக்கு மேலால் போட்டுக்கொண்டு போவதுண்டு! 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரசோதரன் said:

காலை பத்து மணிக்கு ஆரம்பித்த பூசை முடியும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு மடத்தில் அன்னதானம். மடத்தில் வயது போனவர்கள் இருப்பதற்கு சில கதிரைகளும், ஒன்றிரன்டு வாங்கில்களும் போட்டிருந்தனர்

எந்தக் கோவில் என்றாலும் அன்னதானம் பிரமாதமாக இருக்கும்.அங்கு உப்பு புளி உறைப்பு என்று எதுவுமே தெரிவதில்லை.

18 hours ago, ரசோதரன் said:

மடத்தில் வயது போனவர்கள் இருப்பதற்கு சில கதிரைகளும், ஒன்றிரன்டு வாங்கில்களும் போட்டிருந்தனர். மற்றவர்கள் நிலத்தில் சம்மணம் போட்டே இருக்கவேண்டும்

இப்போது கோவில்கள் மடங்களில் வயது போனவர்கள் இருப்பதற்கு கதிரைகள் போட்டிருக்கிறார்கள்.

நானும் சப்பாணி போட்டு உட்கார மாட்டேன்.

ஆனாலும் கதிரையில் ஒருபோதும் இருந்ததில்லை.

40 minutes ago, கிருபன் said:

ஊரில் இருக்கும்போது ஒரே ஒரு முறை திருவிழா இல்லாத, ஆளரவம் அற்ற நாள் ஒன்றில் சிவனுக்கும் அம்மனுக்கும் பொதுவான வீதியில் சைக்கிளை உருட்டிக்கொண்டு போகும்போது திடீரென்று ஒருத்தர் வந்து சேர்ட்டைக் கழட்டச் சொன்னார்! நான் கோவிலுக்குள் போகவில்லை; வீதியால்தானே போகின்றேன் என்று சொன்னபோது, மிரட்டல் பார்வையுடன் சேர்ட்டைக் கழட்டித்தான் போகவேண்டும் என்றார்! 

சைக்கிளை ஓடிக் கொண்டு போனாலும் சேர்டைக் கழட்ட வேண்டுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

நாட்டின் மக்களின் அன்றாட பொருளாதாரத்தையும் நாங்கள் நினைத்துக் கொள்ள வேணுமல்லவா...போற இடமெல்லாம் எங்களுக்கு சுமுகமாகத் தான் எல்லாம் இருக்கும் என்றும் என்று இல்லைத் தானே..அதே நேரம் அவர்கள் நடை முறைப்படுத்த நினைத்தாலும் சந்தர்ப்பம் சூழ் நிலை எப்படியோ தெரியாது தானே.என் மனதுக்கு தோன்றியது.

👍...

நீங்கள் சொல்வது மிகச் சரியே. அவர்களிடம் இருப்பவை மற்றும் ஒரு தொடர் பழக்கமே பல நடைமுறைகளை நிர்ணயிக்கின்றன. பெரிய கரண்டியால் சீனியை அள்ளிப் போடாமல், சிறிய ஒரு கரண்டியால் போடலாம் தானே என்று தான் அங்கேயும் சொன்னேன். அது ஒரு சிரிப்பாகவே முடிந்தது. 

வவுனியாவில் இருக்கும் உடன் பிறந்த தங்கையின் வீட்டில் தான் இது நடந்தது. 'போடா, எல்லாம் படித்துக் கிழித்தவர் சொல்ல வந்திட்டார்....' என்று இலகுவாக என்னை மறுத்து விட்டாள் என் தங்கை........😀. ஆச்சரியமாக அவர்களில் எவருக்கும், எனக்குத் தெரிந்த வரையில், தொடர் சுகயீனங்களோ அல்லது உடல்நலக் குறைகள் ஏதும் இருப்பதாகவோ தெரியவில்லை. 

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இது இன்னமும் மாறவில்லையா!

ஊரில் இருக்கும்போது ஒரே ஒரு முறை திருவிழா இல்லாத, ஆளரவம் அற்ற நாள் ஒன்றில் சிவனுக்கும் அம்மனுக்கும் பொதுவான வீதியில் சைக்கிளை உருட்டிக்கொண்டு போகும்போது திடீரென்று ஒருத்தர் வந்து சேர்ட்டைக் கழட்டச் சொன்னார்! நான் கோவிலுக்குள் போகவில்லை; வீதியால்தானே போகின்றேன் என்று சொன்னபோது, மிரட்டல் பார்வையுடன் சேர்ட்டைக் கழட்டித்தான் போகவேண்டும் என்றார்! 

