Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன்

spacer.png

 

ராஜதந்திரி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்டார் “உங்களுடைய கட்டுரைகளை உள்நாட்டில் வாசிப்பவர்களை விடவும் புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் அதிகமாக வாசிக்கிறார்களா” என்று.

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான வாதப்பிரதிவாதங்களைப் பார்க்கும் பொழுது உள்ளூரில் கட்டுரைகளை வாசிப்பவர்கள் குறைவு என்றுதான் கருத வேண்டியுள்ளது. வேட்பாளரை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் கூறும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் அவர்களிற் பலர் அது தொடர்பாக இதுவரையிலும் வந்திருக்கக்கூடிய கட்டுரைகளை காணொளிகளை வாசிக்கவில்லையா? கேட்கவில்லையா? என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஈழத் தமிழர்கள் மத்தியில் ஒரு விடயத்தைக் குறித்த ஆழமான வாசிப்போ விளக்கமோ இன்றிக் கருத்து கூறுபவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. இந்த விடயத்தில் அரசியல் ஆர்வமுடைய வாக்காளர்கள் மட்டுமல்ல, பத்திரிகை ஆசிரியர்கள், புலமையாளர்கள், காணொளி ஊடகங்களில் கேள்வி கேட்பவர்கள், யுடியூப்பார்கள்… என்று அனைவரும் அடங்குவர். இவர்கள் பொது வேட்பாளர் என்ற ஒரு தெரிவை  விளங்காமல் எழுதுகிறார்களா அல்லது எல்லாவற்றையும் நன்கு  விளங்கிக்கொண்டும் ஏதோ ஒரூ சூதான அரசியல் உள்நோக்கத்தோடு,யாருக்கோ தங்களுடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்காக எழுதுகிறார்களா?

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தமிழ் அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் மிகத் தெளிவாக வகிடு பிரித்துக் காட்டுகிறது. அரசியல்வாதிகள்,ஊடகங்கள், யுடியுப்கள் போன்றவை யாருக்கு விசுவாசமாக இருக்கின்றன என்பதனை அது தெளிவாகக் காட்டுகின்றது. தமிழ்ப்  பொது வேட்பாளரை எதிர்க்கின்ற பலரும் எங்கேயோ ஒரு விசுவாசப் புள்ளியில் சந்திக்கிறார்கள். அவர்கள் வெளித்தோற்றத்துக்கு ஆளுக்காள் தொடர்பற்ற உதிரிகளாகத் தோன்றலாம். ஆனால் அவர்களில் பலர் ஏதோ ஒரு தரப்புக்கு விசுவாசமானவர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இதில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலரும் அடங்குவர். பொது வேட்பாளரை எதிர்க்கும் பொழுது அவர்கள் காட்டும் வன்மம்,வெறுப்பு,பயன்படுத்தும் வார்த்தைகள் போன்றன அவர்கள் எந்தளவுக்கு தமிழ்ப் பொது வேட்பாளரைக் கண்டு பதட்டமடைகிறார்கள் என்பதைக் காட்டுகின்றது.

தமிழ்ப்  பொது வேட்பாளரை முன்னுறுத்தி எழுதுபவர்கள் மிகத் தெளிவாக கூறுகிறார்கள், ஜனாதிபதித் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மறைமுக வாக்கெடுப்பை நடத்துவது, அதில் தமிழ்  மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒரு பொது நிலைப்பாட்டுக்குள் கொண்டு வருவது, அதாவது தமிழ்த் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவது; தமிழ் மக்களை ஒரு தேசமாகக்  கட்டியெழுப்புவது.

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் வளர்ச்சியை விடவும் தேய்மானமே அதிகம். பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் தோன்றியுள்ளன. கட்சிகள் உடைந்து கொண்டே போகின்றன. மக்கள் அமைப்புகள் தோன்றிப் பின் சோர்ந்து விடுகின்றன. தமிழ் மக்களை வடக்கு கிழக்காய் சமயமாய் சாதியாய் இன்னபிறவாய் சிதறடிக்க விரும்பும் சக்திகள் தமிழ் மக்களாலேயே தெரிந்தெடுக்கப்படுகின்றன.

