Jump to content

இந்திய தேர்தல் முடிவுகள்- 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
26 minutes ago, ஏராளன் said:

உங்களால் எப்போதும் தமிழர்களை ஆள முடியாது.. வைரலாகும் ராகுல் காந்தி வீடியோ

04 JUN, 2024 | 04:18 PM
image
 

பா.ஜ.க.-வால் தமிழ்நாட்டை, தமிழர்களை எப்போதும் ஆளவே முடியாது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். கடந்த சில மாதங்களுக்மாதங்களுக்கு முன் இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இன்று (ஜூன் 4) தமிழ்நாட்டில், தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். பல தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் பா.ஜ.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், "பா.ஜ.க.-வால் தமிழகத்தை ஆளவே முடியாது" என்று பேசிய ராகுல் காந்தியின் வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://www.virakesari.lk/article/185310

large.IMG_7586.webp.699ce88ebd9b9e0a9f06e120e80b89ff.webp

யாரென்று தெரிகிறதா?

இவன் தீ என்று புரிகிறதா?

முற்போக்கு கோட்டை - மேற்கு வங்கத்தில் சரி பாதி பிஜேபி.

மெத்த படித்த கேரளத்தில் கூட சினிமா நடிகர் சுரேஷ் கோபி பிஜேபி எம்பி யாகிறார்.

ஆனால் தமிழ் நாட்டில் குச் நஹி ஹை🤣

Edited by goshan_che
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெறுபவர்கள். ஒவ்வொரு தொகுதியிலும்.  33 % வாக்குகளுக்கு மேல் பெறப் போவதில்லை    என்று தெரிகிறது   எனவே… முதலாவது இரண்டாவது  இடங்களில் வந்தவர்களுக்கு மட்டும் மீண்டும் போட்டி இடவேண்டும்.    இரண்டாவது இடம் வந்தவர்கள் கூட   வெல்லலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவில் காலூன்றிய பாஜக: திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றிக்கு கைகொடுத்த `போராட்டம்’

கேரள மாநிலத்தில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் நேமம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ஓ.ராஜகோபால் வெற்றிபெற்றார். கேரள சட்டசபையில் நுழைந்த முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற புகழைப்பெற்றார் ஓ.ராஜகோபால். எனினும், கடந்த சட்டசபை தேர்தலில் ஓ.ராஜகோபால் தோல்வியடைந்தார். இப்போது கேரளாவில் பா.ஜ.க-வுக்கு ஒரு எம்.எல்.ஏ-கூட இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கடந்த தேர்தல்வரை வென்றதில்லை.

இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் களமாடியது பா.ஜ.க. மாலை 3 மணி நிலவரப்படி திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி 74,004 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் வெற்றி உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து பா.ஜ.க வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சுரேஷ் கோபி கட்சித் தொண்டர்களுடன் நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். சுரேஷ் கோபியின் மனைவி ராதிகா வீட்டின் முன்பு குவிந்தவர்களுக்கு பாயசம் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 
 
 
பாயாசம் வழங்கி கொண்டாடிய சுரேஷ்கோபியின் மனைவி ராதிகா
 
பாயாசம் வழங்கி கொண்டாடிய சுரேஷ்கோபியின் மனைவி ராதிகா
 

கேரளாவில் பா.ஜ.க சார்பில் ராஜ்யசபா எம்.பி-யாக இருந்த சுரேஷ்கோபி கடந்த 5 ஆண்டுகளாக திருச்சூர் தொகுதியை மையமாகக்கொண்டு அரசியல் செய்துவந்தார். திருச்சூரில் கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் சி.பி.எம் கட்சியினர் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த விவகாரத்தை கையில் எடுத்து போராடினார் சுரேஷ் கோபி. மேலும், பணத்தை இழந்த அனைவருக்கும் வட்டியுடன் திருப்பி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி கொடுத்தார் சுரேஷ் கோபி.

 
 

காங்கிரஸ் சார்பில் வடகரா தொகுதி சிட்டிங் எம்.பி-யான கே.முரளீதரன் தொகுதி மாறி திருச்சூரில் களம் இறங்கியது சுரேஷ் கோபிக்கு பிளஸ் பாயின்டாக அமைந்தது. கே.முரளீதரனின் தங்கையும், கே.கருணாகரணின் மகளுமான பத்மஜா வேணுகோபால் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க-வுக்கு தாவியதும் சுரேஷ் கோபிக்கு பலமாக அமைந்தது. சுரேஷ் கோபியின் மகளின் திருமணம் மற்றும் பிரச்சாரத்துக்கு என தொடர்ச்சியாக திருச்சூரைச் சுற்றியே பிரதமர் மோடியின் பிரசாரம் அமைந்ததும் தொண்டர்களை உற்சாகமாக்கியது. கேரள மாநிலத்தின் முதல் பா.ஜ.க எம்.பி என்ற வகையில் சுரேஷ் கோபி தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.

