Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

muthaiya-muralidharan.jpg?resize=750,375

1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்ய உள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் பற்றி அவருடன் முரளீதரன் கலந்துரையாடியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக ஆரம்பத்தில்; 230 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், தற்போது மொத்தம் 1,000 கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 1,400 கோடியாக உயர்த்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிறுவனத்துக்கான உற்பத்தி நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முரளீதரன் எதிர்வரும் காலங்களில் தார் வாட்டில் மற்றொரு பிரிவையும் தொடங்க திட்டமிட்டுள்ளார் என குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1388719

  • கருத்துக்கள உறவுகள்

பல்லுள்ளவன் பகோடா சாப்பிடுகிறான், அதைப்பற்றி நாங்கள் ஏன் அலட்டிக்கொள்ளவேண்டும

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்ய உள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவிலா............ அவர்கள் அப்பப்ப தமிழர்களுக்கு தண்ணீரை கட் பண்ணி விடுவார்களே... முரளியின் குளிர்பான தொழிலை மட்டும் அப்படியே விட்டு விடுவார்களா, என்ன....

கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு நண்பன், சென்னையில் பின்னர் படித்தவன், சமீபத்தில் சொன்னது: அவன் சென்னையில் இன்ஜினிரியங் படித்துக் கொண்டிருக்கும் போது அடிக்கடி காவிரி நீர் பிரச்சனை காரணமாக போராட்டம் நடந்ததாம். இப்பொழுது அவனது மகன் இன்ஜிரியங் படித்துக் கொண்டிருக்கின்றாராம். இப்பொழுதும் அதே காவிரி போராட்டம் அங்கே நடந்து கொண்டிருக்கிறதாம்.......🤣....... சில பிரச்சனைகளை அரசியல்வாதிகள் அப்படியே எப்போதும் கைவசம் வைத்திருப்பார்கள் போல......

முரளி இலங்கையில் குளிர்பானங்கள் அடைக்கும் can & bottle தொழிற்சாலை ஒன்றை வைத்திருக்கின்றார். யானைகள் போய் வரும் இடத்தை அடைத்து இவருடைய தொழிற்சாலைக்கு இடம் வழங்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டும் இருந்தது. ஆனாலும் இவருக்கு கோதாவின் ஆதரவு இருந்தபடியால் எவராலும் எதுவும் செய்ய முடியவில்லை............

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, தமிழ் சிறி said:

1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.

விளையாட்டு எனும் பண வியாபாரத்தில் முரளிதரன்  கோடீஸ்வரன்.யாரால்? அவர்  ரசிகர்களால் மட்டுமே.
ஆனால் அவர் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாழ்க்கை தரம் என்ன?

இதே கதைதான் தான் சினிமா முதலைகளுக்கும்... அரசியல்வாதிகளுக்கும்.

Edited by குமாரசாமி
மெருகூட்டப்பட்டுள்ளது 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு நண்பன், சென்னையில் பின்னர் படித்தவன், சமீபத்தில் சொன்னது: அவன் சென்னையில் இன்ஜினிரியங் படித்துக் கொண்டிருக்கும் போது அடிக்கடி காவிரி நீர் பிரச்சனை காரணமாக போராட்டம் நடந்ததாம். இப்பொழுது அவனது மகன் இன்ஜிரியங் படித்துக் கொண்டிருக்கின்றாராம். இப்பொழுதும் அதே காவிரி போராட்டம் அங்கே நடந்து கொண்டிருக்கிறதாம்.......🤣....... சில பிரச்சனைகளை அரசியல்வாதிகள் அப்படியே எப்போதும் கைவசம் வைத்திருப்பார்கள் போல......

அதே போல "கச்சதீவை இலங்கையிடமிருந்து  மீட்போம்"   என்ற கோசமும்,
அடுத்த நூறாண்டுகளுக்கு ஆவது, அரசியல்வாதிகளால் ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியிலும் இடம்பெறும் என நம்பலாம். 😂
மக்களை அடிமட்ட  முட்டாள்களாக  அரசியல்வாதிகள் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

விளையாட்டு எனும் பண வியாபாரத்தில் முரளிதரன்  கோடீஸ்வரன்.யாரால்? அவர்  ரசிகர்களால் மட்டுமே.
ஆனால் அவர் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாழ்க்கை தரம் என்ன?

