Jump to content

Recommended Posts

  • Replies 123
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

16 அணிகளின் சுற்றில்
சுவிஸ் 2 - 0 இத்தாலி
யேர்மனி 2  - 0 டென்மார்க்

On 25/6/2024 at 13:04, சுவைப்பிரியன் said:

சுவிசுக்கு இந்த மட்ச் கோப்பை வென்டதுக்குச் சமன்.


சுவிஸ்கார ஈழம் தமிழ் எனக்கு வட்சப் தகவல் அனுப்புகிறார் "குறித்து வைத்து கொள் இறுதி ஆட்டத்தில் சுவிஸ்சுடன் விளையாட போவது யேர்மனி அல்லது யோர்ஜியா".

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவிஸ் இந்த முறை மகிகத்தரமான விளையாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. வலுவான அணி இநறுதிப் போட்டியில் விளையாடும் தகமை அதற்கு உள்ளது. பார்ப்போம். சென்ற தடவை பனால்டியில் கோட்டை விட்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டு கோல்களை தொழில்நுட்ப முறையில் கொடுக்காமல் விட்டிருக்கிறார்கள். டென்மார்க் வுpரின்கையில் இலேசாக கை பட்டதற்கு பனால்ட்டி கொடுத்தது எனக்கு ஏற்புடையதல்ல. தொழில் நுட்பத்தைப் பாவிப்பதால் ஆட்டத்தில் சுவாரஸயம் குறைந்து விடுகிறது.டென்மார்க்குக்கு கொடுக்காமல் விட்ட ஓவ்சைட் கோல் அபத்தம்.ஆமுலும் ஒரு கோல் என்பது விநளயாட்டு வீரர்களின் உளவியலைப் பாதித்து விடுகிறது.பழைய முறையில் நடுவர்களின் தீர்ப்பு விளையாட்டில் சுவராஸசிமானது. சில நடுவர்கள் வேண்டுமென்றே பக்கச்சார்பான தீர்ப்புக்களைக் கொடுத்ததால்வந்த வினை இது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்தும் இன்றைக்கு  வெளியயே போக இல்லை 😄 கால் இறுதி ஆட்டத்துக்கு செல்கின்றது.
இங்கிலாந்து 2  - 1 சிலோவாக்கியா

இது வரை  ஸ்பெயின் 1 - 1 யோர்ஜியா

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்பானியா இரண்டாவது இலக்கை தனதாக்கியுள்ளது.

ஸ்பானியா 2 - யோர்ஜியா 1

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்பானியா மூன்றாவது மற்றும் நான்காவது இலக்கையும்(77 நி -83நி) தனதாக்கியுள்ளது.

ஸ்பானியா 4 - யோர்ஜியா 1

Posted

போத்துக்கல், சுலோவேலியா போட்டி சுவாரசியமாக நடந்து முடிந்தது. மேலதிக நேரம் கொடுக்கப்பட்டு இறுதியில் பெனால்டி உதை மூலம் முடிவு தீர்மானிக்கப்பட வேண்டி இருந்தது. போத்துக்கல் கோல் காப்பாளர் 3 பெனால்டி உதைகளையும் தடுத்து 3-0 என்ற கோல் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு செல்கிறார்கள்.
வழமையான நேரத்தில்  சுலோவேனியாவிற்கு எதிராக ஒரு பெனால்டி கிறிஸ்ரியானோ றொனால்டோவால் அடிக்கப்பட  சுலோவேனியாவின் கோல் தடுப்பாளரால் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போத்துக்கல் பிரான்சுடன் ஜூலை 6 ல் விளையாடவுள்ளது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, nunavilan said:

மேலதிக நேரம் கொடுக்கப்பட்டு இறுதியில் பெனால்டி உதை மூலம் முடிவு தீர்மானிக்கப்பட வேண்டி இருந்தது. போத்துக்கல் கோல் காப்பாளர் 3 பெனால்டி உதைகளையும் தடுத்து 3-0 என்ற கோல் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு செல்கிறார்கள்.

