Jump to content

இந்திய தேர்தல் முடிவுகள்- 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

தகவல்களுக்கு நன்றி. இந்த கோணத்தில் நான் சிந்திக்கவில்லை. 

நன்றி

 

3 hours ago, Kandiah57 said:

ஜேர்மனியில் உள்ள கட்சிகள்  AfD  உடனே கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க மாட்டார்கள்    AfD.  மிகப் பெரும்பான்மை  பெற்று தனித்து ஆட்சி  செய்யும் நிலை வந்தால் தான் பிரச்சனை   இந்த கட்சி இல்லாமல் கூட்டணி அமைக்க முடியும் ஆயின். மற்றைய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி செய்வார்கள்   PDS.   என்ற கட்சியும்.  கிட்டத்தட்ட இதேமாதிரி தான்   கிழக்கு ஜேர்மனியில் நல்ல ஆதரவு உள்ள கட்சி  ஒருமுறை  2004 ஆக இருக்கும்  75 அல்லது 100  பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த கட்சிக்கு கிடைத்தது   இலகுவாக அதனுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்திருக்கலாம்  ஆனால் செய்யவில்லை  மற்ற கட்சிகள் இணைந்து ஆட்சி செய்தார்கள்   அதன் பின்னர் PDS. வீழ்ச்சி அடைந்து விட்டது   இதேபோன்று தான் AfD. க்கும். நடக்கும்  

ஆனாலும் தேர்தலுக்கு தேர்தல் AfDவளர்கிறது இல்லையா.

எதையும் நடக்காது என சொல்ல முடியாது. 

இதே ஜேர்மனியில், ஜஸ்ட் 80 வருடங்கள் முன் நாஜிகளை மக்கள் பெருவாரியாக ஆதரித்தார்கள்.

ஆகவே AfD ஆட்சியில் பங்கு எடுக்கும் நிலை வர வாய்புகள் மிக அதிகம்.

இப்படியான விச செடிகளை முளையிலேயே கிள்ளி விட வேண்டு.

ஆனால் விகிதாசார முறை இந்த விசசெடிகளை பதியம் போட்டு வளர்க்க உதவுகிறது.

 

7 minutes ago, Kandiah57 said:

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன…  அதேவேளை உங்கள் கருத்துகளை நான்  அல்லது மற்றைய யாழ் கள உறுப்பினர்கள்  காட்டாயம்  எற்க வேண்டும் என்று நினைக்க கூடாது  🤣😂🤣 ஆனாலும் கருத்துகள் அருமை 

🤣. எனது கருத்தை கொஞ்சம் ஊண்டி சொல்வது உண்மைதான். ஆனால் கட்டாயம் ஏற்க வேண்டும் என திணிக்கும் எண்ணமில்லை🙏.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜகவை தவிர்த்து கூட்டணி வைப்பாராயின் திமுகவுக்கு சங்கூதலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, வாலி said:

சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜகவை தவிர்த்து கூட்டணி வைப்பாராயின் திமுகவுக்கு சங்கூதலாம்!

நிச்சயமாக ஊதலாம்.

அக்யூஸ்ட் நம்பர் வன் க்கு கூட்டணி இல்லாமலே மேடை ஏறி ஆதரவு திரட்டியவர். ஆகவே அதிமுக கூட்டணியில் சேர எந்த நெருடலும் சீமானுக்கு இல்லை. முட்டு கொடுக்கவும் தம்பிகள் இப்போதே தயார்.

இப்போ முடிந்த தேர்தலில் கூட அதிமுக கூட்டணியில் 6 சீட்டில் நின்றிருந்தால் 2 எம்பி யை யாவது அனுப்பி இருக்கலாம்.

ஆனால் ஏதோ ஒரு “சக்தி” அவரை பாஜக இல்லாத அதிமுக கூட்டணிக்கு போகாமல் தடுக்கிறது🤣.

பீஜேபி + அதிமுக கூட்டணி,

நாதக வாக்கு பிரிக்கும் தொழில் -

இதுதான் அந்த சக்தியின் இப்போதைய தந்திரோபாயம்.

இந்த கூட்டணியில் முதன்மை கட்சியாக பிஜேபி வரும் போது, நாதகவின் தொழில் வகுப்பு - வாக்கை பிரிப்பது என்பதில் இருந்து வாக்கை சேர்ப்பது என ஆகும். அப்போது இந்த கூட்டணியில் நாதகவும் சேரலாம்.

இதில் யாராலும் கணிக்க முடியாத புதிய factor விஜை.

 

18 minutes ago, வாலி said:

அடுத்தது அவருக்குப் பிறகு இரண்டாம் கட்ட தலைமைகளை உருவாக்கவேண்டிய அவசியம் உள்ளது.

மாவீரன் வரும் வரை காத்திருக்கிறார். வந்ததும் உருவாகி விடுவார்.

நாம் தமிழரில் இருந்து விரட்டப்பட்ட தகுதிவாய்ந்த, இளைய, இரண்டாம் கட்ட தலைவர்கள் பட்டியல் மிக நீளமானது.

#காளியம்மாவுக்கு எப்ப கட்டம் கட்டுவாரோ:

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாலி said:

செந்தமிழன் அண்ணாவின் கட்சிக்கு 8% வாக்குகள் கிடைத்தது  வரவேற்கத்தக்கது.   இரண்டு விடயங்களை செந்தமிழன் அண்ணா கருத்திற்கொள்ளவேண்டும்  முதலாவது கூட்டணி இல்லாமல் எதையும் சாதிக்கமுடியாது அடுத்தது அவருக்குப் பிறகு இரண்டாம் கட்ட தலைமைகளை உருவாக்கவேண்டிய அவசியம் உள்ளது.