இதே கதைதான் தான் சினிமா முதலைகளுக்கும்... அரசியல்வாதிகளுக்கும்.

1400 கோடியினை முரளி கிரிக்கெட்டில் உழைத்திருக்கமுடியாது, பெரும்பாலான இவரது விளையாட்டு காலகட்டத்தில் இலங்கை அணிக்காக விளையாடியவர் இதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருமானம் மற்றும் விளம்பர பணம் என்பவற்றில் இவர் இவ்வளவு பணத்தினை பெற்றிருக்கமுடியாது, அத்துடன் இவர் ஐ பி எல் போன்ற போட்டிகளில் மிக குறுகிய காலங்கள் மட்டுமே விளையாடி இருந்தார், நான் நினைக்கிறேன் இவர் யாராவது உழல் அரசியல்வாதிகளின் பினாமியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

நீங்கள் சொல்வது போலவும் இருக்கக் கூடும். அத்துடன் இவர் தமிழ்நாட்டில்  திருமணம் முடித்ததும் மிகப்பெரும் பணக்கார குடும்பம் ஒன்றிலேயே. 'மலர் ஹாஸ்பிடல்ஸ்' என்று தனியார் மருத்துவமனைகளை நடத்தி வரும் ராமமூர்த்தியின் மகளான மதிமலரே இவரின் மனைவி.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் எவரும் கிரிக்கெட்டில் பெரிதாக சம்பாதிக்கவில்லை. இவரின் இலங்கையில் இருக்கும் தொழிற்சாலை மிகவும் இலாபகரமானது என்ற தகவல் அந்த சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதுகாக்கும் அமைப்பால் வெளியிட்ட அறிக்கையில் இருந்ததாக ஒரு நினைவு. அப்பொழுதே இவர் ராஜபக்சாக்காளின் கூட்டத்தில் ஒருவர் என்றும் சொன்னார்கள்.   

7 hours ago, தமிழ் சிறி said:

அதே போல "கச்சதீவை இலங்கையிடமிருந்து  மீட்போம்"   என்ற கோசமும்,
அடுத்த நூறாண்டுகளுக்கு ஆவது, அரசியல்வாதிகளால் ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியிலும் இடம்பெறும் என நம்பலாம். 😂
மக்களை அடிமட்ட  முட்டாள்களாக  அரசியல்வாதிகள் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

கச்சதீவை இந்தியா மீட்டால் மீன் வளம் அதிகரிக்கும் என்று ஒரு காரணமும் சொல்கின்றனர். இப்பொழுது கச்சதீவு இலங்கையிடம் இருப்பது தெரிந்து, அந்தப் பகுதியில் நீந்தும் மீன்கள் எல்லாம் வேற எங்கேயோ போய் முட்டை போடுகின்றன போல........🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

1400 கோடியினை முரளி கிரிக்கெட்டில் உழைத்திருக்கமுடியாது, பெரும்பாலான இவரது விளையாட்டு காலகட்டத்தில் இலங்கை அணிக்காக விளையாடியவர் இதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருமானம் மற்றும் விளம்பர பணம் என்பவற்றில் இவர் இவ்வளவு பணத்தினை பெற்றிருக்கமுடியாது, அத்துடன் இவர் ஐ பி எல் போன்ற போட்டிகளில் மிக குறுகிய காலங்கள் மட்டுமே விளையாடி இருந்தார், நான் நினைக்கிறேன் இவர் யாராவது உழல் அரசியல்வாதிகளின் பினாமியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

பிரபலமான புள்ளியான அவர் பல முதலீட்டாளர்களை அணுகி பணத்தை வசூல் செய்வது கடினமானது இல்லை. 

தகப்பனாரின் விசுக்கோத்து நிறுவனம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைத்ததோ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

நீங்கள் சொல்வது போலவும் இருக்கக் கூடும். அத்துடன் இவர் தமிழ்நாட்டில்  திருமணம் முடித்ததும் மிகப்பெரும் பணக்கார குடும்பம் ஒன்றிலேயே. 'மலர் ஹாஸ்பிடல்ஸ்' என்று தனியார் மருத்துவமனைகளை நடத்தி வரும் ராமமூர்த்தியின் மகளான மதிமலரே இவரின் மனைவி.