சரி ஏன் பிரச்சினை என்று சேர்ட்டைக் கழட்டிவிட்டு, சாரத்துடன் சைக்கிளை உருட்டினேன்.

வீட்டில் இருந்து காற்சட்டையோடு வெளியே போனால் அம்மா தூர இடம் போகின்றான் என்று கண்டுபிடித்துவிடுவார். அதனால் ஊர் உலாத்தப்போகும்போது சாரத்தை எப்பவும் காற்சட்டைக்கு மேலால் போட்டுக்கொண்டு போவதுண்டு! 

🤣.....

கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் எதுவுமே மாறாவில்லை என்றே தெரிந்தது. அதே 'மிரட்டல்' பார்வை அன்றிலிருந்து இன்று வரை தொடர்கின்றது. யாரும்  மிரட்டலாம். நான் கூட யாராவது கோவில் வீதியில் மேல் சட்டை போட்டிருந்தால், 'ஆ, சட்டையை கழட்டலாம்...' என்று அந்த அகப்பட்ட மனிதரை மிரட்டலாம்........😀.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சைக்கிளை ஓடிக் கொண்டு போனாலும் சேர்டைக் கழட்ட வேண்டுமா?

கோயில் தேரோடும் வீதியில் சைக்கிள் ஓடக்கூடாது என்று நினைக்கின்றேன். அத்தோடு மணலாக இருந்ததா இல்லையா என்று நினைவில் இல்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எந்தக் கோவில் என்றாலும் அன்னதானம் பிரமாதமாக இருக்கும்.அங்கு உப்பு புளி உறைப்பு என்று எதுவுமே தெரிவதில்லை.

இப்போது கோவில்கள் மடங்களில் வயது போனவர்கள் இருப்பதற்கு கதிரைகள் போட்டிருக்கிறார்கள்.

நானும் சப்பாணி போட்டு உட்கார மாட்டேன்.

ஆனாலும் கதிரையில் ஒருபோதும் இருந்ததில்லை.

சைக்கிளை ஓடிக் கொண்டு போனாலும் சேர்டைக் கழட்ட வேண்டுமா?

அன்னதானம், நீர்ச்சோறு, புளியோதரை, வடை, பொங்கல் என்று மிக அருமையான உணவுகள் தினமும். இரவுத் திருவிழாக்களின் பின்னர் இட்லி, தோசை, இடியப்பம் என்றும் கொடுத்தனர். கோவில் திருவிழாக்களில் புலம் பெயர்ந்தவர்கள் சிலர் கொஞ்சம் 'படம்' காட்டுகின்றார்கள் தான், மறுப்பதற்கு இல்லை, ஆனால் இந்த திருவிழாக்கள் ஊருக்கு பொதுவாக அனுகூலமானவை என்றே நினைக்கின்றேன்.

வல்வெட்டித்துறை - தொண்டமானாறு பிரதான வீதி, 752/763 பஸ் பாதை, கோவிலுடனேயே இருக்கின்றது, அம்மன் கோவிலின் வடக்கு வீதியுடன். பிரதான வீதியில் மேல் சட்டையுடன் சாதாரணமாக போய் வரலாம். ஆனால் பிரதான வீதியை ஒட்டியே இருக்கும் மணலில் கால் வைப்பதற்கு வேறு விதிகள்.....😀   

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரசோதரன் said:

தம்பி, இந்த மேல் சட்டை போடக் கூடாது என்று சொல்வது எல்லாம் அந்த நாட்களில் அவர்கள் செய்த சதி' என்றார். இவர் சொல்லும் அந்த 'அவர்கள்' யாராக இருக்கும் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் இவர் யார் என்று எனக்குத் தெரியாது, நான் யாரென்றும் அவருக்கும் தெரிந்திருக்காது. ஆனாலும், எங்கள் இருவருக்குமிடையில் நிச்சயம் ஒரு தொடர்பு, உறவுமுறை இருக்கும். 'யார் பூணூல் போட்டிருக்கின்றார்கள், யார் போடவில்லை என்று பார்ப்பதற்கே இந்த மேல் சட்டையை கழட்டும் வழக்கம் வந்தது' என்றார். பெரியாரின் சீடர் ஒருவர்! சும்மா வெறுமனே இருவரும் பேசி விட்டு போக வேண்டியது தான், வெக்கை தெரியாமல் நேரம் போக இந்தப் பேச்சு உதவுமே தவிர ஒரு மாற்றமும் ஏற்படாத, ஏற்படுத்த முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று.