ஓம் சிலோவேனியா போர்ச்சுகல்  விளையாட்டு முடிவடைந்த போது   0 - 0, மேலும்  30 நிமிடங்கள் நீடிக்கபட்டும் 0 - 0.
பின்பு பெனால்டியி சர்ந்தர்பம் கொடுக்கபட்டு
போத்துக்கல் 3 - 0 சிலோவேனியா

பிரான்ஸ் 1 - 0 பெல்ஜியம்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெனால்டி தவறியதால் மைதானத்தில் கண்ணீர்விட்ட ரொனால்டோ

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,போட்டி முழுவதுமே உணர்ச்சிவசப்பட்டவராக இருந்தார் ரொனால்டோ
3 மணி நேரங்களுக்கு முன்னர்

போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை தவறவிட்டதால் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு கால்பந்து உலகில் பேசுபொருளாகி இருக்கிறது.

யூரோ கோப்பை தொடரில் ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியின்போது கூடுதல் நேரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி மூலம் கோல் அடிக்க முயன்றார். ஆனால் ஸ்லோவேனியா கோல்கீப்பர் அதைத் தடுத்து விட்டார்.

எனினும் இதனால் போர்சுகலின் வெற்றி பாதிக்கப்படவில்லை. ஷூட்அவுட் முறையில் போர்ச்சுகல் அணி யூரோ 2024 இன் காலிறுதிக்கு முன்னேறியது.

இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில், ஷூட் அவுட் முறையில் போர்ச்சுகல் வென்றது.

வாட்ஸ்ஆப்

யூரோ 2024 தொடரில் தனது முதல் கோலை அடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் ரொனால்டோ. ஆனால் இதுவரை அவரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இந்தப் போட்டியின் ஆட்ட நேரத்தின் கடைசி நேரத்தில் கோல் அடிக்கும் வாய்ப்பு ஒன்றை அவர் வீணடித்தார். நேராக பந்தை ஸ்லோவேனியா கோல்கீப்பர் ஒப்லாக்கிடம் அடித்ததால், அவர் அதை எளிதாகத் தடுத்துவிட்டார்.

முன்னதாக போட்டி முழுவதும் தலையால் முட்டி பந்தைக் கடத்தும் அவரது பல முயற்சிகள் வெற்றிபெறவில்லை. பல வாய்ப்புகளை அவர் தவறவிட்டதைப் பார்க்க முடிந்தது.

பெனால்ட்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் வெற்றிபெறாமல் போயிருந்தால், அது ரொனால்டோவுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்திருக்கும்.

வெள்ளிக்கிழமை ஹம்பர்க்கில் நடக்கும் காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் பிரான்ஸை எதிர்கொள்கிறது, அதே சமயம் ஸ்லோவேனியா போட்டியை விட்டு வெளியேறுகிறது.

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோல் அடிக்கத் திணறும் ரொனால்டோ

எப்போதும்போல ரொனால்டோவுக்கும் ரசிகர்களின் பலமான வரவேற்பு யூரோ போட்டியில் இருக்கிறது. ஆனால் இதுவரை ஒரு கோல் கூட அடிக்க முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஸ்லோவேனியாவுடனான போட்டியில் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார். தனது உணர்ச்சிகளையும் அவ்வப்போது காட்டிக் கொண்டிருந்தார்.

கைகளை வானத்தை நோக்கி வீசுவதும், விரக்தியில் காற்றில் குத்துவதும், தவறவிட்ட வாய்ப்புகளைக் கண்டு திகைத்து நிற்பதும் ரொனால்டோவின் வழக்கமாக இருந்தது. ஆனால் அவருக்கான வாய்ப்பு வந்தபோது, அவர் அதைத் தவறவிட்டார்.

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

கண்ணீர்விட்ட ரொனால்டோ

கூடுதல் நேரத்தில் போர்சுகலுக்கு பெனால்டி வாய்ப்புக் கிடைத்தது. ரொனால்டோ அதை கோலாக்குவதற்கு அடித்தார். ஆனால் ஸ்லோவேனியா கோல்கீப்பர் அதை சிறப்பாகத் தடுத்துவிட்டார்.

29 கோல்களை பெனால்டி மூலம் அடித்திருக்கும் ரொனால்டோ, மிக முக்கியமான தருணத்தில் கோல் அடிக்க முடியாததால் திகைத்து நின்றார். கோலடிக்க முடியவில்லை என்பதை அவராலேயே நம்பமுடியவில்லை என்பது போலக் காணப்பட்டார்.