2 hours ago, நியாயம் said:

பிரபலமான புள்ளியான அவர் பல முதலீட்டாளர்களை அணுகி பணத்தை வசூல் செய்வது கடினமானது இல்லை. 

தகப்பனாரின் விசுக்கோத்து நிறுவனம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைத்ததோ?

பொதுவாக தமது பணத்தினை யாரும் முதலிடுவதில்லை, வங்கியில் கடன் பெற்றால் அதன் கடன் வட்டி  வரி விலக்கழிக்கப்படும் என்பதால் தமது சொந்த பணத்தினை முதலிடுவது அவர்களுக்கு நட்டம் ஏற்படும்.

எப்பவுமே OPM (Other People Money) தெரிவு.

வங்கிக்கடனுக்கு சொத்துக்களை பிணை வைத்தாலும் வியாபாரதிட்ட்டம் சிறப்பாக இல்லாவிட்டால் வங்கி பணம் கொடுக்காது அதனைவிட தனியார் முதலீட்டாளர்களை பெறுவது கல்லில் நார் உரிப்பது போல, பிரபலம் என்பதற்காக யாரும் தமது காசை எடுத்து சும்மா கொடுத்துவிடுவார்களா?

1400 கோடியில் ஆரம்ப கட்டுமானம், இயந்திரங்கள், ஒரு வருட நடை முறை செலவு என்பன கிட்டதட்ட 1200 கோடிகளை எட்டும் மிகுதிப்பணமாய்வு மற்றும் சந்தைப்படுத்த்லுக்கு செலவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

பினாமி என்பது உங்கள் ஊகம். முதலீட்டாளர்கள் கொடுத்தார்கள் என்பது எனது ஊகம். மனைவியின் சொத்து என்பது இன்னொருவர் ஊகம். என்னால் முடியாத ஒன்றை அவர் செய்கின்றார். அதற்காக அது சட்டவிரோதமானது என நான் நினைக்க தேவை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் சொத்து மதிப்பு  9 மில்லியன் அமெரிக்க டொலர் என கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

அவரின் சொத்து மதிப்பு  9 மில்லியன் அமெரிக்க டொலர் என கூறப்படுகிறது.

இலங்கையில் அரசியல் ஸ்திரமின்மை இன்னும் தொடரும் என்பது முரளிதர போன்றவர்களுக்கு விளங்கியிருக்கின்றது
அதனாலே அவர்கள் குறைந்த சம்பளத்தில் அதிக லாபம் ஈட்டக்கூடிய இந்தியாவை நாடுகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

இலங்கையில் அரசியல் ஸ்திரமின்மை இன்னும் தொடரும் என்பது முரளிதர போன்றவர்களுக்கு விளங்கியிருக்கின்றது
அதனாலே அவர்கள் குறைந்த சம்பளத்தில் அதிக லாபம் ஈட்டக்கூடிய இந்தியாவை நாடுகின்றனர்

அவரின் மனைவியின் இடத்தில் கூட முதலிடவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. வரிச்சலுகை கர்நாடகத்தில் கொடுக்கிறார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நியாயம் said:

பினாமி என்பது உங்கள் ஊகம். முதலீட்டாளர்கள் கொடுத்தார்கள் என்பது எனது ஊகம். மனைவியின் சொத்து என்பது இன்னொருவர் ஊகம். என்னால் முடியாத ஒன்றை அவர் செய்கின்றார். அதற்காக அது சட்டவிரோதமானது என நான் நினைக்க தேவை இல்லை. 

👍....

இதில் எதுவும் சட்ட விரோதமானது இல்லை. 

அவருடைய மனைவியின் சொத்தையே இந்த தொழிலில் முதலிடுகின்றார் என்று நான் சொல்ல வரவில்லை. அவர் மிகவும் செல்வாக்கானவர் என்றே சொல்ல வந்தேன். முதலீட்டாளார்களை கவர்ந்திழுப்பதற்கு இது அவருக்கு உதவும்.

