Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலரும் அறிந்த ஓர் சிறந்த கலைஞன் மதிப்புக்குரிய திரு.அஜீவன் (Jeevan4U Swiss Radio ) அவர்களுடனான உரையாடல்!!

Featured Replies

Singapore1_web.jpg

பகுதி 01

பகுதி 02

வணக்கம் யாழ் வாசகர்களே, கள உறவுகளே!

சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..

இன்று நாங்கள் பலரும் அறிந்த ஓர் சிறந்த கலைஞன் மதிப்புக்குரிய திரு.அஜீவன் அவர்களுடன் யாழ் இணையம் சார்பாக உரையாடுகின்றோம்.

வணக்கம் திரு.அஜீவன் அவர்களே!

வணக்கம் கலைஞன்

உங்களைப்பற்றி எமது வாசகர்களிற்கு சிறிது அறிமுகம் செய்துகொள்ளுங்கள்..

யாழ் களத்தில் பொதுவாகவே அனைவரும் என் நண்பர்கள் என்பதால் பெரிதாக அறிமுகம் தேவையில்லை. இலங்கையின் கொழும்பை பிறப்பிடமாகக் கொண்டவன். தந்தை இலங்கையையும் தாயார் இந்தியாவையும் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இளம் வயதிலேயே சிங்கப்பூருக்கு போய் விட்டதால் எனக்கு தெரிந்த வளர்ச்சி என்றால் அங்கு ஆரம்பித்தது. இந்தியாவில் சில காலம் இருந்தேன். தற்போது சுவிஸில் வாழ்கிறேன்

சுவிஸ்லாந்து நாட்டில் தமிழ், சிங்கள வானொலிச் சேவையை ஆரம்பிக்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி தோன்றியது? இதற்கான வளங்களை, ஆதரவை எவ்வாறு பெற்றுக்கொண்டீர்கள்? இந்த வானொலிச் சேவைக்கு எவ்வாறான வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது?

நான் ஒரு சுவிஸ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறை இயக்குனருடன் ஒருவருடன் இணைந்து பணியாற்றுவதால் அவர்களுக்கு என் விபரங்கள் தெரியும். எனவே நான் நிகழ்ச்சிகளை தரும் வானோலியில் எமது நாட்டு மொழியில் ஒலிபரப்பொன்றை செய்ய சொன்னார்கள். இந்த வானோலி சுவிஸ் கலாச்சார அமைப்பினால் 10 வருடங்களாக நடாத்தப்படுகிறது.

எனவே எனக்கு எந்த செலவும் இல்லை. அது குறித்து சிந்திக்கவும் தேவையில்லை. எத்தனை பேர் பண்பலை வழி நேரடியாக கேட்கிறார்கள் என்பது வானோலி கணிப்பு கருவி மூலம் தெரியும். பண்பலை மற்றும் இணையத்தினூடாக நேரடி ஒலிபரப்பாகவும் ஐரோப்பிய தமிழ் வானோலி ஊடாகவும் இணையத்திலும் பலர் கேட்கிறார்கள். வரவேற்பை பற்றி நான் பெரிது படுத்துவதில்லை.

அஜீவன் வானொலி சேவையின் இலக்கு அல்லது நோக்கம் என்ன?

இப்போது நான் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து ஒரு வருடம் கூட இல்லை. உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் தரும் நல்ல ஆக்கங்களை வர வேற்போம். தேவை என்று கருதினால் அது இடம் பெறும். நான் இலங்கை சிங்கள வானொலியில் பணியாற்றி இருக்கிறேன். தெரிந்ததை மறக்கக் கூடாது என்பதும் ஒரு காரணம். வேறு எதுவும் இல்லை.

DSCN1530.JPG

குறும்பட துறையில் உங்களிற்கு ஆர்வம்வந்ததற்கான காரணங்கள் எவை?

நான் 1980களிலேயே எனது திரைப்பட பயிற்சியின் போதே சிங்கள மொழியில் குறும்படங்கள் செய்திருக்கிறேன். எனவே இது எனக்கு புதிது அல்ல.

குறும்படம் மூலம் எதனை சாதிக்கலாம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? உங்கள் குறும்படங்கள் மூலம் நீங்கள் என்ன செய்தியை கூற விரும்புகின்றீர்கள்?

புலம் பெயர் நாடுகளிலாவது நல்ல தமிழ் குறும்படங்கள் வர வேண்டும் என்ற எண்ணங்கள் எனக்குள் இருந்தது. அதை புலம் பெயர்ந்த தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லையா அல்லது நான் தவறான ஒரு எண்ணத்தையுடையவனாக இருந்தேனோ என்றே நினைக்கிறேன். எனவே அந்த எண்ணம் எனக்கு வெற்றி தரவில்லை. இருந்தாலும் சுவிஸ் திரைத்துறைக்குள் என்னை அடையாளம் காட்ட என் குறும்படங்கள் உதவின. யதார்த்தமான வாழ்வை வெளிப்படுத்தும் தன்மையுடன் உருவான குறும்படங்கள் பலருக்கு சினிமா தனம் இல்லாமல் எமது புலம் பெயர் வாழ்வின் ஒரு சில துளிகளை விளக்கியது எனலாம். குறிப்பிட்ட சில புலம் பெயர் தமிழர்கள் கூட அவற்றை விரும்பினார்கள். இப்போது அதற்கும் நேரமில்லை. எப்படி இருந்தாலும் விருதுகளை மட்டுமல்ல அவை பலராலும் பேசப்பட்டது மகிழ்ச்சி.

எமக்காக.. நீங்கள் முன்பு நடித்த உங்கள் மனதுக்குபிடித்த குறும்படத்தில் வரும் ஓர் பாத்திரத்தின் கதைவசனத்தை பேச முடியுமா?

"என்னை மாதிரி மற்றவங்களும் இருப்பாங்க என்று நினைச்சது என்னுடைய பெரிய தப்பு"

Singap_web.jpg

நீங்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றியபோது பெற்ற தொழில் அனுபவங்களை பற்றி எம்முடன் சிறிது பகிர்ந்துகொள்ளமுடியுமா?

நம்மில் பெரும்பாலானோர் ஆர்வம் காரணமாக மட்டுமே சினிமா எடுப்பவர்கள். மற்றவர்கள் சினிமா தெரிந்து சினிமா எடுக்க வருபவர்கள். நம்மவர்கள் நம்மை பாவிக்க நினைப்பவர்கள். புகழுக்காக வருபவர்கள். மற்றவர்கள் தொழிலாக மட்டுமல்ல கலையாக நினைப்பவர்கள். உண்மை கலைஞர்கள் நிலைக்கிறார்கள்.