2009க்கு பின்னிருந்து தமிழ் கூட்டு மனோநிலை என்பது கொந்தளிப்பானதாக காணப்படுகிறது. யாரையும் நம்ப முடியாத சந்தேகப் பிராணிகளாக தமிழ் மக்கள் மாறிவருகிறார்கள். எல்லாவற்றுக்கு பின்னாலும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் தேடும் ஒரு மக்கள் கூட்டமாக மாறி வருகிறார்கள். அதாவது தமிழ் மக்களைப் பிரித்துக்கையாளும்  சக்திகளுக்கு உள்ளூர் முகவர்கள் அதிகரித்து வருவதாக ஒரு கூட்டுப் பயம்; ஒரு கூட்டுச் சந்தேகம்; ஒரு விதத்தில் ஒரு கூட்டு நோய் அதிகரித்து வருகிறது.

இது ஒரு கூட்டுத் தோல்வி மனப்பான்மையின் விளைவு. தோல்வி மனப் பான்மையிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பது என்றால் ஒருவர் மற்றவரை நம்பும்; ஒருவர் மற்றவருக்குத் தோள்கொடுக்கும் கூட்டுப் பலத்தில் நம்பிக்கை  வைக்கும் ஓர்  அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதற்கான கடந்த 15ஆண்டுகாலப் பரிசோதனைகளில் இருந்து கற்றுக்கொண்டு, சிவில் சமூகமும் அரசியல் சமூகமும் இணைந்த ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சிந்திப்பது குற்றமா? தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவது குற்றமா? தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது குற்றமா? அப்படியென்றால் எமது பள்ளிக்கூடங்களில்,பாலர் வகுப்பில் “ஒற்றுமையே பலம்”; “ஒன்று திரண்டால் உண்டு வாழ்வு”;“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்று படித்ததெல்லாம் பொய்யா?

தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் சிவில் சமூகங்கள் தமிழ் மக்களை ஐக்கியப்படுத்த வேண்டும் என்றுதானே கேட்கின்றன? தமிழ்மக்களை யாரிடமாவது சரணடையச் சொல்லி கேட்கின்றனவா? தமிழ்மக்களை யாருக்காவது விலை கூறி விற்க முற்படுகின்றனவா?  இல்லையே? கடந்த 15 ஆண்டுகளாக வெற்றுக் காசோலைகளாக யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு கொடுக்கப்பட்ட வாக்குகளை, தமிழ் மக்களின் பேரபலத்தை உயர்த்தும் வாக்குகளாக மாற்றுவது தவறா? ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்து உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்பு எதிர்காலத்தில் தமிழ் அரசியலில் நிர்ணயகரமான ஒரு  கட்டமைப்பாக கூர்ப்படைய வேண்டும் என்று கூடி உழைப்பது குற்றமா?

 

articles_oqF2dgHWywdy2xvr1yHd-1c.jpg
438118590_1637440950399539_2087891460431

 

தமிழ்ப் பொது வேட்பாளர் தோற்றால் எல்லாமே தோற்றுவிடும், அது தமிழ் மக்களைப் புதை குழிக்குள் தள்ளிவிடும்… என்றெல்லாம் எழுதுகிறார்கள். அப்படியென்றால் தமிழ் மக்கள் இப்பொழுது மட்டும் என்ன வெற்றிப் பாதையிலா சென்று கொண்டிருக்கிறார்கள் ?  இல்லையே? கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மிகப்பெரிய திருப்பகரமான வெற்றி எதையுமே பெற்றிருக்கவில்லை. இந்த லட்சணத்தில் தமிழ் மக்கள் இனிமேல்தான் தோற்க வேண்டும் என்று இல்லை. கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியல் எனப்படுவது வெற்றியின் அரசியல் அல்ல. சிறிய தேர்தல் வெற்றிகள்,சில குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மக்கள் எழுச்சிகள் என்பவற்றிற்கும் அப்பால் தொடர்ச்சியான வெற்றிகள் அல்ல. அதாவது தமிழ் அரசியலை ஒரு புதிய கட்டத்திற்கு திருப்பக்கூடிய வெற்றிகள் அல்ல. எனவே தோல்வியைக் காட்டி பயமுறுத்தும் அரசியல்வாதிகள் தாங்கள் ஏற்கனவே தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை மறைக்கிறார்களா ?

