Jump to content

'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இ‍தை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   17 MAY, 2024 | 06:17 PM

image
 

முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்குவது ஏன் பிரச்சினைக்குரிய விடயம்?

srinath55.jpg

முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல. இந்த விவகாரத்தை அரசாங்கம் தவறான விதத்தில் கையாள்கின்றது என சட்டத்தரணியும் மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினருமான சிறீநாத் பெரேரா தெரிவித்தார்.

நேர்காணலின்போது இதனை தெரிவித்த ஸ்ரீநாத் பெரேரா கூட்டு வேதனை கவலை துயரம் என்பன பொங்கி பெருகி வெளியேறும் இடம் முள்ளிவாய்க்கால் எனவும் குறிப்பிட்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தொடர்ச்சியாக கலந்துகொண்டுள்ள ஸ்ரீநாத் பெரேரா,  வலிந்து காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகளின் போராட்டங்கள்,  கேப்பாபிலவு மண்மீட்பு போராட்டம், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்கள் போன்றவற்றில் தன்னை இணைத்துக்கொண்டவர்.

ஸ்ரீநாத் பெரேரர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மயிலத்தனை மாதவனை தமிழ் பண்ணையாளர்களை சமீபத்தில் சந்தித்திருந்தார்.

உண்மை நீதி நல்லிணக்க ஆணைக்குழுக்கள் போன்றவை செயற்படக்கூடிய சூழல் இலங்கையில் இல்லை என தெரிவிக்கும் அவர் ஜேவிபி தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை சிறிதளவும் புரிந்துகொள்ளவில்லை அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள அவர்கள் தயாரில்லை எனவும் குறிப்பிட்டார்.

பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

 

srinath_56.jpg

 

கேள்வி - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் தொடர்ச்சியாக கலந்துகொண்டுள்ளீர்கள்? இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கின்றீர்கள் அங்கு எவ்வாறான உணர்வுகளை கடந்த காலங்களில் அவதானித்திருக்கின்றீர்கள்?

பதில்- கடந்த வருடம் இளைஞர்கள் பலர் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவது உட்பட பல்வேறு  ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இளைஞர்கள் இவ்வாறான நடவடிக்கைளில் ஈடுபடுவது மிகவும் சாதகமான விடயம்.

பரந்தன் முதல் முள்ளிவாய்க்கால் வரை நான் இதனை அவதானித்தேன்.

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்கியவர்கள் தாக்கப்பட்ட விடயம்  தமிழ்மக்களின் உணர்வுகளை பாதித்துள்ளது.

சமூக ஊடகங்களில் நான் அவதானித்த விடயங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது உணர்வுகள் கடினமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இது தொடர்வதற்கு இனியும் அனுமதிக்க முடியாது என தமிழர்கள் கருதுகின்றனர். இந்த துன்புறுத்தல்கள் வன்முறைகள் முடிவிற்கு வரவேண்டும் என தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

தமிழ் மக்களின் உணர்வுகள் கடினமாகியுள்ளமை இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வெளிப்படும் என கருதுகின்றேன்.

நான் கடந்த மூன்று வருடங்களாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளேன்.

தங்கள் உறவுகளைஇழந்த குடும்பத்தவர்களின் துயரம் வேதனை ஒவ்வொரு வருடம் மனதை வருத்தும் விதத்தில் வெளிப்படும். இந்த வருடமும் அதேபோன்ற வேதனையான துயரமான உணர்வுகளே வெளிப்படப்போகின்றன.

கூட்டு வேதனை கவலை துயரம் என்பன பொங்கி பெருகி வெளியேறும் இடம் முள்ளிவாய்க்கால் 

தனிமையில் வாழும்போது அவர்களிடமிருந்து வெளிவராத உணர்வுகள்  அனைவரும் ஒன்றிணையும் போது திடீரென வெடித்துக் கிளம்பும் கண்ணீராக கதறல்களாக.

தற்போது வடக்குகிழக்கில் காணப்படும் நிலைமை மாற்றமடையும் வரை இந்த நிலை மாறப்போவதில்லை.

தற்போதைய நிலை தொடர்ந்தால் இந்த நிலை மாறாது.

 

2

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்கள் தாக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டமைக்கு உடனடியாக நீங்கள் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கண்டனம்வெளியிட்டிருந்தீர்கள்-?

பதில்-  இது மிகவும் மோசமான செயல் என்னவென்று சொல்ல முடியாத செயற்பாடு- 

எவரும் இவ்வாறான அனுபவத்தை எதிர்கொள்ளக்கூடாது.

முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்குவது ஏன் பிரச்சினைக்குரிய விடயம்? அதில் என்ன உள்ளது? அது ஏன் தவறு ? 

போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்காக அவர்கள்  முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்குகின்றனர்.

இது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமில்லை.

அவர்கள் இதன் மூலம் மோதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைகூருகின்றனர். இதில் என்ன தவறு உள்ளது

ஆட்சியாளர்கள் மிகவும் மோசமான விதத்தில் இந்த விடயத்தை  கையாள்கின்றனர்.

 

3

திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்திற்கு தென்பகுதியிலிருந்து வெளிப்பட்ட எதிர்ப்பை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்-  திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்கியவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு  எங்களை போன்ற சில குழுக்கள் மாத்திரம் எதிர்ப்பை வெளியிட்டன.

எதிர்கட்சி அரசியல்வாதிகள் இதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. மலையக அரசியல்வாதிகளிடமிருந்து பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் குரல் வெளிப்பட்டதை நான் அவதானிக்கவில்லை.

srinath_45.jpg

4

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராடும் பகுதிகளிற்கு தென்னிலங்கையிலிருந்து தொடர்ச்சியாக சென்று வருபவர்களில் நீங்களும் ஒருவர் - அவர்களின் போரட்டத்தின் ஆரம்பகாலத்திலிருந்து நீங்கள் அவர்களின் போராட்டத்திற்கு உங்கள் ஆதரவை வெளியிட்டு வந்துள்ளீர்கள் - காணாமல்போனோர் அலுவலகம் உண்மை நீதி நல்லிணக்க ஆணைக்குழு போன்றவை குறித்த உங்கள் அவதானிப்பு என்ன?

பதில்-  எந்த நம்பிக்கையும் இல்லை.

காணாமல்போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டு ஐந்து வருடங்களாகின்றன  ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டதா?

எதுவும் வெளிவரவில்லை.

மரணச்சான்றிதழ் வழங்குவது இழப்பீடு வழங்குவது குறித்து மாத்திரம் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

ஆனால் காணாமல்போனவர்களின் உறவுகள் உங்களிடம் பணம் கேட்கவில்லை நீதியைதான் கோருகின்றார்கள்.

அவர்களில் பலர் தங்கள் உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்தவர்கள்.

அவர்களிற்கு என்ன நடந்தது என்பதை தான் அவர்கள் கேட்கின்றனர்.

காணாமலாக்கப்பட்டமைக்கு யார் பொறுப்பு

இது தொடர்பில் எவருக்கு எதிராகவும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?

இது தொடர்பில் காணாமல்போனோர் அலுவலகம் எதனையும் செய்யவில்லை.

உண்மை நீதி நல்லிணக்க ஆணைக்குழுக்கள் போன்றவை செயற்படக்கூடிய சூழல் இலங்கையில்இல்லை.

அரசாங்கம் அதற்கு தயாரில்லை.

நடந்து முடிந்த சம்பவங்களிற்கு பொறுப்பான ஆளும் வர்க்கமும்  ஒடுக்குமுறை அரசாங்கமும்  வெள்ளையடிப்பதற்கான ஒரு முயற்சியாக  இவ்வகை ஆணைக்குழுக்களை பயன்படுத்த முயல்கின்றன.

கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை விட இது எந்த வகையில் சிறந்தது என்பது எனக்கு விளங்கவில்லை.

5

சில வாரத்திற்கு முன்னர் நீங்கள் மயிலத்தனைமடு சென்றிருந்தீர்கள்?

மயிலத்தனைமடு கால்நடை வளர்ப்போர் விவசாயிகள் தற்போது பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.

தங்கள் கால்நடைகளிற்கு உணவு வழங்குவதற்காக அவர்கள் மேய்ச்சல் நிலங்களை பயன்படுத்தி வந்தார்கள்.

பெண் ஆளுநர் - பதவியேற்ற பின்னர்  அந்த நிலத்தை கைப்பற்றி  சிங்கள விவசாயிகளிற்கு வழங்குவதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார்.

அவர்களின் போராட்டம் 200நாட்களை கடந்து நீடிக்கின்றது  அரசாங்கம் அதனை அலட்சியம் செய்துள்ளது.

ஆனாலும் விவசாயிகள் துணிச்சலுடன் அர்ப்பணிப்புடன் போராடுகின்றனர்.