உண்மையான நமது நல்ல கலைஞர்கள் பலர் உதிர்ந்து போய் கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் ஏதாவது செய்தால்தான்.. உண்டு. நம்மவரோடு அனுபவம் என்று சொன்னால் அவை வேதனைகள்தான்.

உதாரணமாக ஜேர்மனியில் நான் ஒளிப்பதிவு செய்து ஒரு தமிழ் குறும்படத்துத்தின் உருவாக்கத்துக்கே காரணமானேன். ஒளிப்பதிவை மட்டுமல்ல அதற்கு மேலும் செய்தேன். போனது வந்தது கூட என் சொந்த பணத்தில்.. அதை அந்த கலைஞர்கள் அனைவரும் அறிவார்கள். இதுவரை அதை இயக்கியவரோ அல்லது அதில் சம்பந்தப்பட்ட எவருமோ அந்த குறும்பட டீவீடீ ஒன்றைக் கூட தரவில்லை. நான் ஒளிப்பதிவு செய்ய ஒளிப்பதிவுக்கு கொடுக்கும் கெளரவத்தை என் உதவி ஒளிப்பதிவாளருக்கு தயாரிப்பாளர் விழா நடத்திக் கொடுக்கிறார் என்றால் பாருங்களேன்?

அது மட்டுமல்ல அது தொடர்பானவர்களும் அதை பேசாமல் ஏற்றுக் கொண்டு மெளனமாக இருக்கிறார்கள். முன்னர் இவற்றுக்காக கோபப்பட்டதுண்டு. இப்போது எனக்கு சிரிப்பு வரும் விடயங்கள் இவை.... எனவே இப்படியான விடயங்களில் இப்போது இணைவதில்லை. இங்கு சுவிஸில் ஒரு பல்கலைக் கழகத்துக்காக ஒரு குறும்படம் செய்தேன். அது அங்கே பாடத்திட்டத்துக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அது குறித்து தினமும் ஏதாவது ஒரு மெயில் அல்லது மடல் வருகிறது. இதிலிருந்தே இந்த வித்தியாசம் புரியும்!

எமது சமுகத்தினர் தாயாரிக்கும் கலைப் படைப்புகளிற்கும் ஏனைய சமூகத்தினர் தயாரிக்கும் கலைப் படைப்புகளிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களாக நீங்கள் எவற்றை கருதுகின்றீர்கள்?

நம் கலை படைப்புகளில் தேவையற்ற அனைத்தும் இருக்கும். யாரையோ திருப்பதிப்படுத்த முற்படுவது குறிப்பாகத் தெரியும். அநேகமான அடுத்தவர் கலை படைப்புகளில் ஒரு செய்தியை அல்லது ஒரு பிரச்சனையை அலசும் கலை நயம் இருக்கும்.

telugumovie_web.jpg

எம்மவர்களின் கலைப்படைப்புக்களில் காணப்படும் குறைபாடுகளை எவ்வாறு தவிர்த்துக்கொள்ள முடியும்?

அந்த துறை தெரிந்தவர்கள் அந்த வேதனை தெரிந்தவர்கள் இந்த துறைக்கு வர வேண்டும். பணம் இருக்கிறதென்று புகழ் தேடுவோர் அதிகாரமிருக்கிறதென்ற நிலை கொண்டோர் இதுக்குள் வரக் கூடாது. இந்த அடிப்படை பிரச்சனையால்தான் குறைபாடுகள் மட்டுமல்ல குறைப் பிரசவ படைப்புகளும் உருவாகின்றன.

தென்னிந்திய கலைஞர்களிற்கு எம்மவர் கொடுக்கும் ஆதரவை எமக்கு தருவதில்லை என்று எமது கலைஞர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

நாம் செய்தால்தானே அவர்கள் ஆதரவு தருவதற்கு? சந்தையில் நின்று கொண்டு கோசம் போட்டு கூப்பிட்டால் மட்டும் போதுமா? நம்மிடம் சரக்கு எதுவும் இல்லாமல்....?

Music_com_web.jpg

தமீழீழ பிரச்சனைகளை கருப்பொருளாக கொண்டு நீங்கள் ஏதாவது குறும்படங்களை தயாரித்து உள்ளீர்களா? இனி வரும் காலங்களில் அத்தகைய முயற்சியில் ஈடுபடும் எண்ணம் இருக்கின்றதா?

இங்கு அது சாத்தியமில்லை. அது அங்குதான் சாத்தியம். அதுவே யதார்த்தம். புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பிரச்சனைகளாக எனது பல குறும்படங்கள் வந்திருக்கின்றன. நான் இங்கே வாழ்கிறேன். இங்குள்ள பிரச்சனைகளை வைத்துத்தான் என்னால் படைப்புகள் தர முடியும். எனவே புரிந்து கொள்வீர்களென நினைக்கிறேன்.

சினிமாதுறையில் எதிர்காலத்தில் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருக்கின்றதா? கடந்தகாலத்தில் சினிமாத்துறையில் காலடிவைக்க நீங்கள் முயற்சிக்கவில்லையா?

நான் இலங்கை சிங்கள சினிமாவிலும் இந்திய சினிமாவிலும் இருந்து இருக்கிறேன். ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்கிறேன். சுவிஸ் நாட்டு நிலை எம்மை வேறெங்கும் தொடர்ந்து வாழ வழி செய்யாது. இங்கு இவர்களோடு பல பணிகளை செய்கிறேன். அது திருப்தியாக இருக்கிறது

With_Murali_web.jpg

மீண்டும் எமக்காக.. உங்களுக்கு பிடித்தமான ஓர் தமிழ் மற்றும் சிங்கள பாடல்களின் சில வரிகளை பாடிக்காட்ட முடியுமா?

- ஒலியில் வந்திருக்கிறது -

நீங்கள் ஓர் கலைஞன் என்ற வகையில் ஒரு கலைஞனிற்கு இருக்க வேண்டிய பண்புகளாக எவற்றை கருதுகின்றீர்கள்?

நல்லதொரு மனிதனாக உண்மையாக நடந்தால் போதும்.