கடந்த 15 ஆண்டுகாலம் தமிழ் மக்களுக்கு திருப்பகரமான வெற்றி எதையும் பெற்றுத்தரவில்லை. எனினும்   காலம் ஒரு அரிதட்டு.அது பலரைத் தோலுரித்துக் காட்டிவிட்டது. பலரை அந்த அரிதட்டு சலித்துக் கழித்து விட்டிருக்கிறது. இப்பொழுது பொது வேட்பாளர் என்ற விடயமும் பலர் எங்கே நிற்கிறார்கள்? யாருக்கு விசுவாசமாக நிற்கிறார்கள்?யாரை சந்தோஷப்படுத்த எழுதுகிறார்கள்? போன்ற எல்லாவற்றையுமே தெளிவாக வெளியே கொண்டு வந்திருக்கிறது.

பொது வேட்பாளர் தோற்கக்கூடாது. உண்மைதான். தோற்கக் கூடாது. அவ்வாறு தோற்கக் கூடாது என்று சொன்னால் அதற்காக தமிழ் மக்கள் கூட்டாக உழைக்க வேண்டும். அதற்குத்தான் ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. அரசியல் சமூகமும் சிவில் சமூகமும் இணைந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கும் பொழுது, இரண்டு தரப்பும் ஒன்றை மற்றொன்று பலப்படுத்தி அந்த முயற்சியை முன்னெடுக்கலாம், அதேசமயம் தேர்தல் அரசியல் எனப்படுவது வெற்றியும் தோல்வியும் கலந்ததுதான்.

கடந்த 15 ஆண்டுகால தோல்விகரமான அரசியல் பாதையில் இருந்து தமிழ் அரசியலை திருப்பகரமான விதத்தில் தடம் மாற்ற ஒரு பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. அதில் தோற்கலாம் வெல்லலாம். ஆனால் அது பரிசோதனை. இப்போதிருக்கும் தோல்விகரமான பாதையில் இருந்து தமிழரசியலை திசை மாற்ற முயற்சிக்கும் ஒரு பரிசோதனை. எனவே தோல்வியைக் குறித்து அச்சப்படுவோர் அல்லது தோல்வியை காட்டிப்  பயமுறுத்துவோர்,தாங்கள் ரகசியமாக “டீல்” செய்ய முயற்சிக்கும்  அரசியல்வாதியின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா? அல்லது தமிழ் மக்களின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா?

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெல்லப் போவதில்லை. அவர் ஜனாதிபதியாக வரப்போவதும் இல்லை. ஆனால் அவர் தென்னிலங்கை வேட்பாளர்களின் வெற்றிகளைக் கேள்விக்கு உள்ளாக்குவார். அதைவிட முக்கியமாக,தமிழ்ப் பொது நிலைப்பாடு ஒன்றை நோக்கி தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவார். அவர் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட ஒரு வேட்பாளர்தான். இலங்கை முழுவதற்குமான தமிழ் வேட்பாளர் அல்ல.