முரளியின் சொத்து மதிப்பு 9 மில்லியன் டாலர்கள் தான் என்றால், இந்திய ரூபாயில் 70 அல்லது 75 கோடிகள், அது ஒன்றுமேயில்லை. டாக்டர் ராமமூர்த்தியின் சொத்து மதிப்பு எனக்குத் தெரியாது. சில நூறு கோடிகளாக இருக்கலாம். முதலீட்டாளர்கள் தான் இங்கு தேவை.

Sports Drinks இன்று உலகெங்கும் கடகடவென்று வளரும் ஒரு பெரிய தொழில். இங்கு அமெரிக்காவில் லயனல் மெஸ்ஸி ஒன்றை ஆரம்பிக்கின்றார். Kobe Bryant இறப்பதற்கு முன் இதில் இருந்தார். கடந்த வருடம் அவருடைய நிறுவனத்தை கோக் வாங்கியது என்று நினைக்கின்றேன், அல்லது பெப்ஸி, இரண்டில் ஒன்று. கோபேயின் பங்காக 600 அல்லது 700 மில்லியன் டாலர்கள் வந்தது. இன்னும் சில பிரபல வீரர்களும் இதில் இருக்கின்றனர். Electrolytes, Alkaline Water, ..... இப்படி ஏதாவது சொல்லி, அவர்களும் நண்பர்களும் விளம்பரத்தில் வந்து, அவர்களின் ஒவ்வொரு சதங்களையும் பல டாலர்களாக மாற்றி விடுகின்றனர்.

அதே பழைய குளிர் தண்ணீருக்குள் ஒரு எலுமிச்சையையும், கொஞ்ச உப்பையும் போடுவதற்கு இன்னும் எதுவும் ஈடாகவில்லை, ஆனாலும் மார்க்கெட்டிங் என்று ஒன்று இருக்குதல்லவா.........      

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நியாயம் said:

பினாமி என்பது உங்கள் ஊகம். முதலீட்டாளர்கள் கொடுத்தார்கள் என்பது எனது ஊகம். மனைவியின் சொத்து என்பது இன்னொருவர் ஊகம். என்னால் முடியாத ஒன்றை அவர் செய்கின்றார். அதற்காக அது சட்டவிரோதமானது என நான் நினைக்க தேவை இல்லை. 

எனக்கு உண்மையாகவே பினாமி என எழுத சங்கடமாகவே இருந்த்து, ஆனால் நடைமுறையில் சாத்தியப்பாடான விடயத்தினை கூற முயன்றேன், ஆனால் அதனை தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்க எழுதவில்லை.

3 minutes ago, ரசோதரன் said:

👍....

Sports Drinks இன்று உலகெங்கும் கடகடவென்று வளரும் ஒரு பெரிய தொழில். இங்கு அமெரிக்காவில் லயனல் மெஸ்ஸி ஒன்றை ஆரம்பிக்கின்றார். Kobe Bryant இறப்பதற்கு முன் இதில் இருந்தார். கடந்த வருடம் அவருடைய நிறுவனத்தை கோக் வாங்கியது என்று நினைக்கின்றேன், அல்லது பெப்ஸி, இரண்டில் ஒன்று. கோபேயின் பங்காக 600 அல்லது 700 மில்லியன் டாலர்கள் வந்தது. இன்னும் சில பிரபல வீரர்களும் இதில் இருக்கின்றனர். Electrolytes, Alkaline Water, ..... இப்படி ஏதாவது சொல்லி, அவர்களும் நண்பர்களும் விளம்பரத்தில் வந்து, அவர்களின் ஒவ்வொரு சதங்களையும் பல டாலர்களாக மாற்றி விடுகின்றனர்.

இந்த குளிர்பான பொருள் உற்பத்தி தொடர்பாக புதிய பொருளை அறிமுகப்படுத்தும் ஆய்வுக்குழுவில் பணியாற்றிய அனுபவம் உள்ளது, இரண்டு பெரிய நிறுவங்கள் 
1. கொக்க கோலா
2. புருக்கர்ஸ் (பெப்சி)
என நினைவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nunavilan said:

அவரின் மனைவியின் இடத்தில் கூட முதலிடவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. வரிச்சலுகை கர்நாடகத்தில் கொடுக்கிறார்களோ தெரியவில்லை.

இவர்கள் எல்லாம் இனம்,மொழி,குடும்பம் எல்லாம் கடந்த ஞானிகள் ளப்பா...