கூட்டணி வைத்தால்  சீமான் காணாமல் போய்விடுவார்   😂 8%   தேய்த்து 3% ஆகிவிடும்  வெல்லவிட்டாலும்  காரியம் இல்லை அவர் தனித்து தான் போட்டி இடுவார்  அப்ப அவரது  வளர்ச்சி தெரியும்  கூட்டணியில்  சேர்ந்தால்.  அவரது வாக்கு வீதம் தெரியாது  சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவிட்டாலும்.  கூட கூட்டணி அமைப்பதில்லை  மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்  அவரது மகன்  வளர்த்து வரைவார்.  வேறு எவரும் தேவையில்லை  

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பிஜேபி முன்னர் போல் கண்டமேனிக்கு திமுக மீது வழக்குகளை, துறைகளை ஏவி விடுவது இனி கொஞ்சம் கஸ்டம்தான்🤣.

# மனவாடு #మనవాడు

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

May be an image of 3 people and text that says "K mt Madng *Parliament canteen contractor திங்கிறதுக்குன்னே ஜெயிச்சு வர்றானுக!"

எட்டாப்பழம் புளிக்கும் என்பதை அழகாக கூறியுள்ளனர் இந்த மீம்ஸ் மூலம்.

 இதற்கு @Kavi arunasalam அவர்கள் ஓவியம் வரைந்தால் எப்படி வரைவார்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

444912478_858018723029768_23384942521601

 

 

447852251_858029766361997_23170428991865

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

 

பிஜேபி முன்னர் போல் கண்டமேனிக்கு திமுக மீது வழக்குகளை, துறைகளை ஏவி விடுவது இனி கொஞ்சம் கஸ்டம்தான்🤣.

# மனவாடு #మనవాడు

என்னையும் உங்க கூட்டணியில சேர்ப்பீர்களா?என்று கேட்பது மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு வங்கம்: மமதாவின் மாயாஜாலத்திற்கு முன் பலிக்காமல் போன மோதியின் மேஜிக்

மேற்கு வங்கம்

பட மூலாதாரம்,ANI

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரபாகர் மணி திவாரி
  • பதவி, பிபிசி இந்திக்காக, கொல்கத்தா.
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

மேற்கு வங்கத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் மமதா பானர்ஜியின் மேஜிக் மீண்டும் வெற்றியைத் தந்துள்ளது.

மறுபுறம் பிரதமர் நரேந்திர மோதியின் பிரமாண்டமான தேர்தல் பிரசாரங்கள், பதினைந்துக்கும் அதிகமான பேரணிகள் மற்றும் ரோட் ஷோக்களுக்கு பிறகும் பாஜக கடந்த முறை பெற்ற இடங்களைக்கூட இந்த முறை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் மாநில வாக்காளர்கள் மீதான திரிணாமுல் காங்கிரஸின் பிடி தளர்வதற்குப் பதிலாக வலுப்பெற்றுள்ளது என்பதை மமதா, அபிஷேக் ஜோடி மீண்டும் நிரூபித்துள்ளது.

பாஜக முன்வைத்த மிகப்பெரிய விஷயங்களான சந்தேஷ்காலி, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை சூழ்நிலை மாறியபோதும் தனது அரசியல் ஆதாயத்திற்காக மமதா பயன்படுத்திக் கொண்ட விதம், கட்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

கட்சியின் மகத்தான வெற்றிக்குப் பிறகு மமதா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜியை தனது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வாக்காளர்கள், பாஜகவின் முதுகெலும்பை உடைத்துள்ளனர். இது மோதிக்கு எதிரான வாக்கு. பல அரசியல் கட்சிகளை மோதி உடைத்துள்ளார். இந்த முறை பொதுமக்கள் அவரது கட்சியையே உடைத்துள்ளனர். இந்த முறை மக்கள் தங்கள் வாக்குகள் மூலமாக தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். மோதியும் அமித்ஷாவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்,” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

 

மோதிஜி, உங்கள் மேஜிக் முடிந்துவிட்டது: மமதா

"மோதிஜி, உங்கள் மேஜிக் முடிந்துவிட்டது. நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று மமதா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார்.

தேர்தல் ஆணையத்தை விமர்சித்த மேற்கு வங்க முதல்வர், "ஆணையம் தனது தலைவரின் குரலாகச் செயல்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியவர்கள் மன உறுதியை உடைக்க முயன்றனர். அந்த அறிக்கைகள் அனைத்தும் பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டவை" என்று கூறினார்.

"இந்த வெற்றி சாமானிய மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான 'இந்தியா'வின் வெற்றி. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடன் இருப்பவர்களுக்கும், சேர விரும்புபவர்களுக்கும் என் ஆதரவு உண்டு. எம்.எல்.ஏ.க்களை உடைக்க பாஜக மாபெரும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் கடைசி வரை அது வெற்றிபெறவில்லை,” என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டார்.

சந்தேஷ்காலி விவகாரம் குறித்த ஸ்டிங் வீடியோ, குடியுரிமை திருத்தச் சட்டம், மமதா பானர்ஜி அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் ஆகிய இந்த மூன்றும் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் மகத்தான வெற்றிக்கும், பாஜகவுக்கு ஏற்பட்ட பெரிய பின்னடைவுக்கும் மிகப்பெரிய காரணங்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்தத் தேர்தலில் திரிணாமுல் தளபதி என்று அழைக்கப்படும் எம்பி அபிஷேக் பானர்ஜி மற்றும், பாஜகவின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஷுபேந்து அதிகாரி ஆகிய இரு தலைவர்களின் நன்மதிப்பு சோதனைக்கு உள்ளானது. தேர்தல் முடிவுகள் அபிஷேக்கின் தளபதி பதவியை வலுப்படுத்தியுள்ள நிலையில், ஷூபேந்துவின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

 

மமதா பானர்ஜிக்கு இந்த வெற்றி எப்படி கிடைத்தது?

மேற்கு வங்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,திரிணாமுல் காங்கிரஸின் வெற்றி அதன் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  

மேற்கு வங்கத்தில் தொகுதிகளை அதிகரிக்க முயன்ற பாஜகவுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் பின்னடைவை அளித்துள்ளது. இடங்களை அதிகரிப்பது ஒருபுறம் இருக்க, கடந்த முறை பெற்ற இடங்களைக்கூட அக்கட்சியால் தக்கவைக்க முடியவில்லை.