தமிழரசியல்  கடந்த 15 ஆண்டுகளாக பிமுகர் மைய அரசியலாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் யார் அந்தப் பிரமுகர்,பொது வேட்பாளராக களமிறங்க போவது ? என்ற கேள்வி எழுகிறது. கட்டாயமாக அவர் ஒரு பிரமுகராக இருக்கத் தேவையில்லை. தேர்தலில் தனக்கு கிடைக்கும் பிரபல்யத்தை அடுத்தடுத்த  தேர்தல்களுக்கு முதலீடு செய்யும் ஓர் அரசியல் விலங்காக அவர் இருக்கக் கூடாது. அவரும் அவர் பயன்படுத்திய பொது சின்னமும் எதிர்கால தேர்தல்களில் பயன்படுத்தப்படக் கூடாது என்ற ஒரு உடன்படிக்கைக்கு  அவர்  கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும்.

பொது வேட்பாளராக ஒரு பிரமுகரைத் தேடும் அனைவரும் ஏன் மற்றொரு அன்னை பூபதியை உருவாக்குவது என்று சிந்திக்கக்கூடாது? அன்னை பூபதி உண்ணாவிரதம் இருக்கும் வரையிலும் அவரை யாரென்று அநேகருக்குத் தெரியாது. ஆனால் 30 நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்ததன் மூலம் நவீன தமிழ் வரலாற்றில் அழிக்க்கப்பட முடியாத இடத்தைப் பெற்றார். அவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் எல்லாருமாகச் சேர்ந்து மற்றொரு அன்னை பூபதியைக் கட்டியெழுப்ப முடியாதா? அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை. யாரும் உயிர் துறக்கத் தேவையில்லை. உயிரைக் கொடுத்தது போதும். தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட  ஒரு வேட்பாளர் வேண்டும்,

தமிழ் அரசியலை கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்த ஒரு பொதுகட்டமைப்பானது எதிர்காலத்தில்  கூர்ப்படையத் தேவையான ஒரு பொதுத்தளத்தை அவர் பலப்படுத்துவார். அதற்கு ஜனாதிபதித் தேர்தல் ஒரு களமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதுதான் இங்கு முக்கியம். தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேசிய ஐக்கியத்தைப் பலப்படுத்தும் ஒரு பரிசோதனை. அதில் எத்தனை முறை தோற்றாலும் அதைவிட வேறுவழி தமிழ் மக்களுக்கு உண்டா? ஏனென்றால் ஐக்கியப்படாவிட்டால் தமிழ் மக்களுக்கு அடுத்த கட்டமே இல்லை. அடுத்தகிழமை பதினைந்தாவது மே 18 வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாகத் தேங்கிப் போயிருக்கும் தமிழ் அரசியலை ; கடந்த 15 ஆண்டுகளாகத் தேய்ந்து கொண்டு போகும் கட்சி அரசியலை; கட்சிக்காரர்களிடமிருந்தே கட்சிகளைக் காப்பாற்றவேண்டிய ஒரு காலகட்டத்தில்; வடக்காய் கிழக்காய் சாதியாய் சமயமாய் இன்னபிறவாய் சிதறிக்  கொண்டே போகும் ஒரு  சிறிய மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாகத் திரட்டுவதைவிட உன்னதமான ஒரு நினைவு கூர்தல் உண்டா?

 

https://www.nillanthan.com/6754/

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தமிழ்ப்  பொது வேட்பாளரை முன்னுறுத்தி எழுதுபவர்கள் மிகத் தெளிவாக கூறுகிறார்கள், ஜனாதிபதித் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மறைமுக வாக்கெடுப்பை நடத்துவது, அதில் தமிழ்  மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒரு பொது நிலைப்பாட்டுக்குள் கொண்டு வருவது, அதாவது தமிழ்த் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவது; தமிழ் மக்களை ஒரு தேசமாகக்  கட்டியெழுப்புவது.

இதை ஏற்க எம்மில் பலருக்கு விருப்பமில்லை. கட்சிபேத அரசியலைத் தொடர்ச்சியாகச் செய்து, அக்கட்சி கைகாட்டும் சிங்கள பெளத்தன் ஒருவனுக்கு வாக்குப் போடவேண்டும் என்று கேட்கிறார்கள். கேட்டால் தமிழ் மக்களை இன்னும் அதளபாதாளத்திற்குள் தமிழ் வேட்பாளர் விழுத்திவிடுவாராம். ஆகவே மரியாதையாக ரணிலுக்கே தமிழகள் தமது வாக்குகளை மறவாது போடவேண்டுமாம். 