நீங்கள் உங்களை நோக்கிவரும் விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

நிச்சயம்! அவைதான் நம் தவறுகளை சுட்டிக் காட்டும். உண்மையான விமர்சனங்களை மகிழ்வோடு ஏற்று என்னை திருத்திக் கொள்ள முற்படுவேன். காழ்ப்புணர்வோடு வரும் விமர்சனங்களை கருத்தில் கொள்வதில்லை.

வளர்ந்து வரும் இளம் குறும்பட கலைஞர்களிற்கு நீங்கள் கூறிக்கொள்ள விரும்புபவை எவை?

நிறைய வேற்று நாட்டு குறும்படங்களை பாருங்கள். கற்றுக் கொள்ளுங்கள். விசயம் தெரிந்தவர்களோடு சற்று பணியாற்றுங்கள்.

Workshop_web.jpg

புதிதாக தோன்றும் இணயங்கள், இணைய வானொலிகள், இதர தமிழ் ஊடகங்கள் சேவை நோக்கில் ஆரம்பிக்கப்படும் அதேசமயம் போதிய அளவு வருமானத்தையும் அவை பெற்றுக்கொள்ள நீங்கள் கூறக்கூடிய ஆலோசனைகள் எவை?

சேவை நோக்கில் என்றால் பணத்தை எதிர்பார்க்காதீர்கள். வியாபார நோக்கில் என்றால் முறையான திட்டமிடல்

வழி காட்டலோடு ஆரம்பியுங்கள்.

சிறீலங்கா நீயானா LTTE நானான ஐயையோ வாயைக் கொஞ்சம் மூடு..மூடு..

DMK நீயானா ADMK நானானா கோட்டையில நம்ம வீட்டைப் போடு..போடு..

அரசியலில் உங்கள் ஈடுபாடுகளை பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா? சுவிஸ்லாந்து நாட்டில் நீங்கள் ஏதாவது அரசியல் கட்சியில் அங்கத்தவராக இருக்கின்றீர்களா?

அரசியல் சார்ந்த விடயங்களை படிப்பேன். அரசியல் கலைஞனுக்கு தெரிய வேண்டும். தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் செய்யக் கூடாது என்பது என் அனுபவத்தில் உருவான கருத்து. இங்குள்ள அரசியல்வாதிகள் பலர் என் நண்பர்கள். அத்தோடு சரி! யார் காலையும் பிடித்து ஏதாவது ஒரு தேவையை நிறைவேற்ற வேண்டிய தேவை இங்கு இல்லை. என் தேவைகளுக்கு ஒன்றும் தேவையில்லை. தேவைப்பட்டால் அவர்களாகவே உதவுவார்கள்.

புலம் பெயர்ந்து சுவிஸ்லாந்து நாட்டிற்கு வரும் எமது சமூகத்தினருக்கு நீங்கள் கூறிக்கொள்ள விரும்புபவை எவை?

விபரம் தெரிந்தவர்கள்தான் இப்போது இங்கு வருகிறார்கள். அழகான - அமைதியான நாடுதான் பணத்தால் மட்டும் முன்னேற முடிந்ததே தவிர கல்வியால் நாங்கள் முன்னேற முடியாமல் போனோம். அது பெரும் குறை இன்றைய தலை முறையினர் இந்த அவலத்திலிருந்து தப்பியிருப்பது மகிழ்ச்சியான விடயம்.

swisscrew_web.jpg

நான் உட்பட யாழ் இணையத்தில் நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது வீதமானோர் முகமுடிகளுடன் உலா வருபவர்கள். இவர்களுடன் முகமூடி அணியாது உங்கள் உண்மையான முகத்துடன் நீங்கள் கருத்தாடல் செய்யும்போது ஏற்படுகின்ற அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முடியுமா?

என்னதான் வந்தாலும் எனது கருத்தை என் முகத்தோடு சொல்லி விட்டு இருக்க முடிகிறது. மகிழ்வாக இருக்கும்

யாழ் இணையம் பற்றிய உங்கள் பார்வை என்ன?

இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும். அது நடத்துவோரது எண்ணம் தொடர்பானது

நீங்கள் முன்பு மத்திய கிழக்கு நாடு ஒன்றில் அநீதி இழைக்கப்பட்ட "ரிசானா" என்ற முஸ்லீம் பெண் ஒருத்தியை காப்பாற்ற முயன்று பலதரப்பட்ட விமர்சனங்களிற்கு உள்ளானீர்கள். அந்த விமர்சனங்களை எவ்வாறு முகம் கொடுத்தீர்கள்? நீங்கள் அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும் என உங்களை தூண்டிய காரணிகள் எவை?

எதிரே ஒரு விபத்து நடந்தால் போகும் வாகனங்களில் உள்ளவர்கள் நிறுத்தி உடனே போலீஸுக்கோ அல்லது அம்பியூலன்சுக்கோ தகவல் தெரிவிக்கிறார்கள். உதவுகிறார்கள். விபத்தில் சிக்கியவர் யார் என்று கூட பார்க்க மாட்டார்கள். அப்படி உதவ நானும் எழுதினேன். இங்கு தகவல் கொடுத்தால் நன்றி என்பார்கள். நம் நாட்டில் தகவல் கொடுத்தால் நம்மை உள்ளே போட்டு தாக்குவார்கள். பல வேளைகளில் அவரை குற்றவாளியாகவும் ஆக்கி விடுவார்கள்? இது மாதிரி வகைப்படுத்தி பார்த்து ஆறுதல்பட வேண்டியதுதானே?

இருபது, முப்பது வருடங்களிற்கு முன்பு இருந்த அஜீவனுக்கும், தற்போது உள்ள அஜீவனுக்கும் இடையில் என்ன ஒற்றுமை,வேற்றுமைகளை நீங்கள் காண்கின்றீர்கள்? அப்போது இருந்த அஜீவனின் எத்தகைய விடயங்கள் உங்களுக்கு பிடித்து உள்ளன? எவை பிடிக்கவில்லை? இப்போது உள்ள அஜீவனின் எத்தகைய விடயங்கள் உங்களுக்கு பிடித்து உள்ளன? எவை பிடிக்கவில்லை?

வயசாயிடுச்சு அடுத்து தேவையற்றதை செய்து அனுபவம் கொஞ்சம். இன்னும் கிடைக்கும்.