இதே கோவிலில் 60 வருடத்துக்கு முன்பு வரை இன்னார்தான் உள்ளே வரலாம் என ஒரு விதி இருந்திருக்கும்.

அதை இப்படித்தான் ஒரு தனிமனிதன் எதிர்த்து கதைத்திருப்பார்.

அதை இன்னொரு தனிமனிதர் “இது வெறும் பேச்சு” என கடந்து போயிருப்பார்.

ஆனால் அந்த விதி உடைக்கப்பட்டது.

இந்த விதியும் உடைக்கப்படும்.

#எறும்பூர கல் தேயும்.

பெரியார் சீடர் ஏன் கோவிலுக்கு வருகிறார்? எனக்கு இவர் ஒரு நம்பிக்கையுள்ள சீர்திருத்தவாதியாகவே தெரிகிறார்.

2 hours ago, கிருபன் said:

சரி ஏன் பிரச்சினை என்று சேர்ட்டைக் கழட்டிவிட்டு, சாரத்துடன் சைக்கிளை உருட்டினேன்.

இது பொது வீதியா? அல்லது கோவில்களுக்கு சொந்தமானதா?

ஒரு பிக்குவை இந்த வீதியால் நடக்க வைத்து, ஊர் மைனர்களின் வீரத்தை சோதிக்க ஆசைப்படுகிறேன்🤣.

22 minutes ago, ரசோதரன் said:

🤣.....

கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் எதுவுமே மாறாவில்லை என்றே தெரிந்தது. அதே 'மிரட்டல்' பார்வை அன்றிலிருந்து இன்று வரை தொடர்கின்றது. யாரும்  மிரட்டலாம். நான் கூட யாராவது கோவில் வீதியில் மேல் சட்டை போட்டிருந்தால், 'ஆ, சட்டையை கழட்டலாம்...' என்று அந்த அகப்பட்ட மனிதரை மிரட்டலாம்........😀.

21 hours ago, ரசோதரன் said:

தினமும் மதியமும், இரவும் இதுவா நிலைமை என்ற நினைப்பு கண்ணைக் கட்டியது.

🤣 உங்களுக்கே கண்ணை கட்டினா… உங்கள் பிள்ளைகளை நினைக்க எனக்கு கண்ணீர் முட்டி கொண்டு வருகுது🤣. கொலிடே எண்டு கூட்டிப்போய் இப்படியா செய்வது🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

👍...

நீங்கள் சொல்வது மிகச் சரியே. அவர்களிடம் இருப்பவை மற்றும் ஒரு தொடர் பழக்கமே பல நடைமுறைகளை நிர்ணயிக்கின்றன. பெரிய கரண்டியால் சீனியை அள்ளிப் போடாமல், சிறிய ஒரு கரண்டியால் போடலாம் தானே என்று தான் அங்கேயும் சொன்னேன். அது ஒரு சிரிப்பாகவே முடிந்தது. 

வவுனியாவில் இருக்கும் உடன் பிறந்த தங்கையின் வீட்டில் தான் இது நடந்தது. 'போடா, எல்லாம் படித்துக் கிழித்தவர் சொல்ல வந்திட்டார்....' என்று இலகுவாக என்னை மறுத்து விட்டாள் என் தங்கை........😀. ஆச்சரியமாக அவர்களில் எவருக்கும், எனக்குத் தெரிந்த வரையில், தொடர் சுகயீனங்களோ அல்லது உடல்நலக் குறைகள் ஏதும் இருப்பதாகவோ தெரியவில்லை. 

50 வயது தாண்டும்போதே சுகர் வருத்தங்கள் வாறது.
விழிப்புணர்வு வரும்போது பலர் நோயாளிகள் ஆகியிருப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, யாயினி said:

நாட்டின் மக்களின் அன்றாட பொருளாதாரத்தையும் நாங்கள் நினைத்துக் கொள்ள வேணுமல்லவா...போற இடமெல்லாம் எங்களுக்கு சுமுகமாகத் தான் எல்லாம் இருக்கும் என்றும் என்று இல்லைத் தானே..அதே நேரம் அவர்கள் நடை முறைப்படுத்த நினைத்தாலும் சந்தர்ப்பம் சூழ் நிலை எப்படியோ தெரியாது தானே.என் மனதுக்கு தோன்றியது.