தமிழ் அரசியல்வாதிகள் கூட வலுவான விதத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என நான் கருதுகின்றேன்.

 

srinath1.jpg

கேள்வி- எதிர்வரும் தேர்தல்களில் ஜேவிபி தமிழ் மக்களின் ஆதரவை பெறுவது குறித்த விடயம் பேசுபொருளாகியுள்ளதே?

பதில்- ஜேவிபி தற்போது  சிங்கள பௌத்த வாக்காளர்களின் பெருமளவு ஆதரவை பெற்றுள்ளது அவர்கள் தற்போது வடக்குகிழக்கு மற்றும் மலையக தமிழர்களின் ஆதரவை பெற முயல்கின்றனர்.

இந்த பகுதிகளில் அவர்களிற்கு மிகக்குறைந்த ஆதரவே காணப்படுகின்றது

அனுரகுமார திசநாயக்க இந்த பகுதிகளில் தனது ஆதரவை அதிகரிக்க முயல்கின்றார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கப்போகின்றன.

இதன் காரணமாக அனுரகுமார திசநாயக்க தமிழ்மக்களின் வாக்குகளை பெற முயல்கின்றார்.

ஆனால் அவர் தமிழ் மக்களிற்கு எதனையும் வழங்க முன்வரவில்லை.

நாங்கள் இந்த நிலைமையை மாற்றுவோம்  அபிவிருத்தி செய்வோம் என மாத்திரம் தெரிவிக்கின்றார்.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை அவர் புரிந்துகொள்ளவில்லை.

தேசியஇனப்பிரச்சினைக்குபொருளாதார அபிவிருத்தி மூலம் மாத்திரம் தீர்வை காணமுடியாது.

தங்கள் பகுதிகளை தங்கள் நாளாந்த வாழ்க்கையை நிர்வகிப்பதற்கான உரிமையை  தமிழ் மக்கள் கோரிநிற்கின்றனர்.

இதற்கான தீர்வு குறித்த விடயத்தில் அனுரகுமார திசநாயக்க அமைதியாக  காணப்படுகின்றார்.

13வது திருத்தம் குறித்தும் அவர் உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை.

அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய  13 வது திருத்தத்தை நாங்கள் வரவேற்கின்றோம் என தெரிவித்து 24 மணிநேரத்தில் டில்வின் சில்வா அதனை முற்றாக எதிர்த்தார்.

நாங்கள் அதனை ஆதரிக்கவில்லை என தெரிவித்தார்.

இதன் அர்த்தம் என்னவென்றால் அவர்கள் -ஜேவிபி சிறிய அளவு அதிகாரப்பகிர்விற்கு கூட தயாரில்லை .

ஆரம்பத்திலிருந்து இதுதான் அவர்களின் கொள்கை .

அவர்கள் அதிகாரங்களை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்பவில்லை.

அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காணமாட்டார்கள் 

இதேவேளை ஜேவிபி தமிழ் வர்த்தகர்களின் ஆதரவை பெற முயல்கின்றது.

சோசலிஸ கட்சி என்ற நிலையிலிருந்து அவர்கள் சீர்திருத்த பூர்ஸ்வா  கட்சியாக மாறிவிட்டனர்.

அவர்களிடமிருந்து தமிழர்களிற்கு எந்த தீர்வும் கிடைக்காது.

 

srinath.jpg

கொழும்பு தமிழ்சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்  பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் தமிழ் மக்களுடன் கைகோர்ப்பது குறித்து கருத்துதெரிவித்திருந்தீர்கள்?

பதில்- தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு காலத்திற்கு காலம் பெரும்பான்மை சமூகம் ஏதோ சில தீர்வுகளை முன்வைக்க முயன்றுள்ளது.

இடதுசாரிகள்  என்ற அடிப்படையில் நாங்கள்அதனை ஆதரிக்கவில்லை.

தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான உரிமையை ஏற்றுக்கொள்வதிலேயே அவர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு  தங்கியுள்ளது.

எனினும் இலங்கையை ஆண்ட எந்த முதலாளித்துவ கட்சிகளும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.அவர்கள் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அவர்களின் அரசியல் அடிப்படை என்பது சிங்கள பௌத்த பேரினவாதமாகும்.

இடதுசாரிகள், சோசலிச கொள்கைகளில் நம்பிக்கையுள்ளவர்கள் மாத்திரம்  தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை  ஏற்றுக்கொள்கின்றார்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை பாதுகாப்பதும் அதற்காக போராடுவதும் பெரும்பான்மை சமூகத்தினர்  அதனை ஏற்றுக்கொள்ளச் செய்வதும் ஒரு வகையான இடதுசாரிகளிற்கான ஒரு புனித கடமை.

