Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பொது விவாத நிகழ்ச்சியில், ஜனாதிபதி ஜோ பைடனின் வாதம் திறம்பட அமையவில்லை. இதனால், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக, அவருக்கு பதிலாக மிச்சைல் ஒபாமாவை நிறுத்த வேண்டும் என்ற வாதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நவம்பரில் நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப், போட்டியிட உள்ளனர்.

விரைவில் நடக்க உள்ள இந்த கட்சிகளின் மாநாட்டில், இவர்கள் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர். இந்நிலையில், பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சி அண்மையில் நடந்தது.

இதில் இருவரும் வரம்புமீறி, தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஜோ பைடன் வாதங்கள் வலுவிழந்து இருந்தது என, பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, டிரம்பின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஜோ பைடன் தடுமாறினார். வயது முதிர்வும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இது, ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால், ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பைடனை மாற்றுவது தொடர்பாக பேச்சு எழுந்து உள்ளது. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி, மிச்சைலை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் பராக் ஒபாமா, ஜோ பைடனுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

‘விவாதத்தில், பைடன் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், அவர் நாட்டுக்காக செய்த பணிகளை நினைத்து பார்க்க வேண்டும்’ என, அதில் அவர் கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/304869

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நியூயோர்க் ரைம்ஸ் பைடனை மாற்றி இன்னுமொரு வேட்பாளரை களமிறக்கும் படி கேட்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகிப் போய்விட்டது சனனாயகக் கட்சியினரின் நிலை. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது ? சிறிலங்கா ஜனாதிபதி வே;பாளர்கள் யார் என்ற குழப்பம் போல அமெரிக்காவிலும் நடந்து விட்டது.நாட்டின் அதிபர் பதவிக்கு வயது எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும். குழப்பங்கள் இப்படியே நீடித்தால் ட்ரம்ப் அதிபராக வருவது தவிர்க்க முடியாததாகப் போகின்றது.                  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பைடன் விலகுவதா? குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு

Published By: RAJEEBAN   01 JUL, 2024 | 11:28 AM

image
 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடவேண்டும் அவர் போட்டியிலிருந்து விலகக்கூடாது என அவரது குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான நேரடிவிவாதத்தின் போது ஜோபைடன் தடுமாறியதை தொடர்ந்து அவர் போட்டியிலிருந்து விலகவேண்டும் என்ற வேண்டுகோள்கள் கருத்துக்கள் காணப்படும் நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை காம்ப் டேவிட்டில் தனது குடும்பத்தவர்களை சந்தித்துள்ளார்.

biden_family.jpg

குடும்பத்தவர்களுடனான சந்திப்பின்போது அவரது அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கார்டியன் தெரிவித்துள்ளது.

காம்ப்டேவிட் சந்திப்பின்போது ஜோபைடனின் மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் கலந்துகொண்டுள்ளனர்.

தன்னால் மேலும் நான்கு வருடங்களிற்கு  அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகிக்க முடியும் என்பதை பைடனால் அமெரிக்க மக்களிற்கு நிரூபிக்க முடியும் என குடும்பத்தவர்கள் தெரிவித்தனர் என நியுயோர்க் டைம்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

முதல்விவாதத்தில் அவர் மிகவும் பலவீனமான விதத்தில் நடந்துகொண்டதை  அறிந்துள்ள அவரது குடும்பத்தினர் அதேவேளை டொனால்ட் டிரம்ப்பை தோற்கடிக்க கூடிய ஓரேயொருவர் பைடனே என கருதுகின்றனர்.

போட்டியிலிருந்து விலகவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களை புறக்கணிக்கவேண்டும் என ஜோபைடனின் மனைவியும் மகன் ஹன்டருமே அதிகளவிற்கு வற்புறுத்தினார்கள் என ஏபி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/187367

  • கருத்துக்கள உறவுகள்

ஜில் பைடன்  களத்தில் இறங்கும் வாய்ப்புகள் பற்றி தீவிரமாக பேசப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ பைடனை மாற்ற வேண்டி வந்தாலும்,  கமலா ஹாரிஸ் தவிர வேறு எவரையும் இப்பொழுது பிரேரிக்க முடியாத ஒரு சிக்கல் இருக்கின்றது. பல மாநிலங்களில் ஏற்கனவே வேட்பாளர்களின் பட்டியல் நிரப்பப்பட்டு விட்டது. ஜனநாயக் கட்சியில் ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸின் பெயர் மட்டுமே உள்ளது. இன்னும் நாலு மாதங்களே இருக்கின்றன, வேறு மாற்றங்களுக்கு போதிய நேரம் இல்லை.

ஆனால், பைடன் வென்று பதவிக்கு வந்த பின் வேறு மாற்றங்கள் செய்யக் கூடியதாக இருக்கும்.    