சில நொடிகளில் கூடுதல் நேரத்தின் பாதி முடிந்துவிட்ட விசில் அடித்ததால், ரொனால்டோ கண்ணீர் மல்க அழத் தொடங்கிவிட்டார். சக வீரர் பல்கின்ஹா அவரை ஆறுதல்படுத்தினார்.

ரொனால்டோ அழுவதை பெரிய திரையில் கண்ட அவரது ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தும் பாடலைப் பாடினர்.

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெனால்ட்டி ஷூட் அவுட்டில் வென்ற பிறகு மகிழ்ச்சி

ஆட்ட நேரம் முடிந்த பெனால்ட்டி ஷூட் அவுட் வந்த பிறகு, 3-0 என்ற கணக்கில் போர்ச்சுகல் வென்றது.

முதலில் ஒரு துயரம். பிறகு மகிழ்ச்சி அதுதான் கால்பந்து உங்களுக்குத் தருவது” என்று வெற்றி பெற்ற பிறகு ரொனால்டோ கூறினார்.

இந்த ஆண்டில் பெனால்ட்டியில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் கண்டிப்பாகத் தேவைப்பட்டபோது ஒப்லாக் அதைத் தடுத்துவிட்டார்” என்று கூறினார் அவர்.

யூரோ கோப்பையில் ரொனால்டோ

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இதுவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
  • இத்தொடரில் கோல் அடிக்காத வீரர்களின் பட்டியலில், 20 முறை கோல் அடிக்க முயற்சி செய்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ரொனால்டோ
  • ரொனால்டோ கடந்த எட்டு யூரோ கோப்பை அல்லது உலகக்கோப்பை போட்டிகளில் கோல் அடிக்காமல் இருந்ததில்லை
  • யூரோ கோப்பை 2024 தொடரின் லீக் சுற்று போட்டிகளில் கோல் அடிக்க தவறியதன் மூலம், இத்தொடரின் லீக் போட்டிகளில் முதல் முறையாக கோலை பதிவு செய்ய தவறியுள்ளார் ரொனால்டோ
Posted

தொடர்ந்து 3 பெனால்டிகளை தடுத்த டியாகோ கோஸ்டா  பற்றி ஒரு வரி கூட பி பி சி எழுதவில்லை. அங்கே நிற்கிறது பி பி சி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இடதுபக்கம் பெரிய அணிகளை மோதவிடுவதும் வலது பக்கம் சிறிய அணிகளை மோதவிடுவதும் தற்செயலாக நடந்ததா?வலது பக்க அணிகளில் நெதர்லாண்ட் மட்டுமே ஒரு முறை ஐரோப்பிய கிண்ணத்தை வெற்றி பெற்ற அணி. இடது புற அணிகள் பலமுறை உலக க் கிண்ணத்தையும் வெற்றி பெற்ற அணிகள்.May be an image of text

வலது புற அணியில; சுவிவும; ஒஸ;ரியாவும; கடந;த போட;டிகளில; தரமான விளையாட;டை விளையாடியிருக;கின;றன. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nunavilan said:

தொடர்ந்து 3 பெனால்டிகளை தடுத்த டியாகோ கோஸ்டா  பற்றி ஒரு வரி கூட பி பி சி எழுதவில்லை. அங்கே நிற்கிறது பி பி சி.

அப்படித்தான் அங்கால நடந்து முடிந்த கிறக்கற் உலக கோப்பையிலும் அக்சர்பட்லேைப் பற்றியும் ஒன்று இரன்டு யுரியுப்புகளைத் தவிர மற்றவர்கள் வாய் திறக்க வில்லை.நன்றி கெட்டவர்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, சுவைப்பிரியன் said:

நன்றி கெட்டவர்கள்.