நெருநல் உளனொருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்திவுலகு! அதாவது நேற்று இருந்தவன் இன்று இல்லை. இன்று இருப்பவன் நாளை இருக்கப்போவதில்லை. நீர்க்குமிழி போல நிலையற்றது இந்தவாழ்வு! உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றதா? ஆன்மீகம் பற்றிய உங்கள் பார்வை என்ன?

கடவுள் நம்பிக்கை உண்டு. மூட நம்பிக்கை இல்லை.

chinese_web.jpg

உங்கள் வாழ்வின் உயர்ச்சிக்கு காரணமாக இருந்த, இருக்கின்ற உங்களிற்கு பக்கபலமாக இருந்த, இருக்கின்ற யார் யாரை எல்லாம் நீங்கள் இப்போது நன்றியுடன் நினைவு கூற ஆசைப்படுகின்றீர்கள்?

அன்று முதல் இன்று வரை உதவும் - எதிர்க்கும் அனைவரையும் நன்றியோடு நினைப்பேன். இரண்டுமே எனது பயணத்தின் போக்கை உணர்த்தும்.

உங்கள் வாழ்வின் வழிகாட்டிகளாக நீங்கள் யார் யாரை பின்பற்றுகின்றீர்கள்? ஏன் பின்பற்றுகின்றீர்கள்?

யாரையும் பின் பற்றுவதில்லை. அனைவரதும் நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொள்வேன்.

இறுதியாக.. நீங்கள் எமக்கு, யாழ் வாசகர்களிற்கு ஏதாவது கூறிக்கொள்ள விரும்பினால், மற்றும் நான் இந்த உரையாடலில் தவறவிட்ட ஏதாவது விடயங்கள் இருந்தால் அவற்றை கூறுங்கள்..

அனைவருடன் பேசக் கிடைத்ததில் மகிழ்ச்சி

தனது பொன்னான நேரத்தை எமக்காக ஒதுக்கி, சுவாரசியமான இந்த சிறிய உரையாடலில் பங்குபற்றிய மதிப்புக்குரிய திரு.அஜீவன் அவர்களிற்கு யாழ் இணையம் சார்பாகவும், கள உறவுகள், வாசகர்கள் சார்பாகவும் நன்றிகள் கூறி மீண்டும் இன்னொரு உரையாடலில் சந்திக்கும்வரை உங்களிடம் இருந்து விடைபெற்றுக்கொள்வது கலைஞன். நன்றி! வணக்கம்!

என்னிடம் கேள்வி கேட்க நினைத்த உங்களுக்கும் இனிய யாழ் உறவுகளுக்கும் நன்றி! வணக்கம் கலைஞன்.

Best_Director_web.jpg

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

வணக்கம்,

கீழ் உள்ள இணைப்பை சொடுக்கியும் உரையாடலின் ஒலிவடிவத்தை கேட்கமுடியும்.

1. http://www.esnips.com/doc/f3e1af1e-008e-4d...Kalaignan.Final (சிறந்த குவாலிட்டி ஓடியோ..)

2. http://www.esnips.com/doc/f21429e4-703e-41...lainjan+ajeevan (குவாலிட்டி குறைந்த ஓடியோ)

3. http://media.putfile.com/kalainjanajeevan (குவாலிட்டி குறைந்த ஓடியோ)

ஒலிவடிவத்தை கேட்க முடியாது இருந்தால் அறியத்தரவும்..

நன்றி!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

உரையாடல் மிகவுன் நன்று.இருவருக்கும் பாராட்டுக்கள்.கலைஞன் அனுபவக் குறைவோ என்னவோ ரொம்ப கஸ்டப்பட்டு கதைக்கிறார்.போகப் போக சரிவரும்.அஜீவனின் தென்பாண்டி என்ற பாட்டு நன்றாக இருக்கிறது.

  • தொடங்கியவர்

நன்றி ஈழப்பிரியன்..

ஒலிப்பதிவில் ஒரு தவறு நிகழந்துவிட்டது.

நான் "எமது சமுகத்தினர் தாயாரிக்கும் கலைப் படைப்புகளிற்கும் ஏனைய சமூகத்தினர் தயாரிக்கும் கலைப் படைப்புகளிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களாக நீங்கள் எவற்றை கருதுகின்றீர்கள்?" என்ற கேள்வியை இரண்டு தடவைகள் கேட்டு உள்ளேன்.

உண்மையில் நான் கேட்க நினைக்கும் முதலாவது கேள்வி "நீங்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றியபோது பெற்ற தொழில் அனுபவங்களை பற்றி எம்முடன் சிறிது பகிர்ந்துகொள்ளமுடியுமா?" என்பதாகும். அதன்பின்னரே "எமது சமுகத்தினர் தாயாரிக்கும் கலைப் படைப்புகளிற்கும் ஏனைய சமூகத்தினர் தயாரிக்கும் கலைப் படைப்புகளிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களாக நீங்கள் எவற்றை கருதுகின்றீர்கள்?" வரவேண்டும்.. தவறுக்கு மன்னிக்கவும்.

மேலும், எழுத்துவடிவத்தில் உள்ள உரையாடலில் வரும் பதில்கள் சுருக்கமாக தரப்பட்டு உள்ளன. விரிவான பதில்களை ஒலிவடிவத்தில் கேட்கவும்.

இந்த உரையாடலில் பங்கு பற்றி அஜீவன் அண்ணாவிற்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றிகள்!

நன்றி! வணக்கம்!

வணக்கம் அஜீவன் உங்களின் பேட்டியை கேட்டதில் மகிழ்ச்சி,

உண்மையான பேச்சும்,அன்பான குரலும் என் மனதை கவர்ந்தது,

நீங்கள் கூறுவது பேல் நாங்கள் ஒரு விடயத்தை செய்யும் பேது எங்கள் தமிழ் மக்களிடம் இருந்து ஆதரவு கிடைப்பது மிக குறைவாகத்தான் இருக்கின்றது, இது வேதனைக்குறிய விடயம் தான் ,

ஆனால் கவளைப்படாதீர்கள் எங்களை பேன்ற புது சமுதாயம் நிச்சயமாக இதை மாற்றி அமைக்கும் என்ற நம்பிக்கையை நான் கைவிடவில்லை,நீங்களும் நம்பிக்கையேடு இருங்கள்!

கலைஞன் நீங்கள் அருமையாக பேட்டி எடுத்தீர்கள் ,

எனி வரும் பேட்டிகளை என்னம் அதிகம் உச்சாகமாக எடுக்கவும்

இருவருக்கும் எனது நன்றிகள்

மனம் திறக்க வைத்ததற்கு நன்றி கலைஞன்.