காங்கிரஸுக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது. ஆனால் காங்கிரஸின் வலிமையான கோட்டையாகக் கருதப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பஹரம்பூர் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரியின் தோல்வி அக்கட்சியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள டிஎம்சி வேட்பாளரும் ஆல்ரவுண்ட் கிரிக்கெட் வீரருமான யூசுப் பதானிடம் அவர் தோல்வியடைந்தார்.

அதீர் இதற்கு முன் அந்தத் தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். இடதுசாரி மற்றும் மமதா அலையின்போதுகூட தனது இடத்தை அவர் காப்பாற்றி வந்தார். அதேநேரம் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டு களமிறங்கிய சிபிஎம் கட்சிக்கு ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை.

மமதா பானர்ஜியை தவிர அபிஷேக் மட்டுமே கட்சியின் தேர்தல் பிரசாரப் பொறுப்பைத் தன் தோளில் சுமந்தார். கொல்கத்தாவை ஒட்டியுள்ள டயமண்ட் ஹார்பர் தொகுதியில் அவரும் போட்டியிட்டார்.

தனது வெற்றி குறித்து அத்தனை உறுதியுடன் இருந்த அவர், மற்ற வேட்பாளர்களுக்காகத் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். கட்சிக்குக் கிடைத்துள்ள இந்த அபார வெற்றி காரணமாக கட்சியில் வாரிசுரிமை குறித்து எழுந்துள்ள கேள்விகளும் தற்போது குறைய வாய்ப்புள்ளது.

 

பாஜக எழுப்பிய முக்கிய விவகாரம் ’சந்தேஷ்காலி’

மேற்கு வங்கம்
படக்குறிப்பு,தேர்தலுக்கு முன்பு அமலுக்கு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம்கூட இங்கு பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை

சந்தேஷ்காலி நிலப்பறிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு விவகாரத்தை பாஜக தனது பிரசாரத்தில் முக்கிய விஷயமாக முன்வைத்தது.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்த விவகாரம் தொடர்பாக தீவிர போராட்டத்தை அக்கட்சி தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோதியும் தனது பாராசாத் பேரணியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். பின்னர் அவர்களில் ஒருவரான ரேகா பாத்ரா, பஸீர்ஹாட் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

ஆரம்பக் கட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் இந்தப் பிரச்னையால் கவலைகொண்டது. சேதத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அக்கட்சி துவக்கியது. ஆனால் இந்த விஷயத்தில் பாஜகவுக்கு தெளிவான முன்னிலை காணப்பட்டது.

அதன்பிறகு திடீரென வெளிவந்த ஒரு ஸ்டிங் வீடியோ ஒட்டுமொத்த நிலைமையையும் மாற்றியது. இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு இருந்த முன்கை, திரிணாமுல் காங்கிரஸுக்கு சென்றுவிட்டது.

அந்த வீடியோவில் உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர், ’இந்த விவகாரம் முழுவதும் கட்டுக்கதை என்றும் இதன் பின்னணியில் ஷுபேந்து அதிகாரி இருப்பதாகவும்’ சொல்வதைக் கேட்க முடிந்தது.

அதன்பிறகு மமதா அதை வங்காளப் பெண்களின் தன்மானத்துடன் இணைத்தார். இதன்மூலம், மமதாவின் மகளிர் வாக்கு வங்கியை உடைக்க பாஜகவின் மிகப் பெரிய ஆயுதமாக இருந்திருக்க வேண்டிய விவகாரம், இந்த வாக்கு வங்கியை மேலும் வலுப்படுத்தும் மமதாவின் ஆயுதமாக மாறியது.

தேர்தலுக்கு முன்பு அமலுக்கு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம்கூட இங்கு பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதை என்ஆர்சியுடன் இணைத்த மமதா, இதன் கீழ் பலர் ஊடுருவல்காரர்களாக அறிவிக்கப்பட்டு வங்காளத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தொடர்ந்து கூறினார்.

ஆசிரியர் பணி நியமன ஊழல் உள்ளிட்ட பல ஊழல்களும் திரிணாமுல் காங்கிரஸின் வெற்றிக்குத் தடையாக இருக்கவில்லை. மாறாக மமதா அரசின் நலன் சார்ந்த திட்டங்கள் வெற்றிக்குக் கைகொடுத்தன.

 

ஷூபேந்து அதிகாரியின் பங்கு பற்றிய கேள்வி

மேற்கு வங்கம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மேற்கு வங்கத்தின் மூத்த தலைவர்கள் மத்திய தலைமையின் மீது கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

மேற்கு வங்க வெற்றியுடன் ஒருபுறம் திரிணாமுல் வாரிசுரிமை தொடர்பான அபிஷேக் பானர்ஜி பற்றிய விவாதம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் பாஜகவில் ஷூபேந்து அதிகாரியின் பொறுப்புகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

"மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரப் பொறுப்பை ஷூபேந்து அதிகாரியிடம் கட்சி ஒப்படைத்திருந்தது. கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திலீப் கோஷின் தொகுதியை மாற்றியது, சந்தேஷ்காலி சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரேகா பாத்ராவுக்கு பஸீர்ஹாட் நாடாளுமன்றத் தொகுதி அளிக்கப்பட்டது உட்பட வேட்பாளர் பட்டியல் தொடர்பான மத்திய தலைமையின் எல்லா முடிவுகளும் அவரது பரிந்துரையின்படியே எடுக்கப்பட்டன,” என்று மாநில பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

"இதுபோன்ற பெரும்பாலான முடிவுகள் கட்சிக்கு எதிராகச் சென்றுள்ளன என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. திலீப் கோஷின் தொகுதி மாற்றத்தால் அவர் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது மட்டுமல்லாமல், கடந்த முறை அவர் வென்ற மேதினிபூர் தொகுதியும் கைவிட்டுப்போய்விட்டது,” என்றார் அவர்.