  • கருத்துக்கள உறவுகள்

எவர் வந்தாலும் அடுத்த அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான்.  ✌️ 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

ஜோ பைடனை மாற்ற வேண்டி வந்தாலும்,  கமலா ஹாரிஸ் தவிர வேறு எவரையும் இப்பொழுது பிரேரிக்க முடியாத ஒரு சிக்கல் இருக்கின்றது. பல மாநிலங்களில் ஏற்கனவே வேட்பாளர்களின் பட்டியல் நிரப்பப்பட்டு விட்டது. ஜனநாயக் கட்சியில் ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸின் பெயர் மட்டுமே உள்ளது. இன்னும் நாலு மாதங்களே இருக்கின்றன, வேறு மாற்றங்களுக்கு போதிய நேரம் இல்லை.

ஆனால், பைடன் வென்று பதவிக்கு வந்த பின் வேறு மாற்றங்கள் செய்யக் கூடியதாக இருக்கும்.    

என்னைப் பொறுத்த வரையில் இது தேவையற்ற ஒரு பதற்றம் நீலக்கட்சியின் பக்கமிருந்து.

ஒருவர் தெளிவான குரலில் 90 நிமிடங்கள் பொய்களையும், தரவேயில்லாத கற்பனைகளையும் அள்ளி வீசுகிறார் (Border crisis .."..they are raping and killing our women.."😂). அவர் வாதத்தில் வென்று விட்டார் என்கிறார்கள். மற்றையவர், இவற்றை சுருக்கமாக மறுத்து விட்டு, உண்மையான நிலையை பலம் குறைந்த குரலில் சொல்கிறார். அவர்  தோற்று விட்டார் என்கிறார்கள் - பலவீனமான குரலில் அவர் சொன்னது 90 வீதம் உண்மையான தகவல்கள் என்றாலும் கூட.

இது ட்ரம்ப்- பைடன் குரல் வளப் பிரச்சினை தாண்டி இன்றைய உலகில் எவ்வளவு இலகுவாக "காற்றில் இருந்து கற்பனையைப் பிடிங்கிப் போட்டு" மக்களை ஏமாற்றலாம் என்பதற்கான உதாரணமாக விளங்குகிறது. ஹிற்லர் இந்தக் காலத்தில் இருந்திருந்தால்,  ஆட்சிக்கு வர 3 - 4 வருடங்கள் போராடியிருக்க வேண்டியிருந்திருக்காது,  தன் அல்ப்ஸ் மலை சொகுசு மாளிகையிலிருந்தே ஒரு வருடத்தில் ஆட்சியைப் பிடித்திருப்பார்! - அப்படி பட்ட உலகில் வாழ்கிறோம்! 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

என்னைப் பொறுத்த வரையில் இது தேவையற்ற ஒரு பதற்றம் நீலக்கட்சியின் பக்கமிருந்து.

ஒருவர் தெளிவான குரலில் 90 நிமிடங்கள் பொய்களையும், தரவேயில்லாத கற்பனைகளையும் அள்ளி வீசுகிறார் (Border crisis .."..they are raping and killing our women.."😂). அவர் வாதத்தில் வென்று விட்டார் என்கிறார்கள். மற்றையவர், இவற்றை சுருக்கமாக மறுத்து விட்டு, உண்மையான நிலையை பலம் குறைந்த குரலில் சொல்கிறார். அவர்  தோற்று விட்டார் என்கிறார்கள் - பலவீனமான குரலில் அவர் சொன்னது 90 வீதம் உண்மையான தகவல்கள் என்றாலும் கூட.

இது ட்ரம்ப்- பைடன் குரல் வளப் பிரச்சினை தாண்டி இன்றைய உலகில் எவ்வளவு இலகுவாக "காற்றில் இருந்து கற்பனையைப் பிடிங்கிப் போட்டு" மக்களை ஏமாற்றலாம் என்பதற்கான உதாரணமாக விளங்குகிறது. ஹிற்லர் இந்தக் காலத்தில் இருந்திருந்தால்,  ஆட்சிக்கு வர 3 - 4 வருடங்கள் போராடியிருக்க வேண்டியிருந்திருக்காது,  தன் அல்ப்ஸ் மலை சொகுசு மாளிகையிலிருந்தே ஒரு வருடத்தில் ஆட்சியைப் பிடித்திருப்பார்! - அப்படி பட்ட உலகில் வாழ்கிறோம்! 

மார்க் கியூபன் என்ன சொல்லியிருக்கின்றார் என்று பாருங்கள்:

"Feeble, Capable and Ethical vs Vigorous, Unethical and Incapable of telling the truth. I'll vote ethical every time."