அன்றாட பொருளாதாரப் பற்றாக்குறை எப்படி மூன்று கரண்டி சீனி போட்டுக் குடிக்க வைக்கிறதெனப் புரியவில்லை😂. உண்மையில், சீனியைக் குறைத்தால் வீட்டுச் செலவு குறையும். சில ஆண்டுகள் கழித்து, நீரிழிவுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துச் செலவும் குறையும். எனவே, வரவு தானேயொழிய செலவு அல்ல!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

இதே கோவிலில் 60 வருடத்துக்கு முன்பு வரை இன்னார்தான் உள்ளே வரலாம் என ஒரு விதி இருந்திருக்கும்.

அதை இப்படித்தான் ஒரு தனிமனிதன் எதிர்த்து கதைத்திருப்பார்.

அதை இன்னொரு தனிமனிதர் “இது வெறும் பேச்சு” என கடந்து போயிருப்பார்.

ஆனால் அந்த விதி உடைக்கப்பட்டது.

இந்த விதியும் உடைக்கப்படும்.

#எறும்பூர கல் தேயும்.

பெரியார் சீடர் ஏன் கோவிலுக்கு வருகிறார்? எனக்கு இவர் ஒரு நம்பிக்கையுள்ள சீர்திருத்தவாதியாகவே தெரிகிறார்.

இது பொது வீதியா? அல்லது கோவில்களுக்கு சொந்தமானதா?

ஒரு பிக்குவை இந்த வீதியால் நடக்க வைத்து, ஊர் மைனர்களின் வீரத்தை சோதிக்க ஆசைப்படுகிறேன்🤣.

🤣 உங்களுக்கே கண்ணை கட்டினா… உங்கள் பிள்ளைகளை நினைக்க எனக்கு கண்ணீர் முட்டி கொண்டு வருகுது🤣. கொலிடே எண்டு கூட்டிப்போய் இப்படியா செய்வது🤣

🤣.........

ஆழமான கருத்துகளை அழுத்தமாக சொல்லியிருக்கிறீர்கள், கோசான்.

ஆலயப் பிரவேசம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சில கேள்விகளை முன் வைக்கின்றது. எவராவது, எப்பவாவது இது பற்றி அங்கே கதைத்திருக்கிறார்களா என்று எனக்கு ஞாபகமில்லை. போராட்ட காலத்தில் நிலைமை வேறு மாதிரி இருந்தது. ஆனால், பெரும்பாலும், அவர்கள் கூட இந்த விடயத்தில் பட்டும் படாமலுமே இருந்தார்கள்.

கேரளாவில் பல கோவில்களில் ஆண்கள் மேலாடை அணிவது இன்றும் தடை செய்யப்பட்டுள்ளது. அதன் காரணம் பூணூலா அல்லது இல்லையா என்று பார்ப்பதற்கு அல்ல என்றே நினைக்கின்றேன்.

கோணேஸ்வரர் கோவிலில் வாசலில் ஒருவர் உட்கார்ந்திருப்பார். அவரின் பேச்சு அவ்வளவு தெளிவாக இருக்காது. காற்சட்டையுடன் போகின்றவர்களுக்கு ஒரு வேட்டியை எடுத்து நீட்டுவார். வேட்டிகள் ஒரு குவியலாக அவர் பக்கத்தில் இருக்கும். அருகிலேயே காற்சட்டையுடன் உள்ளே போகக் கூடாது என்று ஒரு அறிவித்தலும் இருக்கும்.

நயிணை நாகபூசணி அம்மன் கோவிலின் உள்ளே மேல் சட்டையுடன் போகலாமா, இல்லையா என்று தெரியவில்லை. இரண்டையும் அங்கே சொன்னார்கள். சிறிது நேரம் வெளியில் நின்று விட்டு, அங்கேயும் வீதியில் இருந்த ஒரு மரத்தின் கீழ் போய் இருந்து விட்டேன். வெளியில் மிக நல்லாகவே இருந்தது நல்ல காற்றோட்டத்துடன்

தலதா மாளிகையில் அவசரமாக புது உடுப்பே வாங்க வேண்டியதாகப் போய் விட்டது. விபரமாக அதை பின்னர் எழுதுகின்றேன்.

கோவில் வீதிகள் கோவில்களுக்கே சொந்தமானவை. ஆனாலும் இவ்வளவு கெடுபிடி தேவையில்லை என்பது என் அபிப்பிராயமும்.

நானும், பிள்ளைகளும் தினமும் திருவிழாவிற்கு போகவில்லை. அது சாத்தியம் இல்லை என்று முக்கியமானவர் அடுத்த நாளே புரிந்து கொண்டார்.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

இதே கோவிலில் 60 வருடத்துக்கு முன்பு வரை இன்னார்தான் உள்ளே வரலாம் என ஒரு விதி இருந்திருக்கும்.