 
நடிகர் சுரேஷ்கோபி
 
நடிகர் சுரேஷ்கோபி
 

இதுகுறித்து சுரேஷ்கோபி கூறுகையில், "திருச்சூரில் எனக்கு இந்த வெற்றியை நல்கிய அனைத்து கடவுள்களுக்கும், லூர்து மாதாவுக்கும் வணக்கம். ஒரு பெரிய போராட்டத்திற்கு கூலியாக கடவுள் வழங்கிய பரிசு தான் இந்த வெற்றி. திருச்சூர் வாக்காளர்கள் தெய்வங்கள். மக்களை நான் வணங்குகிறேன். வாக்காளர்களை திசைமாற்றுவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் கடவுள்கள் அவர்களுக்கு வழிகாட்டினர். கேரளாவின் எம்.பி-யாக நான் செயல்படுவேன். ஒட்டுமொத்த கேரளாவின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்" என்றார்.

கேரளாவில் காலூன்றிய பாஜக: திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றிக்கு கைகொடுத்த `போராட்டம்’ | Bjp candidate suresh gopi wins in kerala - Vikatan

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

சட்டை கிழிஞ்சிருந்தா….

தைத்து முடிச்சிடலாம்….

நெஞ்சு கிழிஞ்சிருச்சே…

எங்க முறையிடலாம்🤣.

large.IMG_6535.jpeg.29097292d2e431565562

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி எதிர்பார்த்த தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகக் கூடும் என்கிறது பிபிசி?. காங்கிரஸ் ஆட்சி வர வாய்ப்பிருக்கிறதா? வந்தால் இலங்கையில் சந்தி சந்தியாக வைத்த சிலையையெல்லாம் அகற்ற வேண்டி வருமோ😎?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தாநாள் கூட ஓபிஎஸ் அவர் வென்று மத்திய அமைச்சர் ஆவது பற்றி ஏதோ சொல்லியிருந்தார்.

சேர்க்கை சரியில்லை...... சுத்திவர நிற்கின்ற நாலு பேர்கள் 'நீங்கள் அமைச்சர் ஆயிடுவீங்க, அண்ணே....' என்று சொல்லியிருப்பார்கள் போல.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_6535.jpeg.29097292d2e431565562

40. க்கு 40 உம். எடுத்து இருப்பார்களா??    மக்கள் சின்னத்துக்கா. வாக்கு அளிக்கிறார்கள். ??

 

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

மோடி எதிர்பார்த்த தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகக் கூடும் என்கிறது பிபிசி?. காங்கிரஸ் ஆட்சி வர வாய்ப்பிருக்கிறதா? வந்தால் இலங்கையில் சந்தி சந்தியாக வைத்த சிலையையெல்லாம் அகற்ற வேண்டி வருமோ😎?

296 இடங்களை ஜீ பெறுவார் என்பது தற்போதைய நிலவரம்.......... மட்டு மட்டாக மீண்டும் வந்து விடுவார்கள் போல.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழன் சீமான் அண்ணா தன் வாக்குறுதியை நிறைவேற்றுவாரா?

ஏலவே நான் வேறொரு திரியில் எழுதியிருக்கிறேன் சீமான் அண்ணாவுக்கு 5-6 வீதம் வரையே வாக்கு கிடைக்கும் என்று!

Link to comment
Share on other sites

3 minutes ago, ரசோதரன் said:

296 இடங்களை ஜீ பெறுவார் என்பது தற்போதைய நிலவரம்.......... மட்டு மட்டாக மீண்டும் வந்து விடுவார்கள் போல.......

அந்த 296 இடங்கள், கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களையும் சேர்த்து தான். எனவே பிஜேபி யினால் தனித்து ஆட்சியமைக்க முடியாது, கூட்டணி அரசாங்கம் தான் அமைக்க முடியும்.

வகுப்புவாதி மோடியின் பிம்பம் உடைகின்ற தருணம் இது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_6535.jpeg.29097292d2e431565562

4% தக்க வைக்கிறதே முடியாது போல............ அவரின் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைக்கிற விசயத்தால் வந்த சேதம்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடியின் ஆட்சி வேண்டுமா வேண்டாமா என்று மற்றைய அரசியல் கட்சிகள் முடிவெடுக்கலாம் 

பா ஜ க கூட்டணியில் இருக்கும் நித்திஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இருவரும் நினைத்தால் மோடி காலி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

narendra-modi.webp?resize=640,375&ssl=1

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி!

