Jump to content

இந்திய தேர்தல் முடிவுகள்- 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ragaa said:

என்னை ப்பொறுத்தவரை, காங்கிரஸ் இல்லாத எந்த ஒரு கட்சி ஆட்சி பிடித்தாலும் பரவாயில்லை so long as Rahul ghandi is not PM. மேலும், மோடிதான் சிங்களவனுக்கு ஆப்பு வைக்க சரி. எங்களுக்கில்லாத இலங்கை சிங்களவனுக்கும் இருக்கக்கூடாது. 

மோடிஎன்பவர் ஆர். எஸ். எஸ் இன் இந்துத்துவா பாசிசத்தை அமுல்படுத்தும் ஒரு கருவி மட்டுமே. அந்த கருவியின் காலம் ஏறத்தாள முடிந்து சக்கை போல் ஆர். எஸ் ஆராலேயே தூக்கி வீசப்படும் காலம் வந்து விட்டது. அந்த மோடி எப்படி சிங்களவனுக்கு ஆப்பாக இருப்பாராம்.  இவ்வாறான  கற்பனைகள் தான் தமிழரின் பாரிய பலவீனம்.

 காங்கிரஸோ, பா.ஜ.க வோ இருவரையும் சமாளிக்கும் வல்லமையான ராஜதந்திரம் சிங்கள அரசிகளிடம் உள்ளது என்பதை நேரில் பார்தத பின்புமா இப்படியான  கற்பனைகள்.  

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

2016  சட்ட மன்றத் தேர்தலில் பா ஜ க
பாரி வேந்தருடைய இந்திய ஜனநாயக கட்சி  மற்றும்     
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்,    
கொங்கு ஜனநாயகக் கட்சி ஆகிய( தனி நபர் கட்சிகள்  எனக் கூடச் சொல்லலாம்)  கட்சிகளுடன்  கூட்டணி அமைத்துப்   பெற்ற வாக்குகள்   12  லட்சத்து 30  ஆயிரம் மட்டும் தான் ( 234  தொகுதிகள் 165  + 45  + 24   ). இது 2,9 வீதம்

இப்படியான கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டிருந்தால் இன்னும் விகிதாசாரம் குறைந்தும் இருக்கலாம்

நிச்சயமாக.

ஆனால் தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் பிஜேபியின் பலம் அதன் வாக்கு வங்கி அல்ல, மாறாக ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை ஒன்று திரட்டி பின் அதை தாமே ஆட்டையை போடுவது.

இந்த முறை அதிமுக இந்த வலையில் இருந்து தப்பி விட்டது.

அப்படி தப்பி இருந்தாலும் பிஜேபி கூட்டணி என  பல சிறிய கட்சிகளின் வாக்கை அள்ளி - 10% வாக்கு வங்கி தமது கூட்டணிக்கு என பிஜேபி காட்டும்.

காட்டும் அல்ல, காட்டுகிறது. அண்ணாமலை தற்போதைய பேட்டியில் “அதிமுகவுக்கு இப்போ உறைத்திருக்கும்” என சொல்லியது இதைத்தான்.

2026 இல் அதிமுகவை எப்படியாவது வலையில் விழுத்துவதே பிஜேபி திட்டம் என நினைக்கிறேன்.

அதற்கு இந்த” 10% கூட்டணியின் தலைமை” என்ற பீடிகை கை கொடுக்கும்.

நாதக 6.5 இல் இருந்து 8.2 க்கு போனது ஒரு வகை வளர்ச்சி (எண்ணிக்கை வளர்ச்சி) என்றால் பிஜேபி இப்படி கூட்டணி கண்டு 10% க்கு மேல் எட்டியது இன்னொரு வகை வளர்ச்சி.

இதில் தமிழ் நாட்டுக்கு அதிகம் ஆபத்தானது பிஜேபியின் வளர்சியே. காரணம் - இதை வைத்து, மத்திய அரசின் பவரை வைத்து, அமலாக்கதுறையை வைத்து, அவர்கள் அடுத்த தேர்தலில் அதிகுகவோடு 60:40 என நெருக்குவார்கள். தொடந்து இது 50:50, பின் 40:60 என நெருக்கி, அதிமுகவை அப்படியே விழுங்கி தமிழ் நாட்டின் மாற்று கட்சி என ஆகி விடுவார்கள்.

மாற்று கட்சியாக அவர்கள் வந்தால் - மக்கள் திமுகவை மாற்ற நினைக்கும் போது ஆட்டோமட்டிக்காக அவர்கள் தலைமையிலான கூட்டணி ஆட்சி பீடம் ஏறும் நிலை ஏற்படும்.

மஹாராஸ்டிரா முதல் பல மாநிலங்களில் இப்படித்தான் பிஜேபி ஆட்சியை பிடித்தது.

நாதகவின் 1.5% வளர்சியை அலட்சியபடுத்துவது போல விட பிஜேபியின் இந்த வளர்ச்சியை அலட்சியப்படுத்த முடியாது என்பது என் கருத்து.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

இப்படியான ஒரு அரசு இந்தியாவில் 2000 ( சரியாகத் தெரியவில்லை ) ஆண்டளவில் இருந்திருக்க வேண்டும் அப்போது சந்திர சேகர் என்பவர் பிரதமராக இருக்க காங்கிரஸ் கூட வெளியே இருந்து ஆதரவளித்தது.

1990 இல் மண்டல் கமிசன் அறிக்கையை அமலாக்கியே தீருவேன் என மிகவும் நியாயமான நிலைப்பாட்டை விபி சிங் எடுக்க, அவரின் ஜனதாதளத்துக்கான ஆதரவை பாஜக விலக்கி கொள்ள அவர் ஆட்சி கழிந்தது.