2 hours ago, கிருபன் said:

தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் சிவில் சமூகங்கள் தமிழ் மக்களை ஐக்கியப்படுத்த வேண்டும் என்றுதானே கேட்கின்றன? தமிழ்மக்களை யாரிடமாவது சரணடையச் சொல்லி கேட்கின்றனவா? தமிழ்மக்களை யாருக்காவது விலை கூறி விற்க முற்படுகின்றனவா?  இல்லையே? கடந்த 15 ஆண்டுகளாக வெற்றுக் காசோலைகளாக யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு கொடுக்கப்பட்ட வாக்குகளை, தமிழ் மக்களின் பேரபலத்தை உயர்த்தும் வாக்குகளாக மாற்றுவது தவறா? ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்து உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்பு எதிர்காலத்தில் தமிழ் அரசியலில் நிர்ணயகரமான ஒரு  கட்டமைப்பாக கூர்ப்படைய வேண்டும் என்று கூடி உழைப்பது குற்றமா?

அருமை!

2 hours ago, கிருபன் said:

எனவே தோல்வியைக் குறித்து அச்சப்படுவோர் அல்லது தோல்வியை காட்டிப்  பயமுறுத்துவோர்,தாங்கள் ரகசியமாக “டீல்” செய்ய முயற்சிக்கும்  அரசியல்வாதியின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா? அல்லது தமிழ் மக்களின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா?

இதுதான் உண்மை. தமது இருப்பையும், தாம் வாக்குகளை வாங்கிக் கொடுக்கவிருக்கும் சிங்கள பெளத்தன் ஒருவனது வெற்றியையும் நினைத்தே இவர்கள் கவலைப்படுகிறார்கள். 

2 hours ago, கிருபன் said:

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெல்லப் போவதில்லை. அவர் ஜனாதிபதியாக வரப்போவதும் இல்லை. ஆனால் அவர் தென்னிலங்கை வேட்பாளர்களின் வெற்றிகளைக் கேள்விக்கு உள்ளாக்குவார். அதைவிட முக்கியமாக,தமிழ்ப் பொது நிலைப்பாடு ஒன்றை நோக்கி தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவார். அவர் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட ஒரு வேட்பாளர்தான். இலங்கை முழுவதற்குமான தமிழ் வேட்பாளர் அல்ல.

இதுவும் ஒரு கோணம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தமிழரசியல்  கடந்த 15 ஆண்டுகளாக பிமுகர் மைய அரசியலாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் யார் அந்தப் பிரமுகர்,பொது வேட்பாளராக களமிறங்க போவது ? என்ற கேள்வி எழுகிறது. கட்டாயமாக அவர் ஒரு பிரமுகராக இருக்கத் தேவையில்லை. தேர்தலில் தனக்கு கிடைக்கும் பிரபல்யத்தை அடுத்தடுத்த  தேர்தல்களுக்கு முதலீடு செய்யும் ஓர் அரசியல் விலங்காக அவர் இருக்கக் கூடாது. அவரும் அவர் பயன்படுத்திய பொது சின்னமும் எதிர்கால தேர்தல்களில் பயன்படுத்தப்படக் கூடாது என்ற ஒரு உடன்படிக்கைக்கு  அவர்  கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும்.

முன்னர் குமார் பொன்னம்பலத்தை இறக்கினோம், பின்னர் சிவாஜிலிங்கத்தை இறக்கினோம், எல்லாமே தோல்விதான் என்று பிதற்றுபவர்களுக்கான பதிலின் ஒரு பகுதி இது. 