பாராளுமன்ற தேர்தலில் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட  பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார்.

பிரதமர் மோடி 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை  உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில்  பெற்றுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 24 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில்  6,12,970 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,60,457 வாக்குகளைப்  பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1386089

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

அந்த 296 இடங்கள், கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களையும் சேர்த்து தான். எனவே பிஜேபி யினால் தனித்து ஆட்சியமைக்க முடியாது, கூட்டணி அரசாங்கம் தான் அமைக்க முடியும்.

வகுப்புவாதி மோடியின் பிம்பம் உடைகின்ற தருணம் இது.

👍........

உத்தரபிரதேச மக்களே மோடி & யோகி பிம்பத்தை உடைப்பதில் முன்னுக்கு நிற்கின்றார்கள்.......❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

st-2.jpg?resize=673,375&ssl=1

இந்திய மக்களைவைத் தேர்தல் – இறுதி கட்டத்தை எட்டியுள்ள வாக்கு எண்ணிக்கை !

இந்திய மக்களை தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியாக வெளியாகிவரும் நிலையில், இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளுக்கு இணங்க பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

மேலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியாக் கூட்டணி இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், தமிழ் நாட்டின் 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பா.ஜ.க.வின் வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இந்த மக்களவை தேர்தலில் 64.2 கோடி மக்கள் வாக்களித்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை முதல், மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம், பா.ஜ.க. தலையிமையான தேசிய ஜனநாயக கூட்டணி 239 இடங்களிலும், காங்ரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, 7 இலட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றுள்ளார்.

இதேவேளை, தமிழகத்தில் 40 தொகுகளையும் கைப்பற்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

தமிழ் நாட்டில் பா.ஜ.க. ஒரு ஆசனத்தையேனும் கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள்கூட இந்தத் தேர்தலில் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளனர்.

இதனிடையே, ஆந்திராவில் அதிக வாக்குளை பெற்று முன்னிலையில் உள்ள, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவத்துள்ளார்.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளநிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி இன்று மாலை 4 மணிக்கு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளாவின், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி 3,64,422 வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதன்படி, ராகுல் காந்தி 647,445 வாக்குகளை பெற்றுள்ளார்.

மக்களவையிள்ள 543 ஆசனங்களுக்காக தேர்தல் நடைபெற்றநிலையில், 272 ஆசனங்களை கைப்பற்றும் கட்சி அல்லது கூட்டணியே இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப்: இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் முன்னிலை!

பஞ்சாப் மாநில நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோண்மணி, பாஜக எனப் பெரும் கட்சிகளின் வேட்பாளர்களையே பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கிறார்கள் இரண்டு சுயேச்சைகள்! ஒருவர் சிறையிலிருக்கும் காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங் என்றால்... மற்றொருவர் இந்திரா காந்தியைப் படுகொலைசெய்த மெய்க்காப்பாளரின் மகனான சரப்ஜித் சிங் கால்சா!

 
 
 
அம்ரித்பால் சிங்
 
அம்ரித்பால் சிங்
 

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பலமுனைப் போட்டியில் களமிறங்கியிருந்தன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், காதூர் சாகிப் (Khadoor Sahib) தொகுதியில் காலிஸ்தான் ஆதரவு போராளி தலைவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருந்துவருபவருமான அம்ரித் பால் சிங் சுயேச்சையாகப் போட்டியிட்டார். பஞ்சாப் (காலிஸ்தான்) தனிநாடு கோரிக்கை விடுத்துவரும் அம்ரித்பால் சிங், இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் `ஆபரேஷன் புளூ ஸ்டார்' மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் கிளர்ச்சியாளர் பிந்தரன் வாலேவை அடியொற்றி வளர்ந்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 

அதேபோல, 1984-ல் ஆபரேஷன் புளூ ஸ்டார் மூலம் சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலை சேதப்படுத்தி, பிந்தரன் வாலே உள்ளிட்ட காலிஸ்தான் போராளிகளை சுட்டுக்கொன்றதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மெய்க்காப்பாளர்களில் ஒருவரான பீன்ட் சிங்கின் மகன்தான் தற்போது பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட்(Faridkot) தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டிருக்கும் சரப்ஜித் சிங் கால்சா.