அதை இப்படித்தான் ஒரு தனிமனிதன் எதிர்த்து கதைத்திருப்பார்.

அதை இன்னொரு தனிமனிதர் “இது வெறும் பேச்சு” என கடந்து போயிருப்பார்.

ஆனால் அந்த விதி உடைக்கப்பட்டது.

இந்த விதியும் உடைக்கப்படும்.

#எறும்பூர கல் தேயும்.

வெயிற்..வெயிற்..அங்கால முக்காடு போடச் சொல்லி வற்புறுத்தும் முஸ்லிம் ஆட்களை தட்டிக் கேட்காமல், எப்படி நீங்கள் இதை மட்டும் சுட்டிக் காட்டலாம்? இளகின இரும்பு என்பதாலா😎?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

வெயிற்..வெயிற்..அங்கால முக்காடு போடச் சொல்லி வற்புறுத்தும் முஸ்லிம் ஆட்களை தட்டிக் கேட்காமல், எப்படி நீங்கள் இதை மட்டும் சுட்டிக் காட்டலாம்? இளகின இரும்பு என்பதாலா😎?

🤣.........

தேவாலயங்களைத் (வேதக் கோவில்கள்) தவிர மற்ற எல்லா இடங்களிலும் ஏதோ ஒன்றாவது சொன்னார்கள். ஆனால் எவரையும், எதையும் நேருக்கு நேர் தட்டிக் கேட்க முடியுமா என்று தெரியவில்லை. சுத்தமாக அந்த துணிவு எனக்கில்லை, பலருக்கும் இருக்காது.......  

42 minutes ago, ஏராளன் said:

50 வயது தாண்டும்போதே சுகர் வருத்தங்கள் வாறது.
விழிப்புணர்வு வரும்போது பலர் நோயாளிகள் ஆகியிருப்பர்.

👍....

சொல்லிப் பார்த்தேன், கேட்பது போல தெரியவில்லை.......... மிகுதியை கடைசியில் நோர்தேர்ண் ஹாஸ்பிட்டலில் வைத்துத் தான் சொல்ல வேண்டும் போல......🤣.

அந்த தனியார் மருத்துவமனையை பற்றி எழுதுவதற்கும் சில விடயங்கள் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

தலதா மாளிகையில் அவசரமாக புது உடுப்பே வாங்க வேண்டியதாகப் போய் விட்டது. விபரமாக அதை பின்னர் எழுதுகின்றேன்.

🤣 அவனுகள், இவனுகள கொண்டே மூலைல வைப்பானுவளே🤣. புத்தருக்கு பின்பக்கம் காட்டி படம் எடுத்தாலே நாடு கடத்துவாங்கள்🤣

2 hours ago, ரசோதரன் said:

நானும், பிள்ளைகளும் தினமும் திருவிழாவிற்கு போகவில்லை. அது சாத்தியம் இல்லை என்று முக்கியமானவர் அடுத்த நாளே புரிந்து கொண்டார்.....🤣

🤣

1 hour ago, ரசோதரன் said:

மிகுதியை கடைசியில் நோர்தேர்ண் ஹாஸ்பிட்டலில் வைத்துத் தான் சொல்ல வேண்டும் போல......🤣.

🤣

1 hour ago, ரசோதரன் said:

அந்த தனியார் மருத்துவமனையை பற்றி எழுதுவதற்கும் சில விடயங்கள் இருக்கின்றன.

ஆவலோடு காத்திருக்கிறோம்.

(நல்லா சஸ்பென்ஸ் வச்சி மர்ம நாவல் போலவே எழுதுறீங்க🤣).

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2024 at 18:21, ரசோதரன் said:

ஒரே ஒரு இடத்தில் நிற்பாட்டி இலங்கையில் எங்கும் எல்லோரும் அருந்தும் நெஸ்கஃபே ஒன்று குடித்தோம். யாராவது கடையில் நல்ல ஒரு தேநீர் போட்டுக் கொடுக்க மாட்டார்களா என்று ஏக்கமாக இருந்தது. பின்னர் முறிகண்டியில் ஒரு சின்ன வழமையான தரிப்பு. அங்கும் கடையில் நெஸ்கஃபே இயந்திரமே. ஆனையிறவில் இராணுவ வீரர் ஒருஅர் வலுக் கட்டாயமாக வாகனத்தை நிறுத்தினார். இங்கு வேகத்தை குறைக்க வேண்டும், நீ ஏன் குறைக்கவில்லை என்று ஓட்டுநருடன் முறைத்தார். பணம் எதுவும் இருவருக்குமிடையில் கை மாற்றப்படவில்லை. அதை தாண்டியவுடன், 'இவங்களுக்கு வேற வேலை' என்று ஓட்டுநர் சொன்னார். எனக்கு அந்த இராணுவ வீரர் செய்தது சரி என்றே பட்டது.