ஒன்றுமே விளங்கவில்லை போத்துக்கல் கோல் கீப்பர்  Diogo Costa  பெனால்டி 3 கோல்களை தடுத்து போத்துக்கலை காப்பாற்றினார் அதற்க்கு ஏன் மற்றவர்கள் நன்றி சொல்ல வேண்டும் 🙄

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

5e271aa51d00bccf1b12e0a6021af304.gif

ஐரோப்பிய நேரம் மாலை ஆறு மணிக்கு... 
animiertes-deutschland-fahne-flagge-bildஜேர்மனியும், animiertes-spanien-fahne-flagge-bild-001  ஸ்பெயினும் 
ஸ்ருட்கார்ட் (Stuttgart) விளையாட்டு மைதானத்தில்... 
கால் இறுதி ஆட்டம்  விளையாட இருக்கின்றது.
animiertes-deutschland-fahne-flagge-bild ஜேர்மனி வெற்றி பெற,  முற்கூட்டிய ❤️ வாழ்த்துக்கள். animiertes-luftballon-bild-0001.gif

 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்பெயின் ஒரு கோல்  அடித்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

goal-hockey-goal.gif  animiertes-deutschland-fahne-flagge-bild 

ஜேர்மனி 1 - ஸ்பெயின் 1
88´வது நிமிடத்தில் ஜேர்மனி ஒரு   கோல்  அடித்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேர்மனி 1 - ஸ்பெயின் 2
ஸ்பெயின்... கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

ஜேர்மனி 1 - ஸ்பெயின் 2
ஸ்பெயின்... கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

இதில் ஜேர்மனி தோல்வியுற்றது மிக மிக கவலையான விடயம் மட்டுமல்ல  பற்பல விளைவுகளை ஏற்படுத்தும். அதில் என் காரணம்  என்னவென்றால் ஜேர்மனி சொந்த மண்ணில் விளையாடுகின்றது.அதனால் இந்த நாட்டுமக்கள் ஒரு வித்தியாசமான பெருமைமிக்க உணர்வுடன் நாடு முழுவதும் உற்சாகமாக கார் ஊர்வலங்கள் வருவார்கள்.நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் உற்சாகமாக திரிவர்.வியாபர நிலையங்களும் களைகட்டும்.
ஜேர்மன் கொடி எங்கும் பறக்கும்.நாடே உற்சாகமாக இருக்கும். ஆனால் இப்போது ஜேர்மனி தன் நாட்டில் தோல்வியை சந்தித்து விட்டது. இனி இந்நாட்டு மக்களும் ஏனோ தானோ என்றுதான் திரிவர்.ஊர்மனைகளில் இருந்த கலகலப்பு இல்லாமல் போய் விட்டது.

ஜேர்மனி தோற்றாலும் பரவாயில்லை. இறுதி ஆட்டத்திற்கு வந்து தோற்றிருக்கலாம்.

Bild

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, குமாரசாமி said:

இதில் ஜேர்மனி தோல்வியுற்றது மிக மிக கவலையான விடயம் மட்டுமல்ல  பற்பல விளைவுகளை ஏற்படுத்தும். அதில் என் காரணம்  என்னவென்றால் ஜேர்மனி சொந்த மண்ணில் விளையாடுகின்றது.அதனால் இந்த நாட்டுமக்கள் ஒரு வித்தியாசமான பெருமைமிக்க உணர்வுடன் நாடு முழுவதும் உற்சாகமாக கார் ஊர்வலங்கள் வருவார்கள்.நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் உற்சாகமாக திரிவர்.வியாபர நிலையங்களும் களைகட்டும்.
ஜேர்மன் கொடி எங்கும் பறக்கும்.நாடே உற்சாகமாக இருக்கும். ஆனால் இப்போது ஜேர்மனி தன் நாட்டில் தோல்வியை சந்தித்து விட்டது. இனி இந்நாட்டு மக்களும் ஏனோ தானோ என்றுதான் திரிவர்.ஊர்மனைகளில் இருந்த கலகலப்பு இல்லாமல் போய் விட்டது.

ஜேர்மனி தோற்றாலும் பரவாயில்லை. இறுதி ஆட்டத்திற்கு வந்து தோற்றிருக்கலாம்.

Bild

10வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்த‌ ஜேர்ம‌ன் அணி இரும்பு அணி

வெற்றி மேல் வெற்றி

 

2014உல‌க‌ கோப்பைக்கு பிற‌க்கு அந்த‌ அணிக்கு என்ன‌ ஆச்சு என்று தெரிய‌ வில்லை தொட‌ர் தோல்விக‌ளை ச‌ந்திக்கின‌ம்....................

ப‌ழைய‌ ஜேர்ம‌ன் அணியா 2026 உல‌க‌ கோப்பையில் பார்க‌லாம் என்று ந‌ம்புகிறேன் தாத்தா...............................