2 hours ago, கிருபன் said:

தமிழ் அரசியலை கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்த ஒரு பொதுகட்டமைப்பானது எதிர்காலத்தில்  கூர்ப்படையத் தேவையான ஒரு பொதுத்தளத்தை அவர் பலப்படுத்துவார். அதற்கு ஜனாதிபதித் தேர்தல் ஒரு களமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதுதான் இங்கு முக்கியம். தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேசிய ஐக்கியத்தைப் பலப்படுத்தும் ஒரு பரிசோதனை. அதில் எத்தனை முறை தோற்றாலும் அதைவிட வேறுவழி தமிழ் மக்களுக்கு உண்டா? ஏனென்றால் ஐக்கியப்படாவிட்டால் தமிழ் மக்களுக்கு அடுத்த கட்டமே இல்லை. அடுத்தகிழமை பதினைந்தாவது மே 18 வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாகத் தேங்கிப் போயிருக்கும் தமிழ் அரசியலை ; கடந்த 15 ஆண்டுகளாகத் தேய்ந்து கொண்டு போகும் கட்சி அரசியலை; கட்சிக்காரர்களிடமிருந்தே கட்சிகளைக் காப்பாற்றவேண்டிய ஒரு காலகட்டத்தில்; வடக்காய் கிழக்காய் சாதியாய் சமயமாய் இன்னபிறவாய் சிதறிக்  கொண்டே போகும் ஒரு  சிறிய மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாகத் திரட்டுவதைவிட உன்னதமான ஒரு நினைவு கூர்தல் உண்டா?

 

முற்றிலுமான உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித்தவர்கள் முன்வைத்த வினாவை சற்று விரிவாக நிலாந்தனவர்கள் அலசியுள்ளார். இதிலே போட்டியிடும் சிங்களத்தரப்புகளைவிடச் சில தமிழ்த்தரப்பகளின் பதட்டமே நோக்குதற்குரியது. 
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

முடிவாக நிலாந்தன் சொல்கிறார்: "ஒரு சிங்கள வேட்பாளருக்கு இரகசியமாக முட்டுக் கொடுப்போர் தமிழ் பொது வேட்பாளரை எதிர்க்கிறார்கள், தமிழர்களை ஒற்றுமைப் படுத்தும் உன்னத நோக்கம் கொண்டோர் மட்டும் தமிழ் வேட்பாளரை வரவேற்கிறார்கள்".

முன்னைய தரப்பு "டீல்" குறூப், பின்னைய தரப்பு மக்கள் சேவகர்கள்😂!

எதிர் தரப்பால் சொல்லப் படும் காரணங்கள், ஆபத்துக்கள், முன்னர் 2004 முதல் 2020 வரையான தேர்தல் அரசியல் வரலாறுகள், அவை சர்வ தேசத்திற்குச் செய்தி சொன்னமையால் தமிழருக்கு கிடைத்த "பெரும் நன்மைகள்", இவையெல்லாம் over the head, அல்லது காதைப் பொத்திக் கொண்டதால் மிஸ்ஸிங்!

இப்படி எதிர் கருத்தாளர்களை demonize செய்து கொண்டே "கூட்டுப் பிரக்ஞை, மக்கள் திரள், ஒற்றுமை" என்று வார்த்தைகளில் ஜாலம் செய்யும் பணி நிலாந்தனுக்கு வாழ்நாள் பணியாக இருக்கும் என நம்புகிறேன்😎.

  • கருத்துக்கள உறவுகள்

1977 பொது தேர்தலில் ஒற்றுமையை காட்டினால் விடிவு வரும் என்றார்கள். பின்னர் வந்த ஆயுத இயக்கங்கள் தேர்தலை புறக்கணித்தால் விடிவு வரும் என்றார்கள்.

பின்னர் 2004 ல் திரண்டு வாக்களித்தால் விடிவு வரும் என்றார்கள். மக்கள் திரண்டு வாக்களித்து 22 பாராளுமன்ற உறுப்பினரைக் கொடுத்தார்கள்.