அதிசயம் அற்புதம் அந்த ராணுவ வீரர் இளம் வீரர் ஆக இருப்பார் ஆனேகமாக என்று நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2024 at 20:19, ஈழப்பிரியன் said:

பழைய இலக்கத் தகடுகள் உள்ள வான்களில் சீற்பெல்ற் போடத் தேவையில்லை.

அனேகமானதில் வேலையும் செய்யாது.

அதுகள் 3௦ மைலுக்கு மேல் டான்ஸ் ஆடாது என்ற நம்பிக்கையில் அரசு அறிவித்து இருக்கும் 😀

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலுக்குள் மேற்சட்டையுடன் போக விட மாட்டார்கள். எனினும் விஹாரைக்கு வரும் ஆமிக்காரர் யூனிபோமுடன் உட் செல்வார்கள். ஐயரும் அவர்களுக்கு வரிசையை விலக்கி முன்னுரிமை அளிப்பதைக் கவனித்தேன். ஆனால் சப்பாத்து அணியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2024 at 14:07, கிருபன் said:

ஊரில் இருக்கும்போது ஒரே ஒரு முறை திருவிழா இல்லாத, ஆளரவம் அற்ற நாள் ஒன்றில் சிவனுக்கும் அம்மனுக்கும் பொதுவான வீதியில் சைக்கிளை உருட்டிக்கொண்டு போகும்போது திடீரென்று ஒருத்தர் வந்து சேர்ட்டைக் கழட்டச் சொன்னார்! நான் கோவிலுக்குள் போகவில்லை; வீதியால்தானே போகின்றேன் என்று சொன்னபோது, மிரட்டல் பார்வையுடன் சேர்ட்டைக் கழட்டித்தான் போகவேண்டும் என்றார்! 

ஏமாற்றம் இலங்கையின் கறுப்பு பக்கம் ☹️
நான் நினைத்தேன் கடவுள் மேல் உள்ள பக்தி காரணமாக ஆண்கள் கோவிலில் ஆபாசமாக மேலே ஆடை இல்லாமல் நிற்கின்றனர், தமிழ் அரசியல்வதிகள் மற்றும் ரணில்  வாக்குகள் பெற்று கொள்வதற்காக அப்படி செய்கின்றனர்.சைக்கிளை உருட்டிக்கொண்டு கோவில் பாதையால் போன கிருபன் அய்யாவை சேட்டை கழட்ட சொன்னது பலியல் துன்புறுத்தல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
படம் இல்லாத இலங்கைப் பயணம் - நான்கு
-------------------------------------------------------------------
ஊருக்கு பயணம் போனால் ஊரில் சிலரை போய் பார்ப்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம். அவர்கள் வயதான நெருங்கிய சொந்தமாகவோ, அல்லது ஆசிரியர் போன்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் காட்டும் அன்பும், வாஞ்சையும் உண்மையானது, அதை உணரக் கூடியதாகவே இருக்கும். பலர் எங்களை இன்னும் சிறுவர்களாகவே நினைத்தும் கதைப்பார்கள். எங்களின் கதைகளை கேட்பதை விட, அவர்களின் கதைகளை சொல்வதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். மீண்டும் சந்திக்கும் அடுத்த முறை என்று ஒன்று இருக்குமா அல்லது இல்லையா என்று தெரியாததால், அவர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சிலவற்றை சொன்னாலும், அது ஒரு பெரிய அசௌகரியத்தை உண்டாக்குவதில்லை. மாறாக, பார்த்து விட்டு கிளம்பும் போது, மனம் கொஞ்சம் கனக்கும்.
 
முதல் போன இடத்திலேயே, 'நீ இந்த தலைமயிரை முதலில் வெட்டு. இது என்ன கோலம். முக்கால்வாசி வெள்ளையாக வேற இருக்குது...' என்றார் நான் பார்க்கப் போனவர். 'சரி, வெட்டிறன்...' என்று தலையை நன்றாகவே ஆட்டினேன். சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் இருந்தே இந்த 'நீட்டுத் தலைமயிர்' பிரச்சனை தொடருகின்றது. பள்ளிக்கூடத்தில் இன்றைக்கு யாருக்கு எதுக்கு அடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்ற சில ஆசிரியர்கள், ஏன் தலைமயிரை வெட்டவில்லை என்று அதில் பிடித்து இழுத்தே அடிப்பார்கள். பின்னர் வீட்டில், பின்னர் ஊரில் என்று தடைகள் வந்து கொண்டேயிருந்தது. இன்று எல்லாமே கொட்டி விட, மிச்சமாக இருக்கிற நாலு முடியை நீட்டாக வளர்க்க நினைத்தாலும், அதுவும் முடியாது போல.
 