விபி சிங்குக்கு பதில் தாந்தான் பிரதமராக வந்திருக்க வேண்டும் என்ற கறுவியத்தில் இருந்த சந்திரசேகர், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, ராஜீவின் கைப்பொம்மை போல செயல்பட்டார்.

அப்போ உதயன் பேப்பரில் சந்திரசேகர் திரிசங்கு சொர்க்கத்தில் இருப்பதாக கேலிச்சித்திரம் கூட வந்தது.

இதே போல் ஒரு நெருக்கடியை ஜெயா - வாஜ்பாயின் முதலாம் அரசுக்கு கொடுத்தார்.  ஆனால் வாஜ்பாய் மானஸ்தன் - 13 நாளில் பதவி விலகிவிட்டார். 1996 என நினைக்கிறேன். அதன் பின் குஜ்ரால், தேவேகவுடா என மாறி மாறி மியூசிக்கல் சேர் விளையாடினார்கள்🤣.

ஆனால் கூட்டணி ஆட்சிகள் மத்தியில் ஸ்திரமாக இருந்த வரலாறும் உண்டு. நரசிம்மராவ் அதிமுக கூட்டணியோடு 5 வருடம் பூர்த்தி செய்தார். அது போலவே மன்மோகன் சிங்கின் இரு தடவையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

நாயுடுவும் நித்திஷ் குமாரும்  மோடிக்கு ஆதரவு கொடுக்காமல் அமித்ஷா வை அல்லது இனினொருவரைக்   கூட பிரதமராக்க முயற்சிக்கலாம்

இருக்கலாம்.

ஆனால் நாயுடுவின் முதல் கோரிக்கையே அமித் ஷாவை உள்துறையில் இருந்து தூக்க வேண்டும் என்பதே எனவும் பேசி கொள்கிறார்கள்.

அதே போல் ஆர் எஸ் எஸ் கூட யோகி அல்லது ஜேபி நட்டாவையே விரும்புகிறதாம்.

இந்த 10 வருடத்தில் அத்வானி ஈறாக பல பெரிய தலைகளை மோடி பகைத்துள்ளார்.

இப்போ அயோத்தியை கூட தக்க வைக்க முடியாமல் - தனி பெரும்பான்மையையும் இழந்து நிற்கிறார்.

மோடி கடக ராசியோ? அட்டமத்து சனி போட்டு ஆடுது🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

இதில் தமிழ் நாட்டுக்கு அதிகம் ஆபத்தானது பிஜேபியின் வளர்சியே. காரணம் - இதை வைத்து, மத்திய அரசின் பவரை வைத்து, அமலாக்கதுறையை வைத்து, அவர்கள் அடுத்த தேர்தலில் அதிகுகவோடு 60:40 என நெருக்குவார்கள். தொடந்து இது 50:50, பின் 40:60 என நெருக்கி, அதிமுகவை அப்படியே விழுங்கி தமிழ் நாட்டின் மாற்று கட்சி என ஆகி விடுவார்கள்.

👇

ரெண்டா உடைகிறதா அதிமுக? மீண்டும் எடப்பாடிக்கு தலைவலி.. "இவங்க" ஒன்னு சேர போறாங்களாமே.. போச்சு போச்சு

HemavandhanaPublished: Wednesday, June 5, 2024, 13:17 [IST]
 

Edappadi Palanisamy AIADMK lok sabha election result BJP alliance AIADMK Alliance

சென்னை: அதிமுகவுக்கு மீண்டும் அதிர்ச்சி தோல்வி கிடைத்திருக்கிறது.. இதையடுத்து, கட்சிக்குள் ஏகப்பட்ட புகைச்சல் புகைந்து கொண்டிருக்கிறதாம். இதுகுறித்த ஸ்பெஷல் செய்தி ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.

மூத்த தலைவர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார், போன்றவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்களாக கருதப்படும் நிலையில், எஸ்பி வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் எல்லாம் பாஜகவுக்கு விசுவாசிகளாக இருப்பதாக எப்போதுமே ஒரு மறைமுகபேச்சு உண்டு.

எடப்பாடி பழனிசாமி: அதனால்தான், கூட்டணியிலிருந்து பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழட்டிவிட்ட நிலையில், வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் பாஜக பக்கம் தாவ இருப்பதாக, கடந்த ஒரு வருட காலமாகவே செய்திகள் கசிந்தவாறேயிருந்தது.. லோக்சபா தேர்தலுக்கு முன்புகூட இவர்களை தங்கள் பக்கம் கொண்டுவர, கொங்கு மண்டல பாஜக பிரமுகர் முயற்சித்ததாகவும் சொன்னார்கள்..

ஆனால், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விட்டு, இதுவரை யாருமே அதிமுகவை விட்டு பாஜகவுக்கு செல்லவில்லை. மாறாக, பாஜகவை கடுமையாக தாக்கி பிரச்சாரம் செய்திருந்தனர்.. இப்படிப்பட்ட சூழலில், நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக மண்ணை கவ்வியிருக்கிறது.. இதையடுத்து, அதிமுகவுக்குள் புகைச்சல் அதிகமாகி இருக்கிறதாம். இதுகுறித்து நமக்கு பிரத்யேகமாக செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது.

கூட்டணி பலம்: தமிழகத்தின் தேர்தல் முடிவுகள், கூட்டணி பலம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்பதை நிரூபிப்பதாக எடப்பாடிக்கு தேர்தல் வியூக வகுப்பாளர்கள் சிலர் தெரிவித்திருக்கிறார்களாம்..