நன்றி ஈழப்பிரியன்

நன்றி இனியவள்

அஜீவன் அண்ணா.!!

பேட்டி மிக நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். உங்கள் குரல் அப்படியே எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. இந்த பேட்டியை கேட்கும்போது நீங்கள் நடித்த ஒரு குறும்படத்தின் காட்சி எனக்கு ஞாபகம் வந்தது. பஸ்வண்டியில் பணப்பையை தொலைத்துவிட்டு நின்ற காட்சிதான் அது. :rolleyes::lol:

அஜீவன் அண்ணா.!!

பேட்டி மிக நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். உங்கள் குரல் அப்படியே எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. இந்த பேட்டியை கேட்கும்போது நீங்கள் நடித்த ஒரு குறும்படத்தின் காட்சி எனக்கு ஞாபகம் வந்தது. பஸ்வண்டியில் பணப்பையை தொலைத்துவிட்டு நின்ற காட்சிதான் அது. :rolleyes::lol:

நன்றி ஐயா

உங்கள் வார்த்தைகள்

எதையோ தொலைத்து விட்ட உணர்வாகி

என்னையே தொலைக்க வைத்து விட்டது? :D:D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கலைஞன். பேட்டி எல்லோருக்கும் நன்கு புரியவேண்டும் என்பதற்காக மிக மிக நிதானமாக பேட்டி எடுத்திருக்கிறீர்கள்.

அஜீவன் சாருக்கும் நன்றி. :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதில பல விடயங்களை முதலிலேயே அறிஞ்சிட்டன். அஜீவன் சாரின்ர இணையத்தில.

டைகர் பமிலியின் வெள்ளிமாலைக்கு சிறப்புப் பேட்டி அளிச்சதுக்கு பாராட்டலாம். :rolleyes:

ஒலிவடிவத்தில் வந்த பேட்டியையிட்டு மிக்க மகிழ்ச்சி.

கலைஞன் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களை மிகவும் மென்மையாக பதிலளித்த அஜீவன் அங்கிளுக்கும் பாராட்டுக்கள்.

நல்லாக பாடுறீங்க அங்கிள். உங்கள் குறும்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக பிஞ்சுமனம் என்னை மிகவும் பாதித்த ஒரு குறும்படம். உங்கள் வளர்ச்சி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அங்கிள்.

கலைஞன் அண்ணாவின் உச்சரிப்பு சற்று வித்தியாசமாக தெரிகின்றது போல இருக்குது,

அதுசரி இறுதியாக ஒலித்த பாடல் "மெதுவாக பேசு.................." அப்பாடல் என்ன திரைப்படம்?

  • கருத்துக்கள உறவுகள்

நேர்காணல் சிறப்பாக உள்ளது. அஜூவன் அண்ணாவின் அனுபவமும் கலைஞனின் கன்னி முயற்சியும் குரல் தொணியில் தெரிகிறது. கலைஞனின் யாழ்கள விளக்க குறிப்பில் இல்லாத பதட்டம் இதில் இருக்கிறது. மேலும் மேலும் சிறப்படைய வாழ்த்துகள்.

தமீழீழ பிரச்சனைகளை கருப்பொருளாக கொண்டு நீங்கள் ஏதாவது குறும்படங்களை தயாரித்து உள்ளீர்களா? இனி வரும் காலங்களில் அத்தகைய முயற்சியில் ஈடுபடும் எண்ணம் இருக்கின்றதா?

இங்கு சாத்தியமில்லை. அது அங்குதான் சாத்தியம். அதுவே யதார்த்தம். புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பிரச்சனைகளாக எனது பல குறும்படங்கள் வந்திருக்கின்றன. நான் இங்கே வாழ்கிறேன். இங்குள்ள பிரச்சனைகளை வைத்துத்தான் என்னால் படைப்புகள் தர முடியும். எனது படைப்புகள் யதார்த்த வாழ்வை பேசுபவை. கனவுலக வாழ்வை அல்ல. எனவே புரிந்து கொள்வீர்களென நினைக்கிறேன்.

கலைஞன் ஒரு சிறு திருத்தம். மேலே நான் மேற்கோள் காட்டிய கேள்விக்கான பதிலில் ஒலிப்பதிவில் இருக்கும் பதிலுக்கும் இங்கு எழுத்தில் உள்ள பதிலுக்கும் சிறு வித்தியாசம் இருக்கிறது. நான் சிவப்பு நிறத்தில் அடையளப்படுத்தியது ஒலிப்பதிவில் இல்லை. அது தவறான அர்த்தத்தை தரும். தயவுசெய்து அதை சரி பாருங்கள். நன்றி.

-சபேஸ்-

  • தொடங்கியவர்

நன்றி அனைவரின் கருத்துக்களுக்கும்.. சபேஸ் அது என்ன பிரச்சனை என்றால் உரையாடல் கொஞ்சம் புரபசனலாக இருக்கவேண்டும், வீட்டில் கதைப்பதுபோல் கதைக்கக்கூடாது என்று முயற்சி செய்ததில் சற்று பதற்றப்படுவது போல் உள்ளது. நீங்கள் சுட்டிக்காட்டிய தவறை திருத்தி உள்ளேன். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் கலைஞன், நல்லாக செய்துள்ளீர்கள்.

அஜீவன் உங்கள் பதில்கள் பிரமாதம், உங்கள் ஆதங்கத்தை வெளிப்படையாக கூறியிருக்கின்றீர்கள். நீங்கள் ஒரு கலைஞன் என்ற வகையில் இதைவிட பல சோதனைகளை இன்னும் சந்திக்கவேண்டி இருக்கும், அவை எல்லாவற்றையும் கடந்து சாதிக்கவேண்டிய மனப்பக்குவம் கலைஞர்களுக்கு அவசியம் இருக்கவேண்டும்.

அதாவது உங்கள் மனக்குமுறல்கலை இன்னும் அடக்கி வைத்திருந்திருந்தால் உங்கள் கௌரவம் இரட்டிப்பாக இருந்திருக்கும் என்பதுதான் எனது கருத்து.

நன்றி கலைஞன். பேட்டி எல்லோருக்கும் நன்கு புரியவேண்டும் என்பதற்காக மிக மிக நிதானமாக பேட்டி எடுத்திருக்கிறீர்கள்.