2005 ல் தேல்தலை புறக்கணித்தால் விடிவு வரும் என்றார்கள். விடிவை எதிர்பார்தத மக்கள் அதிர்ந்தே போனார்கள்.

பின்னர் 2013 ல் வடக்கு  மாகாண சபை தேர்தலில் திரண்டு வாக்களித்தால் விடிவு வரும் என்றார்கள்.  

இப்போது பொது வாக்காளருக்கு வாக்களித்தால் விடிவு வருமாம்.  

இன்று ஆய்வுக் கட்டுரைகளாக எழுதி தமது வாழ்வை கழிக்கும் நிலாந்தன் அன்று உரியவர்களுக்கு இதே போல இடித்துரைத்திருந்தால்,  இந்த அரசியல் ஆய்வுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தின் பத்தி எழுத்தாளர்களில் பெரு;பாலானவர்கள் இந்தியாவின் நலனை முன்னிநிறுத்துபவர்கள். ஆனால் இந்தியாவோ தமழர் நலை ஒரு போமுத் கருத்தில் எடுத்தது கிடையாது. சிறிலங்காவின் அரசியலில் தமிழ்மக்களைப் பகடைக்காய் ஆக்கி சிறிலங்கா அடு;சியாளர்களை தன் விருப்புக்கேற்ப இழுப்பதே அதன் நோக்கம்.ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுபவர் ஒரு முன்னாள் அல்லது நடப்பு எம்பியாக இருக்க வேண்டும். அல்லது ஒரு கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் இருப்பதாக அறிகிறேன். அப்படியானால் மீண்டும் ஒரு கட்சியின் தலைவரோ அல்லது அரசியல் கட்சி ஒன்றின் அங்கத்தவராகத்தான் அந்த வேட்பாளர் இருக்கப் போகிறார். கடந்த கால அரசியலில் ஒரு பொது வேட்பாளாராகக் கூடிய தகுதியாருக்கு இருக்கிறது. தனது எம்பி பதவியைப் பாவித்து ததமிழ்மக்களுக்கு குறிப்பிடத்தக்க அவில் ஆக்க பூர்வமாகப் பணியாற்றிய  ஒரு அரசியல்வாதியைக் கூற முடியுமா?அப்படி ஒருவரை நிறுத்தினாலும் அவரை எதிர்க்குத் தரப்பு அவருக்கு எப்படி ஆதரவளிக்கும்? ஒரு கட்சியின் தலைவர் தெரிவையே கேள்விக்குள்ளாக்கி நீதிமன்றப்படிகளை ஏநி இருக்கும் தமிழ்த்தலைமைகளால் எவ்வாறு ஒரு இணக்கப்பாட்டுக் வர முடியும். அப்படி நிறுத்தப்படுபவரும் நேர்மையானவராக இபு;பாரா?.  சரி அப்படியாயின் என்னதான் வழி ஒன்றில் ஒட:;டு மொத்தமாகப் புறக்கணிப்பது. அல்லது யாராவது ஒரு சிங்களத்தரப்புக்கு வாக்களிக்கும்படி சொல்வது. இதில் எதித் தேசியத்தின் ஒன்று பட்ட கருத்தை சர்வதேசத்துக்கும் சிங்கள சமூகத்துக்கும் சொல்லும். சிங்கள அரசியல்வாதிக்கு வாக்களிப்பவர் 2 வது 3வது வாக்கை யாருக்குச் செலுத்த வேண்டும்.இன்னும் 2 அதாவது மொத்தமாக 3 வாக்குகளையும் முன்னனியில் உள்ள இ சிங்கள வேட்பாளர்களுக்குத்தானே செலுத்த வேண்டும்.தற்போதைய சிங்கள மக்களுக்கும் சங்கள அரசியல் வாதிகளில் யாரையுமே நம்பத்தயாராகவில்லை. அவர்களால் கடந்த அரகலய போராட்டத்தின் போது. அவர்கள் அனைத்துக்கட்சித்தலைவர்களையுமே எதிர்த்தார்கள். இந்த நிலைமையில் ஜனாதிபதித் தேர்தலில் முதல்சுற்றில் ஒருவர் 50 சதவீத்திற்கு மேல் பெறாவிட்டால். 02 வது வாக்குகளை எண்ணும் போது  தமிழ்மக்களது கணிசமான வாக்குகள் ஒரு சிங்கள வேட்பாளருக்குத்தானே  சாதகமாக அமையப் போகிறது. இது சஙிங்கள மக்களுக்கான ஜனாதிபதித் தேர்தல் அதைச் சிங்கள மக்களே தேர்ந்தெடுக்கட்டும். ஒரு தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் ஆகச்சிறந்த இனவாpயை சிங்கள மக்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் உண்டு கடந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழ்மக்கள் சஜித்தை ஆதரித்த வேளையில் கோததபாய தனிச் சிங்கள வாக்குகளினால் பெரும் வெற்றி பெற்ற உதாரணமும் கண்முன்னே இருக்கிறது. இது ஜனாதிபதியைத் தமிழ்மக்களின் வாக்குகுள் துPர்மானிக்கும் என்ற கருத்தை உண்மயற்றதாக்கி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