 
சரப்ஜித் சிங் கால்சா
 
சரப்ஜித் சிங் கால்சா
 

இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் முன்னிலை வகித்து வருகின்றனர். குறிப்பாக, காதூர் சாகிப் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டிருக்கும் காலிஸ்தான் ஆதரவு போராளி தலைவர் அம்ரித்பால் சிங், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோண்மணி அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களைக் காட்டிலும் சுமார் 1,84,088 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதாவது தற்போதுவரை சுமார் 3,84,507 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதேபோல, இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற மெய்க்காப்பாளர் பீன்ட் சிங்கின் மகனான சரப்ஜித் சிங் மற்ற வேட்பாளர்களைவிட அதிகமாக சுமார் 2,96,922 வாக்குகள் பெற்று, சுமார் 70,246 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

st-2.jpg?resize=673,375&ssl=1

இந்திய மக்களைவைத் தேர்தல் – இறுதி கட்டத்தை எட்டியுள்ள வாக்கு எண்ணிக்கை !

இந்திய மக்களை தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியாக வெளியாகிவரும் நிலையில், இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளுக்கு இணங்க பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

மேலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியாக் கூட்டணி இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், தமிழ் நாட்டின் 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பா.ஜ.க.வின் வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இந்த மக்களவை தேர்தலில் 64.2 கோடி மக்கள் வாக்களித்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை முதல், மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம், பா.ஜ.க. தலையிமையான தேசிய ஜனநாயக கூட்டணி 239 இடங்களிலும், காங்ரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, 7 இலட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றுள்ளார்.

இதேவேளை, தமிழகத்தில் 40 தொகுகளையும் கைப்பற்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

தமிழ் நாட்டில் பா.ஜ.க. ஒரு ஆசனத்தையேனும் கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள்கூட இந்தத் தேர்தலில் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளனர்.

இதனிடையே, ஆந்திராவில் அதிக வாக்குளை பெற்று முன்னிலையில் உள்ள, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவத்துள்ளார்.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளநிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி இன்று மாலை 4 மணிக்கு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளாவின், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி 3,64,422 வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதன்படி, ராகுல் காந்தி 647,445 வாக்குகளை பெற்றுள்ளார்.

மக்களவையிள்ள 543 ஆசனங்களுக்காக தேர்தல் நடைபெற்றநிலையில், 272 ஆசனங்களை கைப்பற்றும் கட்சி அல்லது கூட்டணியே இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஜா சொல்லியிருந்தார் ஜெகன் அண்ணா தான் வெல்லுவார் என்று........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ க‌ட்சியாக‌ மாறிய‌து நாம் த‌மிழ‌ர்🙏🥰....................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரசோதரன் said:

👍........

உத்தரபிரதேச மக்களே மோடி & யோகி பிம்பத்தை உடைப்பதில் முன்னுக்கு நிற்கின்றார்கள்.......❤️

மோடிக்கும் ஆர் எஸ் எஸ் சுக்கும் ஏற்பட்ட லடாயின் வெளிப்பாடு இது.

பலர் வாக்களிப்பை புறக்கணித்துள்ளனர். அயோத்தி தொகுதியே அவுட்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 minutes ago, ரசோதரன் said:

ரோஜா சொல்லியிருந்தார் ஜெகன் அண்ணா தான் வெல்லுவார் என்று........

download+(1).jpeg roja-aunty.jpg

நடிகை  ரோஜாவும் பின்னடைவு என்று செய்தி வந்தது. 
வென்று விட்டாரா, தோற்று விட்டாரா என்று தெரியவில்லை.
அவரைப் பற்றிய தகவல்கள் கிடைத்தால்.. படத்துடன் பகிரவும். 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

மோடிக்கும் ஆர் எஸ் எஸ் சுக்கும் ஏற்பட்ட லடாயின் வெளிப்பாடு இது.

பலர் வாக்களிப்பை புறக்கணித்துள்ளனர். அயோத்தி தொகுதியே அவுட்.

 

👍.......

ஜீ அவரால் முடிந்த அளவிற்கு எல்லாப் பாத்திரங்களிலும் நல்லாவே நடித்தாரே...........

spacer.png

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, வாலி said:

 

ஏலவே நான் வேறொரு திரியில் எழுதியிருக்கிறேன் சீமான் அண்ணாவுக்கு 5--6 வீதம் வரையே வாக்கு கிடைக்கும் என்று!