தமிழ் மக்களின் போராட்டத்தை தென்பகுதியின் வர்க்க போராட்டத்துடன் இணைத்து முன்னெடுக்கவேண்டும். நாங்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

எந்த முதலாளித்துவ கட்சியும் இதனை செய்யப்போவதில்லை.

https://www.virakesari.lk/article/183790

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நேர்காணல்.

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையிலும் நான் கேட்ட பார்த்த தமிழர் மற்றும் அவர்கள் பிரச்சினை குறித்த சிங்களவர்களின் உரையாடலில் இது மிகவும் சிறப்பு என்று கூறலாம்  

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நாம்  தொடர்ச்சியாக, காலங்காலமாக விட்ட தவறுகள், இன்று எம்   மக்களை சிரட்டையும் கையுமாக அலைய வைத்துவிட்டது  என்பதன் குறியீடாக சிரட்டையையும் கஞ்சியையும் கொள்ளலாமா? 

(எனது இந்தக் கருத்து தியாகங்களை கொச்சப்படுத்துவதாக அர்த்தப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை)

Edited by Kapithan
  • Downvote 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

நாம்  தொடர்ச்சியாக, காலங்காலமாக விட்ட தவறுகள், இன்று எம்   மக்களை சிரட்டையும் கையுமாக அலைய வைத்துவிட்டது  என்பதன் குறியீடாக சிரட்டையையும் கஞ்சியையும் கொள்ளலாமா? 

(எனது இந்தக் கருத்து தியாகங்களை கொச்சப்படுத்துவதாக அர்த்தப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை)

போரில் தோற்ற மக்களின் நிலைதான் சிரட்டை கையுமாக அலைய வைக்கவில்லை, இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் நிலையும் சிரட்டையும் கையுமாக அலையும் நிலியில்தான் தற்போது இலங்கை உள்ளது (அதனை ஏற்றுகொள்ள மனம் மறுத்தாலும் அதுதான் உண்மை), இதற்கு காரணம் மக்களிடையே தமது குறுகிய அரசியல் இலாபத்திற்காக இனவாதம் எனும் குரோதத்தினை வளர்த்த, வளர்க்கின்ற அரசியல்வாதிகள்தான் காரணம்.

  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, vasee said:

போரில் தோற்ற மக்களின் நிலைதான் சிரட்டை கையுமாக அலைய வைக்கவில்லை, இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் நிலையும் சிரட்டையும் கையுமாக அலையும் நிலியில்தான் தற்போது இலங்கை உள்ளது (அதனை ஏற்றுகொள்ள மனம் மறுத்தாலும் அதுதான் உண்மை), இதற்கு காரணம் மக்களிடையே தமது குறுகிய அரசியல் இலாபத்திற்காக இனவாதம் எனும் குரோதத்தினை வளர்த்த, வளர்க்கின்ற அரசியல்வாதிகள்தான் காரணம்.

சிங்களத்திற்காகவும் அழவேண்டிய காலம் விரைவில்  வரும். 

இதில் வினோதம் என்னவென்றால், இந்திய பிராந்திய வல்லாதிக்கம், மேற்குலகின் ஆதிக்கம், சீனாவின்  ஆதிக்கம் எல்லாவற்றையும் ஒருங்கே எதிர்த்த ஒரேயொரு இலங்கையன் பிரபாகரன் மட்டுமே. 

ஆனால், பிரபாகரனைக் கொன்ற சிங்களத்தின் நிலையோ இன்று " வேசி வீட்டு வெத்திலைத் தட்டம் " என்கிற நிலைக்கு வந்துவிட்டது. 

வருபவன் போபவன் எல்லோரும் கையை நனைக்கும் நிலைக்கு இலங்கை வந்துவிட்டது. 

😥

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, Sasi_varnam said:

இதுவரையிலும் நான் கேட்ட பார்த்த தமிழர் மற்றும் அவர்கள் பிரச்சினை குறித்த சிங்களவர்களின் உரையாடலில் இது மிகவும் சிறப்பு என்று கூறலாம்  

ஆங்கிலத்தில் சிங்களவர் கதைத்தது பயனுள்ளதாக உள்ளது...