ஒரு புதிதாகக் கட்டப்பட்ட சிறிய வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அவரின் துணை சில மாதங்களின் முன் இறந்து போயிருந்தார். இங்கு ஊரில் புதிதாக கட்டப்படும் வீடுகள் மூன்று வகைகளில் இருக்கின்றன. முதலாவது மிகவும் அடக்கமான சிறிய வீடுகள். வீட்டின் முன்பக்கம் திறந்த ஒரு விறாந்தை. அங்கு இருக்கும் கதவை திறந்தால், உள்ளே ஒரு சிறிய மண்டபமும் இரண்டு அறைகளும். அதன் பின்னால் ஒரு சிறிய மண்டபம்/நடை, அதன் பின்னால் ஒரு சமையலறை. உள்ளிருக்கும் மண்டபத்தின் முடிவில் ஒரு குளியலறையும் கட்டப்பட்டிருக்கும். மிகவும் சிறிய ஒரு காணித் துண்டுக்குள்ளேயே, அரை பரப்பு அளவுள்ளது, இந்த மாதிரி வீட்டை பலரும் கட்டியிருக்கின்றனர். ஊருக்குள் காணிகள் என்றும் பெரிதாக இருந்ததில்லை. மிகவும் நெருக்கமாக அமைந்த வீடுகள். ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பவர்கள் இந்த மாதிரி புது வீட்டைக் கட்டிக் கொள்கின்றனர். கடைசிக் காலத்தில் ஊரில் வந்து இருக்கப் போவதாக சில புலம் பெயர்ந்தவர்களும் இதே போன்ற அடக்கமான வீடுகளை கட்டியிருக்கின்றனர்.
 
அடுத்த வகை புது வீடுகள் மிகப் பெரியவை, ஆடம்பரமானவை. அமெரிக்க பாணியில் அமைந்த வீடுகள். கனடா, அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற வீடுகள் பின்னர் அமெரிக்காவைத் தொடர்ந்து கட்டப்பட்டன. இப்பொழுது இவை ஊரில் கட்டப்படுகின்றன. இரண்டு அல்லது மூன்று மாடிகளும் உண்டு. ஊருக்கு கொஞ்சம் வெளியே அயல் கிராமங்களில் ஓரளவு பெரிய காணியை வாங்கி இந்த மாதிரியான வீடுகளை கட்டிக் கொள்கின்றனர். ஊருக்குள்ளே என்றால் சிறிய இடத்தில் மேலே மேலே அடுக்கடுக்காக கட்டிக் கொள்கின்றனர். சில வீடுகளில் பல நிறங்களில் விட்டு விட்டு எரியும் மின் விளக்குகள் உள்ளேயும், வெளியேயும் பளிச்சிடுகின்றன. சில கோடிகளில் மொத்த செலவை சொல்கின்றனர். இந்த வகை வீடுகளுக்குள் போய் வரும் போது, ஒரு இலட்சியத்தின் முடிவு இந்த வீடுகளோ என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிலர் வெளிநாட்டில் இருந்து வீட்டை கட்டி விட்டு, வருடம் முழுவதும் வீடுகளைப் பூட்டியே வைத்துள்ளனர். சிசிடிவியின் துணையுடன் வீட்டைப் பார்த்துக் கொள்கின்றனர்.
 
சில வருடங்களின் முன் மிக அதிகமாக இருந்த திருட்டுப் பயம் இப்பொழுது பெருமளவு குறைந்து விட்டது. பல வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியே அதற்குக் காரணம். ஒரு வீட்டில் இருக்கும் சிசிடிவி சுற்றிவர இருக்கும் பல வீட்டை காவல் காக்கின்றது. ஆனால் இந்த சிசிடிவியால் தேவையில்லாத சில புதுப் பிரச்சனைகளும் உண்டாகியிருக்கின்றது. உங்கள் வீட்டு சிசிடிவி பதிவுகளை பார்க்க வேண்டும் என்று சிஐடி மற்றும் போலீசார் சில வீடுகளுக்கு வந்து, துப்பு துலக்கிய நிகழ்வுகளும் உண்டு. அப்படி சிஐடி பதிவுகளைத் துப்புத் துலக்கி ஒரு பெரிய கேரளா கஞ்சா கடத்தலை பிடித்ததாக ஒரு கதையையும் சொன்னார்கள்.
 