கட்சியின் மூத்த தலைவர்களான கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, உதயக்குமார், செல்லூர் ராஜு, கே.சி.வீரமணி ஆகியோர், பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டிருக்கக்கூடாது என தேர்தல் ரிசல்ட் நமக்கு உணர்த்துகிறது என்று வெளிப்படையாகவே எடப்பாடியிடம் கூறியிருக்கிறார்கள். அதிமுக தலைவர்கள், தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒரு பேச்சும் பேசுவதாக எடப்பாடி புலம்பியிருக்கிறார்.

கடுப்பான எடப்பாடி: எல்லோரிடமும் கேட்டுத் தானே பாஜக கூட்டணியை முறித்தோம் ; இன்றைக்கு நான் மட்டும் தன்னிச்சையாக முடிவு எடுத்தது போல பேசுவது என்னை சங்கடப்படுத்துகிறது என்று வருத்தப்பட்டு வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி. இதில், தங்கமணியும் வேலுமணியும் தான் கொஞ்சம் ஓவராகவே எடப்பாடியை காயப்படுத்துவது போல பேசிவிட்டனராம்.

இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் அணித் தலைவர்கள், பூத் கமிட்டி ஏஜெண்டுகள் ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டத்தைக் கூட்டுமாறு எடப்பாடிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது... எனவே, உடனடியாக இந்த கூட்டத்தைக் கூட்டும் முடிவில் இருக்கிறாராம். கூட்டம் கூட்டப்படும் போது எடப்பாடிக்கு எதிரான குரல்கள் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று ஒரு க்ரூப் திட்டமிட்டிருக்கிறதாம்.

வலிமை: அதேபோல, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்பட அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அல்லது பிரிந்து சென்ற ஜாம்பவான்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து அதிமுகவின் வலிமையை கூடுதலாக்க வேண்டும் என்று குரல் கொடுக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இனிமேல் எடப்பாடி தலைமையிலான ஒற்றை தலைமை என்பதை பரிசீலனை செய்து, கட்சியை வழி நடத்தவும், தேர்தல் கால முடிவுகளை மேற்கொள்ளவும் உயர்மட்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்து, அதற்கு கூடுதல் அதிகாரம் கொடுத்து கட்சியை பாதுகாக்கும் புதிய நடைமுறையை முழுமையாக செய்ய வேண்டும் என்கிற முடிவை எடுக்க வைக்கும் நெருக்கடியை எடப்பாடிக்கு கொடுக்கும் ஒரு திட்டமும் விவாதிக்கப்பட்டு வருகிறதாம்.

வெடிக்குமா சர்ச்சை: அதாவது, இனி எடப்பாடி மட்டும் தன்னிசையாக முடிவுகளை எடுக்கவும், செயல்படவும் செக் வைக்கும் விதத்தில் இந்த திட்டம் ஆராயப்படுகிறது. ஆக, அதிமுக கூட்டும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பெரும் ரகளை வெடிக்கும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

https://tamil.oneindia.com/news/chennai/are-these-the-conflicts-within-the-aiadmk-and-what-are-the-challenges-faced-by-edappadi-palanisamy-611575.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1990 இல் மண்டல் கமிசன் அறிக்கையை அமலாக்கியே தீருவேன் என மிகவும் நியாயமான நிலைப்பாட்டை விபி சிங் எடுக்க, அவரின் ஜனதாதளத்துக்கான ஆதரவை பாஜக விலக்கி கொள்ள அவர் ஆட்சி கழிந்தது.

அதே தான் கோஷான்
 மேலதிக தகவல்களுக்கு நன்றி

இப்போது நாயுடுவும் நித்திஷ்ம் ஆதரவு தருவதாகக் கடிதம் கொடுத்து விட்டார்கள் எனச்   செய்திகள் தெரிவிக்கின்றன
மோடியைக் கூட்டணியின் தலைவராக ஏகமானதாகத் தெரிவு செய்துள்ளார்கள்.
மோடியை விட்டுப் பிடிக்க நினைக்கின்றார்கள் போலத் தான் தெரிகின்றது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

மோடிஎன்பவர் ஆர். எஸ். எஸ் இன் இந்துத்துவா பாசிசத்தை அமுல்படுத்தும் ஒரு கருவி மட்டுமே. அந்த கருவியின் காலம் ஏறத்தாள முடிந்து சக்கை போல் ஆர். எஸ் ஆராலேயே தூக்கி வீசப்படும் காலம் வந்து விட்டது. அந்த மோடி எப்படி சிங்களவனுக்கு ஆப்பாக இருப்பாராம்.  இவ்வாறான  கற்பனைகள் தான் தமிழரின் பாரிய பலவீனம்.

 காங்கிரஸோ, பா.ஜ.க வோ இருவரையும் சமாளிக்கும் வல்லமையான ராஜதந்திரம் சிங்கள அரசிகளிடம் உள்ளது என்பதை நேரில் பார்தத பின்புமா இப்படியான  கற்பனைகள்.  

பாஜக வெல்வதுதான் ஈழத் தமிழருக்கு நன்மை தரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

பாஜக வெல்வதுதான் ஈழத் தமிழருக்கு நன்மை தரும். 