கொடூர மனங்களில் (பெரும்பாலான சிங்களவர் தமிழருக்கு உரிமையே கொடுக்கக் கூடாது என்றும் தமிழர் கொல்லப்படவில்லை என்று கூறியே கேட்டுள்ளேன்/ பார்த்துள்ளேன்) இவ்வாறான கசியும் இதயங்களும் (தமிழருக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்று வாயால் கூறும் சிங்களவர்) வாழ்வது வியப்பாக உள்ளது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@kapithan பேராண்டி நான் முகங்களுக்கு பச்சை புள்ளி இடுபவன் அல்ல கருத்துக்களுக்கே .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

@kapithan பேராண்டி நான் முகங்களுக்கு பச்சை புள்ளி இடுபவன் அல்ல கருத்துக்களுக்கே .

 

எனது கருத்தில் எது பெருசுக்கு தவறாகத் தெரிகிறது? 

(நீதானே ரொம்பப்  பெரிய ஆளாச்சே ......சொல்லு,....சொல்லு,..😁)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

எனது கருத்தில் எது பெருசுக்கு தவறாகத் தெரிகிறது? 

(நீதானே ரொம்பப்  பெரிய ஆளாச்சே ......சொல்லு,....சொல்லு,..😁)

உங்களுக்கு டவுன் புள்ளி போட்ட கருத்து  பேராண்டி .

அத்துடன் நான் நிங்க நினைக்கும் அளவுக்கு பெரிய ஆள் அல்ல .

 

இங்கு ஒண்ணரை ஆகுது இனிய இரவு சொல்வமா ?

7 minutes ago, Kapithan said:

(நீதானே ரொம்பப்  பெரிய ஆளாச்சே ......சொல்லு,....சொல்லு,..😁)

உங்களில் நிறைய மதிப்பு வைத்து இருக்கேன் பேராண்டி ...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் நிலையும் சிரட்டையும் கையுமாக அலையும் நிலியில்தான் தற்போது இலங்கை உள்ளது (அதனை ஏற்றுகொள்ள மனம் மறுத்தாலும் அதுதான் உண்மை),]

இலங்கையில் உள்ள தமிழர்களோ சிங்கலவர்களோ முஸ்லிம்களோ சிரட்டையும் கையுமாக அலையவில்லை.
தமிழர்கள் யுத்தத்தில் தங்களுக்கு நடந்த துன்பத்தை நினைவுகூருவதற்காக கஞ்சி செய்து சிரட்டையில் கொடுத்தார்கள். வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு இலங்கையில் உள்ளவர்கள் சிரட்டையும் கையுமாக அலைய வேண்டும் என்று ஆசைபடலாம் ஆனால் இதுவரை அவர்கள் சிரட்டையும் கையுமாக அலையவில்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, பெருமாள் said:

உங்களுக்கு டவுன் புள்ளி போட்ட கருத்து  பேராண்டி .

அத்துடன் நான் நிங்க நினைக்கும் அளவுக்கு பெரிய ஆள் அல்ல .

 

இங்கு ஒண்ணரை ஆகுது இனிய இரவு சொல்வமா ?

உங்களில் நிறைய மதிப்பு வைத்து இருக்கேன் பேராண்டி ...

பெருசு,

இது ஒரு படத்தில் வடிவேல் கூறும் வசனம். 

"நீதான் தைரியமான ஆளாச்சே ....சொல்லு,....சொல்லு,"

🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அது 1983 ஆம் ஆண்டு காலப்பகுதி. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடு பூராகவும் வெடித்த இனவாதக் கிளர்ச்சியானது, இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானித்த தருணமாகும். தமிழ் மக்களுக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தினால் தவறான நோக்கங்கள் மற்றும் சந்தேகங்களின் அடிப்படையில் ஒரு சிறு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இனவாதக் கிளர்ச்சியின் முடிவே, பிரிவினைவாதப் போரை நோக்கி கொண்டு சென்றதன் ஆரம்பமாக அமைந்தது.
 
வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர்களின் இளம் இரத்தமானது, தென்னிலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் ஏற்பட்ட வெறுப்பாக மாற, அதிக காலம் செல்லவில்லை. தங்கள் சகோதர-சகோதரிகளுக்கு, எதிராக தெற்கில் நடந்த அநீதியை எதிர்கொண்ட அவர்களை, தங்களுக்கிடையே ஒன்றிணைந்து, தங்கள் சமூகத்திற்கு நீதி கேட்டு, போராட்டத்தை நோக்கி நகர்த்தியது. இறுதியில், அது 30 ஆண்டு கால யுத்தமாக மாறியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
 
நமக்கு நாமே துப்பாக்கிகளை நீட்டிய நிலையை ஏற்படுத்துகின்ற இத்தகைய ஒரு தலைவிதியை உருவாக்க அந்த வரலாறே காரணமாகும்.
 