8ச‌த‌ வீத‌த்தை தாண்டி விட்டின‌ம்

உங்க‌ட‌ க‌ணிப்பு பிழைச்சு போச்சு அண்ணா...............................................................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 minutes ago, தமிழ் சிறி said:

download+(1).jpeg roja-aunty.jpg

நடிகை  ரோஜாவும் பின்னடைவு என்று செய்தி வந்தது. 
வென்று விட்டாரா, தோற்று விட்டாரா என்று தெரியவில்லை.
அவரைப் பற்றிய தகவல்கள் கிடைத்தால்.. படத்துடன் பகிரவும். 😂 🤣

🤣...........

நான் எழுதின இரண்டு வரிகளில் ஒன்றை நானே சென்சார் செய்து விட்டுத் தான் அந்தச் செய்தியையே போட்டிருந்தேன்.........ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு சமம் என்று மீண்டும் இன்னொரு தடவை இங்கு நிரூபிக்கப்படுகின்றது...........

Edited by ரசோதரன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் இலக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வது அல்ல அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அடுத்த கட்டத்துக்கு நகர்வது தான். அது நடந்திருக்கிறது. இனி பேரம் கூட்டணி அமைத்தல் என்று அடுத்த கட்டம்.???

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரசோதரன் said:

ஜீ அவரால் முடிந்த அளவிற்கு எல்லாப் பாத்திரங்களிலும் நல்லாவே நடித்தாரே...........

பணி முடியப் போகிறதோ?

large.IMG_6534.jpeg.ba61dfcd6899c0d38781

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகார வழக்கு ஒத்திவைப்பு Published By: DIGITAL DESK 3 20 JUN, 2024 | 02:26 PM   மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குள மலை பிரதேசத்தில் மலை உடைப்பதால் தமக்கு பாதிப்புள்ளதாக கல்மலை உடைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த 10 பொதுமக்கள் 11 ஆம் திகதி  சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 12 ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்கள்.  இதனை தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான்  15 ஆம் திகதி விஜயம் செய்து பார்வையிட்டதுடன், குறித்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (20) மூதூர் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இது தொடர்பான வழக்கை மூதூர் நீதிமன்றில் சம்பூர் பொலிஸார் முன்னர் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கில் இரு தரப்பினரும் இன்றைய தினம்  ஆஜராகியிருந்தனர். கைது செய்யப்பட்டு சொந்த  பிணையில் விடுவிக்கப்பட்ட 10 நபர்களுக்கும் சார்பாக சட்டத்தரணிகளான பு.முகுந்தன், நா.மோகன், சிரேஷ்ட சட்டத்தரணி தங்கமுத்து ஜயசிங்கம் ஆகியவர்கள் ஆஜராகியிருந்தனர். குறித்த வழக்கானது எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மூதூர் நீதிமன்ற பதில் நீதவானால் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186564
    • உங்களின் பேத்தி மிகவும் விரைவாக குண்மடைந்து விடுவார் அண்ணை, யோசிக்காதேங்கோ. அன்று நீங்கள் அவசரம் அவசரமாக கலிஃபோர்னியா வந்தேன் என்று சொன்னவுடனேயே, மனதிற்குள் கொஞ்சம் யோசனையாக இருந்தது. 
    • ஒரு காலத்தில் காங்கேசன்துறை, பருத்தித்துறை துறைமுகங்கள் பிரசித்தி பெற்று இருந்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம். எத்தனயோ வெற்றிகரமான பயணங்கள், வியாபாரங்கள் நடை பெற்றிருந்தாலும் இப்படியான துயர சம்பவங்களும் நடந்திருக்கு. அதன் பின்பு எனதும் சிறியினதும், பூட்டி வேறு ஒரு குடும்பத்தவரையும் எத்தனயோ சந்தர்ப்பங்கள் கிடைத்தும் கடல் தாண்டி பயணிக்க விடவில்லை.
    • பேத்தி சீக்கிர‌ம் குண‌மாக‌ க‌ட‌வுளை பிராத்திக்கிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா🙏.....................  
    • அதிமுக ஆட்சியில் பதுங்கி இருக்கும் ரவுடிகளும், சமூக விரோதிகளும் திமுக ஆட்சியில் வெளியில் வந்து அராஜகம் செய்வது காலம் காலமாகவே தொடருவது. ஸ்டாலின் இந்த விசயத்தில் உசாராக இருந்து ஒரு மாற்றத்தை ஏறபடுத்துவார் என்று பார்த்தால், அவரும் அதே பழைய குதிரையில் ஏறி சறுக்கி விழுந்து கொண்டிருக்கின்றார். எல்லோர் மனதையும் கலங்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த விஷச் சாராய மரணங்களாவது, அரசினதும், அரச நிர்வாகத்தினதும் மற்றும் முழுச் சமூகத்தினதும் மனச்சாட்சியை தட்டி எழுப்ப வேண்டும்........😔.  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.