இந்த‌ 10வ‌ருட‌த்தில் என்ன‌ ந‌ன்மை செய்த‌வை

 

போன‌ மாச‌ம் தானே விடுத‌லைப்புலிக‌ளின் த‌டையை நீடித்த‌வை

 

 

காங்கிர‌ஸ்சும் ஒன்று தான் பீஜேப்பியும் ஒன்று தான்

 

காங்கிர‌ஸ் ஆட்சிய‌ பிடிச்சா திமுக்காவின் நீட்தேர்வு ர‌த்து வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்

இவ‌ள‌வு கால‌மும் பீஜேப்பிய‌ சாட்டி த‌ப்பிச்ச‌வை 

 

பாப்போம் யார் ஆட்சிய‌ பிடிக்கின‌ம் என்று......................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ 10வ‌ருட‌த்தில் என்ன‌ ந‌ன்மை செய்த‌வை

 

போன‌ மாச‌ம் தானே விடுத‌லைப்புலிக‌ளின் த‌டையை நீடித்த‌வை

 

 

காங்கிர‌ஸ்சும் ஒன்று தான் பீஜேப்பியும் ஒன்று தான்

 

காங்கிர‌ஸ் ஆட்சிய‌ பிடிச்சா திமுக்காவின் நீட்தேர்வு ர‌த்து வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்

இவ‌ள‌வு கால‌மும் பீஜேப்பிய‌ சாட்டி த‌ப்பிச்ச‌வை 

 

பாப்போம் யார் ஆட்சிய‌ பிடிக்கின‌ம் என்று......................................................

அப்படி என்றால் காங்கிரஸ் ஆளட்டும் ......யார்  பிரதமர்?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

அப்படி என்றால் காங்கிரஸ் ஆளட்டும் ......யார்  பிரதமர்?? 

அதுக்குள்ள‌ யார் ஆள்வ‌து என்ற‌ போட்டியில் இவ‌ர்க‌ளுக்குள் வாய் சண்டை வ‌ர‌க் கூடும்..............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வீரப் பையன்26 said:

அதுக்குள்ள‌ யார் ஆள்வ‌து என்ற‌ போட்டியில் இவ‌ர்க‌ளுக்குள் வாய் சண்டை வ‌ர‌க் கூடும்..............................................

இங்கே ஜேர்மனியில் 1998 இல்  இரண்டு பெரிய கட்சிகள் SPD,.. .CDU. .  கிட்டத்தட்ட சமனாக. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்தார்கள்    ஆட்சி அமைப்பதனால். கண்டிப்பாக சிறிய கட்சிகள் ஆதரவு தேவை    சிறிய கட்களுடன். பேச்சுவார்த்தையில். உடன்பாடில்லை காரணம்  அவர்களின் கோரிக்கைகள்   எனவே… இரண்டு பெரிய கட்சிகளும். பேச்சுவார்த்தை மூலம்   இணங்கி. ஆட்சி அமைத்து விட்டார்கள்   இவ்வாறு மூன்று தடவைகள் பெரிய கட்சிகள் இரண்டும் சேர்ந்து ஆட்சி செய்தார்கள்,.......

இந்தியாவில் பிஜேபியும்  இந்தியா கூட்டணியும். இணந்து  இந்தியாவை ஆள்வார்களா ??   பதிலை எதிர்பார்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத் தேர்தல்: தோல்வியைத் தழுவிய பாஜகவின் 13 மத்திய அமைச்சர்கள்

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

5 ஜூன் 2024, 14:44 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் கடந்த மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த 10க்கும் மேற்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர்கள் இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் 2024இன் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், இதரவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும், கூட்டணிக் கட்சிகளோடு இனைந்து பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாஜக அரசின் கடந்த மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள் பலரும்கூட இந்தத் தேர்தலில் களமிறங்கியிருந்தனர். இதில் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர். இதில் முக்கியத் தலைவர்களான ஸ்மிருதி இரானி முதல் தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன் வரை அடங்குவர்.

வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஸ்மிருதி இரானி (அமேதி)

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,SMRITIIRANI / INSTAGRAM

படக்குறிப்பு,ஸ்மிருதி ராணி

அமேதி தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வென்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.

அதுமட்டுமின்றி மத்திய அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானியை, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா 167,196 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

ராஜீவ் சந்திரசேகர் (திருவனந்தபுரம்)

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,RAJEEV CHANDRASEKAR / INSTAGRAM

படக்குறிப்பு,ராஜீவ் சந்திரசேகர்

மத்திய அமைச்சரவையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் ராஜீவ் சந்திரசேகர், இந்த முறை காங்கிரசின் பிரபலமான தலைவர் சசி தரூரை எதிர்த்து கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் தொகுதியில் களமிறங்கினார்.

ஆனால், 358,155 வாக்குகள் பெற்ற சசிதரூர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜீவ் சந்திரசேகரை தோற்கடித்தார். ராஜீவ் சந்திரசேகர் ஒட்டுமொத்தமாக 342,078 வாக்குகளை பெற்றுள்ளார்.

அர்ஜுன் முண்டா (குந்தி)

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,ARJUN MUNDA / INSTAGRAM

படக்குறிப்பு,அர்ஜுன் முண்டா

ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சருமான அர்ஜுன் முண்டாவும் இந்த முறை தோல்வியைத் தழுவியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி தொகுதியில் போட்டியிட்ட அர்ஜுன் முண்டா, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கலி சரண் முண்டாவைவிட 149,675 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தார். அவர் வாங்கிய மொத்த வாக்குகள் 361,972.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஆர்கே சிங் (அர்ரா)

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,R K SINGH / X

படக்குறிப்பு,ராஜ்குமார் சிங்

பாஜக அமைச்சரவையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அமைச்சராகப் பதவி வகிக்கும் ராஜ்குமார் சிங் இந்த முறையும் பிகாரின் அர்ரா தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால், இந்த முறை அவரால் வெற்றி வாய்ப்பைப் பெற முடியவில்லை. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) (எல்) கட்சியின் வேட்பாளர் சுதாமா பிரசாத் 529,382 வாக்குகள் பெற்று, 59,808 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அஜய் குமார் மிஸ்ரா (கெரி)