அவர் ஒரு AI Analysis ம் செய்திருக்கின்றார்........ 

https://www.newsweek.com/mark-cuban-trump-biden-election-chat-gpt-x-twitter-1919360

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்க சார்புடைய ஊடக தர்மங்கள் நீண்ட காலம் நிலைக்காது என்பதும் அமெரிக்காவில் இருந்தே ஆரம்பிக்கின்றது.


பழையன கழிதலும்  புதியன புகுதலும் என்ற  புதிய சிந்தனையும் அமெரிக்காவிலிருந்தே ஆரம்பிக்கட்டும்.

பழசுகளின் தொல்லை தாங்கமுடியவில்லை 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து பைடன் விலகவேண்டும் - கருத்துக்கணிப்பில் 39 வீதமான ஜனநாயக கட்சியினர் தெரிவிப்பு

03 JUL, 2024 | 11:49 AM
image
 

ஜனநாயக  கட்சியின்  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக போட்டியிடுவதிலிருந்து  அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகிக்கொள்ளவேண்டும் என ஜனநாயக கட்சியின் மூன்றில் ஒருவர் கருதுவது  ரொய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான முதலவாது நேரடி விவாதத்தின்போது ஜோ பைடன்  தடுமாற்றத்துடன் காணப்பட்டதை தொடர்ந்து அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ளவேண்டும் என ஜனநாயக கட்சியின் மூன்றில் ஒருவர் கருதுகின்றனர் என ரொய்;;ட்டர் தெரிவித்துள்ளது. 

இதேவேளை பதிவு செய்யப்பட்ட வாக்களர்களில் 40 வீதமானவர்கள் பைடனையும் 40 வீதமானவர்கள் டிரம்பினையும் ஆதரிக்கின்றனர் என  கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ரொய்ட்டர் நேரடி விவாதத்தின் பின்னர் பைடனி;ற்கான ஆதரவு வீழ்ச்சியடையவில்லை என்பதை இது வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளது.

 முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான நேரடி விவாதத்தின்போது தடுமாறியதை தொடர்ந்து  பைடன் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் முயற்சிகளை கைவிடவேண்டும் என 39 வீதமான ஜனநாயக கட்சியினர்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பைடனிற்கு பதில்  ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு  தகுதியானவர் என ரொய்ட்டர் முன்வைத்த பெயர்களில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவிற்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/187574

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பைடன் போட்டியிட்டால் நவம்பர் 20இல் நாங்கள் வெல்லமாட்டோம் - ஜனநாயக கட்சியின் பெருந்தலைகள் போர்க்கொடி

Published By: RAJEEBAN   11 JUL, 2024 | 12:31 PM

image

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோபைடன் தெரிவு செய்யப்படுவாரா என்பது குறித்து ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜனநாயக கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் தேர்தலிற்கு நிதிவழங்குபவர்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்களாக காணப்படும் நான்சி பெலோசியும் ஜோர்ஜ்குளுனியும்  ஜோபைடன் தேர்தலில் வெற்றிபெறுவாரா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகின்றாரா என்பது குறித்து பைடன் தீர்மானிக்கவேண்டும் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவர் பைடனின் நீண்டகால சகா என்பது குறிப்பிடத்தக்கது.

பைடன் தேர்தலில் போட்டியிடுவதை விரும்புகின்றாரா என்பது குறித்து அவர் உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை.

இதேவேளை ஹொலிவூட் நடிகரும் ஜனநாயகட்சியின் ஆதரவாளரும் கடந்தமாதம் பைடனுடன் இணைந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டவருமான ஜோர்ஜ் குளுனி நியுயோர்க் டைம்சில் கடுமையான கட்டுரையொன்றை எழுதியுள்ளார்.

மூன்றுவாரங்களிற்கு முன்னர் நிதிதிரட்டும் நிகழ்வில் நான் சந்தித்த ஜோபைடன் 2010 ஆண்டின் ஜோபைடன் இல்லை ஏன் 2020 ஆண்டின் ஜோபைடன் கூட இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

டிரம்புடனான விவாதத்தில் நாம் பார்த்த நபரே அவர் என தெரிவித்துள்ள குளுனி இந்த ஜனாதிபதியுடன் நாங்கள் நவம்பர் 20 தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சனப்பிரதிநிதிகள் சபையையும் நாங்கள் வெல்லமாட்டோம் செனெட்டையும் நாங்கள் இழப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பைடனை தவிர வேறு எந்த வேட்பாளரையும் ஆதரிக்கத் தயார் என செனெட்டின் பெரும்பான்மை தலைவர் சக் சூமர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/188209

  • கருத்துக்கள உறவுகள்

 

டொனால்ட் ட்ரம்ட் மீதான துப்பாக்கி சூடு

Edited by vasee
தவறான திரி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.