 

நிலாந்தன் அவர்கள் காலத்துக்கு காலம், தனது எஜமான்களுக்கு செம்பு தூங்குவதில் வல்லவர் என்பது யாம் அறிந்ததே. இயக்கத்தோடு இருக்கும் காலத்தில் அவருடைய மூன்று  " J " ( Jewish.  Japanese, Jaffinese ). கோட்ப்பாடு பிரபலியமானது. தற்போது அவர் இந்தியன் நடுவன் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு செம்பு தூக்குகின்றார்.

கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில், அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப மூலோபாய ரீதியாக, தமிழ் மக்களுக்கு குறைந்த சேதத்தை எற் படுத்தும்  சிங்கள வேட்ப்பாளருக்கு அதிகமாக வாக்களித்துள்ளார்கள். அதே நேரத்தில், பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியம் சார்பாக பெருவாரியாக வாக்களித்துள்ளார்கள். இம்முறையும் அப்படித்தான் நடைபெறும் என்பதே எனது கணிப்பாகும்.

தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி,  மீண்டும் மக்களின் அபிப்பிராயத்தை உரசி பார்ப்பதில்  எந்த தவறுமில்லை, வரலாறு மீண்டும், மீண்டும் தன்னுள் திருப்பும், முதலில் அது துன்பியலாகவும், பின்னர் நகைச்சுவையாகவும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

6 hours ago, island said:

1977 பொது தேர்தலில் ஒற்றுமையை காட்டினால் விடிவு வரும் என்றார்கள். பின்னர் வந்த ஆயுத இயக்கங்கள் தேர்தலை புறக்கணித்தால் விடிவு வரும் என்றார்கள். ..........

............இப்போது பொது வாக்காளருக்கு வாக்களித்தால் விடிவு வருமாம்.  

கருத்துப்படம் 11.05.2024

கவி அருணாசலம் அய்யாவின் கருத்து படத்திற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எனக்கு த.பொ.வே வை நிறுத்துவதால் அதிக பாதகமா, சாதகமா என்ற குழப்பம் இன்னும் தீரவில்லை.

ஆனால் இதை இட்டு நான் அதிகம் அலட்டி கொள்ள போவதில்லை.

எனக்கு தமிழ் அரசியல்வாதிகள் மீது அதீத நம்பிக்கை உள்ளது.

இவர்கள் ஒரு போதும் ஒரு அணியில் வந்து ஒரு பொதுவேட்பாளரை ஆதரிக்க போவதில்லை. இவர்கள் மாறி மாறி பேசி, நிலாந்தன் எழுதி கொண்டிருக்க தேர்தல் வந்து விடும்🤣.

ஆகவே இதையிட்டு மண்டையை உடைப்பதை தவிர்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.