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,AJAY MISRA / FACEBOOK

படக்குறிப்பு,அஜய் குமார் மிஸ்ரா

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் கெரி சம்பவத்தைப் பலரும் மறந்திருக்க மாட்டோம். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கெரி தொகுதியில் போட்டியிட்ட அஜய் குமார் மிஸ்ரா, சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் உத்கர்ஸ் வர்மாவிடம் 34,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். உத்கர்ஸ் வர்மா 557,365 வாக்குகளும், அஜய் குமார் 523,036 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,KAILASHBAYTU / INSTAGRAM

படக்குறிப்பு,கைலாஷ் செளத்ரி

கைலாஷ் செளத்ரி (பர்மர்)

மத்திய அமைச்சரவையில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கைலாஷ் செளத்ரி ராஜஸ்தானின் பர்மர் தொகுதியில் களம் கண்டார். ஆனால், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இருவர் இவரை மூன்றாம் இடத்திற்குத் தள்ளிவிட்டனர்.

அந்தத் தொகுதியின் வெற்றியாளரான காங்கிரஸ் கட்சியின் உம்மேதா ராம் பெனிவால் 704,676 வாக்குகளையும், சுயேச்சை வேட்பாளரான 586,500 வாக்குகளையும், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள கைலாஷ் செளத்ரி 286,733 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மகேந்திர நாத் பாண்டே (சண்டௌலி)

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,MAHENDRA NATH PANDEY / INSTAGRAM

படக்குறிப்பு,மகேந்திர நாத் பாண்டே

மத்திய கனரக தொழில்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் மகேந்திர நாத் பாண்டே உத்தர பிரதேசத்தின் சண்டௌலி தொகுதியில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்துக் களம் கண்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பிரேந்திர சிங் 474,476 வாக்குகள் பெற்று, 21,565 வாக்குகள் வித்தியாசத்தில் மகேந்திர நாத் பாண்டேவை வெற்றி பெற்றுள்ளார். மகேந்திர நாத் பெற்ற மொத்த வாக்குகள் 452,911.

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,SADHVI NIRANJAN JYOTI / X

படக்குறிப்பு,சாத்வி நிரஞ்சன் ஜோதி

சாத்வி நிரஞ்சன் ஜோதி (ஃபதேபூர்)

உத்தர பிரதேசத்தின் ஃபதேபூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தோல்வியைத் தழுவியுள்ளார். இவர் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் இணை அமைச்சர் ஆவார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் நரேஷ் சந்திர உத்தம் பட்டேலைவிட 33,199 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்துள்ளார் நிரஞ்சன் ஜோதி. நரேஷ் சந்திர உத்தம் பட்டேல் 500,328 வாக்குகளையும், நிரஞ்சன் ஜோதி 467,129 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

சஞ்சீவ் பால்யன் (முஸாஃபர் நகர்)

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,SANJEEV BALYAN / X

படக்குறிப்பு,சஞ்சீவ் பால்யன்

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சரான சஞ்சீவ் பால்யன் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அதே முஸாஃபர் நகர் தொகுதியிலேயே இந்த முறையும் போட்டியிட்டார்.

ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் ஹரேந்திர சிங் மாலிக் 470,721 வாக்குகள் பெற்று, 24,672 வாக்கு வித்தியாசத்தில் சஞ்சீவை தோற்கடித்தார். சஞ்சீவ் பால்யன் ஒட்டுமொத்தமாக 446,049 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,V. MURALEEDHARAN / X

படக்குறிப்பு,வி முரளிதரன்

வி. முரளிதரன் (அட்டிங்கல்)

கேரளாவின் அட்டிங்கல் தொகுதியில் போட்டியிட்ட மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சரும், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சருமான வி. முரளிதரன் மூன்றாமிடம் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார்.

இந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் அடூர் பிரகாஷ் 328,051 வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வி ஜாய் 327,367 வாக்குகளையும், வி. முரளிதரன் 311,779 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,SUBHAS SARKAR / X

படக்குறிப்பு,சுபாஷ் சர்க்கார்

சுபாஷ் சர்க்கார் (பங்குரா)

மேற்கு வங்கத்தின் பங்குரா தொகுதியில் போட்டியிட்ட மத்திய கல்வித்துறை அமைச்சரான சுபாஷ் சர்க்காரும் தோல்வியடைந்துள்ளார். 609,035 வாக்குகள் பெற்றுள்ள இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் அரூப் சக்ரபூர்த்தியைவிட 32,778 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,NISITHPRAMANIK / INSTAGRAM

படக்குறிப்பு,நிஷித் பிராமனிக்

நிஷித் பிராமனிக் (கூச்பெஹார்)

மத்திய உள்துறை இணையமைச்சரான நிஷித் பிராமனிக்கும் இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். மேற்கு வங்கத்தின் கூச்பெஹார் தொகுதியில் போட்டியிட்ட இவர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஜெகதீஷ் சந்திர பர்மா பசுனியாவிடம் தோற்றுள்ளார்.

திரிணாமூல் வேட்பாளர் 788,375 வாக்குகளையும், நிஷித் பிராமனிக் 749,125 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,L MURUGAN / X

படக்குறிப்பு,எல். முருகன்

எல். முருகன் (நீலகிரி)

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரான எல். முருகன் இந்த முறை நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா உள்ளிட்ட வேட்பாளர்களை எதிர்த்துக் களம் கண்டார். ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை. 232,627 வாக்குகள் மட்டுமே பெற்ற முருகன், 473,212 வாக்குகள் பெற்ற ஆ.ராசாவிடம் 240,585 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

https://www.bbc.com/tamil/articles/c844d8k8j8po

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
18 minutes ago, Kandiah57 said:

இந்தியாவில் பிஜேபியும்  இந்தியா கூட்டணியும். இணந்து  இந்தியாவை ஆள்வார்களா ??   பதிலை எதிர்பார்கிறேன்

கந்தையா, அது நடக்க வாய்பபு இல்லை.