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, vasee said:

இந்த குளிர்பான பொருள் உற்பத்தி தொடர்பாக புதிய பொருளை அறிமுகப்படுத்தும் ஆய்வுக்குழுவில் பணியாற்றிய அனுபவம் உள்ளது, இரண்டு பெரிய நிறுவங்கள் 
1. கொக்க கோலா
2. புருக்கர்ஸ் (பெப்சி)
என நினைவுள்ளது.

இவை இரண்டும் தான் என்று நானும் நினைக்கின்றேன். எந்த புதிய நிறுவனத்தின் பொருட்கள் சந்தையில் வெற்றிகரமாக வந்தாலும், இவர்கள் இருவரில் ஒருவர் அதை வாங்கி, தங்களுடையதாக மாற்றிக் கொள்வார்கள். இங்கு கிட்டத்தட்ட எல்லா தொழில்களுமே அப்படித்தான்.........

உங்கள் ஆராய்ச்சி அனுபவத்தை, நேரமிருந்தால், சுருக்கமாகவேனும் எழுதுங்கள். நாங்களும் இதன் பின்னால் இருக்கும் விடயங்களை அறிந்து கொள்கின்றோம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள், விளையாட்டுகள் மற்றும் இங்கு காஸ்ட்கோவில் எதை பெட்டி பெட்டியாக விற்கின்றார்கள் என்ற அளவில் தான் இருக்கின்றது எங்களின் தெரிவிற்கான காரணங்கள்.......

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இவை இரண்டும் தான் என்று நானும் நினைக்கின்றேன். எந்த புதிய நிறுவனத்தின் பொருட்கள் சந்தையில் வெற்றிகரமாக வந்தாலும், இவர்கள் இருவரில் ஒருவர் அதை வாங்கி, தங்களுடையதாக மாற்றிக் கொள்வார்கள். இங்கு கிட்டத்தட்ட எல்லா தொழில்களுமே அப்படித்தான்.........

நீங்கள் கூறுவது முற்றிலும் சரி.

1 hour ago, ரசோதரன் said:

உங்கள் ஆராய்ச்சி அனுபவத்தை, நேரமிருந்தால், சுருக்கமாகவேனும் எழுதுங்கள். நாங்களும் இதன் பின்னால் இருக்கும் விடயங்களை அறிந்து கொள்கின்றோம்.

இது ஒரு நகைசுவை கேள்வி இல்லைதானே, நான் நினைக்கிறேன் உங்களுக்கு இது தொடர்பான முன்னனுபவம் உள்ளதென, இருந்தாலும் கூற்கிறேன், அது ஒரு நிசெ சந்தையைக்கொண்டது முதலில் மொத்த சந்தை, அதன் வளர்ச்சி விகிதம் கணிக்கப்பட்டு அதிலந்த பொருளுக்கான சந்தை அளவு தீர்மானிக்கப்பட்டட்டது, அதற்கு சந்தை அடிபடையான உற்பத்தி எதிர்வு கூறல் உருவாக்கப்பட்டு அதனடிப்படையில் உற்பத்திக்கான அடிப்படை கட்டுமானம், இயந்திரம், ஒரு ஆண்டிற்கான நடைமுறைச்செலவு கணிக்கப்பட்டது, மேலதிகமாக ஆய்வு மற்றும் சந்தைப்படுத்தலுக்கான செலவுகள் என்பவற்றினை கணித்தார்கள், சுவாரசியமான விடயம் ஒரு முடிவுப்பொர்ளின் உற்பத்திச்செலவு விற்பனை விலையில் 1:2 என்ற விகிதத்தில் இருந்தது, ஆனால் நிறுவனத்தினை மிக சிறப்பாக நடத்தினால் 20% இலாபமும் சராசரியாக நடத்தினால் 10% இலாபமும் நிறுவனத்திற்கு கிடைக்கும் வரிவிதிப்புகளுக்கு முன்ந்தாக.

Edited by vasee
தவறான கணிப்பு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இவர்கள் எல்லாம் இனம்,மொழி,குடும்பம் எல்லாம் கடந்த ஞானிகள் ளப்பா...