அஜீவன் சாருக்கும் நன்றி. :lol::lol:

நன்றி சுவி

நான் இதில பல விடயங்களை முதலிலேயே அறிஞ்சிட்டன். அஜீவன் சாரின்ர இணையத்தில.

டைகர் பமிலியின் வெள்ளிமாலைக்கு சிறப்புப் பேட்டி அளிச்சதுக்கு பாராட்டலாம். :o

நன்றி நெடுக்ஸ்

ஒலிவடிவத்தில் வந்த பேட்டியையிட்டு மிக்க மகிழ்ச்சி.

கலைஞன் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களை மிகவும் மென்மையாக பதிலளித்த அஜீவன் அங்கிளுக்கும் பாராட்டுக்கள்.

நல்லாக பாடுறீங்க அங்கிள். உங்கள் குறும்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக பிஞ்சுமனம் என்னை மிகவும் பாதித்த ஒரு குறும்படம். உங்கள் வளர்ச்சி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அங்கிள்.

கலைஞன் அண்ணாவின் உச்சரிப்பு சற்று வித்தியாசமாக தெரிகின்றது போல இருக்குது,

அதுசரி இறுதியாக ஒலித்த பாடல் "மெதுவாக பேசு.................." அப்பாடல் என்ன திரைப்படம்?

நன்றி வெண்ணிலா

"மெதுவாக பேசு............."

படம்: பேச மறந்த வார்த்தை

நேர்காணல் சிறப்பாக உள்ளது. அஜூவன் அண்ணாவின் அனுபவமும் கலைஞனின் கன்னி முயற்சியும் குரல் தொணியில் தெரிகிறது. கலைஞனின் யாழ்கள விளக்க குறிப்பில் இல்லாத பதட்டம் இதில் இருக்கிறது. மேலும் மேலும் சிறப்படைய வாழ்த்துகள்.

கலைஞன் ஒரு சிறு திருத்தம். மேலே நான் மேற்கோள் காட்டிய கேள்விக்கான பதிலில் ஒலிப்பதிவில் இருக்கும் பதிலுக்கும் இங்கு எழுத்தில் உள்ள பதிலுக்கும் சிறு வித்தியாசம் இருக்கிறது. நான் சிவப்பு நிறத்தில் அடையளப்படுத்தியது ஒலிப்பதிவில் இல்லை. அது தவறான அர்த்தத்தை தரும். தயவுசெய்து அதை சரி பாருங்கள். நன்றி.

-சபேஸ்-

நன்றி!

நீங்கள் சரி சபேஸ்.

நான் முதலில் குரலில் பதில் கொடுத்தேன்.

பின்னர் கலைஞன் அதை எழுத்து வடிவிலும் அனுப்புங்கள் என்று

கேட்டு எழுதியிருந்தார்.

அதை எழுதும் போது

நான் பேசியவற்றை ஓடவிட்டு எழுதிக் கொண்டிருந்தேன்.

அந்த வார்த்தை என் மனதில் இருந்தது.

பேசும் போது வரவில்லை.

எழுதும் போது இடம் பெற்று விட்டது.

அது என் தவறால் நேர்ந்தது சபேஸ்.

சுட்டிக் காட்டியதற்கு நன்றி!

மன்னிக்கவும்.

நன்றி அனைவரின் கருத்துக்களுக்கும்.. சபேஸ் அது என்ன பிரச்சனை என்றால் உரையாடல் கொஞ்சம் புரபசனலாக இருக்கவேண்டும், வீட்டில் கதைப்பதுபோல் கதைக்கக்கூடாது என்று முயற்சி செய்ததில் சற்று பதற்றப்படுவது போல் உள்ளது. நீங்கள் சுட்டிக்காட்டிய தவறை திருத்தி உள்ளேன். நன்றி!

கன்னி முயற்சியாக இறங்கியுள்ளீர்கள்.

எனவே தொடர்ந்து செய்யும் போது

சரியாகிவிடும் கலைஞன்.

சபேஸ் சொல்லும் விடயத்தை கருத்தில் எடுங்கள் கலைஞன்.

பாராட்டுகளைப் போலவே

நியாயமான

விமர்சனங்களையும் காதில் எடுத்துக் கொண்டால்

அது கலைஞனை உயர்த்தும்.

பாராட்டுகள்

தொடருங்கள்

Edited by AJeevan

பாராட்டுக்கள் கலைஞன், நல்லாக செய்துள்ளீர்கள்.

அஜீவன் உங்கள் பதில்கள் பிரமாதம், உங்கள் ஆதங்கத்தை வெளிப்படையாக கூறியிருக்கின்றீர்கள். நீங்கள் ஒரு கலைஞன் என்ற வகையில் இதைவிட பல சோதனைகளை இன்னும் சந்திக்கவேண்டி இருக்கும், அவை எல்லாவற்றையும் கடந்து சாதிக்கவேண்டிய மனப்பக்குவம் கலைஞர்களுக்கு அவசியம் இருக்கவேண்டும்.

அதாவது உங்கள் மனக்குமுறல்கலை இன்னும் அடக்கி வைத்திருந்திருந்தால் உங்கள் கௌரவம் இரட்டிப்பாக இருந்திருக்கும் என்பதுதான் எனது கருத்து.

நன்றி வல்வை மனிதன்.

நீங்கள் சொல்பவை உண்மை.

நான் சொல்வதை தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

என் கெளரவத்துக்காக என்று

பிரச்சனைகளை அடக்கி வைத்தால்

அது எனக்கு கெளரவத்தை தரும்.

ஆனால் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒன்றை தராது.

ஏமாறுவோர் ஏமாறுவார்கள்

ஏமாற்றுவோர் தொடர்ந்தும் ஏமாற்றுவார்கள்.

இதை சொல்லி சொல்லியே

வாய் புளித்து விட்டது? :o

எனக்குத் தெரியும்

என்னைப் போன்றோர்

இவற்றை சொல்லாவிட்டால்

இதையே சாக்காக வைத்து

இப்படியான போலி ஆசாமிகள்

இதே பாணியை தொடர்வார்கள்.

படைப்பாளிகள்

அடுத்தவர்கள் திருந்த வேண்டும்

அடுத்தவர்களுக்கு படிப்பினையாக இருக்க வேண்டும்

நல்லது செய்ய வேண்டும்

அடுத்துவர்களை சிந்திக்க வைக்க வேண்டும் போன்ற நோக்கங்களில்தான்

கலை படைப்புகளை படைக்கிறார்கள் என்று

அப்பாவி பாமர மக்கள் நினைக்கிறார்கள்.