காரணங்கள் 

1. ஆசிய மக்களுக்கு உரித்தான ஈகோ மனப்பான்மை, சுயநலம் என்பவை  அந்த மக்களிடம் இருந்து வந்த அரசியல்வாதிகளுக்கும் உண்டு. அது இவ்வாறான அரசியலுக்கு தடை. 

2. பா.ஜ.க ஆர் எஸ் எஸ் இன் இந்துத்துவா பாசிச கொள்கையை அமுல்படுத்தும் கட்சியாக இல்லாமல்,  மத அரசியலில் இருந்து வெளிவந்து இந்திய மக்களுக்கான மக்கள் அரசியலை செய்ய தயாராக வேண்டும். அதற்கு குறைந்தது வாஜ்பாய் போன்ற soft core அரசியல்வாதிகள் பா.ஜ.க தலைவர்களாக வரவேண்டும்.  

 

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kandiah57 said:

இங்கே ஜேர்மனியில் 1998 இல்  இரண்டு பெரிய கட்சிகள் SPD,.. .CDU. .  கிட்டத்தட்ட சமனாக. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்தார்கள்    ஆட்சி அமைப்பதனால். கண்டிப்பாக சிறிய கட்சிகள் ஆதரவு தேவை    சிறிய கட்களுடன். பேச்சுவார்த்தையில். உடன்பாடில்லை காரணம்  அவர்களின் கோரிக்கைகள்   எனவே… இரண்டு பெரிய கட்சிகளும். பேச்சுவார்த்தை மூலம்   இணங்கி. ஆட்சி அமைத்து விட்டார்கள்   இவ்வாறு மூன்று தடவைகள் பெரிய கட்சிகள் இரண்டும் சேர்ந்து ஆட்சி செய்தார்கள்,.......

இந்தியாவில் பிஜேபியும்  இந்தியா கூட்டணியும். இணந்து  இந்தியாவை ஆள்வார்களா ??   பதிலை எதிர்பார்கிறேன். 

நிச்சயமாக அது இன்றைய நிலையில் இந்தியாவில் நடக்காது.
அங்கு மக்களுக்கான அரசியல் என்பது அறவே இல்லை என்று சொல்லலாம்.  

தங்கள் கட்சியை வளர்ப்பதற்குத் தேவையான பணத்தை மக்கள் வரிப்பணத்திலிருந்து கொள்ளையடிப்பதற்காகவே அரசாங்கத்தை பயன்படுத்துகின்றார்கள்.


மேற்கில் அரசியல் என்பது ஒப்பந்தம் எழுதுவது போல  சொன்னதை செய்வார்கள் அல்லது  செய்யக்கூடியதை மட்டுமே சொல்வார்கள்

இந்தியாவில் அப்படி அல்ல இன்றைய இந்திய அரசியல் என்பது

மக்களை ஏமாற்றிப்  பணம் சேர்க்கும் ஒரு தொழில் என்றே சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
36 minutes ago, Kandiah57 said:

இங்கே ஜேர்மனியில் 1998 இல்  இரண்டு பெரிய கட்சிகள் SPD,.. .CDU. .  கிட்டத்தட்ட சமனாக. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்தார்கள்    ஆட்சி அமைப்பதனால். கண்டிப்பாக சிறிய கட்சிகள் ஆதரவு தேவை    சிறிய கட்களுடன். பேச்சுவார்த்தையில். உடன்பாடில்லை காரணம்  அவர்களின் கோரிக்கைகள்   எனவே… இரண்டு பெரிய கட்சிகளும். பேச்சுவார்த்தை மூலம்   இணங்கி. ஆட்சி அமைத்து விட்டார்கள்   இவ்வாறு மூன்று தடவைகள் பெரிய கட்சிகள் இரண்டும் சேர்ந்து ஆட்சி செய்தார்கள்,.......

இந்தியாவில் பிஜேபியும்  இந்தியா கூட்டணியும். இணந்து  இந்தியாவை ஆள்வார்களா ??   பதிலை எதிர்பார்கிறேன். 

உப்பு சப்பில்லாத ஜேர்மன் அரசியலில் மட்டுமே இது சாத்தியம் 🤣.

என்னை பொறுத்தவரை இது சரியான முறையும் அல்ல. 

இலங்கை இந்தியா அல்ல யூகேயில் கூட இப்படி நடக்குமா என்பது சந்தேகமே.

அப்படி நடந்தால் இரெண்டில் ஒரு கட்சி அந்த தேர்தலோடு “இரெண்டாவது பெரிய கட்சி” என்ற நிலையை இழந்து ஒரு சிறிய கட்சி என ஆகிவிடும்.

ஆனால் ஜேர்மனியில் தொங்கு பாராளுமன்றம் எப்போதும் வரும் - காரணம் விகிதாசார பிரதிநிதிதுவம், ஆனால் இந்தியா, யூகே அப்படி அல்ல - இங்கே தொங்கு பாராளுமன்றம் அபூர்வம். அப்படி வந்தால் 1+3+4 என்றே கூட்டணி அரசு அமையும். 

யுத்தம் போன்ற அவசரகால நிலையில் 1+2 என தேசிய அரசு அமைப்பார்கள்.