  • Like 2
  • Haha 1
Posted

அரை இறுதிக்கு இங்கிலாந்து சுவிசை  5-3 பெனால்டி உதை மூலம் வென்று  சுவிசை வீட்டுக்கு அனுப்பி உள்ளது. அடுத்த துருக்கி 1 - நெதர்லாந்து 0  45 நிமிடம் வரை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரை இறுதிப் போட்டி
பிரானஸ் எதிர் ஸபெயின்
இங்கிலாந்து எதிர் கொலண்ட்(நெதர்லாண்ட்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/7/2024 at 22:15, வீரப் பையன்26 said:

0வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்த‌ ஜேர்ம‌ன் அணி இரும்பு அணி

ஜேர்மன் அணியை முற்றாக மாற்ற வேண்டும். பழையை கிழடுகளை வைத்திருக்கக் கூடாது. குறிப்பாக றூடிக்கா  பின்களத்தடுப்பாளர் அந்த வேலையைச் செய்யாமல் அடிக்கடி முன:னுக்குவந்து பின்களத்தடுப்பை உடைக்கிறார்.தலையால் அடிக்கக் கூடியவர் என்றாலும் கோணர் கிக்குன்கு முன்னே வந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.எப்போதும் முன்னே வந்தால் கின்களத்தை யார் பார்ப்பது.அடுத்தது ரொனி குறூஸ்  வயதாகி விட்டது . இருவரும் றியால்மட்றிட்க:க விளையாடுவதால் அணியில் சேர்க்க முடியாது. ஜெர்மன் அணி நட்சத்திர வுpரர்களைக் கொண்ட அணியாக எப்போதும் இருந்ததில்லை. அது ஒரு 11 பேர் கொண்ட சிறந்த அணியாகவே முன்பு இருந்தது. அதனால் வெற்றிகளைப் பெற்றார்கள்.முல்லர்>கிம்மின்ஸ் எல்லாம் வேஸ்ட்

On 5/7/2024 at 21:39, குமாரசாமி said:

இதில் ஜேர்மனி தோல்வியுற்றது மிக மிக கவலையான விடயம் மட்டுமல்ல  பற்பல விளைவுகளை ஏற்படுத்தும். அதில் என் காரணம்  என்னவென்றால் ஜேர்மனி சொந்த மண்ணில் விளையாடுகின்றது.அதனால் இந்த நாட்டுமக்கள் ஒரு வித்தியாசமான பெருமைமிக்க உணர்வுடன் நாடு முழுவதும் உற்சாகமாக கார் ஊர்வலங்கள் வருவார்கள்.நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் உற்சாகமாக திரிவர்.வியாபர நிலையங்களும் களைகட்டும்.
ஜேர்மன் கொடி எங்கும் பறக்கும்.நாடே உற்சாகமாக இருக்கும். ஆனால் இப்போது ஜேர்மனி தன் நாட்டில் தோல்வியை சந்தித்து விட்டது. இனி இந்நாட்டு மக்களும் ஏனோ தானோ என்றுதான் திரிவர்.ஊர்மனைகளில் இருந்த கலகலப்பு இல்லாமல் போய் விட்டது.

ஜேர்மனி தோற்றாலும் பரவாயில்லை. இறுதி ஆட்டத்திற்கு வந்து தோற்றிருக்கலாம்.

Bild

இ.ந்த பெனால்ட்டி ஏன் கொடுக்கவில்லை என்பது தெரியவில்லை. இருந்தாலும் ஜேர்மனி விளையாட்டு  படமோசம். பனாலட்டி உதை மூலம் வெல்வது அதிஸ்டம் திறமை என்று சொல்ல முடியாது. ஜேர்மன் அணியை முற்றாக மாற்றி அமைக்க வேண்டும்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துருக்கி  ஐரோப்பிய உதைபந்தாட்ட நிகழ்விலிருந்து வெளியே சென்றதில் மட்டற்ற மகிழ்சி.👍🏼
விளையாட்டில் அரசியல் இல்லை என்பவர்களுக்கு நல்ல செருப்படி.


Wolfsgruß«: Was steckt hinter der nationalistischen Geste? - DER SPIEGEL




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.