மூன்றாவது வகை புது வீடுகள் அரசாங்கத்தின் வீடு கட்டும் திட்ட உதவியுடன் கட்டப்படுவன. இந்த திட்டம் மிக நன்றாக செயற்படுகின்றது போன்று தெரிகின்றது. ஒரு வீட்டைக் கட்ட அரசாங்கத்தால் பத்து இலட்ச ரூபாய்கள் ஒரு குடும்பத்திற்கு பகுதி பகுதியாக வழங்கப்படுகின்றது. இரண்டு அறைகள், ஒரு மண்டபம், சமையலறை கொண்ட ஒரே மாதிரியான வீடுகள். பலர் வீட்டைக் கட்டும் போதே, பின்னர் அதை நீட்டி பெரிதாக்க்கும் திட்டத்துடன் கட்டி, பெரிதாக்கியும் உள்ளனர். சில கட்டுப்பாடுகள் இருப்பதாகச் சொன்னார்கள், உதாரணம்: கூரை ஓட்டுக் கூரையாக இருக்க வேண்டும், அஸ்பெஸ்டாஸ் சீட் பாவிக்கக் கூடாது.
 
'தனிய இருக்க இரவில் பயமாக இருக்குது...' என்றார். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவர் லண்டன் போய் பிள்ளைகளுடன் சில வருடங்கள் இருந்து விட்டு, அங்கு இருக்க முடியாது, இருக்க விருப்பம் இல்லை என்று திரும்பி ஊர் வந்தவர். இப்பொழுது பிள்ளைகள் வந்து கூட்டிக் கொண்டு போகப் போகின்றனர் என்றார். வேறு வழி ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை.
 
பொதுவாக, ஒரு துணை போய் விட, தனியாக இருப்பவர்கள் தனிமையில் ஒரு துயரத்துடனும் பயத்துடனும் இருக்கின்றனர் போன்றும், இருவராக இருப்பவர்கள் சாதாரணமாக இருப்பது போன்றும் தோன்றியது.
 
இதே போன்ற இன்னொருவரிடம் போயிருந்த பொழுது, அவருக்கு நோர்தேர்ன் தனியார் மருத்துவமனை மீது இருந்த ஆதங்கம் முழுவதையும் சொன்னார். அவரின் துணைக்கு உடம்புக்கு மிகவும் முடியாமல் போக, யாழ் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு ஆரம்பத்தில் இருந்தே, வாசல் காவலாளிகள் உடபட, எவரும் தன்மையுடன் நடக்கவில்லை என்றார். மூன்று நாட்களின் பின்னர் நீங்கள் நோர்தேர்ண் போங்கள் என்று யாழ் பெரியாஸ்பத்திரியிலிருந்து இவர்களை நோர்தேணிற்கு அனுப்பியிருக்கின்றனர். 
 
நோர்தேர்ணில் 'பாசத்தை பணமாக்கினார்கள்' என்பது அவர் எனக்கு சொன்ன அதே வார்த்தைகள். 15 நாட்கள் மேல் அங்கிருந்த அவரின் துணை, அதற்கு மேல் அவர்களின் நிதி நிலைமையால் முடியாதென்று வீடு வந்து, இரண்டோ மூன்று நாட்களில் இறந்து போனார். பல இலட்சங்கள் ஒரு பயனும் இல்லாமல் செலவழிந்தது என்றும் சொன்னார். ஆனால் ஒரு தடவை கூட ஒரு வைத்தியரும் தன்னை சந்திக்கவில்லை என்றார். அவர் தினமும் அங்கே இருந்திருக்கின்றார். ஆனால் தினமும் மாலையில் வரும் கணக்குச் சீட்டில், வைத்தியர் வந்து பார்த்ததிற்கான கட்டணம் இருந்தது என்றார்.
 
பின்னர் இலங்கையில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒரு வைத்தியர் ஒருவருடன், அவர் அங்கு நோர்தேணில் வேலை செய்வதில்லை, இப்படியான நிலைமைகள் குறித்து பொதுவாகக் கதைத்தேன்.
 
(தொடரும்........)

இதே கதை சண்டை தொடன்கியபின்னும் 2௦௦7லும் இருந்தது கொழும்பில் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.