10 வருடத்துக்கு முதல் நான் நீங்கள் ஜஸ்டின், வசம்பு இன்னும் பல யாழ் உறவுகள் முரளி பற்றி வாதாடியது நினைவில் உள்ளது. அந்த திரியை தேடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, vasee said:

இது ஒரு நகைசுவை கேள்வி இல்லைதானே, நான் நினைக்கிறேன் உங்களுக்கு இது தொடர்பான முன்னனுபவம் உள்ளதென

நல்ல தகவல்கள்.

இல்லை, எனக்கு இதில் அனுபவம் இல்லை.  Gatorade பற்றி வந்த சில கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன். மற்றும் அப்பப்ப வரும் செய்திகள். லயனல் மெஸ்ஸியின் புதிய தொழில் பற்றிய செய்தி போன வாரம் இங்கே வந்திருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

நல்ல தகவல்கள்.

இல்லை, எனக்கு இதில் அனுபவம் இல்லை.  Gatorade பற்றி வந்த சில கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன். மற்றும் அப்பப்ப வரும் செய்திகள். லயனல் மெஸ்ஸியின் புதிய தொழில் பற்றிய செய்தி போன வாரம் இங்கே வந்திருந்தது.

கிட்டதட்ட 6 மில்லியன் பெறுமதியில் ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்(எனது கருத்து தவறாக இருக்கலாம்)

குளிர்பான நிறுவனம் அமைக்க இவ்வளவு செலவாகுமா ? செய்தியில் உள்ளது போல் 230 கோடி தொழிற்சாலை ஆரம்பிப்பதற்காக இருக்கலாம். பின்னர் அடுத்த வருடங்களில் குறிப்பிடப்படும் தொகை வேறு முதலீடுகளாக இருக்கலம். 

நேற்று Nvidia நிறுவனம் அப்பிள், மைக்ரோசொஃப்ட் நிறுவனங்களையெல்லாம் தாண்டி மூவாயிரம் பில்லியனுக்கு மேல் பங்குச் சந்தை மதிப்பைப் பெற்றது. ஆனால் இத்தனை பில்லியன் பெறுமதியான ஒன்றும் இந்த நிறுவனத்திடம் இல்லை.  இதுபோல் வெளியாரின் முதலீட்டினை எதிர்வரும் வருடங்களில் 1400 கோடியாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

நீங்கள் கூறுவது முற்றிலும் சரி.

இது ஒரு நகைசுவை கேள்வி இல்லைதானே, நான் நினைக்கிறேன் உங்களுக்கு இது தொடர்பான முன்னனுபவம் உள்ளதென, இருந்தாலும் கூற்கிறேன், அது ஒரு நிசெ சந்தையைக்கொண்டது முதலில் மொத்த சந்தை, அதன் வளர்ச்சி விகிதம் கணிக்கப்பட்டு அதிலந்த பொருளுக்கான சந்தை அளவு தீர்மானிக்கப்பட்டட்டது, அதற்கு சந்தை அடிபடையான உற்பத்தி எதிர்வு கூறல் உருவாக்கப்பட்டு அதனடிப்படையில் உற்பத்திக்கான அடிப்படை கட்டுமானம், இயந்திரம், ஒரு ஆண்டிற்கான நடைமுறைச்செலவு கணிக்கப்பட்டது, மேலதிகமாக ஆய்வு மற்றும் சந்தைப்படுத்தலுக்கான செலவுகள் என்பவற்றினை கணித்தார்கள், சுவாரசியமான விடயம் ஒரு முடிவுப்பொர்ளின் உற்பத்திச்செலவு விற்பனை விலையில் 1:2 என்ற விகிதத்தில் இருந்தது, ஆனால் நிறுவனத்தினை மிக சிறப்பாக நடத்தினால் 20% இலாபமும் சராசரியாக நடத்தினால் 10% இலாபமும் நிறுவனத்திற்கு கிடைக்கும் வரிவிதிப்புகளுக்கு முன்ந்தாக.

எந்த ஒரு பொருளுக்கும் 4 நிலைகள் உள்ளதள்ளாவா?

Introduction, growth, maturity and decline என‌

இவைகள் கருத்தில் கொள்ளப்பட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2024 at 10:24, இணையவன் said:

குளிர்பான நிறுவனம் அமைக்க இவ்வளவு செலவாகுமா ? செய்தியில் உள்ளது போல் 230 கோடி தொழிற்சாலை ஆரம்பிப்பதற்காக இருக்கலாம். பின்னர் அடுத்த வருடங்களில் குறிப்பிடப்படும் தொகை வேறு முதலீடுகளாக இருக்கலம். 