இப்போது தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மேற்கு வங்கத்தின் மூத்த தலைவர்கள் மத்திய தலைமையின் மீது கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

"ஷூபேந்து அதிகாரியை மட்டுமே நம்பி கட்சியின் உயர்மட்டத் தலைமை தவறு செய்தது. இது தவிர கட்சிமாறி வருபவர்களுக்கு சீட்டு கொடுத்து, உள்ளூர் கட்சிக்காரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்," என்று தன் பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பெயரில் பேசிய கட்சியின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.

"மேலும் முன்னாள் மாநில தலைவர் திலீப் கோஷின் தொகுதி மாற்றப்பட்டது. இதனால், அவர் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட மத்திய தலைமையின் முடிவுகள் காரணமாக கட்சியில் அதிருப்தி ஏற்பட்டது. இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்றார் அவர்.

 

திட்டங்களின் பலனைப் பெற்ற டிஎம்சி

மேற்கு வங்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"இந்தத் தேர்தல் மோதிக்கும் மம்தாவுக்கும் இடையே நடைபெற்றது. எனவே இந்த முடிவுகளுக்கான பொறுப்பையும் மோதிதான் ஏற்கவேண்டும்,” என்கிறார் ஷிகா முகர்ஜி.

"மமதா பானர்ஜி அரசின் தோல்விகள் மற்றும் மாநிலத்தில் பெண்களின் அவலநிலை என்று கூறப்படும் பிரச்னைகளை முன்னிறுத்தி பாஜக இந்தத் தேர்தலில் போட்டியிட்டது. மேற்குவங்கத்தில் இந்தத்தேர்தல் மோதிக்கும் மம்தாவுக்கும் இடையே நடைபெற்றது. எனவே இந்த முடிவுகளுக்கான பொறுப்பையும் மோதிதான் ஏற்கவேண்டும்,” என்று அரசியல் ஆய்வாளர் ஷிகா முகர்ஜி கூறினார்.

”மமதா பானர்ஜி மீதும் அவரது கட்சி மீதும் நம்பிக்கையை மாநில மக்கள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர். சந்தேஷ்காலி, ஆசிரியர் பணி நியமன ஊழல், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற பாஜக முன்வைத்த விவகாரங்கள் முற்றிலும் பலனளிக்கவில்லை."

"இதுதவிர மதரீதியாகப் பிளவுபடுத்தும் முயற்சியும் முன்போலவே பலன் கொடுக்கவில்லை. மறுபுறம் மமதா அரசின் எல்லா திட்டங்களில் இருந்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பயனடைந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் பாஜகவுக்கு பெரிய வெற்றி கிடைத்தது. ஆனால் அதன் பிறகு 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியின் வாக்குகள் குறைந்தன. எதிர்பார்த்தபடி முடிவுகள் இருக்கவில்லை. இம்முறை அது மேலும் குறைந்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cnll92z2k1jo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக-வுக்கு நிபந்தனையா? - சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன?!

மத்தியில் ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 272 எம்.பி-க்கள் தேவை. ஆனால், கடந்த தேர்தலில் 303 இடங்களைப் பிடித்த பா.ஜ.க., இந்த முறை 240 இடங்களில்தான் ஜெயித்திருக்கிறது. ஆகவே, ஆந்திராவில் 16 இடங்களில் வென்றிருக்கும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, பீகாரில் 12 இடங்களில் வென்றிருக்கும் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தயவுடன் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையவிருக்கிறது.

 
 
 
பாஜக-வுக்கு நிபந்தனையா? - சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன?!
 
 

கடந்த முறை பா.ஜ.க மட்டுமே 303 எம்.பி-க்களை வைத்திருந்தார்கள். இப்போது, இந்த இரு கட்சிகளையும் சேர்த்து மொத்தம் 293 எம்.பி-க்களுடன் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமையவிருக்கிறது.

 
 

எப்படியோ மத்தியில் மீண்டும் அதிகாரத்துக்கு வருகிறோம், மீண்டும் பிரதமர் ஆகிறோம் என்று மோடி ஆசுவாசப்பட்டாலும், சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் வைத்துவரும் நிபந்தனைகளால் பா.ஜ.க தலைவர்கள் விழிபிதுங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு மத்திய அரசின் அச்சாணிகளாக இருக்கப்போகும் இந்த இரு கட்சிகளின் நிபந்தனை நிறைவேற்றுவதைத் தவிர, பா.ஜ.க-வுக்கு வேறு வழியே இல்லை.

 
நிதிஷ்குமார்
 
நிதிஷ்குமார் twitter
 

சிறப்பு அந்தஸ்து கோரிக்கை

 

மிக முக்கியமாக தங்கள் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை அவர்கள் இருவரும் முன்வைக்கிறார்கள். இதற்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவுக்கு மத்திய பா.ஜ.க அரசு சிறப்பு அந்தஸ்து தர மறுக்கிறது என்ற சர்ச்சையில்தான் கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

 
 

ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டபோது, ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை 2014-ம் ஆண்டு மத்திய அரசு வழங்கியது. அந்தக் கோரிக்கையை 2019-ம் ஆண்டு பா.ஜ.க அரசு நிராகரித்தது. அப்போது விட்டதை இப்போது பிடிக்கிறார் சந்திரபாபு நாயுடு. தற்போது, அஸ்ஸாம், நாகாலாந்து, இமாச்சலப்பிரதேசம், மணிப்பூர், சிக்கிம், மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது.

 
பாஜக-வுக்கு நிபந்தனையா? - சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன?!
 
 

மக்களவை சபாநாயகர் பதவி தெலுங்கு தேசத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் சந்திரபாபு நாயுடு முன்வைத்திருக்கிறார். மேலும், அமைச்சரவையில் கல்வி, சுகாதாரம், சாலைகள், பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட சில முக்கிய துறைகள் வேண்டுமென்று அவர் வலியுறுத்திவருகிறார்.