 

பிகு

ஸ்கொட்லாந்தின் உள்ள பாராளுமன்றத்தின் தேர்தல் விகிதாசாரம் பிரதிநிதிதுவம் மூலம்தான் நடக்கும்.

அங்கும் அநேகம் தேர்தலுக்கு பிந்திய கூட்டணிதான் அரசமைக்கும்.

ஆனால் ஒரு போதும், லேபர், எஸ் என் பி, கன்சவேடிவ் ஒன்றுடன் ஒன்று சேராது.

கிரீன், லிபரல் டெமகொரட், உதிரிகளை சேர்த்து மேல் சொன்ன மூன்றில் ஒரு கட்சி ஆட்சி அமைக்கும்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாத்தியார் said:

நிச்சயமாக அது இன்றைய நிலையில் இந்தியாவில் நடக்காது.
அங்கு மக்களுக்கான அரசியல் என்பது அறவே இல்லை என்று சொல்லலாம்.  

தங்கள் கட்சியை வளர்ப்பதற்குத் தேவையான பணத்தை மக்கள் வரிப்பணத்திலிருந்து கொள்ளையடிப்பதற்காகவே அரசாங்கத்தை பயன்படுத்துகின்றார்கள்.


மேற்கில் அரசியல் என்பது ஒப்பந்தம் எழுதுவது போல  சொன்னதை செய்வார்கள் அல்லது  செய்யக்கூடியதை மட்டுமே சொல்வார்கள்

இந்தியாவில் அப்படி அல்ல இன்றைய இந்திய அரசியல் என்பது

மக்களை ஏமாற்றிப்  பணம் சேர்க்கும் ஒரு தொழில் என்றே சொல்ல வேண்டும்.

நன்றிகள் பல  வாத்தியார்  சரியாக சொன்னீர்கள்   இந்தியாவில் எந்தவொரு கட்சியிடமும். மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்ற கொள்கை,.    விருப்பம் அறவே இல்லை   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இந்த‌ 10வ‌ருட‌த்தில் என்ன‌ ந‌ன்மை செய்த‌வை

 

போன‌ மாச‌ம் தானே விடுத‌லைப்புலிக‌ளின் த‌டையை நீடித்த‌வை

 

 

காங்கிர‌ஸ்சும் ஒன்று தான் பீஜேப்பியும் ஒன்று தான்

 

காங்கிர‌ஸ் ஆட்சிய‌ பிடிச்சா திமுக்காவின் நீட்தேர்வு ர‌த்து வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்

இவ‌ள‌வு கால‌மும் பீஜேப்பிய‌ சாட்டி த‌ப்பிச்ச‌வை 

 

பாப்போம் யார் ஆட்சிய‌ பிடிக்கின‌ம் என்று......................................................

இந்தியா ஒரு நாடாக இருக்கும்வரை எமக்கு விமோசனம் இல்லை.

இந்தியாவை உடைக்கும் வேலையை பிஜேபி மட்டுமே  கனகச்சிதமாகச் செய்யும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலா இனிமேலும் பொறுமையாக இருக்க முடியாதென்று ஒரு அழைப்பு விடுத்திருக்கின்றார், எல்லோரும் அஇஅதிமுக இல் வந்து ஒன்றாகச் சேரும் படி, எம் ஜி ஆர் & ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று...........உடனே எல்லோரும் வந்து சேர்ந்து விட்டனர்......

 

spacer.png

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

உப்பு சப்பில்லாத ஜேர்மன் அரசியலில் மட்டுமே இது சாத்தியம் 🤣.

என்னை பொறுத்தவரை இது சரியான முறையும் அல்ல. 

இலங்கை இந்தியா அல்ல யூகேயில் கூட இப்படி நடக்குமா என்பது சந்தேகமே.

அப்படி நடந்தால் இரெண்டில் ஒரு கட்சி அந்த தேர்தலோடு “இரெண்டாவது பெரிய கட்சி” என்ற நிலையை இழந்து ஒரு சிறிய கட்சி என ஆகிவிடும்.

ஆனால் ஜேர்மனியில் தொங்கு பாராளுமன்றம் எப்போதும் வரும் - காரணம் விகிதாசார பிரதிநிதிதுவம், ஆனால் இந்தியா, யூகே அப்படி அல்ல - இங்கே தொங்கு பாராளுமன்றம் அபூர்வம். அப்படி வந்தால் 1+3+4 என்றே கூட்டணி அரசு அமையும். 

யுத்தம் போன்ற அவசரகால நிலையில் 1+2 என தேசிய அரசு அமைப்பார்கள்.

எப்போதும் குறைந்த பட்சம்

பிகு

ஸ்கொட்லாந்தின் உள்ள பாராளுமன்றத்தின் தேர்தல் விகிதாசாரம் பிரதிநிதிதுவம் மூலம்தான் நடக்கும்.

அங்கும் அநேகம் தேர்தலுக்கு பிந்திய கூட்டணிதான் அரசமைக்கும்.

ஆனால் ஒரு போதும், லேபர், எஸ் என் பி, கன்சவேடிவ் ஒன்றுடன் ஒன்று சேராது.

கிரீன், லிபரல் டெமகொரட், உதிரிகளை சேர்த்து மேல் சொன்ன மூன்றில் ஒரு கட்சி ஆட்சி அமைக்கும்.

பதிலுக்கு நன்றிகள் பல.  கோஷன்.  இலங்கை கூட  பிரித்தானியா அரசியலமைப்பை.  பல ஆண்டுகளுக்கு முதல் மாற்றி விட்டது    இந்தியா ஏன் இன்னும் மாற்றவில்லை  ??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

அதே தான் கோஷான்
 மேலதிக தகவல்களுக்கு நன்றி

இப்போது நாயுடுவும் நித்திஷ்ம் ஆதரவு தருவதாகக் கடிதம் கொடுத்து விட்டார்கள் எனச்   செய்திகள் தெரிவிக்கின்றன
மோடியைக் கூட்டணியின் தலைவராக ஏகமானதாகத் தெரிவு செய்துள்ளார்கள்.
மோடியை விட்டுப் பிடிக்க நினைக்கின்றார்கள் போலத் தான் தெரிகின்றது. 