நேற்று Nvidia நிறுவனம் அப்பிள், மைக்ரோசொஃப்ட் நிறுவனங்களையெல்லாம் தாண்டி மூவாயிரம் பில்லியனுக்கு மேல் பங்குச் சந்தை மதிப்பைப் பெற்றது. ஆனால் இத்தனை பில்லியன் பெறுமதியான ஒன்றும் இந்த நிறுவனத்திடம் இல்லை.  இதுபோல் வெளியாரின் முதலீட்டினை எதிர்வரும் வருடங்களில் 1400 கோடியாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டிருக்கலாம்.

நியாயமான கேள்வி, இதே கேள்வி எனது மனதிலும் எழுந்தது ஆனால் பினர் அந்த நிறுவனம் அமைக்கும் நில அளவு 46 ஏக்கர் என குறிப்பிடப்பட்டுள்ளது ஆகையால் இது மிக பெரிய நிறுவனம் அதனால் அதன் அடிப்படை கட்டுமான செலவும் அதிகமாக இருக்கலாம், முன்னர் கூறிய சிறிய நிறுவனத்தின் வருவாய் 20 மில்லியன், அடிப்படை கட்டுமான நில அளவின்படி பார்த்தால், இந்த நில அளவில் இந்த பெரிய நிறுவனம் அமைக்க இந்திய பணப்பெறுமதியில் 60 கோடி தொடக்கம் 120 கோடி வரை செலவாகலாம், ஆனால் மிகுதிப்பணம் என்னவாகிறது என்பது நீங்கள் கூறுவது போல ஒரு சுவாரசியமான கேள்வியாக இருக்கிறது, இந்த விடயத்தில்  எதையும் நாங்களாக ஊகித்து கருத்து வைப்பது சரியாக இருக்காது . 
(அத்துடன் எனக்கு இந்த விடயத்தில் பெரிதாக எதுவும் தெரியாது அத்துடன் இந்த கணிப்பு முன்பு செய்யப்பட்ட ஒரு சிறிய நிறுவனத்தின் கணிப்பினை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது, எனது கருத்து தவறாக இருக்கலாம்).

On 21/6/2024 at 17:36, colomban said:

எந்த ஒரு பொருளுக்கும் 4 நிலைகள் உள்ளதள்ளாவா?

Introduction, growth, maturity and decline என‌

இவைகள் கருத்தில் கொள்ளப்பட்டதா?

மன்னிக்கவும் வார இறுதி வேலை இருந்ததால் நேரமின்ன்மையால் பதிலிட முடியவில்லை, ஆய்வு (research & Development), சந்தைப்படுத்தல் (Marketing) என்பவற்றினால் குறிப்பிடப்பட்டுள்ளது, உங்களுக்கு இதில் முன்னனுபவம் அல்லது துறைசார் புலமை உள்ளது என புரிகிறது, உங்கள் அனுபங்களை பகிர்ந்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.

இந்த நிகழ்வு நடைபெற்று நீண்ட காலமாகிவிட்டது, அதனுடைய நுணுக்கங்கள் நினைவில்லை, ஆனால் புதிய வாடிக்கையாளர்களை பெறுவதிற்கான செலவு காலப்போக்கில் அதிகரிக்கும் என்பதாகவும், உறபத்தி செலவு குறைப்பு, புதிய சந்தை மாற்றத்தினால் ஏற்படும் ஒரு அலகு உற்பத்திக்கான செலவு அதிகரிப்பு தொடர்பான எதிர்வுகூறல்கள் செய்யப்பட்டதாக நினைவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2024 at 23:26, putthan said:

இவர்கள் எல்லாம் இனம்,மொழி,குடும்பம் எல்லாம் கடந்த ஞானிகள் ளப்பா...

ஞானிகள் கிடையாது தாம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று வீழ்ந்து கிடந்து பிழைக்கும் ஞான சூனிகள். அதனால் தான் அவர் தமிழ் நாட்டில் கூட இதை செய்ய முயலவில்லை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.