முப்பது வருடகால போரினால் வடக்கிலும் தெற்கிலும் உள்ள பெண்கள் தங்கள் அன்பான கணவன்களை இழந்தனர். பிள்ளைகள் தங்கள் பெற்றோரை இழந்தனர். பலர் தங்கள் கண்கள், கால்கள் கைகளை இழந்தனர்.
 
யுத்தத்தினால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என இன்றும், குறிப்பிட்டுக் கூற முடியாத நிலை காணப்படுகின்றது.
 
பலர் இன்னும் காணாமல் போனவர்களாகவே உள்ளனர். இன்றும், வடக்கில் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்படும் எலும்புக்கூடுகள் கொண்ட புதைகுழிகள், கடந்த காலத்தின் இருண்ட மற்றும் கொடூரமான பயங்கரத்தை எமக்குக் காண்பிக்கின்றன.
 
போரில் வெற்றி என்பது இல்லை. யுத்தத்தினால் கிடைப்பது ஒன்றும் இல்லை. போரில் இழப்புகள் மட்டுமே கிடைக்கும். போரின் முடிவு வெற்றி அல்ல. சுதந்திரம் என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். ஆனால் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதுதான் மிகவும் கடினமான விடயமாகும். வடக்கிலும் தெற்கிலும் எமக்கிடையில் எழுந்த சந்தேகமும் பயமும் இப்போதும் அவ்வப்போது ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. அந்த அளவிற்கு எமது உள்ளங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.
 
அப்படியாயின், எமது காயங்களை நாம் ஆற்ற வேண்டாமா? வடக்கிற்கு ரயிலில் செல்வது நல்லிணக்கம் அல்ல, தெற்கின் தென்னை மரங்களை வடக்கில் நடுவதும், வடக்கின் பனை மரத்தை தெற்கில் நடுவதும் நல்லிணக்கமல்ல. நல்லிணக்கம் என்பது எம்மை நாமே அறிந்து கொள்வதாகும். கலாசார பன்முகத்தன்மையை நாம் மதிக்க வேண்டும். அவர்களின் உரிமைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். எமது உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அதற்கு அவசியம் நட்பின் கரங்களாகும். நம்பிக்கையுடனான அன்பே அதற்கு அவசியம். மற்றவரை மதிப்பதே அதற்கு தேவையாகிறது. அது அரசியலாக இருக்க வேண்டியதில்லை. அது மனிதாபிமானமாக மட்டும் இருந்தால் போதும்.
வாருங்கள்
இணையுங்கள்
உங்கள் நட்பின் கரங்களை நீட்டுங்கள்...
அது வேறு யாரோ அல்ல
அது எமது சகோதரரே...
இனி போதும்
இறந்தகாலத்தைப் புரிந்து
நிகழ்காலத்தை உருவாக்க ஒன்றிணைவோம்...
கட்டியணைப்போம்...
❤️🧡
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/5/2024 at 07:54, Kapithan said:

நாம்  தொடர்ச்சியாக, காலங்காலமாக விட்ட தவறுகள்

உங்களுக்குப் புரிந்த இந்த காலம் காலமாக விட்ட தவறுகளை இங்கு பட்டியலிடலாமே?

நாமும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

On 18/5/2024 at 00:51, Sasi_varnam said:

இதுவரையிலும் நான் கேட்ட பார்த்த தமிழர் மற்றும் அவர்கள் பிரச்சினை குறித்த சிங்களவர்களின் உரையாடலில் இது மிகவும் சிறப்பு என்று கூறலாம்  

சசி,

அருமையான காணொளி. இதனை இங்கு எத்தனை பேருக்குப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்குமோ தெரியவில்லை. ஆனால், கல்விகற்ற சிங்கள மக்களில் சிலரிடம் தெரியும் மாற்றம் இது. சிங்களம் தெரிந்தவர்கள் நிச்சயம் இதனைக் கேட்க வேண்டும். தமது இனத்தில் சமூகமாக தாம் செய்யும் விடயங்களைத் தமிழ் மக்கள் செய்யும்போது தடுக்கும் தமது அரசின் கொடூரத்தைக் கேள்விகேட்கும் பெண்மணி. முள்ளிவாய்க்கால் நோக்கிய இறுதி யாத்திரையில் தமிழ் மக்கள் சென்ற வழிகளில் தானும் சென்ற தெற்கின் சகோதரன். 

இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

நன்றி !

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/5/2024 at 00:51, Sasi_varnam said:

இதுவரையிலும் நான் கேட்ட பார்த்த தமிழர் மற்றும் அவர்கள் பிரச்சினை குறித்த சிங்களவர்களின் உரையாடலில் இது மிகவும் சிறப்பு என்று கூறலாம்  

முதன் முதலாக சிங்களக் கல்விமான் ஒருவரால் புலிகள் உருவாக்கப்பட்டதற்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. சிறப்பு !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரகலய காலத்தில் ராஜபக்ஷேக்கள் சொல்லிவந்தவை எல்லாமே பொய்கள் தான் என்கிற தெளிவை சிங்கள மக்கள் உணர்ந்தபோதிலும், இறுதி யுத்தம் தொடர்பாகவும் ராஜபக்ஷேக்கள் பொய்களையே கூறினார்கள் என்பதையும், இறுதியுத்தம் அரசினால் உருவாக்கப்பட்ட பொய்க்கான களத்திலேயே நடத்தப்பட்டது என்பதையும் சிங்களச் சமூகம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறும் அவர், போர் குறித்து முற்றான பொய்களைப் பரப்பக்கூடிய சில ஊடகவியலாளர்களை முன்னேறிச் சென்ற இராணுவ அணிகளுடன் அரசு அனுப்பியதென்றும், நடுநிலையான செய்தியாளர்களை அரசு ஒருபோது இறுதி யுத்த களத்தில் அனுமதிக்கவில்லை என்றும் கூறுகிறார். 

நல்ல கலந்துரையாடல். தமிழில் வரவேண்டும்.

யுத்தத்தின் இறுதிநாட்களின்போது தனது இராணுவம் ஒரு கையில் ஐ நா மனிதவுரிமைகள் சாசனத்தையும், மறு கையில் துப்பாக்கியையும் ஏந்தியே போரிட்டதென்றும், உலகிலேயே மனிதவுரிமைகளை மதிக்கும் ஒரே ராணுவம் சிங்கள இராணுவம் என்றும், ஆகவே யுத்தத்தில் ஒரு தமிழ் மகனும் கொல்லப்படவில்லை என்று அரசு கூறியதை இன்றுவரை சிங்களச் சமூகம் நம்ப விரும்புவதாலேயே தமிழர்களுக்கு நடந்த அவலங்களை, அக்கிரமங்களை அச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது என்றும், இதனாலேயே தமிழர்களால் அக்காலத்தில் சேகரிக்கப்பட்ட போர்க்குற்ற  சாட்சியங்களைப் பொய்கள் என்று சிங்களச் சமூகத்தால் இலகுவாகத் தட்டிக் கழித்துவிட முடிகிறதென்றும் அவர் கூறுகிறார்.  

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அவலங்கள் குறித்தும், ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் குழந்தைகள் குறித்தும், வீடுகளுக்கு அடியில் உயிருடன் புதைக்கப்படும் பெண்கள் குறித்தும் கவலைப்படும் நாங்கள், ஆத்திரத்துடன் கேள்விகேட்கும் நாங்கள், இதையேதானே 15 வருடங்களுக்கு முன்னர் இதே நாட்டில் வடக்கில் செய்தோம்? அப்போது எமக்கு அது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை.

இன்று ரஃபாவரை பலஸ்த்தீனர்களை தள்ளிச் சென்று ஒரு இடத்தில் குவித்து வைத்து படுகொலை செய்வதுபோல, நாமும் முள்ளிவாய்க்கால்வரை தமிழர்களைத் தள்ளிச் சென்று கொல்லவில்லையா? கொல்லப்பட்டவர்கள் எல்லாருமே புலிகள்தான் என்றும், அதனால் அதுகுறுத்து நாம் கவலைப்படத் தேவையில்லையென்றும், ஆகவே புலிகளின் மரணத்திற்கு நினைவுகூர்வதைத் தடுப்பது சரியே என்று கூறும் நாம், விமானத்திலிருந்து கொட்டப்பட்ட குண்டுகள் புலிகளை மட்டுமே இலக்குவைத்துத் தாக்கவில்லை, மாறாக அங்கிருந்த 3 மாதக் குழந்தையிலிருந்து அனைவரையுமே கொன்றது என்பதை ஏன் புரிந்துகொள்கிறோம் இல்லை? சரி, கொல்லப்பட்டது எல்லாருமே புலிகள் என்று வைத்துக்கொள்வோமே, ஏன், அவர்களின் உறவுகள் அவர்களை நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