 
 

நிதிஷ்குமார் 

 

சந்திரபாபு நாயுடுவைப் போலவே, நிதிஷ்குமாரும் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்கிறார். நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தின் ஆட்சி பீகாரில் நடைபெற்றுவரும் நிலையில், இந்தக் கோரிக்கையை பா.ஜ.க-விடம் அவர் நிபந்தனையான வலியுறுத்துகிறார்.

 
நிதிஷ்குமார்
 
நிதிஷ்குமார்
 

நிதிஷ்குமார் இரண்டு கேபினட் அமைச்சர்கள், ஒரு இணை அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று கேட்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, நிதிஷ்குமார் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தவர். இந்த முறை ரயில்வே அமைச்சர் பதவியை அவர் கேட்கிறார். ஆனால், நிதித்துறை, உள்துறை, ரயில்வே போன்ற சில முக்கியமான துறைகளை தானே வைத்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க விரும்புகிறது.

 
 

குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பது இந்த இரு கட்சிகளின் இன்னொரு முக்கியமான நிபந்தனை. கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் பா.ஜ.க நினைத்தவற்றை எல்லாம் செய்தது. பிரிவு 370 நீக்கம் போன்ற தனது முக்கிய அரசியல் அஜெண்டாக்களை எல்லாம் பா.ஜ.க நிறைவேற்றியது. குறைந்தபட்ச பொது செயல் திட்டம் கொண்டுவரப்பட்டால் பா.ஜ.க தன் விருப்பப்படி திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

 
குமாரசாமி - தேவகவுடா
 
குமாரசாமி - தேவகவுடா
 

காரணம், குறைந்தபட்ச பொது செயல் திட்டம் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதும் இந்த இரு கட்சிகளின் நிபந்தனையாக இருக்கிறது. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி ஆட்சியின்போது அந்த ஒருங்கிணைப்புக்குழுவின் அமைப்பாளராக ஜார்ஜ் ஃபெண்டான்டஸ் இருந்தார். தற்போது, அந்தப் பதவிக்கு நிதிஷ்குமார் பொருத்தமானவர் என்று ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

இந்த இரு கட்சிகள் தவிர தலா இரண்டு எம்.பி-க்களைப் பெற்றிருக்கும் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளமும், பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனாவும் மத்திய அமைச்சரவைப் பதவிகளைக் கேட்பதாக சொல்கிறார்கள்.

 
பவன் கல்யாண்
 
பவன் கல்யாண்
 

குமாரசாமி தனக்கு கேபினட் அமைச்சர் பதவி வேண்டுமென்றும், வேளாண் துறை வேண்டும் என்றும் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்தாண்டு காலம் சுதந்திரமாக இயங்கிய பா.ஜ.க-வின் கைககள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கட்டப்பட்டிருக்குமா? பல ரிமோட் கன்ட்ரோல்கள் மூலம் இயங்கும் நிலையில்தான் பா.ஜ.க அரசு இருக்குமா? என்ற கேள்விகள் இப்போது எழுந்திருக்கின்றன.

பாஜக-வுக்கு நிபந்தனையா? - சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன?!| Nitish kumar and chandrababu naidu wants special status for Andhra pradesh and Bihar - Vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2024 at 19:49, பிழம்பு said:

குமாரசாமி தனக்கு கேபினட் அமைச்சர் பதவி வேண்டுமென்றும்,

ஒருபோதும் கொடுக்க முடியாது    வேண்டுமாயின்  பலகாரங்கள். கடத்தல் அமைச்சர் பதவியை கொடுக்கலாம்...........🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙏

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் அரசு நிர்வாகிகள் ஆகியோரின் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை டிசம்பர் மாதம்  30  ஆம் திகதிக்குள் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் அவைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை பெற்ற நபர்களின் பெயர் பட்டியல் இலங்கை பொலிஸாரிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குறித்து விசாரித்து துப்பாக்கிகளை பொலிஸ் காவலில் எடுக்க அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198551
    • வேட்பாளர் பட்டியலில் பெயர் ; பெண் முறைப்பாடு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.  யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளரிடம் செவ்வாய்க்கிழமை (12) அன்று முறைப்பாடு செய்துள்ளார்.  அப்பெண்  மேலும் தெரிவிக்கையில் , “சுயேட்சை குழுவொன்று தன்னுடைய அனுமதி இன்றி , வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதுவரை காலமும் எனக்கு இந்த விடயம் தெரிய வரவில்லை. நேற்றைய தினம் திங்கட்கிழமை எனது மாணவி ஒருவர் எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து , தேர்தலில் போட்டியிடுகிறீர்களா ? என வினாவிய போதே , எனது பெயர் வேட்பாளர் பட்டியலில் வந்திருந்தமை தெரிய வந்தது.  அதனை உறுதிப்படுத்திக்கொள்ள யாழ் . மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அது என்னுடைய பெயர் தான் என்பதனையும் எனது அனுமதியின்றி எனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சுயேட்சை குழு தலைவர் உள்ளடக்கி உள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.”  அது தொடர்பில் யாழ் . மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் முறையிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.   https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வேட்பாளர்-பட்டியலில்-பெயர்-பெண்-முறைப்பாடு/150-347050
    • நீங்கள் ஒரு மணித்தியாலத்தினை கூட்டி சொல்கிறீர்கள்.  தற்பொழுது நேரம் மாலை 5.12
    • எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி பதவி, பிபிசி செய்தியாளர் “குழந்தைப் பருவத்திலேயே எங்களுக்கு நிச்சயம் செய்துவிடுவார்கள். அதன் பிறகு அந்த பெண்ணின் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் மாப்பிள்ளை வீட்டார் தான் எடுப்பார்கள். ஒருவேளை அந்த பெண்ணுக்கு இந்த உறவிலிருந்து வெளியில் வர வேண்டும் என்றால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும். என்னிடம் எனது கணவர் வீட்டார் ரூ. 18 லட்சம் கேட்டுள்ளனர்.” மத்திய பிரதேசத்திலுள்ள ராஜ்கர் மாவட்டத்தில் இருக்கும் கெளஷல்யா இவ்வாறு கூறுகிறார். இந்த நடைமுறை பல தலைமுறைகளாக அங்கு நடப்பதாகவும் இதை ‘ஜடா நாத்ரா’ என்று அழைப்பதாகவும் அவர் தெரிவித்தார். பகாரியா கிராமத்தை சேர்ந்த கெளஷல்யா, தனது இரண்டாம் வயதில் இந்த நாத்ரா வழக்கப்படி நிச்சயம் செய்யப்பட்டு, 2021 ஆண்டு தன்னுடைய 22 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். அவருடைய தந்தை ஒரு விவசாயி. “கடந்த மூன்று ஆண்டுகளில் நான் மிகுந்த வன்முறைக்கு ஆளானேன். என்னிடம் ஐந்து லட்சம் பணமும், இருசக்கர வாகனமும் கேட்டனர். அதை என்னால் தரமுடியாததால் என்னுடைய தந்தை வீட்டுக்கு திரும்பி வந்தேன்,” என்றார் கெளஷல்யா.   சமூக அழுத்தத்திற்கும் திருமண உறவிலிருந்து வெளிவர பயந்தும் கெளஷல்யாவின் குடும்பத்தினர் இந்த பிரச்னையை பெரிதாக்க விரும்பாமல் மீண்டும் அவரை அவரது கணவர் வீட்டிற்கு பலமுறை அனுப்பிவைத்து விட்டனர். “நான் துன்புறுத்தப்பட்டேன். எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நான் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து 18 லட்ச ரூபாய் பணத்தை அவர்களிடம் கொடுத்து என்னை இந்த உறவிலிருந்து விடுவிக்க வேண்டும்.” என்று அவர் கூறினார். 2023 ஆம் ஆண்டு கெளஷல்யா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த பிறகு மீண்டும் தனது கணவர் வீட்டிற்கு செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இவ்வளவு பணத்தை கொடுக்க இயலாது என்பதை உணர்ந்த குடும்பத்தினர் இவரை மீண்டும் கணவர் வீட்டிற்கு செல்லும்படி வற்புறுத்தியுள்ளனர். இந்த விஷயம் கிராமப் பஞ்சாயத்து வரை சென்றது. அங்கு, இத்திருமணத்தை விட்டு வெளியேற வேண்டுமென்றால் ரூ.18 லட்சத்தை கொடுத்தாக வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கெளஷல்யா, சோண்டியா சமூகத்தை சேர்ந்தவர். இது இதர பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்ற சமூகமாகும். இச்சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய பிரச்னைகளை தீர்க்க காவல்துறையிடமோ நீதிமன்றமோ செல்வதில்லை. கிராமப் பஞ்சாயத்திற்கு மட்டும் தான் செல்கிறார்கள்.   படக்குறிப்பு, கெளஷல்யா சோண்டியா சமூகத்தை சேர்ந்தவர். இது இதர பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்ற சமூகமாகும். ராஜஸ்தானிலும் தொடரும் இந்த பழக்கம் பகாரியா கிராமம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. இந்த ஊருக்குள் செல்லும் பிரதான சாலையே மேடும் பள்ளமுமாக இருக்கிறது. இங்கு பெரும்பாலும் மண் சாலைகள் தான் இருக்கின்றது. அதே போல பெரும்பாலான பெண்கள் முக்காடு அணிந்தபடியே இருக்கின்றனர். தேசிய குடும்பநலத்துறை ஆய்வின் படி, ராஜகர்கில் 52% பெண்கள் படிப்பறிவில்லாதவர்களாகவும், 20 ல் இருந்து 24 வயதுக்குட்பட்ட பெண்களில் 46 சதவீதத்தினர் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமண உறவில் தள்ளப்படுகின்றனர். அதாவது குழந்தைத் திருமணத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் தெரியவருகிறது. 