நானும் நினைத்ததுண்டு............? :(

இதை எவரும் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால்

ஒரு சிலர் கெளரவப் பிரஜைகளாக நடமாடுவதற்காக

நல்லவர்கள் போல் கலை படைப்புகளை செய்கிறார்கள்.

அதை வைத்து விலாசம் வேறு தேடுகிறார்கள்.

அதற்கு சிலரை கருவிகளாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்?

இவைதான் அதிகமாக புலத்தில் நடப்பது?

மக்களுக்கு உபதேசம் செய்யு முன்

அந்த உபதேசத்தில்

ஒரு சத வீதத்தையாவது

அந்த நபர்கள் பின்பற்ற வேண்டாமா?

அவர்களது அழைப்பை ஏற்று போவோர் கூட

அதை உணர வைக்க வேண்டாமா? :lol::lol::lol:

இது இவர்களிடம் ஒரு காலும் நடக்காது.

இல்லாவிட்டால்

உபதேசம் அல்லது பெரிய மனுசன் வேசம் போடாதீர்கள்!

என்பதுதான் நான் சொல்லும் வேதம்!

நான் கூட என் கெளரவத்துக்காக

பேசாமல் இருந்தால்

என் கெளரவம் நிலைக்கும் வல்லை மனிதன்.

நான் இப்படி பகிரங்கமாக பேசுவது அனைவருக்கும் தெரியும்.

இது சற்று எனக்கு பிரச்சனைதான்?

நான் இப்படி உண்மை பேசுவதால்

உண்மையாக நடப்பது

பலருக்கு பிடிக்காது :lol:

ஆனால் அதுதான் எனக்கு பிடிக்கும்!

எமது சுயநலங்களுக்காக

மெளனமாக இருந்தால் நமது பை நிறையும்.

மனம் நிறையாது?

இந்த மெளனங்களால்

பொய்யர்கள் தொடர்ந்து பயனிப்பார்கள்!

அதையே தொடர்ந்து செய்வார்கள்.

இதை தடுக்க என்னைப் போன்றோர்கள் கூட பேசாமல் இருந்தால்

" சம்பந்தப்பட்டவர்களே பேசயில்ல

நீங்கள் என்னடாப்பா?" என்று

அடுத்தவர்களை மடக்கி

அவர்களது வார்த்தை ஜாலங்களால்

அதை தொடர்ந்து கொண்டே போவார்கள்...............

இப்படியான மனிதர்கள்

இதை நம்மோடு முடிவுக்கு கொண்டு வரட்டும்

உங்களைப் போன்ற

இன்றைய இளைய தலை முறையினரையும்

தவறாக இவர்கள் பயன்படுத்தக் கூடாது.

இவை போன்ற பிரச்சனைகளால்தான்

எமது திரைப்படங்கள் இன்று வரை உருவாகாததற்கு காரணம்.

இப்படியான போலிகள்தான்........

இவர்கள் எவரையோ மேடைகளில் தாக்கி

இப்போது கைதட்டல் வாங்குகிறார்கள்!

இந்த கைதட்டல் வாங்கும்

இவர்கள் ஆரம்ப காலத்தில் செய்த கலை படைப்புகளை பார்த்தால்

அந்த எவரையோ போல நடக்க முயன்று தடுக்கி விழுந்து இருப்பார்கள்

என்பது தெரியும்! :lol:

நாமே அடிப்படை பிரச்சனையாக இருந்து கொண்டு

அடுத்தவனை நோவதில் பயனில்லை?

என் கெளரவத்துக்காக

தலை சுற்றி கீழே விழும் நிலை வந்தால்

என் முன் பல லட்சம் மக்கள் நிற்கிறார்களே

ஐயோ மேடையில் நிற்கிறேனே?என்று

கீழே விழாமல் இருக்க முடியாது?

என்னையறியாமலே விழலாம்

தலைசுத்தி விழுந்தால்

விழுந்துதானே ஆக வேண்டும்?

அதன் பின்னர் எவரோ என்னை தூக்கி உதவலாம்.

என்னை தூக்குபவர் எவரென்று புரிந்து கொள்ள

எனக்கு உணர்வு இருக்காது.

அந்த நேரம் அந்தஸ்த்து : பதவி இதெல்லாம்

இயற்கையோடு ஒத்து வராது?

இது யதார்த்தம்.

இது போல கெளரவம் பார்த்து

நமது சமுதாயம் எத்தனையை இழந்தது தெரியுமா?

நமது இனம் அன்று

கெளரவம் பார்த்து பேசாமல் இருந்ததால்

இப்படி அடிமையாகிப் போனோம்.

இப்போது பேசி பேசி அடி கொடுப்பதால்தான் - இன்று

செத்தாலும் மனிதனாய் சாகிறோம்.

நன்றி மைந்தன்.

( உங்கள் கேள்வி சம்பந்தப்பட்டவர்களை யோசிக்க வைக்கும்?

நன்றி வல்வை மனிதன்!)

Edited by AJeevan

வாழ்த்துக்கள் கலைஞன் மற்றும் அஜீவன். அஜீவன் அவர்கள் யாழ் இணைய கருத்துக்களத்தில் நீண்டகாலமாக உறுப்பினராக இருக்கிறார். சினிமாத் துறை தொடர்பாக எம்முடன் தனது அனுபவங்கள் பலவற்றை பகிர்ந்துள்ளார். அவரது கலைத்துறைப் பயணம் தொடர்ந்து வெற்றிகரமாகச் செல்ல யாழ் இணையம் சார்பாக வாழ்த்துக்கள். தமிழ் கலைஞர்கள் பலர் தமிழ்ச் சமூகத்தை விட்டு அல்லது தமிழ்ப் படைப்புலகை விட்டு ஒதுங்கிக் கொள்கிற தன்மைதான் காலத்துக்குக் காலம் நிகழ்கிறது. எனவே, அஜீவன் போன்ற திறமையான கலைஞர்கள் ஒதுங்கிக் கொள்ளாமல் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து நிற்கவேண்டும் என்பது பலரது விருப்பம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் யாழ் இணையம் சார்பாக நாம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம். யாழ் கருத்துக்களத்தின் ஊடான திட்டமிடலுடனும், ஒருங்கமைப்புடனும் ஒரு குறும்படத்தை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்தல். அந்த வகையில் யாழ் கருத்துக்களத்தில் இணைந்திருக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு குறும்படத்தை உருவாக்க அஜீவன் அவர்கள் முன்வரவேண்டும்.