1977 ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் தனிநாடு கோருவது தவறில்லை என்று வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி, பதவிக்கு வந்த வெறும் ஆறு மாதத்திலேயே பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்று கொண்டுவந்து ஒரு சில போராளிகளை மட்டுமே கொண்டிருந்த புலிகள் இயக்கத்தை பெருவிருட்சமாக வளர்த்துவிடவில்லையா? தமிழர்களுக்கு, ஒரு இனமாக‌ அரசியல் ரீதியில், பொருளாதார ரீதியில், சமூக ரீதியில் இருந்த பிரச்சினைகளுக்கு சிங்கள் அரசுகள் தீர்வொன்றினை வழங்க மறுத்ததனாலேயே புலிகள் உருப்பெற்றார்கள் என்பதை ஏன் நாம் புரிந்துகொள்கிறோம் இல்லை? ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதிகளான சிறில் போன்றவர்கள் பாராளுமன்றத்திற்குள்ளேயே அன்று கூறியவை முற்றான பொய்கள் என்று எமக்குத் தெரியும், ஆனாலும் இன்றுவரை நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லையா? 

தெற்கின் "மக்கள் விடுதலை முன்னணியினர்" ஒரு காலத்தில் பயங்கரவாதிகள். ஆனால், இன்று அவர்கள் தமது உறுப்பினர்களின் மரணத்தை "மாவீரர்கள்" என்று நினைவுகூர்ந்து வருகிறார்கள். நாம் அதனை ஆதரிக்கிறோம், அனுமதிக்கிறோம். அப்படியானால், யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளை அவர்களின் உறவுகள் நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்கமுடியும்? மே 18 இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தனது மகனை, மகளை, தாயைத், தந்தையை அம்மக்கள் நினைவுகூரும் நாள். அதற்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அம்மக்களை தமது உறவுகளுக்கான வணக்கத்தினைச் செய்வதிலிருந்து தடுப்பதன் மூலம் மேலும் மேலும் இவ்வாறான படுகொலைகளுக்கே நாம் வித்திடுகிறோம்.  

  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் உருவாக்கத்திற்காக நாம் எவ்வளவு காலத்திற்குப் பிரபாகரனைக் குறை கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்? ஏன், பிரபாகரனுக்கு நிகரான பொறுப்பினை அன்றிருந்த அரசாங்களும் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? 1983 இல் தமிழர்களுக்கு அடித்தது அரசாங்கம் மட்டுமில்லையே? சிங்கள மக்களுமாகத்தானே சேர்ந்து அடித்தோம்? 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது. 

தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள். 

வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.  

இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

உங்களுக்குப் புரிந்த இந்த காலம் காலமாக விட்ட தவறுகளை இங்கு பட்டியலிடலாமே?

நாமும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

சசி,

அருமையான காணொளி. இதனை இங்கு எத்தனை பேருக்குப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்குமோ தெரியவில்லை. ஆனால், கல்விகற்ற சிங்கள மக்களில் சிலரிடம் தெரியும் மாற்றம் இது. சிங்களம் தெரிந்தவர்கள் நிச்சயம் இதனைக் கேட்க வேண்டும். தமது இனத்தில் சமூகமாக தாம் செய்யும் விடயங்களைத் தமிழ் மக்கள் செய்யும்போது தடுக்கும் தமது அரசின் கொடூரத்தைக் கேள்விகேட்கும் பெண்மணி. முள்ளிவாய்க்கால் நோக்கிய இறுதி யாத்திரையில் தமிழ் மக்கள் சென்ற வழிகளில் தானும் சென்ற தெற்கின் சகோதரன். 

இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

நன்றி !

ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 

இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kapithan said:

ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 

இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். 

தெரியாதவர்களும் இருக்கிறோம், சொல்லுங்கள் அறிந்துகொள்ளலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

தெரியாதவர்களும் இருக்கிறோம், சொல்லுங்கள் அறிந்துகொள்ளலாம். 

ஒன்றுமே தெரியாமலா கருத்துக் கூறுகிறீர்கள்? 

எங்களுக்கு ஒரு ஜின்னா போன்றதொரு தலைவர் இல்லாமல் போனது எங்களின்  துரதிர்ஷ்டம். 

☹️

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.