2011 ல் எடுத்த கணக்கெடுப்பின் படி ராஜ்கர்கின் மக்கள்தொகை 15.45 லட்சமாக இருந்தது. அதில் பெண்கள் 8 லட்சம் பேர் இருக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் ராஜ்கர் பகுதியை போல, ராஜஸ்தானில் உள்ள அகர் மல்வ, குணா, ஜலவர் ஆகிய இடங்களிலும் ஜடா நாத்ரா இன்னும் நடைமுறையில் தொடர்ந்து வருகிறது.   படக்குறிப்பு, பகாரியா கிராமம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. இந்த ஊருக்குள் செல்லும் பிரதான சாலையே மேடும் பள்ளமுமாக இருக்கும் இந்த பழக்கம் பற்றிய பின்னணி 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை இவ்விடங்களில் நடந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ராஜ்கரின் பீஜி கல்லூரியில் 1989 ஆம் ஆண்டு முதல் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றுகின்றார் சீமா சிங் . "ஜடா நாத்ரா நடைமுறை பற்றி எந்தவொரு எழுத்துப்பூர்வமான ஆதாரமும் இல்லை. ஆனால் பல ஆண்டுகளாக இந்த பழக்கம் கைம்பெண்களுக்கும், திருமணமாகாத பெண்களுக்கும், ஆண்களுக்கும் கைகொடுத்துள்ளது. ஆரம்ப காலங்களில் இது நாட பாத்ரா என்று அழைக்கப்பட்டது." என்று அவர் கூறினார். அவரைப் பொருத்தவரை, “இந்த நடைமுறையினால் கைம்பெண்களுக்கு மீண்டும் இந்த சமூகத்தில் இணைந்து செயல்பட ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இப்பொழுது இந்த வடிவமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இன்றைக்கு பெண்களை பேரம் பேசி சிறுவயதிலேயே திருமணமோ அல்லது நிச்சயமோ செய்துவைக்கின்றனர். பின்னர் ஏதேனும் சிக்கல் வரும் பொழுது இந்த உறவிலிருந்து வெளிவர பெண்கள் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. பெண்கள் இந்த நடைமுறையை எதிர்த்தாலோ அல்லது பணத்தை கொடுக்கமுடியவில்லை என்றாலோ பிரச்னை கிராமப் பஞ்சாயத்திற்கு செல்லும். அந்த சமூகத்தை சேர்ந்தவர்களே எவ்வளவு பணம் கொடுத்து விவாகரத்து பெற வேண்டும் என்று முடிவெடுப்பர்,”என்று சீமா சிங் குறிப்பிடுகிறார். அங்குள்ள உள்ளூர் பத்திரிகையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளரான பானு தாகூர் இதைப் பற்றி கூறுகையில், “இங்குள்ள மக்களின் மீது இந்த நடைமுறையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இவர்கள் பதிவுத் திருமணத்தை விட இதைத் தான் அதிகமாக நம்புகின்றனர்.” என்றார். கடந்த மூன்று ஆண்டுகளில் 500 க்கும் மேற்பட்ட ஜடா நாத்ரா வழக்குகள் ராஜ்கரில் பதிவாகியுள்ளன. பதிவு செய்யப்பட்ட வழக்குகளை பற்றி மட்டும் தான் தெரியும், இன்னும் பதிவு செய்யப்படாத இதுபோன்ற பல நிகழ்வுகள் இருக்கலாம் என்று பானு தாகூர் தெரிவித்தார்.   படக்குறிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் 500 க்கும் மேற்பட்ட ஜடா நாத்ரா வழக்குகள் ராஜ்கரில் பதிவாகியுள்ளன மூன்று ஆண்டுகளில் 500 வழக்குகள் இதுதொடர்பாக நாங்கள் ராஜ்கரின் காவல் கண்காணிப்பாளர் ஆதித்ய மிஷ்ராவை சந்தித்தோம். “பெண்களின் உரிமைகளை பறிக்க இன்றளவும் முயற்சி நடக்கிறது. இது சட்டத்திற்கு புறம்பானதாக இருந்தாலும் பாரம்பரியம் என்ற பெயரில் இதை தொடர்ந்து செய்து வருகின்றனர்,” என்கிறார் அவர். “குழந்தைப்பருவத்தில் அவர்களுக்கு நிச்சயம் செய்து வைத்துவிடுகிறார்கள். பின் இந்த உறவில் பிரிவு ஏற்பட்டால் அந்த பெண்ணிடம் பல லட்ச ரூபாயை மாப்பிளை வீட்டார் கேட்கின்றனர். பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் ஒரு செயலாக இது இருக்கின்றது, ஆனால், இங்குள்ள மக்கள் இதை சரியான செயல்முறையாக பார்க்கின்றனர். ஏறத்தாழ 500 வழக்குகள் கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவாகியுள்ளது. ஆனால் இதை பார்க்கும் பொழுது முன்பை விட மக்கள் தைரியமாக முன்வந்து சட்டத்தின் உதவியை நாடுவது நம்பிக்கையளிக்கிறது,” என்றார் ஆதித்ய மிஷ்ரா. “இந்த நடைமுறையில் பெண்களை வைத்து பேரம் பேசுகின்றனர். பழைய உறவிலிருந்து வெளிவர வேண்டுமானால் அப்பெண் ஒரு தொகையை அந்த ஆணுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அந்த பெண்ணுக்கு வெளியில் பல வரன்கள் பார்க்கப்படும். அதில் யார் அந்த பெண்ணுக்கு அதிக தொகையை கொடுக்கின்றனரோ அவருடன் அந்தப் பெண் செல்ல நிர்பந்திக்கப்படுகிறார். அவரிடமிருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் பழைய திருமண உறவிலிருந்து அந்தப் பெண் வெளியேறுகிறார்,” என்கிறார் சீமா சிங்.   படக்குறிப்பு, முன்பை விட மக்கள் தைரியமாக முன்வந்து சட்டத்தின் உதவியை நாடுவது நம்பிக்கையளிக்கிறது என்கிறார் காவல் கண்காணிப்பாளர் ஆதித்ய மிஷ்ரா இது மங்கிபாயின் கதை ராஜ்கரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோடக்கியா கிராமத்தை சேர்ந்தவர் மங்கிபாய். இவரின் கதையும் கெளஷல்யா போன்றது தான். இதை எடுத்துரைக்கும் போது அவர் உணர்ச்சிவசப்பட்டார். “எனக்கு அங்கு ஒழுங்கான உணவோ அல்லது உறங்கும் இடமோ கிடைக்கவில்லை. என்னுடைய கணவர் மது அருந்துவதை தடுக்கும் போது என்னை அடிப்பார். என்னுடைய வாழ்க்கை அங்கு மோசமாகிவிட்டது. எனக்கு பெரிய கனவுகள் இருந்ததில்லை. மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டும் தான் இருந்தது. ஆனால் அதுவும் நடக்காமல் போய்விட்டது,” என்று வருந்தினார். அந்த திருமணத்தில் இருந்து