வாழ்த்துக்கள் கலைஞன் மற்றும் அஜீவன். அஜீவன் அவர்கள் யாழ் இணைய கருத்துக்களத்தில் நீண்டகாலமாக உறுப்பினராக இருக்கிறார். சினிமாத் துறை தொடர்பாக எம்முடன் தனது அனுபவங்கள் பலவற்றை பகிர்ந்துள்ளார். அவரது கலைத்துறைப் பயணம் தொடர்ந்து வெற்றிகரமாகச் செல்ல யாழ் இணையம் சார்பாக வாழ்த்துக்கள். தமிழ் கலைஞர்கள் பலர் தமிழ்ச் சமூகத்தை விட்டு அல்லது தமிழ்ப் படைப்புலகை விட்டு ஒதுங்கிக் கொள்கிற தன்மைதான் காலத்துக்குக் காலம் நிகழ்கிறது. எனவே, அஜீவன் போன்ற திறமையான கலைஞர்கள் ஒதுங்கிக் கொள்ளாமல் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து நிற்கவேண்டும் என்பது பலரது விருப்பம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் யாழ் இணையம் சார்பாக நாம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம். யாழ் கருத்துக்களத்தின் ஊடான திட்டமிடலுடனும், ஒருங்கமைப்புடனும் ஒரு குறும்படத்தை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்தல். அந்த வகையில் யாழ் கருத்துக்களத்தில் இணைந்திருக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு குறும்படத்தை உருவாக்க அஜீவன் அவர்கள் முன்வரவேண்டும்.

நன்றி வலைஞன்!

யாழ்களம் பல முன்னெடுப்புகளை செய்திருக்கிறது.

அது போல

ஒரு சிலரது முகம் எனக்கு தெரியும்

பலரது முகம் தெரியாவிடினும்

எனக்கு உங்கள் உணர்வுகள் புரியும்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்பட வேண்டியது.

இணைந்து செயல்படுத்துவோம்.

அதற்கான பணியில் இறங்குங்கள்.

பேசுவோம்

செயல்படுவோம்

உங்கள் அனைவரது எண்ணங்களையும்

வலைஞனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனது கருத்துகளையும் தேவையான போது பகிர்ந்து கொள்கிறேன்.

இனி.........................

பேட்டி மிகவும் சுவாரசியமாகவும் நன்றாகவும் இருந்தது பேட்டி மூலம் அஜிவன் அண்ணாவை பற்றி பல விசயங்களை அறியகூடியதாக இருந்தது :o ......உங்களுடைய பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது.......அத்துடன் உங்களுடைய இளமைபருவ தோற்றதிற்கும் தற்போது உள்ள தோற்றதிற்கும் பல வித்தியாசம் கண்டுபிடிக்கவே முடியாது போல் உள்ளது :lol: ......அத்துடன் டைகர் வெள்ளிமாலை பேட்டி பக்கத்திற்கு உங்கள் செவ்வியை வழங்க ஒத்துகொண்டு அழகான பேட்டியை தந்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்!! :lol:

அத்துடன் டைகர் வெள்ளி மாலை பக்கத்தை புதுபொலிவுடன் கொண்டு வர ஒலி வடிவம் மூலம் தனது கன்னி பேட்டியை மிகவும் சிறந்தமுறையில் கேட்ட ஜெனரல் அவர்களிற்கும் வாழ்த்துகள் தொடர்ந்தும் பல பேட்டிகளை காண வாழ்த்துகள்!! :lol:

கேள்விகள் மூலம் வேள்வி செய்த ஜெனரலிற்கும் அந்த வேள்வியை இலகுவா எடுத்து பதிலளித்த அஜிவன் அண்ணா இருவருக்கும் நன்றிகள்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

நன்றி யமுனா

அஜீவனின் பேட்டி நல்லாக இருந்தது ...வாழ்த்துக்கள்

நன்றி சின்னக்குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அஜீவன்!

எனது கேள்வியை சரியாக புரிந்துகொண்டு, மிகவும் நுட்பமாகவும், பொறுமையாகவும், விரிவாகவும் விளக்கம் தந்துள்ளீர்கள் அதற்காக முதலில் தலை வணங்குகின்றேன்.

இந்த பதில்மூலம் உண்மையான ஒரு கலைஞன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்.

அனுபவரீதியாக அறிந்துகொண்டவன் என்ற ரீதியில்தான் அந்த கேள்வியை கேட்டேன் வேறெந்த நோக்கமுமல்ல.

உங்கள் கலைப்பாதையில் ஏற்படும் தடைகளை உடைத்து வெற்றியுடன் பல சாதனைகளை படைக்கவேண்டுமென வாழ்த்தி தற்காலிகமாக விடைபெறுகின்றேன்.

Edited by Valvai Mainthan

நன்றி அஜீவன்!

எனது கேள்வியை சரியாக புரிந்துகொண்டு, மிகவும் நுட்பமாகவும், பொறுமையாகவும், விரிவாகவும் விளக்கம் தந்துள்ளீர்கள் அதற்காக முதலில் தலை வணங்குகின்றேன்.

இந்த பதில்மூலம் உண்மையான ஒரு கலைஞன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்.

அனுபவரீதியாக அறிந்துகொண்டவன் என்ற ரீதியில்தான் அந்த கேள்வியை கேட்டேன் வேறெந்த நோக்கமுமல்ல.

உங்கள் கலைப்பாதையில் ஏற்படும் தடைகலை உடைத்து வெற்றியுடன் பல சாதனைகளை படைக்கவேண்டுமென வாழ்த்தி தற்காலிகமாக விடைபெறுகின்றேன்.

உங்கள் வாழ்த்துக்கும்

உங்கள் அன்புக்கும் நன்றி வல்வை மனிதன்.

என்னை புரிந்து கொண்ட உங்களை

சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

நன்றி இனியவனே!

Edited by AJeevan

இந்த அரிய யாழின் பழைய கலைஞனை... ஓர் அரிய யாழின் என்றும் இல்லாத... இன்றைய புதிய கலைஞனால் கெளரவிக்கப்பட்ட முறை அருமை... :lol: நன்றி

Edited by Netfriend

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.