இப்போதைக்கு மோடி பிரதமர், அமித்ஷா உள்துறை அமைச்சர் என்றே அரசு அமையும் என நினைக்கிறேன்.

தெலுங்குதேசம் - சபாநாயகர்

நிதீஷ் துணை பிரதமர் என ஆட்சி அமையலாம்.

பிகு

துணைப்பிரதமர் என்றதும் தேவிலால் பெயர் நினைவுக்கு வந்தது. 90 இன் ஆரம்பகாலத்தில் இவர் து.பி யாக இருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

பதிலுக்கு நன்றிகள் பல.  கோஷன்.  இலங்கை கூட  பிரித்தானியா அரசியலமைப்பை.  பல ஆண்டுகளுக்கு முதல் மாற்றி விட்டது    இந்தியா ஏன் இன்னும் மாற்றவில்லை  ??  

இரெண்டு முறையிலும் குறைபாடுகள் உள்ளன.

விகிதாசார பிரதிநிதிதுவம், கலப்பு பிரதிநிதிதுவம் என மாறி மாறி அமல்படுத்திய இத்தாலியில் நடக்கும் ஊழல் கூத்துக்களை, நிலையற்ற தன்மையை பார்க்கிறோம்தானே.

பிரிட்டனில் இப்போ உள்ள சிஸ்டமா, விகிதாரசாரமா என 2012 அளவில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி, படு தோல்வியடடைந்தது.

இந்தியாவும் இதே நிலைதான் என எண்ணுகிறேன்.

இந்தியா மட்டும் அல்ல அமேரிக்காவும் கூட.

சில நாடுகளுக்கு பொருந்துவது ஏனைய நாடுகளுக்கு பொருந்தாது.

கலாச்சாரம் போல அரசியல் கலாச்சாரமும் நாட்டுக்கு நாடு வேறுபடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இப்போதைக்கு மோடி பிரதமர், அமித்ஷா உள்துறை அமைச்சர் என்றே அரசு அமையும் என நினைக்கிறேன்.

தெலுங்குதேசம் - சபாநாயகர்

நிதீஷ் துணை பிரதமர் என ஆட்சி அமையலாம்.

பிகு

துணைப்பிரதமர் என்றதும் தேவிலால் பெயர் நினைவுக்கு வந்தது. 90 இன் ஆரம்பகாலத்தில் இவர் து.பி யாக இருந்தார்.

👍......

அமித்ஷா உள்துறை அமைச்சராகக் கூடாது என்று சந்திரபாபு நாயுடு ஒரு கோரிக்கை வைத்ததாக சொல்கின்றனர்........

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

 

நாம் தமிழரைப் பாராட்டுகிறேன்.

அண்ணமலை.

இரெண்டு வருடத்தில் ஒரே கூட்டணி என்றால் இப்பவே ஆளை ஆள் பாராட்ட ஆரம்பித்தால்தான் மெள்ள, மெள்ள நகர்ந்து, கைகோர்ர்கும் அளவுக்கு தம்பிகளையும், சங்கிகளையும் தயார் செய்ய முடியும் என்பது அண்ணாமலைக்கு புரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரசோதரன் said:

👍......

அமித்ஷா உள்துறை அமைச்சராகக் கூடாது என்று சந்திரபாபு நாயுடு ஒரு கோரிக்கை வைத்ததாக சொல்கின்றனர்........

அமித்ஜி மீண்டும் உள்துறை அமைச்சரானால் சந்திரபாபுவுக்கு சங்குதாந். 2019 இல் என நினைக்கின்றேன் 7 தெலுங்கு தேசம்  எம்பிக்களை பாஜக கபளீகரம் செய்துகொண்டது.  தங்களுக்கு குடைச்சல் கொடுக்க மோடிஜியும் அமித்ஜியும் விரும்பமாட்டார்கள். அநேகமாக நிதிஷ்குமாரினதும் சந்திரபாபுவினதும் எம்பிக்களை பாஜகவுக்குள் இழுத்துவிடுவார்கள்.  

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடமாகாண ஆளுநராக நியமனம்; ஐனாதிபதி அநுர  நடவடிக்கையால் தமிழர்கள் மகிழ்ச்சி அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதிய ஐனாதிபதி இந்த முடிவு, தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியபகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவையாகும். 2007-ம் ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப்பட்டது. இலங்கை ஐனாதிபதி தேர்தலில் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து, 9 மாகாணங்களைச் சேர்ந்த ஆளுநர்களும் பதவி விலகினர். தொடர்ந்து, புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனும் ஒருவர். இவர் இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் உள்நாட்டு யுத்தகாலத்தில் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து மட்டகளப்பு, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஆட்சியராக வேதநாயகன் பணியாற்றி உள்ளார். 2015-ம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். வேதநாயகன் பணியாற்றிய இடங்களில் சாதாரண மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார். யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இந்தியா-இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவை சிறப்பாக நடத்தி உள்ளார்.   https://akkinikkunchu.com/?p=293162
    • தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம். இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அதன் காரணமாக போதிய தகுதிகள் இன்றி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1401508
    • ஒவ்வொரு வருடமும் வருகின்ற சூறாவளி, இம்முறை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது போல் தெரிகின்றது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.