வெளியேற அவர் 5 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று கணவர் வீட்டார் கேட்டுள்ளனர். அதனால் கிராமப் பஞ்சாயத்திற்கு அதனை எடுத்து சென்ற போது அது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மங்கிபாய், கில்ச்சிபூர் காவல் நிலையத்தில் தனது கணவர், மாமனார், மற்றும் மைத்துனருக்கு எதிராக புகார் கொடுத்தார். காவல் துறையிடமிருந்து கிடைத்த தகவலின் படி, மங்கிபாயின் கணவர் கமலேஷ் , மைத்துனர் மங்கி லால் மற்றும் மாமனார் கன்வர் லால் மீது இந்திய தண்டனை சட்டம் 498A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது அவர்கள் அனைவரும் பிணையில் வெளியே வந்துவிட்டனர். மங்கிபாய் தற்பொழுது தனது பெற்றோருடன் வசிக்கிறார். மங்கிபாயின் தந்தையும் அவரின் சகோதரர்களும் இருவரும் தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர். அவரின் தந்தை 5 லட்சம் ரூபாய் தன்னிடம் இல்லை என்று கூறினார். அதனால் அவரால் தனது மகளை வேறு யாருக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது. படக்குறிப்பு, கணவரை பிரிந்து வாழும் மங்கிபாய் இதற்கிடையில் மங்கிபாயின் கணவர் கமலேஷ் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். பிபிசியிடம் பேசிய கமலேஷ், “ஆறு மாதத்திற்கு முன்பு மங்கிபாயின் தந்தைக்கு மூன்று லட்சம் வழங்கினேன். திருமணத்தின் போது ஒரு தோலா தங்கத்தையும், ஒரு கிலோ வெள்ளி நகைகளையும் வழங்கினேன். நாங்கள் கொடுத்ததை தான் திருப்பி கேட்கிறோம். அதை நாங்கள் நிச்சயம் வாங்கியே தீருவோம்”. என்றார். இந்த பணம் எதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று எழுப்பிய கேள்விக்கு கமலேஷ் விடையலளிக்கவில்லை.   படக்குறிப்பு, மங்கிபாயின் கணவர் கமலேஷ் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். கிராமத்தினர் தலையீடு 70 வயதாகும் பவன் குமார்( பெயர் மற்றப்பட்டுள்ளது) இது தொடர்பான கிராமப் பஞ்சாயத்துகள் பல நூற்றாண்டுகளாக நடந்து வருவதாக தெரிவித்தார். இதன் தீர்ப்புகள் எல்லாமே மாப்பிள்ளை வீட்டாருக்கு சாதகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். “இந்த கிராமத்தில் இதுபோன்ற வழக்குகளில் கிராமப் பஞ்சாயத்தின் தீர்ப்பே இறுதியானது. அறுபதாயிரம் முதல் எட்டு லட்சம் வரையிலான பணம் சம்பத்தப்பட்ட வழக்குகளை நான் தீர்த்துள்ளேன்.” என்றார். “சிறுவயதிலேயே திருமணம் நிச்சயிக்கப்படுவதால் பெண்கள் இந்த உறவில் இருக்க மறுக்கின்றனர். ஆனால் சில சமயங்களில் ஆண்களும் இந்த பிரிவிற்கு காரணமாக இருக்கின்றனர். அப்போது நாங்கள் பெண் வீட்டார் குறைவாக பணம் கொடுக்கும் படி அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வோம். இருப்பினும் 90% வழக்குகளில் பெண் வீட்டார் தான் இந்த தொகையை கட்ட வேண்டும்" என்கிறார் அவர்.   படக்குறிப்பு, 90% வழக்குகளில் ஆண் வீட்டாருக்கு சாதகமாகவே கட்டப் பஞ்சாயத்துகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர்கள் கூறுவது என்ன? சமூக செயற்பாட்டாளர் மோனா சுஸ்தானி இந்த நடைமுறைக்கு எதிராக பத்தாண்டுகளாக போராடுகிறார். அவர் இதை பெண்களுக்கு எதிரான செயலாகவும் , ஆணாதிக்க சிந்தனை மிக்கதாகவும் இருக்கின்றது என்று தெரிவித்தார். “நான் ஒரு அரசியல் குடும்பத்தில் 1989-ல் திருமணம் செய்துகொண்டேன். இந்த நடைமுறையைக் கண்டு நான் அதிர்ந்தேன். அப்போதே இதற்கு எதிராக குரல் கொடுக்க முடிவு செய்தேன்.” என்றார் அவர். அவர் உருவாக்கிய அமைப்பு, இதுதொடர்பான வழக்குகளில் குறுக்கிட்டு, பெண்களின் மீது பொருளாதார நெருக்கடி சேராத படி பார்த்துக்கொள்கிறது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் 237 பெண்களை ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இதிலிருந்து விடுவித்துள்ளதாக மோனா தெரிவித்தார். அப்படி வெளியேறிய பெண்கள் பலர் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.   படக்குறிப்பு, கடந்த ஐந்தாண்டுகளில் 237 பெண்களை ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இதிலிருந்து விடுவித்துள்ளதாக மோனா தெரிவித்தார் அதேசமயம் ராம்கலா, கடந்த ஆறு மாதங்களாக இந்த தீய பழக்கத்தை அழிப்பதற்காக போராடுகிறார். இவரே இந்த நடைமுறையினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தான். இந்த பழக்கத்தினால் ராம்கலா தனது வீட்டை விட்டு வெளியேறினார். தற்பொழுது அவர் தனது உயர்கல்வியை படித்துக்கொண்டும் இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிக்கொண்டும் இருக்கிறார். “பெண்களை இதிலிருந்து விடுவிப்பது மிகவும் கடினமாக இருக்கும். சமூக அழுத்தங்கள் நிறைய உள்ளன. எங்களிடம் அவர்கள் வந்தவுடன் முதலில் காவல்துறையிடம் புகர் அளிப்போம். பிறகு அந்த மாப்பிள்ளை மற்றும் குடும்பத்தினரிடம் பேசுவோம். அவர்கள் புரிந்துகொண்டால் அப்பெண்ணிற்கு சட்டத்தின் வாயிலாக அவர்கள் உதவுவார்கள்.” என்றார் ராம்கலா. என்னதான் ராம்கலா, மோனா சுஸ்தானி போன்றவர்கள் இந்த தீய பழக்கத்திற்கு எதிராக போராடினாலும், கெளஷல்யா, மங்கிபாய் போன்ற பெண்கள் தங்களது திருமணத்திலிருந்து வெளியேற இன்னும் பல லட்ச ரூபாயை கொடுக்கவேண்டிய நிலை மாறவில்லை. படக்குறிப்பு, ராம்கலா, கடந்த ஆறு மாதங்களாக இந்த தீய பழக்கத்தை அழிப்பதற்காக போராடுகிறார்,இவரே இந்த நடைமுறையினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தான் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c154p1ejeqxo
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.